Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
மூன்று உண்மைக்கதைகள்
மூன்று உண்மைக்கதைகள்
முதல் கதை
ஒருமுறை ஒரு விஞ்ஞானி தன்னைப் போலவே இன்னொரு வரை உருவாக்கும் முறையைக் கண்டு பிடித்தார். அதன்படி அவர் உருவாக்கிய நகலுக்கும் அசலான அவருக்கும் வேறுபாடே இல்லை. யாரும் அப்படி ஒரு மாறுபாட்டைக் காணவியலாதபடி அவ்வளவு திறமையாக நகல் மனிதனை உருவாக்கி இருந்தார்.
ஒருநாள் தன்னை மரண தேவதை தேடுவதாக அறிந்தார். எனவே தன்னைப் போலவே, பன்னிரண்டு பேரை உருவாக்கினார். அவர்களை வரிசையாகத் தன்னுடன் அமர வைத்தார்.
மரண தேவதைக்கு, அந்த பதின்மூன்று பேரில் யார் அசல் விஞ்ஞானி என்று கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அது அவர்களை அப்படியே விட்டு விட்டு சொர்க்கத்துக்கு திரும்பியது. ஆனால், அதிக நாட்கள் அப்படி விட்டு வைக்கவில்லை. மனிதர்களின் குண இயல்புகளை நன்றாக அறிந்த மரண தேவதை, புதிய திட்டத்தோடு மீண்டும் விஞ்ஞானியைத் தேடி வந்தது.
""ஐயா! நீங்கள் உண்மையிலேயே பெரிய மேதைதான்! சந்தேகமில்லை. உங்களைப் போலவே தத்ரூபமாய் உருவாக்குவதில் வெற்றி கண்டுவிட்டீர்கள். ஆனாலும் ஒரு சின்ன குறைபாட்டை உங்கள் படைப்பில் நான் கண்டுபிடித்து விட்டேன்! அது சின்ன குறைதான்!'' என்றது.
உடனே, இந்த விஞ்ஞானி துள்ளிக் குதித்து, ""நிச்சயம் இருக்க முடியாது! எங்கே குறைபாடு? என்ன குறை?'' என்று கத்தினார்.
""இங்கேதான்!'' என்று மரண தேவதை அந்தப் பதின்மூன்று பேரில் அசல் விஞ்ஞானியை வெளியே இழுத்தது. அவரை உலகத்திலிருந்து பறித்துச் சென்றது.
எப்புடி?
இரண்டாவது கதை
இங்கிலாந்தில் ஒருநாள், ஒரு குதிரை வீரன் தன் வேட்டைக் குழுவினருடன் வேட்டையாட ஒரு பகுதிக்கு வந்தான்.
அப்பகுதியின் முன் பக்கம், ஒரு சிறுவன் வாசற் கதவுகளை அடைத்துக் கொண்டு, காவல் காத்துக் கொண்டிருந்தான்.
""பையா! கதவுகளைத் திறந்து விடு!'' என்றான் குதிரை வீரன்.
""மன்னிக்க வேண்டும் ஐயா! எங்களது இந்தப் பகுதியில் யாரும் வேட்டையாடக் கூடாது என்று சொல்வதற்காகவே என்னை நிறுத்தி இருக்கின்றனர். அதனால் திறப்பதற் கில்லை!'' என்றான் சிறுவன்.
""நான் யார் தெரியுமா?'' என்று அதட்டலாகக் கேட்டான் குதிரை வீரன்.
""தெரியாது ஐயா!'' என்றான் பையன்.
""நான் தான் வெல்லிங்டன் பிரபு!''
பையன் உடனே தலைகுனிந்து, தொப்பியை எடுத்து வணக்கம் செய்தான். ஆனால், கதவுகளைத் திறக்கவில்லை.
""வெல்லிங்டன் பிரபு என் தந்தையின் கட்டளையை மீறும்படி என்னைக் கேட்கமாட்டார்,'' என்றார் பணிவுடன்.
வெல்லிங்டன் மெதுவாகத் தன் தொப்பியைக் கழற்றி புன்னகை செய்தார்.
""சிறுவனே! உன் கடமை உணர்வை நான் மதிக்கிறேன்,'' என்றார்.
பிறகு வெல்லிங்டன் பிரபு தன் ஆட்களை அழைத்துக் கொண்டு திரும்பினார்.
மூன்றாவது கதை
ஒரு முதியவர், நியூயார்க் நகரின் சாலை முடக்கு ஒன்றில் நடந்து போய்க் கொண்டிருந்தார். திடீரென்று அவர் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு நினைவு தப்பி இருந்தது. சிகிச்சை செய்த தாதி சிறிது விசாரணைக்குப்பின், அந்த முதியவருக்கு ஒரு மகன் இருப்பதையும், அவன் வடகரோலினாவில் தங்கியிருந்த ஒரு கப்பல் குழுவினருடன் இருப்பதையும் அறிந்து கொண்டனர்.
உடனே அந்தக் குழுவின் தலைவரைத் தொடர்பு கொண்டு, அந்த மாலுமியை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கக் கேட்டுக் கொண்டார். அதன்படி அந்த மாலுமியும் விரைந்து வந்தார். அவனை முதியவரின் படுக்கை அருகில் அழைத்து சென்றனர். நினைவு புரண்டபடி இருந்த முதியவரிடம், ""உங்கள் மகன் வந்திருக்கிறார்,'' என்றனர்.
அதற்குள் அவருக்கு மீண்டும் நினைவு தப்பிவிட்டது. ஆனால், அவரது கை மட்டும் மெதுவாக நீண்டு மகனது கைகளை இறுகப் பற்றிக்கொண்டது. மாலுமி அந்தக் கையை மென்மையாய் ஏந்தியபடி அடுத்த சிலமணிநேரம் அருகிலேயே இருந்தார்.
தாதியர்கள் மாறி, மாறி வந்தனர்.
""நீங்கள் வேண்டுமானால் வெளியே போய் சற்றே ஓய்வெடுக்கலாமே!'' என்றனர்.
ஆனால், அந்த மாலுமி அசையவில்லை.
பின்னர் அந்த முதியவரின் மூச்சு அடங்கியது. பின்னர் அந்த மாலுமி தாதியிடம், ""யார் அந்த முதியவர்?'' என்று விசாரித்தார்.
""அவர் உங்கள் அப்பா இல்லையா?'' என்று வியப்புடன் கேட்டார் தாதி.
""இல்லை! ஆனால், அவர் மகனின் அன்புக்கும், ஆதரவுக்கும் ஏங்கியதாகத் தெரிந்தது. அதனால்தான் சில மணி நேரம் அவரது மகனாக இருந்தேன்,'' என்றார் மாலுமி.
அன்புக்கு ஈடு இந்த உலகில் எதுவுமே இல்லை.
நன்றி : தினமலர்

ராஜா- பண்பாளர்
- பதிவுகள் : 67
Re: மூன்று உண்மைக்கதைகள்
மூன்றும் 

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: மூன்று உண்மைக்கதைகள்
மிக அருமையான கதைகள்
புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259 உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520

» மூன்று பேர் மூன்று காதல் – திரை விமர்சனம்
» உண்மைக்கதைகள்
» மூன்று வரங்கள்
» மூன்று விஷயங்கள்.....
» மூன்று சொற்கள்
» உண்மைக்கதைகள்
» மூன்று வரங்கள்
» மூன்று விஷயங்கள்.....
» மூன்று சொற்கள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|