Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சினிமால்
Page 1 of 1 • Share
சினிமால்
'தமிழ் படம்’ நடிகை திஷா பாண்டே டெல்லி பல்கலைக் கழகத்தில் மனித உரிமை குறித்த பட்டப்படிப்பு படிக்கிறார். இப்போது 'மனதில் மாயம் செய்தாய்’ படத்தில் அலுவலகத்தில் பாலியல் தொந்தரவைச் சந்திக்கும் பெண்ணாக நடிக்கிறார். விஜயுடன் ஒரு படத்திலாவது குத்துப்பாட்டில் ஆட திஷாவுக்குக் கொள்ளை ஆசையாம். ஒரே ஒரு பாட்டில் ஆடினாப் போதுமா?
================
ராஞ்சனா’ படத்தில் நடிக்கும்போது, சோனம் கபூரின் அழைப்பை ஏற்று அவர் வீட்டுக்கு விருந்துக்குச் சென்றார் தனுஷ். ''ரஜினி ஒரு மிகச் சிறந்த மனிதர். ரஜினியின் மருமகனான உங்களிடம் அவரைப் போலவே எளிமை இருக்கு'' எனப் பாராட்டினாராம் அனில் கபூர். பொண்ணைப் பத்திரமாப் பார்த்துக்குங்க அனிலு!
================
ராஞ்சனா’ படத்தில் நடிக்கும்போது, சோனம் கபூரின் அழைப்பை ஏற்று அவர் வீட்டுக்கு விருந்துக்குச் சென்றார் தனுஷ். ''ரஜினி ஒரு மிகச் சிறந்த மனிதர். ரஜினியின் மருமகனான உங்களிடம் அவரைப் போலவே எளிமை இருக்கு'' எனப் பாராட்டினாராம் அனில் கபூர். பொண்ணைப் பத்திரமாப் பார்த்துக்குங்க அனிலு!
Re: சினிமால்
'திருட்டுப் பயலே’ படத்தை 'சல்யூட் ரோமியோ’ என்ற பெயரில் இந்தியில் இயக்குகிறார் சுசிகணேசன். மாளவிகா நடித்த வேடத்தில் அமிஷா பட்டேல் வளைவு, நெளிவுகளை வசீகரமாய்க் காட்டு காட்டுனு காட்ட, சோனியா அகர்வால் வேடத்தில் பூஜா குப்தா. கரெக்ட்டு கரெக்ட்டு... நீ மெரட்டு மெரட்டு!
Re: சினிமால்
அனுஷ்கா தமிழில் புதிய படம் எதுவும் ஒப்புக்கொள்ளவில்லை. 'சிங்கம்-2’, 'இரண்டாம் உலகம்’ 'பஹிபாலி’ 'ருத்ரம்மா தேவி’ என நான்கு படங்களும் பிரமாண்டமான படங்கள். இந்தப் படங்களின் வெற்றியைப் பொறுத்து சம்பளம் ஏற்றவே தாமதம் செய்கிறார் என்று ஒரு தரப்பும், அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்று இன்னொரு தரப்பும் சொல்கிறது. எங்களை விட்டுட்டுப் போயிருவியா பொம்மாயி?
Re: சினிமால்
'அன்னக் கொடி’ படத்தில் 14 வயது சிறுமி, வயசுக்கு வந்த பெண், காதலில் உருகும் கன்னி, கல்யாணமான பெண்மணி, பிடிக்காத தாலியைக் கழற்றி எறிந்துவிட்டு காதலுடனே சேரும் புரட்சிப் பெண் எனப் பலவிதமான தோற்றங்களில் வருகிறார் கார்த்திகா. ஆனா, அந்த பாரதிராஜா டிரேட் மார்க் வெட்கச் சிரிப்பைவிட மாட்டீங்கல்ல?
Re: சினிமால்
விஷால் ஹீரோவாக நடிக்கும் 'பட்டத்து யானை’ படத்தில் இரு வேடங்களிலும், 'பாண்டிய நாடு’ படத்தில் அப்பா மகனாக டபுள் ரோலிலும் நடிக்கிறார் சந்தானம். டபுள் சம்பளம் வாங்குவீங்களா பாஸ்?
===================
'ஜன்னல் ஓரம்’ படத்தில் டீச்சராக வருகிறார் பூர்ணா. இந்த வேடம் மலையாளத்தில் 'போஸ்ட்வுமன்’ ஆக இருந்த வேடம். தமிழுக்கு போஸ்ட் வுமன் கேரக்டர் எடுபடாது என்பதால், டீச்சராக மாறிவிட்டார் பூர்ணா. பாஸ் பண்ணிருவீங்களா டீச்சர்?
===================
'ஜன்னல் ஓரம்’ படத்தில் டீச்சராக வருகிறார் பூர்ணா. இந்த வேடம் மலையாளத்தில் 'போஸ்ட்வுமன்’ ஆக இருந்த வேடம். தமிழுக்கு போஸ்ட் வுமன் கேரக்டர் எடுபடாது என்பதால், டீச்சராக மாறிவிட்டார் பூர்ணா. பாஸ் பண்ணிருவீங்களா டீச்சர்?
Re: சினிமால்
சசிகுமார் அடுத்து நடிக்கவிருக்கும் 'பிரம்மன்’ படத்தில் 1970-களில் கிராமத்தில் தியேட்டர் வைத்திருந்த முதலாளியாக வருகிறாராம். ஜோடி லாவண்யா திரிபாதி என்ற ஜார்க்கண்ட் மாடல் அழகி. ஆனால், வழக்கமான சசிகுமார் படங்களைப் போல நாயகிக்குப் பாவாடை தாவணிதான். அப்போ, லெட்சுமி மேனன்? ரெண்டு படத்துக்கு ஒரு டிக்கெட்னு கணக்கு!
Re: சினிமால்
இது பாலியல் தொழிலாளி கேரக்டர் சீஸன் போல. 'பவித்ரா’வில் ஸ்ரேயா, 'டி.டே’ படத்தில் ஸ்ருதி, 'பிரேம ஒக்க மயக்கம்’ படத்தில் சார்மி, 'நேற்று இன்று’ படத்தில் அருந்ததி, 'அப்பாயி கிளாஸ் அம்மாயி மாஸ்’ படத்தில் ஹரிப்பிரியா எனப் பல மொழிப் படங்களில் நம் நாயகிகள் பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்கிறார்கள். என்ன சார் நடக்குது இங்க?
Re: சினிமால்
'காமசூத்ரா 3-டி’ படம் மூலம் உலக அளவில் பிரபலமாக வேண்டும் என்ற கனவில் மிதந்த ஷெர்லின் சோப்ராவுக்கு அந்த வாய்ப்பு கொஞ்சம் தள்ளிப்போகிறது. ஆமாங்க... எம்.டி.வி-யில் 'ஸ்பிலிட்ஸ்வில்லா’ நிகழ்ச்சி நடத்த அழைப்பு வர, அதற்குப் போய்விட்டார் ஷெர்லின். டி.வி. ஷோவால் படம் தள்ளிப் போகிறதாம். ஏன்...ஏன்... இப்படி?
Re: சினிமால்
ஐஸ்வர்யாராயின் ஜெராக்ஸ் சினேகா உல்லால் மீண்டும் ஒரு கவர்ச்சி ஆல்பம் வெளியிட்டுள்ளார். செக்ஸியான உடையில் உருண்டு புரளும் சினேகா உதட்டைக் கடிப்பது, நெளிவது என செம கிக் காட்டுகிறார். இந்த ஆல்பத்தின் மூலம் சிலபல தெலுங்குப் பட வாய்ப்புகள் கதவைத் தட்டுகிறதாம். நல்லது நடந்தா சரி!
Re: சினிமால்
டாப்ஸி மாலத்தீவில் தன் தங்கையின் பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு வந்துள்ளார். 'ஸ்கூபா டைவிங் போட்டி, சன் பாத் என ஜில்லுன்னு இருந்தது மறக்க முடியாத அனுபவம்’ என்கிறார் டாப்ஸி. எங்களுக்கெல்லாம் உங்களைப் பார்த்தாலே ஜில்லுதான்!
Re: சினிமால்
பிரசாத் லேபுக்குத் திடீரென வந்த ரஜினிகாந்த், ஜூனியர் என்.டி.ஆர். நடித்த தெலுங்குப் படமான 'ஓம்’ படத்தைப் பார்த்திருக்கிறார். படம் அவருக்குப் பிடித்துப்போக, அனேகமாக இந்தப் படத்தின் ரீமேக்கில் தனுஷ் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. ஜூனியர் என்.டி.ஆர். படம்னா செம டெரரா இருக்குமே?
Re: சினிமால்
எதிர் நீச்சல்’ படத்தின் பிரஸ்மீட்டுக்கு சிவகார்த்திகேயன், சதீஷ், இயக்குநர் செந்தில்குமார், அனிருத், டி.சிவா என எல்லோரும் முன்னதாகவே வந்து காத்திருக்க, லேட்டாக வந்த பிரியா ஆனந்தை, சிவகார்த்திகேயன், ''ஒரு படம் ஹிட் குடுத்ததும் இப்படி லேட் பண்ணணுமா? இது ரொம்ப டூ மச்'' என கலாய்த்தார். ''இல்லப்பா... டிராஃபிக் ஜாம்'' என சிவகார்த்திகேயன் தலையில் அடித்து சத்தியம் செய்தார் பிரியா. தயாரிப்பாளர் டி.சிவா, ''சூப்பர் ஸ்டாரை குழந்தைகளுக்குப் பிடிக்கும். அதேபோல் சிவகார்த்திகேயனுக்கும் குழந்தை ரசிகர்கள் அதிகம். எழுதிவெச்சுக்குங்க. சிவகார்த்திகேயன் சூப்பர் ஸ்டாரா வருவார்'' என்றார். எத்தனை பேர் பாஸ் கிளம்பியிருக்கீங்க?
Re: சினிமால்
சோதனைகளைச் சந்திக்க நேரிடும் ஓர் இளைஞன் போராட்டத்தின் விளிம்பில் 'வாழ்வா சாவா’ என்ற சவாலை எதிர்நோக்கி இருக்கிறான். அந்தச் சவால்களை முறியடித்துத் தனது போராட்ட குணத்தின் மூலம் வெற்றி பெறும் கதைதான் 'மரியான்’. இந்தப் பயணத்தில் அவனுக்குத் துணையாகவும், இணையாகவும் இருப்பது அவனது காதல்தானாம். 'மரியான்’ இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளினி ரம்யா, இயக்குநர் பரத்பாலாவிடம் ''படத்தின் முடிவு சுபமா? சோகமா?'' என்று கேட்க, ''என்னோட ப்ளட் குரூப் பி.பாசிட்டிவ். அதனால் பாசிட்டிவ்வாகத்தான் இருக்கும்'' என்றார் இயக்குநர் பரத்பாலா. ரத்தத்தின் ரத்தமே!
Re: சினிமால்
பிபாஷா பாசு பாலிவுட் படமான 'கிரியேட்டா’ படத்தில் பாகிஸ்தான் நடிகர் இம்ரான் அப்பாஸ் உடன் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளார். இந்தப் படம் ரம்ஜான் அன்று பாகிஸ்தானிலும் வெளியாகிறது. கவர்ச்சிக் காட்சியை வெட்டி விட்டுத்தான் பாகிஸ்தானில் வெளியிட வேண்டும் என பாகிஸ்தான் சொல்லிவிட்டதாம்!
Re: சினிமால்
இதுதாண்டா போலீஸ்’ ராஜசேகர் 'சாட்டை’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார். சமுத்திரக்கனி நடித்த வேடத்தில் நடிப்பதும் டாக்டர்தான். ஐயயோ!
**********************
'கோச்சடையான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா டோக்கியோவில் நடக்கவிருக்கிறதாம். ஜப்பானில் ரஜினிக்கு ரசிகர்கள் உண்டு என்பதால் இந்த முடிவாம். ஆனால் நிகழ்ச்சி எப்போது என்றுதான் தெரியவில்லை என்கிறார்கள். எப்ப நடந்தா என்ன? ச்சும்மா அதிருமுல்ல!
**********************
'கோச்சடையான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா டோக்கியோவில் நடக்கவிருக்கிறதாம். ஜப்பானில் ரஜினிக்கு ரசிகர்கள் உண்டு என்பதால் இந்த முடிவாம். ஆனால் நிகழ்ச்சி எப்போது என்றுதான் தெரியவில்லை என்கிறார்கள். எப்ப நடந்தா என்ன? ச்சும்மா அதிருமுல்ல!
Re: சினிமால்
சூர்யாவை வைத்து தான் இயக்கும் படத்தின் கதாநாயகியாக சமந்தாவை ஒப்பந்தம் செய்துவிட்டாராம் லிங்குசாமி. உற்சாகத்தில் இருக்கும் சமந்தா, ட்விட்டரில் இந்தச் செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். ''அடுத்து தமிழில் என் பிரவேசம் அதிரடி யாகத்தான் இருக்கும்'' என்கிறாராம் சமந்தா. சமத்தா இருந்தா சரி!
Re: சினிமால்
'சகுனி’ படத்துக்கு அடுத்து தமிழில் வாய்ப்புகள் ஏதும் இல்லாத ப்ரணிதாவுக்கு தெலுங்குப் படவுலகம் கை கொடுத்துள்ளது. ரவிதேஜாவுடன் ஒரு படம், மகேஷ்பாபுவுடன் ஒரு படம், மோகன் பாபு தயாரிப்பில் ஒரு படம் என ரவுண்டு கட்டுகிறார். தெலுங்கில் ஒரே கவர்ச்சி மழையாம். பின்னே?
Re: சினிமால்
திருமண சர்ச்சைக்குப் பிறகு படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார் அனன்யா. ஆனால் ''கணவரின் சம்மதத்துடன் மலையாளப் படங்களில் மட்டும் நடிப்பேன்'' என்று சொல்லியிருந்தார். நீண்ட யோசனைக்குப் பிறகு, விமல், பிரசன்னா நடிக்கும் 'புலிவால்’ படத்தில் நடிக்கச் சம்மதித்திருக்கிறார். ஓவியா, இனியா என இரண்டு ஹீரோயின்கள் ஏற்கெனவே இந்தப் படத்தில் நடித்தாலும் அனன்யாவுக்கும் கனமான ரோல் ஒன்று உண்டாம். எங்கேயும் எப்போதும் உங்களை மறக்க மாட்டோம்!
Re: சினிமால்
அஜீத்துக்கு ஓய்வு தேவைப்படுவதால், மீண்டும் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைகிறது. 'ஜில்லா’ முடித்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க விருக்கிறார் விஜய்! 'எதிர் நீச்சல்’ படத்தில் காமெடியில் கலக்கிய சதீஷ், விஜயுடன் இந்தப் படத்தில் இணைய விருக்கிறார்.
Re: சினிமால்
விஜய் சேதுபதி, 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ காயத்ரி நடிக்கும் 'ரம்மி’ படத்தில் ரம்யந்£ நம்பீசன் ஒரு பாடல் பாடியுள்ளார் வளசரவாக்கம் இமான் ஸ்டுடியோவில் ரம்யா பாட, ஒலிப்பதிவு நடைபெற்றது. உங்களை மாதிரியே பாட்டு ஸ்வீட்டா இருக்குமா ரம்யா?
நன்றி
டைம் பாஸ்
நன்றி
டைம் பாஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|