தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கதை படைப்புகள்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

கதை படைப்புகள்  - Page 2 Empty கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 28, 2015 9:15 pm

First topic message reminder :

பசியாக இருக்குமோ…
---------------------
கோ. மன்றவாணன்
-------------------------------

“மொட்ட மாடியில என்னமோ சத்தம் கேக்குது. என்னான்னு போய்ப் பாருங்க” என்ற என் இல்லத்து ராணியின் கட்டளையை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் புரட்சி வெடித்து மனதைச் சிதறடித்துவிடும். எனவே கதவைத் திறந்து வெளியில் வந்தேன்.

வெளிப்புறத்தில் இருந்துதான் மாடிக்குப் படிகள் உள்ளன. மெதுவாகச் சத்தம் காட்டாமல் மாடிக்குச் சென்று பார்த்தேன். நாலைந்து சிறுவா்கள் மாங்காய்ப் பறித்துக்கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் திடுதிப்பென என்னைத் தள்ளிவிடாத குறையாகக் கீழே இறங்கி ஓடினார்கள். மதில் பக்கத்திலேயே தயாராக நிறுத்தி வைத்திருந்த சைக்கிள்களை எடுத்துக்கொண்டு சிட்டாகப் பறந்துவிட்டார்கள். அவர்கள் பறித்த மாங்காய்கள் அங்கங்கே சிதறிக்கிடந்தன. அவற்றை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்து இல்லத்தரசியிடம் அறிக்கை சமர்ப்பித்தேன்.

“தெண்டம் தெண்டம்… அந்தப் பசங்கள புடிக்கத் துப்பில்ல ஒங்களுக்கு. விட்டுவிட்டு வந்து கத சொல்றீங்க கத. புடிச்சுக் கட்டி வச்சிருக்க வேணாமா?” என்று வார்த்தைகளை வாரி வீசினார். வேறு யாரு? என் மகாராணியார்தான்.

“அணில் சாப்பிட்டுப்போறத ஆசையா சாப்பிடப் பறிச்சிருக்கானுவ.”
அணில் சாப்பிடலாம்ங்க. அதுக்கு அதுதான் விதி. அணில் என்ன வேலைக்குப் போயி சம்பாதிச்சு வந்தா சாப்பிட முடியும்.
“சரி விடு சின்னப் பசங்க.”
“என்ன சின்னப் பசங்க? இன்னைக்கு மாங்கா திருடுறவன் நாளைக்கு நகைநட்ட திருடுவான். இந்த மாதிரிப் பசங்கள சும்மா விடக்கூடாது”
“அதுக்கு நாம என்ன செய்றது.

சின்ன வயசுல இதெல்லாம் சகஜம்தான். ஏன் நானே சின்ன வயசில ஒரு வீட்டுத் தோட்டத்துல வேலியை லாவகமா விலக்கிட்டு, கைய உட்டு, பட்டு ரோஜா செடிய திருடிட்டு வந்து எங்க வீட்டுல நட்டிருக்கேன் தெரியுமா… அதனால நான் என்ன இப்ப திருடனாவா ஆயிட்டேன்?”

“அதனாலதானோ என்னவோ திருடனுக்கு ஆஜராவற வக்கீலா ஆயிட்டீங்க” என்று சொன்ன என் மனைவி, “சொரட்டுக்கோல எடுத்துக்கிட்டு என் பின்னாலேயே வாங்க” என்ற ஆணையை பிறப்பித்துவிட்டு, ஒரு சாக்குப்பையோடு மாடிக்குப் போனாள். நானும் பின்தொடா்ந்தேன்.

கைக்கு எட்டிய மாங்காய்களை என் மனைவியின் வளைக்கரம் வளைத்துப்போட்டது. வாங்கரிவாளுக்கு எட்டிய மட்டும் மாங்காய்க் காம்புகளைத் திருகி மாங்காய்களை விழச்செய்தேன். விழுந்த மாங்காய்களை நானும் என் மனைவியும் எடுத்துச் சாக்குப்பையில் நிரப்பினோம். அந்த மூட்டையைப் படியில் தேய்த்தவாறே இருவரும் சோ்ந்து இழுத்துவந்து வீட்டுக்குள் போட்டோம்.

“த்தோ பாருங்க இப்படியே விட்டா எல்லா மாங்காயையும் திருடிட்டுப் போயிடுவாங்க. யாருகிட்டயாவது விலைபேசி மரத்துல இருக்கற மாங்காய பறிச்சிட்டுப் போ சொல்லுங்க”
“எங்க போயி ஆளத் தேடறது?”
“ம்க்கும்… அதெல்லாம் நான்தான் சொல்லணும்?”

“யாராவது மொத்தமா மாங்கா பறிச்சிட்டுப் பணம்கொடுக்குற ஆளு இருந்தா சொல்லுங்க. வீட்டு மரத்துல நிறைய மாங்கா இருக்கு” என்று தெரிந்தவா்களிடம் எல்லாம் சொல்லி வைத்தேன்.

***
நாலைந்து நாட்களுக்குப் பிறகு ஒருநாள் காலை ஆறு மணிக்கு அழைப்பு மணி ஒலித்தது. வெளியில் வந்து பார்த்தேன்.

“மாங்கா தரீங்களா?”
“ஆமா… தர்றதுதான். யார் சொல்லி அனுப்புனது?”
“யாரும் சொல்லலீங்களே… நானாத்தான் வா்றேன்.”
“சரி என்ன வெல சொல்றே?”

“மரத்துல மாங்கா ஒண்ணும் அதிகமா இல்லீங்களே”
“அதுக்கு நான் என்ன பண்ணுவேன். இருக்குற மாங்காய பறிச்சிட்டுப் போ. சீக்கிரம் வெலய சொல்லு”
“நானூறு ரூவா தர்றன். அதுக்கே எனக்கு நஷ்டம்தான்” என்று இழுத்தார்.
“கடையில கிலோ 20 ரூபா விக்குது. நீ என்னா இவ்வளவு கம்மியா கேக்குற?”
“அது வேற மாங்காங்க. இது ஓடாது.”

“யோவ் நாங்க இந்த மாங்காயைச் சாப்பிடுறோம் அவ்வளவு டேஸ்டா இருக்கு”
“அதோ பாருங்க… மாங்காய் கருப்படிச்சிருக்கு. யாரு வாங்குவாங்க?”
“சரி என்ன சொல்றே”
“நானூறுன்னு நான் சொன்னதே அதிகங்க.”

இதைக்கேட்டபடி உள்ளே இருந்துவந்த என்மனைவி “ஆயிரத்து ஐநூறு கொடுத்துட்டுப் பறிச்சிட்டுப் போ” என்று சொன்னார்.
என் மனைவி சொன்ன விலையைக் கேட்டு, வியாபாரி அதிர்ச்சி அடையவில்லை. நக்கலாக சிரித்துக்கொண்டே சொன்னார்.
“ஆமாம்மா… இரண்டாயிரம்கூடக் கேளுங்க… அப்படியே விட்டுவையுங்க. அழுகித்தான் போவும். இந்த நானூறுகூடத் தேறாது.”
“நானூறுக்கெல்லாம் தர முடியாது.” என்று கட் அண்ட் ரைட்டா சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டேன். வியாபாரி வாசலிலே நின்றுகொண்டிருந்தார்.

“சார்… சார்…” என்று வியாபாரியின் குரல்கேட்டு மீண்டும் வெளியில் வந்தேன்.
சார்… யோசித்துச் சொல்லுங்க சார். காய் ஒண்ணும் அதிகம் தேறாதுங்க.
யோசிக்கறதுக்கு என்னய்யா இருக்கு. பத்து மூட்ட காய் வரும்.
அட நீங்க ஒண்ணு. இரண்டு மூட்ட கூட வராது. ஒன்றரை மூட்ட வர்றதே ரொம்ப பெரிசு
நான் ஒன்றும் பேசவில்லை. அவரே பேசினார்.

“சார்… ஒங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம். நானூத்தைம்பது ரூவா தர்றேன்.”
“வேணாம் வேணாம் நீ கிளம்பு. ஊங்கிட்ட பேசிக்கிட்டு இருக்க முடியாது. எனக்கு நெறய வேல இருக்கு.”
அப்படியும் அவர் விடுவதாயில்லை. ஒரு வழியாக ஐநூறுக்கு முடிவானது. நூறு ரூபாய் முன்பணமாகக் கொடுத்தார். சாக்கு எடுத்துக்கொண்டு வருவதாகச் சொல்லிப் போனார். ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்தார். கூடவே ஒரு பையனும் வந்தான். அவன் அவருடைய மகனாக இருக்கக் கூடும். நான் கேட்டுத் தெரிந்துகொள்ளவில்லை. முனையில் வலைக்கூடை கொண்ட ஒரு நீண்ட வாங்கரிவாளை அவர்கள் வைத்திருந்தார்கள். அவரும் அந்தப் பையனும் மாடிக்குப் போனார்கள்.

“சார்… நீங்க கீழேயே இருங்க. பறிச்சிட்டு வந்து சொல்றோம்” என்றார் வியாபாரி. நானும் வீட்டுக்குள்ளே நாளிதழ் படித்துக்கொண்டிருந்தேன். மாங்காய் விழும் சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. தோட்டத்தில் கீழே விழுந்த மாங்காய்களை அந்தப் பையன் பொறுக்கிச் சாக்குப்பையில் போட்டுக்கொண்டிருந்தான். அருகே இருந்த எலுமிச்ச மரத்தின் மீது மாங்காய் விழுந்து எலுமிச்சம் பழங்கள் வேறு கீழே விழுந்துகொண்டிருந்தன. சன்னல் வழியாக எட்டிப் பார்த்து அந்தப் பையனிடம் சொன்னேன்.

“ஏய் எலுமிச்சம் பழத்த எல்லாம் வெல பேசல்ல. அதெல்லாம் எங்ககிட்ட கொடுத்துட்டுப் போவணும்.”
“அது எங்களுக்கு எதுக்கு சார்? அத பொறுக்கி அப்படியே கொடுத்துட்டுப் போறோம்” என்று நாணயத்தைத் தம்பட்டம் அடித்தான்.
கொண்டுவந்த சாக்குப்பைகளில் பறித்த.. விழுந்த மாங்காய்களை நிரப்பினார்கள். பன்னிரண்டு மூட்டைகள் நிரம்பி, பதிமூன்றாவது மூட்டையில் பாதியளவு மாங்காய்கள் இருந்தன.
“யோவ்… ஒன்றரை மூட்டக்கூட வராதுன்னு சொன்ன… இப்ப 13 மூட்ட வா்றது.”
“சார்… ஒங்ககிட்டெல்லாம் அப்படிப் பேசினாத்தான் இறங்கி வருவீங்கன்னு எங்களுக்குத் தெரியாதா?” என்று சொல்லி நக்கலாகச் சிரித்தான். என் ஏமாளித்தனம் என் முகத்திலேயே எழுதி இருக்குறத அவன் படிச்சிருக்கான் போலிருக்கு என்று மனதுக்குள்ளே நினைத்துக்கொண்டேன். ஆனாலும் பிடி கொடுக்காமல்,

“13 மூட்ட மாங்கா வந்துடுச்சி. ஆயிரம் ரூபாயாய கொடுக்கணும்” என்று கண்டிப்பாகச் சொன்னேன்.
“பேசனது பேசனதுதான். ஐநூறுக்குப் பேசி முடிச்சாச்சு. இப்பக் கூட கேக்குறது ஒங்களுக்கே நல்லா இருக்கா சார்”
இதை எதிர்வீட்டுக்காரர் பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்தேன். கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு வியாபாரியிடம் மேற்கொண்டு பேசவில்லை. எப்படியாவது ஒழியுது என்று விட்டுவிட்டேன்.
டிவிஎஸ் 50ல் இரண்டிரண்டு மூட்டைகளாக வைத்துக்கட்டி மார்க்கெட்டுக்கு எடுத்துச்செல்வதாகச் சொல்லிச் சென்றார்கள். கடைசி நடையின் போது, மீதிப் பணத்தைத் தருவார்கள் என்று வாசல்படியிலேயே நின்றுகொண்டிருந்தேன்.

“சார்… இந்த மூட்டையை போட்டுட்டு வந்து பைசல் பண்றோம்.”
“யோவ்… இப்பவே கொடுத்துட்டுப் போய்யா.”
“சார்… நாங்க சின்ன வியாபாரிங்க. மொத்த வியாபாரிக்கிட்ட போடுறோம். த்தோ… அரை மணிநேரத்துல பணத்தை வாங்கிட்டு வந்து கொடுத்துடுறோம். உங்க பணம் எங்களுக்கு எதுக்கு சார்.”
அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாரே என்று நம்பினேன். வியாபாரி விர்ரென்று பறந்தார். பையனைக் காணவில்லை. அவன் எப்பொழுது போனான்? எப்படிப் போனான்? என்று தெரியவில்லை.
தோட்டத்தைச் சுற்றி வந்தேன். விழுந்த எலுமிச்சப் பழங்களில் ஒன்றைக்கூடக் காணோம். ஐம்பது பழங்களாவது தேறும். அவற்றையும் மூட்டையிலேயே வைத்துக் கட்டிக்கொண்டு போய்விட்டிருக்கிறார்கள். ஓஸ் பைப்பையும் காணவில்லை. அதன் மதிப்பு ஐநூறு ரூபாய் இருக்கும்.

பணம்கொண்டு வருவதாகச் சொல்லிச் சென்ற வியாபாரி, மூன்று மணிநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை.
“என்னங்க… மீதி நானூறு ரூபாய வாங்கினீங்களா?”
“கொண்டுவந்து தர்றதா சொல்லிப் போன ஆள இன்னும் காணல”
“அப்ப நாமந்தான் போங்க. அவன் அட்ரஸ கேட்டீங்களா? கேட்டிருக்க மாட்டீங்களே… நீங்களும் ஒரு வக்கீலு? எனக்கென்னு வந்து வாச்சீங்களே”

“அப்படியே அட்ரஸைக் கேட்டாலும், ஏமாத்த நெனக்கறவன் சரியான அட்ரஸையா சொல்லிட்டுப் போவான்?”
ஒரு வாரம் ஓடிப் போனது. மார்க்கெட்டில் எல்லாம் விசாரித்துப் பார்த்துவிட்டேன். அப்படி ஒருவரை யாருக்கும் தெரியவில்லை.

***
மரத்தில் அணில்கள் கிறீச் கிறீச் என்று ஓயாமல் சத்தம் போட்டுக்கொண்டிருக்கின்றன.
பசியாக இருக்குமோ…
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


கதை படைப்புகள்  - Page 2 Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 05, 2016 8:15 am

காலணி அலமாரி
-------------------
யூசுப் ராவுத்தர் ரஜித்
-------------------
அது என்ன காலணி அலமாரி? தமிழிலேயே சொல்லிவிடுகிறேன் ‘ஷூ ரேக்’. வீட்டில் கட்டில், சாப்பாட்டு மேசை, சோபா என்பதுபோல் காலணி அலமாரி ஒரு முக்கியப் பொருளாகிவிட்டது. சிங்கப்பூரில் 2015ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரப்படி ஒரு நபருக்கு 5 காலணிகள். ஒவ்வொருவரும் ஓர் ஆண்டுக்கு தொலைக்கும் காலணிகள் குறைந்தது 2. இந்தப் புள்ளிவிபரங்கள் எந்த இணையதளத்தில் இருக்கிறது என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. உங்களிடம் இருப்பது எத்தனை காலணிகள்? இந்த ஆண்டு நீங்கள் தொலைத்த காலணிகள் எத்தனை? உங்கள் வீட்டில் மொத்தம் எத்தனை காலணிகள்? ஒன்றும் அவசரமில்லை. நன்றாக யோசித்துச் சொல்லுங்கள். யோசிக்கும்போதே இந்தப் புள்ளிவிபரம் உண்மைதான் என்பது உங்களுக்குப் புரியும். 100வெள்ளிக் காலணி கூட அன்றாடப் பொருளாகிவிட்டது. அதை வெளியே எப்படி வைப்பது?

7 ஆண்டுகளுக்கு முன் ஒரு மரச்சாமான்களுக்கான பொருட்காட்சியில் ஒரு காலணி அலமாரி வாங்கினேன். 6 அடிக் கட்டிலைக் கூட நகர்த்திவிடலாம். இந்தக் காலணி அலமாரியை தனியாக ஒருவர் நகர்த்திவிடமுடியாது. அடிப்பக்கம் அப்படியே பச்சென்று 5 அடிக்கு இரண்டடி அளவில் தரையோடு தரையாக ஒட்டிக் கிடக்கிறது. மாதம் ஒரு முறை இதை நகர்த்தி ஈரத்தூரிகையால் சுத்தம் செய்வது என் வாடிக்கை. ஒருவர் அதை ஒருக்களித்துப் பிடித்துக் கொள்ள வேண்டும். அம்மாடியோவ்! எங்கிருநதுதான் வந்ததோ இத்னை மூக்குப்பொடித் தூசும் பஞ்சுத்தூசும். இதை சுத்தம் செய்யுமுன் என் மகனை வெளியே போகச் சொல்லவேண்டும். அவனுக்கு தூசு ஒவ்வாமை. தும்ம ஆரம்பித்தால் சர்வசாதாரணமாக செஞ்சுரி போட்டுவிடுவான்.

நானும் மூக்கில் ஒரு துணியைக் கட்டிக்கொள்வேன். பிறகு எதிர்ப்பக்கத்தை ஒருக்களித்து விட்டுப்போன மூக்குப் பொடியையும் அகற்ற வேண்டும். ஒரு வழியாக சுத்தம் செய்துவிட்டால் உங்கள் கணக்கில் யாரோ 1000 வெள்ளியை மாற்றிவிட்டதுபோல ஒரு மகிழ்ச்சி ஏற்படும். அந்த மகிழ்ச்சியிலேயே அந்த நாள் இனிக்கும். பணிஓய்வு என்பது மனிதர்களுக்கு மட்டும்தானா? எங்களுக்கில்லையா? என்று அந்த அலமாரி கேட்பதுபோல் இருக்கிறது. அதிலுள்ள இழுவறைகள் சிக்குகிறது. சிலசமயம் இழுக்கவே வராது. அதில்தான் 35 காலுரைகளை வைக்கவேண்டும். கதவுகளை நிரந்தரமாக மூடவே முடியாது. திறந்துதான் கிடக்கும். அதை சிரமப்பட்டு மூடினாலும் இழுவறைகளை சுத்தமாக இழுக்கவே முடியாது. உள்ளே உள்ள தட்டுக்கள் அலைகள் போலாகி காலணி வைக்கும்போதெல்லாம் அதை ஊஞ்சலாட்டிவிட்டுத்தான் ஓய்கிறது. சரி. அந்த அலமாரிக்கு ஓய்வு கொடுத்துத்தான் ஆகவேண்டும். வெளியே போட்டுவிடுவோம். யாராவது எடுத்துக் கொள்வார்கள். நம் வீட்டில் ஏழாண்டுகளாக ஒட்டி உறவாடிய ஒரு பொருளை அனாதையாக வெளியே தூக்கிப் போடுவதில் உள்ள வலி கொடுமையானது. ஏழாண்டுகளாக வீட்டில் இருந்து பட்டுப்போய்விட்ட ஒரு கருவேப்பிலைத் தொட்டியை மின்தூக்கியின் கீழ்தளத்தில் வைத்துவிட்டு அந்த நாள் முழுதும் யாருக்குமே தெரியாமல் அழுதிருக்கிறேன். இந்த வலிகளெல்லாம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத தாகிவிட்டது.
‘பாக்கியா ஃபர்னிச்சர்’ என்று ஒரு நிறுவனம். புதிய ஒரு அலமாரியை வாங்க அங்கு சென்றேன். நான்காம் மாடியில் படுக்கைப் பிரிவுக்கு அருகாமையில் என்றார்கள். யானைத்தந்த நிறத்தில் ஒரு அலமாரி இரண்டு கால்களில் நிற்கிறது. முதுகுப் பகுதியை சுவற்றோடு சேர்த்து ‘போல்ட்’ போட வேண்டுமாம். மூன்று அறைகள். திறந்தால் 120 டிகிரி சுழன்று ‘எனக்குள் எதையாவது வை’ என்று கெஞ்சுகிறது. பிறகு மூடிவிட்டால் பொத்திக்கொண்டு சிரிக்கிறது. என்ன அருமையான தொழில்நுட்ப வளர்ச்சி. விலை 300 வெள்ளியாம். சரி.

வாங்கிவிடவேண்டியதுதான். எங்கு தேடியும் விற்பனையாளர்களைக் காணமுடியவில்லை. வெகு நேரத்துக்குப் பிறகு ஒரு சீருடை விற்பனையாளர் கண்ணில் பட்டார். இந்தக் காலணி அலமாரி வேண்டும். பில் தர முடியுமா? என்றேன். ‘அந்த அலமாரியின் மேற்பகுதியில் தகவல் பதிவுகள் இருக்கும். அதை அப்படியே புகைப்படம் எடுத்து வாருங்கள். நான் அங்கே வரமுடியாது.’ என்றார். மீண்டும் வந்து புகைப்படம் எடுத்துச் சென்றேன். பதிவுகளை கணினியில் தட்டினார். ஏ4 அளவில் ஒரு பட்டியல் பொதக்கென்று விழுந்தது. எடுத்துக்கொண்டு முதல்மாடியில் இருக்கும் காசாளரிடம் சென்றேன். காசைச் செலுத்திவிட்டு வீட்டுக்கு அனுப்பி பொருத்தித் தரும் பிரிவுக்குச் சென்றேன். தகவல்களை தட்டினார். ‘109 வெள்ளி ஆகும். அதைச் செலுத்துங்கள். இன்று தேதி 11. 21ஆம் தேதி மாலை 2 மணியிலிருந்து 6 மணிக்குள் வந்து பொருத்தித் தருவார்கள். வருவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன் எங்கள் ஆட்கள் உங்களுக்கு தொலைபேசுவார்கள்.’ என்றார். ஏழாண்டுகள் பொறுத்தாகிவிட்டது. இன்னும் 10 நாட்கள் தானே. அந்த 21ஆம் தேதி காலை எனக்கு பல்மருத்துவரோடு சந்திப்பு இருக்கிறது. பல்லில் ஆணி அடிப்பது போன்ற வலி ஒரு மாதமாக. ஆனாலும் பரவாயில்லை. இவர் மாலையில்தானே வருகிறார். அதற்குள் பல்லைப் பிடுங்கிவிடலாம்.. ‘சரி’ என்றேன்.

21ஆம் தேதி காலை 10 மணி. பல் மருத்துவமனை. வரிசை எண் எடுத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறேன். தொலைபேசி அழைத்தது. எடுத்தேன். பாக்யாவிலிருந்து அழைக்கிறார்கள். ‘காலை 11 மணிக்கு எங்கள் ஆட்கள் வருகிறார்கள். வீட்டில்தானே இருக்கிறீர்கள்?’ என்றார். என்ன செய்வது? நான்தான் போகவேண்டும். அவரிடமே திரும்பக் கேட்டேன். ‘மாலை என்றுதானே சொன்னீர்கள். நான் வெளியே இருக்கிறேன். வீட்டில் யாரும் இல்லையே’ என்றேன். ‘ஓ. அப்படியானால் அடுத்த வாரம்தான் வருவார்கள்.’ என்றார். இன்னும் ஒரு வாரமா. பல் மருத்துவரைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். ‘நான் வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். வரச் சொல்லுங்கள்.’ என்றேன்.

நான் வீடுவந்து அடுத்த 20 நிமிடங்களில் அவர்கள் வந்துவிட்டார்கள். சப்பையான செவ்வக அட்டைப் பெட்டிகள் சில மட்டும் இருந்தன. சரசரவென்று கிழித்தார்கள். பிரித்தார்கள். கொத்து மறை ஆணிகளும் சில மரத்துண்டுகளும் வந்து விழுந்தன. பின் பலகையைப் பொருத்த சுவற்றில் ‘போல்ட்’ துளை போடப்பட்டது. 20 நிமிடத்தில் அந்த யானைத்தந்த அலமாரி சுவற்றில் நச்சென்று பொருத்தப்பட்டு ‘என்ன சேதி? சௌக்கியமா?’ என்றது. ‘போய்வருகிறோம் பாஸ்’ என்று சொல்லிக்கொண்டு அந்த ஆட்கள் வெளியேறினார்கள். அந்த ‘பாஸ்’ என்ற வார்த்தை என் தலையில் பனிக்கட்டிகளை இறக்கியது. அந்த அலமாரியின் மேல் அறையைத் திறந்தேன். 120 டிகிரி சுழன்று திறந்து ‘ம். சீக்கிரம் உன் காலணியை வை’ என்றது. ஒரு காலணியை வைத்தேன். மூடினேன். பிறகு மீண்டும் திறந்தேன். ஒரு மறை ஆணி கழன்று உள்ளேயே விழுந்து இடமும் வலமுமாய் சுற்றியது. ‘என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை’. அந்த ஆணியை எடுத்து அந்தத் துளையில் பொருத்திப் பார்த்தேன். அது சாவகாசமாய் உள்ளே போய் உட்கார்ந்துகொண்டது. வெளியே இழுத்தேன் வந்துவிட்டது. திருப்புளியே தேவையில்லாமல் அந்தத் துளை நிரந்தரத் துவாரமாய் ஆணிககு பிடிமானமே இல்லாமல் போய்விட்டது. பாக்யாவை அழைத்தேன். இந்த விபரத்தை எப்படிச் சொல்வது? நான் இப்படிச் சொன்னேன். ‘உங்கள் ஆட்கள் சரியாகப் பொருத்தவில்லை. சில ஆணிகள் கழன்று விழுந்துவிட்டன’ என்று . ‘சரி. இன்றைக்கு தேதி 21. 23ஆம் தேதி மாலை 4 மணியிலிருந்து 7 மணிக்குள் வருவார்கள்’ என்றார். அன்று 7 மணிக்கு ஒரு கூட்டம் நான் அவசியம் போக வேண்டும். 7 மணிக்குள் அவர்கள் முடித்துவிட்டாலும் நாம் கூட்டத்துக்குப் போய்விடலாம். ‘சரி’ என்றேன்.

23ஆம் தேதி. 7 மணி ஆகியும் ஒரு அழைப்பும் இல்லை. தொலைபேசி அழைக்கவே இல்லை. தொலைபேசியை திறந்து திறந்து பைத்தியம் போல் பார்க்கிறேன். அவர்கள் வருவதுபோல் தெரியவில்லை. நான் கூட்டத்துக்கு கிளம்பினேன். பாதி வழியில் அழைப்பு. ‘நாங்கள் வந்துகொண்டிருக்கிறோம். இன்னும் 10 நிமிடத்தில் அங்கு இருப்போம்.’ என்றார்கள். உடனே வீட்டுக்குத் திரும்பினேன். கூட்டத்துக்கு போகாவிட்டாலும் பரவாயில்லை. தலைவரிடம் சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். 10 நிமிடத்தில் வந்துவிட்டார்கள். அந்த ஆணியைப் பொருத்த மின்னியக்க திருப்புளியை எடுத்தார். ‘அது தேவையில்லை. அது தானாகவே உள்ளே போய் வெளியே வருகிறது’ என்றேன். ‘அட! ஆமாம். இந்த உருப்படி வீணாகிவிட்டது. நான் வீட்டுக்கு அனுப்பும் பிரிவிலும் வாடிக்கையாளர் பிரிவிலும் தெரிவித்து விடுகிறேன். இன்னும் சில நாளில் இதேபோல் வெறொரு காலணி அலமாரியுடன் வருகிறோம்.’ என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள்.

அன்று இரவு முழுவதும் காலணி அலமாரி கனவுதான். பெரிய அலமாரிகள் நிற்கிறது. ஆடுகிறது. விழுந்து உடைகிறது. மீண்டும் எழுகிறது. ஒரு காலணி வைத்தவுடன் மீண்டும் விழுகிறது. சே! ஒரு செருப்பு அலமாரி என்ன பாடுபடுத்துகிறது. ஒரு வழியாக விடிந்தது. அத்தனை பட்டியல்களையும் அள்ளிக்கொண்டு பாக்யாவுக்கு ஓடினேன். தகவலைச் சொன்னேன். ‘எனக்கு இந்த அலமாரியே வேண்டாம். 100 கிராம் எடையுள்ள காலணிகளுக்குத்தான் இது சரியாக வரும். என் மகனின் காலணிகள் ஒவ்வொன்றும் 1 கிலோ’ என்றேன். ‘சரி. அமருங்கள். பெரிய அதிகாரியை கேட்டுவிட்டு வருகிறேன். பொருளை மாற்ற அவர்தான் அனுமதிக்க வேண்டும்’ என்றார். அமர்ந்தேன். கனவுகளால் கிழிக்கப்பட்டு தூக்கம் இழந்ததால் ஒரு குட்டித்தூக்கம் போட்டேன்.

வந்து எழுப்பினார். ‘அதிகாரி ஒப்புக் கொண்டுவிட்டார். நீங்கள் வெறொரு பொருளைப் பாருங்கள். இந்த அட்டையைக் காண்பியுங்கள். நீங்கள் செலுத்திய வெள்ளியைக் கழித்துக் கொள்வார்கள்.’ என்றார். அதே நான்காம் மாடி. அநதக் கட்டில் பிரிவுக்கு விரைந்தேன். அந்த யானைத்தந்த அலமாரி அதே இடத்தில் இருந்தது. பார்க்கும்போதே குமட்டியது. மூன்று அறைகள் நேராக இழுத்து மூடுவதுபோல் ஒரு சாதாரண அலமாரி இருந்தது. போல்ட் சமாச்சாரமெல்லாம் தேவையில்லை. ஒவவொரு அறையும் 3 அடிக்கு 2 அடி என்று விசாலமாக இருந்தது. அது துணிமணிகள் வைக்கும் அலமாரியாம். காலணி வைத்தாலென்ன? காலணி அலமாரி என்று இருப்பது எல்லாமே சுழன்று வந்து உயிரை வாங்குகிறது. அதற்கு இது தேவலாமே. சரி. வாங்கினேன். அனுப்பும் பிரிவுக்கு வந்தேன். ‘யோசித்துக் கொள்ளுங்கள். வெறு மாற்றமில்லையே?’ என்றார். ‘மாற்றமில்லை. இதைப் பொருத்துவது சிரமமா? இல்லையென்றால் நானே எடுத்துக்கொண்டு போய்விடுகிறேனே.’ என்றேன். ‘தாராளமாக.ஒரு தொடக்கப்பள்ளி மாணவன் கூட பொருத்திவிடுவான்’ என்றார். இனிமேல் நாம் பொருத்திக் கேட்கக் கூடாது என்பதற்காகவே அப்படிச் சொன்னாரோ? ஆனாலும் அன்று பல் மருத்துவரைப் பார்க்கமுடியாமல் போனது இன்னும் வலித்துக்கொண்டே இருக்கிறது. அவர்கள் அழைப்புக்காக காத்துக்கொண்டிருக்க நமக்கென்ன தலைவிதியா? அவரிடம் பொருத்தித் தரக் கேட்பதும் அவமானம்தான்.

எடுத்துக்கொண்டு வீடு வந்தேன். என் ஆயுதப் பெட்டியை எடுத்து விரித்து வைத்தேன். அட்டைப் பெட்டிகளை மிக எச்சரிக்கையுடன் பிரித்தேன். ஏகப்பட்ட பலகைகள் இரும்புச் சட்டங்கள், மறை ஆணிகள், மரத்துண்டுகள். ‘அட சண்டாளா! இதையா தொடக்கப்பள்ளி மாணவன் பொருத்தமுடியும்’ என்றான். அதில் ஒரு விளக்கப் புத்தகமும் இருந்தது. ஏதோ தேர்வு எழுதுவதுபோல வரிவிடாமல் படித்தேன். ஒவ்வொரு மறை ஆணியாய் பார்த்துப் பார்த்துப் பொருத்தினேன். மின்திருப்புளி இல்லை. கைத்திருப்புளிதான். நல்ல வேளை. போல்ட் இல்லை.

எல்லாம் ஒருவழியாக முடிந்த பின்னும் 10 மறை ஆணிகள், சில மரத்துண்டுகள் கிடக்கின்றன். இது என்ன உபரியா? அலமாரியை லேசாக அசைத்துப் பார்த்தேன். கால்களை மட்டும் ஊன்றிக்கொண்டு பக்கவாட்டிலும் முன்பின்னும் ஆடுகிறது. ‘கொஞ்சம் கூடத் தள்ளினாலும் விழுந்துவிடுவேன்’ என்று எச்சரித்தது. பாக்யாவை அழைத்தேன். ‘பொருளை நாங்கள் அனுப்பினால்தான் ஆளனுப்ப முடியும். நீஙகளே எடுத்துச் சென்றதால் உங்களுக்குத் தெரிந்த தச்சரை வைத்து சரிசெய்து கொள்ளுங்கள்’ என்றார். எனக்கு புரிந்துவிட்டது. இது திட்டமிட்ட சதி. இந்தப் பிரச்சினை எப்படித்தான் முடியப்போகிறதோ?

எனக்குத் தெரிந்த ஒரு தச்சர் இருக்கிறார். அவரிடம் சேதியைச் சொன்னேன். ‘அவர்களிடமே சொன்னால் அவர்களே ஆளனுப்புவார்களே’ என்று யாருக்குமே தெரியாத யோசனையைச் சொன்னார். நான் கொதித்தேன். ‘அவர்களை அழைக்க முடியுமென்றால் உன்னை ஏண்டா அழைக்கிறேன்’ என்ற வார்த்தைகள் உதடுவரை வந்து ஓசைப்படாமல் வெளியேறிவிட்டது. கோபித்து வார்த்தைகளை கொட்டிவிடக்கூடாது. சிரித்தபடியே அவரிடம் சொன்னேன். ‘நீங்கள் வந்தால் நன்றாக இருக்கும். என் வீட்டை நீங்கள் புதுப்பபித்துக் கொடுத்ததை என்னால் மறக்கவே முடியாது’ என்று பனிக்கட்டிகளை அவர் தலையில் இறக்கினேன். ‘ ஹி ஹி ஹி… எல்லாம் சரிதான். உங்கள் இடத்துக்கு வந்தால் வண்டியை நிறுத்துவது பெரும் பிரச்சினை. நான் வண்டி இல்லாமல் வேறு வேலையாக அந்தப் பக்கம் வரும்போது தெரிவிக்கிறேன். நீங்கள் வீட்டில் இருங்கள் என்றார். அந்தப் பல் மருத்துவர் ஏனோ ஞாபகத்துக்கு வந்தார். என்ன செய்வது? ‘சரி’ என்றேன்.

அவருடைய தொலைபேசி அழைப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த அலமாரியில் யாரும் கை வைக்க வேண்டாம் என்று வீட்டில் எல்லாரையும் எச்சரித்தேன். எல்லாரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். மூன்று நாட்கள் கழித்து அந்தத் தச்சர் அழைத்தார். எழுதிக்கொள்ளுங்கள் என்று முகவரியைத் தந்தார். இவர் முகவரி நமக்கெதற்கு? பிறகு சொன்னார். ‘அந்த அலமாரியை என் வீட்டுக்குக் கொண்டு வத்து விடுங்கள். எனக்கு நேரம் கிடைக்கும்போது முடித்து வைக்கிறேன். பிறகு நீங்கள் தூக்கிக்கொண்டு செல்லலாம் என்றார். இதைச் சொல்லவா இவருக்கு மூன்று நாள் தேவைப்பட்டது. எல்லாரும் பேசிவைத்துக் கொண்டே செய்வது போல இருக்கிறது. நான் ஒரு தப்பும் செய்யவில்லையே. ஒரு காலணி அலமாரி வாங்க நினைத்தது தவறா? அப்படியே மீண்டும் பிரித்து ஒரு வாகனத்தை தேடுவதா அல்லது வேறு ஒரு தச்சரைப் பார்ப்பதா?

அந்த அலமாரி இன்னும் என் வீட்டில் அப்படியேதான் இருக்கிறது. யாரும் பக்கத்தில் போய்விடாதபடி ஒரு சிவப்புக் கயிறும் கட்டிவைத்திருக்கிறேன். இப்போதெல்லாம் சந்திப்பவர்களிடம் நான் முதலில் கேட்பது ‘உங்களுக்கு தச்சர் யாரையாவது தெரியுமா?’ என்பதுதான். எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரு முடிவு உண்டு. அது எப்போது என்பதுதான் பிரச்சினையே.

நன்றி ;திண்ணை
யூசுப் ராவுத்தர் ரஜித்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  - Page 2 Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 05, 2016 8:19 am

கேள்விகளால் ஆனது
-----------------
கே.எஸ்.சுதாகர்
--------------------

சிட்னியின் புறநகர்ப் பகுதியில்தான் அந்த முதியோர் பராமரிப்பு இல்லம். அதன் பின்புறமிருந்த கார்த் தரிப்பிடத்தில் காரை நிற்பாட்டினேன். நண்பன் சிவத்தின் அம்மா நேசம் அங்குதான் இருக்கின்றார். அவரை அங்கு கொண்டுவந்து விட்டுப் போனதில் எனக்குப் பெருத்த சந்தேகம். தன்னைத்தானே கவனித்துக் கொண்டு, அடுத்தவருக்கு எந்தவித தொல்லையும் கொடுக்காமல் இருந்துவந்த அவரை – திடீரென்று யாருக்கும் சொல்லாமல் ஏன் அங்கு கொண்டுவந்து விட வேண்டும்? எதுவும் எப்பவும் நடக்கலாம் தான். ஆனாலும்?
அவரைப் பார்ப்பதற்காக சிவத்துடன் ஒரு தடவை இங்கே வந்திருக்கின்றேன். தனிய வருவது இதுதான் முதல் தடவை. கதவைத் தட்டிவிட்டு, சத்தம் ஒன்றும் உள்ளேயிருந்து வராததால் கதவை மெல்ல நீக்கிப் பார்த்தேன். ரெலிவிஷன் தன் பாட்டில் ஓடிக்கொண்டிருந்தது. சாப்பாட்டு மேசையில் தலையைக் குப்புறக் கவிழ்ந்த வண்ணம் நேசம் இருந்தார். சாப்பாடு அப்படியே இருந்தது.

“அம்மா…” மெதுவாகக் கூப்பிட்டேன். நான் எப்போதும் அவரை அம்மா என்றுதான் அழைப்பேன். அவர் தலையை நிமிர்த்திப் பார்த்துவிட்டு, “சிவம் வரவில்லையா?” என்றார்.
“நான் வேலை விஷயமா இந்தப் பக்கம் வந்தனான். வந்தவிடத்திலை உங்களை ஒருக்கா பாத்திட்டுப் போகலாம் எண்டு வந்தனான்.”
அவரின் முகம் திடீரென்று மலர்ந்தது. மெளனமாக என்னை உற்றுப் பார்த்தபடி இருந்தார். நான் அவருக்குப் பக்கத்தில் இருந்த கதிரையில் அமர்ந்தேன்.
“அம்மா எப்படி இருக்கிறியள்?”
“ஏன் எனக்கு என்ன குறை? எனக்கு மாறாட்டம் எண்டு சிவம் சொல்லியிருப்பானே!” சொல்லும்போதே அவரின் நா தழுதழுத்தது. அந்த உரையாடலைத் திசை திருப்ப நினைத்தேன்.
“அம்மா… இப்ப எங்கடை ஊர்ப்பக்கம் போய்ப் பார்க்க ஆமிக்காரன்கள் விட்டிருக்கின்றான்கள். நான் ஒருக்கா இலங்கைக்குப் போய் எனது வீடு வளவுகளைப் பார்த்து வரலாம் எண்டு இருக்கிறன்.”
“தம்பி ராஜன்… எனக்கொரு உதவி செய்யவேணும்” திடீரென்று எனது வலது கையைப் பிடித்து இடைமறித்தார் நேசம்.
“சொல்லுங்கோ அம்மா… செய்யிறன்”
“எனக்கொரு மகன் கோண்டாவிலிலை இருக்கிறான். என்ரை மூத்த மகன்…” சொல்லும்போதே அவரின் கண்கள் பனித்தன.

இதைத்தான் அம்மாவுக்கு மாறாட்டம் எண்டு சிவம் சொன்னானோ?
“என்னம்மா சொல்லுறியள்? உங்களுக்கு நியூசிலாந்திலை ஒரு மகளும், சுவிசிலை ஒரு மகனும், மற்றது இஞ்சை சிவமும்… மொத்தமாக மூண்டு பிள்ளையள்தானே!”
“அதோடை என்ரை மூத்த மகன் தேவராஜன். இலங்கையிலை கோண்டாவிலிலை இருக்கிறான். அவனுக்கு கொஞ்சம் புத்தி சுகமில்லை. அவனை நீ போய்ப் பாத்து வரவேணும்.”
“கட்டாயம்… கட்டாயம் பாத்து வருவன் அம்மா”

எனக்கு அங்கிருந்து தப்பித்தால் போதும் என்றிருந்தது. விடைபெறும்போது எனது கையிற்குள் ஒரு என்வலப்பைத் திணித்தார் நேசம். அதற்குள் தேவராஜன் கோண்டாவிலில் இருக்கும் விலாசமும், அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் சிவலிங்கம் என்பவருக்கு ஒரு கடிதமும், எண்ணூறு அவுஸ்திரேலிய டொலர்களும் இருந்தன. நான் திகைத்துப் போனான்.
“உலகத்தில நல்லவர்கள் எண்டு நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிற எல்லாருமே நல்லவர்கள்தானா?” என்றொரு கேள்வியை திடீரென்று என்னிடம் கேட்டார்.
“உங்கடை மகனுக்கு ஏன் அப்படி வந்தது?”
அவர் தன் இரண்டு கரங்களையும் வான் நோக்கி உயர்த்தி, பழியை ஆண்டவன்மீது போட்டார். மனதுள் வேறு ஏதோ முக்கிய சமாச்சாரம் சொல்வது போல அவர் முகம் பிரதிபலித்தது. ஏதோ பெரிய கெடுதல் பற்றி நினைக்கிறார் போல என்று என் மனம் கூறியது.
“அம்மா… நான் போக இரண்டொரு கிழமைகள் எடுக்கும். வர ஒரு மாதம் செல்லும். பரவாயில்லைத்தானே உங்களுக்கு.”

“உனக்கு வசதிப்படேக்கை அவனைப் போய்ப் பார்த்து வா. அவன் பாவம். இவங்கள் ஒருத்தருமே அவனைப்பற்றி ஒண்டுமே சொல்லுறான்கள் இல்லை. அவனுக்குத் தாற காசையும், பிள்ளையளின்ரை படிப்புச் செலவு அது இது எண்டு இப்ப குறைச்சுப் போட்டான் சிவம். நியூசிலாந்திலை இருக்கிறவள் புருஷனுக்குச் சுகமில்லை எண்டு சொல்லி ஒண்டும் தாறதில்லை. சுவிசுலை இருக்கிறவன்தான் கொஞ்சம் தாறவன். அவனும் பிள்ளை குட்டியள் இல்லாததாலை தந்து கொண்டிருக்கிறான்.”

நான் சற்று நேரத்தில் அங்கிருந்து கிழம்பினேன். கதவைத் திறந்து வெளியேறும்போது, ”அவனைப் போய் பாத்துவாற விஷயத்தை ஒருத்தருக்கும் சொல்லிப் போடாதை. அதுதான் முக்கியம். அது சரி இப்ப போறவைக்கு அங்கே பிரச்சினை இல்லையே?” என்றார் நேசம்.
”இங்கே இருக்கிற ஆக்கள் காட்டிக் கொடுத்தால்… ஓ..” சொல்லிக் கொண்டேன்.
காரிற்குள் ஏறி சீற்றைப் பதித்துவிட்டு சரிந்து கொண்டேன். தலை வெடித்துவிடும் போல வலித்தது. ஒருவேளை நேசம் சொல்வது உண்மையாக இருக்குமோ?

நானும் சிவமும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் பொறியியல் படித்தோம். அவுஸ்திரேலியாவிற்கு வந்த பின்னர் சிவம் ’தூங்காபி’யில், நான் கிராவீனில். இரண்டும் அருகருகே உள்ள கிராமங்கள்தான். சிவத்திற்கு முதல் குழந்தை பிறந்த போதுதான் நேசம் இலங்கையில் இருந்து இங்கு வந்தார். சிவம் அவரின் கடைசிப்பிள்ளை. எங்களுக்கும் அதே காலகட்டத்தில்தான் குழந்தை பிறந்தது. இருவருக்கும் முதலில் ஆண் குழந்தைகள். நேசம் என்னையும் தனது பிள்ளையப் போலவே கருதினார். அவரின் சமையல் பக்குவம் சொல்லில் அடக்கிவிடமுடியாத சுவை நிறைந்தது. மருமகளுக்கு பத்தியம் வைக்கும்போதெல்லாம் என்னுடைய மனைவி மதிவதனிக்குமாக சேர்த்தே வைப்பார். மதிவதனிக்கும் அவர்மேல் ரொம்ப பாசம்.

இரண்டு குடும்பங்களும் ஒரே குடும்பம் போலத்தான் பழகினோம். வேறுபாடுகள் என்று எதுவும் கிடையாது. எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்வோம். பல்கலைக்கழகத்தில் இருந்ததைவிட அப்போதுதான் எங்கள் இருவரின் நட்பு மேலும் இறுக்கமடைந்தது.

நேசத்திற்கு எண்பது வயதாகும்போது அவரின் பிள்ளைகள் அனைவரும் அவுஸ்திரேலியாவில் ஒன்றுகூடினார்கள். அவரின் பிறந்ததினத்தை மிக எளிமையாகக் கொண்டாடினார்கள். ஒருவரையும் பிறந்ததினத்திற்குக் கூப்பிடவில்லை. எங்களைக் கூப்பிடாதது எனக்கு மிகவும் கவலை தந்தது. அதன் பிற்பாடுதான் சிவம் தனது தாயாரைக் கொண்டுபோய் முதியோர் இல்லத்தில் விட்டான். அவரை அங்கே கொண்டுபோய் விட்டதற்கான காரணங்களை சிவம் ஒவ்வொன்றாக அடுக்கினான்.

|எங்களைவிட அவர்கள்தான் அம்மாவை நன்றாகப் பார்ப்பார்கள் – பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள், அம்மாவினால் பிள்ளைகளின் கல்வி தடைப்படுகின்றது -அம்மாவிற்கு மாறாட்டம் வந்துவிட்டது |
சிவத்தை, ‘நசுக்கிடாமல் காரியம் பார்ப்பவன்’ என்று சிலர் சொல்லுவார்கள். எல்லாருக்கும் எல்லாரையும் பிடிப்பதில்லைத்தானே! அவன் கதைக்கத் தொடங்கும்போது, முதலில் தனது முகத்தை பெரியதொரு அறிவாளி போல பாவனை செய்வான். பின் குதிரை கனைப்பது போல பல்லைக் காட்டிச் சிரிப்பான். கதைக்கத் தொடங்கினால் ஊர்ப்பெண்கள் தோற்றுப் போவார்கள் என்று சொல்வார்கள். அடுத்தவரைப் பற்றிப் புதினம் அறிவதிலும், வம்பளப்பதிலும் ’நம்பர் வன்’. பாதத்திலிருந்து தலை வரை ஒரே பருமன். குதிரையின் கனைப்பு. இவை அவனின் அடையாளங்கள்.

வேலையால் வீட்டிற்கு வந்ததும், நடந்தவற்றை மதிவதனியிடம் சொன்னேன்.
”ஏற்கனவே பிள்ளையளின்ரை படிப்பு, வேலை, வீடு எண்டு போட்டி. இதிலை மகனுக்கு 12ஆம் வகுப்பு றிசல்ட் சரியில்லை எண்டு இப்ப கொஞ்சநாளா மூஞ்சியை நீட்டிக் கொண்டு திரியுதுகள். இதுக்குள்ளை ஊருக்குப் போய் வளவுகளைத் துப்பரவாக்கி, வீட்டைத் திருத்தப் போறியள் எண்டு கேள்விபட்டா எப்பிடியிருக்கும்?” என்றாள் மதிவதனி.
”நான் எல்லாரோடையும் நல்ல மாதிரித்தான் பழகிக்கொண்டு வாறன். அவங்கள் மாறிட்டான்கள் எண்டதுக்காக நான் மாற முடியாது!” சொல்லிக்கொண்டே சிவத்துடன் கதைப்பதற்காக ரெலிபோனைத் தூக்கினேன்.
“தயவுசெய்து அம்மாவைப் போய்ப் பாத்ததை சொல்லிப் போடாதையுங்கோ” என்றாள் மதிவதனி.
இலங்கை போகவிருக்கும் விடயத்தை சொன்னபோது, அவன் கனைத்தான். பின்னர் சிரித்தான். இவன் என்ன பகைவனைப் பார்த்து வெஞ்சம் வைத்துச் சிரிப்பது போல சிரிக்கின்றான்.
“என்னடாப்பா பிறந்த நாட்டிலை போய்ச் சாகப்போறியே!”

“உனக்கு எப்பவும் நக்கல்தான்…”
“நான் ஏன் சொல்லுறேனெண்டால்… 2009 இலை உச்சக்கட்டப் போர் நடக்கேக்கை, இஞ்சை நீ கொடி பிடிச்சாய்… ஊர்வலம் போனாய்…”

“நீயும்தான் வந்தாய். ஊர்வலம் போனது, கொடி பிடிச்சது எண்டா புலம்பெயர்ந்த நாட்டிலை இருந்து எண்பது வீதமான ஆக்கள் இலங்கைக்குப் போகேலாது” பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். இலங்கை போகும் நினைவுகளுடன் மூழ்கிப் போய்விட்டேன்.
இதுவெல்லாம் நடந்து இரண்டு வாரங்களில் இலங்கை போய்விட்டேன். மதிவதனியும் பிள்ளைகளும் வரவில்லை.
இருபத்தொரு வருடங்களின் பின்னர் நான் பிறந்து வளர்ந்த தெல்லிப்பழைக்கு வந்துள்ளேன். எங்குமே காடு. பாதை மூடிய பற்றைகள். ‘ஷெல்’ அடியினால் தகர்ந்த வீடுகள். வீட்டுக்குள்ளிருந்து விருட்ஷமாகி வானை முட்டும் மரங்கள். பாம்புப் புற்றுகள். வீடு வளவுகளைத் துப்பரவாக்கும் முயற்சி உடனே சாத்தியமில்லை என்பதால், அந்த வேலைகளின் மத்தியில் சிவத்தின் அண்ணாவைப் பார்த்துவர முடிவு செய்தேன்.
நேசம் கொடுத்த முகவரியை விசாரித்து, வீட்டை அடைய பகல் பதினொரு மணி ஆகிவிட்டது. பெரியதொரு வளவிற்குள் அந்த வீடு அமைந்திருந்தது. ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க, ஒல்லியாய் ஒட்டகம் போல இருந்த ஒரு மனிதர் வேட்டி சால்வையுடன் வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்தார். தன்னை சிவலிங்கம் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். கொண்டுவந்த கடிதத்தையும் காசையும் அவரிடம் கொடுத்தேன். நின்ற நிலையில் கடிதத்தைப் படித்தார்.
”நீர் இங்கு எமது வீட்டுக்கு வாற விஷயம் சிவத்திற்குத் தெரியுமா?” என்றார்.
“இல்லை… அவரின் அம்மாதான் சிவத்திற்கு ஒன்றும் சொல்ல வேண்டாம் என்று சொன்னார்”
“ஒரு கிழமைக்கு முன்னர் சிவம் என்னுடன் ரெலிபோனில் கதைத்திருந்தான். அம்மாவின் பெயரைச் சொல்லிக்கொண்டு யாராவது வந்தால் தேவராஜனைக் காட்ட வேண்டாம் என்றான். நேசம் சிவத்திற்கு எல்லாம் உளறிவிட்டார் போல இருக்குது. இப்ப அம்மாவின் கடிதத்தைப் பாத்த பின்புதான் எல்லாமே விளங்குது.”
வீட்டைப் பூட்டி திறப்பை கையில் எடுத்துக் கொண்டார் சிவலிங்கம். பின்னர் வீட்டின் பின்புறமாக இருந்த சீமெந்திலான கட்டடத்திற்கு என்னைக் கூட்டிச் சென்றார்.

அந்த அறையின் கூரை பனை ஓலையினால் வேயப்பட்டிருந்தது. கதவிற்குப் பதிலாக இரும்பிலான கேற் இருந்தது. ஜன்னல் இல்லாத அறைக்கு காற்றுப் போக வர வசதியாக இருக்கும் என்றார் சிவலிங்கம். இரும்புக்கதவின் மேல் தனது வீட்டுத் திறப்பினால் தட்டி, “ராசன்… ராசன்… “ என்று கூப்பிட்டார். உள்ளே இருட்டாக இருந்தது. கூனிக் குறுகிய ஒரு மனிதன் கைகளை விசுக்கி விசுக்கி நடந்து வாசல்வரை வந்தான். இரண்டு கால்களும் உட்புறமாக வளைந்து இருந்தன. தொளதொளத்த காற்சட்டை. உடம்பின் மேலுக்கு ஒன்றும் இல்லை. ஒரு குழந்தையைப் போல கள்ளமில்லாமல் சிரித்தான். நெற்றியிலே விபூதி சந்தணம். காதிலே ஒரு பூ. சிவலிங்கத்தையே பார்த்தபடி நின்றான் அவன்.

“சாப்பாடு தீத்த வேணும். குளிக்க வாக்க வேணும். டொக்டரிட்டைக் கூட்டிக் கொண்டு போகவேணும். ஒரு குழந்தைக்குச் செய்யவேண்டிய சகல வேலைகளும் செய்ய வேணும்.”
”ஏன்… ஏன் எப்படி இது நடந்தது?”
சிவலிங்கம் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை.
“வாருங்கள்… வீட்டிற்குப் போகலாம்.”

சில மனிதர்களின் இருண்ட பக்கம் தெரியாமலே, அவர்கள் தமது வாழ்க்கையை நல்லபடியாக வாழ்ந்துவிட்டுப் போய் விடுகின்றார்கள். சக மனிதரை அடையாளம் காண்பதுதான் இந்நாளில் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
வீட்டிற்குள் வந்ததும் கதிரையில் அமரும்படி சொன்னார்.

‘ப்ளீஸ்… நீங்களாவது நான் சொல்லிறதை தயவு செய்து கேளுங்க. நாட்டுப் பிரச்சினைகள் தீர்ந்து இப்ப நாலு வருஷமாப் போச்சு. ஒருத்தர் எண்டாலும் வந்து பாக்கினம் இல்லை. வந்தால் தங்கடை தலையிலை பொறுத்துப் போய்விடும் எண்டு பயப்படுகினம்.

எத்தினையோ வருஷங்கள் வைச்சுப் பாத்திட்டன். இனியும் என்னாலை ஏலாது. எங்கையாவது அனாதை ஆச்சிரமத்தில் கொண்டுபோய் விடப்போறன்” சத்தம் போட்டார் சிவலிங்கம்.
”இதையும் வைச்சிருங்கோ. நான் போய் எல்லா ஒழுங்குகளும் செய்து தருவன்” என் பொக்கற்றுக்குள் இருந்த இருநூற்றி ஐம்பது டொலர்களையும் அவரது கைகளிற்குள் திணித்தேன். சிவலிங்கம் குளிர்ந்து போனார். தேவராஜனின் கதையைச் சொல்லத் தொடங்கினார்.

”சாதி ஏற்றத் தாழ்வுகள்தான் தம்பி இதுக்குக் காரணம். தேவராஜன் படிக்கிற காலத்திலை ஒரு பெண்ணை விரும்பியிருந்தான். சாதி காதலுக்குத் தடையா இருந்துது. தேவராஜனைப் பெத்தவர்கள் தடிச்ச சாதிக்காரர்கள். கலியாணம் இந்த ஜன்மத்திலை நடக்காது என்று உறுதிபடச் சொல்லிவிட்டார்கள். பூசணிக்காய் போல விளைஞ்ச தாய்க்காரியும், தம்பி சிவமுந்தான் மிகவும் மூர்கத்தனமாக அதை எதிர்த்தவர்கள். சிவம் அந்தக் குமரைக் கொல்லப் போறான் என்று ஊருக்குள்ளை கதை உலாவினது.”

கருணையும் சாந்தமும் கொண்ட அந்த அம்மாவா அப்படிச் செய்தார்? நான் திகைத்தே போய்விட்டேன்.
”நான் தேவராஜனோடை பள்ளியிலை ஒண்டாப் படிசனான். அவன்ரை காதலியின்ரை சொந்தக்காரன். அவனைப்பற்றி எனக்குத்தான் எல்லாம் தெரியும். இரண்டு பேரும் ஏழு எட்டு வருஷங்கள் எண்டு காத்திருந்திச்சினம். பிறகு பெடிச்சிக்கு கலியாணம் பேசிச்சினம். கலியாணம் முடிஞ்சு இரண்டாம் நாள் பெடிச்சி தூக்கிலை தொங்கிட்டாள். அண்டைக்குப் பிடிச்சது உவனுக்கு உந்தச் சனியன். விசராக்கிப் போட்டுது. இப்ப முப்பது வருஷமாப் போச்சு” சொல்லிவிட்டு பெருமூச்செறிந்தார் சிவலிங்கம். கனத்த மனத்துடன் சிவலிங்கம் வீட்டிலிருந்து புறப்பட்டேன்.

ஒரு முடக்குக் கழிந்திருக்கும். வாகனமொன்று கிரீச்சிட்டு என்னருகில் நின்றது. மளமளவென்று நாலுபேர்கள் இறங்கினார்கள். என்னைப் பிடித்து இழுத்து, வாயிற்குள் துணியொன்றை அடைத்தார்கள். கண்களைக் கட்டிப் போட்டு வாகனத்தினுள் தள்ளினார்கள். என் உடலில் இருந்து ஒட்டு மொத்த சக்தியையும் யாரோ உறிஞ்சி எடுத்தது போல இருந்தது. வாகனம் சிறிது தூரம் ஓடியபின்னர் ஒரு சுடலைக்குள் நின்றது. கட்டை அவிழ்த்து, வாயிற்குள் இருந்த துணியை இழுத்தெடுத்தார்கள். அவர்களில் ஒருவரையும் நான் முன்னர் கண்டதில்லை. கடத்தியவர்கள் தங்கள் முகத்தை மறைத்திருக்காவிடில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை நான் அறிவேன். ஒருவன் தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த வீடியோக்கமராவை எடுத்தான். அதனை ஓடவிட்டு சற்று நேரம் உற்றுப் பார்த்தபடி இருந்தான். திடீரென்று நிறுத்திவிட்டு என் தலையைப் பதித்து, “இதிலை கொடி பிடிச்சுக் கொண்டு நிக்கிற ஆள் நீதானே!” என்றான். நான் ஒன்றும் பேசாது மெளனமாக இருந்தேன்.
”உனக்கு சிவத்தைத் தெரியுமா?” என்றான் ஒருவன்.

“அவன் என் நண்பன்” என்றேன்.

”நண்பனாம்… நண்பன்” அவர்கள் வாகனம் அதிர சிரித்தார்கள்.
சிவம்… அடப் பாவி… சிட்னியிலை ஊர்வலம் போகேக்கை நீயும்தானே வந்தாய். நீதானேடா வீடியோ எடுத்தாய். இப்ப காட்டிக் கொடுத்துவிட்டாயேடா! ஏன் அப்படிச் செய்தாய்? ஒருவேளை இவ்வளவு காலமும் கட்டிக்காத்த உன் குடும்பரகசியம் என்னால் வெளிவரலாம் என்று நினைத்துவிட்டாயா?

நன்றி திண்ணை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  - Page 2 Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jan 11, 2016 7:06 pm

பழி!
-------

“ வா! வா! கணேஷ்? இந்த கிராமத்தானை எல்லாம் உனக்கு நினைவு இருக்குதா?” திடீரென்று கிராமத்திற்கு வந்த தனது நண்பனை வரவேற்றான் சுபாஷ்.

இருவரும் ஒரே ஊரில் ஒரே பள்ளியில் படித்தவர்கள். கல்லூரி வரையும் அது தொடர்ந்தது. ஆனால் அதன் பின்னர் கணேஷ் நகருக்கு வேலை விஷயமாக சென்றவன் அங்கேயே குடியேறிவிட்டான். அதுதான் அவனுக்கு வசதியும் கூட.

சுபாஷிற்கு சிறுவயதில் இருந்தே விவசாயத்தின் மேல் ஆர்வம் அதிகம். எனவே அக்ரி படித்து விவசாயத்தில் கவனம் செலுத்த துவங்கினான். அவனது பெற்றோர் வாங்கி வைத்திருந்த நிலம் இருந்தது. இவனாகவும் சில நிலங்களை வாங்கி விவசாயம் செய்ய ஆரம்பித்தான். அது ஒன்றும் அவனை கைவிடவில்லை.

கணேஷ் வருடம் ஒருமுறை கிராமத்து திருவிழாவிற்கு வருபவன். அதுவும் கூட அவன் மும்பைக்கு மாற்றாலாகிப் போனதும் நின்று போனது. எப்போதாவது போனில் பேசிக் கொள்வதோடு சரி. இன்று திடுதிப்பென்று கணேஷ் வரவும் ஆச்சர்யம் ப்ளஸ் ஆனந்தமாக வரவேற்றான் சுபாஷ்.

”சின்ன வயசில இருந்து ஒண்ணா பழகினோம்! ஒரே ஊரு ஒரே மண்ணு மறந்துட முடியுமாடா? வேலைப்பளு அதிகமானதால முன்ன மாதிரி போன்ல பேச முடியலை! சென்னைன்னா வருடம் ஒரு முறை வந்துபோக சவுகர்யமா இருந்துச்சு! மும்பையிலிருந்து எல்லோரையும் கூட்டிட்டு வந்து போகனும் லீவ் ரெண்டு நாளுக்கு மேல கிடையாது அதனாலதான் ரெண்டு வருஷமா வர முடியாம போச்சுடா! “

“சரிசரி! போய் குளிச்சுட்டு வா! சாப்பிட்டுகிட்டே பேசலாம்!”
சுபாஷின் வீடு வயலோரமாய் இயற்கை அழகோடு மரங்கள் சூழ்ந்து அமைந்திருக்க அதை ரசித்தபடி பின்புறம் குளியலறையில் நுழைந்த கணேஷ், “ஆ” பாம்பு! என்று அலற ஓடிவந்தான் சுபாஷ்.

குளியலறை தொட்டி ஓரம் ஒரு நாகப்பாம்பு படமெடுத்தபடி படுத்துக் கொண்டு இருந்தது. “ புஸ்” என்று அது விரோதிகளை பார்த்து சீற்றம் எடுக்க, சுபாஷ் ஒரு தடி கொண்டு வா! இதை அடிச்சு போட்டுடலாம்! என்றான் கணேஷ்.

“ சேச்சே! வேண்டாம்டா! அது நல்ல பாம்பு! இன்னிக்கு வெள்ளிக் கிழமை! அதை கொல்ல வேண்டாம்! கொஞ்ச நேரம் நாம அந்த பக்கம் போனா வெளியே போயிடும். இங்க பக்கத்துல வயலுங்க இருக்கறதாலே தவளைங்க நிறைய இருக்கும். அதை பிடிக்க வந்திருக்கும். வா அந்த பக்கம் போயிருவோம் அது ஓடிரும்!” சுபாஷ் மறுத்தான்.

“ நல்ல பாம்புன்றதாலேதான் சொல்றேன்! அதுக்கு விஷம் அதிகம்! குளியல் அறையிலே இருக்கு! விட்டு வைச்சா தப்பு! போய் தடி எடுத்து வா!”

“ இது வயலை ஒட்டின வீடு! இங்கே இதெல்லாம் சகஜம்! பாம்பைக் கண்டா நமக்கு பயம்! நம்மைக் கண்டா அதுக்கு பயம்! விட்டுடு!” அது ஓடிப்போயிரும்!” சுபாஷ் சொல்லிக் கொண்டிருக்க

“டேய்! சொன்னா நீ கேட்க மாட்டே! இரு நானே பாத்துக்கறேன்!” என்று சுற்றும் முற்றும் தேடிய கணேஷ் ஒரு மூங்கில் கழியை எடுத்து வந்து பாம்பு மீது அடித்தான். அடி பலமாய் படவில்லை! அவனுக்கும் பயம் தானே! சரியாக விழாமல் போகவே பாம்பு படமெடுத்து சீறிய படி எதிரே வர விலகிய கணேஷ் இன்னொரு அடி போடும் முன் நழுவி ஓடிப் போய்விட்டது.



“கணேஷ்! சொன்னா கேட்டியா? இப்ப பாரு! அடிச்சு விட்டுட்டே! பழிவாங்க அது தேடி வரும்! தேவையா இது? இனி நீ ஜாக்கிரதையா இருக்கணும் ஊர் போய் சேருகிற வரைக்கும்!”

“ ஹாஹாஹா! இன்னுமாடா இந்த கட்டுக்கதையெல்லாம் நம்பிக்கிட்டு இருக்கே! இது இருபத்தோரம் நூற்றாண்டு! பாம்பு என்னை போட்டோ எடுத்து வைச்சுக்கிட்டு கஜினி சூர்யா மாதிரி தேடி வந்து கொல்லுமா? அடப் போடா!” கணேஷ் எகத்தாளித்தான்.

”எந்த நூற்றாண்டா இருந்தாலும் நம்பிக்கைகள் பொய்க்காதுடா! அடிபட்ட பாம்பு பழிவாங்கும்கிறது நம்பிக்கை!”

”அப்ப நான் மும்பை போனா கூட தேடிவந்து கொல்லுமா? நீயா படம் மாதிரி பொம்பளை வேஷம் எல்லாம் போடுமா? உனக்கு ராமநாராயணன் படம் பார்த்து பார்த்து பக்தி அதிகமாயிருச்சு!”

“ விளையாடாதே! எச்சரிக்கையா இருன்னு சொல்றேன்! அப்புறம் உன் இஷ்டம்!”
”என்கிட்ட மாட்டி சாகாம போனது அதனோட அதிர்ஷ்டம், திரும்ப வந்தா அதுக்குத்தான் துரதிருஷ்டம்!”

“உனக்கு எப்பவும் அசட்டு துணிச்சல் அதிகம்தான்! ஆனா பாம்பு விஷயத்திலே கொஞ்சம் எச்சரிக்கையா இரு!”
“அடப்போடா!” அவன் சிரித்தான்.

அவனுக்காக வேண்டிக்கொண்டு புற்றுக்கு பால் ஊற்றினேன்! நாகர் சிலைக்கு பாலபிஷேகம் செய்து நண்பனை மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டேன்! மூன்று நாள் கடந்துவிட்டது. கணேஷ் என்னைத் தேடி வந்தான். ”கிளம்பறேண்டா!”

“என்னடா ஒரு வாரம் கூட ஆகலை! அதுக்குள்ளே!..”
“ ஓலை வந்துருச்சுடா! போயே ஆகனும்! பார்ப்போம்! அடுத்த வருஷம் சந்திப்போம்” வாடகைப் பேசி வந்த காரில் ஏறி கிளம்பி அரை மணி நேரம் ஆகியிருக்கும் செல்போன் ஒலித்தது.

“ஹலோ! சுபாஷா!”
“உங்க ப்ரெண்டுக்கு ஆக்ஸிடெண்ட் உடனே கிளம்பி வாங்க மெயின் ரோடுக்கு!”

பதறிப் போய் வண்டியில் விரைய சுபாஷ் சென்ற கார் மீது லாரி ஒன்று மோதி நின்று கொண்டிருந்தது. போலீஸ் தலைகள் போக்குவரத்தை சீர்படுத்த நான் அந்த லாரியைப் பார்த்தேன்.

“ நாகராஜா டிரான்ஸ்போர்ட்” என்றிருந்தது.

நன்றி ;தளிர் சுரேஷ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  - Page 2 Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jan 11, 2016 7:08 pm

மறுபக்கம்!
------------------
அன்று காலை மார்க்கெட் சென்ற போது அலுவலகத்தில் பணிபுரியும் மகேந்திரனை சந்திப்பேன் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை! மகேந்திரன் கறார்ப்பேர்வழி! சிக்கனவாதி! அனாவசியமாக ஒரு பைசா செலவழிக்கமாட்டார். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துவிடுவார். என்ன மகேந்திரன் சார்! ஒரு டீ சாப்பிட்டு வரலாமே! என்று அழைத்தால் கூட சாரி சார்! எனக்கு டீ காபி பழக்கமெல்லாம் இல்லை! நீங்க போயிட்டு வாங்க என்று நாசூக்காக மறுத்துவிடுவார்.
அவரை மார்க்கெட்டில் பார்த்ததும் ஆச்சர்யம்! மார்க்கெட்டிற்கு கூட மனுசன் வருவாரா? என்று தோன்றியது. இரண்டு கட்டை பைகள் வைத்திருந்தார். அது நிறைய காய்கறிகள்! இவ்வளவு காய் அவர் வாங்குகிறாரா? ஆச்சர்யம் எனக்கு?அவரும் என்னைப் பார்த்துவிட்டார். “என்ன கோபால் சார்? நீங்களும் என்னைப் போலவே காய்கறி வாங்க வந்துட்டீங்களா? என்று உரக்க அழைத்தவர் வாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே வாங்கலாம்! நமக்கு தெரிஞ்ச கடை ஒண்ணு இருக்கு! காயெல்லாம் பிரெஷ்ஷா இருக்கும்” என்று அழைத்துச் சென்றார்.
மறுக்க முடியாமல் தொடர்ந்தேன். அலுவலகத்தில் யார் அழைத்தாலும் டீ குடிக்க கூட வராதவர் இன்று நம்மை உடன் அழைக்கிறார் என்ன தான் நடக்கிறது பார்ப்போமே என்று அவருடன் நடந்தேன்.
“என்ன சார் வீடு ஒண்ணு கட்டிக்கிட்டு இருக்கிறதா சொன்னீங்களே! வேலை எப்படி போயிக்கிட்டு இருக்கு என்று அவராகவே விசாரித்தார். நல்லபடியா போய்க்கிட்டிருக்கு சார்! இன்னும் ஒரு மாசத்துல எல்லா வேலையும் பிணிஷ் ஆயிரும்! கிரகப்பிரவேசம் போயிற வேண்டியதுதான்” என்றேன்.
“ பரவாயில்லையே! ரொம்ப சீக்கிரமாத்தான் முடிச்சிருக்கீங்க! ” என்றவர் அந்த காய்கறி கடையினுள் நுழைந்தார். காய்கறிக் கடைக்காரன் வாங்க சார்! வாங்க என்று வரவேற்றான். ஒவ்வொரு காயாக பொறுக்கி எடுத்து எடை போட்டு விலை கேட்டு இதென்ன இவ்வளவு விலை? சரியில்லை! ரெண்டுரூபா கொறைச்சுப் போடு! என்று பெண்களை விட பிரமாதமாக பேரம் பேசினார் மகேந்திரன்.
”என்ன சார் இப்படி பேரம் பேசிக்கிட்டு இருக்கீங்க! சட்டுபுட்டுன்னு நாலு காய் வாங்கிட்டு பணத்தை கொடுத்திட்டு போக வேண்டியதுதானே! இந்த ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் சேமிக்கிறதுல என்ன பெரிசா கிடைச்சிறப் போவுது?” என்றேன்.
“அப்படியில்லே கோபாலு! வியாபாரம்கிறது பேரம்தான்! வியாபாரி சொல்ற விலைக்கே நாம வாங்கணுங்கிறது அவசியம் கிடையாது! எந்த பொருளுக்கும் உண்மையான விலை அவங்க சொல்ல மாட்டாங்க! இப்ப நாம கொறைச்சு வாங்கிறதுலேயே அவங்களுக்கு கட்டாயம் லாபம் இருக்கும். நாம கொறைக்காம வாங்கினா இன்னும் கூடுதல் லாபம் அவனுக்கு போவுது இல்லே! அப்படி லாபம் இல்லேன்னா நாம கேட்ட விலைக்கு தருவானா கடைக்காரன்?”
“ நாம பொருளை வாங்கி அனுபவிக்கப் போறோம்! நமக்குத்தான் அதனோட மதிப்பு தெரியும். விற்கறவன் ஆயிரம் பொய் சொல்லுவான்! நாமதான் விழிப்பா இருந்துக்கணும்! பேரம் இல்லாம நான் பொருளை வாங்க மாட்டேன்! அதே போல சூப்பர் மார்க்கெட் பக்கமும் தலை வைச்சு படுக்க மாட்டேன்.” என்றார்.
‘ ஏன் சார்?” என்றேன்.
“அங்க பகல் கொள்ளை இல்லை அடிக்கிறானுங்க! சாதாரண மளிகை கடையில ஒரு ரூபா லாபம் வச்சு வித்தா இவனுங்க அஞ்சு பத்துன்னு இல்லே லாபத்தை ஏத்தி வைச்சு நம்ம தலையிலே கட்டறானுங்க! வாடகை அது இதுன்னு எல்லாம் நம்ம தலையில வந்து விடியும். அதனால எப்பவும் சின்ன மளிகை கடையா பார்த்து வாங்கினா நமக்கு லாபம்” என்றார்.
‘நல்ல சிக்கனவாதிதான்! சார் சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க! நம்ம ஆபிஸ்லேயே நீங்கதான் சீனியர்! நல்ல சம்பளம் வாங்கறீங்க! பசங்களும் செட்டில் ஆயிட்டாங்க! இப்ப இப்படி சிக்கனம் பிடிச்சி கஞ்சத் தனம் பண்ணி என்ன சாதனை பண்ணப் போறீங்க?”
“ பார்த்தியா பணத்தை சிக்கனமா செலவு பண்ணா கஞ்சன்னு சொல்றீங்களே! ஒவ்வொரு காசும் நாம வியர்வை சிந்தி சம்பாதிக்கிறதுப்பா! இதை ஏன் வீண் பண்ணனும்? அனாவசிய செலவு எதுக்குன்னு கேட்டா கஞ்சன்னு பட்டம் கட்டறீங்க! இருந்துட்டு போவட்டும் சரி ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?” என்றார்.
“என்ன சார் ஹெல்ப் அது இதுன்னு கேட்டுக்கிட்டு தயங்காம சொல்லுங்க!”
“உங்க வண்டியிலே என்னை கொஞ்சம் டிராப் பண்ண முடியுமா? ”
‘உங்க வீட்டுலதான சார்! வாங்க விட்டுடறேன்!’
“நோ! நோ! கோபால்சார்! வீட்டுக்குன்னா நிதானமா போயிப்பேன்! இப்ப நான் சொல்ற இடம் ஒரு அனாதை இல்லம்.”
”அங்க எதுக்கு சார்? இப்ப…”


“இந்த காய்கறியெல்லாம் அந்த இல்லத்துக்குதான் கோபால்! வாரம் ஒரு முறை அந்த இல்லத்துக்கு நான் காய்கறி வாங்கி கொடுக்கிறது வழக்கம்! இப்பவே மணி பத்து ஆயிருச்சு! இன்னும் ஒரு அரை மணி நேரத்துல கொண்டுபோய் கொடுத்தா இன்னிக்கு சமையலுக்கு ஆகும். ஒரு நாற்பது பேர் வயிறார சாப்பிடுவாங்க! இன்னிக்கு கொஞ்சம் லேட் ஆயிருச்சு! இல்லேன்னா இந்நேரம் அங்க இருந்திருப்பேன்! அதான் நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமான்னு கேட்டேன்.” இப்போது நான் அவரை பார்த்த பார்வையில் மரியாதை கூடியிருந்தது.
“சார்! நீங்க உண்மையிலேயே பெரிய மனுசன் தான் சார்! உங்களைப் போய்.. கஞ்சன் அது இதுன்னு பேசிட்டேன்!”

“இருக்கட்டும் கோபால்! நான் எதையும் விளம்பரம் பண்ணிக்கிறது கிடையாது. என்னால முடிஞ்ச அளவுக்கு சிக்கனமா இருக்கேன்! அதை இல்லாதவங்களுக்கு செலவு பண்றேன்! இது உங்களுக்கெல்லாம் தெரியாது இல்லையா? உங்க பார்வையில நான் கஞ்சனாவே தெரிஞ்சதுல தப்பு இல்லை!”
“ அதில்லை சார்! ஒரு ரூபா கூட அதிகமா செலவு பண்ண யோசிக்கிற நீங்க இப்படி ஆயிரக் கணக்குல செலவு பண்ணுவீங்கன்னு நினைச்சுக்கூட பார்க்க முடியலை!”
மகேந்திரன் சிரித்தார். “ காசை வீணாத்தான் செலவழிக்க கூடாதுன்னு சொல்றேன்! அவசியமானதுக்கு செலவு செய்யலாம் இல்லையா? நான் சேமிக்கிற ஒவ்வொரு ரூபாயும் இவங்களுக்கு பயன்படுது!”
“இல்லே சார்! இந்த காலத்துல சொந்தக் காரங்களுக்கு உதவறதே பெரிய கஷ்டம்! அதுல இப்படி யாருமே இல்லாதவங்களுக்கு வாராவாரம் காய்கறி வாங்கிக் கொடுக்கிறது பெரியவிசயம் இல்லையா? உங்களைப் போய் தப்பா நினைச்சிட்டேனே!”
“இதெல்லாம் பெரிய விசயமே இல்லை கோபால்! யார் எது பேசினாலும் நான் அதை காதில வாங்கிக்கிறது இல்லை! என் மனசாட்சிக்கு என்ன தோணுதோ அப்படி நடந்துக்குவேன்! அதனால யார் என்ன பேசினாலும் எனக்கு வருத்தம் கிடையாது! உன்னை நான் தப்பா நினைக்கலே! சரி சரி டைம் ஆவுது.. என்னை அந்த ஹாஸ்டலாண்ட ட்ராப் பண்ணிடறியா?”

“வாங்க சார் நீங்க சொன்ன விடுதிக்கு போகலாம்” என்று அவரை வண்டியில் ஏற்றிக்கொண்டு கிளம்பினேன்.
முதலில் தூசியாக தெரிந்த அவர் இப்போது பெரும் சிகரமாக மாறியிருந்தார்.

நன்றி ;தளிர் சுரேஷ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  - Page 2 Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jan 11, 2016 7:10 pm

பார்வை!
------------
அந்த கல்லூரி பேருந்து நிறுத்தம் முன் கல்லூரிப் பெண்களின் கூட்டம் குவிந்துகிடந்தது. தற்கால பேஷணுக்கு ஏற்ப விதவிதமான ஆடைகளில் விதவிதமான சிகை, முக அலங்காரத்துடன் ஏகப்பட்ட கனவுகளை சுமந்த அந்த இளம்பெண்கள்களின் கண்கள் எதையோ மேய்ந்து கொண்டிருந்தன.

சற்றுத்தள்ளி எதிர் பேருந்து நிறுத்தத்தில் சில கல்லூரி மாணவர்கள் இந்த பெண்களை பார்ப்பதற்கென்றே காத்துநின்றார்கள். “ என் ஆளையே காணலையேடா!” ”பார்த்தும் பாக்காத மாதிரி இருக்கா பாரு எவ்வளோ திமிரு!” “ ஒரு தடவை கூட திரும்பி பார்க்க மாட்டேங்கிறாடா! என்று கலவைகளாய் அவர்கள் தங்கள் செல்போன்களை தடவியபடியே பேசிக்கொண்டு இருந்தனர்.

“ விட்டா அப்படியே ஆளையே கடிச்சு சாப்பிட்டுருவானுங்க!” அவனுங்க பார்வையே சரியில்லை! நம்ம பஸ் ஏறற வரைக்கும் பார்வையிலேயே கற்பழிச்சிருவானுங்க! இதொ பாருடி இவனுக்கு பெரிய சிவகார்த்திகேயன்னு நினைப்பு! ஒண்ணு பாரு எப்படி பேண்ட்டை கிழிச்சிக்கிட்டு நிக்குது! பெண்களும் அவர்களுக்கு சளைக்காமல் கமெண்ட்களை அள்ளி வீசிக்கொண்டு காதில் இயர்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

“ ஏய் லீலா! அதோ பாருடி ஒரு பெருசு உன்னையே வைச்ச கண்ணு வைக்காம பார்க்குது!”

“ உன் அழகு அந்த பெருசையும் சுண்டி இழுக்குது பார்த்தியா!”
“ விட்டா அதுங்கூட டூயட் பாட சொல்லுவீங்க போல இருக்கே!”

“இல்லைடி இத்தனை பேர் இருக்கோம்! அது உன்னையே முறைச்சு முறைச்சு பார்க்குது! அதும் பார்வையே சரியா இல்லையேடி!”

”இத்தனை பசங்க நிற்கறானுங்க! அவனுங்களுக்கு வராத தைரியம்! இந்த பெருசுக்கு எப்படி? எல்லாம் முன் அனுபவமா இருக்குமோ? “

கூட இருந்த லீனாவின் தோழிகள் கிண்டல் செய்ய , “என்னடி! ரொம்பத்தான் ஓட்டறீங்க! இப்ப பாருங்க அந்த பெரிசை நான் என்ன செய்ய போறென்னு!”
அதற்குள் அந்த பெரியவரே இவர்களை நோக்கி வந்தார்.

“என்னடி தைரியமா நம்மளை நோக்கி வருது!”

“முறைச்சு முறைச்சு பார்த்ததும் இல்லாம கிட்டவே வருதா இன்னிக்கு ஒரு கை பார்த்துடலாம்!”

அந்த பெரியவர், இவர்களிடம் வந்தார், “அம்மா!” என்று லீனாவை கூப்பிட்டார்.

“ யோவ்! உனக்கென்ன நான் அம்மாவா?”

அவர் சற்று அதிர்ந்துதான் போனார். கொஞ்சம் தயங்கி நிற்க,

“என்னய்யா? என்ன வேணும்! நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன்! அப்போதிலிருந்து!”

“பார்த்தா மாதிரி தெரியலையே மா! “

“ என்ன பெரிசு நக்கலா!”

“ நான் ஏன் நக்கல் பண்ணப் போறேன்! நீங்க பாத்திருந்தா நான் ஏன் இங்க நிக்கப் போறேன்!”

“யோவ்! வயசுல பெரியவனா இருக்கேயின்னு பார்க்கறேன்! அங்க இருந்து முறைச்சு முறைச்சு பார்த்துட்டு இப்ப கிட்டவே வந்து கிண்டல் பண்றியா?”

“ ஆமாம்மா! நான் பார்த்தேன்! அதனாலதான் கிட்ட வந்தேன்!
லீனா கோபத்தில் கையை ஓங்க….

“ இதாம்மா… இப்ப ஓங்கினீங்க பாருங்க! அங்க சட்டை தையல் பிரிஞ்சிருக்கு! அதை கவனிக்காம நீங்க பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கீங்க! எல்லோரும் ஒரு மாதிரி பேசிக்கறாங்களே தவிர உங்க கிட்ட வந்து சொல்ல மாட்டேங்கிறாங்க! எனக்கும் தயக்கம்தான்! நான் கிராமத்தான்! நம்ம ஊட்டு புள்ளை மாதிரி நினைச்சி உங்க கிட்ட சொல்ல வந்தா…!”

அப்போதுதான் சட்டைத்தையல் அக்குளில் பிரிந்திருப்பதை லீனா பார்த்தாள். தலை கவிழ்ந்தாள்.

“சாரி! சாரி !...”

பராவாயில்லைமா! சீக்கிரமா போய் உடையை மாத்திக்க! முதல்ல இதை போர்த்திக்க என்று தன் பையில் இருந்து ஒரு துண்டை எடுத்து நீட்ட

லீனாவின் கண்களில் நீர் துளிர்த்தது!

நன்றி ;தளிர் சுரேஷ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  - Page 2 Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jan 11, 2016 7:12 pm

உள்ளுக்குள்ளே ஓர் மிருகம்!
--------------
ராம்நாத் தன் இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்கையில் அந்தபெண் எதிரே வந்தாள். இருபதை கடக்காத வயது. கூந்தலைவிரித்து பின்னியிருந்தாள். காட்டன் சுடியில் கலக்கலாக இருந்தாள். ராம்நாத் கடக்கையில் புன்னகை புரிந்து தலையசைத்து ஓர் வணக்கம் சொன்னாள்.
பதில் வணக்கம் சொன்ன ராம்நாத், யோசித்தான்… யார் இந்தபெண்? எதற்கு நமக்கு வணக்கம் சொல்கிறாள்? எங்கோ பார்த்தமாதிரி இருக்கிறதே?என்று மண்டைக்குள் குடைய விடை கிடைத்தது.

பக்கத்து டவுன் டிபார்மெண்டல் ஸ்டோரில் வேலை செய்கிறாள். பில்லிங் செக்‌ஷனில். பல முறை வீட்டுச்சாமான்கள் வாங்க அங்கே செல்வதுண்டு அங்கே என்னை பார்த்திருக்க கூடும். அந்த அறிமுகத்தில் வணக்கம் செலுத்துகின்றாள் போல எண்ணினான். ராம்நாத் ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை செய்கிறான். எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும் உயரத்தில் இருந்தான். அசப்பில் சிவகார்த்திகேயனை காப்பியடித்தார் போல இருப்பான். நல்லவன் தான். ஆனால் கொஞ்சம் சபலபுத்திக் காரன்.

தெருவில் அழகாய் ஒரு பெண் சென்றால் வெட்கமே இல்லாமல் கூர்ந்து பார்ப்பான். பக்கத்தில் அவன் மனைவி இருந்தால் ஓர் வார்த்தைப் போரே நடக்கும். “ அப்படி என்ன காணததை கண்டிட்டீங்க”? என்பாள்.

“அழகை ரசிக்கிறேண்டி! உனக்கேன் பொறாமை?”

“ நான் ஏன் பொறாமை படனும்? இப்படியா ஒரு முன் பின் தெரியாத பொண்ணை வெறிச்சுப் பார்ப்பீங்க?”

“ பார்க்கிறா மாதிரி போறது அவங்க தப்பு?”

“அது அவங்க விருப்பம்? ஆனா நாகரிகமே இல்லாம இப்படி பார்த்தீங்க இனிமே நடக்கிறதே வேற?”

அது முதல் மனைவியுடன் இருக்கும் போது அடக்கிவாசிப்பான். மற்றசமயம் அவனுள் இருக்கும் அந்த மிருகம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும்.

“அட இந்த பெண்ணை கவனிக்காமல் விட்டுவிட்டோமே? நம்ம ஏரியா பொண்ணா இருந்து இத்தனை நாளா எப்படி விட்டோம்?” மனசுக்குள் நினைத்துக்கொண்டான் ராம்நாத்.

அன்று மாலைப்பொழுதில் டவுனில் இருந்து திரும்பும் போது அந்தபெண் கடையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தாள். ராம்நாத் அவளைக் கடக்கையில், ‘சார்! ஊருக்கா போறீங்க… நானும் வரட்டுமா? என்னை ட்ராப் செஞ்சிடறீங்களா? தேனாக ஒலித்தது அவள் குரல்.

வலிய வந்து சிக்கும் வாய்ப்பை வீணாக்குவானா? “ வாங்க! நீங்க நம்ம ஏரியாதானா? இதுவரைக்கும் பார்த்ததே இல்லையே? எந்த தெருவில இருக்கீங்க?”

இப்பத்தான் ஒரு வாரமா அங்கே குடிவந்திருக்கோம்! பிள்ளையார் கோயில் தெருவிலதான் வீடு..!
ஓ… அதான் இத்தனை நாள் உங்களை அந்த பக்கம் பார்த்தது இல்லையே எப்படின்னு நினைச்சேன்…
அவள் சிரித்தாள். ராம்நாத்துக்கு சில்லறைக்கொட்டுவது பொல சிலிர்த்தது.

”ஒண்ணு சொன்னா கோச்சுக்க மாட்டீங்களே! நீங்க ரொம்ப அழகா சிரிக்கறீங்க!” என்றான்.

அதற்கும் அவள் சிரித்தாள். அவளது வேலை சம்பளம்.. என்று சிலவற்றை பேசியபடியே அவள் தெருவருகே இறக்கி விட்டான்.
இவளைப் போல் ஒருவள் தன் மனைவியாக இல்லையே.. என்று கொஞ்சம் ஏங்க ஆரம்பித்துவிட்டான் ராம்நாத். அன்று முதல் அவள் பலமுறை அவனுடன் பைக்கில் வந்தாள்.

அவளுடன் பைக்கில் வருகையில் ஏகத்துக்கு மிதப்பான் அவன். அவளது வசீகர சிரிப்பும் டியோடரண்ட் வாசனையும் அவனை எங்கோ அழைத்துச்செல்லும். அவள்.. அவள் மட்டும் சம்மதித்தால்… என்று ஏதேதோ கற்பனைகளில் இருப்பான்.

டேய் நினைப்பது தப்பு! உனக்கு திருமணமாகிவிட்டது. அவள் அடுத்தவன் மனைவி.. என்று உள்ளுக்குள் மனசாட்சி உறுத்தும். குத்திக்காட்டும். ஆனால் அந்த மிருகம் அவனது மனசாட்சியையும் அடிக்கடி தின்றுவிடும்.

தீபாவளிக்கு முந்தின நாள்! மழை வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தது. எங்கும் மழைநீர் தேங்கி சாலையே தென்படவில்லை! ராம்நாத் புதிதாக வாங்கியிருந்த மாருதி எஸ்டீமில் அந்த கடையருகே நின்றான். நேரம் பத்தை கடந்து இருந்தது. கடையில் கூட்டம் அப்போதுதான் மட்டுப்பட துவங்கியிருந்தது.

கடையிலிருந்து அவள் வெளிப்பட்டு குடையை விரித்து பத்தடி தூரம் நடக்கையில் காரை மெதுவாக நகர்த்தி அவளருகே நிறுத்தினான். ஜன்னலை இறக்கி கதவை திறந்தான் வாங்க! என்றான்.

திடுமென தன் முன் கார் நிற்பதையும் குரல் அழைப்பதையும் கேட்டு திடுக்கிட்டாலும் ராம்நாத் என்றதும் அவள் கொஞ்சம் ஆசுவாசித்தாள். ராம் நாத், நம்ம கார்தான் புதுசா இப்பத் தான் வாங்கினேன். மழையிலே நனையாதீங்க ஏறுங்க என்றான்.

எப்படியும் இன்று இவள் சம்மதத்தை பெற்றுவிட வேண்டும் என்று குழைந்தான் ராம்நாத்.


நம்மை பிடிக்காமாலா நம்முடன் பைக்கில் வருகிறாள் சிரித்து பேசுகிறாள். நாம் தான் தயங்கிக் கொண்டிருக்கிறோம் இன்று எப்படியும் முயற்சித்து பார்த்துவிட வேண்டும் என்றுதான் காரை கொண்டுவந்து நிறுத்தி காத்திருந்தான்.

அவள் காரில் ஏறவும், ரொம்ப நனைஞ்சிட்டீங்க போல! குடை இருந்தாலும் சாறல்ல தாங்காது… என்றான் அவள் அங்கங்களை வெறித்தபடி!

அவள் அமர்ந்ததும் காரை நகர்த்தினான். நீங்க முன்னாடியே உட்கார்ந்திருக்கலாம்! பின்னாடி உட்கார்ந்திருக்கீங்க! நான் டிரைவர் போல ஆயிட்டேன் என்று ஏதோ ஜோக் சொல்வது போல சிரித்தான்.

அவள் சங்கடமாக நெளிந்தாள். அப்போது அவள் செல் ஒலித்தது. எடுத்தாள்.
யாரு? என்றான்.

ஹஸ்பெண்ட் அவள் சொன்னதும் அவன் முகம் கொஞ்சம் கறுத்தது.
அவள் ஸ்பீக்கரை ஆன் செய்து பேசினாள்.

என்னம்மா மழை அதிகமா இருக்கே? நான் வரட்டுமா? எங்கே இருக்கே?

நீங்க கவலைப்படாதீங்க! நான் நம்ம ராம்நாத் அண்ணாவோட வண்டியிலே வர்றேன்.

யாரும்மா அவரு?

நம்ம ஊருதாங்க ராம்நாத் அண்ணா! மேட்டுத் தெருவுல குடியிருக்கார்! என்னை ஒரு தங்கச்சி போல பார்த்துப்பார்! அவங்க ஏரியாவுலதான் நாம குடியிருக்கோம்கிறது அவருக்கு ரொம்ப சந்தோஷம்! அவர் கூடத்தான் நான் காருலே வரேன்.

என்னம்மா சொல்றே? யாரு அவரு? இப்படி முன் பின் தெரியாதவங்க கூட வந்தா எதாவது அசம்பாவிதமா?....

முதல்ல வாயைக் கழுவுங்க! அண்ணா எவ்ளோ நல்லவருன்னு அவர்கூட பழகிப்பார்த்தா தான் தெரியும்? பொண்ணுங்களை அவர் தாயாவும் தங்கச்சியாவும்தான் நினைச்சி பழகுவார். ஒரு முறை கூட தப்பானா பார்வை பார்த்தது கிடையாது. அவரும் நம்ம ஊருங்கறதாலே தானா முன் வந்து எத்தனையோ முறை அவர் பைக்கில கொண்டுவந்து விட்டிருக்கார்! ஒருதடவையாவது தப்பா நடந்தது கிடையாது. ஸ்பீட் பிரேக்கர் வர்றப்ப கூட மெதுவாத்தான் வருவாரு! அவர் கூட வர்றதே பெரிய சேப்டி! ஒரு பயமும் இல்லை! நீங்க கவலைப்படாதீங்க நான் இன்னும் அரைமணிநேரத்துக்குள்ளே வந்திருவேன்! அண்ணன் கூட தங்கச்சி வரும்போது நீங்க வீணா பயப்படாதீங்க!

ராம் நாத்தின் முகம் வெளிறிப் போனது! அட! நாம் தான் தவறாக நினைத்துவிட்டோமோ? ஒரு பெண் பொதுவெளியில் சிரித்து பேசினாலே அப்படி நினைத்துவிடலாமா? அண்ணன் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்கிறாளே! இவளைப் போய் தவறாக நினைத்துவிட்டோமே! என்று நினைத்தவாறே, போனை இப்படி கொடும்மா… ஹலோ பயப்படாதீங்க! உங்க வொய்ஃபை பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருவேன்! என்று சொன்னபோது அவனுள் இருந்த மிருகம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து காணாமல் போயிருந்தது.

அவளை அவள் வீட்டின் முன் இறக்கிவிட்டு கார் கிளம்பியதும்
என்னம்மா? இப்படி மழைக்காலத்திலே முன் பின் தெரியாதவங்களோட வர்றியே! அந்த ஆள் கெட்டவனா இருந்தா…

அந்த ஆள் கெட்டவன் தான் ஆனா முழு கெட்டவன் இல்லே…

எப்படி சொல்றே?

கொஞ்சம் வழிவான்…! இந்த ஊரிலிருந்து கடைக்கு போய்வர பஸ்வசதி கிடையாது… அந்த வழிசலை கொஞ்சம் யூஸ் பண்ணி அப்பப்போ அவன் வண்டியிலே போய் வந்துட்டிருந்தேன். இன்னிக்கு அந்த ஆளோட பார்வை கொஞ்சம் மோசமாத்தான் இருந்தது.

அப்புறம் எப்படி அவன் கூட வந்தே?

வேற வழி? இந்த மழையிலே இந்த ஊருக்கு எப்படி வர முடியும்?
அதனாலேதான் மேஸேஜ் அனுப்பி போன் பண்ண சொன்னேன். ஸ்பீக்கர்ல போட்டு பேசி அவனை ஹீரோவாக்கிட்டேன் அவனும் தன்னோட இமேஜை ஸ்பாயில் பண்ணிக்க விரும்பலை! என்னை பத்திரமா கொண்டுவந்து விட்டுட்டான்.

நீ ரொம்ப தைரியசாலிதான்! ஆனா உன் ப்ளான் தோத்திருந்தா…
தோற்கறதுக்கு சான்ஸே இல்லை! எந்த ஆணும் தன்னை ஹீரோவா அண்ணாவா நினைக்கற பொண்ணுகிட்டே வம்பு பண்ண மாட்டான். அவங்களை காப்பாத்த முயற்சிப்பானே தவிர தப்பு பண்ண மாட்டான் இது ஜெண்ட்ஸ் சைக்காலஜி என்றாள்.

இந்த பொண்ணுங்களை புரிஞ்சிக்கவே முடியலைப்பா…! என்றான் அவள் கணவன்.

நன்றி ;தளிர் சுரேஷ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  - Page 2 Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jan 11, 2016 7:13 pm

ரீசார்ஜ்- பஸ் சார்ஜ்!
-------------

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் அந்த அதிகாலை வேளையில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஐந்தாவது பிளாட்பாரத்தில் திருச்சி செல்ல பேருந்துகள் நின்றிருக்க திருச்சி.. திருச்சி.. என்று நடத்துனர்கள் கூவிக்கொண்டிருக்க மற்ற ப்ளாட்பார்ம்களில் பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி தூக்கம் தொலைத்த கண்களாய் தங்கள் ஊர் பேருந்தை பிடிக்க சுமைகளோடு நடந்துகொண்டிருந்தனர்.

அதிகாலைப்பொழுதில் டீக்கடைகள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அந்தப் பொழுதிலும் பஜ்ஜியும், கஜாடாவும், போண்டாக்களும் வடைகளும் அதிவேகமாக விற்றுத் தீர்ந்துகொண்டிருந்தது ரமேஷிற்கு ஆச்சர்யமாக இருந்தது. கடைகளை தாண்டி ஆவின் பாலகத்திற்கு வந்து ஒரு பாதம் பால் என்று ஆர்டர்கொடுத்துவிட்டு கால்சட்டைபையில் பணம் எடுக்க கைவிட்டான். ஒரு ஐநூறுரூபாய் தாளை கொடுத்து சில்லறை இல்லையா சார் என்று கேட்ட ஆவின் பாலக ஊழியரிடம் இல்லை என்று சொல்லி கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்ற அவரிடம் பரவாயில்லை! நான் இந்த பாலை குடிச்சு முடிக்கிறதுக்குள்ள கொடுத்திருங்க என்றான்.

பாலை ரசித்து குடித்து முடித்து ஊழியர் கொடுத்த சில்லறையை வாங்கி மேல்சட்டை பையில் வைக்கவும் அந்த இளைஞன் அண்ணா என்று கூப்பிட இங்க யாரு நமக்கு திடீர் தம்பி? என்று யோசித்தவாறு நிமிர்ந்தான்.

ஒடிசலான தேகத்தில் முகமெல்லாம் மழித்து உதட்டின் கீழ் குறுந்தாடி வைத்து ஒரு இளைஞன் நின்றிருந்தான். பேண்ட் இடுப்பை விட்டு இறங்கி அவனது உள்ளாடையை காட்டிக் கொண்டிருந்தது. சட்டை உடலை இறுக்க பிடித்து இருந்தது, அதை அவன் லட்சியம் செய்யாமல், “ அண்ணா! நான் ஆந்திராவுல விஜயவாடா போகணும்! சிதம்பரத்துல இருந்து பஸ்ல வரேன்! தூக்கத்துல யாரோ என் பர்ஸை அடிச்சிட்டாங்க! வேற பணம் எதுவும் இல்லை! ஒரு முன்னுறு ரூபா கொடுத்துஹெல்ப் பண்ணுங்க! உங்க அட்ரஸ் இல்லன்னா பேங்க் அக்கவுண்ட் நம்பர் கொடுத்தா அங்க போய் பணத்தை அனுப்பிடறேன் ப்ளீஸ் ஹெல்ப்! பண்ணுங்கன்னா! என்றான்.

ஸாரிப்பா! முன்னுறு ரூபா உனக்கு சின்னதா தெரியலாம்! ஆனா எனக்கு அது பெரிசு! என்னால முடியாது… வேற ஆளைப்பாரு…!

அண்ணா! என்னை நம்புங்கன்னா… ப்ளீஸ்னா! யாரும் உதவ மாட்டேங்கிறாங்க மூணு மணியில இருந்து மூணு மணி நேரமா இந்த பஸ் ஸ்டாண்ட் பூரா சுத்தி வரேன்னா… ப்ளீஸ்னா…!

இல்லேப்பா…! என்னை விடு…!


அவன் விடுவதாயில்லை… பின்னாலேயே துரத்தி வந்தான். அண்ணா அண்ணா ப்ளீஸ்னா ஹெல்ப் பண்ணுங்கன்னா! ஏமாத்த மாட்டேன்னா! ஒரு தம்பியா நினைச்சுக்கங்கன்னா…!

தம்பி! உன் வீட்டுல யாருகிட்டேயாவது போன் இருக்கா?

இருக்குன்னா… ஆனா என் பேக் முழுசும் தொலைஞ்சு போச்சு! என் போனும் அதுல போயிருச்சு!

பரவாயில்லை! உன் வீட்டுல யார் நம்பர் உனக்கு நினைவில் இருக்கு…?
அப்பா நம்பர் மனப்பாடம்னா…!

அப்படின்னா சொல்லு நான் டயல் பண்றேன் நீ பேசு… என்னோட நம்பர் தரேன் அதுக்கு அவங்களை முன்னூறு ரூபாவுக்கு ரீசார்ஜ் பண்ண சொல்லு! பணம் என் அக்கவுண்ட்ல வந்ததும் நான் உனக்கு முன்னூறு ரூபா தரேன் சரியா? போனை எடுத்தேன்.

பையன் கண்களில் மிரட்சி! அண்ணா அப்படியெல்லாம் வேண்டாம்னா! இல்லேன்னா விட்டுருங்க அவன் விலகி நடக்க ஆரம்பிக்க

தம்பி! தம்பி! நான் குரல் கொடுக்க அவன் ஓடிக் கொண்டே
நீங்க ரொம்ப இண்டலிஜெண்ட்டுன்னா! என்றான்/

நன்றி ;தளிர் சுரேஷ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  - Page 2 Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 12, 2016 2:57 pm

எனது என்றால் எதுவும் இல்லை!
-------------
ஒரு கிழவி கொடும் பாவங்களையே செய்து கொண்டிருந்தாள். அக்கிழவி இறந்தபின், யம தூதர்கள் எரியும் நரகக் குழியில் இட்டார்கள். பெரும்துன்பங்களை அனுபவித்த கிழவி ‘ஓ’ என்று அலறி அழுதாள்.
அப்போது கருணை நிறைந்த கந்தர்வன் ஆகாய மார்கமாகச் சென்றான். கிழவியின் குரலைக்கேட்டு இரக்கத்தோடு சிறிது கீழிறங்கி விசாரித்தான்.

கந்தர்வன், ‘பாட்டி! உன்னை தூக்கி கரை சேர்ப்பேன். ஆனால் நீ ஏதாவது புண்ணியம் செய்திருந்தால்தான் அது முடியும் என்றான்.

கிழவி, ‘ஐயா! ஒருமுறை நான் வாழைப்பழங்களை உண்டு கொண்டிருந்தபோது பசியோடு வந்த சிவயோகி ஒருவருக்கு என்னிடமிருந்தவற்றில் அழுகிய பழத்தைக் கொடுத்தேன். அந்த மகான், அதில் அழுகாத பாதி வாழைப்பழத்தை ‘சிவார்ப்பணம்’ என்று கூறி உண்டு விட்டுச் சென்றார். இதுதான் என் வாழ்நாளில் செய்த ஒரே தர்மம்” என்றாள்.

கந்தர்வன் சிரித்தான். அப்போது அந்த அடியார்க்குத் தந்த பாதிவாழைப்பழம் அங்கே வந்தது.
“பாட்டி! இந்த பழத்தின் ஒரு பாதியை நான் பற்றிக் கொள்வேன்! மற்றபாதியை நீ பற்றிக்கொள். இதனைக்கொண்டு உன்னை நரகிலிருந்து மீட்டு சுவர்கத்திற்கு சேர்க்கிறேன்” என்றான்.
அப்படியே கிழவி பாதி வாழைப்பழத்தின் அடிப்பகுதியைப்பற்றிக் கொண்டாள்.மற்ற பாதியை தேவதூதன் பற்றிக் கிழவியைத் தூக்கினான். நரகில் கிடந்த பாவ ஆத்மாக்கள் கிழவியின் காலைப்பற்றிக் கொண்டார்கள். மெல்ல மெல்ல தேவதூதன் கிழவியை தூக்கிக்கொண்டு போனான்.

நரகம் கடந்து சுவர்கம் நெருங்கியது. இப்போது கிழவி பெருமூச்சு விட்டாள். தன் காலை நான்கு ஐந்து பேர் பற்றிக்கொண்டிருப்பதை நோக்கினாள்.அவளுக்கு வந்ததே கோபம்! ‘அடேய்! என் வாழைப்பழத்தைப் பற்றிக்கொண்டு நான் சுவர்கம் வந்தேன். நீங்கள் யார் என் காலைப் பிடிப்பவர்கள்? என்று கூறிச் சீறினாள்.
கந்தர்வன் கிழவியின்கொடுங்குரலைக் கேட்டான். “ஏ கிழவியே மகானுக்குத் தந்துவிட்ட பழம் உன் வாழைப்பழமா?உன் வாழைப்பழத்தை நீயே பிடித்துக் கொள்! என்று கூறி விட்டுவிட்டான். கிழவி பழையபடி நரகத்திடையே வீழ்ந்தாள்.

“எனது என்று எண்ணுபவர்களுக்கு புண்ணிய உலகிலே இடம் கிடையாது.”

அன்னை சாரதா தேவியின் கதையமுதிலிருந்து.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  - Page 2 Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 12, 2016 2:58 pm

அமைச்சரா? ஆண்டவனா? நீங்களே சொல்லுங்கள்!
---------------
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாமன்னர் ஔரங்கசீப் சக்ரவர்த்தி அவர்கள் தர்காவில் முன் வரிசையில் நின்று தொழுவது வழக்கம் அந்த வெள்ளிக்கிழமை அன்று மாமன்னர் வர சில நிமிடங்கள் தாமதம் ஆகிவிட்டது.

மன்னர் வந்துவிடட்டும் என்று சில நிமிடங்கள் தொழுகையை முஅஜ்ஜினும், இமாமும் தாமதம் செய்தனர். அவசரமாக வந்து தொழுகையில் கலந்துகொண்டார் சக்ரவர்த்தி ஔரங்க சீப்.

தொழுகை முடிந்ததும் அந்த முஅஜ்ஜினையும், இமாமையும் வேலை நீக்கம் செய்தார் ஔரங்கசீப். அதற்கு அவர் சொன்ன காரணம் அனைவரையும் வியக்க வைத்தது.
ஒரு சிறு நிலப்பரப்பை சொற்பகாலம் ஆளப்போகும் அரசனுக்குப் பயந்து அண்ட சராசர நிலங்களையும் நிரந்தரமாக ஆளும் அந்த பேரரசனான கடவுளை வணங்க தாமதம் செய்தார்கள். இது குற்றம் அல்லவா? என்று கர்ஜித்தார் ஔரங்கசீப்.


இன்று!


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடி வெற்றியாண்டவர் கோயிலில் அமைச்சர் வருவதற்கு முன்பாகவே நடத்தியதற்காக சிவாச்சாரியார் கண்ணப்பன் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயிலை திருப்பணி செய்ய 25 லட்சம் ரூபாய் கிடைக்க அமைச்சர் விஜயபாஸ்கர் பரிந்துரை செய்தாராம். திங்கள்கிழமை குடமுழுக்கின் போது அமைச்சர் வர காலதாமதம் ஆகிய நிலையில் திருப்பணிக்குழுவில் இருந்த திமுக பிரமுகர் மற்றும் குழுவினர் குடமுழுக்கு நடத்தும்படி கூறியுள்ளனர். முதலில் தயங்கியபோதும் வானில் கருடன் வட்டமிடவும், நல்ல நேரம் கடக்கவும் செய்ததால் சிவாச்சாரியார் குடமுழுக்கு செய்து விட்டார். அதன்பின் அமைச்சர் வந்தார். அவரிடம் அதிமுகவினர் புகார் செய்ததும் சிவாச்சாரியாரை அறநிலையத்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது.

அமைச்சர் பெரியவரா? ஆண்டவர் பெரியவரா? நீங்களே சொல்லுங்கள்!

நன்றி ;தளிர் சுரேஷ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  - Page 2 Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 12, 2016 3:00 pm

பிச்சைக்காரனுக்கு வைத்துவை!
------------------
இரவு நேரம். வேலைகளை முடித்துக்கொண்டு களைப்பாக திரும்பிய தன்னுடைய மகன்களுக்கு சாதம் பறிமாறிக்கொண்டிருந்தாள் அம்மா. அன்று அவள் செய்த உணவு புளியோதரை! மிகவும் ருசியாக இருந்தது. வேர்க்கடலைகளை வேறு தூவி வைத்து இருந்ததால் சுவைக்கு பஞ்சம் இல்லை!. உணவின் சுவையில் மயங்கிய மகன்கள் அம்மா! புளியோதரை கெட்டுப்போகாது அல்லவா? நாளைக்கும் வைத்துவை! நான் சாப்பிடுகிறேன்! என்றான்.
அதைக்கேட்ட தாய் சிரித்தாள்.
நான் என்னம்மா தவறாக சொல்லிவிட்டேன்! ஏன் சிரிக்கிறாய் அம்மா! என்றான் மகன். மகனே நீ சொன்னது போல சொல்லக்கூடாது. பிச்சைக்காரனுக்கு வைத்து வை என்றுதான் சொல்ல வேண்டும். என்றாள் அம்மா.
பிச்சைக்காரனுக்கு வைத்துவிட்டால் அப்புறம் நான் எப்படி சாப்பிடுவதாம்? எனக்கு மிஞ்சியதுதான் பிச்சைக்காரனுக்கு! இதைத்தானே பெரியவர்களும் தனக்கு மிஞ்சியது தானம் என்று சொல்கிறார்கள். இப்போது தாய் மேலும் சிரித்தாள்.
என்னம்மா! எதற்கெடுத்தாலும் சிரித்துக் கொள்கிறாய்? என்று சலித்துக் கொண்டான் மகன்.
மகனே! உன் புளியோதரை ஆசையை நினைத்து முதலில் சிரித்தேன்! இப்போது நீ பழமொழியை தவறாக புரிந்துகொண்டதை நினைத்து சிரித்தேன்! என்றாள் தாய்.
பழமொழி தவறா அம்மா?
பழமொழி தவறில்லை! நீ புரிந்துகொண்டதுதான் தவறு. தனக்கு மிஞ்சியது தானம் என்றால் நாம் சாப்பிட்டு மிச்சம் இருப்பது இல்லை! தன்னிடம் தேவைக்கு அதிகமாக உள்ளவற்றை தானம் செய்ய வேண்டும் என்பது பொருள். மிஞ்சியது என்பதை மிகுதியானது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது தன்னுடைய தேவைக்கு அதிகமானது என்று பொருள். என்றாள்.
சரி அம்மா! புரிந்தது. ஆனால் பிச்சைக்காரனுக்கு ஏன் எடுத்து வைக்க வேண்டும்?


அது ஒரு கதை!
சொல்லேன் அம்மா!
ஒரு ஊரில் ஒருவன் இருந்தான் அவனுக்கு மோர்க்குழம்பு என்றால் கொள்ளை ஆசை தினமும் மோர்க்குழம்பு வைக்கச்சொல்லி சாப்பிடுவான். ஒவ்வொரு நாள் அவன் சாப்பிடும்போதும் நாளைக்கும் இதே போல மோர்க்குழம்பு செய்து வை என்பான். இப்படியே பல நாட்கள் சென்றன.

இப்படி ஒருநாள் அவன் மனைவியிடம் சொன்னபோது எங்கிருந்தோ கலகலவென சிரிப்பொலி கேட்டது. அவன் சுற்றும் முற்றும் தேடிப்பார்த்தான். யாரும் தென்படவில்லை. எங்கிருந்து சிரிப்பொலி வருகிறது என்று தெரியாமல் திகைத்தனர். ஆனால் ஆள் அகப்படவே இல்லை! அன்றிரவே அவன் பாம்பு கடித்து இறந்து போனான். எல்லோரும் பாம்பை பிடித்து அடிக்க போனார்கள். அப்போது அந்த பாம்பு மனிதனாக மாறியது. நான் எமதூதன்! இவன் உயிரை கொண்டு செல்ல வந்தேன்!. ஆனால் இவனோ நாளைக்கு நான் சாப்பிட மோர்க்குழம்பு செய்து வை! என்றான். இன்றிரவே இறக்கப்போகும் இவன் நாளைக்கு சாப்பிடுவதைப் பற்றி பேசுகிறானே என்று நினைத்து சிரித்தேன்! என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டான்.

இதைக்கேட்டு அனைவரும் வியந்து நின்றார்கள். நாளை என்பது நிச்சயம் அல்ல! தூங்குகிறோம் எழுந்திருப்போம் என்பது உறுதியல்ல! எமன் நாளை வரை நமக்கு உயிர்தந்தால் நாம் சாப்பிடலாம்! அந்த பொருளில் தான் பிச்சைக்காரனுக்கு எடுத்து வை என்கிறார்கள் என்றாள்.
நல்ல கதைதான் அம்மா! ஆனால் புளியோதரையின் சுவை என்னை கட்டிப்போட்டுவிட்டது! பிச்சைக்காரனுக்கு எடுத்துவையுங்கள்! அவன் பிச்சை போட்டால் நான் சாப்பிடுகிறேன் என்றான் மகன்.

நன்றி ;தளிர் சுரேஷ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  - Page 2 Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 12, 2016 3:01 pm

விலையில்லா சோறு போட்டால் பெரிய ஆளா?
-------------
பாண்டவர்களில் மூத்தவரான தருமருக்கு தான் செய்யும் தர்மங்கள் மீது ஏக கர்வம். தான் நிறைய பேருக்கு தானம் செய்வதாகவும் ஏழை பங்காளனாகவும் நினைத்துக் கொண்டார். அதனால்தான் நாட்டில் சுபிட்சம் நிலவுவதாகவும் சிறந்த ஆட்சி தாம் நடத்துவதாகவும் எண்ணிக் கொண்டார்.
தர்மரின் மனப்போக்கு கிருஷ்ணருக்கு தெரியவந்தது. தாமே தர்மவான் என்று எண்ணும் அவரின் ஆணவத்தை அழிக்க முடிவு செய்தார். ஒருநாள் தர்மரை அழைத்துக் கொண்டு மகாபலி சக்ரவர்த்தியின் பாதாள லோகத்திற்கு சென்றார்.
தர்மா! இந்த லோகத்தை ஆளும் மகாபலி சக்ரவர்த்தி விஷ்ணுவால் ஆட்கொள்ளப்பட்டவர். அவரை சந்திப்போம் என்று வீதி வழியாக அழைத்துச் சென்றார். அந்த நகரின் வளமை தர்மருக்கு மிகவும் வியப்பாக இருந்தது. வீதியில் ஒரு ஏழைகள் கூடத் தென்படவில்லை!
தாகம் ஏற்படவே ஒரு வீட்டில் தண்ணீர் கேட்டனர். அந்த வீட்டுப் பெண்மணி ஒரு தங்க சொம்பில் நீர் கொண்டுவந்து கொடுத்தார். அருந்தி முடித்ததும் சொம்பை திருப்பிக் கொடுக்க முனைந்தார் தருமர்.
அந்த பெண்மணி பணிவுடன், மன்னிக்க வேண்டும் ஐயா! எங்கள் நாட்டில் தானம் கொடுத்ததை திரும்பி வாங்கும் பழக்கும் கிடையாது! என்றார். தர்மர் வியப்படைந்தார். சக்ரவர்த்தியின் அரண்மனையில் அறுசுவை உணவு படைக்கப்பட்டது. தங்கத்தட்டில் உணவுகள் வழங்கப்பட்டன. தருமர் உண்டு முடித்ததும் ஏவலர்கள் தட்டைக் கழுவி தருமரிடமே தந்தனர். தர்மர் வியப்படைந்து ஏவலர்களை வினவியபோது. எங்கள் நாட்டில் ஒருவருக்கு கொடுத்ததை திரும்பப் பெறும் பழக்கம் கிடையாது என்றனர்.
பின்னர் மகாபலியை சந்தித்தனர். தர்மர் தன் நாட்டில் தான் செய்யும் தர்மங்களை பட்டியல் இட்டார். தினமும் 500 பேருக்கு அன்னதானம் கொடுப்பது என் வழக்கம் என்று பெருமையாக சொன்னார்.
அதைக் கேட்ட மகாபலி! அப்படியா! உங்கள் நாட்டில் அவ்வளவு ஏழைகள் இருக்கிறார்களா? இங்கே இருப்பதை சாப்பிட ஆள் தேடினாலும் கிடைக்க மாட்டேன் என்கிறார்கள்! என்றார் மகாபலி!
தர்மருக்கு முகத்தில் ஈயாட வில்லை! கிருஷ்ணர் அர்த்தமாய் புன்னகைத்தார்.
பிரபோ! என் கர்வம் அழிந்தது! நானே தர்மவான்! என்று ஒருபோதும் எண்ண மாட்டேன் என்று மனம் திருந்தி கூறினார் தர்மர்!

படிச்சதில் பிடிச்ச ஒரு கதை!என் பாணியில் சிறிது மாற்றி உங்களுக்கு பகிர்ந்தேன்! நன்றி!

நன்றி ;தளிர் சுரேஷ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  - Page 2 Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 12, 2016 3:02 pm

ஓசிச்சோறு! பேஸ்புக்கில் பிடித்தவை!
------------

பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!

மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!

மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், "அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!" என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.

முதியவர் சிரித்தபடி, "போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பழம் பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.


நீதி :- வியாபாரி வியாபாரிதான்..!

நன்றி: சூர்யா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  - Page 2 Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 12, 2016 3:34 pm

செல்வி இனி திரும்பமாட்டாள்!
ரெ.கார்த்திகேசு
-----------------
அந்த அகன்ற மரத்து நிழலில் உட்கார்ந்தவாறு மாலை வெயில் மறைகின்ற அழகிய காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த செல்விக்குக் கண்களில் நீர் இலேசாகத் துளிர்த்தது. எல்லாவற்றையும் விட்டுச் செல்ல வேண்டும் என்ற ஏக்கம்; தன் குடும்பம் தன்னைக் கைவிட்ட கொடுமை; எங்கே போகப் போகிறோம் என்பது தெரியாத எதிர்கால இருள். பயம்; சோகம்!

கொஞ்ச தூரத்தில்தான் அவளுடைய இடைநிலைப் பள்ளி இருந்தது. அங்கே இன்றைக்கு அவள் வகுப்புக்கு தமிழாசிரியர் ட்யூஷன் வகுப்பு நடத்துகிறார். அந்த சாக்கில்தான் செல்வி வீட்டிலிருந்து இங்கு வந்திருந்தாள். அவளுடைய முக்கிய தோழிகளெல்லாம் அங்கிருக்கிறார்கள். அவர்கள் யாருக்கும் செல்வி ஏன் ட்யூஷனுக்கு வரவில்லை என்பது தெரியாது. அது அவர்களுக்குச் சொல்லக் கூடிய விஷயமல்ல.

அவள் மட்டுமல்ல. சேதுவும் இன்றைக்கு அந்த ட்யூஷனுக்குப் போயிருக்க மாட்டான். அவன் அவள் காரியமாகத்தான் வெளியே போயிருக்கிறான். வந்துவிடுவான்; வருவான் என்று எதிர்பார்த்துத்தான் அவள் அவனுக்காக அந்த மரத்தடியில் தனியாகக் காத்துக்கொண்டிருக்கிறாள்.

இந்த மரம் பள்ளிக்கூடத்தின் வேலிக்கு வெளியே இருக்கிறது. பிரதான சாலையிலிருந்து ஒதுக்குப்புறமாக. பள்ளிக்கூட நேரத்தில் மாணவர்கள் இங்கு வர தலைமை ஆசிரியை தடை விதித்திருந்தார். ஆனால் பள்ளிக்கூட நேரத்துக்கு முன்னும் பின்னும் சில பேர் இங்கு கூடுவார்கள்.

அந்த மரம் மாணவர்களின் கெக்கலிப்புக்களுக்குச் சாட்சி. பொருளற்ற வெற்று உரையாடல்கள், அவர்கள் புதிதாகக் கற்றுக் கொண்ட கொச்சைப் பேச்சுக்கள், வதந்திப் பரிமாறல்கள், பொறாமைகள், பொய்கள் அனைத்தையும் அது செவிமடுக்கும். பிறருக்குச் சொல்லாது.

செல்வியும் சேதுவும் பேசிப் பழகிக் கொண்டது இங்குதான். அவனோடு உட்கார்ந்து பலமுறை அழுததும் இங்குதான். அவர்கள் இருவருக்கும் ஒரு தனி மூலை அந்த மரத்தடியில் உண்டு.

செல்விக்கு மனதில் இலேசாகப் பயம் படரத் தொடங்கிற்று. ஏன் சேது இன்னும் வரவில்லை? போன இடத்தில் ஏதாவது பிரச்சினையா? கைத்தொலைபேசியில் கூப்பிட்டுப் பேசியிருக்கலாம். அதுவும் காணோம். அவளுடைய அழைப்புக்களுக்கும் பதில் இல்லை.

தன்னுடைய வாழ்வுப் பிரச்சினைகளுக்குள் சேதுவை இழுப்பது அவளுக்கும் அவ்வளவு மகிழ்ச்சியில்லைதான். அவன் நல்ல குடும்பத்துப் பிள்ளை. அன்பான பெற்றோர்கள். அவன் கல்வியில் மிகவும்அக்கறையுள்ளவர்கள். அவர்கள் ஆதரவில்தான்அவன் ஐந்தாம் படிவத்தில் முதல் நிலைப்பையனாக இருந்தான்.

ஆனால் செல்வியின் கதையே வேறு. பிரச்சினைகள் நிறைந்த குடும்பம். அவள் அப்பா குடும்பத்தைக் கைவிட்டு ஓடிய ஒரு தறுதலைக் குடும்பத் தலைவன். அவனுக்குத் தெரிந்த ஒரே தொழில் திறன் படுக்கின்ற மனைவிக்குக் குழந்தைக்கான விந்தை அருளுவதுதான். அதன் பின் குடி. ஒரு கண்மூடிக் காதலினால் அவளை வீட்டை விட்டு ஓட்டிக்கொண்டு வந்து விட்டு, ஒரு பிள்ளை பிறந்ததும் அவள் சலித்து, இரவு முழுக்கக் குடிக்கும் தன் நண்பர்களுடன் அவன் வாழ்க்கை ஐக்கியமாகிவிட்டது.

மூன்று குழந்தைகளை அம்மா பெற்றெடுத்து ஏனோதானோவென்று வளர்த்தாள். செல்வி மூன்றாவது. அவளுக்கு மூத்தவர்கள் இருவரும் ஆண்கள்.

ஓரிரவில் குடிகாரக் கணவன் நடுநிசிக்குப் பிறகு வீட்டுக்கு வந்து அவளை சத்தமாகக் கூப்பிட்டுப் புணர்ச்சிக்கு வலியுறுத்தியபோது விளக்குமாற்றை எடுத்து விளாசித் துரத்தினாள். அந்த இரவில் ஓடியவன் பின்னர் திரும்பவே இல்லை. அம்மா ‘தனித்து வாழும் தாய்’ என்னும் வகுப்பில் சேர்ந்தாள்.

செல்வி வளர்ந்து விவரம் தெரிகின்ற பருவத்தில் அம்மாவின் வறுமையும் வெறுமையும் கொஞ்சம் விளங்கியது. ஆனால் அவளுக்குத் துணையாக இருக்க வேண்டிய அண்ணன்மார் இருவருக்கும் அது விளங்கியதாகத் தெரியவில்லை. தங்கள் தறுதலை தகப்பன் போலவே இளவயதிலேயே அவர்களுக்கு ஏராளமான நண்பர்கள் சேர்ந்து விட்டார்கள். படிப்பை விடவும் குடும்பத்தை விடவும் வேலையை விடவும் அந்த நண்பர்களே அவர்கள் வாழ்வில் முதன்மை பெற்றார்கள்.

அவர்களோடு சேர்ந்து கூத்தடிக்க அவர்களுக்குப் பணம் தேவைப்பட்டது. அம்மாவை நச்சரித்துப் பணம் பெற முடியாதபோது, என்னென்னவோ இருண்ட சந்துக்களில் சட்டத்துக்குப் புறம்பான வேலை செய்யத் தொடங்கினார்கள். திருட்டு சிடியில் ஆரம்பித்து “பிட்டுக்கள்” விற்கும் அளவுக்குப் போனபோது சில நாட்கள் போலீஸ் லாக்கப்பிலும் இருந்துவிட்டு வந்தார்கள். ஒருத்தனை அம்மா அடித்துத் துரத்தினாள். இன்னொருவன் தானாகவே தலைமறைவாகிவிட்டான்.

கணவனை இழந்து இரண்டு ஆண்மகன்களையும் இழந்து ஒண்டியாக நின்ற அம்மாவுக்கு குவிமையம் முழுவதும் செல்வியே ஆனாள். அவளை ஒழுக்கத்தின் சிகரமாக வளர்க்க வேண்டும்என அம்மா காட்டிய அக்கறையும் அவசரமும் அதீதமாக இருந்தன. ‘அப்படி நிற்காதே’, ‘அங்கே உட்காராதே’, ‘அவனோடு பேசாதே’, ‘பள்ளிக்கூடம் விட்டு வர ஏன் இவ்வளவு நேரம்?’ இப்படியாகச் செல்வியைத் தன் சிறகிலிருந்த அகலவிடாத அதிகார வெறி மிக்க தாய்ப் பறவையாக அவள் ஆகியிருந்தாள்.

அவளுடைய அந்த ராட்சச அரவணைப்பில் அவள் மூச்சுத் திணறியிருந்தபோது அம்மாவின் வாழ்க்கையில் சேகரன் என்ற ஒருவன் வந்தது செல்விக்கு ஒரு ஆறுதலாக இருந்தது.

அவன் அம்மாவிடம் நட்பாக இருந்தான். அடிக்கடி வீட்டுக்கு வந்தான். வரும்போது பீசாங் கோரெங், மீகோரேங், கோழிக்கறி இப்படி ஏதாவது வாங்கி வந்து அவர்களோடு உட்கார்ந்து சாப்பிட்டான்.

இரவுகளில் தங்க ஆரம்பித்தான். அவர்கள் சிறிய வீட்டின் ஹாலில் படுத்துக் கொண்டான். அவன் அங்கு தங்கியதன் பொருள் வயதுக்கு வந்திருந்த செல்விக்குத் தெரியாமல் இல்லை. ஆகவே அவன் இரவில் எழுந்த போதும் அம்மாவின் அறைக்குள் நுழைந்த போதும் தூங்குவது போல நடித்து அந்த குழப்ப மிக்க இரவுகளை அவள் ஒருவாறு கழித்தாள்.

அம்மா முகத்தில் புன்னகையைத் திரும்பப் பார்த்தபோது செல்விக்கு மகிழ்ச்சியாகக் கூட இருந்தது. அதோடு தன்னை ஒரு ராட்சசப் பாதுகாப்புக் கொடி போலப் படர்ந்திருந்தவள் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்து, அவள் பள்ளிக்கூடம் விட்டுத் தாமதமாக வந்தபோதும் அவ்வளவாகக் கண்டு கொள்ளாமல் இருந்தது செல்விக்கு ஆறுதலாகவும் இருந்தது.

அதுவே சேதுவும் அவளும் நெருங்கிப் பேசிக்கொள்ள ஏதுவும் ஆயிற்று.

சேது மிக இணக்கமான இதமான நண்பன். அவன் தன் மேல் கொண்டிருக்கும் நேசம் காதலா என அவள் பலமுறை யோசித்திருக்கிறாள். ஆனால் அவன் எந்த நாளும் கண்ணே, பொன்னே என்று கொஞ்சியது இல்லை. தன்னைத் தொடவும் முயற்சி பண்ணியது இல்லை. அவளை ஒரு சினேகிதி என்பதைத் தவிர வேறு எதுவுமாக என்ணியதாக சிறு குறிப்பும் காட்டியதில்லை.

அவர்கள் சினிமா பற்றிப் பேசுவார்கள்; தொலைக்காட்சி பற்றிப் பேசுவார்கள்; அரசியலும் கூட அவ்வப்போது. குடும்பம் பற்றி நிறையவே பேசுவார்கள். அப்படிக் குடும்பம் பற்றி அவள் பேச அவன் அனுதாப மிக்க காதோடு கேட்கப்போய்தான் அவர்கள் இருவருக்கிடையே அந்தக் கனிவும் இதமும் நேசமும் உண்டாயிற்று.

ஆனால் அதெல்லாம் ஒரு முடிவுக்கு வரும் நாள்தான் இன்று. சேதுவைவிட்டுப் போகிறோமே என்ற வருத்தத்தைத் தவிர இங்கிருந்து கண்காணாத இடத்துக்குப் போய்விடுவதில் அவளுக்கு வேறு வருத்தங்கள் இல்லை. உண்மையில் இதுதான் அவள் தேடும் விடுதலை; புது வாழ்வு.

ஆனால் அந்தப் புது வாழ்வின் திறவுகோல் இப்போது சேதுவின் கையில் இருந்தது. அவன் அதைக் கொண்டு வந்ததும் இங்கிருந்து கிளம்ப வேண்டியதுதான்.

சேது தூரத்தில் மோட்டார் சைக்கிளில் வருவது தெரிந்தது. அவள் கையசைத்துத் தான் அங்கிருப்பதைக் காட்டினாள். அவன் அருகில் வந்து மோட்டாரை நிறுத்தினான்.

“என்ன சேது இவ்வளவு நேரமாச்சு? நான் தவிச்சுப் போயிட்டேன் தெரியுமா?” என்றாள்.

அவன் பேசாமல் அவளைப் பார்த்தவாறு இருந்தான்.

“சரி, வனிதாவோட போன் நம்பர் கிடைச்சதா?” என்று கேட்டாள்.

“அவன் குடுக்க மாட்டேன்னு ரொம்ப வம்பு பண்ணினான் செல்வி. அவங்கிட்டப் பேசி வாங்கிட்டு வர்ரதுக்குத்தான் இவ்வளவு நேரமாயிடிச்சி!”

“ஏன் குடுக்க மாட்டேன்னான்?”

“ஒன்னோட ஃப்ரண்ட் வனிதா இந்த நம்பர யாருக்கும் குடுக்கக் கூடாதுன்னு கண்டிப்பா சொல்லியிருக்கா!”

“எனக்குக் கூடவா? நான் வனிதாவோட பெஸ்ட் ஃப்ரெண்டுன்னு சொன்னியா?”

“சொன்னேன். குறிப்பா தன்னோட ஃபிரண்டுகளுக்குத்தான் குடுக்க வேணாம்னு சொல்லியிருக்கா!”

செல்விக்குக் கொஞ்சம் குழப்பமாக இருந்தது. வனிதா இங்கு இதே பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த போது எத்தனை நெருக்கமாக இருந்தார்கள்? நகமும் சதையும் போல என்று அவள் தோழிகளெல்லாம் பொறாமைப்படும் வண்ணம்?

தன்னுடைய குடும்பத்தின் அடக்குமுறை தாங்க மாட்டாமல் அவள் குவாலா லம்பூருக்கு ஓடிப்போன சில மாதங்கள் விடாமல் அழைத்துப் பேசுவாள். தான் ஒரு முகம் அழகுபடுத்தும் கடை வைத்திருப்பதாகவும் அதில் நல்ல வருமானம் என்றும் சொன்னாள். அப்புறம் அழைப்புக்கள் குறைந்தன. அப்புறம் ஒரு நாள் எண் பயனீட்டில் இல்லை என மொட்டையான பதில் வந்தது.

செல்வியின் வாழ்வில் புதிதாகப் புகுந்த முறைசாரா சிற்றப்பன் தாயை மயக்கிப் போட்டுவிட்ட நிலையில், தன் தோளிலும் மெதுவாகக் கைபோட ஆரம்பித்து விட்டான். அம்மாவிடம் அதனை ஜாடை மாடையாகச் சொல்லப் போய் “சும்மா கிட! ஒரு தகப்பன் மகள் தோள்ள கை போட்டா குத்தமா?” என்று அம்மா பதில் சொல்லிய போதே தன் வாழ்வு குலையத் தொடங்கிவிட்டதைச் செல்வி அறிந்து கொண்டாள்.

தோளில் கைபோடும் சிற்றப்பன் அம்மா வீட்டில் இல்லாத வேளைகளில் ரொம்ப நெருங்கி அவளை உரசவும் ஆரம்பித்தான். அப்போதுதான் அதிலிருந்துதப்பிக்க வனிதா காட்டிய வழி செல்விக்கு நினைவுக்கு வந்தது. ஆதனால்தான் அவள் நம்பர் முக்கியம்.

“சரி, பரவால்ல, குடு சேது. நான் அவகிட்ட பேசிட்டு போய் கே.எல்.போர பஸ்ஸப் பிடிக்கணும். போய்ச் சேர நடுராத்திரியாயிடும்.”

அவன் மேல் போக்கெட்டில் இருந்து அந்தத் துண்டுத் தாளை எடுத்து அதில் இருந்த நம்பரைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஏன் தன்னிடம் கொடுக்கத் தயங்குகிறான் என்று புரியாமல் செல்வி தவித்தாள்.

“சீக்கிரம் குடு சேது. நான் அவ கிட்ட பேசிறேன். அவ ஒருத்திதான் இப்ப எனக்கு ஆதரவு. அவளும் என்னைக் கைவிட்டா எங்க போவேனோ தெரியாது!”

சேது தலை உயர்த்தி அவளைப் பார்த்தான். மெதுவாகச் சொன்னான். “இந்த நம்பர் உனக்கு வேணாம் செல்வி” என்றான்.

திகைத்தாள். “என்ன சொல்ற சேது? இந்த நம்பர வச்சிதான் என்னோட கே.எல். பயணமே இருக்கு. இன்னைக்கி ராத்திரி இவளோடதான் நான் தங்க வேண்டி இருக்கு.”

“செல்வி! வீட்ட விட்டு ஓடுறது நல்லதில்ல! நீ போக வேணாம் செல்வி!”

அவள் அவனை முறைத்தாள். “என்ன சேது, ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி பேசிற? என்னோட குடும்பத்தோட கேவலமான கதய எத்தனை தடவ சொல்லி அழுதிருப்பேன் ஒங்கிட்ட? இப்ப நான் வீட்ட விட்டு வெளியேறாம இருந்தா எங்க அம்மாவோட ரெண்டாவது புருஷன் என்னைக்கு என்ன ரூமுக்குள்ள தள்ளி….” சொல்லத் திணறினாள். கண்ணீர் வந்தது.

“எனக்குத் தெரியும் செல்வி. ஆனா நான் சொல்ல வந்தது வேற விஷயம்.”

“என்ன வேற விஷயம்?”

“இப்ப நீ நம்பிப் போறியே ஒன் சினேகிதி வனிதா, அவளப் பத்தினது.”

“ஏன் அவளப் பத்தி என்ன? அவளும் என்னப் போல கையாலாகாத குடும்பத்த விட்டு ஓடினவதான். இப்ப குவால லும்பூர்ல ஒரு பியூட்டி சலூன் வச்சிப் பிழைச்சிக்கிட்டிருக்கா. எப்படியும் என்னக் காப்பாத்துவா!”

அவன் முகம் உயர்த்தி அவளைப் பார்த்தான். “இல்ல செல்வி. அவ பியுட்டி சலூன் வச்சிருக்கேன்னு உங்கிட்ட சொன்னதெல்லாம் பொய்.”

திகைத்துப் பார்த்தாள். “அப்புறம்?”

“நீ போக வேணாம் செல்வி. அவகிட்ட போனா நீதான் கெட்டுப் போவ!”

“ஏன், ஏன் கெட்டுப் போகணும்?”

“ஏன்னா, அவ… அவ… ஒரு ப்ரோஸ்டிடூயூட் – விலைமாதா வாழ்க்கை நடத்திறா!”

அதிர்ந்து நின்றாள். “என்ன சொல்ற சேது? அபாண்டமா சொல்லாத!”

“இந்த ஃபோன் நம்பர் நம்ம கேசவனுக்குக் கிடெச்சதே அப்படித்தான். அவன் கே.எல்.போயிருக்கும் போது அவன் நண்பர்கள் அழச்சிக்கிட்டுப் போயிருக்காங்க. நேர்ல பாத்தவொடன நம் வனிதான்னு தெரிஞ்சி போச்சி. யாருக்கிட்டயும் சொல்ல வேணாம்னு கெஞ்சியிருக்கா!”

செல்வி மரத்தடியில் உட்கார்ந்தாள். எங்கேயோ வெறித்துப் பார்த்தாள். கண்களில் நீர் வழிந்தது. புறங்கையால் துடைத்தாள். அவளாக ஏதாவது பேசட்டுமென்று அவன் காத்திருந்தான். பேசினாள்.

“ரொம்ப நல்லா இருக்கு சேது. எண்ணெய்ச் சட்டியிலிருந்து தப்பிக்கலான்னு நெனைச்சேன். ஆனா விழப்போற இடம் கொள்ளிக் கட்டைன்னு நீ சொல்ற. இப்ப நான் என்னதான் செய்றது?”

“வீட்டுக்குப் போ செல்வி. எப்படியாவது சமாளிச்சிக்க!” என்றான்.

“முடியாது. முடியவே முடியாது. நரகத்தில இருந்து விடுதலை கிடைச்சதுன்னு நிம்மதியா வந்தேன். இனி அந்த நரகத்துக்கு நான் திரும்ப மாட்டேன். நான் போகத்தான் வேணும். வனிதாவோட போய் இருந்து என் விதி எப்படி இருக்கோ அப்படியே வாழ்ந்திட்டுப் போறேன்!” என்றாள். விம்மினாள்.

“எல்லாம் தெரிஞ்சுமா….?”

“ஆமா எல்லாம் தெரிஞ்சுதான். நான் போய் வனிதாவத் திருத்திறேன். நான் சொன்னா கேப்பா. என் பெஸ்ட் ப்ரண்ட்! நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஏதாவது தொழில் செய்து பிழைச்சுக்குவோம்.”

“அது முடியாது செல்வி. அவ இந்த வாழ்க்கையில ஊறிப் போயிருக்கா! இனி திருந்துவாளா? உன்னத்தான் மாத்துவா?”

அவனைப் பார்த்து சீறினாள். “போ சேது. இங்கிருந்து போ! என் மனச மாத்தப் பாக்காத. நான் போறேன்!” என்று எழுந்தாள்.

“இரு செல்வி!” என்றான். என்ன என்பது போல் நின்று பார்த்தாள்.

“நான் ஒரு திட்டத்தோடதான் வந்தேன்!”

“என்ன திட்டம்?”

அவளை நிமிர்ந்து பார்த்தான். “நானும் உன்னோட வர்ரேன்!”

புரியாமல் பார்த்தாள். “எதுக்கு? பஸ் ஸ்டேஷன்ல வழியனுப்பவா?”

“இல்ல கே.எல்.லுக்கு.”

“வந்து?”

அவளைக் கெஞ்சுவது போலப் பார்த்தான். “உன்னோட வர்ரேன் செல்வி. வீட்ட விட்டு வந்திர்ரேன். எதிர்காலம் என்னவா இருந்தாலும் நாம் அதப் பகிர்ந்துக்குவோம்! புதுவாழ்க்கை ஆரம்பிப்போம்!”

“அப்புறம் படிப்பு?”

“அதெல்லாம் பின்னால பாத்துக்குவோம்!”

நடந்து அவன் அருகில் வந்தாள். அவன் முகவாயை ஒரு கையால் பற்றினாள். மறு கையால் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். அவன் திகைத்து வலியில் தன் கையால் கன்னத்தைத் தடவினான். பரிதாபமாக விழித்தான்.

“மடையா! அடிமுட்டாள்! முண்டம்! இப்படியா உன் புத்தி போகணும்? உனக்கு என்ன கேடு? அன்பான குடும்பம், பணம், படிக்கிறதுக்கு வேண்டிய சூழ்நிலை, மூளை எல்லாம் இருக்கு. நீ எதுக்கு வீட்ட விட்டு ஓடணும்? என்னோட உனக்குக் காதலா? சீ! அப்படியே அது காதலா இருந்தாலும் உன்னப்போல ஒரு முட்டாள் காதல ஏத்துக்க நான் தயாரா இல்ல! போ, போய்த் தொல இங்கிருந்து!”

“செல்வி.. நான் வந்து…” என்றான்.

“வந்துமில்ல போயுமில்ல. என்னப் போக விடு. விதி இருந்தா சந்திப்போம். சந்திக்காம இருந்தாலும் நல்லதுதான். நான் வர்ரேன். பை பை!” விறுவிறென்று நடந்தாள்.

நின்றாள். திரும்பி வந்தாள். அவன் கன்னத்தை இதமாகத் தடவிக்கொடுத்தாள். முகத்தை அருகில் கொண்டுவந்து அறைந்த இடத்தில் அழுந்த ஒரு முத்தம் பதித்தாள். அப்புறம் திரும்பிப் பார்க்காமல் நடந்தாள் செல்வி.

(முடிந்தது)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  - Page 2 Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 12, 2016 3:37 pm

ஒரு கொத்துப் புல்
வைதீஸ்வரன்
------------
பூமியிலிருந்து சுமார் 12500 அடி உயரத்தில் யாத்ரீகர்களுக்காக நவீன வசதிகளுடன் அமைக்கப் பட்டிருந்த சிற்றுண்டி சாலையில் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என்னுடன் என் மனைவியும் மகளும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்……

கேதார்நாத்தின் உச்சிக்கு வந்தடைய கௌரிகுண்ட் என்ற ஸ்தலத்திலிருந்து 14 கிலோ மீட்டர் குட்டைக் குதிரையின் மேல் ஆடி அல்லாடி இரண்டு மணி நேரம் சவாரி செய்தாக வேண்டியிருந் தது. அந்த அனுபவ அவஸ்தையில் உடம்பும் மனசும் ஒரு வித்யா சமான வெளியில் பரபரத்துக் கொண்டிருந்தது.
சாப்பிட்டுக் கொண்டிருந்த எங்களுக்கு குதிரை சவாரியை நினைத் துக் கொண்ட போது திடீர் திடீரென்று சிரிப்பு வந்தது.. முன்னும் பின்னுமாகவும் பக்க வாட்டிலும் எதிர்பாராத விதமாக ஆடிக் குலுங்கி கொண்டு வந்த அந்த வித்யாசமான பயணம் எங்களுக்குள் ஒரு குழந்தையின் சந்தோஷத்தை மலர்த்திக் கொண்டிருந்தது…

” இருந்தாலும் அந்தக் குதிரையை நெனைச்சா ரொம்ப பரிதாமா இருக்கு அப்பா! ” என்றாள் மகள்..
‘ ஆமாம்…குதிரைகளுக்குக் கூட ஏன் எல்லா ஜீவராசிகளுக்குமே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை இருக்குன்னு நெனைக்கிறேன்…ஒவ்வொன்றும் அது பொறக்கர இடத்தை பொறுத்துத் தான் வாழ்க்கை சுகமாகவோ துக்ககரமாகவொ அமைகி றது…..”” என்றேன்…
“” நினைத்துக் கொண்டால் நம்ப முடியாமல் இருக்கிறது… பார்ப்பதற்கு குட்டையாக பெரிய ஆகிருதி இல்லாமல் இருக்கிற குதிரை நம்ப பாரத்தை அனாயாசமாக தூக்கிக் கொண்டு கல்லும் கரடும் வழுக்கலுமாக இருக்கிற மேட்டுப் பாதையில் ஒரு இடத்தில் கூட கால் இடறாமல் ஒரு பொறுப்புள்ள சிநேகிதன் போல் உச்சி வரை ஏற்றி வந்து பத்திரமாக இறக்கி விடுகிறதே… அந்த ஜீவனுக்கு நாம் எவ்வளவு நன்றிக்கடன் பட வேண்டும் ! ” என்றாள் மகள் உணர்ச்சி வசப்பட்டு..
“” நிச்சயமாக “” என்றேன்…

எங்களுக்கு எதிரே ஒரு கிழவர் தனியாக உட்கார்ந்து கொண்டு டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தார்….அவர் கூட வந்தவர்கள் பக்கத்தில் எங்காவது இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்…
திடீரென்று அந்தக் கிழவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மூச்சு விட முடியாமல் வாயை அகலமாக திறந்து கொண்டு ஏதோ ஒரு விதமாக குரல் எழுப்பினார்.. நான் பதறிப் போய் எழுந்து நின்றேன்.. அங்கே சிற்றுண்டி பரிமாறிக் கொண்டிருந்த பணியாள் அவர் அவஸ்தைப் படுவதைக் கண்டவுடன் ஓடி வந்து தாங்கிப் பிடித்தான் .. கூட இருந்த இன்னொரு ஆளிடம் ஏதோ ஹிந்தியில் கத்தினான்..அந்தப் பையன் உடனே எங்கோ வெளியே ஓடினான்..

ஐந்து நிமிஷத்துக்குள் ஒரு டாக்டர் கையில் மருத்துவ சாதனங் களுடன் முதல் உதவிக்கு ஓடிவந்தார்….நாடித்துடிப்பையும் இதயத் தையும் சோதனை செய்து விட்டு கிழவரின் நரம்பில் ஊசி போட்டார்.. அவர் மூக்கில் ஒரு ப்ளாஸ்டிக் மூடியை பொறுத்தி அடியில் இணைத்திருந்த குழாய் மூலம் கொண்டு வந்திருந்த சிறிய ஆக்ஸிஜன் சாதனத்தை இணைத்தார்..

இப்போது கிழவர் மெதுவாக சகஜ நிலைமைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்
அப்போது தான் அந்தக் கிழவரின் கூட வந்திருந்த அவருடைய வயதான மனைவி அங்கே வந்து சேர்ந்தாள்..அவள் அற்பசங்கைக்கு போயிருந்தாள் என்று தெரிந்தது.. .தன் கணவனின் நிலைமையை கண்ட போது அவளுக்கு உடம்பெல்லாம் பதறியது.. உதடு நடுங்கி கண்ணீர் தளும்பியது.. அவள் டாக்டரை கை கூப்பி நன்றி தெரிவித்துக் கொண்டாள்.. அவளுக்கு பாஷை தெரியவில்லை..
“”இந்த வயதில் இவ்வளவு கஷ்டமான பயணம் பண்ணி இந்த உச்சிக்கு வரணுமா?.. ” என்று வருத்தத்துடன் பெருமூச்சு விட்டாள் என் மனைவி..
“” ஏன் எனக்கும் அந்தக் கிழவர் வயது தான் ..எனக்கும் தான்.. அது நேரலாம்…” என்றேன்.. மனைவி என் வாயை பொத்தினாள்
கிழவருக்கு வைத்தியம் செய்து முடித்து விட்டு அந்த டாக்டர் எங்கள் மேஜைக்க்கு அருகில் கடந்து போய்க் கொண்டிருந் தார்… ” நான் தேங்க் யூ டாக்டர் என்றேன்…
அவர் என்னைப் பார்த்து விட்டு சற்று நின்றார்..” அவருக்கு வேறெ.. பிரச்னையில்லை. இந்த உயரத்துலே ப்ராணவாயு அடர்த்தி குறைவா இருக்கும்.. அதனாலெ சில பேருக்கு இங்கே ஆக்ஸிஜன் போதாம மூச்சு முட்டும் ..அதுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை எடுத்துக்கிறது மிகவும் அவசியம்..’ என்று ஆங்கிலத்தில் சொன்னார்..
அதே தொடர்ச்சியில் ” ஸார்.. நீங்களும் வயசானவரா இருக்கீங்க.. எதுக்கும் உங்களையும் சோதனை பண்ணி பாத்துடறேன்..’ என்றார்..

சோதனை செய்யும் போது மனைவி கவலையுடன் அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள் கவலையை ஊர்ஜிதம் செய்வது போல்..டாக்டர் ” அடடா.. உங்களுக்கு ஆஸ்த்துமா உண்டா..? உங்க நுரையீரல்லெ காத்து சராசரி அளவுக்கும் கம்மியா தான் இப்போ போயிக்கிட்டிருக்கு.. மூச்சுத் திணறல் எப்ப வேணா வரலாம்.. என்னுடைய மருத்துவ அறை இதே வளாகத்துலே தான் இருக்கு .. உடனே அங்கே வந்துடுங்க.. You need Oxygen inhalation at least for two or three hours plus an injection”
அன்று இரவு முழுவதும் நான் மருத்துவக் கட்டிலில் மூக்கில் ப்ளஸ்டிக் முகமூடியை போட்டுக் கொண்டு படுத்துக் கொண்டிருந் தேன்.. என் மனைவியும் மகளும் வெது வெதுப்பாக்கப் பட்ட வேறு அறையில் கதகதப்பாக தூங்கிக் கொண்டிருந்தார்கள்… எனக்கு எதிர்ப்புறமாக இருந்த கட்டிலில் அதே கிழவர் ஆயாசமாக படுத்துக் கொண்டு ப்ளாஸ்டிக் மூடி வழியாக என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்…
எனக்கு தூக்கம் பிடிக்கவில்லை.. ஊசி மருந்தின் வேலையாக இருக்கலாம்..இருதயம் லப் டப் என்று குதிரை ஓட்டிக் கொண்டிருந்தது.. எனக்கு எங்களை ஏற்றிக்கொண்டு வந்த குதிரையின் ஞாபகம் வந்தது. அந்த மாதிரி பிராணிகள் பெரிய ஆத்மாக்களாக இருக்க வேண்டும் .. மனிதன் என்கிற பாவ மூட்டைகளை ஓயாமல் உச்சியிலிருக்கும் சிவனடிக்கு ஏற்றி விடுவதையே தன் ஜீவனமாக கொண்டு மடிகின்ற அந்தப் பிறவிகள் மிருக வடிவில் மறைந்திருக்கும் ஞானிகள் என்று தோன்றியது.

அதற்கு தன் முதுகின் மேலுள்ள பாரத்தைப் பற்றிய ஒரு தெளிவான உணர்வு இருந்தது…எந்த பாரத்துக்கு எவ்வளவு பலத்தையும் வேகத் தையும் உபயோகப் படுத்த வேண்டுமென்ற பிரக்ஞை அதற்குள் இயல் பாக அமைந்திருக்கிறது.. அதன் செயல் பாட்டை கவனித்துப் பார்க்கும் போது நமக்கு நம் வாழ்க்கையை அதன் பிரச்னைகளை சமாளிக்கும் தெளிவு கிடைக்க ஏதோ ஒரு வித சாத்தியம் இருக்கும் என்று நினைத்தேன் ..
கௌரிகுண்டிலிருந்து 7 கிலொமீட்டர் ஏறியவுடன் பயணத்தை நிறுத்தி சிற்றுண்டிக்காக சிறிது நேரம் எங்களை குதிரைக் காரன் இறக்கி விட்டான்.. பாரம் இறங்கியதும் குதிரை இறுக்கம் தளர்ந்து விடுதலையாக முதுகை சிலிர்த்துக் கொண்டு இரண்டு தரம் கனைத்துக் கொண்டது..விடுதலையாக மூச்சு விட்டது..

பிறகு குதிரைக்காரனின் தோல் பையை செல்லமாக இழுத்தது.. ”இரு.. இரு..’ என்று பையன் தோள்பையை இறக்கினான். அதிலிருந்து வெடிகுண்டுகளைப் போல் இருந்த மாவு உருண்டைகளை எடுத்தான். பாறை மேல் வைத்து கல்லால் உடைத்து சின்னக் கட்டிகளாக்கி னான்..கொஞ்சம் தண்ணீரை எடுத்து அதில் தெளித்தான்..பிறகு கட்டிகளை எடுத்து குதிரைக்கு ஒரு வாய் அவனுக்கு ஒரு வாய் என்று உண்ண ஆரம்பித்தான்..
அந்த சத்து மாவு கொள் கோதுமை தினைப்பயிறு முட்டைக்கரு என்று பலதும் கலந்து செய்யப் பட்டதென்று பின்னால் தெரிந்து கொண்டேன்… குதிரைக்கார பைய்யன் மற்றபடி எந்த சிற்றுண்டியும் சாப்பிட வில்லை.. எனக்கு வியப்பாக இருந்தது.. ஆனால் அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை..குதிரையின் கூடவே குதிரையைப் போலவே மலை ஏறி இறங்கும் அவனுக்கும் அந்தப் பிராணிக்கும் ஒரே விதமான ஊட்டம் தான் தேவையாய் இருந்தது.. போலும் ..அல்லது சகபிராணியையும் தன்னைப் போல் பாவிக்கிரானோ என்னவோ!
டாக்டர் வரும் சத்தம் கேட்டது..நான் விழித்துக் கொண்டேன்..இல்லை என் நினைவுகளிலிருந்து மீண்டேன் என்று சொல்லலாம்..டாக்டர் என் மூக்குக் குழாயை எடுத்து விட்டு என் இதயத்தை சோதித்து விட்டு.. ”இப்போது நீங்கள் தைரியமாக போகலாம் ” என்றார்..

நான் அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு..இன்னும் தூங்கிக் கொண்டி ருந்த என் மனைவியையும் மகளையும் எழுப்பி கேதாரநாதரை தரிசனம் செய்வதற்கு அவசரப் படுத்தினேன்..தரிசனம் முடிந்த கையோடு கீழே இறங்க வேண்டும் ..

க்யூவில் நின்று சந்நிதிக்குள் உள்ளநெகிழ்வுடன் போனபோது சற்று ஏமாற்றத்துடன் நின்றேன்..வடக்கு கோவில்களில் உள்ள மூலவர்கள் நம்மூர் கோவில்களைப் போல் அழகுடன் அற்புத ஆகிருதியுடன் காட்சி அளிப்பதில்லை..மூலவர் குட்டையான பளிங்கு கல்லில் ஆமணக்கு கொட்டை கண்களுடன் காட்சியளித்துக் கொண்டிருந்தார்..

அவருக்கு பூஜை செய்த பண்டாக்கள் கேதாரநாதரை விட உயரமாக இருந்தார்கள்..பிராகாரத்தின் வெளிச்சுவற்றில் திருஞான சம்பந்தரின் சிவனைப் பற்றிய பாடல் பதிக்கப் பட்டிருந்தது. எப்படியோ கேதாரநாத்துக்கு போய் சிவனின் அருளுக்கு பாத்திரமாக வேண்டுமென்ற எங்கள் லட்சியம் பூர்த்தியாயிற்று..
நாங்கள் மீண்டும் குதிரை ஏறினோம்..எங்களை ஏற்றி வந்த அதே குதிரைகள் எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தன. ஏறுவதை விட இறங்குவது தான் கடினமானதென்றும் குதிரைகளுக்கு அதிக எச்சரிக்கை தேவை இருக்குமென்றும் அங்கொருவர் சொன்னார்.. குதிரை எச்சரிக்கையுடன் தான் இறங்கிக் கொண்டிருந்தது…
பாதி மலை இறங்கியபோது எங்களுக்கு கீழேயிருந்து சில தகவல்கள் வந்தது. இறங்கும் பாதைகளில் சில இடங்களில் நிலசரிவு ஏற்பட்டு பாறை
கள் உருண்டு கிடப்பதாகவும் எச்சரிக்கையுடன் பயணம் செய்ய வேண்டுமென்றும் அறிவுறுத்தியது..
குதிரைக்கார பைய்யன் பத்திரமாகத் தான் குதிரையை வழி நடத்தி சென்றான்.. கீழே அடிவாரத்தில் குதிரையை நிறுத்தி எங்களை இறக்கி விட்டான்..குதிரையோடு சேர்ந்து நாங்களும் பெருமூச்சு விட்டோம்.. இறங்கி மேலும் நடந்து வந்து கொண்டிருந்த போது பக்கவாட்டில் பாறைகளின் ஓரமாக ஒரு கூட்டம் கூடி இருந்தது.. நாங்கள் பரபரப்புடன் நெருங்கிப் போய் என்னவென்று பார்த்தோம்.. பார்த்தவுடன் அதிர்ச்சியுற்றுப் போனோம்.. ஒரு குதிரையின் பின்னங்கால்களில் ஒரு பாறை விழுந்து கிடந் தது. அதன் நுரைஈரல் புடைத்துப் போய் முன்னங்கால்கள் வானைப் பார்த்துக் கொண்டிருந்தன.

”பாவம் நிலச்சரிவில் .பாறை உருண்டு வந்து இளைப்பாறிக் கொண்டிருந்த குதிரையின் மேல் விழுந்திருச்சி…பரிதாபம்..” என்று ஜனங்கள் பேசிக் கொண்டார்கள்…
சற்று நேர மௌனத்துக்குப் பின் கண்களில் ஈரத்துடன் “” ஒரு வழியா இந்த பாரம் தூக்கும் பிறவியிலிருந்து குதிரைக்கு விடுதலை கிடைத்து விட்டது…” என்றாள் மகள்..

“” இது விடுதலையா..தெரியவில்லை..விடுதலை இப்படிப்பட்ட கோரவிபத்தாக இருந்திருக்க வேண்டாம்..மேலும் அந்தக் குதிரை இப்படிப்பட்ட வாழ்க்கையை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு வாழ வில்லை என்று எப்படி நாம் முடிவுக்கு வர முடியும்? “”

என்று சொல்லிவிட்டு மேலும் நடந்தேன்..
மல்லாந்து விழுந்து கிடந்த அந்தக் குதிரையின் வாயில் இன்னும் தின்னப்படாமல் தொங்கிக் கொண்டிருந்த ஒரு கொத்துப்புல் எனக்கு வாழ்க்கையின் தீராத பற்றை சொல்லிக் கொண்டிருந்தது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  - Page 2 Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 12, 2016 3:39 pm

அன்புள்ள ஆசிரியருக்கு
ஸிந்துஜா


அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம். எனக்கு உங்களைக் கண்டால் பொறாமையாக இருக்கிறது. ஆச்சரியமாகவும் இருக்கிறது. நானும், கடந்த ஒரு வருஷமாக, உங்கள் தமிழ் மாத இலக்கிய இதழைப் படித்து வருகிறேன். எந்த ஒரு செயலையும், உடனுக்குடன் பரிசீலித்து முடிவு கட்டுவது என்பது என் வழக்கத்துக்கு விரோதமானது. ‘கிவ் தெம் எ லாங் ரோப்’ என்பது எனக்கு மிகவும் பிடித்த வாசகம். எதற்காக இதையெல்லாம் கதைக்கிறான் என்று உங்களுக்குத் தோன்றலாம். பொறுங்கள், விஷயத்துக்கு வருகிறேன்.

முதலில் உங்கள் மீது பொறாமையாக இருக்கிறது என்றேன். ஆச்சரியமாகவும் கூட. இலக்கியப் பத்திரிகை என்றால் அது வெகு ஜனத்துக்கு விரோதம் என்பதுதானே நமக்கு வந்துள்ள பயிற்சி? அப்படியானால் தரமுள்ள எழுத்தை மாத்திரம்தானே பிரித்து எடுத்து தேர்வு செய்ய வேண்டும், பிரசுரிக்க வேண்டும்? ஆனால் நான் பார்ப்பது எல்லாம் உங்கள் நண்பர்கள் (அதில் பாதிப் பேர் உங்கள் மாத இதழின் ஆசிரியர் குழு) ‘எழுதித் தள்ளும்’ எழுத்துக்களைத்தான். இவற்றை இலக்கியத் தரம் என்று சீரியஸ் ஆக நினைத்து நீங்கள் போடுவதை நினைத்துத்தான் ஆச்சரியமாக இருக்கிறது. ‘பெரிய பத்திரிகையாக’ உங்கள் பத்திரிகையை மாற்றும் உங்கள் தொலை நோக்குப் பார்வையை கண்டு பொறாமையாகவும் இருக்கிறது.

போனவாரம் அரியாங்குப்பம் ராஜாபாதரைப் பார்த்தேன்.உங்களின் சென்ற மாத இதழில் வெளியான அவரது ‘உணர்ச்சிகரமான’ கதையைப் பற்றிப் பேச்சு வந்தது.அந்தக் கதையின் நாயகன், தனது பால்ய கால நண்பனைப் பற்றியும், இருவரும் அரியாங்குப்பம் குப்பை மேடுகளில் புளியங்கொட்டைகளை பொறுக்கி பொழுதைக் கழித்தது மட்டுமல்லாமல், பொறுக்கிய கொட்டைகளை தினமும் எண்ணி, எண்ணி, கணக்கில் சிறந்த மாணவர்களாக விளங்கியது பற்றியும் சொல்வதைச் சிறப்பாக, உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தி எழுதப்பட்ட கதை. (இந்த, ‘சிறப்பாக’ ‘உணர்ச்சிகரமாக’ என்ற பிரயோகங்கள் எல்லாம் நீங்கள் கதை வெளியான பக்கங்களில் உபயோகித்தவை) பல வருஷங்கள் கழித்து அவர்கள் ஒருவரை ஒருவர் யாரென்று தெரிந்து கொள்ளாமலே ஒரு ஓட்டலில் சந்திக்கிறார்கள். காலம் இருவரையும் தோற்றத்தில் வெகுவாக மாற்றி விட்டிருந்த போதிலும், தனக்கு எதிராக உட்கார்ந்து சாப்பாடு வரவழைத்த மனிதர், சாப்பிடும் முன்பு ஒவ்வொரு பருக்கையையும் எண்ணிப் பார்த்து பிறகு வாயில் போட்டுக் கொள்வதைப் பார்த்து,கதாநாயகன் (மீண்டும்!) உணர்ச்சி வசப்பட்டு ” நீங்க..நீங்க…நீ சோமுதானே?” என்று அடையாளம் கண்டு பிடித்து நண்பனைக் கட்டிப் பிடித்துக் கொள்ளும் கதை.
“ராஜா, இது இங்கிலீஷ் , இந்தியில எல்லாம் சினிமாவா வந்திடுச்சே!” என்று நான் கேட்டேன்.
ராஜாபாதர் ஒரு நமுட்டு சிரிப்புடன் “தமிள்ள வரலேல” என்றார்.
“இல்லியே, தமிழ்ழகூட வந்திருச்சு போல இருக்கே” என்று நான் சொன்னேன்.
நடந்து கொண்டிருந்த ராஜா நின்று விட்டார். “எப்ப?”
“ஒரு நாப்பது வருஷம் இருக்கும்” என்றேன்.

ராஜாவின் முகத்தில் மறுபடியும் சிரிப்பு தோன்றிற்று.” அதானே, ஒரு தல முறை டயம் ஆயிடுச்சே. இப்பம் இருக்கற இளைய தலைமுறைக்கு இது புது கதைதானே”
அவருடைய லாஜிக் என்னை அயர வைத்தது. நீங்களும் என்ன பண்ணுவீர்கள்? அயர்ந்துதான் இந்த இலக்கியச் செல்வத்தைத் தமிழ் இளைய சமுதாயத்துக்குத் தந்திருக்க வேண்டும் நீங்கள்.

கதைகள் இப்படி என்றால் கட்டுரைகள் இன்னும் ஒரு படி மேலே. உங்களுக்கு என்று ஒரு ஐயா ரைட்டர் கிடைத்திருக்கிறார். இப்போது என் போன்ற வாசகர்களுக்கு அவருடைய ஒரிஜினல் பெயரே மறந்து விட்டது. எல்லாருக்கும் அவர் ஐயாதான். இது அவராகவே தன்னைக் கூப்பிட்டுக் கொண்ட பெயர் இல்லை என்று நான் நம்ப விரும்புகிறேன். உங்களுடைய பொங்கல் சிறப்பு மலரில் அவர் ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார். தமிழ் நாட்டில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்காக சாத்வீக முறையில் போராட்டம் நடத்தி வரும் ஒரு மாமனிதரைப் பற்றி எழுதி இருக்கிறார். கட்டாயமாக ஓவ்வொரு தமிழ்க் குழந்தையும் பள்ளி சென்று படித்தே ஆக வேண்டும், இதற்காக அரசு எல்லா விதமான வசதிகளையும் செய்து தர வேண்டும் என்கிற போராட்டம் இது. போராட்டம் நடத்தும் அறுபது வயது முதிர்ந்த சுதந்திரம் என்ற பெயருள்ள அந்த முதியவருக்கு இப் போராட்டத்தால் எந்த விதமான சுய நலனும், பயனும் இல்லை. ஆனால் ஐயா இந்த மனிதரையும், அவரது போராட்டத்தையும் தாக்கி எழுதி இருக்கிறார். ஐயா எழுப்பியிருக்கும் எதிர்ப்புக் குரல்தான் என்ன?

‘இந்தப் போராட்டத்தை சுதந்திரம் ஏன் அவருக்கு ஐந்து வயது ஆகும் போதே நடத்தவில்லை?’
‘ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்ட போது இம்மாதிரி யோசிக்காத போது , நாமே நம்மை ஆளும்போது எதற்காக இப்படி யோசிக்க வேண்டும்?’
‘ஆடோ ஷங்கர் சென்னையில் ஆட்டம் போட்ட போது சுதந்திரம் ஏன்தமிழ் நாட்டுத் தெருவில் போராட்டம் நடத்தவில்லை?’

‘தமிழ் நாட்டுத் தெருவில் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பிச்சைக் காரர்கள், உண்ண உணவின்றி, உடுக்க உடை இன்றி தவித்துக் கொண்டிருக்கும் போது, அதைக் கொஞ்சமும் கண்டுக்காமல், ஐந்து வயசுக் குழந்தைகளுக்கு போராட்டம் நடத்துவது என்ன நியாயம்?’

‘காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை சைப
ர்கள் போட்டு ஒரு நம்பர் எழுதினாலும், அதற்குள் அடங்காத ஒரு தொகையை எடுத்து வெற்றி வாகை சூடிய ஒரு தமிழனைப் பாராட்டாது இம்மாதிரி போராட்டங்களில் ஈடுபடும் ஒரு வயதான ஆசாமியை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.’
‘கடைசியாக,கீழவெண்மணியில் ஹரிஜனங்கள் எரிக்கப் பட்ட போது, இந்திரா காந்தியின் மரணத்துக்குப் பிறகு தில்லியில் சீக்கியர்கள் சாகடிக்கப்பட்டபோது ,இந்திய பார்லிமென்ட் தாக்கப் பட்ட போது, அமெரிக்காவில் அல்கொய்டா உலக வர்த்தக கட்டிடங்களை அழித்து நிர்மூலமாக்கிய போது, மும்பையில் தீவிரவாதிகளால் மக்கள் கொல்லப்பட்ட போது, இந்த சுதந்திரம் எங்கே போனார்? ஏன் அவர் இந்த அநீதிகளை எதிர்த்து போராட்டம் நடத்தவில்லை?’
ஐயாவின் இந்த ஆழ்ந்த, சிந்தனையைத் தூண்டும் உரத்த குரலை, மிகவும் வரவேற்று, உங்கள் பத்திரிகையில் மொத்தம் ஐந்து கடிதங்களைப் பார்த்தேன். அந்த ஐந்து பேரும் உங்கள் சந்தாதார்கள் என்று உங்கள் உதவி ஆசிரியர் காளமேகம் ஒரு நாள் என்னிடம் சொன்னார்.

உங்கள் பத்திரிகையில் வரும் கவிதைகளைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. எவ்வளவு கவிதைகள்! , எவ்வளவு கிவிதைகள்! ஒவ்வோரு இதழிலும், வரும் கவிதைகளில் பாதி, நீங்களும் உங்கள் மனைவியும் எழுதியவைதான். உங்கள் ஒன்பது வயது மகனும், ஏழு வயது மகளும் இன்னும் சில மாதங்களில் கவிதை எழுத ஆரம்பித்து விடுவார்கள் என்று காளமேகம் (உங்கள் உதவி ஆசிரியர்) கவலையுடன் சொன்னார். அவைகளும் உங்கள் இதழில் பிரசுரமானால் உங்கள் குடும்பம் இலக்கியக் குடும்பம் என்ற பெயரை அடைந்து விடும். அதனால் உங்கள் மாத இதழையும் குடும்பப் பத்திரிகை என்று மகிழ்ச்சியுடன் நீங்கள் அழைக்கலாம்.

கவிதைகளைப் பற்றிப் பேசும் போது நீங்கள் பெண் கவிகளுக்கு கொடுக்கும் இடத்தைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. அவர்கள் தங்களுடைய ,அதாவது பெண்களுடைய உடல் பற்றிய மயக்கம் இன்றி எழுதுவது, நீங்கள் கொடுக்கும் தைரியத்தினால்தான். பெண் கவியாளிகள் (போராளிகள் மாதிரி. இந்த புதிய வார்த்தையை நான் கண்டு பிடித்திருக்கிறேன்) உடல் உறுப்புக்களைப் பற்றி இருபத்தி நான்கு மணி நேரமும் சிந்தித்து வைத்திருப்பவர்கள் போல அவ்வளவு அன்யோன்யத்துடனும், சுதந்திரத்துடனும், உரிமையுடனும் எழுதுகிறார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். ஆண் கவிகள் இவ்வளவு வருஷங்களாக எழுதியும் இத்தகைய தேர்ச்சியைத் தம் கவிதைகளில் காண்பிக்கவில்லை. இதைப் பற்றி நீங்கள் ஒரு பட்டிமன்றம் நடத்தி ஐந்தாறு இதழ்களை நிரப்பலாம். பதினாறாம் நூற்றாண்டில் மிசிகாலோ மோபொலோ என்ற அண்டார்டிகா கவிஞர் குரங்குகள், பன்றிகள் , எருமைகள் அவரிடம் தெரிவித்த தங்கள் உடல் உறுப்புக்களைப் பற்றிய விவரங்களின் மேல் அவர் எழுதிய கவிதைகள்தாம் இன்றைய இயக்கத்திற்கு காரணம் என்று சமீபத்தில் தில்லியில் ஒரு கருத்தரங்கத்தில் தெரிவிக்கப் பட்டது இது உங்கள் கவனத்தை ஏற்கனவே வந்து அடைந்திருக்கலாம்.

உங்கள் மாத இதழின் நேர்காணல்களைப் பற்றிச் சொல்லாமல் விடுவது சாத்தியமில்லை. உங்கள் பத்திரிகையில் பேட்டி காண்பவர், மொத்த தமிழ் எழுத்து அரசர்களையும், அரசிகளையும், தன் குடும்பத்து உறவினர் போலப் பார்த்து பேட்டி காண்பது, தமிழுக்கே புதுசு. இதன் விளைவாக, இலக்கியத் தம்பி, இலக்கிய சித்தப்பா, இலக்கிய பெரியப்பா, இலக்கிய மாமா, இலக்கிய சின்னண்ணன் , இலக்கிய அத்தை , இலக்கிய அண்ணி, இலக்கிய மச்சினி, இலக்கிய சின்ன வீடு என்று ஒரே உறவினர் பட்டாளம் போங்கள். அப்புறம் உங்களுடைய இடது சாரி பிரமுகர்களின் பேட்டிகளிலும், மிக நுட்பமான சொல்லாடல்களும், கருத்தோவியங்களும் நிரம்பி வழிகின்றான. ஆழ்ந்த சிந்தனையை எதிரொலிக்கும் சமீபத்திய பேட்டியில் ஒரு இடம்:

கேள்வி : ஸார், நீங்கள் இடதுசாரிக் கண்களால் பார்த்து, இடதுசாரிக் காதுகளால் கேட்டு, இடதுசாரி மூக்கால் மூச்சு விட்டு, இடதுசாரி வாயால் பேசி, இடதுசாரி கையால் எழுதி, இடதுசாரி கால்களால், நடந்து, ஓடி வாழ்ந்து காட்டியிருக்கிறீர்கள். உங்களை எல்லோரும் இலக்கிய …. (மேற்சொன்ன உறவுகளில் ஒன்றைப் போட்டுக் கொள்ளவும்) என்று பெருமிதத்துடன் அழைக்கிறார்கள். தமிழ் சினிமாவைப் பற்றி உங்கள் கருத்து என்ன.?
பதில்: உங்களுக்கே தெரியும், இலக்கியத்தில் எனக்கு எப்போதும் மண்வாசனையில் நாட்டம் என்று. சினிமாவிலும் எனக்கு அதே நெறி முறைதான். கிராமத்து சினிமாவில் எப்போதும் மண்வாசனை இருந்து கொண்டே இருக்கிறது. கோவணம் கட்டிக்கிட்டு ஒருத்தர் நடிச்சா அதுல எவ்வளவு மண் வாசனை தெரியுது! ”
ஆகா, என்ன ஒரு தீவிர நோக்கு. என்னை மாதிரி பாமரனுக்கு அந்த சினிமாவில் கோவணம்தான் தெரிந்தது. இதே ரீதியில், சிகப்பு இண்டிகா காரில் ரதன் டாடா வந்து இறங்கினால், அவரை தோழர் என்று கட்டிப் பிடிக்கும் சாத்தியக் கூறுகள் நிறைய உள்ளன என்று இந்த நேர்காணல் மூலம் தெரிந்து கொண்டேன்.
கடைசியாக உங்கள் இதழில் வரும் புத்தக விமர்சனங்கள் பற்றி சொல்ல விட்டால் அது முறை அல்ல. சாதாரணமாக நம் ஊரில் ‘விமர்சனம் என்றால் விமர்சனம்தான்’ என்று கூறும் ஆளைப், போட்டுப் பார்த்து விடுவார்கள். இதை நானே கண் கூடாகப் பார்த்திருக்கிறேன். நீங்கள் பெரிய ஆட்களை (அதாவது நீங்கள் பெரிய ஆட்கள் என்று நினைப்பவர்களை)விட்டு புத்தகத்தை விமரிசனம் செய்யச் சொல்கிறீர்கள். இது ஒன்றும் தப்பான விஷயமில்லை. ஆனால் அந்த விமரிசனம் எப்படி இருக்கிறது.? ஆண்டிப்பட்டியிலிருந்து கவிதை எழுதி, பிரம்மப் பிரயத்தனம் செய்து அதைப் புத்தகமாகக் கொண்டு வருகிறான். அக் கவிதைகளில் உங்கள் விமர்சகர், சிக்மண்ட் பிராய்டை, கார்ல் ஜங்கை,ஆல்பிரெட் அட்லரை தேடுகிறார். அதற்கு அப்புறம், கீட்சைக் கூப்பிடுகிறார். எமிலி டிக்கின்சன் நாலு பாராவை அடைத்துக் கொள்கிறாள்.

அப்புறம் லோகல் கவிஞர், கலைஞர்கள் வேறு இந்த விமரிசகரிடமிருந்து மாலை போட்டுக் கொள்ள வேண்டும். இந்த ரகளையில், கவிதை எழுதிய கவியை யாரும் ஞாபகம் வைத்துக் கொள்கிற மாதிரி தெரியவில்லை. விமார்சனத்தைப் படித்த களைப்பில் நமக்கு விமரிசகரிடம் கேட்கத் தோன்றும் கேள்வி: ‘ஆயிற்று, இவ்வளவு பெரிய மகா ஜனங்களும் சொன்னது இருக்கட்டும் , உன்னோட விமரிசனம் என்ன ஐயா? அல்லது அம்மா?’
உங்கள் பத்திரிகை மேலும் நன்றாக வர வேண்டும் என்று ஆதங்கப் படுபவர்களில் நானும் ஒருவன். அதனால் வெளிப்படையாக இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதியிருக்கிறேன். இக் கடிதத்தை உங்களால் உங்கள் பத்திரிகையில் பிரசுரிக்க முடியாது என்பதை நான் அறிவேன்.

அன்புடன்
ஜே.கே. சத்திய மூர்த்தி
.
கடிதத்தைப் படித்து முடித்த ஆசிரியர் , அதைக் கையில் வைத்துக் கொண்டு ஒரு நிமிஷம் யோசித்தார். ‘நல்லாத்தான் எளுதறான். ஆனா என்ன, ஒரே வெசவு. இந்த திறமைய ஒரு கதையோ, நாவலோ எளுத உபயோகிச்சான்னா, எவ்வளவு நல்லா இருக்கும்!” என்று நொந்து கொண்டார். “சத்தியமூர்த்திக்கும் இப்ப அறுபது அறுபத்தஞ்சு வயசு இருக்காது?” என்று தன்னையே கேட்டுக் கொண்டார்.

பிறகு அவருக்கு அருகாமையில் இருக்கும் பீரோவைத் திறந்து அங்கிருந்த இரண்டு கோப்புக்களை கையில் எடுத்தார். மஞ்சள் வண்ணத்திலிருந்த கோப்பில் ‘காலஞ் சென்றவர்கள்’ என்று தலைப்பிட்டிருந்தது. பிரித்துப் பார்த்தார். சமீபத்தில் காலமான எழுத்தாளர்களைப் பற்றிய பத்திரிகை துண்டுகள், புகைப்படங்கள் ஆகியவை அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. மற்றொரு கோப்பு சிவப்பு வண்ணத்தில் ‘முது பெரும் படைப்பாளிகள்’ என்று தலைப்பைத் தாங்கி இருந்தது. ஆசிரியர் அதைப் பிரித்துப் பார்த்தார். இன்னும் உயிரோடு இருக்கின்ற வயதான எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்களுடனும், புகைப்படங்களுடனும் அந்தக் கோப்பு நிறைய தாள்களை அடக்கிக் கொண்டிருந்தது. கையில் இருந்த கடிதத்தை மீண்டும் ஒரு முறை ஆசிரியர் பார்த்தார். ‘வேணுங்கிற சமயத்தில எடிட் பண்ணி போட்டுக்கலாம். சுவாரஸ்யமா இருக்கறபடி பாத்துக்கணும், அவ்வளவுதான்.’ என்று தனக்குள் பேசியபடி அந்தக் கடிதத்தை சிவப்புக் கோப்புக்குள் போட்டு


இரண்டி கோப்புக்களையும் பீரோவினுள் வைத்தார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  - Page 2 Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 19, 2016 8:42 pm

சிறுதுளி!
----------
அந்த பெரிய உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்தனர் மணிவாசகமும் அவரது மகன் கோகுலும். மணிவாசகம் இன்றைக்கு ஊரில் பெரிய செல்வந்தர். ஒரு சாதாரண பணியாளாய் வாழ்க்கையைத் துவக்கியவர் தன் அயராத உழைப்பினால் இன்று ஒரு பெரிய சோப்பு கம்பெனியை நடத்தி வருகிறார்.
உணவருந்தியதும் சர்வர் கொண்டுவந்த பில்லை செட்டில் செய்ய எடுத்தார் மணிவாசகம். “ஐயா! என்று தலையை சொறிந்தபடி நின்றான் சர்வர்.மணிவாசகம் அவனை ஏறிட்டும் பார்க்காமல் நேரே கவுண்டரில் சென்று பணத்தை கட்டிவிட்டு மீதிச்சில்லறையை வாங்கி பையில் போட்டுக்கொண்டார். கார் பார்க்கிங்கிலும் காரை கிளப்பியதும் வந்து நின்ற சேவகனை கவனிக்காதது போல கிளம்பிவிட்டார்.
“சரியான சாவுகிராக்கி” என்று பின்னால் அவன் முணுமுணுப்பது தெரிந்து கோகுலுக்கு அவமானமாகப் போய்விட்டது. அங்கிருந்து ஒருபழக்கடைக்குச் சென்றவர் பழங்களை பேரம் பேசி வாங்கிக் கொண்டிருந்தார். இறுதியில் ஒரு பத்து ரூபாய் குறைத்து வாங்கியதும் அவருக்கு மகிழ்ச்சி. இவர் காரில் ஏறும் பொழுது, கடைக்காரன் பெருசா வந்திருதுங்க காரை எடுத்துகிட்டு! பத்து ரூபாய்க்கு பேரம் பேசிக்கிட்டு! என்று சொல்ல மீண்டும் காரில் இருந்து இறங்கியவர், ஏன் காரில் வந்தால் பத்து ரூபாய் கூட வைச்சுத்தான் விற்பியா? என்று சண்டைக்குப் போய்விட கோகுலுக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது.
“அப்பா! வாங்கப்பா! ப்ளீஸ்! இதுக்கு போய் சண்டை போட்டுக்கிட்டு?” என்று அழைத்தான்.
“இதுக்குத்தான் சண்டை போடனும்! நியாயமான விலையில விற்கணும் அவன். காரில வர்றவங்களுக்கு ஒரு விலை நடந்து வர்றவங்களுக்கு ஒரு விலையா? இது எந்த சட்டத்துல இருக்கு?” என்று கத்தினார்.
கூடியிருந்தவர்கள் ஒரு மாதிரி பார்க்க “ஐயோ அப்பா! போய் முதல்ல காரில் ஏறுங்க! எல்லோரும் நம்மையே பாக்கிறாங்க!” என்றான்.
“பார்க்கட்டுமே! இதுல என்ன அவமானம் இருக்கு? நானா ஏமாத்தினேன்! அவன் அந்த கடைக்காரன் தான் பத்து ரூபா அநியாயமா சுருட்ட பார்த்தான். சரியா பேரம் பேசி வாங்கினா என்னையே மட்டமா பேசறான்.”
இதற்குள் சிலர், “போங்க சார்! இதையெல்லாம் பெரிசு படுத்திக்கிட்டு! சின்ன விசயம் சார் இதெல்லாம்! இந்த பத்து ரூபாய்ல அவன் கோட்டை கட்டிடப் போறானா? விட்டுத் தள்ளுங்க சார்!” என்றனர்.
இன்னும் அவருக்கு கோபம் அதிகரித்து விட்டது. “இப்படியே விட்டு விட்டுத்தான் எல்லாத்திலேயும் கரப்ஷன். அப்புறம் கவர்மெண்டை குறை சொல்றது”. என்று ஆரம்பித்தவர் மகன் காரினுள் சென்று அமர்ந்து விட்டதை பார்த்து இவன் ஒருத்தன்! எதுவுமே கேட்க மாட்டான். என்று தானும் சென்று காரில் ஏறிக்கொண்டார். கார் விரைந்தது.
அடுத்த நாள் காலை வீட்டில் உணவருந்திக் கொண்டு இருந்த போது, அப்பா! நான் என் ப்ரெண்ட் மாதவனை பார்க்கணும் கார் எடுத்திகிட்டு போறேன்! என்ற மகனை நிறுத்தினார் மணிவாசகம். “ உன் ப்ரெண்ட் எங்க இருக்கான்?” தி.நகர்லப் பா!
நாம எங்க இருக்கோம்? இதென்ன கேள்வி என்பது போல பார்த்தவன் வட பழனிலப்பா! என்றான்.
இந்த ரெண்டு எடத்துக்கும் அதிக பட்சம் எவ்வளவு தூரம் இருக்கும் ஒரு ஐந்து இல்லே ஆறு கி,மீ வருமா? இதுக்கு கார் எதுக்கு? ஹெவி டிராபிக் ஏரியா? நீ மட்டும் தானே போறே? நீ ஒருத்தன் போறதுக்கு கார் எதுக்கு? என்றார்.
கோகுலுக்கு எரிச்சலாய் வந்தது. “ ஐயோ! அப்பா! எதுக்கெடுத்தாலும் சிக்கனமா? நான் போகவே இல்லை விட்டுடுங்க?
“ நான் போக வேண்டாம்னு சொல்லலை கோகுல்! கார்ல போக வேண்டாம்னுதான் சொல்றேன்”
அதான் ஏன்னு கேக்கறேன்பா! நாம ஒண்ணும் பிச்சைகாரங்க கிடையாது. பணத்தை ஏன் இப்படி மிச்சப்படுத்தறீங்க?
“ நாளைக்கு நாம பிச்சை எடுக்க கூடாதுன்னுதான்!”
“என்ன சொல்றீங்கப்பா? அப்படியா இருக்குது நம்ம நிலைமை!”
“கோகுல் நீ பணக்காரனுக்கு பிறந்தவன்! ஆனா நான் ஏழைக்கு பொறந்து இன்னிக்கு பணக்காரனா உயர்ந்து இருக்கேன்! உலகம் உருண்டைப்பா! உயர்ந்தவன் தாழலாம் தாழ்ந்தவன் உயரலாம்! இன்னிக்கு இருக்குங்கிறதுக்காக வீணா விரயம் பண்ணக்கூடாது. செல்வத்தை நாம மதிச்சா அது நம்மை மதிக்கும்! இல்லேன்னா அது நம்மல மிதிச்சி போட்டுரும்!”
“புரியலைப்பா! சர்வருக்கு ஒரு பத்து ரூபா டிப்ஸ் தராம இருக்கிறதாலேயும் பழம் வாங்கறப்ப ஒரு பத்து ரூபா மிச்சம் பிடிக்கிறதுனாலேயும் நாம வளர்ந்திருவோமா?”
“இங்கதான் நீ தப்பு பண்றே கோகுல்! சிறு துளிதான் பெரு வெள்ளமா மாறுது! பத்து பத்து ரூபாய் சேர்ந்தால்தான் நூறு ரூபா கிடைக்கும். இன்னிக்கு பத்து ரூபாதானேன்னு அலட்சியமா இருந்தா நாளைக்கு நூறு ரூபா! அப்புறம் ஆயிரம் பத்தாயிரம்னு வளர்ந்துட்டே போகும். நமக்கு பத்து ரூபா பெரிசா தெரியலை! ஆனா பழம் விற்கறவனுக்கு பத்து ரூபா பெரிசா தெரிஞ்சதனாலேதானே அதிகமா விக்கிறான். நியாயமா செலவு பண்ணலாம் தப்பு இல்லே! உழைக்கிறவனுக்கு ஒரு ரூபா அதிகமா கொடுக்கலாம். ஆனா இப்படி ஆளை பார்த்து ஏமாத்தறவங்க கிட்ட ஏமாந்துட கூடாது. ஒவ்வொரு ரூபாயும் நாம் உழைச்சுதான் சம்பாதிக்கிறோம்! அதை ஊதாரித்தனமா செலவு பண்ணக்கூடாதுங்கிறது என் பாலிசி. அதை நான் மாத்திக்க மாட்டேன். ஒரு காலத்திலே தண்ணி நிறைய இருந்தது! நிறைய செலவழிச்சாங்க! வீணடிச்சாங்க! ஆனா இன்னிக்கு தண்ணியை விலை கொடுத்து வாங்க வேண்டியதா போச்சு இல்லே! எதுக்கும் ஒரு அளவு இருக்கு. அந்த அளவோட பயன்படுத்தினா வளமா இருக்கலாம். இருக்குதுன்னு ஆட்டம் போட்டா அந்த ஆட்டம் கொஞ்ச நாள் தான் தாங்கும். நீயும் புரிஞ்சி நடந்துகிட்டா உன் வாழ்க்கை நல்லா இருக்கும்” என்றார்.

தந்தையின் பேச்சில் இருக்கும் நியாயத்தை புரிந்து கொண்ட கோகுல் நான் பஸ்ஸிலேயே போய் வரேன்பா! என்றான்.
மகிழ்வுடன் புன்னகைத்தார் மணிவாசகம்.

நன்றி தளிர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  - Page 2 Empty Re: கதை படைப்புகள்

Post by முரளிராஜா Wed Jan 20, 2016 3:40 pm

நன்றி இனியவன் அவர்களே
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கதை படைப்புகள்  - Page 2 Empty Re: கதை படைப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum