தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தன்னம்பிக்கை கதைகள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

தன்னம்பிக்கை கதைகள்  - Page 2 Empty தன்னம்பிக்கை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 18, 2015 10:24 pm

First topic message reminder :

உன் வாழ்வை மாற்ற முடியும்.
--------------
ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்க சென்றனர்.
.
அதில் ” உங்கள் வளர்ச்சிக்கும் நம் கம்பெனி வளச்சிக்கும் இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்,அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது.அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது.
இதை படித்தவுடன் அவர்கள் எல்லாருக்கம் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தது,பிறகு நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது.
அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர்.சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர்.சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும்,நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.

சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது.
கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது...”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம்,நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது ,உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.

உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது,உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது,நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும்.

நன்றி ;முகநூல்
படித்ததில் பிடித்தவையே
இப்பதிவில் இடம்பெறுகின்றன
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


தன்னம்பிக்கை கதைகள்  - Page 2 Empty Re: தன்னம்பிக்கை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 19, 2015 7:01 pm

ஆருடம்
======
கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார். ஒரு ஆற்றங்கரையைக் கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோசியர், “மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்” என்று சொன்னார்.
கிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி உஷாராகிவிடுவான். அவன் எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தான் வெற்றி. ஆனால், ஜோசியர் சொன்ன பின் சந்தேகம் வந்துவிட்டது. தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார்.

தெனாலிராமன் ஜோசியரை அழைத்தான். “எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டான்.
“இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருப்பேன்” என்றார் ஜோசியர்.

தெனாலிராமன் சடக்கென்று வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, “இந்த விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா?” என்று கேட்டான்.
ஜோசியரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. “முடியும்.. முடியும்” என்று அலறினார்.
“அவ்வளவுதான் மன்னா ஜோசியம்! உங்களுக்கு எதிரான எந்த ஜோசியத்தையும் உங்களால் பொய்யாக்க முடியும்” என்று புன்னகைத்தான் தெனாலிராமன்.

கிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். எதிரியை வெற்றி கொண்டார்.
நீங்கள் தீர்மானமாக இருந்தால், கோள்களால் உங்களை எதுவும் செய்ய முடியாது.
வீண் சந்தேகங்களை விலக்கி, உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். தானாகக் கனிந்து வரும் வெற்றிக்கனி!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள்  - Page 2 Empty Re: தன்னம்பிக்கை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 19, 2015 7:02 pm

நம் எண்ணங்களும் அப்படியே"
-------------
மத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது.மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.
அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான்.
“கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த
களைப்பால் தான் இந்த வெயிலிலும் இப்படிஉறங்குகிறான்.”
என நினைத்துக் கொண்டே சென்றான்.

அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான்
“இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல
தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும்
அடித்துப் போட்டது போல் தூங்குகிறான் “
என நினைத்துக்கொண்டே சென்றான்.

மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான்.
“காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது
அதனால்தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்
என நினைத்துக்கொண்டே சென்றான்.
சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார்.

இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த
ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால்
இத்தகைய செயலை செய்ய முடியும்” என அவரை வணங்கி
விட்டு சென்றார்.

"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே"
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள்  - Page 2 Empty Re: தன்னம்பிக்கை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 19, 2015 7:04 pm

கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை
--------------------------------------------------
ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.
தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.
‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பன. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக,
ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி,
‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க,
‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.
‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைதது;க் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள்  - Page 2 Empty Re: தன்னம்பிக்கை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 19, 2015 7:05 pm

ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் ?
------------------------------------------------------------
ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்று ஓர் இளைஞர் நண்பர்களிடம் கேட்டார். சிலர் சினிமாவுக்குப் போகச் சொன்னார்கள். சிலர் நண்பர்களுடன் செலவிடச் சொன்னார்கள். ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு யோசனை வந்தது. பிறகு, நேர நிர்வாகவியல் நிபுணரை அழைத்து ஆலோசனை கேட்டார் இளைஞர்.
புத்தகம் படி, நல்ல காரியங்கள் செய் என்றெல்லாம்தான் சொல்லப்போகிறார் என்பது இளைஞரின் எதிர்பார்ப்பு. நேர நிர்வாகவியல் நிபுணர் மிக நிதானமாகச் சொன்னார்…… “உன் ஓய்வு நேரத்தை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள். அதுவே பயனுள்ள நேரங்களைத் தொடங்கி வைக்கும்” என்று.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள்  - Page 2 Empty Re: தன்னம்பிக்கை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 19, 2015 7:06 pm

நூறு தந்திரங்கள்
-----------------------
நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?”
“எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை.
அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது.
நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.
நீதி : சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல்.
--இணையத்திலிருந்து
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள்  - Page 2 Empty Re: தன்னம்பிக்கை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 19, 2015 7:07 pm

விதியை மாற்றி அமை!!!
------------------------------------
ஒரு முறை ஜப்பானிய ராஜா எதிரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்றை தயார் செய்து, போருக்கு தயாரானார். அவர் "எப்படியும் இந்த போரில் வெற்றி பெறுவோம்" என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அந்த படையினரோ பெரும் சந்தேகத்துடனேயே இருந்தனர்.

இதனால் அந்த ராஜா தன் படை வீரர்களுக்கு தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று ஒரு ஜென் துறவியைப் பார்த்து, கேட்கச் சென்றார். அப்போது அந்த துறவி ராஜாவிடம், ஒரு யோசனையை சொன்னார். அதேப்போல் ராஜாவும் செய்தார். அது என்னவென்றால், அந்த ராஜா போர் செல்லும் வழியில், அவர்கள் குல தெய்வ கோவிலில் நிறுத்தி பிரார்த்தனை செய்து, ஒரு நாணயத்தை எடுத்து வீரர்களின் முன் "நான் இப்போது இந்த நாணயத்தை சுழற்றி விடுவேன், தலை விழுந்தால் நாம் வெற்றி பெறுவோம் இல்லையேல் போரில் தோற்போம்" என்று துறவி சொன்னதைச் சொல்லி, பின் அவர்களிடம் "நம் தலை விதியை இந்த நாணயம் சொல்லும்" என்று கூறி நாணயத்தை சுழற்றினார்.

அனைவரும் அதை கூர்ந்து கவனித்தனர். அப்போது தலை விழுந்தது. அதனால் அந்த வீரர்கள் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடனும் சந்தோசத்துடனும் எதிரிகளை தாக்கி வெற்றிப் பெற்றனர். யுத்தத்திற்கு பின்னர், துணை மந்திரி "விதியை யாராலும் மாற்ற முடியாது." என்று ராஜாவிடம் சொல்ல "ஆம், என்று ராஜா சொல்லி அந்த நாணயத்தின் இரு பக்கத்திலும் தலை இருப்பதை" காண்பித்தார். நம்பிக்கையுடன் செயல்பட்டால் எத்தகைய காரியத்தையும் எளிதில் வெல்லலாம், விதியையும் மாற்றி அமைக்கலாம்.
-- நன்றி ஒன்இந்தியா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள்  - Page 2 Empty Re: தன்னம்பிக்கை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 19, 2015 7:08 pm

நட - அதிர்வின்றி
பேசு - பணிவாக
சுவாசி - ஆழமாக
தூங்கு - அமைதியாக
உடுத்து - அழகாக
செயல்படு - அச்சமின்றி
உழை - உண்மையாக
சிந்தி - சுயமாக
நம்பு - சரியாக
பழகு - நாகரிகமாக
ஈட்டு - நேர்மையாக
சேமி - சிறிதாவது
செலவிடு - யோசித்து
படி - முடிவின்றி
மரணி -பயமின்றி
--இணையத்திலிருந்து
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள்  - Page 2 Empty Re: தன்னம்பிக்கை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 19, 2015 7:09 pm

ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான்.
""நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா...'' என்று கேட்டுக் கொண்டான்.

அதற்கு ஞானி, ""நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன்''.
மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான். அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார். தூணைப் பார்த்து, ""ஐயோ என்னை விட்டுவிடு... விட்டுவிடு...'' என்று கத்திக் கொண்டிருந்தார்.
உடனே குடிகாரன், ""நீங்கள்தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
அதை விட்டுவிடுங்கள்'' என்றான்.

உடனே ஞானி சிரித்துக் கொண்டே, ""நான் தூணைப் பிடித்துக் கொண்டிருப்பது போல, நீ தான் குடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். நீயே விட்டுவிடு'' என்றார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள்  - Page 2 Empty Re: தன்னம்பிக்கை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 19, 2015 7:10 pm

உயர்ந்த ஆசை :
==================
பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த கார் நின்றுக்கொண்டிருந்தது. ஏழைச் சிறுவன் ஒருவன் எட்டி நின்று அந்தக் காரையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
சிரித்துக்கொண்டே அந்த இளைஞன் சொன்னார், “இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது”.
சிறுவன் முகத்தில் வியப்பு.
“உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறாயா? ” இளைஞர் கேட்டார்.
சிறுவன் சொன்னான், ‘இல்லை! அப்படியோர் அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன்”.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள்  - Page 2 Empty Re: தன்னம்பிக்கை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 19, 2015 7:11 pm

வாழ்வதும் போவதும்
------------------------------
ரொம்ப வயசாகி, சாகப்போற நேரத்துல ஒரு சந்நியாசி, தன்னோட சீடர்களுக்கு வாழ்க்கை தத்துவம் ஒண்ணை புரிய வைக்க நினைச்சரு. எல்லாரையும் கூப்புட்டு உக்கார வச்சு, அவங்களுக்கு தன்னோட பொக்கை வாயை திறந்து காமிச்சாரு. அவ்வளவுதான், 'வாழ்க்கைத் ததுவம் இதுதான்'னு சொல்லி போகச் சொல்லிட்டாரு. ஒரே ஒரு சீடனுக்கு மட்டும் ஒண்ணுமே புரியலை. வாய்க்குள் அப்படியென்ன வாழ்க்கைத் ததுவம் இருந்த்டப்போகுதுனு குழம்பினவன், மெதுவா குருவையே எழுப்பி கேட்டான். அவர் கேட்டார்.. 'என் வாய்குள்ள என்ன இருந்தது?'
'நாக்கும் உள்நாக்கும் இருந்தது!'
'பல் இருந்ததா?'
'இல்லை.'
'அதுதான் வாழ்க்கை.. வன்மையானது அழியும், மென்மையானது வாழும்.'
- தா.கு.சுப்பிரமணியன், பட்டிமன்றத்தில் சொன்ன கதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள்  - Page 2 Empty Re: தன்னம்பிக்கை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 19, 2015 7:13 pm

வியாபாரி
============
பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!
மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!

மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், ''அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!'' என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.

முதியவர் சிரித்தபடி, ''போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள்  - Page 2 Empty Re: தன்னம்பிக்கை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 19, 2015 7:16 pm

எறும்பின் தன்னம்பிக்கை!
=====================
தலைப்பைப் படித்ததும் இது சிறுவர்களுக்கான கதை என நினைத்து விடாதீர் கள். இது உங்களுக்கானது. முழுவதையும் படியுங்கள்.
இன்றைய மனிதர்களில் அதிகம் பேர் ஏதாவது ஒரு கவலையுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிறு தடையையும் பெரிதாக எண்ணி கவலைப் படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் மேல் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததுதான்.

நமக்கு நண்பனும் நாமே; பகைவனும் நாமே என்று சொல்வதுண்டு.. அதாவது, எவன் ஒருவன் தன் பலவீனங்களை முறியடித்து வெற்றி பெறுகிறானோ, அவன் தனக்குத்தானே நண்பனாவான். யார் ஒருவன் தன் பலவீனங்களை வெற்றி பெற முடியாமல் தவிக்கிறானோ அவன் அவனுக்கு எதிரியாவான் என்று அர்த்தம்.
கவலைப்படுபவர்கள் இந்தியாவில் மட்டுமில்லை. உலகம் முழுவதுமே இருக்கிறார்கள்.

சமீபத்தில் கவலை குறித்து அமெரிக்காவில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவில் 40 சதவீதக் கவலைகள் எந்த அடிப்படைக் காரணமும் இல்லாத தேவையற்றவை. 30 சதவீதக் கவலைகள் கடந்த காலம் பற்றியவை. 12 சதவீதக் கவலைகள் பிறர் பற்றியது. 10 சதவீதக் கவலைகள் நம் நோய் நொடிகள் பற்றியவை. அது கூட கவலைப்படும் அளவுக்கு இல்லாமலும் இருக்கலாம். மீதம் உள்ள 8 சதவீதம் மட்டுமே உண்மையான கவலைகள் எனக் கண்டறியப்பட்டது.
பெரும்பாலான சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொரு தடையும் ஒவ்வொரு வெற்றியை மறைத்து வைத்திருக்கிறது என்பது புரியும். அது போன்றுதான் தோல்வியும். தோல்வி என்பது நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய அறிவிப்பு என்று சொல்லலாம். செல்வத்தை இழப்பது ஒன்றையும் இழப்பதாகாது. உடல் நலத்தை இழப்பது சிறிதளவு இழந்ததாகும். ஆனால் நம்பிக்கை இழப்பது எல்லாவற்றையும் இழந்ததற்குச் சமம் என்று சொல்வார்கள்.

தடைகளை வெல்வது எப்படி? இதை எறும்புகள் நமக்குக் கற்றுத் தருகின்றன. எறும்புகளை ஆராயும் உயிரியல் நிபுணர் ஒருவர் எறும்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தார். ஓர் எறும்பு தன் வாயில் நீளமான உணவுப் பொருளைச் சுமந்து கொண்டு சென்றது. தரை வழியே சென்று கொண்டிருந்த அந்த எறும்பு ஒரு வெடிப்பைப் பார்த்துவிட்டு திடீரென்று நின்றுவிட்டது. மேலே செல்ல முடியாமல் தவித்தது. சிறிது நேரம் கழித்து, தான் சுமந்து வந்த இரையை வெடிப்பின் மேல் வைத்து அதன் மீது ஊர்ந்து சென்று வெடிப்பைக் கடந்தது.

பின்பு அந்த இரையைக் கவ்விக் கொண்டு சென்றது. எறும்பின் அறிவு வியப்பை அளிப்பதாக உள்ளது என எழுதியிருக்கிறார் அந்த ஆராய்ச்சியாளர்.
துன்பம் ஏற்பட்டால், அத்துன்பத்தையே பாலமாக வைத்து முன்னேற வேண் டும் என்பதை நாம் எறும்பிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு மிகச் சிறிய உயிரியான எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தால் கூடப் போதும் எந்தத் தடையையும் வெல்ல முடியும். கவலையும் காணாமல் போய்விடும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள்  - Page 2 Empty Re: தன்னம்பிக்கை கதைகள்

Post by ஸ்ரீராம் Sun Nov 22, 2015 1:28 pm

அனைத்தும் சூப்பர் கட்டுரைகள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள்  - Page 2 Empty Re: தன்னம்பிக்கை கதைகள்

Post by செந்தில் Sun Nov 22, 2015 1:33 pm

அனைத்துக் கதைகளும் அருமை.நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள்  - Page 2 Empty Re: தன்னம்பிக்கை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 23, 2015 6:51 am

அனைத்தும் சூப்பர் கட்டுரைகள்.
அனைத்துக் கதைகளும் அருமை.நன்றி அண்ணா

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள்  - Page 2 Empty Re: தன்னம்பிக்கை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 23, 2015 9:06 am

என்னால் முடிந்தது
================
கல்லூரியில் கணித வகுப்பு.
உலகின் பெரிய கணித மேதைகளால்தீர்க்க முடியாத
இரண்டு கணக்குகளை பலகையில் எழுதிய ஆசிரியர்
, அவை இன்றும் புரியாத புதிர் என்றார்.
சற்று தாமதமாய் அந்த மாணவன் வந்தான்.
அதற்குள் வகுப்பு முடிந்திருந்தது.
அந்தக் கணக்குகளை வீட்டுப்பாடங்கள்
என்று நினைத்து குறித்துக்கொண்டு போனான்.

மறுநாள் விடையுடன் வந்தான்.
அந்த சம்பவத்தாலேயே உலகப் புகழ்பெற்ற அந்த மாணவன்தான்
ஜார் ஜ்டாந்த்ஸிக்.
அந்த சம்பவத்துக்கு அவர் தந்த விளக்கம்,
“அது யாராலும் முடியாது என்று எனக்குத் தெரியாது.
எனவே என்னால் முடிந்தது”.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள்  - Page 2 Empty Re: தன்னம்பிக்கை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 23, 2015 9:07 am

நேர்மறையும் - எதிர்மறையும்
========================

ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். ஒருவன் போதைப் பழக்கமுள்ளவன் - எப்போதும்
குடும்பத்தில் இருப்பவர்களை நையப்புடைத்து - மிரட்டி - பணம் வாங்கிக் குடித்துக் கொண்டே
இருப்பான். பிறருக்குத் தொல்லைகொடுத்து இன்பம் பெறும் ஸாடிஸ்ட் அவன்.
மற்றவன் நல்லவனாக சமூகத்தில் மதிக்கப்படுபவனாக - நல்ல குடும்பத்தலைவனாக இருந்தான்.
அருமையாக குடும்பத்தைப் பராமரித்து வந்தான். ஊரில் உள்ளவர்களுக்கு வியப்பு. "ஒரே
தகப்பனுக்குப் பிறந்த ஒரே சூழ்நிலையில் வளர்ந்த இரு குழந்தைகளில் ஒன்று ஊர்போற்றும்
நல்லவனாகவும், மற்றொன்று ஊர் தூற்றும் கொடியவனாகவும் இருக்கக் காரணம் என்ன", என ஊரில்
இருப்பவர்களுக்கு வியப்பு.
ஒரு பெரியவர் குடிகாரமகனையும், நல்லகுடும்பவானாகியவனையும் இப்படிக்கேட்டார்.
"உன் நடத்தைக்கு யாரப்பா காரணம்?".
இருவரும் ஒரே பதில்தான் சொன்னார்கள், "என்னுடைய நடத்தைக்குக் காரணம் என்னுடைய அப்பாதான்".
"உன் அப்பா என்ன செய்தார்", என்று குடிகாரனைக் கேட்டபோது சொன்னான்.
"அவர் எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து பகலிலும், இரவுகளிலும் குடித்துக் கொண்டே
இருப்பார். குடும்பத்தினரைத் தொந்தரவு செய்துகொண்டே இருப்பார். அடிகளுக்குப் பஞ்சமில்லை.
அவரின் மகனாகிய நான் வேறு எப்படி இருப்பேன். அதனாலே நானும் குடிகாரனாகிவிட்டேன்.
மோசமான தகப்பனின் மகனான நான் மோசமாகிவிட்டேன். என் நடத்தைக்கு என் தந்தையே
முழுக்காரணம்", என்றான்.

"உன் அப்பா என்ன செய்தார்", என்று நற்கணவானைக் கேட்டபோது சொன்னான்.
"அவர் எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து பகலிலும், இரவுகளிலும் குடித்துக் கொண்டே
இருப்பார். குடும்பத்தினரைத் தொந்தரவு செய்துகொண்டே இருப்பார். அடிகளுக்குப் பஞ்சமில்லை.
அதனாலே நான் குடிக்ககூடாது, குடிகாரனாகிவிடக்கூடாது. மோசமான தகப்பனின் மகனான நான்
மோசக்காரனாக இராமல் - என்னுடைய பிள்ளைகளுக்கு நல்லவனாக இருக்க எண்ணினேன். என்
நடத்தைக்கு என் தந்தையே முழுக்காரணம்", என்றான்.
நீதி : எந்த ஒருவரின் நடத்தையிலும் நேர்மறை நிகழ்வுகளும் உண்டு. எதிர்மறை நிகழ்வுகளும்
உண்டு. அன்னப்பறவை போல நேர்மறையான கருத்துக்களையே நாம் எதிர்நோக்குவோமாக.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள்  - Page 2 Empty Re: தன்னம்பிக்கை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 23, 2015 9:08 am

வித்தியாசமான உதவி
==================
ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.
சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.
பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.
பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள்  - Page 2 Empty Re: தன்னம்பிக்கை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 23, 2015 9:10 am

நரி கிட்ட இருந்து இல்லே ! புலி கிட்ட இருந்து !
------------------------------------------------------------
ஒரு ஊர்ல ஒரு ஆள் இருந்தான். அவனுக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். அடிக்கடி கோவிலுக்கு போவான்.கடவுளை வேண்டிக்கு வான். அதுக்கப்புறம் காட்டுக்கு போவான். விறகு வெட்டுவான்.அதை கொண்டுகிட்டு போய் விற்பனை செய்வான்.

ஓரளவுக்கு வருமானம் வந்தது. அதை வச்சிக் கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தான்.
ஒரு நாள் அது மாதிரி அவன் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தான்.
அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை . எதோ விபத்துல இழந்துட்ட போல இருக்கு! அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு!
அதை இவன் பார்த்தான் அப்போ இவன் மனசுல ஒரு சந்தேகம் " இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சான்.

இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சி கிட்டான் , ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சான். அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ... அதை சாப்பிட்டது ...
சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது.
புலி போனதுக்கபரம் கால் இல்லாத அந்த நரி மெதுவாக நகர்ந்து கிட்ட வந்தது ... மிச்சம் இருந்ததை சாப்பிட்டது .. திருப்பதியா போய்ட்டது! இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு அந்த ஆள் கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கான்.

இப்ப அவன் யோசிக்க ஆரம்பிச்சான்.

" ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான். அப்படி இருக்கறப்போ .. தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா ? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம், நாம எதுக்கு அனாவசியமா வெயில் லயும் மழைலயும் கஷ்டபடனும் ..? எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டனும் ...? இப்படி யோசிச்சான்.
அதுக்கப்பறம் அவன் காட்டுக்கே போறதில்லை .

கோடலியை தூக்கி எறிஞ்சான். பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டான். அப்பபோ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவான். " கடவுள் நம்மை காப்பாத்துவார் ...அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் "- அப்படினு நம்பினான், கண்ணை முடிகிட்டு. கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல சாஞ்சி உக்காந்துகிட்டான்.
ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு ...
சாப்பாடு வந்த பாடில்லே! இவன் பசியால வாடி போனான். உடம்பு இளைச்சு போச்சு. எலும்பும் தோலுமா ஆயிட்டான்.

ஒரு நாள் ராத்திரி நேரம். கோயில்ல யாருமே இல்லை. இவன் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தான் ...
" ஆண்டவா ... என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா .....? நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா ? காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே! அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன் ... என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே ... இது நியாயமா ?"..- ன்னான்
இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்.

" முட்டாளே ! நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே ! புலி கிட்ட இருந்து ! அப்படின்னாராம்.
- தென்கச்சி .கோ. சுவாமிநாதன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள்  - Page 2 Empty Re: தன்னம்பிக்கை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 23, 2015 9:12 am

அந்த ஒரு நிமிடம்
--------------------------------------
ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒரு கணவான் அந்தவழியாகச்
சென்றபோது 5 ரூபாய் நாணயத்தை பிச்சைக்காரனின் திருவோட்டில் போட்டார். பிறகு புகைவண்டியில் ஏறி அமர்ந்தார். அவரது மனதில் ஒரு கருத்து உதித்தது. எழுந்து வேகவேகமாக அதே பிச்சைக்காரனிடம் சென்று, "அவனது பையிலிருந்த
பென்சில்களை எடுத்துக்கொண்டு 5 ரூபாய்க்குச் சமமான பென்சில்களை எடுத்துக்கொள்கிறேன். என்ன இருந்தாலும் நீயும் தொழில் செய்கிறாய் அல்லவா?", என்று கூறிவிட்டு புகைவண்டியில் தனது இருக்கைக்குத் திரும்பினார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த கணவான் ஒரு விருந்தில் கலந்துகொள்ளச்
சென்றார். அந்த விருந்தில் 6 மாதங்களுக்கு முன்னாலே இரயில்நிலையத்தில் பிச்சையெடுத்துக்கொண்டு இருந்தவனும் அமர்க்களமான கோட் மற்றும் டை சகிதமான உடையில் கனகச்சிதமான கணவானாக விருந்தில் பங்குகொள்ள வந்துஇருந்தான்.

அவன் இந்தக் கணவானை அடையாளம் கண்டுகொண்டு இப்படிக்கூறினான்.
"அன்பரே..நீங்கள் என்னை மறந்தேகூடப் போகியிருக்கலாம். ஆனால் நான் உங்களால்தான் இப்படி நல்ல நிலைமைக்கு வந்து இருக்கிறேன். நான் நல்ல
நிலைமைக்கு வருவதற்கு நீங்கதான் காரணம். அந்த கோட் சூட் வாலிபன் -

கணவானிடம் பழைய ப்லாஸ் பேக்கை நினைவூட்டினான். கணவான் சொன்னார் : - "எனக்கு நினைவுவந்துவிட்டது. இப்போது என்ன செய்கிறாய். உடைகளிலும் நல்ல மாற்றம் தென்படுகிறது..என்னப்பா?".
கோட் சூட் வாலிபன் சொன்னான் - "நீங்கள்தான் என்னுடைய மாற்றத்துக்கும்
வளர்ச்சிக்கும் காரணம். என்னுடைய வாழ்நாளிலே உங்களை மறக்கமுடியாது. என்
வாழ்க்கையில் என்னை ஒரு மனிதனாக மதித்த முதல் மனிதர் நீங்கள்தான். 5
ரூபாயை எனது திருவோட்டில் இட்டபின் சிறிது நேரத்த்திற்குப் பிறகு
வந்து அந்த ரூபாய்க்குச் சமமான பென்சில்களை என்னிடமிருந்து பெற்றுச்
சென்றீர்கள்".

"எனக்குள் ஒளிந்திருந்த வியாபாரி அப்போதுதான் எனக்கே தெரியவந்தான். அதுவரையில் பிச்சையெடுத்துத் திரிந்த நான் அந்த ஒரு நிமிடத்தின் தாக்குதலில் ஒரு வியாபாரியாக உருவெடுத்து உழைக்க ஆரம்பித்தேன்". "அந்த ஒரு நிமிடத்துக்கு முன்னர்வரையில் சோம்பேறியாக அழுக்காக புகைவண்டி நிலையத்தின் பிச்சைக்காரர்களின் வரிசையில் ஒருவனாக யாராலும் மதிக்கப்படாத - உருப்படாதவனாக - இருந்த நான் உங்கள் நடவடிக்கையால்
திருந்தினேன். என்னுள்ளே சாக்ரடீஸின் கொள்கைகளைத் தூண்டிவிட்டவர்

நீங்கள்தான். பிறகுதான் சிந்திக்க ஆரம்பித்தேன். "நான் யார்? எனது கொள்கை
என்ன? எதற்காகவோ பிறந்துவிட்டேன். ஒக்கே. ஆனால் சாகும்போதாவது
எதையாவது சாதித்துவிட்டு சாகலாமே. என முடிவெடுத்தேன். பிச்சையெடுப்பதை நிறுத்தி எனது புதிய வாழ்க்கையை ஆரம்பித்தேன். நான் உங்களுக்கு நன்றி கூறுவதற்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். நன்றிகள் பலகோடி அய்யா",
என்றான்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள்  - Page 2 Empty Re: தன்னம்பிக்கை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 23, 2015 9:14 am

எந்த வேலை செய்வது?
======================

"பணம் சம்பாதிக்க ஒரு வேலை தேவை. அது சொந்த தொழிலாகவும் இருக்கலாம், அல்லது அரசாங்க வேலையாகவும் இருக்கலாம், ஐ.டி. போன்ற உயர்மட்ட தனியார் நிறுவன வேலையாகவும் இருக்கலாம் இது தான் இன்று நம்மில் பலரின் எண்ணமாக இருக்கிறது.

இதனால் கிடைத்த வேலையே போதும் என்று நமக்கு அதிகம் பிடிக்காத வேலையில் இருந்து விடுகின்றோம்.
இந்த மனப்பான்மையால், செய்யும் வேலையில் ஆர்வம் இழந்து விடுகின்றோம் படிக்கும் காலத்தில் வாழ்வில் எந்த உயரத்தை அடைய வேண்டும் என்று விரும்பினோமோ, அதை மறந்து செயல்பட்டுக் கொண்டிருப்போம்!
சாதாரண அலுவலக வேலையிலிருந்து விடுபட்டு, நீங்கள் உண்மையிலேயே விரும்பும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க 10 சிறந்த வழிகள்.

1. வாழ்வின் முக்கியதுவம் : நம்மில் பலர் வயதான பிறகு நாம் ஏன் பலரைச் சந்தித்திருக்கக் கூடாது அல்லது அதிகக் கடினமாக உழைத்திருக்கக் கூடாது என்று யோசிப்பதுண்டு. சாதாரண அலுவலக வாழ்க்கையின் கட்டாயத்தை விட்டு நம் எதிர்காலத்தில் அடைய வேண்டிய குறிக்கோளுக்காக பாடுபடுவதில் தவறில்லை.

2. வாழ்க்கை ஒரு பாடம் : எதை நாம் விரும்புவதில்லையோ அதைப்பற்றி ( குறிப்பாக அர்த்தமற்ற வேலைகள், அலுவக அரசியல் போன்றவை ) எண்ணாமல், நாம் செய்ய விரும்பும் நம்பிக்கையுடன் வேலைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

3. உறுதியான சிந்தனை : தொழிலில் செயல்படுபவர்கள் தாங்கள் செய்யும் வேலையை நேசிக்கிறார்கள். அதுவே அவர்களின் வெற்றிக்கு வழிவகுக்கிறது.

4. நம் நோக்கத்தில் உறுதி : உள்ளத்திலே ஏற்படும் பயத்தை உதரித்தள்ளி நாம் காணும் கனவை அடைய தைரியமாக முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும். அவற்றிலே நம் முழு கவனத்தையும் செலுத்துவது சிறந்தது.

5. உண்மை நிலை : "உங்கள் வீட்டிலே உட்கார்ந்தப்படி மாதம் ரூ 10,000/- சம்பாதிக்க வேண்டுமா, இதோ ஒரு எளிய வேலை" என்ற விளம்பரங்களை விட்டுத் தள்ள வேண்டும். நம் சொந்த முயற்சியில் தொழில் தொடங்குவதற்கு காலமும் கடின உழைப்பும் அதிகமாக தேவைப்படும்.

6. தகவல்களை திரட்டுவது : நாம் ஆரம்பிக்க விரும்பும் தொழில் பற்றிய பல தகவல்களை, நூலகங்களிலிருந்தும் அறிந்து அந்தத் தொழில் சம்பந்தப்பட்ட கூட்டமைப்புகளிலிருந்தும் சேகரித்து நம்மை தயார்படுத்திக் கொள்வது நல்லது.

7. கனவை நனவாக்குவது : நம் கனவுத் தொழிலைத் தொடங்க ஒரு கால நிர்ணயம் செய்துக் கொண்டு அந்த காலக் கட்டத்துக்குள் தொடங்க எல்லா முயற்சியையும் மேற் கொள்ள வேண்டும்.

8. மற்றவர்களுடைய ஆதரவு : உற்சாகம் என்பது தொற்று நோய் போல பரவும். ஆகவே உங்கள் எண்ணங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டு அவர்களின் ஆதரவை தேடிப் பெறவேண்டும்.

9. வேலையை தொடங்குவது : "ஒரு மலையை நகர்த்த வேண்டுமா? முதலில் ஒரு கல்லை நகர்த்துங்கள்" என்கிறது சீனப் பழமொழி. நம் மொத்த கனவுத் தொழிலைத் தொடங்க முதலில் அவற்றை சிறு சிறு பாகங்களாக பிரித்துக் கொண்டு ஒவ்வொன்றாகச் செய்யத் தொடங்குவது நல்லது.

10. நன்றி உணர்வு : நம் எதிர்காலக் கனவை நினைவாக்க, இப்போது நாம் எவ்வளவு வேலைகளை செய்ய முடிகிறது என்பதை நன்றியுடன் நினைவு கொள்வது நல்லது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள்  - Page 2 Empty Re: தன்னம்பிக்கை கதைகள்

Post by ஸ்ரீராம் Mon Nov 23, 2015 12:41 pm

சிறப்பான தனம்பிக்கை கதை அண்ணா.
தொடருங்கள்....
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள்  - Page 2 Empty Re: தன்னம்பிக்கை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 23, 2015 8:50 pm

சிறப்பான தனம்பிக்கை கதை அண்ணா.
தொடருங்கள்....

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள்  - Page 2 Empty Re: தன்னம்பிக்கை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 24, 2015 5:33 pm

தைரியம்
==========
ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.
வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன்றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டியது..வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம் வேறு பொங்கியது...
பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச்சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.
பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர்.
அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது...பைத்தியக்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என்று ஆத்திரத்துடன் கேட்டார்.
அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டும் தான் ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே...அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந்து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்து செய்து பிச்சைக்காரனை விடுவித்தான்.
தைரியம் என்பது தன்னம்பிக்கைக்கு மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய்விடும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள்  - Page 2 Empty Re: தன்னம்பிக்கை கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 24, 2015 5:35 pm

முயன்றால் உங்களால் முடியும்!
============================
ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்ததோர் ஆற்றல் உண்டு. அதை வாழ்க்கையின் சரியான முன்னேற்றப்பாதையில் பயன்படுத்தி பயணித்தால் – அது நல்ல விளைவைத் தருகின்ற நிலைக்கு அம்மனிதனை கொண்டுபோய் சேர்க்கும் என்பது நிதர்சனம்.
உங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள். என்னால் இது முடியுமா? என்று எடுத்த எடுப்பிலேயே எதைக் கண்டும் அச்சப்படாதீர்கள். தோல்விக்கு அஞ்சி முடங்கிக் கிடப்பதோ, மடங்கி கிடப்பதோ நல்ல வாழ்க்கை ஆகாது. போட்டியில் தோற்றாலும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவன்தான் வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானவன்.
பல்வேறு உலகப் புகழ்பெற்ற அறிஞர் பெருமக்கள் எல்லாம் ஒவ்வொரு தோல்வியும் வெற்றியை நோக்கி தம்மை அழைத்துச் செல்லும் படிக்கட்டுக்கள் என கருதி உழைத்தனர். இறுதியில் ஜெயித்தனர். தாமஸ் ஆல்வா எடிசன் சந்தித்த தோல்விகள் ஏராளம்; அனால் அவர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞான மேதையானார்.
வீட்டில் உள்ள நம் (இரு பால்) குழந்தைகள், இளைஞர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று தான் நாம் அனைவரும் உளமாற விரும்புகிறோம் – ஏன்? அதிகமாகவே ஆசைப்படுகிறோம். பிள்ளைகள் ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்துக் கிடக்கும் பேராற்றலை வெளியேக் கொண்டு வருவது தான் ஆசிரியர்கள் பெற்றோர்களின் முக்கிய பணியாகும். பங்காகும்.

பிள்ளைகள் தவறு செய்யும் போது கூட உடனே கடும் மொழியில் பெற்றோர்கள் வசை மாறி பொழிவதை விட, தவறுகளைச் சுட்டிக் காட்டி, நல்ல அறிவுரைகள் சொல்லி, அவர்களின் நல்ல செயல்களை நன்றாக பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். “மொட்டு பூவாக மலர்வதைப் போல இயல்பாக அந்த பாராட்டு இருத்தல் வேண்டும்”.
”அடடா! இன்று உன் கையெழுத்து, நீ வாங்கி வந்த மதிப்பெண், வரைந்த ஓவியம், உடுத்திய உடை – இப்படி எல்லாமே அருமையாக இருக்கிறதே” – என்று பாராட்டிக் கொண்டே இருங்கள். அப்போது அந்த பிஞ்சு உள்ளத்தில் தன்னைப் பற்றிய நம்பிக்கை இன்னும் இதை விடச் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற சிந்தனையும் சாதனை எண்ணமும் ஆழமாக வேரூன்றும். “இனிய சொல் இரும்பு கதவைக் கூட திறந்து விடும்”. அது போல நம்முடைய முதல் பாராட்டு நாளை நம் பிள்ளைகளை இந்த சமுதாயமே பாராட்டும் படி அமைக்கும். எனவே பாராட்டை வீட்டிலிருந்தே தொடங்குங்கள் அதை தொடருங்கள்...
ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் ஒர் அற்புத ஆற்றல் ஓசையில்லாமல் மனதில் மறைந்திருக்கிறது. அதை உரிய முறையில் வெளிக்கொண்டு வருவது ஆசிரியர்களின் தலையாய கடமை. மாணவர்களை நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வாழ்ந்துக் காட்டும் திறமையை முதுகில் தட்டிக் கொடுத்து மேலோங்கச் செய்வது அவர்களின் அறப்பணி மட்டுமல்ல அரும்பணியும் கூட.
உன்னதமான ஆசிரியர்கள் உள்ளத்தில் ஒளிப் பாய்ச்சுவார். பள்ளி பாடங்களைச் சொல்லிவிட்டு மட்டும் செல்பவராக இருந்து விடக் கூடாது. கற்பித்த பாடம், சொல்லிய கருத்து மாணவர்களிடம் சென்றடைந்ததா? என்பதை ஆசிரியர்கள் கவனிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் வகுப்பறைகள் வெறும் “கண்ணுக்கு விருந்தாக செவிக்கு உணவாக மட்டுமே காட்சி தரும். இறுதித் தேர்வு எனும் இரைப்பையை அது ஆட்சி செய்யாமல் போய்விடும்”. ஆசிரிய பெருதகைகள் மாணவர்களின் அறியாமை இருளை அகற்றும் வெளிச்ச தீபங்கள். இளைஞர்களை இலட்சிய பாதையில் நடைபயில செய்யும் எழுச்சி தீபங்கள்.
“முகம் - வீட்டு முகவரியை காட்டும், செயல்கள் - வாழ்க்கைக்கு முகவரி காட்டும்”. ஒருவன் உயர்ந்தால் அது அவனுடைய பெற்றோருக்கு மட்டும் பெருமை அல்ல; அந்த அளவிற்கு உயர, கல்வி எனும் அறிவு கண்ணை திறந்து வைத்த ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. இளமைப்பருவம் வாழ்வின் வசந்த காலம். எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பது இந்த பருவம் தான்.
உழைப்பால் வெற்றியை உருவாக்கு.
முயற்சியை அதற்கு எருவாக்கு.

வாழ்க்கை ஒரு கணிதம்...
“கணிதம் ஒரு புதிர் – வாழ்க்கையும் ஒரு புதிர்”. சிலருக்கு விடை கிடைத்து விடுகிறது. சிலருக்கு விடை கிடைக்காமலேயே போகிறது. அதற்காக ஒரு போதும் சோர்ந்து விடாதீர்கள். கீழ்கண்ட குறியீட்டை பயன்படுத்திப் பாருங்கள்.
நல்லனவற்றைக் கூட்டிக் கொள் --------> +
தீயவற்றைக் கழித்துக் கொள் ----------> -
அறிவைப் பெருக்கிக் கொள் -----------> x
நேரத்தை வகுத்துக் கொள் ------------> /
வெற்றி, தோல்வியை சமமாக கொள் --> =
வெற்றியை எவ்வாறு சாதனையாக்குவது? தோல்வியை எப்படி தோற்கடிப்பது என்பதை நூலகத்தில் உள்ள நூல்களைப் படித்தால் ஆயிரக்கணக்கான நுட்பம் நிறைந்த வழிகள் புதையலாக புதைந்திருக்கின்றன. நல்ல புத்தகங்களை நேசித்து வாசிப்பதற்கு ஆகும் நேரத்தை விட, அதை யோசித்து தேர்ந்தெடுப்பதற்கு ஆகும் நேரத்தை நீட்டிக் கொள்ளுங்கள். “எட்டு மணி நேரத்தில் ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என எனக்கு கட்டளையிடப்பட்டால், அதில், ஆறு மணி நேரத்தை கோடாரியை கூராக்குவதிலேயே செலவிடுவேன்” என்றார் சரித்திர நாயகன் ஆபிரகாம் லிங்கன்.
கண்கள் தூக்கத்திற்கு சொந்தமானவை
கனவுகள் நம் வாழ்க்கைக்கு சொர்க்கமானவை...
“ஒரு பவுண்ட் தேனை சேகரிக்க, தேனீ இருபது லட்சம் மலர்களைத் தேடிச்செல்கிறது”. அது போல காலத்தால் அழிக்க முடியாத கனவு சுவடுகளைப் பதிக்க நினைக்கின்ற எனதருமை இளைஞர்களே! நம் நாட்டில் சுமார் இருபது கோடி இளைஞர்கள் இருக்கின்றீர்கள். உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஓராயிரம் கனவு தொழிற்சாலைகள். இந்த கனவுகளுக்கெல்லாம் காரணம் டாக்டர் அப்துல் கலாம் அவர்களே! உங்கள் மீது கடலளவு நம்பிக்கை வைத்திருக்கிறார். இந்த கலாமின் நம்பிக்கைக்கு ஒரு சலாம் சொல்லுங்கள்.
வாழ்க்கையை நேசிப்பவர்கள், நேரத்தை நிச்சயமாக நேசிப்பார்கள். ஏனெனில் வாழ்க்கை நேரத்தால் ஆனது. நேரத்தின் மதிப்பு தெரியுமா? அப்படியானால் வாழ்க்கையின் மதிப்பும் தெரியும். இதோ! நேரத்தின் மதிப்பு என்னவென்று தெரிய ஒன்பது வழிகள்...

• ஒரு மில்லி செகண்டின் மதிப்பு என்னவென்று
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவரைக் கேளுங்கள்.
• ஒரு வினாடியின் மதிப்பு என்னவென்று
விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.
• ஒரு நிமிடத்தின் மதிப்பு என்னவென்று
தூக்கிலிடப்படும் கைதியிடம் கேளுங்கள்.
• ஒரு மணி நேரத்தின் மதிப்பு என்னவென்று
உயிர் காக்க போராடும் மருத்துவரிடம் கேளுங்கள்.
• ஒரு நாளின் மதிப்பு என்னவென்று - அன்று வேலை
கிடைக்காமல் போன தின கூலி தொழிலாளரைக் கேளுங்கள்.
• ஒரு வாரத்தின் மதிப்பை அறிய ஒரு வார
பத்திரிக்கையின் ஆசிரியரைக் கேளுங்கள்.
• ஒரு மாதத்தின் மதிப்பு என்னவென்று
குறை பிரசவமான ஒரு தாயைக் கேளுங்கள்.
• ஒரு வருடத்தின் மதிப்பு என்னவென்று
தேர்வில் தோல்வியடைந்த மாணவனைக் கேளுங்கள்.
• ஒரு வாழ்வின் மதிப்பு என்னவென்று
உலக சாதனையாளரிடம் கேளுங்கள்.
தனது அறியாமை என்னவென்று ஒரு மனிதன் அறிந்துக் கொள்வதிலும், புரிந்துக் கொள்வதிலும் தானே அவனது அறிவு பளிச்சிடுகிறது. விடா முயற்சி + கடின உழைப்பு + நுண்ணறிவு + தன்னம்பிக்கை = ஐ. எ. எஸ். , ஐ. பி. எஸ். எனும் வெற்றிக் கனியை ஒருவருக்கு கொடுக்கும். சாதிப்பதற்கு உங்களுக்கு தூண்டுகோலாக, ஊன்றுகோலாக இருக்கும் இந்த பழமொழி, பழுத்த மொழி.

என்னால் முடியாதெனில் வேறு யாரால் முடியும்?
இப்போது முடியாதெனில் வேறு எப்போது முடியும்?

சாதனையின் ஊற்றுக்கண் - இவ்வாக்கியத்தில் அடங்கியுள்ளது. இதை படிக்கும் போது உங்களுக்குள் ஒரு அபார ஆற்றல் கொண்ட சக்தி பிறந்திருக்குமே! “இது சிந்தனை துளி மட்டுமல்ல. உங்கள் வாழ்க்கையை செதுக்கும் உளியும் கூட”.
துயரங்களைத் தாங்கிக் கொண்டுதான் உயரங்களை எட்டி பிடிக்க முடியும். எல்லையற்ற வானமே எனது எல்லை என்று வாழ்க்கைக் கூட்டைக் கட்டுங்கள். உயர் சிந்தனைகளை சிந்தைக்குள் செலுத்தினால், வாழ்க்கை வளப்படும். உங்கள் வசப்படும்.
தீபந்தத்தைத் தலைகீழாக கவிழ்த்தாலும், மேல் நோக்கி தான் சுடர் விட்டு பிரகாசிக்கும். அதுபோல மேலே மேலே முன்னேறி சென்றால் தான் வாழ்க்கையும் பிரகாசிக்கும். “படுத்து கிடப்பவனுக்கு பகல் கூட இரவு தான். எழுந்து நடப்பவனுக்கு திரும்பும் திசையெங்கும் கிழக்கு தான்” – என்று எண்ணி எண்ணி ஏறுங்கள் மேலே… சிகரம் பிறகு சின்னதாகி விடும் உங்களுக்கு...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள்  - Page 2 Empty Re: தன்னம்பிக்கை கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum