தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

View previous topic View next topic Go down

ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1 .  நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .  Empty ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Sat Jun 22, 2013 3:55 pm

ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1 . 
நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . 
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . 
வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தியாகராயர் நகர் ,சென்னை .17. 
தொலைபேசி 044-24342810.விலை ரூபாய் 110 

நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் அவர்கள் மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர் .ஓய்வுக்கு ஓய்வு தந்து விட்டு தமிழுக்கு அணி சேர்க்கும் விதமாக நூல்கள் எழுதி வருகிறார்கள் .தமிழ் இலக்கியத்தை பேராசிரியர் பணிக்காக ஆழ்ந்து படித்து மாணவர்களுக்கு கற்பித்த அனுபவத்தால் ,சங்க இலக்கியத்தை எல்லோருக்கும் புரியும் விதமாக மிக மிக எளிமையாகவும் , ஆய்வுக் கட்டுரைகளாக எழுதி உள்ளார்கள் .20 தலைப்புகளில் உள்ளது .கபிலரின் வாழ்வியல் சிந்தனைகள் தொடங்கி நாட்டுப்புறக் கதைகள் - ஓர அறிமுகம் வரை அட்டை முதல் அட்டை வரை இலக்கியச் சுரங்கமாக உள்ளது .செம்மொழியான தமிழ் மொழிக்கு மேலும் பெருமை சேர்ப்பதாக உள்ளது .பாராட்டுக்கள் . 

கபிலரின் வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரையில் கபிலருக்கும் பாரிக்கும் இருந்த உயர்ந்த , தூய நட்பை காட்சிப் படுத்தி உள்ளார்கள் .நற்றிணை பாடல் வரிகளும் விளக்கமும் மிக நன்று .ஈத்துவக்கும் பெருஞ்சித்திரனார் "அன்பில்லாதவர்கள் எவ்வளவு செல்வமுடையவர்களாக இருப்பினும் அவர்களைப் புலவர் பெருமக்கள் சிறிதும் மதிக்க மாட்டார்கள் ."என்பதை பெருஞ்சித்திரனார் பெருமித வாக்கால் இதனை உணரலாம் .அன்றைய புலவர்கள் ,அன்பற்ற பணக்கார்களை புகழும் இன்றைய சில புலவர்களை போல இல்லை என்பதை உணர முடிந்தது . 

நற்றிணை குறுந்தொகை பாடல்கள் எழுதி , விளக்கவுரையும் எழுதி வியக்க வைத்துள்ளார்கள் .சங்க இலக்கியத்தின் பால் ஈடுபாடு ஏற்படுத்தும் விதமாக கட்டுரைகள் உள்ளது . 

அம்மூவனார் பாடல்களில் வரும் தலைவி தலைவன் மீது அளப்பரிய அன்பு உடையவளாக உறுதியான உள்ளம் கொண்டவளாக தீமைக்குப் பணி மாறா நிலையை காண்கிறோம் .சங்க இலக்கியம் முழுவதும் பெரிதும் வலியுறுத்துவது அன்பு ! அன்பு ! அன்பு மட்டுமே ! .உலகின் முதல் மொழியான தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்ட தமிழ்ப்புலவர்கள் சங்க இலக்கியப் பாடல்களில் , தமிழரின் பெருமிகு வாழ்வை ,வீரம் செறிந்த போரை ,ஒழுக்கக நெறி தவறாத பண்பை பாடல்களில் பதிவு செய்து தமிழரின் பெருமையை தரணிக்குப் பறை சாற்று உள்ளார்கள் .படித்த பண்டிதர்களுக்கு மட்டுமே புரிந்த , கூடத்து விளக்காக இருந்த சங்கத்தமிழை எல்லோருக்கும் புரியும் வண்ணம் குன்றத்து விளக்காக ஒளிரும் வண்ணம் கட்டுரை வடித்துள்ளார்கள் . 

இந்த நூலைப் படித்து முடித்ததும் நாமக்கல் கவிஞரின் வைர வரிகள் நினைவிற்கு வந்தது . 
" தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ." 

சங்கப்புலவர்களின் தொகை 473.இவர்களுள் 35 பெண்பாற் புலவர்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன .என்ற தகவல் நூலில் உள்ளது .இப்போது பெண் கவிஞர்கள் எண்ணிக்கை மிக,மிக குறைவாக உள்ளது .இந்த எண்ணைக்கை பெருக வேண்டும் . 

தலைவியின் மீது காதல் கொண்ட தலைவன் தலைவியைக் காண விரையும் விரைவினை 
புலப்படுத்தும் அகநானூறு பாடல் விளக்கம் மிக நன்று .தொல்காப்பியம் கற்பியல் நூ 1140 ஒப்பீடு செய்தது நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் அவர்களின் ஒப்பிலக்கியப் புலமைக்குஎடுத்துக்காட்டாக உள்ளது . 

குறிஞ்சி , முல்லை, மருதம் ,நெய்தல் , பாலை என அய்வ்கை நிலங்களைப் பாடிய சங்கப் புலவர்களில் பாலை நிலத்தைப் பாடிய புலவர்கள் பற்றி இலக்கிய இமயம் மு .வரதராசனார் எழுதிய "பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை " என்ற நூலில் 257 ஆம் பக்கத்தில் . " வறட்சி மிகுந்த பாலையிலும் மானிட வாழ்வை மாண்புறுத்தும் குறிப்புகள் பலவற்றைக் கண்டு தெளிவதும் , அத்தெளிவுக்கு உரிய பாலை காட்சிகளில் இதயம் தோய்வதும் பெருங்கடுகோவின் அருமைப்பாட்டை புலப்படுத்துகின்றன ." 

நூலின் பெயர் ,ஆசிரியர் பெயர் ,பக்க எண் மிக மிக நுட்பமாக கட்டுரை வடித்துள்ளார்கள் .ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் கட்டுரை தொடர்பாக அறிஞர்கள் சொன்ன கூற்றுடன் தொடங்கி தொடுப்பு ,எடுப்பு ,முடிப்பு என அனைத்தும் முத்தாய்ப்பு . 

தலைவன் தலைவியின் கடமை ,ஒழுக்கம் ,வாழ்வியல் நெறி ,பண்பாடு கற்பித்த சங்க இலக்கியப் பாடல்களில் தேர்ந்தெடுத்து சுவைபட , பொருள்பட கட்டுரை வடித்துள்ளார்கள் .சங்க இலக்கியம் முழுமையும் படிக்க வாய்ப்பு இல்லாதவர்கள் இந்நூல் படிதால் போதும் .சங்க இலக்கியத்தின் பெருமை விளங்கும் .காலனைச் சாடிய சங்கப்பாடல்களை குறிப்பிட்டு ,கவியரசு கண்ணதாசன் மறைந்தபோது காவியக் கவிஞர் வாலி எழுதிய வைர வரிகளை ஒப்பிட்டது மிகச் சிறப்பு . 

என்ன சொல்லி என்ன ? 
எழுதப் படிக்கத் தெரியாத 
எத்தனையோ பேர்களில் 
எமனும் ஒருவன் 
ஒரு கவிதைப் புத்தகத்தைக் 
கிழித்துப் போட்டு விட்டான் . 
( பொய்க்கால் குதிரைகள் ! வாலி ! ப .152) 


சங்க இலக்கியம் காட்டும் தாய் -சேய் உறவின் மேன்மை கட்டுரை மிக நன்று .சங்க இலக்கியத்தை பல்வேறு புதிய கோணங்களில் ஆய்வு செய்து கட்டுரை வடித்துள்ளார்கள் .நூல் ஆசிரியரின் கடின உழைப்பை உணர முடிகின்றது .ஆய்வு மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் நூல் . எவ்விதமாக , எவ்வித தலைப்புகளில் ஆய்வு செய்ய வேண்டும் ? என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது .என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ஏன் கையை எந்த வேண்டும் பிற மொழியில் ? " என்று சொல்லும் விதமாக நூல் உள்ளது . 

வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த அன்றைய புலவர்களின் மேன்மையை எடுத்து 
இயம்பும் பாடல் ஒன்று பதச் சோறாக . 
"வாழ்தல் வேண்டிப் 
பொய் கூறேன் ; மெய் கூறுவல் ." புறநானூறு 139 . 5,6. 

கொடிய வறுமை வந்தபோதும் சான்றாண்மை தவறாதவர்கள் புலவர்கள் என்பதை மெய்ப்பிக்கும் பாடல் மருதன் இளநாகனார் எழுதியது என்ற விபரத்துடன் பாடல் வரிகள் ,விளக்கங்களுடன் முடிவுரையுடன் கட்டுரை முடிப்பு மிக நன்று . 

நாட்டுபுறக் கதைகள் ஓர் அறிமுகம் கட்டுரையும் மிக நன்று .அய்ந்தாம் ,மற்றும் எட்டாம் உலகத் தமிழ் மாநாடுகளில் ,உலகளாவிய ,தேசியக் கருத்தரங்குகளில் வாசித்த ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .சங்க இலக்கியம் புரியாது என்று பயப்படும் வாசகர்களின் பயத்தை நீக்கும் விதமாக நூல் உள்ளது . 

பதிப்பு உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் வானதி பதிப்பகம் இந்நூலை மிகக் குறுகிய காலத்தில் மிக நேர்த்தியாக அச்சிட்டு உள்ளார்கள் பாராட்டுக்கள் .
eraeravi
eraeravi
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 553

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» "கவிதை அலை வரிசை " நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா மோகன். நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி .
» திறமைதான் நமது செல்வம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» சங்க இலக்கிய மாண்பு ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ , முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Permissions in this forum:
You cannot reply to topics in this forum