Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பச்சடிகள் பலவிதம்.
Page 1 of 1 • Share
பச்சடிகள் பலவிதம்.
வேப்பம்பூ தேன் பச்சடி--
வேப்பம்பூ - ஒரு கொத்து (சுத்தம் செய்தது),
சுத்தமான வெல்லம் - அரை கப்,
துருவிய மாங்காய் - அரை கப்,
நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
தேன் - ஒரு டேபிள் ஸ்பூன்.
வேப்பம்பூவை சுத்தம் செய்து, காயவிட்டு பின் நெய்யில் பொன்னிறமாக வறுத்து தூள் செய்யவும். சுத்தமான வெல்லத்தை கொதிக்கவிட்டு பாகு தயாரிக்கவும். துருவிய மாங்காயை சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.
அது நன்கு வெந்ததும் அத்துடன் வெல்லப்பாகு, உப்பு, வேப்பம்பூ பொடி (தூள்) சேர்த்து கொதிக்க விட்டு அல்வா பதம் வந்ததும் இறக்கி அதன்மேல் தேனை ஊற்றி பரிமாறவும். இனிப்பு, புளிப்பு, கசப்பு என்னும் மூன்று வகை சுவையோடு சாப்பிடலாம்.
குறிப்பு: குழந்தைகளுக்கு நல்லது. தேன் கலந்து இருப்பதால் குழந்தைகளுக்கு கொடுக்கும்போது மேலும் சிறிது தேன் சேர்த்து கொடுக்கலாம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பச்சடிகள் பலவிதம்.
நெல்லிக்காய் பச்சடி
தேவையான பொருட்கள்
பெரிய நெல்லிக்காய் - 5
தயிர் - 1 கோப்பை
பச்சை மிளகாய் - 2
தேங்காய் துருவல் - ஒரு மேஜைக்கரண்டி
கடுகு - சிறிதளவு
உளுத்தம்பருப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. சிறிது எண்ணெயில் பச்சை மிளகாயை வதக்கிக் கொள்ளவும்.
2. நெல்லிக்காயை வதக்கி, கொட்டை நீக்கி, உப்பு, வதக்கிய பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து அரைக்கவும்.
3. அரைத்த நெல்லிக்காய் விழுதுடன் தயிரைச் சேர்க்கவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, தயிருடன் உள்ள நெல்லிக்காய் விழுதில் கொட்டவும்.
5. அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை, தேங்காய்ப்பூ சேர்த்து பரிமாறவும்.
குறிப்பு
1. தேங்காய்ப்பூவை நெல்லிக்காயுடன் சேர்த்தும் அரைக்கலாம், தனியாகவும் சேர்க்கலாம்.

நெல்லிக்காய் தயிர் பச்சடி --
தேவையானவை:
நெல்லிக்காய் / நெல்லிக்கனி: ஆறு
தயிர்: ஒரு கப்
தேங்காய்த்துருவல்: கால் கப்
பச்சை மிளகாய்: இரண்டு
இஞ்சித்துண்டு: ஒன்று
உப்பு: வேண்டிய அளவு
தாளிக்க:
கொஞ்சம் நல்லெண்ணெய், ஒரு சிட்டிகை தூள் பெருங்காயம், ஒரு சிட்டிகை கடுகு
செய்முறை:
நெல்லிக்கனிகளை கொட்டைகளின்றி சிறு துண்டுகளாக்கி, அவற்றுடன் துருவப்பட்ட தேங்காயையும், ஒடிக்கப்பட்ட பச்சை மிளகாய்களையும், தோல் நீக்கப்பட்டதும் நசுக்கப்பட்டதுமான இஞ்சியையும் கலந்து நன்றாக அரைத்து, தயிரையும் உப்பையும் சேர்த்துக் கிளறவும். இது, தாளிக்காத பச்சடி ஆகும்.
இருப்புச்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ச்சி, கடுகு வெடிக்கச் செய்து, பெருங்காயம் சேர்த்து, தாளிக்காத பச்சடியையும் ஒன்றாகக் கலந்து, கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விட்டால், அடடா வைட்டமின் சி நிறைந்த பச்சடி உங்கள் முன்னே!

மாதுளம் பச்சடி
தயிர் பச்சடி என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். இதில் மாதுளை பச்சடி என்றால் எப்படி இருக்கும். செட்டிநாட்டு கல்யாணங்களிலோ அல்லது உணவு விடுதிகளிலோ இதனை நீங்கள் ருசித்திருப்பீர்கள். கோடைக்கும் சிறந்தது. உடலுக்கும் ஏற்றது.
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை
மாதுளை பழம் - 1
தயிர் - ஒன்றரை கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கேற்ப
செய்யும் முறை
வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை நீளமாக நறுக்கிக்கொள்ளவும்.
வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து பிசறி வைத்துவிடவும்.
தயிரை கிண்ணத்தில் ஊற்றி நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். அதில் மேற்கூரிய கலவைகளை சேர்க்கவும்.
உணவு தயாரானதும் சாப்பிடும்போது இந்த தயிர் பச்சடியில் உதிர்த்து வைத்திருக்கும் மாதுளை முத்துக்களையும் மேலாகத் தூவி பரிமாறவும்.
மாதுளை முத்துக்கள் நன்கு சிவந்து இருந்தால் தயிருடன் கண்ணைக் கவரும் வண்ணத்தில் சுவையான தயிர் பச்சடியாக ஜொலிக்கும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பச்சடிகள் பலவிதம்.
உளுந்து பச்சடி---
தேவையானவை:
வெள்ளை உளுந்து- 1/4 கப்,
தயிர் - 1 கப்
தாளிக்க எண்ணெய் - 2 ஸ்பூன், கடுகு - கொஞ்சம்,
பெருங்காய தூள் - கொஞ்சம்
வரமிளகாய்- 4
உப்பு- தேவையானது.
செய்முறை:
உளுந்தை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெடித்ததும், பெருங்காயம், வரமிளகாய் போட்டு அடுப்பை அணைத்து ஆறியபின் அதில் உளுந்து பொடி, தயிர், ஊப்பு,போட்டு நன்கு கலக்கவும். சூப்பர் வாசனையுடன் இருக்கும். சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். தோசைக்கும் நன்றாக இருக்கும்.

வெள்ளரிக்காய் பச்சடி
தேவையான பொருள்கள்:
வெள்ளரிக்காய் - 1
கடுகு,பெருங்காயம் ,உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெள்ளரிக்காயை தோல்சீவி துருவி கொள்ளவும்.
இதை ஒருகப் தயிரில் போட்டு உப்பு சேர்க்கவும்.பின்னரி கடுகு,பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து கொட்டி கலக்கி பரிமாறவும்.

வேப்பம் பூ பச்சடி
தேவையானவை:
வேப்பம் பூ 2 டேபிள்ஸ்பூன்
புளி எலுமிச்சைஅளவு
வெல்லம் 1 டேபிள்ஸ்பூன் (பொடித்தது)
அரிசி மாவு 1 டீஸ்பூன்
--
கடுகு 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
மிளகாய் வற்றல் 3
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
வேப்பம் பூ சிறிது எண்ணைய் விட்டு நல்ல கறும் சிவப்பாக வறுக்கவும்.
வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு,கிள்ளிய மிளகாய்வற்றல்.பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை தாளிக்கவும்.
புளியை அரைகப் தண்ணீரில் கரைத்துவிடவும்.உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.பொடித்த வெல்லத்தைப் போட்டு நன்றாக கொதித்தபின் அரிசிமாவை கரைத்துவிடவும்.

மாங்காய் இனிப்பு பச்சடி:
தேவையானவை:
மாங்காய் 1
வெல்லம் 1/2 கப் (பொடித்தது)
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
அரிசிமாவு 1 டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2
உப்பு தேவையானது
செய்முறை:
மாங்காயை தோலைச் சீவி துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்சிறிது தண்ணீர் விட்டு மாங்காய் துண்டுகள்,உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்.மாங்காய் வெந்ததும் பொடித்த வெல்லத்தைப் போட்டு வெல்லம் கரைந்து சேர்ந்த பின் அரிசிமாவு கரைத்து விட்டு கொதிக்கவிடவும் .அடுப்பை அணைத்து கடுகு பச்சைமிளகாய் தாளித்து கொட்டவும்.

முருங்கைக்காய் பச்சடி:
நான்கு முருங்கைக்காய்களை நீட்ட துண்டுகளாக நறுக்கிவேகவைத்து உள்ளே இருக்கும் சதைப் பகுதிகளை வெளியே எடுக்கவும்.
பச்சைமிளகாய் (1),இஞ்சி (ஒரு துண்டு) சீரகம் (1tsp) மூன்றையும் அரைக்கவும்.
வெங்காயம் ஒன்றை பொடியாக நறுக்கவும்.
ஒரு கப் தயிரில் முருங்கை விழுது,அரைத்த விழுது,பொடியாக நறுக்கிய வெங்காயம்,உப்பு சேர்த்து கலக்கவும். கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.

தக்காளி பச்சடி
தக்காளியை வென்னீரில் போட்டு தோலுரித்து மசிக்கவும்.
தேங்காய் துருவல் (1 tsp),பச்சைமிளகாய் (1),பெருங்காயத்தூள் (1 tsp) மூன்றையும் விழுது போல அரைக்கவும். ஒரு கப் தயிரில் மசித்த தக்காளி,அரைத்த விழுது கலந்து கடுகு,உளுத்தம்பருப்பு, சீரகம் தாளிக்கவும்.

குடமிளகாய் பச்சடி:
ஒரு குடமிளகாயை பொடியாக நறுக்கி எண்ணைய் விட்டு நன்கு வதக்கவும்.
பொட்டுக்கடலை (1 tsp),இஞ்சி துருவல் (1 tsp),பச்சைமிளகாய் (1),மல்லித்தழை (சிறிதளவு) நான்கையும் விழுதாக அரைக்கவும்.
ஒரு கப் தயிரில் வதக்கின குடமிளகாய்,அரைத்த விழுது,உப்பு சேர்த்து கலக்கவும்.
கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.

வெள்ளரி பச்சடி:
வெள்ளரிக்காய் ஒன்றை எடுத்து தோல் சீவி துருவிக்கொள்ளவும்.
பச்சைமிளகாய் (1) கடுகு (1/2 tsp) தேங்காய் துருவல் (1 tsp),பெருங்காயத்தூள் (1/2 tsp) நான்கையும் விழுதுபோல அரைக்கவும்.
ஒரு கப் தயிரில் துருவிய வெள்ளரிக்காய்,அரைத்த விழுது,உப்புடன் சேர்த்து கலக்கவும். சீரகம் கறிவேப்பிலை தாளிக்கவும்.

அன்னாசிப் பழ பச்சடி:
அன்னாசிப் பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவும்.
தேங்காய் துருவல் (1tblsp),பச்சைமிளகாய் (2), சீரகம் (1tsp)மூன்றையும் விழுது போல அரைக்கவும். ஒரு கப் தயிரில் வேகவைத்த அன்னாசித் துண்டுகள்,அரைத்த விழுது உப்பு சேர்த்து கலக்கவும். கறிவேப்பிலை தாளிக்கவும்.
http://pettagum.blogspot.in/

நான் இன்று மதியம் வெள்ளரிக்காய் + மாங்காய் பச்சடி எங்கள் வீட்டில் நன்றாக சாப்பிட்டேன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» ஆரோக்கியம் தரும் பச்சடிகள்
» ருசிக்க மணக்க.....சுவையான பச்சடிகள்
» பறவைகள் பலவிதம்
» லட்சுமிகள் பலவிதம்
» சிரிப்புக்கள் பலவிதம்..!
» ருசிக்க மணக்க.....சுவையான பச்சடிகள்
» பறவைகள் பலவிதம்
» லட்சுமிகள் பலவிதம்
» சிரிப்புக்கள் பலவிதம்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum