தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அறுபது ஆண்டுகள்... ஆயிரக்கணக்கான பாடல்கள்... டிஎம்எஸ்ஸின் சாதனை!

View previous topic View next topic Go down

அறுபது ஆண்டுகள்... ஆயிரக்கணக்கான பாடல்கள்... டிஎம்எஸ்ஸின் சாதனை!  Empty அறுபது ஆண்டுகள்... ஆயிரக்கணக்கான பாடல்கள்... டிஎம்எஸ்ஸின் சாதனை!

Post by முரளிராஜா Sat May 25, 2013 10:34 pm

இந்திய திரையுலகில் அறுபது ஆண்டுகள் பல்வேறு மொழிகளில் பல ஆயிரம் பாடல்களைப் பாடி, இணையற்ற பாடகராகத் திகழ்ந்தவர் டிஎம் சவுந்திரராஜன். இன்று அவர் தனது 91 வயதில் மரணத்தைத் தழுவினாலும், சினிமா உள்ளவரை ரசிகர்களின் உள்ளங்களில் நிரந்தரமாகக் குடியிருக்கும் கலைஞனாகத் திகழ்கிறார்.

சவுராஷ்ட்ரா என்ற சமூகத்தில் பிறந்த டிஎம் சவுந்திரராஜன் மிகுந்த சிரமப்பட்டுதான் சினிமாவுக்குள் நுழைந்தார். பழம்பெரும் இயக்குநர் சுந்தர்லால் நட்கர்னி வீட்டில் 6 மாதம் வேலைக்காரனாக இருந்துதான் சினிமா தொடர்புகளைப் பிடித்தார் டிஎம்எஸ். சுந்தர்லால் நட்கர்னிதான் டிஎம்எஸ்ஸுக்கு ஒரு வாய்ப்பு தருமாறு அன்றைய இசையுலக ஜாம்பவான் எஸ்எம் சுப்பையா நாயுடுவுக்கு சிபாரிசு செய்தாராம்.

அன்றைய சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் நடித்த கிருஷ்ண விஜயம் படத்தில் டிஎம்எஸ்ஸுக்கு முதல் பாடல் வாய்ப்பைத் தந்தார் சுப்பையா நாயுடு. ராதே என்னைவிட்டு ஓடாதேடி என்ற அந்தப் பாடலைப் பாட, டிஎம் சவுந்திரராஜனுக்கு அன்றைக்கு தரப்பட்ட சம்பளம் ரூ 625.

அந்த ஆண்டே எம்ஜிஆரின் மந்திரி குமாரி படத்தில் ஒரு பாடல் பாடும் வாய்ப்பைத் தந்தார் ஜி ராமநாதன். அடுத்தடுத்து சில பாடல் வாய்ப்புகள் வந்தன. பாவேந்தர் பாரதிதாசன் பாடலைப் பாடும் வாய்ப்பு கூட கிடைத்தது டிஎம்எஸ்ஸுக்கு. ஆனால் பெரிய அளவில் வரமுடியவில்லை.



அறுபது ஆண்டுகள்... ஆயிரக்கணக்கான பாடல்கள்... டிஎம்எஸ்ஸின் சாதனை!  25-1369487286-thooku-thuku-600

சிவாஜிக்கு...

1954 டிஎம்எஸ்ஸுக்கு திருப்பு முனையாக அமைந்தது. தூக்குத் தூக்கி படத்தில் சிவாஜி கணேசனுக்குப் பாடும் வாய்ப்பு கிடைத்தது. சிவாஜியின் குரலை அப்படியே நகலெடுத்த மாதிரி டிஎம்எஸ் பாட, அன்றிலிருந்து அவர்களின் இணை தொடர்ந்தது. அந்தப் படத்தின் எல்லா பாடல்களும் ஹிட்டாக, டிஎம்எஸ் தமிழ் சினிமாவின் சிகரம் நோக்கி பயணிக்க ஆரம்பித்தார்.

அறுபது ஆண்டுகள்... ஆயிரக்கணக்கான பாடல்கள்... டிஎம்எஸ்ஸின் சாதனை!  25-1369487442-mgr2-600

எம்ஜிஆருடன்

மக்கள் திலகம் எம்ஜிஆருக்காக டிஎம்எஸ் பாடிய முதல் பாடல் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... அதில் எம்ஜிஆரே திரையில் பாடுவது போல அத்தனை இயல்பாக குரல் வித்தை காட்டியிருந்தார் டிஎம் சவுந்திரராஜன். அன்றிலிருந்து எம்ஜிஆரின் ஆஸ்தான பாடகரானார். எம்ஜிஆர் திரையுலகிலிருந்து விலகிய 1977-ம் ஆண்டுவரை தொடர்ந்து அவருக்கு பாடி வந்தார் டிஎம்எஸ்.

அறுபது ஆண்டுகள்... ஆயிரக்கணக்கான பாடல்கள்... டிஎம்எஸ்ஸின் சாதனை!  25-1369487491-rajinikanth-birthday11-600

ரஜினிக்கும்...

எம்ஜிஆர், சிவாஜி மட்டுமல்ல, அவர்கள் காலத்தில் வளர்ந்து வந்த ஜெமினி, ஜெய்சங்கர், சிவகுமார், முத்துராமன், எஸ்எஸ்ஆர் என பல கலைஞர்களுக்கு டிஎம்எஸ் குரல் கொடுத்தார். அடுத்த தலைமுறை நாயகரான ரஜினிக்கு பைரவியில் நண்டூருது.. என்ற பாடலைத்தான் முதலில் பாடினார். தொடர்ந்து பல படங்களில் ரஜினிக்கு பாடியுள்ளார் டிஎம் சவுந்திரராஜன்.

அறுபது ஆண்டுகள்... ஆயிரக்கணக்கான பாடல்கள்... டிஎம்எஸ்ஸின் சாதனை!  25-1369487610-rayilpayanangalil-600

ராசியில்லா ராஜா...

டி ராஜேந்தரின் ஒருதலை ராகம், ரயில் பயணங்களில் போன்ற படங்களிலும் டிஎம்எஸ் அதிக பாடல்களைப் பாடினார். ஆனால் அதன் பிறகு டிஎம் சவுந்திரராஜன் பாடுவது குறைந்தது. காரணம், புதிய பாடகர்களின் வருகை மற்றும் இளம் நடிகர்களின் விருப்பம் போன்றவைதான்.

அறுபது ஆண்டுகள்... ஆயிரக்கணக்கான பாடல்கள்... டிஎம்எஸ்ஸின் சாதனை!  25-1369487675-tms14-600

அவ்வப்போது மேடைக் கச்சேரிகள் செய்து வந்த டிஎம்எஸ் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் மலேசியாவுக்குத்தான். பின்னர் பல நாடுகளில் கச்சேரி செய்துள்ளார்.

ஏஆர் ரஹ்மான் இசையில்

கடைசியாக அவர் பாடியது ஏ ஆர் ரஹ்மான் இசையில் செம்மொழியான தமிழ் மொழியாம் பாடல்தான். அதன் பிறகு எம்எஸ் விஸ்வநாதன் - டிகே ராமமூர்த்திக்கு முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த பாராட்டு விழாவில் ஒரு பாடலைப் பாடினார்.

இசையமைப்பாளர்கள்...

தென்னிந்தியாவின் ஏறத்தாழ அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடிய பெருமைக்குரியவர் டிஎம்எஸ். அதேபோல ஏராளமான பாடகர்களுடனும் இணைந்து பல்லாயிரம் பாடல்கள் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில், ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு டிஎம்எஸ் குரல் கொடுத்தார்.

முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அறுபது ஆண்டுகள்... ஆயிரக்கணக்கான பாடல்கள்... டிஎம்எஸ்ஸின் சாதனை!  Empty Re: அறுபது ஆண்டுகள்... ஆயிரக்கணக்கான பாடல்கள்... டிஎம்எஸ்ஸின் சாதனை!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 25, 2013 10:38 pm

ஆழ்ந்த இரங்கல்கள்...

அவர் பாடலால்தான் நாம் இனி இளைப்பாற வேண்டும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அறுபது ஆண்டுகள்... ஆயிரக்கணக்கான பாடல்கள்... டிஎம்எஸ்ஸின் சாதனை!  Empty Re: அறுபது ஆண்டுகள்... ஆயிரக்கணக்கான பாடல்கள்... டிஎம்எஸ்ஸின் சாதனை!

Post by ரானுஜா Sat May 25, 2013 10:41 pm

பகிர்வுக்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

அறுபது ஆண்டுகள்... ஆயிரக்கணக்கான பாடல்கள்... டிஎம்எஸ்ஸின் சாதனை!  Empty Re: அறுபது ஆண்டுகள்... ஆயிரக்கணக்கான பாடல்கள்... டிஎம்எஸ்ஸின் சாதனை!

Post by ஸ்ரீராம் Sun May 26, 2013 12:12 am

டிஎம்எஸ் மறைந்தாலும் அவர் புகழ் மறையாது நிற்கும்...
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அறுபது ஆண்டுகள்... ஆயிரக்கணக்கான பாடல்கள்... டிஎம்எஸ்ஸின் சாதனை!  Empty Re: அறுபது ஆண்டுகள்... ஆயிரக்கணக்கான பாடல்கள்... டிஎம்எஸ்ஸின் சாதனை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum