தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முகநூலில் ரசித்தவை

Page 8 of 18 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 18  Next

View previous topic View next topic Go down

முகநூலில் ரசித்தவை - Page 8 Empty முகநூலில் ரசித்தவை

Post by ஸ்ரீராம் Thu Apr 18, 2013 11:51 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

இந்த பகுதியில் முகநூலில் ரசித்த படங்களை பதிவிடலாம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down


முகநூலில் ரசித்தவை - Page 8 Empty Re: முகநூலில் ரசித்தவை

Post by ஸ்ரீராம் Wed Oct 30, 2013 3:42 pm

என் அப்பாகிட்ட புது பைக் வாங்கி குடுங்கப்பானு தான் கேட்டேன்.

உடனே அவர், டேய் கடவுள் நமக்கு ரெண்டு கால்கள் எதுக்கு குடுத்து இருக்காருனு உனக்கு தெரியுமானு கேட்டார்.

உடனே நான் சொன்னேன், ஓ தெரியுமே. ஒரு கால் கியர் போட, இன்னொரு கால் ப்ரேக் புடிக்கனு சொன்னேன்.

# யாருக்கிட்ட எங்ககிட்டயேவா?! முடியுமா?!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முகநூலில் ரசித்தவை - Page 8 Empty Re: முகநூலில் ரசித்தவை

Post by ஸ்ரீராம் Wed Oct 30, 2013 3:43 pm

நீங்க பேசிட்டு இருக்கும் போது ஒருத்தர் தன்
கைக்கடிகாரத்தை திருப்பி பார்த்தால் அவர்
நேரம் பார்க்கிறார் என்று அர்த்தம் இல்லை.
"நீங்க ரொம்ப போர் அடிக்கறீங்க"..உங்க TIME OUT" ன்னு
சிம்பாளிக்கா உணர்த்துகிறார்ன்னு அர்த்தம்!!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முகநூலில் ரசித்தவை - Page 8 Empty Re: முகநூலில் ரசித்தவை

Post by முழுமுதலோன் Wed Oct 30, 2013 3:52 pm

ஸ்ரீராம் wrote:இது தருமபுரி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அம்மா குடிநீர் கடை.

இந்த கடைக்கு, ஒரு நாளுக்கு 36 பாட்டில்கள் மட்டுமே வழங்கப்படுகிறது.

இந்த கடை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது.

இதற்கு அரசு போக்குவரத்து கழகத்திலே பணியாற்றும் இருவர் விற்பனையாளர்கள்.

ஒருவருக்கு சம்பளம் ரூ 16,350 (பிடித்தம் போக).

இன்னொருவருக்கு சம்பளம் ரூ 20,100 (பிடித்தம் போக).

வரவையும், செலவையும் கணக்கு போட்டு பார்த்தா தலை சுத்துது...

அம்மா குடிநீர் எப்படி விற்க்கப்படுகிறது, அதனால் அரசாங்கத்திற்கு இழப்பு எவ்வளவு ஏற்ப்படுகிறது என்பதற்கான பதிவு மட்டுமே இது.
[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

முகநூலில் ரசித்தவை - Page 8 Empty Re: முகநூலில் ரசித்தவை

Post by ஸ்ரீராம் Wed Oct 30, 2013 4:00 pm

[You must be registered and logged in to see this image.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முகநூலில் ரசித்தவை - Page 8 Empty Re: முகநூலில் ரசித்தவை

Post by ஸ்ரீராம் Wed Oct 30, 2013 4:07 pm

இறைவனுக்கு அர்ச்சிக்கப்படும் சில வகை பொருட்களுக்கு குறிப்பிட்ட காலம் வரை விதிவிலக்கு உண்டு . வில்வ இலையை பறித்து 6 மாதங்கள் வரையிலும் , வெண்துளசியை பறித்து ஓராண்டு வரையிலும் , தாமரையை பறித்து 7 நாள் வரையிலும் , அரளியை பறித்து 3 நாட்கள் வரையிலும் வைத்திருந்து பூஜைக்கு பயன்படுத்தலாம் .
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முகநூலில் ரசித்தவை - Page 8 Empty Re: முகநூலில் ரசித்தவை

Post by sawmya Wed Oct 30, 2013 4:12 pm

சூப்பர் சூப்பர் சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

முகநூலில் ரசித்தவை - Page 8 Empty Re: முகநூலில் ரசித்தவை

Post by ஸ்ரீராம் Wed Oct 30, 2013 4:16 pm

ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள்,
மாலை மீண்டும் இருவரும் கூடும் போது.

ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும்
இருந்தார், மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம்.

நம்மை போல தானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது
சாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் அவனிடமே
கேட்டு விட்டான்!

நண்பன் அவனிடம் கேட்டான், இந்த விறகுகளுக்காக
நீ என்ன செய்தாய் என்று!

அவன் சொன்னான், இடை
விடாமல் வெட்டி கொண்டே இருந்தேன் என்று,..

சிறிதும் ஓய்வு இல்லாமலா என்று கேட்டான் நண்பன்,

ஆம் அதிக விறகுகள் பெற வேண்டுமே

ஆனால் நீ கொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி
என்று கேட்டான்!..

நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன்
என்று சொன்னான் நண்பன்!

மறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து
மரம் வெட்டினான்,

இருப்பினும் அவனால் நண்பன் அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை,

மறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க
வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான்,

மறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவன்
நண்பனை பின் தொடர்ந்து சென்றான்,

நண்பனும் அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக
அமர்ந்தான்,

ஆனால் அவன் ஓய்வு நேரத்தில் அவனது கோடாலியை
தீட்டி கொண்டிருந்தான்!

நன்றி முகநூல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முகநூலில் ரசித்தவை - Page 8 Empty Re: முகநூலில் ரசித்தவை

Post by ஸ்ரீராம் Wed Oct 30, 2013 4:17 pm

[You must be registered and logged in to see this image.]

அருச்சுனன் விட்ட அம்புமழையில் கர்ணன் குற்றுயிரும் குலைஉயிரும் ஆகிவிட்டான். ஆனால், சாகவில்லை. அவனால், சாகமுடியவில்லை. தரும தேவதை அவன் சாவைத் தடுத்து அருச்சுனன் விடும் அம்புகளை யெல்லாம் மலர்மாலை யாக மாற்றி அவன் கழுத்தில் விழுமாறு செய்கிறாள்... அருச்சுனன் திகைக்கிறான்! கண்ணனோ சிரிக்கிறான். அப்போது அங்கே ஓடோடி வந்த தன் தாய் குந்திதேவி, "அய்யோ மகனே!” என்று கர்ணனைப் பார்த்துக் கதறித் துடிப்பதைப் பார்த்து, மேலும் அருச்சுனன் குழம்ப, கண்ணன், கர்ணன்தான் குந்திதேவியின் மூத்தமகன் எனும் கதையைச் சொல்ல, சிறிது நேரம் கழித்துக் கர்ணன் உயிர்விடுகிறான். இப்போது அருச்சுனனும் கதறியவாறு கர்ணன் அருகில் ஓடிச் சென்று "அய்யோ அண்ணா! நானே உன்னைக் கொன்று விட்டேனே! நானே உன்னைக் கொன்று விட்டேனே" என்று சொல்லி அழுதபோது,

கண்ணன் அவனைக் கிண்டலாகப் பார்த்துச் சொன்னானாம்..

"நான் கொன்றேன் நான் கொன்றேன் என்கிறாயே! அருச்சுனா! நீ மட்டுமா கர்ணனைக் கொன்றாய்?அவனது குருநாதர் "சரியான நேரத்தில் உன் அம்புக்குறி தவறட்டும்" என்று கொடுத்த சாபம்தான் முதலில் அவனைக் கொன்றது.பின்னர், மாறு வேடத்தில் சென்ற இந்திரன், கவச குண்டலங்களைத் தானம்கேட்டு வாங்கிக்கொண்ட போது கர்ணன் மீண்டும் கொல்லப்பட்டு விட்டான்.பிறகு உங்களின் தாய் குந்தி, "போரின்போது இரண்டாவது முறையாக நாகபாணத்தை அருச்சுனன் மீது ஏவுவதில்லை" எனும் வரத்தைக் கேட்டு அவனை இறுதியாகவும் கொன்று முடித்தாள். பிறகுதான் இந்த பாரதப் போரே தொடங்கியது.

போதாத குறைக்கு இதோ நானும் இப்போது அவனது புண்ணியத்தையெல்லாம் தானமாகக் கேட்டு வாங்கிய பிறகே அவனது உயிரைத் தரும தேவதை விட்டுத்தந்தாஇப்படி ஏற்கெனவே மாதா -பிதா -குரு -தெய்வம் ஆகிய நான்குபேருமே அவனைக் கொன்று முடித்த பிறகுதான் உன் அம்பு அவனைத் துளைத்தது. என்னவோ நீயே உன் வீரத்தால் அவனைக் கொன்றுவிட்டதாக நினைத்துக் கொண்டு, "நான் கொன்றேன் நான் கொன்றேன்" என்று பிதற்றுகிறாய்! செத்தபாம்பை அடித்த உன்னாலா அவன் கொல்லப்பட்டான்?" என்று பார்த்தன் கூறினான் அர்ஜுனனிடம்.

கண்ணன் அர்ஜுனனுக்கு மட்டும் சாரதி இல்லை.. இந்த பாரத தேசத்திற்கும் அவன் தான் சாரதி....கண்ணன் வழி நடப்போம்.

நன்றி முகநூல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முகநூலில் ரசித்தவை - Page 8 Empty Re: முகநூலில் ரசித்தவை

Post by ஸ்ரீராம் Wed Oct 30, 2013 4:19 pm

ஆசை மட்டும் ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாய் வந்து நம்மை அழித்துவிடுகிறது

முனிவர் ஒருவரின் தவத்தை மெச்சி கடவுள் அவருக்கு காட்சி கொடுத்து, "என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டார்....

“தங்கள் தரிசனமே எனது தவத்தின் நோக்கம்;
வேறெதுவும் வேண்டாம்” என்றார் அந்த முனிவர்.

கடவுள், “நான் உனக்கு ஒரு விருஷத்தை வரமாக தருகிறேன். கற்பக விருஷம் மாதிரி. இதனிடம் கேட்கக் கூட வேண்டாம்.
அதனடியில் நின்று கொண்டு யார் என்ன நினத்தாலும் அது உடனே நடக்கும்” என்று அருளினார் .

இந்த மரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இது நமக்கு ஆசையை வளர்த்து நம்மை பாவம் செய்ய வைக்கும் என்று சிந்தித்த முனிவர் அங்கிருந்து ஓடி விட்டார்.

ஒரு நாள் அந்த வழியே ஆடு மேய்த்துக் கொண்டு வந்த ஒரு இளைஞன் வந்தான். அந்த மரத்து நிழலில் கொஞ்சம் படுத்து ஓய்வெடுக்க நினத்தான்.

அந்த மரத்தடியில் வந்து படுத்துக் கொண்டே யோசித்தான், “இது என்ன பொழைப்பு; தினம் தினம் ஆட்டை மேய்ச்சிட்டு, ஒரு நல்ல சாப்பாடு கூட சாப்பிட்ட முடிவதில்லை.

அரண்மனையில் சாப்பிடற விருந்து மாதிரி சாப்பாடு கிடைச்சா தேவலை”அந்த மரத்தினடியிலிருப்பவர் எதை நினைத்தாலும் மரம் தரக்கூடியது என்பதால் அவன் கண் முன்னே அவனுக்கு ராஜோபசார விருந்து படைக்கப்பட்டிருந்தது.

அவன் பயந்து போய் விட்டான். இது ஏதாவது பிசாசு அல்லது பூதத்தின் வேலையாக இருக்குமோ என்று அந்த மரத்தை சுற்றி சுற்றி வந்தான். ஒன்றுமில்லாததால், பயம் தெளிந்து அந்த விருந்தை ஆவலுடன் சாப்பிட்டா ன்.

அவன் மீண்டும் யோசித்தான், “சாப்பிட்டதுக்குப் பின்னால் வசதியாகப் படுக்க வேண்டும்”அந்த மரம் அவன் நினைத்தபடி அவனை நல்ல கட்டில் மெத்தையில் படுக்க வைத்தது.

தூக்கத்திலிருந்து விழித்த அவன், “நான் நடுக்காட்டில இப்படி மரத்துக்கடியில் படுத்திருக்கிறேனே திடீரென்று புலி வந்து நம்மை அடிச்சுக் கொன்று விட்டால் ….”.

அவன் எண்ணப்படியே புலி வந்து அவனை அடித்துக் கொன்றது.

ஆசை மட்டும் ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாய் வந்து நம்மை அழித்துவிடுகிறது


நன்றி முகநூல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முகநூலில் ரசித்தவை - Page 8 Empty Re: முகநூலில் ரசித்தவை

Post by ஸ்ரீராம் Wed Oct 30, 2013 4:32 pm

தயக்கமே வெற்றிக்கு முதல் எதிரி
அத்வைத் சதானந்த்
நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள்.

நீல்ஆம்ஸ்ட்ராங் என்று.

நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது என்பதால் தானே சொல்லிவிடுகிறேன். அவர் எட்வின் சி ஆல்ட்ரின். அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட் அதாவது விமானி.

ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் விமானியாக நியமிக் கப்பட்டார்.

நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலை பார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி.

இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.

இடது காலை எடுத்து வைப்பதா? வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல. ‘நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்கிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால் எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால் தயக்கத்தில் மணிக்கணக்காக தாமதிக்கவில்லை. சில நொடிகள்தான் தாமதித்திருப்பார்.

அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது. கோ பைலட் நெக்ஸ்ட். நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்து வைத்தார்.

உலக வரலாறு ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியும் இருந்தும் கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.

முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல, தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.

இனி நிலவை பார்க்கும் போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்து விடுகிறது. நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம். பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி.

நன்றி முகநூல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முகநூலில் ரசித்தவை - Page 8 Empty Re: முகநூலில் ரசித்தவை

Post by ஸ்ரீராம் Wed Oct 30, 2013 4:32 pm

[You must be registered and logged in to see this image.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முகநூலில் ரசித்தவை - Page 8 Empty Re: முகநூலில் ரசித்தவை

Post by ஸ்ரீராம் Wed Oct 30, 2013 4:35 pm

கொஞ்சி கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்
உண்மை இதை உணர்ந்து
நன்மை பெறப் படித்து
உலகினில் பெரும் புகழ் சேர்த்திடடா-மருத காசி


நன்றி முக நூல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முகநூலில் ரசித்தவை - Page 8 Empty Re: முகநூலில் ரசித்தவை

Post by ஸ்ரீராம் Wed Oct 30, 2013 4:36 pm

வக்கிலிடம் பிரச்சினையுடன் ஒருத்தார் வந்தார்,
வக்கீல்: என்ன பிரச்சினை?
வந்தவர்; சார், என் நண்பர் என்னிடம் ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கி ஓரு வருஷம் ஆச்சு சார். இந்தா தரேன் அந்தா தரேன்னு இழுத்து அடிக்கிறார்.
வக்கீல்: ஏதாவது எவிடன்ஸ் இருக்கா?
வந்தவர்: ஒன்னும் இல்லை சார்.
வக்கீல்: அப்படின்னா அவருக்கு நீங்க கொடுத்த ஓரு லட்ச்சத்தை எப்போ திருப்பி தரேன்னு கேட்டு ஒரு லேட்டார் எழுதுங்க
வைத்தவர்: அம்பதாயிரம் தானே சார்.
வக்கீல்: உங்களிடம் கடன் வாங்கியவரும் இதையே சொல்லி பதில் எழுதுவார் . அதான் எவிடன்ஸ். அதை எடுத்து கொண்டு வாங்க பேசிக்கலாம்.


நன்றி முக நூல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முகநூலில் ரசித்தவை - Page 8 Empty Re: முகநூலில் ரசித்தவை

Post by ஸ்ரீராம் Wed Oct 30, 2013 4:40 pm

ஒரு சீடன் தன் குருவிடம் கேட்டான்,

''நல்லதைப் படைத்த ஆண்டவன் தானே கெட்டதையும் படைத்துள்ளான்.அதனால் நல்லதை மட்டும் ஏற்பதுபோல கெட்டதையும் ஏற்றால் என்ன?''

குரு சிரித்துக் கொண்டே,

''அது அவரவர் விருப்பம்,''என்றார்.

பகல் உணவு வேலை வந்தது.அந்த சீடன் தனக்கு அளிக்கப்பட உணவைப் பார்த்து அதிர்ந்து விட்டான். ஒரு கிண்ணத்தில் பசு மாட்டு சாணம் மட்டும் வைக்கப்பட்டு அவனிடம் உண்ணக் கொடுக்கப்பட்டது.

சீடன் விழித்தான். குரு புன்முறுவலுடன் அவனிடம் சொன்னார்,

''பால்,சாணம் இரண்டுமே பசு மாட்டிடம் இருந்து தானே வருகிறது. பாலை ஏற்றுக் கொள்ளும்போது சாணியை ஏற்றுக் கொள்ளக் கூடாதா?''

நல்ல செய்திகளைப் பகிர்வோம் பயனடைவோம்.

நன்றி முகநூல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முகநூலில் ரசித்தவை - Page 8 Empty Re: முகநூலில் ரசித்தவை

Post by ஸ்ரீராம் Wed Oct 30, 2013 4:42 pm

[You must be registered and logged in to see this image.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முகநூலில் ரசித்தவை - Page 8 Empty Re: முகநூலில் ரசித்தவை

Post by ஸ்ரீராம் Wed Oct 30, 2013 4:44 pm

நான் ரசித்த புதுமொழிகள்

• எடிசன் வீட்டு ஏணிப்படியும் ஷாக் அடிக்கும்

• ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்

• ஒடும் குதிரை ஓட்டத்தில் தெரியும்

• ஒரு பொய்க்கு ஒரு மூட்டை பொய் பாலம்

• கார் ஓட டயரும் தேயும்

• சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு

• சைக்கிள்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை

• தான் ஓடாவிட்டாலும் தன் கடிகாரம் ஓடும்

• தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்

• துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பெரியது

• பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல்

• மிதிக்க மிதிக்க சைக்கிளும் நகரும்

• முடியுள்ள போதே சீவிக் கொள்

• பழகின செருப்பு காலை கடிக்காது

• மாத நாட்காட்டிக்கு ஒரு முறை கிழி, தின்நாட்காட்டிக்கு தினம்தினம் கிழி

• ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே

- ஜெனி ரோஜர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முகநூலில் ரசித்தவை - Page 8 Empty Re: முகநூலில் ரசித்தவை

Post by ஸ்ரீராம் Wed Oct 30, 2013 4:47 pm

உங்களை பத்தி பத்து விஷயம் சொல்லட்டா?

1. இந்த நிமிஷம் இதை படிச்சுகிட்டிருக்கீங்க.
2. உங்களுக்கு தமிழ் தெரியும்.
3. உதடு பிரிக்காம "ப" னு சொல்ல முடியாது.
4. சொல்லி பார்த்துகிட்டீங்க.
6. உங்களை நெனச்சு நீங்களே சிரிச்சுக்கறீங்க.

7. சிரிச்ச சிரிப்புல அஞ்சாம்நம்பர் மிஸ் ஆனத கவனிக்காம விட்டுட்டீங்க.

8. நம்பர் 5 இருக்கா? னு செக் பண்ணி அடடே இல்லையேன்னு சூள் கொட்டறீங்க.

9. இன்னும் வாய் விட்டு சிரிக்கறீங்க... ஏன்னா உங்களுக்கு நகைச்சுவை உணர்வு சாஸ்தி.

10. அடுத்தவங்களுக்கும் கூப்பிட்டு படிச்சு காட்டுவீங்க இல்லேன்னா இருக்கவே இருக்கு "ஷேரிங்".

# அந்த 5 - வது விஷயம் என்னன்னு கேக்குறீங்களா?
அட இப்போ லைக் போடுவீங்க பாருங்க அதான், ஏன்னா நீங்க ரொம்ப நல்லவங்க .

- ஜெனி ரோஜர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முகநூலில் ரசித்தவை - Page 8 Empty Re: முகநூலில் ரசித்தவை

Post by ஸ்ரீராம் Wed Oct 30, 2013 4:58 pm

[You must be registered and logged in to see this image.]

போடா வெங்காயம் - இப்ப போங்க வெங்கயாம் அளவுக்கு மதிப்பு கூடிப்போச்சு - ஆனியன் டாப் 12

1, சரிந்துவரும் பணமதிப்பை சரி செய்ய 300 டன் வெங்காயத்தை உலக வங்கியிடம் அடகு வைக்க முடிவு....

2. நாட்டு மக்கள் வெங்காயம் வாங்குவதை குறைத்து கொள்ளவும்.. நிதியமைச்சர் உருக்கம்...

3. விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட 5கிலோ வெங்காயம் பிடிபட்டது...

4. வெங்காயம் வாங்க லோன் வசதி.. அனைத்து வங்கிகளும் முடிவு..

5. சென்னையில் துணிகரம் "பட்டப்பகலில் வீடு புகுந்து பீரோவை உடைத்து 10 கிலோ வெங்காயம் திருட்டு...

6. 5 கிலோவிற்கு மேல் வெங்காயம் வைத்தி ருப்பவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்..

7. உலக கோடிஸ்வரர்கள் மாநாட்டில் ஆம்லேட்டுக்காக 30 கிலோ வெங்காயம்!!! சாமானியர்கள் ஏக்கம்..

8. வாரம் 1 கிலோ வெங்காயம் தருவதாக சொன்ன நிதி நிறுவனம் ஓட்டம்..ஏமாந்த மக்கள் கண்ணீர்...

9. வெங்காயத்தை அடகு வாங்கும் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற வேண்டும்...

10. பாகிஸ்தானிலிருந்து போலியாக புழக்கத்தில் விடப்படும் வெங்காயத்தை கண்டறிய நவீன கருவி வாங்கப்படும்

11/ பிரிட்டனில் நடந்த உலகின் அதிக பரிசுத் தொகை கொண்ட லாட்டரி குலுக்கலில் 5டன் வெங்காயம் வென்ற அதிர்ஷ்டசாலி...

12. ஐபிஎல் வீரர்கள் சம்பளத்திற்கு பதில் வெங்காயம் தர வேண்டும் கேப்டன்கள் வேண்டுகோள்....

நன்றி முகநூல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முகநூலில் ரசித்தவை - Page 8 Empty Re: முகநூலில் ரசித்தவை

Post by முரளிராஜா Wed Oct 30, 2013 9:38 pm

நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முகநூலில் ரசித்தவை - Page 8 Empty Re: முகநூலில் ரசித்தவை

Post by ஸ்ரீராம் Thu Nov 07, 2013 9:37 am

[You must be registered and logged in to see this image.]

ஒரு குடம் நீருக்காக ....
ஒரு குடம் நீருக்காக
தினம்தினம் உயிரை பணயம் வைத்து
விவசாயக் கிணற்றுக்குள் இறங்கும்
ஆந்திர கம்மம் மாவட்டம் காரப்பள்ளி
ஆதிவாசிப்பெண்கள்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முகநூலில் ரசித்தவை - Page 8 Empty Re: முகநூலில் ரசித்தவை

Post by ஸ்ரீராம் Thu Nov 07, 2013 9:40 am

[You must be registered and logged in to see this image.]

நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற பொது ஹிட்லருடைய ஆட்கள் நேதாஜியை ஒரு அறையில் உக்கார வைத்தனர் . நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டார் . ஹிட்லருடைய ஆட்கள் ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர் .
ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல் படிப்பதை தொடர்ந்தார் . இதில் என்ன விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற வேடமணிந்தவர்களைகண்டு பல மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்தாக சொல்லியிருக்கிறார்கள்..
கடைசியில் ஹிட்லரே வந்து நேதாஜியின் தோளில் கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள் "ஹிட்லர் " என்றார் . ஹிட்லருக்கு ஒரே வியப்பு...
ஹிட்லர் நேதாஜியிடம் " எப்படி நீங்கள் என்னை கண்டுபிடித்தீர்கள் இதற்கு முன் நீங்கள் என்னை சந்தித்தது கிடையாது " என்று கேட்டார்.
நேதாஜி அவர்கள் "இந்த உலகத்தில் சுபாஷ் சந்திர போசின் தோளில் கை வைக்க ஹிட்லரை தவிர வேறு யாருக்கும் தைரியம் கிடையாது" என்றார்...!

நன்றி முகநூல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முகநூலில் ரசித்தவை - Page 8 Empty Re: முகநூலில் ரசித்தவை

Post by sawmya Thu Nov 07, 2013 11:00 am

''இங்கிதம் என்றால் என்ன?''

வைரமுத்து : ''நான் பெரிதும்
மதிக்கும் பெரும் பாடகி ஒருவர்
எங்கள் வீட்டுக்கு வருகை தந்தார்.
தெரிந்தோ தெரியாமலோ காலணிகளைக்
கழற்றாமல் வீட்டுக்குள் நுழைய
எத்தனித்தார்.
அதை எப்படி உணர்த்துவது? 'அம்மா!
உங்கள் பாதங்கள் என் வீட்டில் பட
வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!’
என்றேன். பதறிப்போய்க்
காலணிகளைக்
கழற்றிவிட்டு வந்தார்.
புண்படுத்தாமல்
பண்படுத்துவது இங்கிதம்!''



--கவிஞர் வைரமுத்து.
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

முகநூலில் ரசித்தவை - Page 8 Empty Re: முகநூலில் ரசித்தவை

Post by sawmya Thu Nov 07, 2013 11:02 am

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு.. 

கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு... 

கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது.. 

. கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்.. 

அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்'டை கடக்காமல் நின்றது... 

பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது... 

கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை... அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார். .. 

அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது.. 

ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது.. 

கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்.. 

இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது... 

கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்... 

நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது... 

கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்... 

நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்.... 

கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே ...??? 

அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு.... 

# # # # 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

முகநூலில் ரசித்தவை - Page 8 Empty Re: முகநூலில் ரசித்தவை

Post by ஸ்ரீராம் Tue Nov 12, 2013 11:00 am

[You must be registered and logged in to see this image.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முகநூலில் ரசித்தவை - Page 8 Empty Re: முகநூலில் ரசித்தவை

Post by ஸ்ரீராம் Tue Nov 12, 2013 11:01 am

[You must be registered and logged in to see this image.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முகநூலில் ரசித்தவை - Page 8 Empty Re: முகநூலில் ரசித்தவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 18 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 18  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum