தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பீர்பால் கதைகள்

View previous topic View next topic Go down

பீர்பால் கதைகள் Empty பீர்பால் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 30, 2015 3:05 pm

சுண்ணாம்பு எங்கே?
---------
மொகலாய மன்னர் அக்பர் சக்ரவர்த்திக்கு ஓர் எண்ணம் உதித்தது.
"பூமியில் மாளிகை கட்டிக் கொண்டு வாழ்வதை விட ஆகாயத்தில் கட்டிக் கொண்டு வாழ்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?' என்று நினைத்தார். இந்த விசித்திர எண்ணம் அவர் மனத்தில் உதித்தபோது பீர்பல் அவ்விடம் வந்தார்.

பீர்பலைக் கண்டதும் அக்பர், ""பீர்பல், வான மண்டலத்தில் நமக்கொரு மாளிகை கட்ட வேண்டும். அதற்கு எவ்வளவு செலவு ஆனாலும் பாதகமில்லை. உடனே அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்,'' என்று உத்தரவிட்டார்.இதைக் கேட்டதும் பீர்பல் திடுக்கிட்டார்.

"ஆகாயத்தில் மாளிகை கட்டுவதா?' என்று திகைத்தார். ஆயினும் மன்னரின் எதிரில் தம்முடைய வியப்பையும், திகைப்பையும் வெளிக்காட்டாமல், ""ஆகட்டும் அரசே!'' என்றார்.

அக்பர் ஏதாவது கூறிவிட்டாரானால் அதை எதிர்த்து, ""இது முடியுமா?'' இப்படியும் நடக்குமா?'' என்றெல்லாம் முதலில் சொல்ல மாட்டார் பீர்பல். தம் செய்கையாலும், பேச்சாலும் முடிவில் அக்பர் சக்ரவர்த்தியே தாம் சொல்லியது தவறு என்று உணரும் வகையில் செய்து விடுவார்.

பீர்பல் ஆகாய மாளிகை கட்டுவதற்காகப் பொருள் பெற்றுக் கொண்டு அரசரிடம், ""அரசே, ஆகாய மாளிகை கட்டுவதற்கான சிற்பிகளைத் தேடி வெளியூர் செல்கிறேன். திரும்பி வர இரண்டு மூன்று மாதங்கள் ஆகும்,'' என்றார்.

""ஆகட்டும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கவலையில்லை. என் கனவு நனவாக வேண்டும். ஆகாயத்தில் நமது மாளிகை கம்பீரமாகக் காட்சியளிக்க வேண்டும்,'' என்றார் அக்பர்.
அரண்மனையிலிருந்து வந்த பீர்பல் நேரே பறவைகளை வேட்டையாடும் வேடனொருவனிடம் சென்று, ""எனக்கு இன்னும் இரண்டு மூன்று தினங்களுக்குள் நிறைய கிளிகள் வேண்டும். உயிருடன் கொடுத்தால் நிறையப் பொருள் தருவேன்,'' என்றார்.

இரண்டு மூன்று நாட்கள் சென்றவுடன், வேடனும் நூற்றுக்கணக்கான கிளிகளைப் பிடித்து வந்து பீர்பலிடம் கொடுத்தான். பீர்பல் அவற்றில் ஐம்பது கிளிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, மீதியை பறக்க விட்டு விட்டார். வேடனுக்கு தாம் முன்னர் கூறிய படியே நிறையப் பொருள் கொடுத்து அனுப்பி வைத்தார்.

பீர்பல் ஐம்பது கிளிகளுக்கும் பேசக் கற்றுக் கொடுத்தார். ஒவ்வொரு கிளிக்கும், ""சுண்ணாம்பு கொண்டு வா! மணல் கொண்டு வா! செங்கல் எங்கே? கதவை இங்கே பொருத்து!'' என்று நன்றாகப் பேசும்படியாக கற்றுக் கொடுத்தார்.

கிளிகளுக்கு பேச கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது அரண்மனையிலிருந்து எவர் வந்து கேட்டாலும், தாம் ஊரில் இல்லை என்று கூறுமாறு தம் மகளுக்கும் கட்டளையிட்டிருந்தார்.
இரண்டு மாதங்கள் சென்றன-

பீர்பல் தம்முடன் இல்லாத குறையை நினைத்து அக்பர் மிகவும் வருந்தினார். பீர்பலை கூட்டிவருமாறு ஓர் ஆளை அவர் வீட்டிற்கு அனுப்பினார்.

சற்று நேரம் சென்றவுடன் அவன், ""அரசே, பீர்பல் வீட்டில் இல்லை. அவர் ஆகாய மாளிகை கட்டுவதில் தேர்ச்சி பெற்ற சிற்பிகளைக் கூட்டிவருவதற்காக வெளியூர் சென்றிருக்கிறாராம். இன்னும் ஒரு மாதத்தில் வந்து விடுவாரென்று அவருடைய வீட்டில் கூறினார்கள்,'' என்றான்.
இந்த பதிலைக் கேட்டதும் அக்பர் முதலில் ஏமாற்றமடைந்தார்.

ஆயினும் தாம் கண்ட கனவு வான மண்டலத்தில் மாளிகை ஒன்று கம்பீரமாகக் கட்டப்படப் போவதை எண்ணி, எண்ணி மகிழ்ந்தார்.

மூன்று மாதங்கள் சென்றன. பீர்பல் கிளிகளுக்கு நன்றாக பேச கற்றுக் கொடுத்து விட்டார். கிளிகளும் மிகத் தெளிவாகப் பிழையின்றி அவர் சொல்லிக் கொடுத்ததை பேச கற்றுக் கொண்டன. அவைகளை அரண்மனைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு வீட்டின் தனியறையில் பூட்டி வைத்துவிட்டு அக்பரிடம் சென்றார் பீர்பல்.

""அரசே, ஆகாய மாளிகை கட்டுவதற்கு சிற்பிகள் வந்துள்ளனர். வேலை தொடங்கப் போகிறது. தாங்கள் வந்து பார்வையிட வேண்டும்,'' என்றார்.

அக்பரும் பீர்பலுடன் சென்றார். பீர்பல் கிளிகளை அடைத்து வைத்திருந்த அறைக் கதவைத் திறந்ததும் கிளிகள், "விர்ரென்று ஆகாயத்தை நோக்கிப் பறந்து சென்றன. அவை மேலே சென்றதும், ""சுண்ணாம்பு கொண்டு வா! மணல் கொண்டு வா! தண்ணீர் ஊற்று! செங்கல்லை அடுக்கு! ஜன்னலை இங்கே பொருத்து!'' என்று கூவிக் கொண்டே பறந்து சென்றன.

அக்பர் சக்கரவர்த்தி ஆச்சரியத்துடன் பீர்பலைப் பார்த்து, ""இது என்ன? இந்தக் கிளிகள் இப்படிப் பேசுகின்றன!'' என்றார்.

""ஆம், அரசே! அவைகளை ஆகாயத்தில் மாளிகை கட்டுகின்றன!'' என்றார் பீர்பல்.
அப்போதுதான் தாம் கூறியது நிறைவேற முடியாத ஒன்று என்று உணர்ந்த அக்பர் சக்ரவர்த்தி, பீர்பலின் அறிவுத்திறனை வியந்து பாராட்டினார்.
***
பீர்பால் கதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பீர்பால் கதைகள் Empty Re: பீர்பால் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 30, 2015 3:07 pm

உண்மையான குற்றவாளி!

-------------

ஆக்ரா நகரக் கடைவீதியின் ஜன நடமாட்டம் அதிகமாயிருந்தது. உள்நாட்டு மக்களும், வெளிநாட்டிலிருந்து வாணிப விஷயமாக வந்திருந்த வியாபாரிகளும் நிறைந்திருந்தனர்.

திடீரென்று, முத்து விற்பனை செய்யப்படும் கடை ஒன்றினருகில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. காரணம் என்னவென்றால் முத்து வாங்க வந்திருந்த ஒருவனை வெளிநாட்டிலிருந்து வந்த வியாபாரி பிடித்துக் கொண்டு, ""இவன் என்னிடம் அடிமையாக இருந்தான். நான் வெளியூர் சென்ற சமயத்தில் என் பொருள்களை கொள்ளை அடித்து விட்டு ஓடிவிட்டான்.

""இவனை தேடாத இடம் கிடையாது. இன்றுதான் இவன் கிடைத்தான்,'' என்று கூட்டத்தினரைப் பார்த்துக் கூறினான்.

பிடிப்பட்டவனோ, ""இவன் சொல்லுவது பொய். நான் இந்த ஊரில் ஒரு பெரிய வியாபாரி. இவன் என்னிடம் அடிமையாக இருந்தான். நான் வெளியூர் சென்ற சமயத்தில் என் பொருள்களை கொள்ளை அடித்துவிட்டு ஓடி விட்டான். இவனைத் தேடாத இடம் கிடையாது. இன்று தான் இவன் கிடைத்தான்,'' என்று கூட்டத்தினரைப் பார்த்துக் கூறினான்.

அப்போது அவ்வழியாக சில காவலர்கள் வரவே அவர்களிடம் இந்த இருவரும் ஒப்படைக்கப்பட்டனர். காவலர்கள் அவர்களை அரசவைக்கு கூட்டிச் சென்று அக்பரின் முன்னால் நிறுத்தினர்.

அவர்கள் வழக்கைக் கேட்ட அக்பருக்கு ஒன்றுமே புரியவில்லை.

""பீர்பல், இவர்களில் யார் சொல்வது உண்மை என்று புரிகிறதா?'' என்றார் அக்பர்.

""அரசே, இவர்களில் யார் குற்றவாளி என்று கண்டுபிடிக்க நான் சிறிது நேரம் தியானம் செய்ய வேண்டும். தியானத்தில் இவர்களில் எவர் உண்மையான குற்றவாளி என்று தெரிந்துவிடும். என் தியானம் முடியும் வரையில் இவர்கள் இருவரும், தரையில் குப்புறப்படுத்துக் கொண்டு கண்களை மூடியபடி இருக்க வேண்டும்,'' என்றார் பீர்பால்.

அக்பர் அவ்வாறே செய்யுமாறு இருவருக்கும் உத்தரவிட, இருவரும் தரையில் குப்புறப்படுத்து கண்களை மூடியவாறு இருந்தனர்.

பீர்பல் நெடுநேரம் தியானம் செய்தார். இவர்களில் உண்மையான குற்றவாளியின் நெஞ்சம் படபடவென்று அடித்தது. பீர்பல், தன்னை தியானத்தின் மூலம் கண்டுபிடித்து விடுவாரோ என்று அஞ்சினான்.

திடீரென்று, ""அந்த அடிமையின் தலையைச் சீவிவிடு,'' என்று காவலர்களை பார்த்துக் கூறினார் பீர்பல்.

உண்மையான குற்றவாளி தன்னைத் தான் சொல்கிறாரோ என்று எண்ணி பதற்றத்துடன் எழுந்தான்.

பீர்பல் அக்பரை நோக்கி, ""இவனே உண்மையான குற்றவாளி. இந்த வெளி நாட்டவரிடம் இவன் அடிமையாக இருந்திருக்கிறான். அவர் ஊரில் இல்லாத சமயத்தில் அவருடைய பொருள்களை அபகரித்துக் கொண்டு நம் நாட்டுக்கு வந்து வேறு பெயரில் பெரிய வியாபாரியைப் போல் வேடமிட்டுத் திரிந்து வருகிறான்,'' என்றார் பீர்பல்.

அக்பர் அவனிடமிருந்த பொருள்களை பறிமுதல் செய்து வெளிநாட்டு வியாபாரிக்கு கொடுத்ததோடல்லாமல், அந்த அடிமைக்கு ஆயுட்கால சிறைத் தண்டனையும் கொடுத்தார். அதே சமயம், பீர்பலையும் பாராட்டி பரிசுகள் கொடுத்தார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பீர்பால் கதைகள் Empty Re: பீர்பால் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 30, 2015 3:08 pm

பீர்பால் வீடு எது?
-----------

நண்பர் ஒருவருடைய வீட்டுக்குப் பீர்பால் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒருவர் அவரைப்பார்த்து, 'அமைச்சர் பீர்பால் வீடு எது?'' என்று கேட்டார்.

அந்த மனிதர் பீர்பாலை பார்த்ததே இல்லை. ஆனால், அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார். ஏதோ அவசர காரியமாக அவரிடம் ஆலோசிப்பதற்கு விரும்பினார்.

பீர்பால் அவரைப் பார்த்தார். பிறகு, 'அதோ தெரிகிறதே மாடி வீடு, அதுதான் பீர்பால் இல்லம்' எனச் சுட்டிக்காட்டினார்.

அந்த மனிதர் பீர்பாலுடைய வீட்டுக்குச் சென்றார். ஆனால், அங்கே பீர்பால் இல்லை, வெளியில் சென்றிருப்பதாகவும் சிறிது நேரத்தில் திரும்பி வந்துவிடுவார் எனவும் காவலாளி கூறினான். வந்தவர் காத்திருந்தார்.

சிறிது நேரத்தில் பீர்பால் வீட்டுக்குத் திரும்பினார்.

அவரைப் பார்த்ததும், வழியில் தான் பார்த்தவரே பீர்பால் என்பதை உணர்ந்து கொண்டு, ''உங்களை வழியில் பார்த்து ''பீர்பால் வீடு எது? என்று கேட்டபொழுது, ''நான்தான் பீர்பால் என்று சொல்லியிருக்கக் கூடாதா?'' என்று கேட்டார்.

''அமைச்சர் பீர்பால் வீடு எது?'' என்றுதான் நீர் என்னிடம் கேட்டீர். நான் வீட்டைக்காண்பித்தேன். ''பீர்பால் எங்கே?'' என்று கேட்டிருந்தால், ''பீர்பால் உம் எதிரில் நின்று கொண்டிருக்கிறார்' என்று கூறியிருப்பேன் என்றார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பீர்பால் கதைகள் Empty Re: பீர்பால் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 30, 2015 3:10 pm

யார் பெரியவர்?

------------

அக்பர் சக்ரவர்த்தி தனது அவையிலே அமர்ந்திருந்தார். சபையில் அமர்ந்திருந்த அறிஞர்களை நோக்கி, ""அறிஞர் பெருமக்களே! நான் பெரியவனா, கடவுள் பெரியவரா? என்ற ஐயம் என் மனதில் எழுந்துள்ளது. இந்த வினாவுக்குத் தக்க காரணத்துடன் பதில் சொல்லுங்கள்'' என்று கேட்டுக் கொண்டார்.

அக்பரை விட கடவுள் பெரியவர் என்பதை சொல்லவே தேவையில்லை. ஆனால் அரசர் கோபித்துக் கொள்வாரே என எண்ணி மற்றவர்கள் மௌனமாக இருந்தார்கள்.

மதிநுட்பம் வாய்ந்த அறிஞரான பீர்பால் எழுந்து நின்றார்.

""உமது கருத்து என்ன?'' என அக்பர் கேட்டார்.

""மன்னர் பெருமானே, இந்த விஷயத்தில் சந்தேகத்துக்கு என்ன இடம் இருக்கிறது? கடவுளை விடத் தாங்கள்தானே பெரியவர்?'' என்று கேட்டார் பீர்பால்.

அக்பருக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

""மதியூகி பீர்பாலே, உமது கூற்றைத் தக்க காரணத்துடன் விளக்கும்...'' என்றார் அக்பர்.

""சக்ரவர்த்தி அவர்களே, என்னைத் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே என்னை நாடு கடத்திவிடத் தங்களால் முடியும்! ஆனால் கடவுளுக்கு என்னைப் பிடிக்காவிட்டாலும் என்னை நாடு கடத்த முடியாது'' என்றார் பீர்பால்.

""எப்படி?'' என்று வினவினார் அக்பர்.

""உங்கள் ஆட்சிக்குள் இருக்கும் பகுதிகள் ஓரளவுக்குத்தான்! அதனால் உங்களுக்குப் பிடிக்காதவரை அடுத்த நாட்டுக்கு விரட்டியடித்து விடலாம். ஆனால் கடவுளுடைய ஆளுகையோ பூமியில் மட்டுமன்றி அண்டசராசரங்களிலும் பரவியிருக்கின்றது. ஆகவே அவர் எவ்வாறு ஒருவனை நாடு கடத்த முடியும்? ஒருவனை கடவுள் எங்கே விரட்டியடித்தாலும் அவன் கடவுளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில்தானே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்க முடியும்?'' என்று கேட்டார் பீர்பால்.

பீர்பால் தனக்குச் சரியான பாடம் கற்பித்துவிட்டார் என்பதை அக்பர் உணர்ந்தார். இருந்தாலும் பீர்பாலின் கூற்றிலுள்ள உண்மையை உணர்ந்து அவருக்குப் பரிசுகளை அளித்தார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பீர்பால் கதைகள் Empty Re: பீர்பால் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 30, 2015 3:11 pm

ஒட்டகத்தின் கழுத்து ஏன் கோணலாக உள்ளது - பீர்பால்
-------------

ஒருமுறை பீர்பாலின் சாதுரியமான உரையாடலைக் கேட்டு அவ ருக்கு ஒரு கிராமத்தைப் பரிசளிப்பதாக வாக்களித்தார் அக்பர்.

சில நாட்கள் கழித்து அக்பர் தான் கூறியதை மறந்துவிட்டார். பீர்பால் பலமுறை நினைவுபடுத்தியும் அக்பர் அதை நிறைவேற்றவில்லை.

கொடுத்த வாக்கை நிறைவேற்றாத அக்பருக்கு தக்க படிப்பினை புகட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார் பீர்பால்.

ஒருநாள் பேசிக் கொண்டே இருக்கும்போது அக்பர், “பீர்பால்... ஒட்டகத்தின் கழுத்து கோணலாகவும் அவலட்சணமாகவும் இருக்கிறதே, ஏன்?” என்று கேட்டார்.

இதுதான் தருணம் என்று எண்ணிய பீர்பால், “அரசே... அவை முற்பிறவியில் யாருக்காவது இலவசமாக கிராமங்களை பரிசளிப்பதாகக் கூறிவிட்டு தம் வாக்குறுதியை மறந்திருக்கும்” என்றார்.

தாம் கொடுத்த வாக்கை காப்பாற்றாததால்தான் தம்மை இப்படி பீர்பால் குத்திக் காட்டுகிறார் என்று புரிந்துகொண்ட அக்பர், உடனே அவர் பெயருக்கு ஒரு கிராமத்தை எழுதிக் கொடுத்தார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பீர்பால் கதைகள் Empty Re: பீர்பால் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 01, 2015 8:12 pm

மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை
----------
அக்பர் தனது மக​ளை ஓர் அரசக்குமாரனுக்கு திருமணம் ​செய்து ​வைத்தார். அன்புடன் குடும்பம் நடத்தி வந்த அவர்களின் வாழ்வில் ஏ​தோ ஒரு காரணத்திற்காக சண்​டையும் சச்சரவும் ஏற்பட்டுவிட்டது. இதனால் மன அ​மைதி இழந்த அக்பரின் மகள் தன் தந்​தையிடம் வந்து கண்ணீர் விட்டு கதறி அழுதாள். பாசத்துடன் வளர்த்த மகளின் கண்ணீ​​ரைக் கண்டதும் அக்பருக்கு தன் மாப்பிள்​ளையின் மீது கடுங்​கோபம் ஏற்பட்டது. அதனால் ப​டைவீரர்க​ளை அனுப்பி மருமக​னைக் ​கைது ​செய்து டில்லி சி​றையில் அ​டைத்தார். அத்துடன் அவரது ​கோபம் தணியாமல் எல்லா வீட்டிலுள்ள மாப்பிள்​ளைக​ளையும் ​கைது ​செய்துவர ஆ​ணையிட்டார். பீர்பா​லை உட​னே வரவ​ழைத்தார் அக்பர்.

''சக்ரவர்த்திப் ​பெருமா​னே, தாங்கள் உட​னே என்​னை அ​ழைத்ததன் காரணம் என்ன?'' என்று வினவினார் பீர்பால். ''பீர்பால் அவர்க​ளே, நா​ளைக் கா​லை சூரிய உதயத்தில் எனது மாப்பிள்​ளை​யை தூக்கி​லேற்றி மரண தண்ட​னை விதிக்க ​வேண்டும். அ​தே சமயம் நமது நகரத்திலுள்ள ஒவ்​வொரு வீட்டின் மாப்பிள்​ளைக​ளையும் தூக்கிலிட ​வேண்டும். இனி நமது நாட்டில் மாப்பிள்​ளைக​ளே இல்​லை என்ற நி​லை​யை ஏற்படுத்த ​வேண்டும்''என்றார் அக்பர்.

மன்னரின் அதிசய ஆ​ணை​யைக் ​கேட்டு பீர்பால் அதிர்ச்சிய​டைந்தார். உத்தர​வைக் ​கேட்ட மக்களும் பீதிய​டைந்தனர். பீதிய​டைந்த மக்க​ளைப் பார்த்து,''இதற்காகப் பயப்பட ​வேண்டாம். நான் பார்த்துக் ​கொள்கி​றேன். ''அரசரும் அவ்வளவு ​கொடுமனம் ப​டைத்தவரல்ல'' என்று சமாதானம் கூறி அனுப்பி ​வைத்தார் பீர்பால்.

சூரிய உதயத்திற்கு முன்னர் அரண்ம​னைக்குச் ​சென்ற பீர்பால்,''சக்ரவர்த்திப் ​பெருமா​னே! தாங்கள் கூறியபடி​யே தூக்கு மரங்கள் தயாராகிவிட்டது. தாங்கள் வந்து பார்​வையிட்டப் பின்னர் உடனடியாக எல்லா மாப்பிள்​ளைகளுக்கும் தூக்குத் தண்ட​னை​யை நி​றை​வேற்றி விடலாம்'' என்றார் பீர்பால்.பீர்பாலின் ​சொற்படி தூக்கு மரங்க​ளைப் பார்​வையிட்டார். அச்சமயம் அந்தத் தூக்கு மரங்களுக்கு இ​டையில் ஒரு தூக்கு மரம் தங்கத்தாலும் மற்​​றொரு தூக்கு மரம் ​வெள்ளியினாலும் காணப்பட்டது. ''இந்த இரு தூக்கு மரங்கள் மட்டும் ஏன் வித்தியாசமாக உள்ளது. காரணம் என்ன?'' என்று வினவினார் அக்பர்.

சிறிதும் பதட்டப்படாமல் அ​மைதியாக,''மன்னர் ​பெருமா​னே! அங்​கே தங்கத்தினால் உருவாக்கப்பட்ட தூக்குமரம் தங்களுக்காகவும், ​வெள்ளியினால் உருவாக்கப்பட்ட தூக்குமரம் எனக்காகவும் என்றார் பீர்பால். பீர்பாலின் எதிர்பாராத பதில​லைக் ​கேட்டதும் அக்பருக்கு வியப்பாக இருந்தது.

''நமக்கு எதற்காகத் தூக்கு மரங்கள்?''என்றார் அக்பர்.

''மன்னர் ​பெருமா​னே! தாங்களும் ஒரு வீட்டின் மாப்பிள்​ளைதா​னே! அ​தே ​போன்று நானும் ஒரு வீட்டின் மாப்பிள்​ளை​தா​னே! ஆக​வே சட்டப்படி தண்ட​னை நம்மு​டைய இருவருக்கும் ​சேர்த்துதா​​னே!'' என்றார் பீர்பால். ​கோபத்துடன் இருந்த அக்பர் தன்​னை மறந்து வாய்விட்டுச் சிரித்தார்.

''​மேன்​மைமிகு சக்ரவர்த்தி ​​பெருமா​னே! தங்களு​டைய மாப்பிள்​ளை தவறு ​செய்த​மைக்காக நாட்டிலுள்ள மாப்பிள்​ளைகள் எல்​லோ​ரையும் தண்டிப்பது என்ன நியாயம்? தங்களு​டைய மாப்பிள்​ளை ​செய்த தவ​றை திருத்தி நல்வழி படுத்த ​வேண்டு​மேயன்றி மரண தண்ட​னை அளிக்கலாமா? தங்க​ளைத் திருத்துவதற்கு எந்த அருக​தையும் எனக்கு இல்​லை. ஆனால் இந்தச் ​செய்​கையினால் தங்களுக்கு இழுக்கு வராமல் தடுப்பது எனது கட​மையல்லவா? தயவு ​செய்து மாப்பிள்​ளைகளின் மரண தண்ட​னை​யை உடனடியாக ரத்து ​செய்ய ​வேண்டுகி​றேன்'' என்றார் பீர்பால். தவறு ​செய்து அவப்​பெயர் எடுப்பதிலிருந்து தன்​னைத் தடுத்த பீர்பா​லை அக்பர் ​பெரிதும் பாராட்டினார்.

நாடாலும் ​வேந்தராக இருந்தாலும் நாட்டு மக்கள் நான்கு விதமாகத்தான் ​பேசுவார்கள்

மாமன்னர் அக்பர் தன் நாட்டின் நடப்பு நி​லை எப்படி இருக்கிறது என்று தனது ஒற்றர்களின் மூலம் அறிந்து ​கொள்வது வழக்கம். இருப்பினும் ஒருநாள் தன் நாட்டு மக்கள் தம்​மைப்பற்றி என்ன நி​னைக்கிறார்கள் என்ப​தை தா​மே ​நேரில் அறிந்து ​கொள்ள ஆவல் ஏற்பட்டது. மன்னர் தன் எண்ணத்​தை பீர்பால் அவர்களிடம் கூறினார். ''மக்களின் மனநி​லை​யை அறிந்து ​கொள்வது மன்னரின் கட​மையாகும். ஆதலின் ​நேரில் ​போய் சந்திப்​போம்'' என்றார் பீர்பால்.

''நீங்கள் ​சொல்வது ​போல் ​நேரில் ​சென்று சந்தித்தால் மக்கள் உண்​மை​யை கூற தயங்குவார்கள் அல்லவா?'' என்றார் மன்னர்.

''மன்னர் ​பெருமா​னே! ​நேரில் ​​போகலாம் என்று ​சொன்னது மாறு​வேடத்தில். அப்​படி ​சென்றால் யாருக்கும் அ​டையாளம் ​தெரியாது. மக்களும் மனம் திறந்து உண்​மை​யைக் கூறுவார்கள்'' என்றார் பீர்பால். பீர்பால் கூறியபடி​யே சாதாரண விவசாயிகள் ​போன்று மாறு​வேடத்தில் நாட்​டைச் சுற்றிப் பார்க்கச் ​சென்றனர். ​வெகுதூரம் ​சென்றதும் ஒரு ஒற்​றையடிப் பா​தைக் குறுக்கிட்டது. அந்தப் பா​தை அடர்ந்த காட்டுப் பகுதிக்குச் ​செல்லும் வழியாகும். ​வெகு தூரம் வந்த​மையால் மன்னருக்கு க​ளைப்பு ஏற்பட்டது.

அதனால் பீர்பாலிடம் ''இங்கு சற்று ஓய்​வெடுத்துவிட்டு ​செல்லலாம்'' என்றார் அக்பர். பீர்பாலும், ''அப்படி​யே ​செய்​வோம்'' என்று கூறி ஒரு ​பெரிய மரத்தின் நிழலில் அமர்ந்து ஓய்​வெடுத்துக் ​கொண்டிருந்தார்.

அச்சமயம் காட்டிற்குச் ​செல்லும் ஒற்​றையடிப் பா​தையின் வழியாக விறகுக​ளை நன்கு கட்டி த​லையில் சுமந்து ​கொண்டு ஒருவர் வந்து ​கொண்டிருந்தார். அவர்கள் அருகில் அவர் வந்ததும், பீர்பால் அவர்கள், ''அய்யா வயதானவ​ரே! இந்த கடு​மையான ​வெயிலில் விற​கை சுமந்து ​​செல்வது சிரமமாக இல்​லையா? ஆ​கையினால் இங்கு சற்று ஓய்​வெடுத்து விட்டு ​செல்லுங்கள் என்றார்.

அந்த முதியவருக்கு இவர்கள் யார் என்பது ​தெரியா​மையினால் ''எனது த​லையிலுள்ள விறகு சு​மை​யை கீ​ழே இறக்கிவிட்டு ஓய்​வெடுப்பது நல்லதுதான். ஆனால் இப்​போது கீ​ழே இறக்கும் சு​மை​யை பின்னர் யார் த​லையில் தூக்கி ​வைப்பது'' என்றார்.

''முதியவ​ரே கவ​லைப்பட ​வேண்டாம் நீங்கள் ​போகும் வ​ரையில் நாங்கள் இங்கு தான் இருப்​போம். நாங்க​ளே உங்கள் சு​மை​யை தூக்கி த​லையில் ​வைக்கி​றோம்'' என்று கூறியப்படி பீர்பால் அந்த முதியவரின் த​லையிலுள்ள விறகு சு​மை​யை கீ​ழே இறக்கி ​வைத்தார். மூவரும் மரத்தினடியில் ஓய்​வெடுத்துக் ​கொண்டிருந்த சமயம் பீர்பால் அவர்கள் மன்னரின் காதில் இரகசியமாக ஏ​தோ கூறினார். மன்னரும் சரி என்று த​லையாட்டினார்.

பீர்பால் அவர்கள் அந்த முடியவ​ரைப் பார்த்து, ''அய்யா, தங்களுக்கு இன்று நடந்த விஷயம் ​தெரியுமா?'' என ​கேட்டார். ''என்ன நடந்தது?'' என்று ​கேட்டார் முதியவர்.

''நமது மன்னர் இன்று இயற்​கை எய்தி விட்டார்'' என்றார் பீர்பால். இத​னைக் ​கேட்ட முதியவர் அதிர்ச்சி அ​டைந்தவராக, ''நமது மன்னர் இயற்​கை எய்திவிட்டாரா? இது எப்படி நிகழ்ந்தது? எவராவது சூழ்ச்சி ​செய்து விட்டார்களா? இது உண்​மையா?'' என்று மிகப் பதட்டத்துடன் ​கேட்டார்.

''மன்னர் இயற்​​கை எய்திவிட்டார் என்றதும் ஏன் இவ்வளவு பதட்டம் அ​டைகின்றீர்?'' என்றார் பீர்பால். ''பதட்டப்படாமல் என்ன ​செய்ய? நமது மன்னர் நாட்டிற்கு பல நன்​மைகள் ​செய்துள்ளார். இன்று நமது நாடு ​செழிப்புடன் விளங்குவதற்குக் காரணம் நமது மன்னரின் நிர்வாகத் திற​மை. அது மட்டுமின்றி சிறுவர்கள் முதல் முதியவர்கள் வ​ரை நலமுடன் வாழ பல சலு​​கைகள் வழங்கிய நல்லிதயம் ப​டைத்தவர். அவருக்கா இந்நி​லை. இவ​ரைப் ​போன்று நம்நாட்டிற்கு எந்த மன்னரும் வாய்க்க முடியாது'' என்று கவ​லையுடன் கூறினார் முதியவர்.

''இவ்வளவு கூறுகின்ற நீங்கள் காட்டில் விறகு ​வெட்டி விற்றுத்தா​னே வாழ்கின்றீர்கள். இருப்பினும் தங்களுக்கு மன்னர்மீது இவ்வளவு நல்​லெண்ணம் ​கொண்டுள்ளீர்கள் என்பது ஆச்சர்யம்தான்'' என்றார் பீர்பால்.

''காட்டில் விறகு ​வெட்டி விற்பதனால் என் குடும்பத்திற்கு எந்தவித கஷ்டமும் இல்​லை. நல்ல வருமானமும் கி​டைக்கிறது. எனது குடும்பம் கஷ்டத்தில் வாழ்ந்தால் தா​னே மன்ன​ரை கு​றை கூற முடியும்?'' என்றார் முதியவர். முதியவர் ​​கொஞ்ச ​நேரம் ஓய்​வெடுத்துக் ​கொண்டு வி​டைப் ​பெற்றார். பீர்பால் அந்த விறகு சு​மை​யை மீண்டும் அந்த முதியவரின் த​லையில் ஏற்றிவிட்டு அவர்களும் புறப்பட்டுச் ​சென்றனர்.

''மன்னர் ​பெருமா​னே! இந்த மாறு​வேட பயணத்தினால் அந்த விறகு ​வெட்டியான முதியவர் மனதில் நீங்கள் ஆழப் பதிந்துள்ளீர்கள் என்பது அறிய முடிகிறது. இத​னை ​கேட்ட எனக்கும் மனமகிழ்​வை அளிக்கின்றது'' என்றார் பீர்பால்.

அரசரும் - பீர்பாலும் ​பேசியபடி நகர வீதி​யை அ​டைந்தனர். நடந்து வந்த க​ளைப்பால் மன்னருக்குத் தாகம் எடுத்தது. ''பீர்பால் அவர்க​ளே! தாகத்திற்கு ஏதாவது அருந்திவிட்டு ​செல்லலாம்'' என்றார் அக்பர். அப்படி​யே ​செய்யலாம் என்று பீர்பால் கூறிக் ​கொண்டிருக்கும்​போ​தே வீதியில் ''​மோரு....​மோரு....'' என்று கூவியப்படி ஒரு ​பெண் த​லையில் ​மோர் பா​னையுடன் வந்துக் ​கொண்டிருந்தாள்.

அந்த ​மோர்காரப் ​பெண்​ணைப் பார்த்து பீர்பால், ''​மோர்காரப் ​பெண்​ணே! எங்கள் இருவருக்கும் இரண்டு குவ​ளை ​மோர் ​கொடு'' என்று கூறி ​மோருக்கானப் பணத்​தைக் ​கொடுத்தார். அரசரும் - பீர்பாலும் ​​மோ​ரைக் குடித்தனர். பீர்பால் ​மோர்காரப் ​பெண்​ணைப் பார்த்து என்ன இவ்வளவு சாதாரணமாக இருக்கிறாய்? நம் மரியா​தைக்குரிய மன்னர் இன்று இயற்​கை எய்திவிட்டார் என்கிற ​செய்தி உனக்குத்​ தெரியாதா? என்று ​கேட்டார்.

அதற்கு ​மோர்க்காரப் ​பெண், ''மன்னர் இருந்தால் என்ன? ம​றைந்தால் என்ன? மன்னராகப் பிறந்தாலும் இயற்​கை​யை ​வெல்ல முடியாது. நல்ல ​வே​ளை ​செய்தி​யை இப்​போது ​சொன்னீர்கள். மன்னரின் ம​றை​வைப் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். அங்கு ​சென்றால் எனக்கு நல்ல வியாபாரம் ஆகும். ​மேலும் ஒரு ​மோர் குடம் விற்றுவிடும்'' என்று கூறிவிட்டு அங்கிருந்து ​வேகமாகச் ​சென்றுவிட்டாள்.

''பீர்பால் அவர்க​ளே! நாம் சந்தித்த இருவரும் இருவிதமான எண்ணத்​தை ​வெளிப்படுத்தியுள்ளன​ரே இதற்கு என்ன காரணம்?'' என்றார் அக்பர்.

''மன்னர் ​பெருமா​னே! விறகு ​வெட்டி பழுத்த முதியவர். மன்னரான தங்களின் மீது ​பெரும் மதிப்​பை ​வைத்துள்ளார். அதனால் இயற்​கை எய்திவிட்டார் என்ற ​செய்தி​யைக் ​கேட்டதும் அதிர்ச்சியினால் மிகவும் ​வேத​னைய​டைந்தார்.

''​மோர் விற்ற ​பெண்ணிடம் ​கொஞ்சம் கூட நாட்டுப்பற்று கி​டையாது. சுயநலமிக்கவள். சிந்த​​னை முழுவதும் ​மோர் அதிகமாக விற்றால் நல்ல பணம் கி​டைக்கும் என்பதாக இருந்தது. அவனது எண்ணப்படி பார்த்தால் அவள் கூறியதிலும் தப்பில்​லை'' என்றார் பீர்பால்.

''அப்படியானால் யார் மீது தவறு?'' என்று வினவினார் அக்பர்.

''மன்னர் ​பெருமா​னே! தவறு நம்மீது தான். ஏ​​னெனில் நாட்டின் நலன் கருத் பல நல்ல ​செயல்க​ளைச் ​செய்யும்​போது மக்களில் சிலர் ​போற்றுவதும், சிலர் தூற்றுவதும் ந​டைமு​றையான விஷயம்தான். நாட்டில் எது நடந்தாலும் மன உறுதியுடன் தாங்கி மக்களின் நன்​மைக்காக நாடாளும் மன்னராக இருக்க ​வேண்டு​மே தவிர, இப்படி​யெல்லாம் ​பேசுகிறார்கள் என்று சிந்திக்கக்கூடாது. வீரத்துடனும் வி​வேகத்துடனும் நாட்​டை ஆள்வதினால் தான் பிறர் நாட்டவரும் தங்க​ளைப் ​போற்றுகின்றனர்'' என்றார் பீர்பால்.

பீர்பால் கூறிய​தைக் ​கேட்ட அக்பர், ''நாடாளும் மாமன்னராக இருந்தாலும் மக்கள் நான்கு விதமாகத்தான் ​பேசுவார்கள் என்பது ​தெளிவாகத் ​தெரிகிறது'' என்றார் மன்னர் அக்பர்.

நன்றி:கல்விதுளிர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பீர்பால் கதைகள் Empty Re: பீர்பால் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 01, 2015 8:13 pm

உலகம் ஓர் சத்திரம்
----------
ஒருமுறை பீர்பால் தன் சொந்த வேலை காரணமாக அயல்தேசம் செல்ல நேரிட்டது. செல்லும் வழியில் அரண்மனை ஒன்று தென்பட்டது. மிகவும் அசதியாக இருந்த பீர்பால் அதில் சிறிது நேரம் தங்கிச் செல்லலாம் என முடிவு எடுத்தார். அது அயல்நாட்டு மன்னனின் அரண்மனையாகும். அந்த விஷயம் பீர்பாலுக்கு தெரியாது. அக்பரின் ஆளுகைக்குட்பட்ட மண்ணில் இருக்கும் அரண்மனை என்றே அவர் நினைத்தார்.

அந்த அரண்மனையின் பின்புறம் சென்று குதிரையைக் கட்டிவிட்டு பார்த்தார். ஆள் அரவமே இல்லை. அரண்மனைக்குள் புகுந்ததும் அடுக்களை தென்பட்டது. தமக்கிருந்த பசியில் சிறிதும் யோசிக்காமல் உணவினை எடுத்து உண்டார். பின்னர் அடுத்த அறைக்குச் சென்றார். அழகான பஞ்சு மெத்தையுடன் கூடிய படுக்கையறை. உண்ட மயக்கத்தில் அந்த படுக்கையில் படுத்து உறங்கியும் விட்டார்.

வேட்டையாடச் சென்றிருந்த மன்னர் சற்று நேரத்திற்கெல்லாம் வந்து விட்டார். தன் உணவை உண்டு விட்டு தன்னுடைய படுக்கையில் படுத்திருப்பவனைப் பார்த்ததும் சினம்கொண்டு பீர்பாலைத் தட்டி எழுப்பினார்.

"என் அரண்மனைக்குள் புகுந்து என் உணவினை உண்டு, என் படுக்கை அறையில் படுத்திருக்கிறாயே?" என்று அதட்டினார்.

"ஓஹோ... இது அரண்மனையா? காவலர் யாருமே இல்லாததால் இதனை சத்திரம் என்று நினைத்தேன்!" என்றார் பீர்பால் அலட்ச்சிக் கொள்ளாமல்.

தன்னை மன்னர் என்று அறிமுகம் செய்தும் சற்றும் அஞ்சாமல் தன்னுடைய அரண்மனையை தர்ம சத்திரம் என்கிறானே இவன் என கோபமுற்றார் அந்த மன்னர்.

"உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கிறதா? அரண்மனைக்கும் தர்ம சத்திரத்திற்கும்கூட உனக்கு வித்தியாசம் தெரியவில்லையே!" என்று கடிந்தார் மன்னர்.

"மன்னர் அவர்களே.. இது அரண்மனையாகவே இருந்தாலும் இதனையும் தர்ம சத்திரம் என்று அழைப்பதில் தவறில்லை!" என்றார் பீர்பால்.

"ஓர் அரண்மனை எப்படி சத்திரமாக முடியும்? சத்திரம் என்றால் இன்று ஒருவர் வருவார் நாளை போய்விடுவார்... மறுநாள் வேறொருவர் வருவார்.. பிறகு சென்று விடுவார்.. இங்கேயே தங்க மாட்டார்கள். அரண்மனை அப்படி அல்ல. நான் நிரந்தரமாக தங்கி இருக்கிறேனே!" என்றார் மன்னர்.

"மன்னர் அவர்களே உங்கள் பாட்டனார் எங்கே தங்கி இருந்தார்?"

"இதே அரண்மனையில்தான்!"

"உமது தந்தையார்?"

"இதே அரண்மனையில்தான்!"

"நாளை உங்களுக்குப் பின் யார் தங்குவார்கள்?"

"இதென்ன கேள்வி? எனது மகன் தங்குவான்!"

"ஆக இந்த அரண்மனையில் யாருமே நிரந்தரமாக தங்கி இருக்கவில்லை! தங்கள் முன்னோர் சில காலம் தங்கி இருந்துவிட்டு சென்று விட்டனர். இப்போது நீங்கள். உங்களுக்குப் பின் உங்கள் மகன். எனவே சத்திரத்துக்கும் அரண்மனைக்கும் எந்த வேறுபாடும் இல்லை!" என்றார் பீர்பால்.

பீர்பால் சொல்வதில் உள்ள உண்மை மன்னருக்கு விளங்கியது. வந்திருப்பவர் சாமான்யர் இல்லை என்பது விளங்கியது அவருக்கு!

"தாங்கள் யார்?" என்று மரியாதையுடன் வினவினார் அரசர்.

"என்னைப் பீர்பால் என்று அழைப்பார்கள்!' என்று பதில் சொன்னார் பீர்பால்.

"அந்த மாமேதை நீங்கள்தானா? தங்களின் புகழை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். இதுவரை பார்த்தது இல்லை. நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். வருத்தம் வேண்டாம். என்னை மன்னித்து விடுங்கள்!" என்றார் அரசர்.

அந்த மன்னனின் அன்புக் கட்டளையை ஏற்று பீர்பால் மேலும் சில நாட்கள் அவரின் விருந்தினராகத் தங்கி இருந்து விட்டு பிறகு தான் செல்ல வேண்டிய இடத்துக்கு புறப்பட்டார்!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பீர்பால் கதைகள் Empty Re: பீர்பால் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 01, 2015 8:15 pm

பீர்பால் புகையிலை
------------
பீர்பால் அடிக்கடி புகையிலை உபயோகிப்பார். மன்னர் பலமுறை சொல்லியும் அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள அவரால் முடியவில்லை. அக்பரின் மூத்த அமைச்சர் ஒருவருக்கு பீர்பால் புகையிலை உபயோகிப்பது மிகவும் அருவறுப்பாக இருந்தது. நல்ல சந்தர்ப்பம் பார்த்து புகையிலைப் பழக்கத்துக்காகப் பீர்பாலை அவமானப் படுத்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார்.

ஒருமுறை மன்னர் காற்றோட்டமாக அரண்மனைத் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தார். அவருடன் மூத்த அமைச்சரும் பீர்பாலும் சேர்ந்து உலவியவாறு உரையாடிக் கொண்டிருந்தனர்.

அரண்மனைத் தோட்டத்தின் வேலியோரத்தில் புகையிலைச் செடி ஒன்று தானாக முளைத்து வளர்ந்து இருந்தது. தெருவிலே சென்று கொண்டிருந்த கழுதை ஒன்று வேலியின் இடுக்கு வழியாக முகத்தினை நுழைத்து அந்த புகையிலைச் செடியைத் திண்ணப் பார்த்தது. இலையில் வாயை வைத்தவுடன் அதன் காரமும் நாற்றமும் பிடிக்காமல் செடியை விட்டுவிட்டு திங்காமல் வெறுப்போடு போய்விட்டது.

அதனைச் சுட்டிக் காட்டிய மூத்த அமைச்சர், "மன்னர் அவர்களே, பார்த்தீர்களா? நம் பீர்பாலுக்கு மிகவும் பிடித்தமான புகையிலை கேவலம் அந்த கழுதைக்குக்கூடப் பிடிக்கவில்லை!" என்றார் சிரிப்புடன். அவர் முகத்தில் இப்போது நிம்மதி.

உடனே பீர்பால் சிரித்துக் கொண்டே, "அமைச்சர் அவர்களே, உண்மையைத்தான் சொன்னீர்கள். புகையிலை எனக்கு மிகவும் பிடித்த பொருள்தான். ஆனால் கழுதைகளுக்குத்தான் புகையிலையைப் பிடிப்பதில்லை!" என்றார் ஒரே போடாக!

தனது வாக்கு வன்மையால் மூக்குடைத்தார் மூத்த அமைச்சரை .
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பீர்பால் கதைகள் Empty Re: பீர்பால் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 01, 2015 8:17 pm

படிப்பு எதற்கு ..?
----

அக்பர் சக்ரவர்த்தி, பீர்பாலிடம் எவ்வளவு மதிப்பும் பிரியமும் வைத்திருந்த போதிலும் சில சமயங்களில், அவர் மீது கடுமையான கோபம் கொள்வதும் உண்டு. கோபத்தின் அவசரத்தில் தண்டனை அளிப்பார்; சில நாட்களில் அத்தண்டனையை மாற்றவும் செய்வார். இது வழக்கமான கதையாகிவிட்டது இருவருக்கும்.

ஒருநாள் ஏதோ கோபத்தால் பீர்பாலை நாட்டைவிட்டு உடனே வெளியேறும்படி உத்தரவிட்டார்.

என்ன செய்வார் பீர்பால். தண்டனைக்குக் கீழ்ப்படிந்து நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.

பல மைல்கள் நடந்து களைப்புற்றார். கையில் பணம் இல்லை; பசி வேறு துன்புறுத்தியது; சோர்ந்து ஒரு வீட்டின் திண்ணை மீது உட்கார்ந்து விட்டார். அவரைப் பார்த்த ஒருவர், இவர் பீர்பால் அல்லவா ! ஏன் இப்படியாகி விட்டார் என எண்ணி, அவருக்கு ஆகாரம் கொடுத்து ஆறுதல் கூறி, அவ்வூர் ஜமீந்தாரிடம் அழைத்துக்கொண்டு போய் அறிமுகப்படுத்தினார்.

ஜமீந்தார் படிப்பு வாசனையே அறியாதவர். ஆனாலும், பரம்பரையாக வந்த ஜமீந்தார் ! மிகவும் கஞ்சன்.

தம் மகனுக்குக் கல்வி கற்றுக் கொடுப்பதற்காக பீர்பாலை நியமிக்கலாம் எனக் கருதினார்.

'என்னிடம் வேலையாட்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால், எம் மகனுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதற்காக உம்மை வைத்துக் கொள்கிறேன்' என்றார் ஜமீந்தார்.

'எவ்வளவு ஊதியம் கொடுப்பிர்கள்?' என்று கேட்டார் பீர்பால்.

'என் வீட்டில் சாப்பாடு போட்டு உமக்கு மாதம் பத்து ரூபாய் தருகிறேன். நீர் பெரிய கல்விமான் என்று கூறினார் என் நண்பர். ஆனாலும், இதற்கு அதிகமாக என்னால் தர இயலாது' என கண்டிப்பாகச் சொன்னார் ஜமீந்தார்.

பீர்பாலுக்கு கோபம் அதிகரித்தது. சுற்றுமுற்றும் பார்த்தார். அருகில் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.'அவன் யார்?' என்று கேட்டார் பீர்பால்.

'என்னுடைய குதிரை வண்டியை ஓட்டுபவன்' என்றார்.

'அவனுக்கு என்ன ஊதியம்?' என்று கேட்டார் பீர்பால்.

'மாதம் பதினைந்து ரூபாய் கொடுத்து சாப்பாடும் போட்டு வருகிறேன்' என்றார் ஜமீந்தார்.

பீர்பால் கோபமுற்றார். ஜமீந்தாரை நோக்கி, 'உங்கள் மகன் பத்து ஆண்டுகள் படித்து என்ன செய்யப் போகிறான்? என்னைப் போல பத்து ரூபாய் தானே ஊதியம் பெற முடியும்? ஆகையால், அவனுக்குக் குதிரை வண்டி ஓட்டுவதற்குக் கற்றக் கொடுத்தால், மாதம் பதினைந்து ரூபாய் ஊதியம் கிடைக்குமே, அதை முதலில் செய்யுங்கள்' என்று கூறி எழுந்தார பீர்பால்.

தன்னுடைய கஞ்சத்தனத்துக்குச் சரியான சூடு கொடுத்தார் பீர்பால் என வெட்கப்பட்டார் ஜமீந்தார். ஆனால், என்னுடைய சுபாவத்தை நான் மாற்றிக் கொள்ள முடியுமா என எண்ணிக் கொண்டு மெளனமாக இருந்தார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பீர்பால் கதைகள் Empty Re: பீர்பால் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 01, 2015 8:19 pm

உதைத்த காலுக்கு முத்தம்
-----------
ஒரு நாள் காலை ராஜசபை வழக்கம்போல் கூடியது. அக்பர் சபையோர்களை பார்த்து கேட்டார். "நேற்று நள்ளிரவில் ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது. யாரோ ஒருவன் என் படுக்கையில் ஏறி, எனது மார்பில் எட்டி உதைத்து எழுப்பினான். யாரென்று பார்ப்பதற்குள் ஓடிவிட்டான். அவனை கண்டுபிடித்தால் என்ன தண்டனை கொடுக்கலாம்?''

இதைக் கேட்ட சபையோரின் ரத்தம் கொதித்தது. ஒவ்வொருவரும் எழுந்து கடும் தண்டனைகளை தெரிவித்தார்கள். எல்லாமே மரண தண்டனையில்தான் முடிந்தது.

பீர்பால் மட்டும் சிந்தனையில் மூழ்கி இருந்தார். அக்பர் அவரை நோக்கி "பீர்பால், நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே, உங்கள் கருத்து என்ன?'' என்றார்.

பீர்பால் சொன்னார், "சர்க்கரவர்த்தி அவர்களே உங்களை உதைத்த காலுக்கு தங்கம், வைடூரிய கொலுசு செய்து போட்டு முத்தமழை பொழியுங்கள்.''

"என்ன கொலுசும், முத்தமுமா?'' என்று சபையே திகைப்புடன் பார்த்தது.

"ஏன் அப்படி சொல்கிறீர்கள்?'' அக்பர் கேட்டார்.

"மன்னா, தங்கள் படுக்கை அறையில் இவ்வளவு கட்டுக்காவல்களை மீறி நள்ளிரவில் நுழைவது என்றால் யாரால் முடியும்? அதுவும் உங்கள் மார்பில் ஏறி உதைத்துவிட்டு ஓட வேண்டும் என்றால், அது நமது குழந்தை இளவரசனால்தானே முடியும். அவருக்கு கொலுசும், முத்தமும்தானே சிறந்த பரிசு!'' என்று விளக்கினார் பீர்பால்.

அவரது மதியூகத்துக்கு அவை தலைசாய்த்தது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பீர்பால் கதைகள் Empty Re: பீர்பால் கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum