தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அவசர சமையல் சும்மா பூந்து விளையாடுங்க ஃப்ரெண்ட்ஸ்!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

அவசர சமையல் சும்மா பூந்து விளையாடுங்க ஃப்ரெண்ட்ஸ்! - Page 2 Empty அவசர சமையல் சும்மா பூந்து விளையாடுங்க ஃப்ரெண்ட்ஸ்!

Post by முழுமுதலோன் Fri May 17, 2013 7:27 pm

First topic message reminder :

அவசர சமையல் சும்மா பூந்து விளையாடுங்க ஃப்ரெண்ட்ஸ்!

குடும்பத்தைப் பிரிஞ்சு வந்து, மேன்ஷன், ஹாஸ்டல்னு வாழற பேச்சிலர்ஸையும் கொஞ்சம் நினைச்சுப் பார்க்கக் கூடாதா? அதிக வேலையில்லாம... ஈஸியா சமைக்கற மாதிரியான ரெசிபிகளை எங்களுக்காகத் தரக்கூடாதா?"

- அடிக்கடி தொலைபேசி மற்றும் கடிதங்கள் வாயிலாக வந்துகொண்டே இருக்கும் இப்படிப்பட்ட கோரிக்கைகளை ஏற்று... இங்கே சமைக்கப்படுகிறது அவசர சமையல்!

லேட்டா தூங்கி, லேட்டா எழுந்தாலும், லேட்டஸ்டா சமைக்கணும்; காய்கறி நறுக்குறது, பாத்திரம் கழுவறதுனு நிறைய வேலை வைக்கக் கூடாது; சிம்பிளா சமைச்சாலும், டேஸ்ட், சத்து இதெல்லாம் குறையக்கூடாது; தைரியமா ஃப்ரெண்ட்ஸை கூட்டிட்டு வந்து மனசார பரிமாறணும்.

- இதெல்லாமே பேச்சிலர்களின் எதிர்பார்ப்பு... கண்டிஷன்.

அதற்கு ஏற்ப... வகைவகையான பொடிகள், ஈஸியாக ரெடி செய்யக் கூடிய சாத வகைகள், அடுப்பையே பற்ற வைக்காமல் வயிறும் மனசும் நிறைவது மாதிரியான ரெசிபிகள் என அசத்தியிருக்கும் 'பட்ஜெட் சமையல்' பத்மா, ''பெரிய ஹோட்டல்ல, பர்ஸ் கரையற அளவுக்குச் சாப்பிடாலும், நம்ம கையால சமைச்சது மாதிரி வருமா? இந்த ரெசிபிகளை சமைச்சுப் பாருங்க... 'அட, அம்மா கைப்பக்குவம்'னு சப்புக் கொட்டுவீங்க'' என அடித்துச் சொல்கிறார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down


அவசர சமையல் சும்மா பூந்து விளையாடுங்க ஃப்ரெண்ட்ஸ்! - Page 2 Empty Re: அவசர சமையல் சும்மா பூந்து விளையாடுங்க ஃப்ரெண்ட்ஸ்!

Post by முழுமுதலோன் Fri May 17, 2013 7:55 pm

வெங்காய சட்னி

தேவையானவை: வெங்காயம் - ஒன்று, கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கடுகு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். ஆற வைத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, கொட்டிக் கலந்து பரிமாறவும்.

இட்லி, தோசை, சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள இது சிறந்த காம்பினேஷன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அவசர சமையல் சும்மா பூந்து விளையாடுங்க ஃப்ரெண்ட்ஸ்! - Page 2 Empty Re: அவசர சமையல் சும்மா பூந்து விளையாடுங்க ஃப்ரெண்ட்ஸ்!

Post by முழுமுதலோன் Fri May 17, 2013 7:56 pm

தயிர் பச்சடி

தேவையானவை: தயிர் - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, கேரட் துருவல் கலவை - ஒரு கப், பச்சை மிளகாய் - இஞ்சி பேஸ்ட் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொடுத்துள்ள காய்கறிகள், பச்சை மிளகாய் - இஞ்சி பேஸ்ட், உப்பு ஆகியவற்றை பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும். பிறகு, தயிர் சேர்த்து மீண்டும் ஒருமுறை கலக்கினால்... தயிர் பச்சடி ரெடி!

இது, வத்தல் குழம்பு சாதம், வெஜிடபிள் ரைஸூக்குத் தொட்டுக்கொள்ள நல்ல சைட் டிஷ்!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அவசர சமையல் சும்மா பூந்து விளையாடுங்க ஃப்ரெண்ட்ஸ்! - Page 2 Empty Re: அவசர சமையல் சும்மா பூந்து விளையாடுங்க ஃப்ரெண்ட்ஸ்!

Post by முழுமுதலோன் Fri May 17, 2013 7:57 pm

வெஜிடபிள் கூட்டு

தேவையானவை: கேரட், வெள்ளரிக்காய், கத்திரிக்காய், சௌசௌ, பச்சை மிளகாய் - தலா ஒன்று, பீன்ஸ் - 6, துவரம்பருப்பு - ஒரு கப், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன். மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, சீரகம் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொடுத்துள்ள காய்கறிகளை கழுவி நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் துவரம்பருப்பு, மஞ்சள்தூள், நறுக்கிய காய்கறிகள், உப்பு சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும். மிக்ஸியில் தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாய் போட்டு அரைக்கவும். வேக வைத்த காய்கறிக் கலவையுடன் அரைத்ததை சேர்த்து ஒருமுறை கொதிக்க விடவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்ட... வெஜிடபிள் கூட்டு தயார்!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அவசர சமையல் சும்மா பூந்து விளையாடுங்க ஃப்ரெண்ட்ஸ்! - Page 2 Empty Re: அவசர சமையல் சும்மா பூந்து விளையாடுங்க ஃப்ரெண்ட்ஸ்!

Post by முழுமுதலோன் Fri May 17, 2013 7:58 pm

மாங்காய் ரைஸ்

தேவையானவை: சாதம் - ஒரு கப், மாங்காய் (பெரியது) - 1, பேபி கார்ன் - 2, பட்டாணி (தோல் உரித்தது) - ஒரு கப், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, இஞ்சி - சிறு துண்டு, புதினா - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மாங்காயைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும். பேபி கார்னைப் பொடியாக நறுக்கவும். கடாயில் நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் தாளித்து, புதினா சேர்த்து வதக்கவும். பிறகு பட்டாணி, நறுக்கிய பேபி கார்ன், உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். இந்தக் கலவையுடன் சாதம் சேர்த்துக் கலந்து, பின்னர், மாங்காய் துருவல் போட்டு மீண்டும் ஒருமுறை நன்கு கலக்கினால், மாங்காய் ரைஸ் ரெடி!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அவசர சமையல் சும்மா பூந்து விளையாடுங்க ஃப்ரெண்ட்ஸ்! - Page 2 Empty Re: அவசர சமையல் சும்மா பூந்து விளையாடுங்க ஃப்ரெண்ட்ஸ்!

Post by முழுமுதலோன் Fri May 17, 2013 8:00 pm

பாசிப்பருப்பு தால்

தேவையானவை: பாசிப்பருப்பு - 100 கிராம், தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் பாசிப்பருப்பு, தக்காளி சேர்த்து வேகவிட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வேக வைத்த பருப்பு-தக்காளியை அதில் சேர்த்து, உப்பு போட்டு, கொதிக்க விடவும். இறக்குவதற்கு முன் நறுக்கிய கொத்தமல்லி தூவவும்.

இதனை, சப்பாத்தி, சாதம் இரண்டுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அவசர சமையல் சும்மா பூந்து விளையாடுங்க ஃப்ரெண்ட்ஸ்! - Page 2 Empty Re: அவசர சமையல் சும்மா பூந்து விளையாடுங்க ஃப்ரெண்ட்ஸ்!

Post by முழுமுதலோன் Fri May 17, 2013 8:01 pm

கோவைக்காய் ரைஸ்

தேவையானவை: சாதம் - ஒரு கப், கோவைக்காய் - 100 கிராம், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, பூண்டு - 6 பல், கடுகு - கால் டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், புதினா - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோவைக்காயை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில், நெய் விட்டு கடுகு தாளித்து... சீரகம், பச்சை மிளகாய் சேர்க்கவும். புதினா, நசுக்கிய பூண்டு, நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து, வதங்கியதும் கோவைக்காய் சேர்க்கவும். சில நிமிடங்கள் வதக்கி, வெந்ததும் இறக்கவும். இந்தக் கலவையில் சாதம் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.


-தொகுப்பு: நாச்சியாள்,
படங்கள்: வி.செந்தில்குமார்

- vikatan
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அவசர சமையல் சும்மா பூந்து விளையாடுங்க ஃப்ரெண்ட்ஸ்! - Page 2 Empty Re: அவசர சமையல் சும்மா பூந்து விளையாடுங்க ஃப்ரெண்ட்ஸ்!

Post by கவிப்புயல் இனியவன் Sat May 18, 2013 6:37 am

செய்து பார்க்கிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அவசர சமையல் சும்மா பூந்து விளையாடுங்க ஃப்ரெண்ட்ஸ்! - Page 2 Empty Re: அவசர சமையல் சும்மா பூந்து விளையாடுங்க ஃப்ரெண்ட்ஸ்!

Post by mohaideen Sat May 18, 2013 10:22 am

அனைத்து தகவல்களுக்கும் அவசர சமையல் சும்மா பூந்து விளையாடுங்க ஃப்ரெண்ட்ஸ்! - Page 2 517195
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

அவசர சமையல் சும்மா பூந்து விளையாடுங்க ஃப்ரெண்ட்ஸ்! - Page 2 Empty Re: அவசர சமையல் சும்மா பூந்து விளையாடுங்க ஃப்ரெண்ட்ஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum