தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஈழத்து சிறுகதைகள்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

ஈழத்து சிறுகதைகள்  - Page 2 Empty ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 26, 2015 8:18 am

First topic message reminder :

கூடுகள் சிதைந்தபோது.........
----------------------
கோடை வெயில் அனலாய்க் கொதித்துக்கொண்டிருந்தது. அவ்வப்போது விசிறி விட்டுப்போன காற்றில் மட்டும் லேசாய் ஈரப்பதன். வீட்டுக்குள் இருக்க அலுப்பாய் இருக்க இந்தப் பூங்காவில் வந்து அமர்ந்துகொண்டேன். எவ்வளவு நேரம்தான் அந்த நான்கு சுவர்களையும் பார்த்துக்கொண்டிருப்பது.....? கண்தொடும் தூரத்தில் பள்ளிச் சிறுவர்கள் ஊஞ்சலாடிக்கொண்டு இருக்கிறார்கள். சற்றுத் தூரத்தில் இரண்டு இளவட்டங்கள் நெருக்கமாய் அமர்ந்து, கைகளைப் பிணைத்தபடி உலகையே மறந்து இருக்கின்றனர். அந்த மரத்திற்கு கீழ் அமர்ந்திருக்கும் சீனநாட்டுச் சோடி ஒவ்வொருநாளும் இதே நேரத்திற்கு இங்கே வந்து அமர்ந்து விடுகிறார்கள். அந்த வயது முதிர்ந்த ஆப்கான் கிழவனும், மொட்டாக்கணிந்த அவன் மனைவியும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். என்ன சந்தோசமான வாழ்க்கை! திருப்தி எல்லா முகங்களிலும் பிரதிபலிக்கின்றன. எல்லோரும் சந்தோசமாய்.... நிம்மதியாய்..... மகிழ்ச்சியாய்.....

நான் மட்டும்......?

நான் மட்டும் ஏன் இப்படி...?

உள்ளும் புறமும் ஏதோ அனல் என்னைச் சுட்டெரிப்பதாய் நெளிகிறேன்.

தனிமை...!

வெறுமை....!

நெஞ்சிலே கனம்...!

தேசந்தாண்டி வந்தாலும் இன்னும் அந்த அச்ச உணர்வுகள் என்னைவிட்டு விலகவில்லை. கனவிலும் நனவிலும் கரிய பிசாசுகள் என்னை துரத்துவதாய் ஏதோ பிரமை. 'ஓடு... ஓடு...' என்று ஏதோ ஒரு குரல் என்னை உந்தித்தள்ளுகிறது. மண்டைக்குள் வண்டு குடையுமாப்போல், ஏதோ வாகனம் ஓடுமாப்போல் சதா அதிர்வுகள்.....

கடந்து போன பலரும் தன்னந்தனியாய் உட்கார்ந்திருந்த என்னை ஒருவிதமாய்ப் பார்த்துவிட்டு நகர்ந்தனர். என் நெஞ்சுக்குள் வெடித்துச் சிதறும் ரணங்களின் வலிகள் அவர்களுக்கு எங்கே புரியப்போகிறது. சரியாக வாரப்படாத முடி..... சவரம் செய்யப்படாத முகம்.... கசங்கிப்போன உடை..... கையில் சிகரெட்டு..... நானா இது....? எனக்கே நம்பமுடியவில்லை!

அதுசரி. காலையில சாப்பிட்டனானோ......?

வெளிக்கிடேக்கை கதவை சரியாக பூட்டினனானோ......?

அது இருக்கட்டும்.

ம்.... என்ர வீடு எங்க இருக்குது?

'சீ.... நான் இங்க வந்திருக்கக் கூடாது.'

'நான் இங்க வந்திருக்கக் கூடாது'

என்னுள் வெறுப்பு மண்டுகிறது. புகைந்து கொண்டிருந்த சிகரெட்டை எறியத்தான் பார்த்தேன். அந்தச் சிறுமி மட்டும் என் குறுக்கே ஓடிவராமல் இருந்தால். பத்திரமாக சிகரெட்டுத் துண்டைக் கொண்டுபோய் அணைத்துவிட்டு மரநிழலில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு நடக்கிறேன்.

எங்கே போகிறேன்.....?

என் கால்கள் நடக்கச் சொல்கின்றன.

நான் நடக்கிறேன்.

எவ்வளவு தூரம்......? எத்தனை மைல்.....?

நடக்க நான் தயார். இப்படி நடந்தே ஊர்கள் கடந்துவந்த அகதித் தமிழன் நான்.

சந்தடியற்று நீண்டுகிடக்கிறது அந்த வீதி. ஒன்றிரண்டு கார்கள் ஓசைபடாமல் ஊர்ந்து செல்கின்றன. குடிமனைகள் தெருவின் இருமருங்கும் நெருக்கமாக அமைந்திருக்கின்றன. எல்லா வீடுகளும் ஒரே மாதிரியாக அமைக்கப்பட்டிருக்கின்றன. எதிலும் என் மனம் ஒட்ட மறுக்கிறது. தெருவின் ஓரமாய் பாதசாரிகள் நடப்பதற்காகப் போடப்பட்டிருந்த சீமெந்துத் தரையில் என் வெறும் கால்கள் தம்போக்கில் நடக்கின்றன.

'ஓ செருப்பு அணியக்கூட மறந்து போனேனோ..!

எனக்குள் நானே சிரித்துக்கொள்கிறேன்.

என் மேலாடையின் வியர்வை நாற்றம் எனக்கே அருவருப்பாக இருக்கிறது.

'இன்றைக்காவது போய்க் குளிக்கவேணும்'

ரோட்டைக் கடந்து மறுபக்கம் செல்ல நினைக்கிறேன். ஏதே சிறு சத்தம் என்னை தலைநிமிர வைக்கிறது.

அந்தக் கார் திடீர் என்று 'பிரேக்' போட்டு நிற்கிறது. பிறகு கொஞ்சம் பின்னுக்கு எடுத்து, கொஞ்சம் விலத்தி, பிறகு வேகமாக முன் நகர்கிறது. நடுவீதியில் ஏதோவொன்று வேகமாக அசைவதாய் தெரிகிறது. என் கண்கள் அந்த இடத்தில் நிலைக்குத்தி நிற்கின்றன. படபடவென்று இறக்கையை அடிக்கிறது ஒரு சிறு குருவி.

வெறிச்சோடிக்கிடக்கும் தெருவின் நடுவுக்கு என்னையும் அறியாமல் வந்துவிடுகிறேன்.

முதுகில் கருமையும்;, வயிற்றுப்புறம் இளமஞ்சளுமாய் அந்தக் குருவி துடிதுடிக்கிறது. இன்னொரு குருவி, அதன் ஜோடியாக இருக்க வேண்டும் இந்தக் குருவியைத் தவிப்புடன் சுற்றிச் சுற்றி நடக்கிறது. விழுந்து கிடக்கும் குருவியோ தன் சிறிய செட்டைகளை படபடவென்று அடிக்கிறது. தலையை இரண்டொரு முறை தூக்கிப் பார்த்துவிட்டு அப்படியே தொப்பென்று சரிய இறந்துபோகிறது. அதன் உடல் நசிந்துபோய், மேல் இறகு பிய்ந்துபோய்க் கிடக்கிறது. லேசாக இரத்தம் கசிகிறது.

குருவியை அடித்துவிட்டுக் கார் தன் போக்கில் போய் விட்டது.

'கண் மண் தெரியாமல் ஓட்டுறான். விசரன்..... இவன் எங்க போய் பிரளப்போறானோ.....' என் உதடுகள் முணுமுணுக்கின்றன.

ஜோடிக் குருவியால் தன் இணையின் பிரிவைத் தாங்க முடியவில்லை. தன் இறகுகளை விரித்து விரித்துக் காட்டி அதைத் தன்னுடன் பறந்து வருமாறு அழைக்கிறது. இழப்பை உணர்ந்து வேதனையுடன் இரண்டடி தூரம் பறப்பதும் திருப்பி வந்து இறந்து கிடக்கும் தன் ஜோடியை அலகாற் தொட்டுப் பார்த்துச் சத்தம் போடுவதுமாக அந்தரிக்கிறது. அங்குமிங்கும் பார்த்து தலையை ஆட்டியபடி நடக்கிறது.

தூரத்தில் இன்னுமொரு கார் வருகிறது. அது வருகின்ற வேகத்தில், அதன் சக்கரங்களுக்குள் அகப்பட்டு இறந்து கிடக்கும் சிறுகுருவியின் உடல் மேலும் சிதைந்து சின்னாபின்னமாகப் போகிறதே...! என் நெஞ்சு பதறுகிறது. என்னைப் போலவே அந்தக் குருவியும் பரிதவிக்கிறது. அச்சிறுகுருவியால் ஒன்றும் செய்ய இயலவில்லை. தன் ஜோடியை விட்டுப் போக மனமில்லாமல் அருகில் இருந்த மரத்தில் அமர்வதுவும், பின் தன் ஜோடியின் அருகில் போய் அமர்ந்து கொள்வதுவுமாக அதன் நிலை இருக்கிறது.

நான் அவசரமானேன். தெருவோரமாய் கிடந்த கடதாசி அட்டையை எடுத்துக்கொண்டு இறந்துகிடந்த குருவியை நெருங்கினேன். என் இதயம் வெடித்துவிடும் போல இருந்தது. இரத்தமும் சதையுமாய் ஏதேதோ நினைவுகள்; என் மனதைச் சூழ்ந்துகொள்கின்றன. மரக்கிளையில் அமர்ந்தபடி அந்தக்குருவி என் செயலைக் கண்டதும் பயத்துடன் ஆரவாரிக்கிறது. ஒரு பூவைப் போல அந்தக் குருவியை மெதுவாகத் தூக்கியெடுத்து அட்டைப் பெட்டியில் கிடத்தினேன். என் விழிகள் நீரைச் சொரிந்து கன்னங்களில் வழிந்தோடுகிறது. இரு கைகளிலும் தூக்கி, முகத்திற்கு அருகே கொண்டு வந்து அந்தக் குருவியைப் பார்க்கிறேன்.

'இப்பிடித்தான் என்ர சசியும்......'

என் ஆன்மாவுக்குள் அடக்க முடியாத வேதனை. குலுங்கிக் குலுங்கி அழுகிறேன்.

இழப்பின் வலி அறிந்தவன் நான்.

குருவியின் இழப்பில் என் இழப்பின் வேதனை!! எவ்வளவு நேரம் அப்படியே நடுத்தெருவில் அமர்ந்திருந்து அழுதேனோ தெரியவில்லை.

என்னை விலத்திக் கொண்டு அந்தக் கார் மெதுவாக முன்னகர்கிறது. அதில் அமர்ந்திருந்த வெள்ளையின வயோதிபர் மென்முறுவலுடன், சிறு வியப்புமாய் என்னை அங்கீகரித்துத் தலையசைத்துவிட்டுப் போவது தெரிந்தது.

ஒரு குழந்தையைப் போல பத்திரமாக அந்தக் குருவியை எடுத்து தெருவோரமாய் நின்றிருந்த மரத்தடியில் வைத்துவிட்டு அப்பால் நடக்கிறேன். அதன் இணை என்னை நன்றிப் பெருக்கோடு பார்க்கிறது.

நடந்து நடந்து என் கால்கள் வலிக்கின்றன. அதைவிட என் மனம் வலிக்கிறதே.

அது இறக்க முடியாத சுமை. என் உயிரை அணுவணுவாய்க் கொல்லும் வேதனை. கனவிலும், நினைவிலும் சதா அந்த நிழல் விம்பங்கள். என் நினைவுகளைச் சுமந்தவள், என் கனவுகளின் உருவாக கருவான என் குழந்தை, இருவரையும் இழந்த நடைபிணம் நான்.

'நான் இங்க வந்திருக்கவே கூடாது...'

'நான் விசரன்..... நான் பைத்தியக்காரன்......' ஓலமிடும் என் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் வேகவேகமாக நடக்கிறேன்.

'ஐயோ அம்மா எனக்கு பயமாயிருக்குதம்மா. என்னைக் கட்டிப்பிடியுங்கோ அம்மா' மூத்தக்காவின் நான்கு வயது மகன் கயன் அனுங்குவது இப்போதும் என் காதுகளில் கேட்கிறது. நாலாபுறமும் குண்டுச் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. அக்கா மகனை அள்ளியெடுத்து அணைத்துக்கொள்கிறா. கயன் அவள் மார்போடு ஒட்டிக்கொள்கிறான். அவன் உடல் பயத்தில் நடுங்குகிறது. கண்கள் குழிவிழுந்து, எலும்பும் தோலுமாய் கயன்....

'தம்பி இனி இங்க இருக்கேலாது போல இருக்குது. சனமெல்லாம் வெளிக்கிடுதுகள். நாங்களும் அங்கால போவம். எல்லாத்தையும் இழந்திட்டம். இனி இதுகளையும் இழக்க ஏலாது. பார் பொடியன் பயத்தில நடுங்கிற நடுக்கத்தை' என்கிறா மூத்தக்கா.



இரணைமடுவில இருந்து வெளிக்கிட்டு இது மூன்றாவது இடம். சனத்தோட சனமா அள்ளுப்பட்டுப் போய்க்கொண்டிருக்கிறம். எங்கட இடப்பெயர்வுக்கு ஒரு முடிவு இல்ல. எனக்கு சசியை நினைச்சால் தான் பயமும், கவலையும். சசிக்கு இப்ப ஏழு மாதம். வயிறு நல்லா வெளியில தெரியுது. அவளைப் பார்க்க எனக்கு நெஞ்சு பகீர் எண்டு இருக்கும். அவள் சுகம் பெலமாகப் பிள்ளையப் பெத்தெடுக்க வேணும் என்றதுதான் என்ர பிரார்த்தனையாக இருந்தது.

'அவளால வரிசையில நிக்க ஏலுமா?'

நான்தான் பாணோ, பருப்போ வரிசையில நிண்டு என்னென்டாலும் அவளுக்கு வாங்கிக்குடுக்கிறது.

'எத்தினைநாள் நான் சாப்பிட்டிட்டன் எண்டு பொய் சொல்லி அவளச் சாப்பிடப் பண்ணியிருப்பன்'

கலியாணங்கட்டி ரெண்டு வருஷத்துக்குப் பிறகுதான் சசிக்கு வயித்தில குழந்தை தங்கினது. அந்த செய்தி கேட்ட சந்தோசம் நீடிக்காமல் இந்த நாட்டுப் பிரச்சினையும் தொடங்கிற்றுது. அந்த நாள்த் தொடக்கம் ஆன சாப்பாடு கூட இல்லை. பயம்... பசி.... பட்டினியோட.... பிள்ளை எப்பிடி பிறக்கப் போகுதோ எண்டு சில நேரங்களில யோசிக்க பயமாகத்தான் இருந்துது.

ஒவ்வொருக்காலும் அவளப் பத்திரமா பங்கருக்குள்ள இறக்கி, ஏத்தி.....

எப்பிடி இருக்க வேண்டியவள். நாரி நோ, முதுகு நோ எண்டுகொண்டு அந்த வெறும் தரையிலயும், மண்புழுதீக்கையும் படுத்தெழும்பேக்க எனக்கு செத்திரலாம் போல இருக்கும். அவளும்தான் எலும்பும் தோலுமாய்.... ஆன சாப்பாடு கூட இல்லாமல்.....

எத்தினை இரவுகளை அவள் பங்கருக்குள்ளயே கழிச்சிருக்கிறாள். குண்டுக்குப் பயப்படுகிறத விட அவளுக்குப் பாம்பு, பூச்சியளுக்குத்தான் கூடப் பயம்.

ஆனால் கடைசியில.....



அடுத்தநாள் ஆமிக்காரங்கள் நாங்க இருந்த முள்ளிவாய்க்கால் பகுதியைச் சுத்திவளைச்சுட்டாங்கள். அக்கா வெளிக்கிடுவம் எண்டு சொல்லியும் யோசிச்சுக்கொண்டிருந்தது எவ்வளவு பிழையெண்டு அப்பதான் தெரிஞ்சுது. பீரங்கி, பல்குழல்.... பத்தாததுக்கு பிளேனுகளும் விட்டுவைக்க இல்லை. இந்தத் தாக்குதல் கடைசித் தாக்குதலாம் என்று எல்லாரும் கதைக்கினம். சனம் காடு கரம்பையளுக்குள்ளாலயும், கடல் பக்கத்தாலயும் வெளியேறப் போறதாய்க் கதைச்சவை. சனத்தோட சனமா நாங்களும் வெளிக்கிட்டம்.

சசிக்கு நடக்க ஏலாமல் இருந்துது. எனக்கு சில நேரம் கோபம் கூட வந்தது. இந்தப் பயங்கரத்தைத் தாண்டினால் காணும் எண்டு இருந்துது எனக்கு.

'கெதியா நடவப்பா. இன்னும் கொஞ்சத் தூரம்தான்' எண்டு அவளை அவசரப்படுத்தினேன். குண்டுகள் நாங்க வந்த பாதைகளில் எல்லாம் விழுந்து வெடிச்சுது. செத்தவெ சாக மிச்சமான ஆக்கள் நடந்துகொண்டிருந்தம்.

'ஐயோ... என்ர பிள்ளை. என்ர பிள்ளை...' திடீரென்று பின்னால வந்துகொண்டிருந்த அக்கா கத்திக் குழறினா. அக்காவின்ர கையில இருந்து ரெத்தம் வடிஞ்சுது. அவா கயனைத் தூக்கிக்கொண்டு வந்தவா. கயனுக்கு மண்டையில காயம்பட்டிருந்துது. நான் சசியின்ர கையில இருந்த உர 'பாக்'கில இருந்து ஒரு சீலையக் கிழிச்சு கயனுக்கு கட்டுப்போட்டன்.

'சசி நீ இதுகளைப் பார்க்கக்கூடாது. அங்கால போ'; மெல்லிய குரலில நான்தான் சொன்னன். அவள் விறைத்துப் போய் பார்த்துக்கொண்டு நின்றாள். தலை இல்லாத முண்டங்கள், கை கால் இழந்த உடல்கள் என்று எத்தினையக் கடந்து அவள் வந்துட்டாள். இதென்ன பெரிசா.....!!!

கட்டியிருந்த துணியையும் மீறிக்கொண்டு கயனுடைய தலையில இருந்து இரத்தம் வந்துகொண்டிருக்குது. கயன் அப்பவும் மயக்கமாகத்தான் கிடக்கிறான். பேச்சு மூச்சில்லை. அக்கா மயங்கி விழுந்திட்டா. கொஞ்ச நேரத்தால தானே கண்ணை முழிச்சிட்டா.



'வவுனியாவுக்குள்ள போயிட்டால் பிள்ளைக்கு ஏதாவது மருந்துபோடலாம்' யாரோ சொல்ல அத்தான் கயனைத் தூக்கிக்கொண்டு வேகவேகமாக நடந்தார். அக்காவும் அவருக்குப் பின்னால ஓடினா.

துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கிட்டவாகக் கேட்குது. ரெண்டுபக்கமும் சரியான சண்டை நடக்கிறமாதிரி சத்தம் கேக்குது. சனத்தோட சனமா நாங்களும் நடந்தம். சசியும் மூச்சிரைக்க நடந்து வந்தாள். நடக்க ஏலாமல் கஷ;டப்பட்ட சசியைப் பத்திரமா பிடிச்சுக்கொண்டு நடந்ததில நான் அக்காவையளையும் தவறவிட்டுட்டன்.

கண் எட்டுற தூரத்தில மண் மூடை அடுக்கியிருக்கிறது தெரிஞ்சுது. அது கடந்தால் அங்கால ஆமியின்;ர 'காம்ப்'தான் என்டு யாரோ சொன்னது கேட்டுது. சசியின்ர முகத்திலும் கொஞ்சம் தெம்பு வந்தமாதிரித் தெரிந்தது. நேரமும் இருட்டிக்கொண்டு வந்துது. என்ன பாம்பு, பூச்சி எங்க கிடக்குதோ தெரியாது. நான்; புதர்களை விலக்கிக்;கொண்டு சசிக்கு முன்னால நடக்கிறன். அப்பத்தான் அந்த இடிமாதிரிப் பெரிய சத்தம்....

நான் ஒரு புதருக்குள்ள விழுந்துகிடந்தன். எனக்குக் கையில காயம் பட்டு ரெத்தம் ஓடிக்கொண்டிருந்துது. கண்ணைத் திறக்க முடியாமல் கண்ணுக்குள் மண்ணும், தூசியுமாய்.... புழுதி மண்டலம் அடங்க சில நிமிசங்கள் எடுத்துது. அழுகுரல்களும், ஓலமும் தான்.....

'சசி.....'

'என்ர சசி....' நெஞ்சு பதைபதைக்க சசியைத் தேடினேன்.

சசி ஒரு தென்னைமரத்தோடு குப்புறக்கிடந்தாள். அவள் கிடந்த தோரணை....?

'ஐயோ சசி....!'

'ஓம் என்ர சசி செத்துப்போயிட்டாள்'

'என்ர சசி என்னை விட்டுட்டுப் போயிட்டாள்...'

'சசியோட சேர்ந்து வயித்தில இருந்த பிள்ளையும்........'



சன்னங்கள் அவளின்ர கழுத்து, நெஞ்சு, வயிறு என்று எல்லா இடங்களிலையும் துளைச்சிருந்துது. அவளின்ர ஒரு கால்ல முழங்கால் மட்டும்தான் இருந்துது. ஒரே இரத்தவெள்ளம்.

'ஐயோ சசி... என்ர சசி....'

'நான் என்ர சசிக்காக அழவா? இல்ல வயித்திலயே அழிஞ்சுபோச்சுதே அந்த என்ர குழந்தைக்காக அழவா.....?' முகத்திலயும்;, தலையிலயும் அடிச்சுக்கொண்டு அழுகிறன்.

'டொக்டர் ஆம்பிளைப் பிள்ளை என்டு சொன்னவர்...'

'நான் கண்ட கனவெல்லாம் அழிஞ்சுபோச்சுது. எனக்கினி ஆரு.....'

ஆறுதல்ப்படுத்த யாருமில்லாமல் பைத்தியக்காரனைப் போல கொஞ்சநேரம் அவளை என்ர மடியில போட்டுக்கொண்டு இருந்தன். என்ர காயத்தின்ர வலியோ, அதில இருந்து ரெத்தம் வடிகிறதோ எனக்கு தெரியேல்ல.

'எவளின்ர மடியில என்ர உயிர் போகவேணும் என்டு நினைச்சனோ, இன்றைக்கு அவள் பிணமா என்ர மடியில.....'

துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் இப்ப இன்னும் கிட்டத்தில கேட்குது.

ஆட்கள் ஏதோ சொல்லிக்கொண்டு போகினம். என்ர காதில எதுவுமே விழேல்ல. குண்டுகள் விழுந்து வெடிச்சுப் புழுதி கிளம்புது. சன்னச் சிதறல்கள் நெருப்புப் பொறிகளாத்; தெறிக்குது. துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கிட்டவாய்க் கேட்குது. நாய், நரியளின்ர ஊளைச் சத்தங்களும் தூரத்தில கேட்குது.

'தம்பி அழுதுகொண்டிருக்க இப்ப நேரமில்ல. எழும்புங்க தம்பி' யாரோ ஒரு வயதானவர் என்னை நெருங்கி என்ர நிலமையைப் பார்க்கிறார். என்ர கைக்காயத்தைப் பார்த்து தன்ர இத்துப்போன சாரத்தின்ர ஒரு மூலையைக் கிழிச்சுக் கட்டுப்போடுறார்.



'என்ர ஆருயிர் மனைவி.... அவளை இப்படியே போட்டுவிட்டு எப்படி வரஏலும். ஏழுமாதக் குழந்தை அவள் வயிற்றுக்குள்ளேயே கருகிப்பேச்சுது. இவையள் இல்லாமல் நான் மட்டும் இருந்து என்ன செய்யப்போறன்....?'

கிழவர் எங்கேயோ இருந்து ஒரு தகரத் துண்டைக் கொண்டு வாறார்.

'தம்பி இதால கிடங்கைக் கிண்டு......' என்றபடி அவர் வேகமாக அந்த தகரத் துண்டால மண்ணை கிளறுறார். எனக்குள்ள ஒரு வேகம்... அவரிட்ட இருந்து அதைப் பிடுங்கி வேகவேகமாக மண்ணைக் கிளறுறேன். காய்ந்து வறண்ட நிலம் அவ்வளவு லேசில் குழியைத் தோண்டமுடியேல்லை. கிழவனும் ஏதோ தடியை முறிச்சு தன்ர பங்குக்கு நிலத்தை குத்தி எனக்கு உதவுறார்.

துவக்குச் சூட்டுச் சத்தம் இப்ப நல்லாக் கிட்டக் கேட்குது. சனம் விழுந்தடிச்சு ஓடுதுகள். ஆமிக்காரங்கள் ஏதோ கத்திக் கதைக்கிற சத்தம் கூடக் கேக்குது. வாகனங்களின்ர உறுமலும் கேட்குது. சனங்கள் என்னையும் கிழவனையும் பார்த்து புறுபுறுத்துக்கொண்டு போகினம்.

'அவையளுக்காக என்ர மனுசியின்ரயும்;, பிள்ளையின்டயும் உடம்பை நாய், நரி தின்னவும், காக்காய் கொத்தவும் இப்பிடியே போட்டிட்டு வரேலுமே?'

அதுக்குள்ள எரிகுண்டொன்று எங்களுக்கு அருகில் விழுந்து வெடிக்குது. ஒரு குடும்பம், இரண்டு, மூன்று குழந்தைகள் என்ர கண்ணுக்கு முன்னாலேயே எரிஞ்சு துடிதுடிக்கியினம். அதைப் பார்த்ததும் என்ர உடம்பெல்லாம் பதறத் தொடங்கிற்றுது. மரண பயம் என்னைப் பிடிச்சுட்டுது. அந்தக் கோரச் சாவைப் பார்த்ததும் எனக்கு எல்லாமே மறந்து போனது. எப்பிடியாவது ஓடித்தப்பவேணும். எனக்கு உடம்பெல்லாம் பதறத் தொடங்குது. கிழவனையும் இழுத்துக்கொண்டு நான் ஓடுறன்.

உடம்பைக் குறுக்கியும், குனிந்தபடியும், ஊர்ந்தும், தவழ்ந்தும் அந்த சென்ரிபொயின்ட்டை நெருங்கி விட்டம். சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம்..... என்ர கையைப் பிடிச்சிருந்த கிழவரினர் கைபிடி நழுவிப்போச்சுது. அவர் விழுந்துட்டார். நான் மற்ற சனத்தோட சேர்ந்து கைகளை மேல தூக்கிக்கொண்டு நடக்கிறன். இராணுவம் அப்பிடியே எங்களச் சுத்திவளைச்சுது. ஏதேதோ விசாரணைகளுக்குப் பிறகு எஞ்சியிருந்த எங்களை தங்களின்ர வாகனங்களில ஏத்திக்கொண்டு முகாமுக்கு கொண்டுவந்தவை.

அங்கதான் பெரியக்காவைப் பார்த்தன். தலையில் காயம்பட்டிருந்த கயனும் இறந்து போய் அத்தான்தான்; வழியில ஒரு பாழுங்கிணத்துக்குள்ள அவனை தூக்கிப் போட்டுட்டு வந்தவராம்.

'நரியள் குதறாமல் என்ர மகன் பத்திரமா இருப்பான்..' அத்தான் தலையில் கைவைத்தபடி திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டு இருக்கிறார்;. சசியின்ர செய்தி கேட்டதும் அக்காவால அழக்கூட முடியேல்லை. யாருக்காக அழுகிறது? எதை நினைச்சு அழுகிறது எண்டு தெரியேல்ல.

பிறகு முகாம் வாழ்க்கை, விசாரணைகள் எண்டு தொடர, அக்காதான் முகாமுக்கு வெளியில போய் என்னை வெளிநாட்டுக்கு அனுப்ப வேணும் எண்டு காரியங்களைச் செய்தவா. என்ர அம்மாவும், பெரியண்ணன் குடும்பம், சின்னக்கா குடும்பம், தங்கச்சி எல்லாரும் இங்க கனடாவிலதானே இருக்கினம்.

'ஆரு இருந்தென்ன என்ர சசியும்... பிள்ளையும் எனக்கில்லையே.....'

மூத்தக்கா தான் என்னை சின்னன்னில இருந்து வளர்த்தவா. என்னில சரியான பாசம்.

'நான் பெத்த பிள்ளையத் தான் இழந்திட்டன். உன்னையும் இழக்க என்னால ஏலாது' எண்டு என்னோட பிடிவாதமா நிண்டு என்னை இங்க அனுப்பிவைச்சது அவாதான்.

என்ர மனம் முழுக்க அந்த முள்ளிவாய்க்கால் காட்டுக்குள்ள தான் சுத்திக்கொண்டு இருக்குது.

'என்ர சசி.... என்ர பிள்ளை...'

'இவ்வளவு காலமும் எனக்குச் சோறு போட்டுத் தாய்க்கு தாயாய் இருந்து என்னைப் பார்த்தவள். அவளின்ர உடம்ப நல்ல விதத்தில அடக்கம் செய்யக் கூட என்னால முடியேல்லையே...'

'பாவி...'

'நான் பாவி.... மகா பாவி. அந்தக் குழந்தைய கையில வைச்சுக் கொஞ்சத் தான் ஏலாமல் போச்சு. கடைசியா நாய் நரியள் தான்...'

'ஐயோ... நினைச்சால் எனக்குப் பைத்தியம் தான் பிடிக்குது'

'நான் ஏன் இங்க வந்தன். நான் சுயநலக்காரன், எனக்கு என்ர உயிர்தான் பெரிசாப்போச்சுது.... சீ.... நான் விசரன்...'

'நான் விசரன்...'

என் கால்கள் வலியெடுக்கின்றன. நான் நடக்கிறேன்.

நடந்துகொண்டே இருக்கிறேன்.



( 'ஞானம்' சஞ்சிகை நடாத்திய, புலோலியூர் க. சதாசிவம்; ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் முதலாம் பரிசு பெற்ற கதை)

ஞானம்
உயிரோசை,
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


ஈழத்து சிறுகதைகள்  - Page 2 Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jan 04, 2016 4:22 pm

பிசகு
---------------
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்
---------------
இளைப்பாறி ஏழெட்டு வருடங்களாகியும் ஆதியிலிருந்து எனக்கு ஆகிவந்த நல்ல பெயருக்கு இன்னும் பதினாறு வயசுதான். பொதுவில், ஒருவர் அரச சேவையிலிருந்து இளைப்பாறியதும் அவரிடமிருந்து மற்றவர்கள் பெற்று வந்த பயன்பாடுகள் அற்றுப் போக நேர்வதால் அவர் சார்ந்த ஈடுபாடு குறைவது அல்லது முற்றாக இல்லாமல் போவது வழமையான ஒன்று. என் விடயத்தில் இதற்கு மாறாக நடந்திருக்கிறது.

இன்றைக்கில்லை, வெள்ளைவேட்டி வாலாமணியில் படிப்பிக்கப் போய்வந்த அந்த ஆரம்ப நாட்களிலேயே மதிப்பும் மரியாதையும் அபரிமிதமாக வந்து அமைந்து விட்டது எனக்கு. அந்த மரியாதைப் பூவின் இதழ்கள் இன்னும் என் இல்லம் நாடி மணம் பரப்பியபடியே இருக்கின்றன. இதில் முக்கியமாக ஒன்றைச் சொல்ல வேண்டும். கிடைத்த கௌரவத்தை கட்டுக்குலையாமல் காத்துக் கொள்வது ஒன்றும் சாதாரணமான விசயமல்ல. சிறிது பிசகினாலும் சரிந்து விட வாய்ப்புண்டு.

இன்னமும், என்னைத் தெரிந்தவர்கள் எங்கே கண்டாலும் நின்று நாலு வார்த்தை சுகம் விசாரிக்காமல் விலகமாட்டார்கள். அவசர காரியமிருப்பின் போகிறபோக்கில் தலையாட்டி சிரித்துவிட்டுத்தான் போவார்கள். சிநேகமான சைகைகள் வழி தம் அன்பை வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு ஒரு திருப்தி.

சொந்த இடத்தில் மட்டுப்படாமல் வெளியூர்களிலும் என் கௌரவம் பாய்ந்து பரவியிருக்கிறது. நேற்றுக்கூட, நிலாவெளிப் பக்கமிருந்து கூட்டமாக வந்திறங்கினார்கள். எல்லாரும் வசதியாக இருக்க நாற்காலிகள் பத்தாமல் சிலர் முற்றத்திலும் நின்று கொண்டிருந்தார்கள். அடுத்த வாரம் அவர்கள் பகுதிப் பள்ளிக்கூடத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி. மாவட்ட கல்வி அதிகாரி பிரதம விருந்தினராக வருவதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார். விழாவைத் தலைமை தாங்கி நடத்திக் கொடுக்கும்படி என்னை வற்புறுத்திக் கேட்டார்கள். வழக்கத்தில் நானாகத் தேடிப் போய் உதவி செய்கிற பழக்கமுள்ளவன், வீடு தேடி வந்து விண்ணப்பவர்களின் முகம் முறிப்பேனா? முன்னரைப் போல் உடம்புக்கு முடியாவிடினும், வருகிறேன் என்றதும் வந்தவர்கள் அத்தனை பேர் முகங்களிலும் முழுநிலவு!

என் வாழ்க்கை முழுக்கவும் இப்படித்தான். பிள்ளைகளுக்குப் படிப்பித்தது போக, மிகுதி நேரத்தில் பெரும்பகுதி மற்றவர்களின் கஷ்டங்களைக் கேட்பதிலும் நிவர்த்திகள் சொல்வதிலும் கழிந்திருக்கிறது. படிப்பித்தலை வெறும் தொழிலாகக் கொள்ளாமல் பிள்ளைகளை உயர்த்திவிடும் ஏணியாகவே கருதி வாழ்ந்திருக்கிறேன்.

இந்தக் குணம் என் தாயாரிடமிருந்து கிடைத்த பாரம்பரிய முதுசம். பத்து வருடங்களுக்கு முன் பரமபதம் அடைந்துவிட்ட என் அம்மா ஒரு இளம் வயதுக் கைம்பெண். இரத்தக் கொதிப்பென பின்னாளில் புரிந்து கொண்ட சுகவீனத்தில் தந்தையார் நித்திரைப்பாயிலேயே மூச்சு அடங்கிவிட, பிரச்சனைகளின் மத்தியில் தட்டத்தனியாக கஷ்டம் தெரியாமல் என்னை வளர்த்தாள் அம்மா. எழுத்துக்கூட்டி வாசிக்கும் படிப்பறிவை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி முடிந்தது இது என்று இன்று நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. அயலாரோடும் மிக அன்னியோன்யமாக இருக்க முடிந்திருக்கிறது அவளால். யாரையும் மனம் நோக விடமாட்டாள். தராசைப் பிடித்துக்கொண்டு அளந்து பேசுவது போல் ஒரு நிதானம். சொல்லின் சிக்கனம் செயலின் தாராளத்தை மட்டுப்படுத்தாமல் பார்த்துக் கொள்வது அவளது சிறப்பு. நல்லது கெட்டதுக்கு முதலாளாய் ஓடிப்போவாள். அவசியத்துக்கு ஐஞ்சுபத்து கைமாற்றுக் கொடுக்கவோ அவசரத்துக்கு காப்புச்சங்கிலி இரவல் அளிக்கவோ தயங்கமாட்டாள். ஒருவிதத்தில் அம்மா அயலில் சம்பாதித்து வைத்த மரியாதை என் பெயருக்கு எருவாயிற்று என்றே சொல்ல வேண்டும்.

அம்மா சமைத்து நீங்கள் பார்த்திருக்க வேண்டும். கறிச்சட்டி அடுப்பில் ஏறி இறங்குகிற இடைவெளியில் அம்மாவின் அசைவுகளை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பது எனக்குப் பிடித்தமான விசயமாக இருந்திருக்கிறது. சாம்பலில் கழுவி மூடி வைத்த பாத்திரங்களில் காய்கறிகளை அதனதன் அளவுகள் மாறாமல் நறுக்கிப் போடுவாள். தேங்காயை சிதிலமாக்காமல் சரிபாதி பிளந்து பூ துருவி முதல்பால் கடைசிப்பால் என கறியின் தேவைக்கேற்ப அதற்குண்டான பாத்திரங்களில் பிரித்து வைத்துக் கொள்வாள். அம்மி முன்னால் கால்நீட்டியிருந்து பக்குவம் குறையாமல் அரைத்து வைத்துக் கொண்ட பலசரக்குத் திரணையை கொதிக்கும் குழம்பில் நேரம் அறிந்து இடுவாள். உப்புப்புளி பார்க்க அகப்பையில் துளியளவு கிள்ளி உள்ளங்கையில் விட்டு நாக்கிடம் ருசி கேட்கும் தோரணையில் கண்களை மேல்நிறுத்தி தனக்குள்ளே ரசிப்பாள். கொதித்துவரும் குழம்பில் முதல்பாலை விட்டு கறியின் கொதிப்பை அடக்கி இறக்கிவிட்டு அடுத்த கறிக்கான ஆயத்தங்களை தொடர்வாள். அம்மாவின் அசைவுகள் எல்லாமே ஒரு நேர்த்தியான சடங்கிற்குண்டான பொலிவோடு திகழ்வதைப் பார்த்திருக்கிறேன்.

மேகத்துள் மிதக்கும் பால்நிலவும் மெழுகு தந்தம் காட்டி தத்துபுத்தென நடந்து வரும் யானையும் அன்னையிடம் வயிறுமுட்ட பால் குடித்து மழலை உதிர்க்கும் குழந்தையும் என்றுமே அலுக்காத காட்சிகள் எனக்கு. அம்மாவின் சமையலுக்கு இவற்றோடு சேர்ந்து கொள்வதற்கான அத்தனை அருகதையுமுண்டு. கொய்யக மறைவில் குழந்தைக்குப் பாலூட்டும் தாயின் அக்கறையை அம்மாவின் ஒவ்வொரு அசைவிலும் நான் ரசித்திருக்கிறேன். அந்த ஈடுபாட்டுணர்வு என் இரத்தத்தில் ஊறிவிட்டது.

இதற்கு முன்வரிசை பின்வரிசை என்கிற வித்தியாசம் பாராத மனப்பாங்கு தேவை. வகுப்புகளில் வெறுமனே படிப்பித்தலோடு மட்டுப்படாமல் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க என்னால் முடிந்திருக்கிறது. குறிப்பாக, பின்வாங்குப் பிள்ளைகளின் ஒவ்வாமையை மனங் கொள்வது முக்கியமெனக் கருதினேன். அவர்களில் ஒளிந்திருக்கும் பலதரப்பட்ட திறமைக்கூறுகளை வெளிக்கொணர வேண்டியது ஆசிரியனின் கடமையென உணர்ந்தேன். படிப்பு தவிர்ந்த ஏனைய காரியங்களில் சிதறுகிற அவர்களது கவனத்தை ஒருமுகப்படுத்தி விட்டால் அவர்களது சிறப்பான எதிர்காலத்தை உறுதிப்படுத்தி விடலாம்.

வீட்டுக்கணக்கு செய்ய புத்தகம் வாங்கமுடியாத பிள்ளைகளின் வறுமை கண்டு நான் உதவியிருக்கிறேன். மந்தமான மாணவர்களை பள்ளிக்கூடம் விட்டபின் நிற்பாட்டி சொல்லிக் கொடுப்பேன். விடுதலை நாட்களில் பாடம் எடுப்பேன். வகுப்பில் கடைசி மாணவன் எனக் கருதப்படுகிறவன் கூட என் பாடத்தில் சித்தியடைந்துவிடுவான்.

இளைப்பாறிய பின் உடல் நலம் சற்று குன்றிவிட்டது உண்மைதான். ஓடியோடி ஊருக்கு உழைத்ததால் அல்சர் நீரழிவு என்று நானாவித உபாதைகளின் ஊற்று நிலமாக ஆகிவிட்டீர்கள் என்று திடகாத்திரமான உடலைக் கொண்ட இளைப்பாறிய நண்பர் ஒருவர் சொன்னார். காலாகாலத்தில் கல்யாணம் பண்ணியிருந்தால் ஏலாத காலத்தில் மனைவிமக்கள் கையில் ஏந்தியிருப்பார்களே என்றும் ஆதங்கப்பட்டார்.

என்ன செய்வது - திருமண உறவில் கவனம் தீவிரமாகாமலே என் காலம் கடந்து விட்டது. தயாராயிருந்த போது பெண் பொருந்தி வரவில்லை. பொருந்தியபோது நான் தயாராயில்லை. அம்மா சதா சண்டை போட்டுக் கொண்டுதான் இருந்தாள். அவளுக்காகவாவது ஒப்புக் கொண்டிருக்கலாம். கடைசிவரை மாமிமருமகள் சண்டை அனுபவம் கிட்டாமலே அவள் காலமாகிப் போனாள். பார்க்க எடுக்க பக்கத்தில் ஆளில்லாமலிருப்பது ஒரு விதத்தில் கஷ்டந்தான். ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அரக்கப் பரக்க ஓடித் திரிகிற சம்சாரிகளைப் பார்க்கிறபோது அந்தச் சாகரத்திலிருந்து தப்பிப் பிழைத்ததும் புரியவே செய்கிறது.

இப்போது என் சேவை வேறு தோற்றப்பாடுகளை எடுத்திருக்கிறது. ஆலோசனை கேட்டு வருபவர்கள் பெருகிவிட்டார்கள். ஐயாவிடம் போனால் நிச்சயமாக இதற்கு ஒரு புத்தி சொல்வார் என்கிற நம்பிக்கையோடு வருகிறார்கள். நானும் என்னாலான நல்லதுகளை சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

நேற்றுக்காலை ஒரு தகப்பன் மகளைக் கூட்டி வந்தார். பத்தாம் வகுப்பு அரசு பரீட்சையை நல்ல தரத்தில் சித்தியெய்தியிருந்தாள் அவள். புதிய வகுப்பில் ஒரு குறிப்பிட்ட பிரிவை அவள் தேர்ந்தெடுக்க வெண்டும். அது கலையா வர்த்தகமா பொறியியலா அல்லது மருத்துவமா என்பதை என் மூலமாகத் தீர்மானித்துக் கொள்வதே அவரது வருகையின் நோக்கம். விசயத்தைச் சொல்லிவிட்டு என்னைப் பார்த்தார். அவர் இதே கேள்வியை வகுப்பாசிரியரிடம் கேட்டிருக்கலாம். ஒருவேளை இதற்குள் கேட்டுமிருப்பார். இருக்கச் சொல்லிவிட்டு முதலில் அவரிடமே பேச்சுக் கொடுத்தேன்.

எல்லாரையும் போல, மகள் டாக்டராக வரவேண்டும் என்று விரும்புவதாகச் சொன்னார். முடியாவிட்டால் எஞ்சினியர் என்று ஒரு படி மட்டும் கீழிறங்க அவர் தயாராயிருந்தார். பின்னர் பெண்ணிடம் பேசினேன். நாலைந்து பதில்களில் அவளைப் புரிந்து கொள்ள முடிந்தது. நான் அவரிடம் சொன்னேன். உங்கள் மகள் பாடங்களில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் - நீங்கள் விரும்புகிற துறைகளில் அவளுக்கு நாட்டமில்லை என்று தெரிகிறது, பிரகாசிக்கும் வாய்ப்பும் அரிது. கஷ்டமானதை திணிப்பதிலும், இலகுவாகக் கைவரக்கூடியதை ஊக்கப்படுத்துவதே வெற்றியைத் தரும். இவளை வர்த்தகத் துறையில் விடுங்கள். இன்றைய நவீன யுகத்தில் வேறெதையும் விட பரந்துபட்ட வாய்ப்புகளை அளிக்கும் துறை இது. நீங்களே வியக்கிற அளவிற்கு சிறப்பாக வருவாள் என்றேன். அவரும் நிம்மதியாகப் போய்ச் சேர்ந்தார்.

இப்படிப் பல பேர் வருகிறார்கள். வருகிறவர்களின் மனங்களை அவற்றின் நுன்னிய தளங்களில் நின்று கூர்ந்து படிக்கிறேன் முதலில். பிரச்சனைகளின் ஆழஅகலம் புரிந்து கொண்டு அவர்களை அணுகுகிறேன். இந்த மாதிரி கவுன்சிலிங் செய்வதில் என் நேரமும் உபயோகமாகக் கழிகிறது. வந்தவர்களுக்கும் நன்மையாகிறது.

படித்தவர்களிடம் ஒரு குணம் இருக்கிறது. எல்லாம் தெரிந்த மனப்பான்மை. குறுக்குமறுக்காக கேள்விகள் கேட்பார்கள். அவர்களை ஆறுதல்ப்படுத்துவதற்கு சிறிது நேரம் எடுக்கும். படிக்காதவர்களிடம் அந்தக் கஷ்டமில்லை. கேட்டுக் கேள்வியின்றி ஏற்றுக் கொள்வதை அவர்களின் முகத்தெளிவில் கண்டிருக்கிறேன். இதிலுள்ள சுளிவுநெளிவுகள் எல்லாம் ஒரு கலையாகவே எனக்குக் கைவந்துவிட்டது அம்மாவின் சமையலைப் போலவே. வந்தவர்களின் முகம் அளந்து மனம் படித்து பொருத்தமாகப் பேசுகிற நுட்பத்தில்தான் கவுன்சிலிங் கலையின் வெற்றியே தங்கியிருக்கிறது என்பேன். அவரவருக்குப் பொருந்துகிற வார்த்தைப்பிரயோகம் மிகவும் முக்கியம், இன்னொன்று பொறுமையும்.

நேற்றுமாலை ஒரு பெண் வந்திருந்தாள். ஆடுகள் மேய்த்த சிறுவயதில் மழைக்கு மட்டும் பள்ளிக்கூடம் ஒதுங்கியதாகச் சொன்னாள். பிறந்து வளர்ந்தது தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு குக்கிராமம். வாழ்க்கைப்பட்டது தூரத்து உறவில் மலைநாட்டின் தலவாக்கொல்லையில். புருசன் திருகோணமலைக்கு வேலை தேடி வந்ததில் சீவியம் இங்கேயே அமைந்துவிட்டது. ஒரேயொரு மகன். வயசு பதினைந்து. பையனுக்கு எட்டு வயசில் தகப்பன் வயற்காட்டில் பாம்பு கடித்து நேரத்துக்கு வைத்தியம் கிடைக்காமல் காலமாகிவிட்டார். ஏனோ தெரியவில்லை மனுசி இங்கேயே தங்கிவிட்டது.

பையன் ஒன்பதாவது படிக்கிறான். பள்ளிக்குப் போகாத நாட்களே அதிகம். கூடாத கூட்டம் வேறு, படிக்காமல் ஊர் சுற்றுகிறான். எப்படியாவது புத்தி சொல்லி பள்ளிக்குப் போக வைக்கும்படி கேட்டுக் கொள்ள வந்திருந்தவள் மரியாதைக்காக எட்டத்தில் நின்றே பேசினாள். நாலு சாத்து சாத்துங்கய்யா என்று அடிக்கிற உரிமையும் அளித்தாள். இதுதான் படிக்காதவர்களின் பண்பு.

பையன் எங்கே என்று கேட்க, இன்றைக்குக் கூட்டி வருகிறேன் என்று போயிருக்கிறாள். அநேகமாக இப்போது வருகிற நேரந்தான். கைம்பெண்ணின் வலிகள் அம்மாவிடமிருந்து எனக்கு அனுபவப்பாடம். முகம் தெரியாத அந்தப் பையனில் என்னையே இனம் கண்டது போல ஒரு பிடிப்பு உண்டாயிற்று. இவனை மடக்கி வழிக்குக் கொண்டு வருவது பெரிய விசயமில்லை. அவனது உள்ளத்தைத் தொட்டுவிட்டால் எதிர்காலம் உறுதிப்பட்டுவிடும்.

கதவு தட்டிக் கேட்கிறது. அவர்கள்தான். மகனை எனக்கு இரண்டடி தூரத்தில் தேவையானால் எட்டி அடிப்பதற்கும் வசதியாக நிறுத்திவிட்டு அவள் பத்தடி தள்ளி குறுகிப் போய் நின்று கொண்டாள்.

என்னான்னு கேளுங்கய்யா?

நீங்க அப்பிடி கதிரைல இருங்கம்மா.

சொன்னவுடன் அவள் கதிரைப் பக்கமாகப் போனாள், இருக்கவில்லை. நான் பையனைப் பார்த்தேன். குளிக்க வார்த்து கன்னஉச்சி புறித்து தலை இழுத்து பவுடர் அப்பி தோய்த்த உடுப்பு உடுத்தி கூட்டி வந்திருக்கிறாள் தாய். தாயே எல்லாம் செய்திருக்கிறாள் என்பதற்கு முகத்தில் கூடுதலாக அப்பியிருந்த பவுடர் சாட்சி சொன்னது. ஐயாவுக்கு முன்னால் கையைக் கட்டி நின்று பதில் சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருப்பாள். பையன் கறுப்பு, தாயின் நிறம். தகப்பனுடைய மூக்காக இருக்கலாம். முழிப்பாக இருந்தான்.

கண்டிப்பக்கம் நாலு வருடங்கள் வேலை பார்த்ததில் அங்கு புழக்கத்திலிருக்கும் மொழி அசைவுகள் எனக்குப் பழக்கம். அவர்களோடு அவர்களது இழுவைகளுக்கு இசைவாகப் பேசமுடியும் என்பதே எனக்கு பலந் தருகிற விசயம். முகத்தில் மேலதிக கனிவு காட்டி பையனை உன்னிப்பாகப் பார்த்தேன்.

ஏந்தம்பி இப்ப என்ன படிக்கிறே?

ஒம்போது. .. .. .. அவன் தலை நிமிராமல் நிற்க அம்மா பதில் சொன்னாள்.

எங்க படிக்கிறே?

சந்திப்பள்ளியில படிக்கிறான்யா. நடைதூரத்தில வூடு இருக்குதுங்கய்யா. .. .. ..
இப்போதும் பதில் சொன்னது அவள்தான்.

அம்மா நீங்க சும்மாயிருங்க பையன் பதில் சொல்லட்டும்.

சரீங்கய்யா என்று சொன்னவள் நாலு விரல்களை வாயில் வைத்து மன்னிப்புக் கோருவது போல சற்றுப் பின்வாங்கி நின்றாள்.

போன பரீட்சையில கணிதத்தில் எத்தனை மார்க் வாங்கினே?

வலதுகால் பெருவிரலால் நிலத்தில் அரைவட்டம் போட்டுக் கொண்டிருந்தான் குனிந்த தலை நிமிராமல். அடுத்ததெரு சந்தி மில்லில் அரிசி அரைக்கும் ரீங்காரம் மட்டும் மிகக் கிட்டத்தில் கேட்ட அளவிற்கு அமைதி நிலவிற்று.

பத்தோ பதினைஞ்சு மார்க்குதான்ய்யா. .. .. .. எனக்குச் சங்கடம் நேராதிருக்க தாய்தான் இப்போதும் மெல்லிய குரலில் சொன்னாள்.

உங்க கணக்கு வாத்தியார் பெயர் என்ன?

..........

இப்போ ஒம்போதாவது வகுப்பு சிலபஸ் மாத்தியிருக்காங்கன்னு சொல்றாங்களே உண்மையா?

.........

அடுத்த வருசம் ஜீசீஈ பரீட்சை வருதே அதுக்கு ஒன்னை சேத்துப்பாங்களோ?

............

அவனிடமிருந்து பதிலில்லை. தாய் ஏதாவது சொல்ல முயற்சித்திருப்பாள். இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. சங்கடத்தில் நெளிந்ததைத் தவிர அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.

அவன் பக்கமாக இருந்த சுவரில் திடீரென முளைத்த ஒரு பல்லி, அதனைத் துரத்திய இன்னொரு பல்லி, அந்தந்த இடத்திலேயே தரித்து நின்றன. பையனது பார்வை பல்லிகளின் பக்கம் படர்ந்தது. எனக்கு முன்னால் நிற்கிற பயம் அற்றுப் போய் அடுத்து நிகழப்போவதை ஆர்வம் துளிர்க்கப் பார்த்தான். எங்கள் இருப்பைச் சட்டை செய்யாத இரண்டாவது பல்லி முதலாவது பல்லிக்குப் பக்கத்தில் ஊர்ந்து அதன் மேல் ஏறிக் கொண்டது. பையன் வைத்தகண் எடுக்காமல் நின்றான். நான் தாயைப் பார்த்தேன். உங்களைத்தான் நம்பி வந்திருக்கிறேன் என்று கேட்கும் அதே வேண்டுதல் முகம். நிலைத்து நின்ற பல்லிகளைக் கலைக்கவும் பையனது கவனத்தைத் திருப்பவுமாக, சுவர்ப்பக்கம் கையை விசுக்கி நான் சப்தமிட, எதையும் காதில் போட்டுக் கொள்ளாத பல்லிகள் வெகு சாவதானமாக சிறிது நேரம் கழித்து தம்பாட்டில் எங்கோ மறைந்து கொண்டன.

சரி படிப்பை விடு. அப்பனில்லாம ஒன்னை கஷ்டப்பட்டு வளர்த்திருக்கிறாவே உங்க அம்மா அதை நெனைச்சுப் பாத்தியா தம்பி.

இப்போது காலை மாற்றி மீண்டும் அரைவட்டம் போடுவதில் முனைப்பாக இருந்தான்.

காலை ஆட்டாம கொஞ்ச நேரம் சும்மா நில்லு.

காலை ஆட்டாதறா என்று தாயும் அதட்டினாள்.

ஆட்டம் சட்டென்று நின்றது. நான் ஆத்திரப்பட்டுவிட்டதாக அவன் நினைத்திருப்பான். எனக்கு ஆத்திரம் இலேசில் வராது. இது தேவை கருதிய ஒரு சிறு நடிப்பு. கடிதோச்சி மெல்ல எறிக - வள்ளுவப் பெருந்தகை சொன்னது - அடிக்கிற மாதிரி கத்து, கடிச்சு உதறுகிற மாதிரி நெருங்கு ஆனா அடி மெதுவாகப் படட்டும் என்று. பிள்ளையை பள்ளிக்குப் போக வைக்கத் துடிக்கும் இந்த ஏழைத்தாயை எப்படியாவது ஆறுதல்ப்படுத்த வேண்டும்.

கடேசியா எப்போ பள்ளிக்குப் போனே?

போய் பத்து நாளாச்சய்யா - தாய்.

கடைசிமணிக்கு காத்திருக்கிற மாணவனாக அவன் தெரிந்தான். தாயை திரும்பிப் பார்த்துவிட்டு தலை குனிந்தான்.

எனக்கு மூளை நரம்பில் மெலிதான துடிப்பு உண்டான ஒரு உணர்வு! இது அதிகம். முளைத்து மூனு இலை விடாத பையனுக்கு வயசுக்கு மீறிய கொழுப்பு. இத்தனை கேள்விகள் கேட்டும் ஒரு தலையாட்டல் கூட இல்லாமல் கல்லுளிமங்கனாய் நிற்பது நிச்சயமாக அதிகம்.

வாயில கொழுக்கட்டையா வைச்சிருக்கே?

அவன் திடசங்கற்பம் சிறிதும் குறையாமல் அப்படியே நின்று கொண்டிருந்தான்.

களவாணிப்பயலே, இப்போ வாய தெறக்கப் போறியா இல்லையா?

எனக்குக் சதிரம் கொஞ்சமாக நடுங்கிற்று.

வாயைத் திறக்காட்டி ஒன்னை உண்டு இல்லைன்னு ஆக்கிப் புடுவன் களவாணிப்பய புள்ளை.

அவன் முகத்தில் முறைப்பு உருவானது போல் ஒரு அசைவு தோன்றிற்று. உறுதிப்படுத்திக் கொள்ள கண்ணாடியைப் போட்டுக் கொண்டேன். இல்லை அவன் முறைக்கவில்லை. முறைத்திருந்தாலாவது ஏதோவொரு விதத்தில் பதில் சொல்ல ஆயத்தமாகிறானெனக் கொள்ளலாம். ஒருவித சலனமுமற்று எப்படி இவனால் ஒற்றைப்பிடியில் நிற்க முடிகிறது!

டேய் கள்ளப்பயலே ஒன்னை

அப்போதுதான் நான் எதிர்பாராத அந்த இடி என் தலையில் நேராக இறங்கிற்று. அவனிடமிருந்தல்ல, அவளிடமிருந்து.

நானும் வந்ததிலிருந்து பாக்கிறேன். களவாணிப்பயமவனே கள்ளப்பயலேன்னு விடாம கத்திக்கிட்டிருக்கியே, இதுதான் நீ புத்தி சொல்ற லெச்சணமா? மத்தவங்க பொருளுக்கு ஆசைப்படாத ஆளய்யா என் புருசன். குடிப்பாருதான். களவுக்கெல்லாம் போகமாட்டாரு. எம் புள்ளை படிக்காம ஊர் சுத்துறவன்தான். களவெல்லாம் எடுக்கமாட்டான். அப்படிப்பட்ட புள்ளையை இப்பிடித் திட்றியே நீயெல்லாம் பெரிய மனுசனாய்யா?

நான் உறைந்து போய் அவளைப் பார்க்க, உரு வந்தவள் போல, நீ வாடா மவனே, பெரிய மனுசனாம் பெரிய மனுசன், பெரிசா பேச வந்துட்டாரு என்றவாறே மகனின் கையை தறதறவென இழுத்தாள்.

திடீரென உண்டான குழப்பத்தில் கண்மூடித் திறக்குமுன் தெருக்கதவை தடாரெனச் சாத்துகிற சத்தம் கேட்டது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  - Page 2 Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jan 04, 2016 4:24 pm

பழையதும் புதியதும்
----------------
அ.செ.முருகானந்தன்
----------------
'ஏய்! ஏய்!' என்று இரண்டு அதட்டல் போட்டு மாடுகளைத் தட்டிவிட்டான் கார்த்திகேசு. ஒரு நிலையில் நின்று அலுத்துப்போன மாடுகள் உற்சாகத்தோடு முதலில் கொஞ்சத் தூரம் ஓடின. இந்தச் சமயம் கார்த்திகேசு என் பக்கம் திரும்பி, பெருமை பொங்க ஒரு கம்பீரப் பார்வை பார்த்தான். அதற்கு ஒன்றும் சொல்லாமலிருந்தால் நல்லாயிருக்காதல்லவா?

'அவசரமில்லை, அண்ணே! ரயிலுக்கு நேரமிருக்கு. மாடுகள் மௌ;ளப் போகட்டும். ஏது சோடி வாய்த்து விட்டது போலிருக்கே உனக்கு!' என்று சும்மா சொன்னேன். கால் மைல் தாண்டியதும் நடக்கும் சங்கதி எனக்குத் தெரியாதா? ஆனால், மனுஷன் பாவம். நான் கூறியதை மெய்யென்றே நம்பிவிட்டான். முகஸ்துதியிலே பழைய காலத்து வெள்ளை மனம் தன்னை மறந்துபோய் விடுகிறது.

ஆசனப் பலகையில் நேராக இருந்த மனுஷன் திரும்பி கோணமாக இருந்துகொண்டு, 'ஹீம்! இதெல்லாம் என்ன மாடுகள் தம்பி, முன்னே முன்னே எப்படி மாடுகள் என்னிடம் நின்றன தெரியுமா? உனக்குத் தெரியாது. உனது பெரியப்பாவுக்குத் தெரியும். வேறொன்றுமில்லே. எதற்கும் கைராசி வேண்டும். எல்லாம் மாடுகளைப் பழக்குகிற விதத்திலிருக்கு. எப்பேர்ப்பட்ட சண்டி மாடுகளும் கார்த்திகேசுவின் கைக்கு வந்துவிட்டால் சுட்டியன்களாகிவிடும் என்று முன்னெல்லாம் பேசிக் கொள்வார்கள்.' இப்படி ஆரம்பித்து பேசிக்கொண்டு போனவன் இடையில் ஒரு கணம் நிறுத்தி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுவிட்டு மறுபடியும் சொன்னான்:

'...ம்.. அந்த நடப்பு எல்லாம் முன்னொரு காலத்திலே, அந்தக் காலந்தான் மலையேறிவிட்டதே. இப்போ தம்பிமார்களுக்கு எடுத்ததற்கெல்லாம் வீட்டு வாசலிலே கார், அதிலே அவசர அவசரமாய்ப் பறந்தடித்துக் கொண்டு ஓடித் திரிந்தால் நாகரிகமாம்.....'

கார்த்திகேசுவின் மாடுகள் காற்கட்டை தூரம் நடந்து வந்துவிட்டன என்று இப்பொழுது தெரிந்தது. காரியத்தில் கட்டையான மனிதன் வாய்ப் பேச்சிலே அட்டகாசம் போடுவதுபோலக் கடகடவென்ற முழுக்கத்தோடு குலுக்கி அடித்துக்கொண்டு வண்டி ஊர்ந்தது. கொழும்பு ரயிலுக்கு அதிகம் நேரமிருந்தபடியால் மாடுகள் அவற்றின் போக்கில் போகவிட்டு, நான் கார்த்திகேசுவின் வாயை மௌ;ளக்கிளற ஆரம்பித்தேன். ஆனால்... அடடா, என்ன செய்துவிட்டேன்! இந்த விளையாட்டுக் குணத்தினால் கடைசியில் மனுஷனுடைய நொந்துபோன இதயத்தையே அல்லவா கிளறிவிட்டேன்!.

கார்த்திகேசு தொடர்ந்து பேசிக்கொண்டே போனான்: 'உலகம் கீழ் மேலாகப் புரண்டுகொண்டு வருகிறது தம்பி. அதில் எல்லாம் எனக்குக் கவலையில்லை. மரம் வளருறதற்கு காவோலைகள் விழுந்து, புதிதாக வரும் குறுத்தோலைகளுக்கு இடம் விட்டுக் கொடுக்க வேண்டியதுதான். ஆனால் ஒன்று, காவோலைகள் விழுந்த பிற்பாடும் அவை இருந்த அடையாளமாக மரத்தில் வரைகள் இருக்கோ இல்லையோ அது போல, காலம் எப்படி மாறிவிட்டபோதிலும் மனிதன் வாழ்ந்த வாழ்க்கைத் தளும்புகள் இலேசில் அவன் மனத்தை விட்டு மறைந்துபோவதில்லை. உன்னுயை வீட்டுக்காரர்கள் என்னை மறந்துவிட்ட போதிலும், எப்படிப்புறக்கணித்து விட்ட சமயத்திலும் அவர்களுக்கு வண்டில் விட்ட அந்தப் பதினைந்து வருஷ காலத்தைச் சாகும்வரை என்னால் மறக்கவே முடியாது. தாய் பிள்ளையைப் போல உங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே இருந்து வந்த எனக்கு என்ன வினை வந்தது கடைசியில்! எனக்குப் பெயர் வைத்தது யார் என்று தெரியுமோ? உனது பெரியம்மாவைக் கேட்டுப்பார் யார் என்று சொல்லுவா? இருபது வருஷங்களுக்கு முன்பு உங்கள் வீட்டில் எந்த நேரமும் 'காத்தி அண்ணை காத்தி அண்ணை' என்ற சத்தமாகவேதானிருக்கும். உங்கள் வீட்டில் என்ன நடந்தாலும் காத்தியண்ணையை அறியாமல் நடக்காது. இந்த வண்டிக்காரனுக்கு உனது பெரியம்மா கையிலே பிசைந்து தந்த சோற்று உருண்டை, இதோ வயிற்றில் ஒரு பக்கத்தில் இன்றைக்கும் இருக்கிறது. தம்பி!....'

இவ்விதம் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிக்கொண்டு போன கார்த்திகேசு எதிரே ஒரு கார் வருவதைக் கண்டதும் 'சட்' டென்று வண்டியை ஓரமாக ஒதுக்கினான். கார் சமீபமாக வந்து வண்டியை விலக்கிக்கொண்டு போயிற்று. அப்பொழுது தான் கார் இன்னாருடையது என்று அவனுக்குத் தெரிந்தது போலிருக்கிறது. கார் வண்டியைத் தாண்டும்போது அதன் டிரைவரை எரித்துவிடுவான் போல் முழுpத்துப் பார்த்தான். கார் அப்பால் போய் மறைந்த பிற்பாடு நெடுமூச்சு ஒன்று எழுந்தது, அவனது நெஞ்சைப் பிளந்துகொண்டு.

இவ்வளவுக்கும் நான் அவனையே கவனமாகப்பார்த்துக் கொண்டிருந்ததை அவன் கவனித்தானோ என்னவோ. 'சட்'டென்று என்பக்கம் திரும்பி, 'இப்போ போச்சுதே பிசாசு ஒன்று, இதுதான் என் வாழ்விலே மண்ணை அள்ளிப் போட்டது. ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியைக் கலைக்கப் பார்த்ததாம். முந்தி வந்த செவியைப் பிந்தி வந்த கொம்பு மறைக்கப் பார்த்ததாம். நேற்று வந்த மலையாளத்தானும் அவனுடைய காரும் இந்த ஏழை வண்டிக்காரனை ஒழித்து விடப்பார்த்தார்கள். ஆனால்.....' என்றான்.

கார்திகேசு இப்படித் தொட்டுத் தொட்டுப் பேசியது விஷயத்தை முழுக்க அறியும்படி என்னைத் தூண்டிற்று.

'என்ன நடந்தது, அண்ணே! தயவுசெய்து எல்லாவற்றையும் விபரமாகச் சொல்லு' என்று கேட்டான்.

வெறும் வாயை மெல்லுகிறவனுக்கு அவல் வேறு கிடைத்துவிட்டால் பேசவேண்டுமா? கார்த்திகேசு சற்று விபரமாகக் கதையைச் சொன்னான். 'நடந்தது என்ன தம்பி, எல்லாம் கால வித்தியாசம், இவ்வளவுதான். கார் வந்தது வண்டி போயிற்று. புதியதைக் கண்டதும் பழையதைக் கைவிட்டார்கள். புதுப் பெண்டாட்டியைக் கண்டதும் வயதான தாய்க் கிழவியைச் சாகக் கொன்றுவிடுகிறதா? ஊர் ஊராகக் கார்கள் வந்து நின்ற அந்த நாட்களில் என்னைப்போலக் கூலிவண்டி வைத்துப் பிழைத்தவர்கள் எத்தனை பேர் பெரும் கஷ;டத்துக்குள்ளானார்கள், தெரியுமோ. தளுக்கி மினுக்கத் திரியும் இந்த மோட்டார்க்கார்ளைக் காணும்போது எனக்கு உடம்பெல்லாம் பற்றி எரிகிறது. அரிச்சந்திர மகாராசாவின் பூச்சக்கரக் குடையை அபகரித்து வரும்படி விசுவாமித்திர முனிவர் அனுப்பினாரே நாட்டியப் பெண்கள்... அவர்களுடைய ஞாபகம் வருகிறது தம்பி, இந்த அந்நியப் பிசாசுகளைப் பார்க்கும்போதெல்லாம்! ஆனால், எங்களுடைய மாட்டு வண்டிலோ அந்நிய முதலுமல்ல, அந்நியச் சொத்துமல்ல, அதற்குக் கொடுக்கும் பணத்தில் ஒரு செம்புச் சதமும் வெளியே போவதுமில்லை. இதையெல்லாம் யார் சிந்தித்துப் பார்க்கிறார்கள்? மனிதனுக்குச் சிந்தனை இருந்தால் உலகத்தில் தாசிகள் ஏன் இருக்கிறார்கள் தம்பி? ஏதோ கண்டதே சாட்சி கொண்டதே கோலம்! இந்த மனப்பான்மை – ஊரெங்கும் பரவிக்கொண்டு வந்த இந்த அந்நிய மோகம் - உனது பெரியப்பாவையும் போய்ப் பிடித்துவிட்டது.

அந்தச் சமயம் இந்தியாவிலிருந்து ஒரு பெரிய தவில் வித்துவானைக் கூப்பிட்டிருந்தார் அவர். ஒரு நாள் என்னைக் கூப்பிட்டுச் சொன்னார்: 'கார்த்திகேசு, இப்போ எனக்கு வந்திருக்கும் தவில்காரர் மாட்டு வண்டியில் ஏறிப் பழக்கமில்லையாம். என்ன செய்வது? இந்த வருஷம் போகட்டும். அடுத்த வருஷம் பார்த்துக் கொள்ளலாம்.'

எனக்கு என்னமாதிரி இருந்திருக்கும் என்று நினைகிறாய் தம்பி? பெரியப்பா வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் நான் அவரது உள்ளப்போக்கைத் தெரிந்து கொண்டு விட்டேன். இருந்தும், இதை ஓரளவுக்கு எதிர்பார்த்திருந்தவன்தான் நான். எப்படியான போதிலும் பதினைந்து வருஷத் தொடர்பு அல்லவா? இங்கிருந்து காரைதீவுக்கோ, மட்டுவிலுக்கோ இன்னுமதற்கப்பாலுமோ பெரியப்பா சேவுகம் போகும் வனம், வனாந்திரங்களுக்குச் சாமம் சாமமாக, இரவு இரவாக, இருட்டோ நிலவோ, வெய்யிலோ, மழையோ, பனியோ காற்றோ ஒன்றையுமே சட்டைபண்ணாமல் வண்டி ஓட்டியவனல்லவா? உற்சவங்களிலே நடைபெறும் மேளக் கச்சேரிகளில் உனது பெரியப்பா மேளத்துக்குக் கிடைக்கும் புகழிலும் கீர்த்தியிலும் நன்மையிலும் தீமையிலும் நானும் அவர்களில் ஒருவனாக நின்று பங்குபெற்றவன் அல்லவா?

எனது வண்டி ஏற்றிச் சென்ற வடிவேலு நாயனக்காரரை எங்கேயோ இருந்து வந்த மலையாளத்தானும் அவனது காரும் ஏற்றிச் செல்கிறது என்பதை எண்ணவே எனக்கு வயிறு எரிந்தது. அடக்க முடியாத ஆத்திரமும் கோபமும் உண்டாயின. வயிற்றெரிச்சலிலும் ஆத்திரத்திலும் நான் செய்த விசர் வேலைகளை இப்பொழுது நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. ஆனால் அப்பொழுது அவை எனது உள்ளக் குமுறலை ஓரளவு ஆற்றி வைத்தன.

ஒருநாள் காரோடு என் வண்டியைச் சவாரி விட்டுப்பார்த்தேன். மாடுகள்மேல் தொட்டு அறியாத நான் அன்றைக்கு அவற்றிற்கு அடித்த அடிகளை நினைத்தால் இன்னமும் தேகம் நடுங்குகிறது தம்பி!

இன்னொரு நாள் வேறொரு காரியம் செய்தேன். தெருவில் என் வீட்டுக்குப் பக்கத்தே ஓரிடத்தில் ஒருநாள் ஒளித்திருந்து அந்தக் கார் போகும் சமயத்தில் இரண்டு கல்லை அதன்மீது விட்டெறிந்தேன். யாருடைய நல்ல காலமோ இரண்டு எறியும் கார்மீது படவில்லை. ஓடுகிற கார்மீது கல்லெறிவதற்கும் அநுபவம் வேண்டும் என்று அப்பொழுதுதான் அறிந்துகொண்டேன்.

கடைசியில் இந்த அற்ப காரியங்களினால் ஒரு பலனும் ஏற்படவில்லை. ஊர் முழுவதையும் மலையாளத்தான் தனது வசமாக்கிக்கொண்டான். அவனுக்கிருந்த ஓய்வு ஒழிச்சல் இல்லாத 'சவாரி'யைப் பார்த்து மேலும் கார்கள் ஊரிலே வந்து குவிந்தன.

நிலைமையைப் பார்த்துவிட்டு நான் மண்வெட்டியைக் கையில் தூக்கினேன்.....

எது எப்படியான போதிலும் நீதிக்கு ஒரு இடம் உலகில் என்றைக்கும் இருக்கவே இருக்கிறது தம்பி!

பதினைந்து பதினாறு வருஷங்களுக்குப் பிறகு இப்போ சண்டை தொடங்கி, பெட்ரோல் இறக்குமதி குறைந்து அது கட்டுப்பாடு ஆய்ச்சோ இல்லையோ, வண்டிக்காரர்களும் 'மறுமலர்ச்சி' அடைந்தார்கள். அவர்களுக்கு நல்ல காலம் பிறந்தது. வயலுக்கு எரு இழுத்த மாடுகளும் வண்டிகளும் சலங்கைச் சத்தத்தோடே பெரிய றோட்டில் ஓட ஆரம்பித்தன. வடிவேலு நாயனக்காரரே வலியக் கூப்பிட்டு என்னிடம் கேட்டிருக்கும்போது நான் ஏன் சும்மா இருக்கப்போகிறேன். இருபது வருஷங்களுக்கு முன்னே வண்டி ஓட்டிய அந்த இனிய நாட்கள் திரும்பவும் ஒருமுறை என் சீவியத்தில் மீண்டும் கிட்டுமா என்று ஏங்கியிருந்த எனக்கு இது எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கும் என்பது நான் சொல்லிக்கொள்ளக் கூடியதல்ல. 'கார்த்திகேசு, இந்த வருஷம் எனது மேளத்துக்கு நீதான் வண்டிக்காரன்' என்று வடிவேலு நாயனக்காரர் சொல்லிய வார்த்தைகள் எனக்குத் தேன்போல இனித்தன. பால் போன்ற வெண்ணிலவில் வெள்ளைவெளெரென்றிருக்கும் தெரு வழியே எனது வண்டி மறுபடியும் மேளம் ஏற்றிச் செல்வதை எண்ண எனக்கு ஆனந்தம் பொங்கியது. ஆனபோதிலும்.....' என்று கார்த்திகேசு சட்டென்று பேச்சை மழுப்பினான்.

'அது என்ன காத்தி அண்ணே?' என்று கேட்டேன்.

'ஒன்றுமில்லை, ஒரு சின்னச் சந்தேகம், தம்பி. இந்தச் சண்டை இருக்குதோ இல்லையோ, இது முடிந்த பிற்பாடு 'பெற்ரோல் கிட்ரோல்' எல்லாம் வந்து கார்கள் பழையபடி கறுப்பன் கதைதானாம், மெய்தானோ?'

இதைக் கேட்கும்போது அவனுடைய குரல் சோர்வடைந்து காணப்பட்டது.

'பயப்படாதே அண்ணே! அணுக்குண்டு கண்டுபிடித்திருக்கிறார்களாம்' என்றேன் நான். வேறு எதைச் சொல்ல?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  - Page 2 Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 12, 2016 3:19 pm

செல்வி ஏன் அழுகின்றாள்?

வி.ஜீவகுமாரன்









எல்லாமே முடிந்து விட்டது.
இருந்த வீடு..... வாழ்ந்த கிராமம்.... தெரிந்த முகங்கள்...... எல்லாம...... எல்லாமே....... தொலைந்து போய்விட்டது.
இப்பொழுது முழுக்க முழுக்க சனக்குவியல்கள் மத்தியில...... இரத்த வாடைகளுக்கும்...... இலையான்கள் மொய்க்கும் சிதழ்பிடித்த புண்களுக்கும் மத்தியில்...... யாராவது ஒரு சாப்பாட்டு பாசல் கொண்டு வந்து தருவார்களா என்ற ஏக்கத்துடன..... புல்டோசர் கொண்டு இடித்து, தறித்து, அடிவேர்க் கட்டைகள் நீட்டிக் கொண்டிருக்கும் அந்த காட்டுப் பிரதேசத்தில் போடப்பட்ட கூடாரத்துக்கு கனகமும் செல்வியும் வந்து ஆறு நாளச்சு.
வெயில் கொளுத்திக் கொண்டு இருந்தது. எல்லாமே கனவு போல் இருந்தது. இடம் மாறி இடம் மாறி ஒடிக்கொண்டு இருக்கும் பொழுது எதுவுமே தெரியவில்லை.
'கிட்டவாக வந்திட்டாங்கள்! ஓடுங்கோ!!', என்ற ஒன்றைத் தவிர எதுவுமே கேட்டிருக்கவில்லை.
வீடு, சந்தையடி, கோயிலடி என்ற கிராமத்தின் எல்லை. மட்டும் அறிந்து வைத்திருந்த சனங்களுக்கு...... எந்தப் பக்கத்தாலை போறம்?...... எந்த ஊருக்குள் போகின்றோம் என்ற எந்த விளக்கமும் இல்லாமல் துப்பாக்கி சத்தங்கள் குறைந்த பக்கங்களை மட்டும் நோக்கி அள்ளுப்பட்டு...... அள்ளுப்பட்ட...... இப்ப எல்லாம் கனவு போலை........
தவறிவிடாமல் இருப்பதற்காக சிவதம்புவும் கனகமும் செல்வியும் ஒருவரின் கையை ஒருவர் பிடித்துக் கொண்டுதான் வந்தார்கள். இருந்தால் போல் சிவதம்புவின் கை கனகத்தை இழுக்குமாப்போல் இருக்கு திரும்பி பார்த்தாள். சிவசம்பு சரிந்து கொண்டிந்தார். காதடியில் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. கண்கள் மூடாமல் திறந்தேயிருந்தது. கனகத்தினதும் செல்வியின் பெலத்த குரலினான சத்தம் இந்த நெருசலில் யாருக்கும் கேட்கவில்லை. பதிலாக நடு றோட்டில் இருந்து அழுதது பலருக்கு இடைஞ்சலாய் இருந்தது. 'றோட்டுக்கரையிலை இழுத்துக் கொண்டு போங்க........', யாரோ கூறியபடி சாமான்களால் நிறைந்த தனது சைக்கிளை தள்ளிக் கொண்டு விலத்திப் போனார்.
கனகமும் செல்வியும் சிவதம்புவை றோட்டின் கரைக்கு இழுத்து வந்தார்கள் - உடம்பு கனத்திருந்தது போல இருந்தது. கனகம் ஒலமிட்டு அழுது கொண்டேயிருந்தாள் - செல்வி விறைத்தளவாய் பார்த்துக் கொண்டேயிருந்தாள் - றோட்டால் போய் கொண்டு இருப்பவர்களுக்கு இது பத்தோடு பதினென்று.
'ஒருவர் மட்டும் கிட்டவாக வந்து சந்தியிலை வந்திட்டான்கள் போலை கிடக்கு கெதியாய் நடவுங்கோ', என எச்சரித்துப் போட்டு போனார்.
பிள்ளை அப்பாவை அந்தப் பள்ளத்துக்கை கிடத்துவம..... என்றபடி கனகமும் செல்வியுமாக சிவதம்புவை றோட்டுக்கு அருகேயிருந்த பள்ளத்துள் இறக்கினார்கள். கைகளாளும் காட்டுத் தடிகளாலும் மண்ணை வறுகி சிவதம்புவின் உடலை மூடினார்கள். கனகம் பொருமி பொருமி அழுதாள்.

'நான் உன்னை விரும்பிக் கட்டினதாலை தானே உன்னைக் கழிச்சு வைச்சவை. சிலவேளை உனக்கு முதல் நான் போனால் நீ பிள்ளையையும் கூட்டிக் கொண்டுபோய் உன்ரை கொண்ணை ஆக்களின்ரை பகுதியோடை இரு', இரண்டு வருஷத்துக்கு முதல் செல்வி பெரியபிள்ளையான பொழுது வீட்டுத் தாழ்வாரத்தடியிலை இருந்து சிவதம்பு சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. காசு, பணம், கௌரவம் எல்லாத்தையும் தேடி கனகத்தையும் செல்வியையும் ஒரு கைபிடி உப்புக்காக கூட அயலட்டைக்கு அனுப்பாத சிவதம்பு. . .இப்போது அதுவாகி றோட்றோர மண்ணுக்குள் மண்ணாக. . . கனகத்தின் கைகளை வலுக்கட்டாயமாக பிடித்துப் கொண்டு செல்வி சனத்தோடை சனமாக முன்னேறினாள்.
நெடுகலும் சிவதம்பு சொல்லுவார் - நான் ஒரு ஆண்பிள்ளைச் சிங்கத்தை பெத்து வைச்சிருக்கிறன் எண்டு. அவளே தலைச்சான் பிள்ளையாக தாயைக்கூட்டிக் கொண்டு மீண்டும் சனத்தோடு சனமாக. . . சனக்கூட்டமோ முன்னே போகும் ஆட்டுக்குப் பின்னால் போகும் மந்தையாக. . . கனகம் நடைப்பிணமாக செல்விக்குப் பின்னால்.
92இன் யாழ்ப்பாண இடம்பெயர்வின் பொழுது எங்கிருந்து வெளியேறினாலும் கிளிநொச்சியை அடைவதுதான் நோக்கமாய் இருந்தது. இப்பொழுதோ எங்கு போய் அடைவது என்று தெரியாமல் சனம் அள்ளுப்பட்டுக் கொண்டு இருந்தார்கள் - குண்டு விழாத இடங்களைத் தேடி. வன்னியில் இருந்து ஒரு தடவை செல்வி தாய், தகப்பனுடன் நல்லூர்த் தேர்த்திருவிழாக்கு போன போது சனவெள்ளத்தைப் பார்த்து பிரமித்துப் போயிருந்தாள். அந்த சனக்கூட்டத்தில் தாய் அடியழித்துக் கும்பிடப்போன பொழுது தகப்பனையும் தவறவிட்டு பின் இரண்டு மூன்று மணித்தியாலங்களுக்கு பின்னால் கண்டு பிடித்ததது நல்ல ஞாபகம் இருக்குது. இது பத்துமடங்கு நல்லூர்த் திருவிழா. சுற்றி சுற்றித் தேடி வர இங்கு உள்வீதி, வெளிவீதி என்று ஏதும் இல்லை. தவற விட்டால் அவ்வளவு தான். அதுவும் கனகம் இப்பொழுது இருக்கும் நிலையில். . . செல்விக்கு தன்னை நினைக்கவே ஆச்சரியமாய் இருந்தது – தாய் அழுதளவில் பத்தில் ஒரு மடங்கு கூட தகப்பனுக்கு பக்கத்தில் இருந்த தான் அழவில்லையே என்று! மரணங்களும். . .மரணபயங்களும் தன் உணர்வுகளைக் கூட மரக்கவைத்து விட்டதோ என்று எண்ணிப் பார்த்தாள். ஊரில் என்றோ ஒரு மரணம் வர அதிகாலை சொல்லிச் செல்லும் இழவுச் செய்தியில் தொடங்க..... பாடை கட்டு...... மரம் தறிப்பு...... .கொழும்பு பயணக்காரருக்கான காத்திருப்பு..... கிரியைகள்..... . பட்டினத்தார் பாடல்கள்...... சுடலையடியில் எழும் சின்ன சின்ன சண்டைகள்..... எட்டுச் செலவுகள்...... காடாத்து..... அந்தியட்டி என சுமார் ஒரு மாதமாய் அட்டவணைப்படுத்தப்பட்டு நடக்கும் காரியங்களில் எந்த ஒன்றும் இன்றி....... காகம் கொத்திக் கொண்டு போகும் வடையாக மனிதன் மறைந்து போகின்றான்.
இந்த ஒரு மாதத்துள் இப்படி எத்தனை?..... எத்தனை? ஏன் எதுக்கு என்று எவர்க்கும் சிந்திக்க அவகாசமும் இல்லை – அனுமதியும் இல்லை. . .ஓடுங்கோ. . . ஓடுங்க.... .என்ற கட்டளையும் கட்டளைக்கு பணிதலும் தான். . .மக்கள் மக்களோடு ஒடியபட..... நேற்றுக்காலை தான் கொஞ்சம் பாதுகாப்பான இடத்துக்கு வந்திருந்தார்கள் - இங்கு இனிக்குண்டு விழாது என்று அனைவரும் நம்பியபோது இவ்வளவு நாளும் மறந்திருந்த பசி தலை தூக்கியது...... தண்ணி விடாய்த்தது..... குளிக்காததால் உடம்பு பிசுபிசுத்தது...... ஆனாலும் குளித்தாலும் மாற்றுவதற்கு சீலையோ சட்டையோ இருக்கவில்லை. கனகத்திடம் உடுத்திருந்த சீலையைத் தவிரவும், செல்வியிடம் போட்டிருந்த சட்டையையும் தவிர எதுவுமே இல்லை – எதையுமே எடுத்துக் கொண்டு வர அவகாசம் இருக்கவில்லை – எடுத்து வந்த காசும் வழிவழியே செலவாக கைகளில் இப்பொழுது இருக்கும் இரண்டொரு நகைகள் தான் மிச்சம். இனி இதுகளை வித்துதான் ஏதாவது வேண்டவேணும். . . வெளிநாட்டிலை இருக்கிற ஆரிட்டையும் உதவி கேட்க வேணும்.
கனகத்தின்ரை ஆட்கள் கண ஆட்கள் வெளிநாட்டிலை தான் - சிவதம்புவை கட்டினதாலை விட்டுப் போன உறவுகள்.. . '.இனி அவையைத் தான் நாடவேணும்'
வாழ்வின் நிர்ப்பந்தங்கள் ரோஷ உணர்வுகளுள் தோற்றுக் கொண்டு இருந்தது. எல்லாமே எங்களுக்குள் நாங்கள் போட்ட கதியால் வேலிகள் தான். . . கொஞ்சம் அகலப்படுத்தவோ அல்லது ஆழப்படுத்தவோ எங்குமே இடமிருக்கவில்லை. கனகமும் சிவதம்புவும் வேறு வேறு சாதி கூட இல்லை. ஆனால் சிவதம்புவின் பேரன் ஒரு சிங்களத்தியை வந்திருந்ததும் 83 கலவரத்தின் பின் சிவதம்புவின் குடும்பம் வியாபாரத்திலும் இளைத்ததும் தான் அவர்கள் இளக்காரமாய் போய்விட காரணமாகிவிட்டது. இன்று அந்தக் கனகம் கைம்பெண் கனகமாக கையில் ஒரு குமர்ப்பிள்ளையுடன். . .
'சாப்பாட்டு பாசல் குடுக்கினம்', யாரோ சொல்லக் கேட்டு அரை உயிரும் குறை உயிருமாய் அத்தனை பேரும் அடித்துப் பிடித்துக் கொண்டு கம்பி வேலிக்கு கிட்டவாக ஓடுகிறார்கள் - சிலருக்கு முள்ளுக் கம்பிகள் கீறிவிட்டது. ஆனால் பசியின் போராட்டத்தில் அதொரு பொருட்டல்ல. செல்வியும் அந்தக் கூட்டத்துள் போய்ச் சிக்கிக் கொண்டாள். . . எட்டியவரை கையை நீட்டினாள். . . எப்படியோ கையில் ஒரு பாசல் வந்து விழுந்தது.
'அம்மாக்கும் ஒரு பாசல் தாங்கோ'
'அப்பிடி எல்லாம் தர ஏலாது. ஆளுக்கொரு பாசல் தான்'
செல்விக்கு கண்கள் கலங்கியது. ஆனாலும் வேண்டிக் கொண்டு திரும்பினாள்.
'உப்பிடித்தான் வேண்டிக் கொண்டுபோய் உள்ளுக்கை விக்கினமாம்'
செல்விக்கு யாரோ பிரடியில் அடித்தது போல் இருந்தது. சாப்பாட்டு பாசலை தூக்கி மூஞ்சையில் எறிய வேணும் போல் இருந்தது – ஆனாலும் தாயை நினைத்துக் கொண்டாள். சுருண்டு கிடந்த தாயை எழுப்பி வற்புறுத்தி சாப்பிட வைத்தாள். சிவசம்புவின் நினைவுகள் மேலே வந்து அவளை விம்ம வைத்தது.
'அழாதை அம்மா' செல்வி தேற்ற முயன்று தோற்றாள்.

'பிள்ளை நீ சாப்பிடு'
தாய் சாப்பிட மறுத்த மிகுதிச் சாப்பாட்டை அவள் சாப்பிடத் தொடங்கினாள். ஆனாலும் சாப்பாட்டு பாசல் தந்தவன் சொன்னது காதில் மீண்டும் கேட்க சாப்பாடே அருவருத்தது – அருவருப்பை அடக்கி கொண்டு சாப்பிடப் பார்த்தாள் முடியவில்லை. – தூக்கி வெளியில் போட்டுவிட்டு படுத்து விட்டாள்.
நேரம் நடுநிசியை தாண்டிக் கொண்டு இருந்தது. 'ஏதாவது மருந்தை தந்து என்னைக் கொண்டு விடுங்கோ', என்று வலியின் வேதனையில் ஒருவர் குழறிக் கொண்டு இருந்ததை தவிர அதிகமானோர் நன்கு தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.
'கனகம் ஏன் நெடுக படுத்துக் கொண்டு இருக்கிறாய். . . பிள்ளை அழுது கொண்டு இருக்கிறாள். . .' சிவசம்பு வந்து எழுப்பியது போலிருக்க கனகம் திடுக்கிட்டு எழும்பினாள். வியர்த்துக் கொட்டியது. திரும்பி செல்வியைப் பார்த்தாள். செல்வியைக் காணவில்லை.
கூடத்தினுள் இருந்த மற்றைய ஆட்களை மிதித்திடாதவாறு கவனமாக போக வேணும் என எழுந்த பொழுது செல்வி உள்ளே வந்து கொண்டிருந்தாள். பாவாடையின் கீழ்ப்பகுதி கிழிக்கப்பட்டு ங்கிக் கொண்டு இருந்தது இரவின் வெளிச்சத்திலும் நன்கு தெரிந்தது. கனகத்திற்கு 'திக்'கென்றது.
பக்கத்து கூடாரப் பையன் ஒருத்தன் செல்வியையே முதன்நாள் வைத்த கண்வாங்காது பார்த்துக் கொண்டிருந்ததையும், வந்த இடத்தில் ஏன் பிரச்சனை என்று தான் பார்த்தும் பார்க்காமலும் இருந்தது ஞாபகத்திற்கு வந்தது.

'எங்கையடி போனனி. . .என்ன நடந்தது. . .' தாய் பதைபதைத்தாள்.
உஷ் என விரலால் காட்டினாள் - மற்றவர்கள் எழும்பி விடுவார்கள் என்ற பதைபதைப்பில். ஆனால் கனகத்தினாள் மௌனமாயிருக்க முடியவில்லை.

'சொல்லடி. . . இப்ப எனக்குத் தெரிய வேணும்' என வெளியே இழுத்துக் கொண்டு போனாள்.
மத்தியானம் தூக்கியெறிந்த சாப்பாட்டு பாசல் பகல் முழக்க வெயிலுக்குள் வெதுங்கி இருந்ததால் மணத்துக் கொண்டிருந்தது. அந்த மணம் வேறு வயிற்றைப் பிரட்டியது.

'என்ன நடந்தது. . .ஏன் பாவாடை கிழிஞ்சு கிடக்கு'
தாயைக் கட்டிக் கொண்டு அழத்தொடங்கினாள். கனகத்தின் பெத்த வயிறு துடித்தது. . .

'சொல்லடி பிள்ளை. . .சொல்லடி பிள்ளை. . .என்ன நடந்தது. . . யாரும். . .ஏதும். . . .'

'இல்லையம்மா. . . தீட்டு வந்திட்டுது. . .அதுதான் பாவடைத் துணியை. . .'கனகம் செல்வியை இறுகக் கட்டிக் கொண்டாள். செல்வி பலமாக விக்கி விக்கி அழத் தொடங்கினாள்.

'ஏனக்கா பிள்ளை அழுகுது'
தூக்கம் கலைந்த ஒருத்தி கூடாரத்துள் இருந்தவாறு கேட்டாள். 'பிள்ளைக்கு தேப்பன்ரை ஞாபகம் வந்திட்டுது' இப்போ இன்னும் பலமாக செல்வி அழத்தொடங்கினாள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  - Page 2 Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 12, 2016 3:21 pm

வெள்ளிப் பாதசரம்
இலங்கையர்கோன்
-----------------
தன் வீட்டுக்கு ஒரு அடுக்குப் பெட்டியும் தனக்கு ஒரு தையற் பெட்டியும் வாங்கவேண்டும் என்று நினைத்து வந்தவளுடைய உள்ளம் விம்மும்படி கோவில் வீதியெல்லாம் பெட்டிகளும் கடகங்களும் மலைமலையாய்க் குவிந்திருந்தன. குஞ்சுப்பெட்டி, அடுக்குப்பெட்டி, தையற்பெட்டி, மூடற்பெட்டி, பின்னற்பெட்டி... ஊ! எத்தனை வகை! அருகில் மாட்டை அவிழ்த்து அதன் வாயில் பொங்கிய நுரையை வழித்து அதன் மினுமினுக்கும் கரிய முதுகில் தேய்ப்பதில் கண்ணுங் கருத்துமாய் நின்ற தன் கணவனின் கையில் மெதுவாக நுள்ளி 'மாடு தன்பாட்டுக்கு நிற்கட்டும் வாருங்கோ' என்று கெஞ்சினாள்.

அஸ்தமிக்கும் சூரியனின் கடைசிக் கிரணங்கள் பனை மரங்களின் தலைகளை இன்னும் தடவிக்கொண்டிருந்தன. கிழக்கு அடிவானத்தில் சந்திரன் வெளுக்க ஆரம்பித்தான்.

அன்று வல்லிபுரக் கோவில் கடைசித் திருவிழா. 'எவ்வளவு சனம் பாத்தியளே! இதுக்காலை எப்பிடிப் போறது' என்று சொல்லிக்கொண்டே நல்லம்மா தன் கணவனின் அருகில் ஒதுங்கினாள். செல்லையா தன் தோளில் கிடந்த சால்வையை எடுத்து இடுப்பில் வரிந்து கட்டிக்கொண்டு 'பயப்பிடாமல் என்னோடவா' என்று தன் மனைவியின் கையைப் பற்றினான்.

கோவில் வீதிகளிலும் கடைகளிலும் காணப்பட்டதெல்லாம் நல்லம்மாவின் மனதில் ஒரு குதூகலத்தை உண்டாக்கின. வாய் ஓயாது தன் கணவனுக்கு ஏதோ சொல்லிக்கொண்டே சென்றாள். ஐந்து வயதுச் சிறுமியபை; போல, முழங்கால்கள் தெரியும்படி, தன் ஆடையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு வீதியைச் சுற்றி ஒரு 'கெந்தல்' போட வேண்டும் போல் அவளுக்குத் தோன்றியது... செல்லையா மௌனமாகத் தன் மனைவியின் குதூகலத்தில் மெய்மறந்து அவள் இழுத்த வழியெல்லாம் போய்க்கொண்டிருந்தான்.

யாழ்ப்பாணத்தின் நீர்வளமற்ற சொற்ப நிலத்தைத் தம் தளராத முயற்சி ஒன்றினாலேயே வளம்படுத்திச் சீவியம் நடத்தும் புதல்வர்களில் அவனும் ஒருவன். இரக்கமற்ற பூமியுடன் தினசரி நடத்தும் போரினால் அவனுடைய தசை நார்கள் முறுக்கடைந்து வச்சிரம் போல இருந்தன. மன ஒருமைப்பாட்டினால் வாய் மௌனமாகவே இருந்தது.

மூன்று மாதங்களுக்கு முன்புதான் அவன் தன் வாழ்;க்கைத் துணைவியைத் தேடிக்கொண்டான். அவளுடைய கலகலத்த வாயும், விடையில்லா ஒரு கேள்வியைக் கேட்பது போல அவனுடைய பார்வையை முறித்து நோக்கும் அவளுடைய விழிகளும், மார்பின் பாரம் தாங்கமாட்டாதது போல் ஒசியும் நூலிடையும், நிர்மலமாக இருந்த அவனுடைய தனிமை வாழ்வில் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கின. சதா மண்ணைக் கிண்டுபவனுக்கு மண்ணிற்குள் எத்தனையோ ரகஸ்யங்களும் மணங்களும் புதுமைகளும் மறைந்திருக்கும். ஆனால் அவைகளை விட மேலான ரகஸ்யங்களும் மணங்களும், புதுமைகளும் வாழ்க்கையில் எத்தனை மறைந்து கிடக்கின்றன! ஓ! வாழ்வு எவ்வளவு அற்புதமானது! செல்லையா இன்று அணிந்திருக்கும் நாற்பது ரூபா பெறுமதியுள்ள மாறுகரைச் சால்வையை விட இதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?

கோவிலிலுள்ள சனங்கள் தங்கள் இஷ;டப்படி கூக்குரலிட்டுக் கொண்டிருந்தனர். மூலைகளில் கிடத்தப்பட்டிருந்த கைக்குழந்தைகள் அழுதன. பஞ்சகச்சம் அணிந்த பூசகர்கள் அங்குமிங்கும் ஓடினர். இந்த ஆரவாரங்களுக்கிடையில் கர்ப்பக்கிரகத்தில் மணிச்சத்தங் கேட்டது. கூப்பிய கைகள் தலைகளுக்கு மேல் உயர்ந்தன. செல்லையா ஒரு தூணருகே கைகளைக் கட்டியபடி சனங்களின் தலைகளைப் பார்த்துக்கொண்டு நின்றான். நல்லம்மா அவனருகில் கை கூப்பியபடி மூலஸ்தானத்தை ஒரு தரம் பார்ப்பதற்காக அங்கும் இங்கும் தலையை அசைத்தாள். எங்கோ தொலைவில் இருளில் சில தீபங்கள் மின்னின. அவைகளின் அருகில் ஒரு தொந்தி பெருத்த பூசகரின் கரும்பட உருவம் கைகளை அசைத்துக்கொண்டு நிற்பது தெரிந்தது. அதற்குப் பின்னால் - அதுதானோ வல்லிபுரப்பெருமாள்?

திருமாலின் திருமண பிரசாதத்தைப் பெறுவதற்கு ஆரவாரப்பட்ட சனங்கள் ஒரு பக்கத்தில் மேளச்சமா ஆரம்பமாகவே அவ்விடம் நோக்கி நகர்ந்தனர்.

செல்லையாவும் நல்லம்மாவும் கோவிலை வலம் வந்து வணங்கினர்.

தவிற்காரன் தாளவரிசைகளை மெய்மறந்து பொழிந்துகொண்டிருந்தான். அவனுடைய குடுமி அவிழ்ந்த தலையோடு வேறும் ஆயிரந் தலைகள் அசைந்தன. நல்லம்மாவுக்குச் சிரிப்பாகவிருந்தது. தன் கணவனின் உடலோடு தன் உடலை உராய்ந்துகொண்டு 'எல்லாருக்கும் பைத்தியம் பாருங்கோ' என்றாள். மௌனியான செல்லையா மௌனம் கலைந்து, 'போதும் இனி, வாணை வெளியாலை போவம்' என்றான்.

வெளி வீதிகளிலும் தெருக்களிலும் சன சமுத்திரம் அலைமோதிப் புரண்டது. முத்தையும் வைரத்தையும் பொடியாக்கிச் சிதறிவிட்டது போன்ற அந்த அகன்ற வெண்மணற் பரப்பிலே கன்னித் தாயின் உள்ளத்திலே அன்பு வெள்ளம் பாய்வதுபோல நிலவு வெள்ளத்தை அள்ளிப் பெருக்கும் முழுச் சந்திரனின் கீழ் இரண்டொரு இரவுகளுக்கு வாழ்க்கைப் போரினால் ஏற்பட்ட அலுப்பைக் கொஞ்சம் தீர்த்துக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வந்து மனிதர்கள் நிரம்பியிருந்தனர்.

சர்பத் கடைக்காரன் பல வர்ணங்கள் கொண்ட போத்தல்களை ஒரு தடியால் அடித்து ஜலதரங்கம் வாசித்தான். மினுக்கு மினுக்கு என்று எரியும் ஒரு கைவிளக்கின் அருகில் உட்கார்ந்து, பொலிஸ்காரர்களின் காக்கியுடுப்பு எங்காவது தெரிகிறதா என்று கடைக் கண்ணால் பார்த்தபடி 'ஒண்டுக்கு நாலு'க்காரன், 'ஓடிவா ஓடிவா – போனல் கடலைக் காசு, வந்தால் தேத்தண்ணிக் காசு' என்று ஓலமிட்டான்.

நல்லம்மாவும் செல்லையாவும் தம்மை அறியாமலே ஒரு வளையற் கடையின் முன்னால் போய் நின்றனர். விளக்கொளியில் சுடர்விடும் கண்ணாடி வளையல்களின் லாவண்யத்தில் நல்லம்மாவின் மனம் லயித்தது. செல்லையா அவளுக்கு ஐந்து ஜதை வளையல்கள் வாங்கிக் கொடுத்தான். ஒரு கண்ணாடிப் பெட்டியில் அழகாக வளைத்து வைக்கப்பட்டிருந்த புது மாதிரியான ஒரு பாதசரம் செல்லையாவின் கண்களை ஈர்த்தது. நெருக்கமாகப் பின்னப்பட்ட வெள்ளி வளையம் ஒவ்வொன்றிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக் குண்டும் வேல்போன்ற ஒரு தகடும் தொங்கிக்கொண்டிருந்தன. முகப்பில் சிங்க முகம். அதுபோன்ற ஒரு பாதசரம் அவன் முன் ஒருபோதும் பார்த்ததில்லை... அவன் தன் மனைவியின் முகத்தைப் பார்த்தான்.

குவளை மலரைப் பழித்த அவளது விழிகள் 'காஸ்லைட்' ஒளியில் அகல விரிந்து பளபளத்தன.

அவளிடம் சாதாரணமான காற்சங்கிலிகூட இல்லை. உருண்டையாகவும் வழுவழுப்பாகவும் இருந்த அவளுடைய கணைக் கால்களில் இதுபோன்ற ஒரு பாதசரத்தை அணிந்து பார்க்கவேண்டும் என்ற ஆசை செல்லையாவின் மனத்தில் தோன்றியது. இந்த ஆசையோடு வேறு எத்தனையோ ரகஸ்யமான இன்ப நினைவுகள் அவன் உள்ளத்தை மயக்கின.... அதை எப்படியும் வாங்கிவிட வேண்டும்! அதன் விலை என்னவென்று கடைக்காரனைக் கேட்டான்.

'முப்பத்தைந்து ரூபாய். வேறு விலை கேட்க வேண்டாம்' செல்லையாவின் மடியில் முப்பத்தொரு ரூபாய் தான் இருந்தது.

'இருபத்தைந்து தரலாம். சாமானைக் குடுத்துப்போடு'

'தம்பி! இது நாட்டுப் பெண்டுகள் போடுகிற கால்ச் சங்கிலிகள் அல்ல. ராசாத்தியின் கால்களுக்கேற்றது. இந்தியாவிலிருந்து ஸ்பெஷலாய் வந்தது. உமக்கு இது சரிவராது ராசா. கடைசி விலை, முப்பது ரூபாய். குடுப்பீரா?'

'சரி இந்தா....'

பாதசரங்கள் கைமாறி, அவ்விடத்திலேயே நல்லம்மாவின் பாதங்களில் ஏறின.

வெண் மணலில் கால்கள் புதைய இருவரும் மறுபடி கடைகளைச் சுற்றி வந்தனர். மிச்சமாக இருந்த ஒரு ரூபாயைக் கொண்டு ஒரு தையற் பெட்டியும் வாங்கி, ஆளுக்கொரு சர்பத்தும் குடித்தனர். அடுக்குப் பெட்டி வாங்கவில்லை.

நல்லம்மாவின் கால்கள் ஓய்ந்துபோயின. 'இனி வண்டிலடியில் போய்க் கொஞ்ச நேரம் இருந்திட்டு, திருவிழாப் பாத்துக்கொண்டு விடியப் போவம்' என்று இருவரும் முடிவு செய்தனர். செல்லையா அவளை ஒரு சனக்கும்பலுக்கூடாகக் கையில் பிடித்து நடத்திக்கொண்டு சென்றான். கும்பல் கழிந்து கொஞ்சம் வெளியான இடத்திற்கு வந்ததும் நல்லம்மா திடீரென நின்று தன் இடக்காலை உயர்த்திக் கையால் தடவிப்பார்த்தாள்.

'ஐயோ! காற் சங்கிலியைக் காணேல்லை...'

'என்ன..... வடிவாய்ப் பார்!'

'ஒரு காலான் எங்கையோ மணலுக்குள்ளை கழண்டு விழுந்திட்டுது'

'கொஞ்சம் கவனமாய் வாறதுக்கென்ன? உனக்கு ஆட்டம் மெத்திப் போச்சு. ஊதாரி நாய்!'

மறுகணம் செல்லையா தன் நாக்கைக் கடித்துக்கொண்டான்.

குண்டூசியால் துளைக்கப்பட்ட றப்பர் பலூனைப் போல நல்லம்மாவின் உற்சாகம் அப்படியே சப்பளிந்து போய்விட்டது. மூன்றுமாத மணவாழ்க்கையில் இதுதான் முதல் தடவையாக இப்படி ஏச்சுக் கேட்கவேண்டி வந்தது. அதுவும் அம்பலத்தில் கூட்டிக்கொண்டு வந்துவிட்டு...! அவள் மனத்தில் கோபம், அவமானம், துயரம் ஆகிய எல்லா உணர்ச்சிகளும் ஒருங்கே தோன்றின. கண்களில் நீர் மல்கியது.

'போதும், உங்களோட கோவிலுக்கு வந்த வண்டவாளம். இனி நடையைக் கட்டுவம்'

செல்லையா ஒரு படி கீழே இறங்கினான். 'நல்லம்மா ஆத்திரத்திலை சொல்லிப்போட்டன். இஞ்சை பார்....'

'வேண்டாம். இப்பவே போகவேணும். வண்டிலைக் கட்டுங்கோ. நீங்கள் வராட்டி நான் தனியாக் கால் நடையாய்ப் போறன். வழியிலை காறுக்குள்ளை வசுவுக்குள்ளை ஆப்பிட்டு நெரிஞ்சு போறன்'

செல்லையா மறுவார்த்தை பேசாமல் தன் திருக்கல் வண்டியை இழுத்து, மாட்டை அவிழ்த்துப் பூட்டினான். அவன் ஆண் மகன்.

மாட்டின் கழுத்தில் கட்டியிருந்த வெண்டயங்களின் தாளத்திற்கு ஏற்பக் கரடுமுரடான தெருவில் வண்டிச் சக்கரங்கள் 'கடக், கடக்' என்று சப்தம் செய்தன. யாரோ மணமகன் ஊர்வலம் வருவதற்காக விரித்துவிட்ட நிலபாவாடை போல் வளைந்து கிடந்த தெருவின் இரு மருங்கிலும் நெடிய பனைமரங்கள் மௌனப் பூதங்கள்போல் வரிசையாக நின்று ஆலவட்டம் பிடித்தன.

செல்லையா நாணயக் கயிற்றை இளக்கிவிட்டு, மாட்டின் கால்களுக்கிடையில் தன் காலை வைத்தான். ரோசம் மிகுந்த அந்த இளம்காளை உன்மத்தம் கொண்டது போல் ஏற்காலைத் தன் ஏரியில் பட்டும் படாமலும் தாங்கிக்கொண்டு பறந்தது.... ஆத்திரத்தில் சிந்தனையில்லாமல் கூறிய வார்த்தைக்கு இவ்வளவு கோபமா? நிலத்தில் வியர்வை சொட்ட, கை கால் வலியினால் செயலற்றுப் போக, புகையிலைத் தோட்டத்தைக் கிண்டிப் பாடுபட்டவனுக்குத்தான் காசின் அருமை தெரியும்! அவன் ஆண்பிள்ளை, இரண்டு வார்த்தை பேச உரிமையுண்டு, அதைப் பெண் பொறுத்துக்கொண்டால் என்ன...? கொண்டு வந்த காசெல்லாம் அவளுக்காகத்தனே செலவு செய்தான்...? தனக்கு ஒரு சுருட்டுக்கூட வாங்கிக் கொள்ளவில்லையே...

கால்களை வண்டியின் பின்புறம் தொங்கப் போட்டுக்கொண்டு, வண்டியின் கீழ் ஓடும் தெருவைப் பார்த்தபடி நல்லம்மா சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். எவ்வளவு அற்ப காரியம்!

ஒரு கஷ;டமும் இல்லாமல் திருவிழாப் பார்த்துவிட்டுச் சந்தோஷமாக வந்திருக்கலாமே... எல்லாம் அவளுடைய பிழைதான். கணவன் இரண்டு வார்த்தைகள் கடுமையாகச் சொல்லிவிட்டால்தான் என்ன?

மாடு களைப்பினால் பலமாக மூச்சுவாங்கியது. நெல்லியடிச் சந்தியில், ஒரு பூவரச மரத்தின் கீழ்ச் செல்லையா வண்டியை நிற்பாட்டினான். அந்த நடுயாமத்திலும் கோவிலுக்குப் போகிறவர்களுக்காகக் கடைகள் எல்லாம் திறந்து வைக்கப்பட்டிருந்தன. சந்தையில் இரண்டு பெண்கள் அப்பம் சுட்டுக் கொண்டிருந்தனர். தேநீர்க் கடைகளில் தேநீர் கலக்கும் 'கட கட' என்ற சத்தத்தை விட, மற்றெங்கும் ஆழ்ந்த நிசப்தம் குடிகொண்டிருந்தது.

செல்லையா மாட்டின் களை தீர அதைத் தடவிக் கொடுத்தபின், ஒரு தேநீர்க் கடை இருந்த பக்கமாகச் சென்றான். அவனுடைய மடியில் ஒரு ஐந்து சதம்தான் இருந்ததென்பது நல்லம்;மாவுக்குத் தெரியும். அன்று மத்தியானம் வீட்டில் சாப்பிட்டதுதான். அதன் பிறகு ஒன்றுமே இல்லை... 'ஐயோ அவருக்கு எவ்வளவு பசியாயிருக்கும், வாய் திறந்து ஒன்றும் சொல்லாமல் இருக்கிறாரே...' என்று அவள் அங்கலாய்த்தாள். அவளுடைய இதயம் இளகிக் கரைந்தது. தன் கணவனுடைய மனத்தின் பண்பும் அவன் தன்பால் வைத்துள்ள அன்பின் ஆழமும் அவள் மனத்தில் தெளிவாயிற்று. விவாகம் செய்துகொண்ட புதிதில் ஒருநாள் அவன் கூறிய வசனம் ஒன்றை அவள் ஞாபகப்படுத்திக் கொண்டாள். 'பெட்டை உனக்காக வேணுமெண்டால் என்ரை உசிரையும் கொடுத்துவிடுவேன். நீ ஒன்டுக்கும் பயப்பிட வேண்டாம்'

அவளுடைய நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று உடைவது போல் இருந்தது... கண்கள் பொருமி உவர் நீரைப் பொழிந்தன. தன் கணவனை ஒரு குழந்தைபோல் மடியில் வைத்துத் தாலாட்டி அவனுடைய உடலின் ஆயாசத்தையும் மனக் கவலையையும் போக்க வேண்டும்போல் அவளுக்குத் தோன்றியது....

செல்லையா வாயில் ஒரு சுருட்டுடன் வந்து, மனைவியருகில் ஒரு வெற்றிலை பாக்குச் சுருளை வைத்துவிட்டு, அவளுடைய முகத்தைப் பார்த்தான்... அவளுடைய கண்ணீர் தோய்ந்த முகத்தின் ஒளி அவனை உலுக்கியது. தன்னுடைய நாற்பது ரூபா பெறுமதியுள்ள மாறுகரைச் சால்வையால் அவளுடைய கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்று அவன் மனம் அவாவியது.

'என்ன நல்லம்....'

நல்லம்மாவின் கண்ணீர் வடிந்த முகத்தில், நாணம் கலந்த ஒரு புன்னகை அரும்பியது. 'ஒன்டுமில்லை. உங்களுக்குப் பசி இல்லையே? வெளிக்கிடுங்கோவென் கெதியாய் வீட்டை போவம்....'

செல்லையா அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டான். மாட்டின் வெண்டயம் மறுபடியும் பனந்தோப்புகளில் எதிரொலித்தது.

வல்லைவெளி!

இந்த அகன்ற பூமிப் பரப்பின் மகிமையை அறிந்தது போல இதுகாறும் வேகமாய் ஓடி வந்த மாடு, தன் சுதியைக் குறைத்து அடிக்குமேல் அடி எடுத்து வைக்க ஆரம்பித்தது.

பேய்க் காற்று 'ஹோ' என்று சுழன்றடித்தது.

வானம் கவிந்து, நாற்புறமும் நிலத்தைக் கவ்விக் கொண்டிருந்தது. வெளியின் நடுவே தேங்கி நின்ற நீரோடை, ஒரு அரக்கனது பிரம்மாண்டமான மார்பில் அணியப்பட்ட மரகதச் சரடுபோல் ஜ்வலித்தது. வான முகட்டின் உச்சியில் தொங்கிக் கொண்டிருந்த பளிங்குத் தகடுபோன்ற சந்திர தீபம் கீழே விழுந்துவிட எத்தனிப்பது போலக் கனிந்து பிரகாசித்தது.

சின்ன மனிதர்களையும் பெரிய எண்ணங்கள் எண்ணும்படி தூண்டும் இந்த வெளிப் பிரதேசத்தில்தான் மனிதனின் ஜீவநாடி நவநாகரிக முறைகளால் நலிந்து படாமல் இன்னும் அந்தப் பழைய வேகத்தோடு அடித்துக் கொண்டிருக்கிறது.

எங்கோ வெகு தொலைவில் நிலத்தில் இருந்து இரண்டு அடி உயரத்தில் பொட்டிட்டது போன்ற ஒரு ஒளி தோன்றிக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெருவை நோக்கி நகர்ந்து வந்தது.... செல்லையா அதைக் கண்டதும் அதை நோக்கிக் காறியுமிழ்ந்தான். நல்லம்மா, 'அது என்ன?' என்று கேட்டாள்.

'ஆரோ மீன் பிடிகாரர் சூள்கொண்டு போகிறான்கள்' என்று ஒரு பொய் சொல்லி மழுப்பிவிட்டுச் செல்லையா மாட்டின் வாலைப் பிடித்து முறுக்கினான்.

அந்த வெளிச்சம் தெருவைக் கடந்து வேகமாய் மற்றப் பக்கத்தில் போய் 'பக்' கென்று அவிந்தது....

செல்லையாவின் இடக்கை அவன் மனைவியின் இடையை நோக்கி நகர்ந்தது.

அவனுடைய மனம் வல்லை வெளிபோல் விரிந்தது. மெய்மறந்த ஒரு மகிழ்ச்சி அவனை ஆட்கொண்டது. தன் குரலை எழுப்பி, 'ஞானகுமாரி' என்ற தேவகாந்தாரி ராகப்பாட்டைப் பாடினான்..... அவனுக்குப் பசியில்லை. தாகம் இல்லை. தூக்கம் இல்லை. எத்தனை கொள்ளிவாய்ப் பிசாசுகள் சேர்ந்தும் அவனை என்ன செய்துவிட முடியும்?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  - Page 2 Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 12, 2016 3:27 pm

அவர்கள் உலகம்
கே.எஸ்.சிவகுமாரன்
------------------------------

மணி ஏழு!

கொழும்புக் கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து வண்டி புறப்படுகின்றது. கூட்டம் அதிகமில்லை.

இரண்டாம் வகுப்புப் பெட்டியென்றில் சுந்தரமூர்த்தியும் இன்னுமொரு இளைஞனும் இருக்கின்றனர்.

வேகமாக ஓடுகின்றது ரெயில்!

சுந்தரமூர்த்தி யன்னலூடே வெளிப்புறக்காட்சிகளைப் பருகிக் கொண்டிருக்கிறான். அந்த இளைஞனோ ஒரு நாவலின் கடைசிப் பக்கங்களைப் படித்துக் கொண்டிருக்கிறான்.

பிரபலமான ஒரு தமிழ் நாட்டுப் பிரசுராலத்தினரால் வெளியிடப்பட்டிருந்த அந்த நாவலின் ஆசிரியர் வேறு யாருமிலர்!

ஈழத்துப் பிரபல எழுத்தாளனான சுந்தரமூர்த்திதான்!

தன்னெதிரே சதையும் குருதியுமாக அமர்ந்திருக்கும் சக பிராயாணிதான் சுந்தரமூர்த்தி என்பதை அவ்விடம் வாசகன் அறியான்!

ராகமைக்கு வந்து சேர்கின்றது வண்டி.

'அப்பப்பா! என்ன வெப்பம்!' என்று அலுத்துக் கொள்கிறான் அந்த யுவன்.

பேச்சுத்துணைக்கு யாருமில்லை என்ற சுந்தரமூர்த்திக்கு மகிழ்ச்சிதான்!

'ஆமாம்! சரியான வெப்பநிலைதான்!'

'சிகரெட் பிடிப்பீர்களா?' கேட்பது யுவன்.

'மிக்க நன்றி, நான் புகைப்பிடிப்பதில்லை'

'ஆடத் சிகரெட்!' அவ்வாலிபன் வாயை அலங்கரிக்கிறது. கையிலிருந்த புத்தகத்தின் சில பக்கங்களை குறிப்பாற் படித்துவிட்டு மூடி வைக்கிறான்.

'மிகவும் பிரமாதம்!' விமர்சிப்பது அவ்விளைஞன்தான்!

'அப்படியா?'

'இந்த நாவலாசிரியர் இலங்கையைச் சேர்ந்தவர். சுந்தரமூர்த்தி என்று பெயர்'

'ஓகோ!' வேடிக்கை பார்க்க விரும்புகிறான் மூர்த்தி.

'மிஸ்டர் மூர்த்தியின் நாவல்களை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா?'

'உம் - ஒன்றுமே வாசிக்கவில்லை நான். அப்படியென்ன பிரமாதமான எழுத்தாளரா அவர்?' என்று கேட்டுத் தன்னுள் சிரித்துக்கொள்கிறான் மூர்த்தி.

'அப்படிச் சொல்லக் கூடாது. இன்றைய தமிழ் நாவலாசிரியர்கள் வரிசையில் சுந்தரமூர்த்தி ஒரு முக்கிய இடம் வகிக்கிறார். தமிழ் கற்ற மேலை நாட்டறிஞர்கள் கூட, மூர்த்தியின் நாவல்களுக்கு தக்கமதிப்புக் கொடுக்கிறார்கள். அவரைப்பற்றி நீங்கள் கேள்விப்படவில்லையா?'

'கேள்விப்பட்டிருக்கிறேன்' மூர்த்திக்குத்தான் இன்னார் என்று சொல்ல வேண்டும் போலிருக்கின்றது. ஆனால், அவசரப்படவில்லை. வேடிக்கை பார்க்க விரும்புகிறான்.

மஹநுவர எக்ஸ்பிரஸ் துரித கதியில் ஓடிக்கொண்டிருக்கிறது.

'எங்கு வரைக்கும் போகிறீர்கள்?' வாலிபன் கேட்டான்.

'பேராதனைக்குப் போகிறேன்'

'அப்படியா நானும் அங்குதான் போகிறேன்.'

'அப்படியானால் யூனிவர்ஸிட்டியிலா படிக்கிறீர்கள்?'

'இல்லையில்லை! இனி மேல்தான் நான் அங்கு சேர வேண்டும். இப்பொழுதூன் புகுமுகப் பரீட்சைக்குத் தோற்றியிருக்கிறேன் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை'

'அப்படியா?'

'நீங்கள்... உங்கள் பெயரென்ன?'

'சுப்பிரமணியம்......' வேண்டுமென்றே ஒரு பொய்யைச் சொல்கிறான் மூர்த்தி.

'ஆமாம்... உமது பெயரென்ன?' என்று தொடர்ந்து அந்த இளைஞனைக் கேட்கிறான்.

'தில்லையம்பலம் என் பெயர். யாழ்ப்பாணத்தில் படிக்கிறேன். ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்களைக் கொண்ட ஒரு புத்தகக்கண்காட்சியை இலங்கைப் பல்கழைக்கழகத் தமிழ்ப்பகுதியினர் ஒழுங்குபடுத்தியிருக்கின்றனர். அந்த 'எக்ஸிபிஷனு'க்குத்தான் போகிறேன்' என்று முழு விபரங்களையும் கொடுக்கிறான் தில்லையம்பலம்.

பொல்காவலையில் ரெயில் வந்து நிற்கின்றது.

இவர்கள் இருக்கும் பெட்டியில் மூவர் வந்தேறுகின்றனர். அவர்களுக்கு இருபதிற்கும் இருபத்தைந்துக்கும் இடையில் வயது இருக்கும்.

அவர்கள் நடையுடை பாவனை முதலியன அவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என்பதைப் பறைசாற்றுகின்றன.

இருவர் 'வெள்ளைச் சுருட்டை' ஊதித்தள்ளுகின்றர். மூன்றாமவன் பிளாட்போமில் உலவுவோரைப் பற்றியும் புகையிரத நிலையத்திற்கு வருவோரைப் பற்றியும் விவரணத் தொகுப்பைத் தொடுத்துக் கொண்டிருக்கிறான்.

ரெயில் புறப்படுகின்றது.

'டிங்கிரி டிங்காலே' முதல் 'மாமா மாமா' வரை டப்பாப் பாடல்கள் எல்லாம் அவர்கள் தொனியில் புது மெருகு பெற்றுப்பெட்டியை ஆர்பரிக்கின்றன!

சக பிரயாணிகள் இருவரையும் அலட்சியம் பண்ணுகின்றனர் மாணவர்.

கடுகண்ணாவையை வண்டி வந்தடைகின்றது.

மாணவர்கள் தங்கள் சப்தஸ்வரங்களை நிறுத்துகிறார்கள்.

மூர்த்தியும் தில்லையம்பலமும் ஆர்வத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கின்றனர்.

தில்லையம்பலத்தின் கையில் இருக்கும் நாவலைக் காணும் ஒருவன்,

'லெற் மீ ஹவ் தற் புக்!' என்று வாங்கித்தன் நண்பர்களிடம் காட்டுகின்றான்.

'பூ! இவன்களுக்கெல்லாம் என்ன நாவல் என்று கேட்கிறேன்!' என்று ஆரம்பிக்கிறான் அம்மாணவர்களில் சூடிகையாய் தோற்றமளிக்கும் ஒருவன்.

தில்லையம்பலத்தின் முகத்தில் ஈயாடவில்லை. தன்னைப் பற்றித்தான் கூறுகின்றான் என்று.

சுந்தரமூர்த்திக்கு வியப்பு!

'இல்லை மச்சான் நாவல் என்றால் என்ன என்று தெரியாத புல்லுருவி பேனாக்கிறுக்கிகள் எல்லாம் 'எழுத்தாளர்கள்' என்று வெளிக்கிட்டிருக்கேக்குள்ள பின்ன, என்ன சொல்றதாம்?' என்று அந்த மாணவனே கூறி முடிக்கின்றான்.

சுந்தரமூர்த்திக்கோ விபரிக்க முடியாத அனுபவம் நாக்கு குமுறுகின்றது. 'உமிரி' விழுங்குகின்றான்.

'என்ன மச்சான் 'கொன்' அடிக்கிறாள்? சுந்தரமூர்த்தி இதை எழுதியதாக்கம்' என்கிறான் சற்று உயரமான மாணவன்.

'அட, ஓஹே என்றானாம்! சுந்தரமூர்த்தி பெரிய எழுத்தாளனே! சும்மாபோடா! சுன்னாகத்திலே என்னுடைய பக்கத்துவீட்டுக்காரன் அல்லே அவன்' என்று பதிலளிக்கிறான் முதலாமவன்.

'பொய் மூர்த்தி கொழும்பிலேல்ல இருக்கிறான். உனக்கு எப்படியடாப்பா அவன் பக்கத்து வீட்டுக்காரனாவான்?' என்கிறான் மூன்றாமவன்.

'மச்சான் இந்த ராமாவின்ரை வாயில் ஒரு நாளும் பொய் வராது. கண்டியோ? உனக்குச் சங்கதி தெரியுமோ? இங்கிலிஷ; நாவல்களை வாசிச்சுப்போட்டு 'புளட்'டுகளைத் திருடித்தானாம் அவற்றைச் சாம்பாராய் அவித்து நாவல் சமைப்பதாக என்னிடம் கூறியிருக்கிறான், பேந்தென்ன?'

மற்ற மாணவர் இருவரும் ராமா என்றழைக்கப்படும் மாணவனின் புளுகுகளை நம்புவது போல் நடிக்கின்றனர். சுந்தரமூர்த்தி அதிர்ச்சியினால் கட்டுண்டவன்போல வாயடைத்து மாணவர்களின் அரட்டையைக் கேட்டுக்கொண்டிருக்கிறான்.

தில்லையம்பலமோ திறந்த வயர் மூடாது சுவராஸ்யமாக உரையால்களைக் காது குளிரக் கேட்டுக்கொண்டிருக்கிறான். அவனும் விரைவில் பல்கலைக்கழக மாணவனாகலாம் அல்லவா?

புகைவண்டி பேராதனையை வந்தடைகின்றது. எல்லோரும் இறங்குகின்றனர். மாணவர்கள் தூரத்தில் தெரியும் தங்கள் விடுதிகளுக்குச் செல்கிறார்கள்.

தில்லையம்பலம் சுப்பிரமணியத்திடம் (சுந்தரமூர்த்தி) விடைபெற்றுக் கொண்டு நிலையவாயிலைத் தாண்டிச் செல்கிறான்.

நிலையத்தல் காத்திருந்த சிலர் வந்திறங்கிய பிரயாணிகள் சிலருக்கு மாலையிட்டு வரவேற்கின்றனர்.

வந்திறங்கிய எழுத்தாளர்களுக்குப் பல்கலைக்கழக புத்தகக் கண்காட்சி வரவேற்புச் சபையின் உபசரிப்புத்தான் வேறென்ன.........?

சுந்தரமூர்த்தியிடம் இரு விரிவுரையாளர்கள் வந்து கைகுலுக்கி மாலை போட்டு அழைத்துச் செல்கின்றனர்.

மாலை ஐந்து மணி!

பேராதனைப்பல்கலைக்கழக முதியோர் சபையின் முன்னே பெருவாரியான மக்கள் கூடியிருக்கின்றனர்.

ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களைப் பார்ப்பதுடன் அவர்களுள் ஒரு சிலரை நேருக்கு நேர் காணும் வாய்;ப்பினையுந்தாங்கள் பெற முடியும் என்பதனால் மலைநாட்டு தமிழர் மட்டுமன்றி தமிழ்பேசும் இடங்களிலிருந்தும் மக்கள் வந்திருக்கின்றனர்.

பொதுமக்கள் புத்தகங்களைப் பார்வையிடு முன், பல்கலைக்கழகத் துணைவேந்தர், கண்காட்சிக்கு வந்திருக்கும் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

தனது குரலைத் கனைத்துக் கொண்டு அவர் ஆங்கிலத்தில் ஆரம்பிக்கின்றார்.

'சகோர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்தபிரபல ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் திரு.சுந்தரமூர்த்தியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். அவர் ஈழத்தின் பெயரை தமிழ் எழுத்துத்துறையில் பிரதிபலிக்கச் செய்துள்ளார் என்று தமிழ்ப்போராசிரியர்கள் என்னிடம் கூறினார்கள். அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதையிட்டு நான் பெருமை கொள்கிறேன். இதோ திரு.சுந்தரமூர்த்தி!'

'மிக்க நன்றி ஐயா!' என்று சுந்தரமூர்த்தி அவருக்கு ஆங்கிலத்தில் பதிலளித்துவிட்டு கூடியிருந்த மக்களுக்குத் தலைகுனிவதன் மூலம் தன் வணக்கத்தைச் செலுத்துகின்றான்.

நான்கு சுவர்களும் அதிர்கின்றன. கைதட்டல் ஒலி காதைப்பிளக்கின்றது.

தில்லையம்பலத்திற்கோ அளவில்லா ஆச்சரியம் சுப்பிரமணியம் என்ற பெயரில் காலையில் தன்னுடன் பிரயாணஞ் செய்த அந்தப் பிரகிருதிதான் பிரபல எழுத்தாளர் சுந்தரமூர்த்தி என்று அறிய வெகு நேரம் பிடிக்கவில்லை.

'ராமா' என்றழைக்கப்பட்ட அந்தப் பல்கலைக்கழக மாணவனுக்கும் அவன் கூட்டாளிகளுக்கும் தாங்க முடியாத அவமானம். தாங்கள் 'புழுகி'யதைக் கேட்டு அவன் என்ன நினைத்திருப்பானோ என்று வருந்துகின்றனர். அவன் தங்களுடன் பிரயாணஞ் செய்வான் என்றோ ஒரு புத்தகக்கண்காட்சி பேராதனையில் நடைபெறுமென்றோ அவர்கள் காத்திருக்கவில்லை. அதனாலேயே அவர்கள் தங்களுக்கே உரித்தான கேலிப் பேச்சுகளிலும் சேட்டைகளிலும் புளுகுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

'ஏன் ஸேர்? கண்டிக்குப் போவோமா? இன்றைக்கு இராச்சாப்பாடு உங்கள் கணக்கில்தான்' ராமா தன் நண்பர்கள் புடைசூழ மூர்த்தியை நெருங்கிக்கேட்கிறான்.

'பொறுங்கள் தம்பிமாரே! உங்களை எனக்குத் தெரியாதே எப்படி நான் உங்களை அழைத்துக் செல்வேன்?'

'ஐயா எழுத்தாளர் மூர்த்தி அவர்களே! சும்மா போஸ் காட்டாதீங்க! வாங்க ஸேர், போகலாம்' ஒருவன் துணிந்து மூர்த்தியை இழுக்கிறான்.

'மன்னியுங்கள், உங்கள் விருப்பத்தைப்பூர்த்தி செய்ய முடியாததையிட்டு வருந்துகிறேன்.' என்று மிடுக்குடன் பதிலளிக்கிறான் மூர்த்தி.

அதற்குமேல் அவனைத் தொந்தரவு செய்ய அவர்கள் விரும்பவில்லை.

'சரி! சரி! பாதமில்லை! ஆனால் மனதில் எதையும் வைத்திருக்காதீர்கள். எங்கே! கைகுலுக்குங்கள் பார்க்கலாம்.'

'சே! அப்படியொன்றும் தவறாக நான் நினைத்துக் கொள்ளவில்லை' சுந்தரமூர்த்தி மாணவர்களுடன் கைகுலுக்குகின்றான்.

மன நிம்மதியுடன் அவர்கள் அவனை விட்டுச் சென்றனர். உண்மையில் சுந்தரமூர்த்திக்கு மாணவர்கள் மீது சிறிதேனும் கோபம் வந்ததில்லை! மாணவர்களின் கோலாகலமான கேளிக்கைகளைப் பற்றி அறிந்திராத எழுத்தாளனும் ஒரு எழுத்தாளனா? சுந்தரமூர்த்திக்குக் தெரியும் அவர்கள் உலகம், ஒரு தனியுலகம் என்று!.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  - Page 2 Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 12, 2016 3:29 pm

முள்வேலி முகவரி
ஒ.கே.குணநாதன்
-----------------------
குழந்தை விர்...விர்... விர் என்று அழுதது.
விக்கி விக்கி அழுதது

ஏங்கி... ஏங்கி அழுதது.

அதன் அழுகையை யாராலும் நிற்பாட்ட முடியவில்லை. மேனிக் காம்மே சத்தத்தில் உறைந்து போனது.

இந்தக் குழந்தையின் அழுகை புதுமையானதுமல்ல, புதியதுமல்ல, அடிக்கடி இப்படித்தான் கத்தும், கத்தத் தொடங்கினால் நிப்பாட்டவே முடியாது!

அது மூன்று வயதுக் குழந்தை. அதுக்கு உலகமே தெரியாது!

எட்டு மாதமாக முடங்கிப் போன வாழ்க்கை.

அதுதான் அந்தக் குழந்தைக்கு வெறுப்போ என்னவோ......! சுதந்திரமாகச் சுற்றித் திரிய வேண்டிய பிள்ளையை இந்த சிறைக்குள் கொண்டு வந்து போட்டா... என்ன செய்யும்? வாழ்வே வெறுத்து அழத்தானே செய்யும்!

ஒருநாளா... இரண்டுநாளா.... எத்தின நாளைக்குத்தான் பொலித்தீன் பையால் முளைத்துப் போயிருக்கிற அகதிக் குடிசைக்குள்ள முடங்கிப் போய்க் கிடக்கின்றது.

வெயிலடிச்சாப் புழுக்கம்! மழை பெஞ்சா சதுக்குப் புதுக்கென்று....! ஊரில உள்ள நுளம்பெல்லாம் ஆக்களிலதான்... மனுஷ வெட்க வேற...

ஆன... மான... சோறா? கறியா?

ஏதோ அவிச்சுப் போடுறத திண்டு துலைக்க வேணும். நாத்தம் நெத்திலிக் கருவாடும் கோறா அரிசிச் சோறும்!

வெளியில ஒண்டும் சொல்லேலா வெட்கம் கெட்ட வாழ்க்கை.

அது நம்மட தலைவிதி வாழ்ந்து தான் ஆகனுமெண்டா..... இந்தப் பிஞ்சுக் குழந்தைகள்தான் என்னசெய்யும்..... அதுகள் என்ன பாவம் செய்ததுகளோ தெரியா... நம்மட.... வயித்தில வந்து புறந்துத்துகள்.

தாயிட வயித்தில புறந்தத விட... நாயிட... வயித்தில புறந்திருந்தாலும் கொஞ்சம் சுதந்திரமாக திரியுங்கள்.... நாசமாப் போன சண்டையில் எல்லாத்தையும் இழந்து போட்டு வந்து இப்படிச் சாக வேண்டிக் கிடக்குது.....

ஆரிட்டச் சொல்லி அழுற... ஆண்டவனிட்ட சொல்லி அழுறத்திற்கு ஆண்டவனும் செத்துப் பொயித்தான். குழந்தைக்கு இதுதான் ஓரே வெறுப்பு போல.... சினம் பிடிச்ச குழந்தை போல் அழுதது.

குழந்தையின் நீண்ட அழுகையை அந்த இளந்தாயினால் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஒரே அழுத அழுகைதான்!

தனிமரமாய் ஒடிந்து போயிருக்கும் அவளினால் அந்தக் குழந்தையின் பலத்திற்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஏதேதோ தாலாட்டுப் படித்தாள்.. இம்...இம்...

தோளோடு சேர்த்து போட்டு அமத்திப்பார்த்தாள்.. தோள் சூட்டுக்கு கொஞ்சமாவது படுக்குமெண்டு... அது எங்க அழுகையை விட்டாத்தானே!

பால கொஞ்சம் அடிச்சுக் குடிச்சுப் பார்க்கலாமென்று பார்த்தா பால் மாவக்கண்டு பத்துமாதம்.

சரி... சரி.. என்று போட்டு நெஞ்சப் பிதுக்கி வெளிய எடுத்து விட்டா அது பால்வத்தி றப்பர் குழாய் போல சுருண்டு போய்க் கிடந்தது.

பரிதாபம் பொறுக்க முடியாத பக்கத்துக் குடிசை பார்வதியக்கா ஓடி வந்து பால் கொஞ்சம் அடிச்சுக் கொடுத்தா.. குடிக்க மறுத்து அடம்பிடித்தது குழந்தை.

பொலித்தீன் கொட்டிலின் வெக்கையும் ஆக்களின் வெக்கையும்... குழந்தை புழுங்கிப் போய் வியர்த்து வடிந்தது. ஆத்திரம் தாங்காது அழாத அழாத என்று இரண்டு மூன்று அடிகள் போட்டாள். பச்சை மேனியில் விரல்கள் பதிந்து போயிருந்தன பலன் இல்லை.

ஐயோ!... பிஞ்சுக் குழந்தைக்கு அடிச்சுப் போட்டனே! தாயின் வயிறு பற்றி எரிந்தது.

நெஞ்சுக்குள்ளே வெடித்து வெடித்து அழுதாள்.

சட்டையைக் கழற்றி எறிந்து போட்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள்.

குழந்தையின் அழகை தொடரவே செய்தது.

எரிச்சல்.... எரிச்சலாகக் குமைந்தது.

தொட்டில் இருக்கா.... பாவைப் பிள்ளையிருக்கா.... பொம்மை இருக்கா..... அவள் குழந்தைக்கு விளையாடக் கொடுத்து பிராக்குக் காட்ட...... குழந்தைக்கு வேடிக்கை காட்டுறத்துக்கு அங்க பிண வைச்சி..... இஞ்ச பாஸ் எடுத்து கொழும்புக்குப் போய் வந்திருக்கிறாள்.

அங்க றோட்டோரத்தில் பொலித்தீன் கூடாரத்திற்குள்ள வாழ்கிற சனங்களைப் பாத்து வேதனப்பட்டிருக்கிறாள்.

அண்டைக்கு அந்த அவல வாழ்க்கை அவளுக்கும் வரும் எண்டு கனவிலயும் நினைச்சுப் பார்கவேயில்லை.

ஆனா... இண்டைக்கு அதவிட கேவலமாக....

தெகிவள மிருக்கக் காட்சிச் சாலைக்குள்ள போய் அடைபட்டுப் போய்க் கிடக்கிற பறவைகளையும் மிருகங்களையும் குழந்தைக்கு காட்டும் பொழுது அது கை கொட்டிச் சிரிக்கும் ஆனா... அவளுக்கு ஏனோ நெஞ்சு சுளீர்;...சுளீர்... என்று வலிக்கும்.

இண்டைக்கு... அவர்கள் இந்தக் கூண்டுக்குள்!

அடிக்கடி கொழும்பில் இருந்து வந்து அவர்களைப் பார்த்துப் போகிறார்கள். சிலவேளைகளில் வெளிநாட்டு வெள்ளைக்காரர்களும் வந்து பார்த்து விட்டுப் போகிறார்கள்....

குழந்தைக்கு எதை வேடிக்கை காட்டுவதென்றே தெரியவில்லை.

ஒரு தண்ணீர்ப் பைப்படியில் ஒரு நூறு நூற்றியைம்பது பேர் தண்ணீர்க் குடங்களையும் வாளியையும் வைத்துக் கொண்டு தண்ணிக்காகக் காத்துக் கொண்டு நின்றனர்.

அங்கையாவது கொண்டு போய் பிராக்குக் காட்டுவோம் என்றெண்ணிக் கொண்டு அங்கேயோடிப்போனாள்.

நாலைஞ்சு சின்னப் பிள்ளைகளும் தண்ணிக் குடத்தோட நிண்டாங்கள்.

'இஞ்ச பார்.... அக்கா தண்ணிக் குடத்தோட நிக்கிறாங்க... அங்க பார்..... அந்த அண்ணா தண்ணி வாளியோட நிக்குறார்...' அவள் எவ்வளவோ சொல்லிப்பாத்தாள்.

குழந்தை மசியவேயில்லை.

அழுகின்ற குழந்தையின் பரிதாபம் பொறுக்க முடியாமலும்... அந்தக் தாய் படுகின்ற அவஸ்தையைப் பார்க்க முடியாமலும் தண்ணியெடுக்க பைப்படியில் நிண்ட ஒரு பொம்பிள, 'பிள்ள இதில வைச்சித்திரியாம அங்கால பின் பக்கம் கொண்டு போய் பிராக்குக் காட்டு புள்ள...' என்றாள்.

சரி... சரி... அங்கேயாவது கொண்டு போய் என்னத்தையாவது காட்டிப் பாப்பம்.... வெறுப்போடு குழந்தையைத் தூக்கிக் கொண்டு பின் பக்கம் போனாள்.

அங்க என்னத்தக் காட்டுற... அங்க காட்டுறத்திற்கு ஒண்டுமில்லை. ஒரு கக்கூஸ்... அதில கக்காக்குப் போறத்துக்கு வயித்தப் பொத்தித்து வரிசையில பத்துப் பதினைஞ்சு பேர்.

அவங்க வரிசையில முகஞ் சுழிச்சுக் கொண்டு நின்று படுகிற அவஸ்தயப் பாத்தா... குழந்தைக்கு பிராக்குக் காட்டினமாதிரித்தான்!

வரிசையில நிற்கும் ஆண்களின் பார்வை முழுவதும் அவள் மீது நிலைக்க தொலை தூரத்தில் பார்வையை வெறித்தாள். முகாமின் எல்லையில் நாலைந்து பங்கர்கள் முளைத்து நின்றன. அந்த பங்கர்களுக்குள்ளே சில சிப்பாய்கள் நடமாடுவது தெளிவாகவே தெரிகின்றது.

குழந்தை அழுவதை நிறுத்துவதாக இல்லை. கக்கூசுக்காக வரிசையில் நின்றவர்கள் ஒவ்வொன்றாகக் கரைய.... அவளுக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. தனிமையில் விடப்பட்டது போல ஒரு பய உணர்வு. குழந்தையின் கரைச்சல் வேறு.

தனிமையில் ஆப்பிட்டுப் போனால் வில்லங்கத்துக்குள்ள மாட்டிக் கொள்ள வேண்டிவரும் என்று அவளுக்குத் தெரியும். கேட்டு – பார்த்து – அனுபவித்தும் பழக்கப்பட்டவர்கள் அவர்கள். செம்மணிப் புதைகுழியிலிருந்து தொடரும் புதைகுழிப்பாராம்பரிய நினைவுகள் நெஞ்சில் அலை அலையாக வந்து மோதின.

எதையும் இழக்க அவள் தயார். ஆனால் அதை மட்டும் இழக்க அவள் தயாராக இல்லை.

மண்ணும் - பண்பாடும் அவளுடன் ஒட்டிப் பிறந்த இரணைக் குழந்தைகள். குழந்தை பெரிய சத்தம் போட்டு அழுது ஊரைக் கூட்டியது.

குழந்தையின் சத்தம் முகாமின் எல்லை வரை கேட்டிருக்க வேண்டும்!

பங்கரில் இருந்த தொலை நோக்கிக் கண்ணாடி அவள் மேலே விழுவது தெரிகிறது.

அபாயச் சமிக்கை!

ஆணிவேரை இழந்த மரமானாள்.

இனி ஒரு கணம் கூட அங்கு நிற்க முடியாது.

பொழுதும் விடைபெற்றுக் கொண்டிருந்தது. கருக்கல் பொழுது! ஆத்திரம் எல்லாம் சேர்த்து பிள்ளையைப் போட்டுக்குத்த வேண்டும் போல இருந்தது.

பேசாத... பேசாமப்படு... பல்லைக் கடித்து பின்பக்கத்தில் ஆத்திரத்தில நாலு அடி அடித்து குழந்தையை இறுக்கி அணைத்துக் கொண்டு முன் வாசலுக்கு வந்தாள்.

அடி வாங்கிய குழந்தை அழுவதை நிறுத்துவதாக இல்லை. சிணுங்கித் கொண்டேயிருந்தது.

வாசலில் நின்றபடி அதைக் காட்டினாள். இதைக் காட்டினாள். குழந்தை அழுகையை நிறுத்துவதாக இல்லை.

நீண்ட நேரம் நின்றாள்.

குழந்தை அழுதழுது களைத்துப் போனது.

இவ்வளவு நேரமும் வாசலில் கல்லாய் நின்ற இராணுவச் சிப்பாயின் மனதை குழந்தையின் அழுகை கரைத்திருக்க வேணும்!

அவர்களை நோக்கி வந்தான்.

இவ்வளவு நேரமுமாக ஒவ்வொன்றா – ஒவ்வொருகதையாக – குழந்தைக்குச் சொல்லி சொல்லி பயனில்லாமல் அலுத்துப் போனவள் ஏதோ வேண்டா வெறுப்பாக ஆ... இந்த மாமா வாறார்... என்றாள்.

இவ்வளவு நேரமுமாக... தோளின் பின்பக்கம் திரும்பியபடி அழுதுகொண்டிருந்த குழந்தை திடீரென தலையைத் திருப்பி ஆ.... எங்கம்மா... என்றது.

தீராத நோய்க்கு மருந்து கிடைத்தது போல இருந்தது அந்தத் தாய்க்கு.

அந்தா வாறார்....

அவர்களை நோக்கி நடந்துவரும் சிப்பாயைக் காட்டினாள்.

அவன் துவக்கைத் தோளிலே தொங்கப் போட்டபடி அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

ஆரு நம்மட மாமாவா...?

குழந்தை மீண்டும் கேட்டது.

குழந்தையின் அழுகை அடங்கியிருந்தது. ஆனால் முற்றாக ஓயவில்லை ஓம்... நம்மட மாமாதான்.....!

குழந்தை அவனைப் பார்த்துச் சிரித்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்தக் குழந்தையின் முகத்தில் மலர்ந்த சிரிப்பது அது!

அவன் ஏதோ சொன்னான் குழந்தையைப் பார்த்து.

அவன் சொன்னது என்னவென்றே அவளுக்குப் புரியவில்லை.

ஆனால்...

அந்த குழந்தையை அந்த வார்த்தைகள் சுட்டிருக்க வேணும்.

இது எங்கட மாமா இல்லை....

மீண்டும் குழந்தை அழ ஆரம்பித்தது.

அவள் வார்த்தைகளைத் தொலைத்து நின்றான்.

அவளுக்கு ஒன்றுமட்டும் புரிந்தது.

குழந்தை அழுது தானாக தீரும்வரை விடுவதனைத் தவிர வேறு வழியில்லை. குழந்தை அழுது தீரட்டும் என்று அதன்பாட்டில் விட்டு விட்டாள்.

நீண்ட நேரம் அழுது அழுது அலுத்துக் களைத்து ஒய்ந்தது. தோளிலே துவண்டு கிடந்தது.

மெதுவாக தோளை வருடினாள்.

பிள்ளைக்கு என்ன வேணும்...?

மௌனங்கள் இடைவெளிகளாயின.

மீண்டும்...

பிள்ளைக்கு என்ன வேணும்...?

ர்pப்பி..... ரிப்பி...வேணும்......

சரி.... வாங்கித்தாறன்....

எந்தக் கடையில வாங்கித் தருவீங்க...

மாமா கடையில....

சரி.... வாங்க போவம்......

குழந்தை கொஞ்சம் கொஞ்சமாகப் பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது.

பாபு மாமாட கடைக்குப் போனா நம்மட வீட்டுக்கும் போகலாம் என்ன அம்மா...

ஓம் போகலாம்...!

நம்ம வீடு இருக்குமா....?

தெரியா....!

அப்ப... நான் விளையாடுற பப்பி நாய்க் குட்டி....

எங்கயும் ஓடியிருக்கும்....

அப்ப..... தாத்தா... பாட்டி எல்லோரும்....

அவங்களும் ஓடியிருப்பினம்....
எங்க ஓடியிருப்பினம்.... எங்களைப் போலையா...? பாவம் அம்மா, எங்களைப் போல தாத்தாவையும் பாட்டியாலயும் ஓடேலாதே!

...............

வீட்டுக்குப் போய் விறாந்தையில இருந்து பப்பியோடயும்... தாத்தாவோடயும்.. பாட்டியயோடயும் விளையாடுவன்.....

.............

வெடிச் சத்தம் கேக்குமா அம்மா.....

....இம் தெரியாது......

சரி.... வாங்களனம்மா வீட்ட போவம்....

தோளில் இருந்த குழந்தை கீழே இறங்கி விட்டது.

நடந்தார்கள்.

அவர்களுக்கே அவர்கள் எங்கே நடக்கிறார்கள் என்று தெரியாது.

எங்கும் நெருக்கி அடித்த பல பட்டுக் கம்பிகளின் முள்வேளி. சுற்றிச் சுற்றி நடந்தார்கள்.

எங்கும் ஒரே முள்வெளி.

நீண்ட தூர நடையின் பின்பு மௌனத்தைப் கலைத்துக் கொண்டு குழந்தை கேட்டது.

அம்மா, வீட்ட போனதும் அப்பா வருவார்தானே.....!

அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

அந்தக் கேள்வி....!

அவளின் உயிரை வேரோடு கிள்ளி எறிவது போல இருந்தது நினைவுகள்! எழுதப்படாத கல்லரையைத்தேடி எங்கே போவது......
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  - Page 2 Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 12, 2016 3:30 pm

மோகம்
ஜோர்ஜ் சந்திரசேகரன்
------------------
'மோகத்தைக் கொன்றுவிடு - அல்லாலென்றன் மூச்சை நிறுத்திவிடு.'

இரண்டு நாட்களுக்கு முன் பாரதி விழாவில் யாரோ ஒரு மெலிந்த சொற்பொழிவாளர் பாடிக் காட்டிய அந்தப் பாரதி பாடலின் வரிகள் அவனையுமறியாமல் அவனுள் மிக ஆழத்திலிருந்து வெளிவந்தன. அந்த வரிகளுக்கும் தனக்கும் தொடர்பு இருப்பதாக அவன் உணர்ந்தான். முன்பெல்லாம் அந்த நினைவு வரும்போது, அவன் அதிலேயே அமிழ்ந்து லயித்து விடுவான். ஆனால் இன்று, ஓடிக்கொண்டிருக்கும் டிராலி பஸ்ஸில் தனக்கு முன் அமர்ந்திருக்கும் பெண்ணைப் பின்புறமாகப் பார்த்து நினைவால் தழுவு முன்பே ஏதோ ஒன்று தடுத்தது.

'சே, என்ன கேவலமான பழக்கம். முன்னால் உட்காhந்திருப்பது நம் அக்காவாக இருந்தால், தங்கையாக இருந்தால், அண்ணியாக இருந்தால் இப்படியெல்லாம் நினைக்கத் தோன்றுமா? நாமே ஏன் நம்மை ஏமாற்றிக் கொள்ள வேண்டும்? இனிமேல், காணும் பெண்களையெல்லாம் அக்காவாய், தங்கையாய், அண்ணியாய் எண்ணிக் கொள்ளவேண்டும். அப்போதுதான் இந்த மாதிரிக் கீழ்த்தரமான சிந்தனைகள் எல்லாம் வராது.'

ஓடிக்கொண்டிருக்கும் டிராலி பஸ்ஸில் லொட லொடத்த ஒலியினூடே மீண்டும் சுருதியோடு முணுமுணுத்துத் தலையை ஆட்டிக் கொண்டான் செல்வராஜன்.

பஸ்ஸின் ஆட்டத்தில் குலுங்கி ஆடிய அவன் வலது காலில் சுற்றியிருந்த பண்டேஜீக்குள் தற்காலிகமாக மூடிக்கிடந்த காயத்தினூடே எலும்பில் ஏறிய மெல்லிய வலிகூடத் தெரியவில்லை. அந்த வரிகளை அவன் மீண்டும் மீண்டும் தனக்குள் பாடிக் கொண்டே இருந்தான். அந்த வரிகளைப் பாடப்பாட அவன் ஆன்மாவில் கவிந்து கிடந்த பாலுணர்வுகளெல்லாம் கரைந்து, மங்கி மறைவதுபோல் அவனுக்குத் தோன்றியது. மீண்டும் அந்த ராட்சத எண்ணங்களுக்குத் தன் மண்டையில் இடம் கொடுக்கக் கூடாதென்ற உறுதியோடு அந்த இரண்டு வரிகளை மட்டும் பாடிக்கொண்டே இருந்தான்.

கொட்டாஞ்சேனையிலிருந்து பொரளைக்கு அலறிக் கொண்டோடிய டிராலி பஸ் ஆமர் வீதி ஸ்ராண்டிலே வந்து நின்றது. மேல் தட்டில் கடைசிச் 'சீட்'டில் உட்கார்ந்திருந்த செல்வராஜன் கண்ணாடியோடு தலையைச் சாய்த்துக் கண்களைத் தாழ்த்திக் கீழே நிற்கும் 'கியூ'வைப் பார்த்தான்.

'சுள்'ளென்றடிக்கும் காலை வெய்யிலில் 'கியூ' வரிசை நீண்டு வளைந்து கோட்டை பஸ்ஸை எதிர் நோக்கி நிற்கும் ஸ்ராண்டையும் கடந்து போய்க் கொண்டிருந்தது. எல்லோர்முகங்களிலும் பஸ்ஸில் ஏறிவிட வேண்டுமென்ற ஆவல் துடித்துக் கொண்டிருந்தது. ஒருவர் பின்னால் ஒருவர் நெருக்கி நின்று கொண்டார்கள்.

பஸ்ஸில் ஏறிக் கொண்டிருந்த ஒவ்வொருவராகப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். மேலே இருந்து கீழே நிற்கும் மனிதர்களைப் பார்ப்பது வேடிக்கையாக இருந்தது. குட்டையான உருவங்கள் ஏறும்போது சாதாரணமாகத் தெரியாத அவர்களின் தலை உச்சி நன்றாகத் தெரிந்தது. எத்தனையோ விதமான - இதுவரை அவன் பார்த்திராத – விசித்திரமான வகிடுகள், நேர் வகிடுகள், வகிடுகளே அற்ற சூரிய ஒளியில் மின்னி ஒளிரும் வழுக்கைத் தலைகள்.....


திடீரென, பஸ்ஸில் ஏறிக் கொண்டிருந்த மனிதருக்கு மூன்றாவதாக வந்து கொண்டிருந்த ஒரு பெண்ணின் மேல் அவன் கண்கள் இழுபட்டன.

பஸ்ஸிலேயே காலெடுத்து வைத்தவர் உள்ளே போய் விட்டார். அவருக்குப் பின்னால் நின்றவர் ஏதோ ரூபாய் நோட்டைக் கொடுத்து மாற்றிக் கொண்டிருந்தாரோ.... அந்தப் பெண் டிராலி பஸ்ஸில் ஏறாமல் அப்படியே நின்றாள், செல்வராஜனின் கண்கள் அவளை 'முழுக்காட்டி' யெடுத்தன.

கருவானைக் கிழித்துக் கொண்டு பாயும் மின்னலைப் போல் அவள் சுருண்ட கேசங்களைப் பிரித்துக் கொண்டு பளிச்சிட்டது நேர்வகிடு. அதற்குப் பிறகு, அவள் தலைக்குக் கீழே அவனுக்குத் தெரிந்ததெல்லாம் நீலச் சோளியை நிரப்பிநிற்கும் அவள் மார்பகங்கள் தான்.

அவன் பார்வை, அவள் சட்டையின் பென்னம் பெரிய கழுத்திற்கு வெளியே பிதுங்கி நின்ற தசைக் கோளத்தை வட்டமிட்டு மொய்த்தது, கருநீலச் சட்டை, அவள் மார்பகங்கள் இரண்டும் பிரியும் அந்தத் தசைப் பிரதேசத்தை இன்னும் பொன்னிறமாக்கிக் காட்டியது.

ஒரு கணத்தின் பாதிக்குள் அவள் பஸ்ஸில் ஏறிவிட்;டாள்.

செல்வராஜன் இன்னும் கீழே பார்த்துக் கொண்டிருந்தான், கண்கள் பார்ப்பவற்றைப் பதிவு செய்ய மறுத்தன. மண்டை ஓட்டுச் சுவர்களுக்குள் அதே காட்சி முட்டி மோதி எதிரொலித்துக் கொண்டிருந்தது. டிராலிபஸ் புறப்பட்டது.

பெண் மார்பின் ஒரு சிறு பாகம் தன்னைக் கலக்கிவிட்டது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது: வெட்கமாகவும் இருந்தது. தலையை ஒரு முறை மெல்ல ஆட்டிக் கொண்டான்.

'மோகத்தைக் கொன்று விடு – அல்லாலென்றன் மூச்சை நிறுத்திவிடு.'

இம்முறை வார்த்தைகள் உதடுகளை மிகவும் வேகமாக அசைத்தன. சுருதியற்ற ஒலி, யாரையோ பார்த்துக் கெஞ்சுவது போல் அழுத்தமாக வெளிவந்தது.

அவன் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்தான். ஆனால் சிறிது நேரத்திற்கு முன் கண்;ட அந்தக் காட்சியை அவனால் ஒரேயடியாக வெளியே பிடித்துத் தள்ளிவிட முடியவில்லை.

டிராலி பஸ் மருதானைக்கு வந்துவிட்டது. கீழே பார்க்கக் கூடாதென்று மனம் சங்கற்பம் செய்துகொண்டாலும், தலை கீழ் நோக்கித் திரும்புகிறது. கீழே நிறையப் பேர் நெருங்கி ஏறுகிறார்கள். – எல்லோரும் ஆண்கள். அவன் தலையைத் திருப்பிக் கொள்கிறான்:

டிராலிபஸ் புறப்பட்டது.

மருதானையில் ஏறி அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்த கால் சட்டைக்காரர் தன் கையிலிருந்த ஆங்கிலச் சினிமாப்பத்திரிகையைப் பிரித்தார். அவனும் திரும்பி அதைப் பார்த்தான்.

இரண்டு மூன்று பக்கங்களை அசுவாரஸ்யமாகத் திருப்பியவர், திடீரென ஒரு பக்கத்தை திருப்பிப் பிடித்துக் கொண்டார். அந்தப் பக்கத்தின் பாதியை விழுங்கி நின்றாள் அரைநிர்வாணமான ஒரு சினிமா நடிகை. அவன் ஆவலோடு படத்தைக் கவனித்தான். அந்த நடிகையை எங்கோ, எப்போதோ பார்த்ததாக ஞாபகம், பெயரைக் கவனிப்பதற்கு முன்பதாகவே பக்கத்தைப் புரட்டிவிட்டார் உடையவர். அதற்குப் பிறகு அத்தனை சுவாரஸ்யமான படம் ஒன்று கூட அந்தப் பத்திரிகையில் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. திடீரென்று அவனுக்கு ஞாபகம் வந்தது.

'பிரிஜட் பாடொட்'

ஐம்பது சதத்தைக் கையிலே பிடித்துக்கொண்டு 'செவோய்' தியேட்டருக்குச் சைக்கிளில் ஓடிய ஓட்டம் ஞாபகத்திற்கு வந்தது. அத்தோடு அந்தப் படமும் அதன் காட்சிகளும் மனத் திரையில் வெகு வேகமாக ஓட ஆரம்பித்தன. அந்தப் பிரெஞ்சு நடிகையின் அரை நிர்வாணத்தோற்றம். குளித்துவிட்டு வந்த கோலத்தில் நிர்வாணமாக நின்று தன் பின்புறத்தைக் காட்டும் போதையூட்டும் காட்சி, படத்தில் வந்த முரட்டுக் கதாநாயகன் அவளை அள்ளியெடுத்து இறுக படுக்கையில் புரண்டது.

டிராலிபஸ் சின்ன பொரளையில் ஆடி நின்றது.

பதறியடித்துக் கொண்டு, பண்டேஜ் போடப்பட்டிருந்த காலையும், அதில் மாட்டியிருந்த செருப்பையும் இழுத்துக் கொண்டே அவன் இறங்கினான். இறங்கிய வேகத்தில் கால் எலும்பிற்குள் இலேசாக வலி கண்டது.

'ஒரு சிகரெட் பற்றவைத்தால் ஆஸ்பத்திரிக்குப் போய் விடலாம்.'

எதிரே உள்ள கடைக்குப் போய் சிகரெட் ஒன்றை வாங்கி உதடுகளில் இடுக்கிப் பற்றவைத்துக் கொண்டு திரும்பியவனின் பார்வை, பக்கத்துத் துணிக்கடையின் கண்ணாடி Nஷh-ரூமிற்குள் வைக்கபட்டிருந்த பிளாஸ்டிக் மார்பகங்களில் சுருண்டது. அந்தப் போலி மார்பகங்களில் 'பிரஸ்ஸியர்கள்' மாட்டப்பட்டிருந்தன. பக்கத்தில் ஒழுங்காக வைக்கப்பட்டிருந்த சேர்ட்கள் களுசான்கள் ஒன்றுமே அவன் கண்களுக்குத் தெரியவில்லை. ஒரு நிஜப் பெண்ணின் விம்பிய மார்பகங்களும், அவற்றை இறுக்கிப் பிடித்திருக்கும் பிரஸ்ஸியருமே அவன் நினைவை நிரப்பி நின்றன.

ஆஸ்பத்திரியிலிருந்து, மருந்து நெடியோடும் விண் விண்ணென்று தெறிக்கும் பண்டேஜிட்ட காலுடனும் திரும்பவும் சின்ன பொரளை டிராலிபஸ் ஸ்டாண்டிலே வந்து நின்றான் செல்வராஜன்.

பால் நினைவுகளையெல்லாம் வலி ஒருவாறாகக் கரைத்திருந்தாலும், பஸ்ஸிலே வரும்போது கண்ட பெண்ணும், நடிகை பிரிஜட் பாடொட்டும், துணிக்கடை 'Nஷ கேசி'ற்குள் பார்த்த போலி மார்பகங்களும் லேசாக நினைவைத் தொட்டு மீண்டன.

டிராலிபஸ் வந்து நின்றது. 'கியூ'வில் கூட்டம் அதிகமில்லா விட்டாலும் பஸ்ஸில் பெரியதொரு கூட்டம் புழுங்கிக் கொண்டிருந்தது.

மேல் தட்டிற்கு ஏற முடியவில்லை. புதிதாகத் தோலுரித்துக் கழுவி, மருந்து வைத்துக் கட்டப்பட்ட புண்ணின் எரிச்சல் மேலே ஏறினால் அதிகரித்து விடுமோ என்ற பயம் அவனைக் கீழ்த் தட்டிற்கு ஏற்றி விட்டது. ஆனால் உட்காருவதற்குத் தான் இடமில்லை.

நின்று கொண்டே வந்த செல்வராஜனுக்கு அடுத்த ஸ்ராண்டிலே ஒரு பெண்ணுக்குப் பக்கத்தில் உட்காரும் வாய்ப்புக் கிடைத்தது. கற்பனைகள் மண்டையை உடைத்தெறிய அந்தப் பெண்ணோடு உரசிக்கொண்டு உடகார்ந்தான். பஸ் குலுங்கிக் குலுங்கிப் போகும்போது, அவள் மென்மையான உடல் தன்மேல் பஞ்சுபோல் படுவதை அவன் உணர்ந்தான், அவன் மேனியில் அவள் உடல் பட்டபோது, மயிர்க்கால்கள் நிமிர்ந்து நின்றன. போதை தலையைக் கிறக்கியது. அவன் இன்னும் சற்று அந்தப் பெண்னோடு உராய்ந்து கொண்டு நெருங்கி உட்கார்ந்தான்.

ஆமர்வீதியில் டிராலிபஸ் நிற்கும்வரை, பெண்மையின் மென்மையில் இதம் கண்டு கொண்டிருந்தவனை ஏமாத்தி விட்டு இறங்கிப் போய்விட்டாள் அந்தப் பெண்.

அவள் இறங்கிப் போனதன் பின்தான் அவன் தன் உணர்வு பெறலானான். இரண்டு வாரங்களுக்குப் பிறகு எழுத வேண்டிய சோதனை ஞாபகத்திற்கு வந்தது. 'இந்த முறையாவது பாஸ் பண்ணிவிட வேண்டும். இல்லையென்றால் அண்ணாவின் கோபத்திற்கு ஆளாகவேண்டி வரும்.'

திடீரென அவன் உலர்ந்த உதடுகள் பிரிந்தன.

'மோகத்தைக் கொண்றுவிடு – அல்லாலென்றன்
மூச்சை நிறுத்திவிடு.'

ஏதோ, புதியஒளி, மூளையில் கவிந்து கிடந்த இருளைத்துரத்துவது போன்ற பிரமை, உடம்பில் சற்று தெம்பு பிறந்தது.

'இத்தனை வீண் சிந்தனைகளுக்கும் பதிலாக 'பொடனி'யல் 'டிஸ்பேர்ச'லைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாலாவது பரீட்சைக்கு உதவியாக இருந்திருக்கும்.'

நேரத்தை வீணாக்கி விட்டதாக அவன் தன்னைத்தானே நொந்து கொண்டான்.

'பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண் அண்ணியாக இருந்தால் இப்படியெல்லாம் சிந்தித்திருப்பேனா? அப்படி நினைத்திருந்தால் எவ்வளவு பெரிய பாவம். முன்னம் எத்தனை முறை அண்ணிக்குப் பக்கத்தில் இருந்து கொண்டு பஸ்ஸில் போயிருக்கிறேன். அப்போதெல்லாம் இந்த எண்ணம் ஏற்பட்டதே கிடையாதே. பிறகு, வேறு பெண்களைக் கண்டால் மட்டும் ஏன் இந்தத் தகாத எண்ணம் ஏற்படுகிறது? இனிமேல் இதற்கெல்லாம் ஒரு கட்டுப்பாடு வைத்துக் கொள்ள வேண்டும். திடசித்தம் இல்லாதவன் ஒரு மனிதனா? மனதை கட்டுப்படுத்தாதவன் மிருகம்.'

டீராலி பஸ்ஸை விட்டு இறங்கி, வீட்டை அடையும்வரை வாய் பாரதி பாடலின் அந்த முதல் வரிகளையே முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

பால் நினைவுகளையெல்லாம் வெற்றிகொண்டு விட்டதாக அவனுக்கு ஒரே பெருமிதம்.

வலிக்கும் காலை தூக்கி வந்த அலுப்பினாலும், மண்டையை உடைத்த சிந்தனையோடு போராடிய சோர்வினாலும், அவிழ்ந்து தொங்கிய பண்டேஜைக் கவனியாது, வீட்டிற்குள் வந்ததும் வராததுமாகச் சாய்வு நாற்காலியில் சாய்ந்தான் அவன்.

சோர்ந்து போய் சாய்வு நாற்காலியில் சாய்ந்துவிட்ட செல்வராஜனைக் கண்டு கையிலிருந்த வேலைகளையெல்லாம் போட்டு விட்டு ஓடிவந்தாள் கமலா.

'செல்வா, என்ன செய்யுது... களைப்பாய் இருக்கா....' தலை மயிரை மெல்லக் கோதிவிட்டாள் அவள்.

கண் மூடிக் கிடந்தவன் மெல்லக் கண் திறந்து பார்த்தான்.

'இரு, கோப்பி கொண்டு வாறன்' என்று திரும்பியவள், அவிழ்ந்து தொங்கும் பண்டேஜைக் கண்டு, குனிந்து அதனக் கட்ட ஆரம்பித்தாள்.

செல்வராஜன் சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தான்.

கழுத்தருகே இரண்டு பொத்தான்கள் பூட்டப் படாததால் பெருதாகக் காட்சியளிக்கும் 'டிரசிங் கவு'னின் கழுத்திற் கூடாக அவள் மார்பகங்கள் தெரிந்தன.

மறுகணம், எழுந்த வேகத்தோடு தலையைத் திருப்பிக் கொண்டு சாய்ந்தான். எலும்பிற்குள் மெல்ல வலித்தது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  - Page 2 Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum