தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குழந்தைகள் குக்கூ ... நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

View previous topic View next topic Go down

குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty குழந்தைகள் குக்கூ ... நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Mon Jul 15, 2013 9:02 pm

குழந்தைகள் குக்கூ ...
நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .மின் அஞ்சல் tharuvavaideepan@gmail.com
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

வெளியீடு யாழினி .30/8 கன்னிக்கோயில் முதல் தெரு ,அபிராம புரம் .சென்னை .600018.
விலை ரூபாய் 60.மின் அஞ்சல் minminihaiku@gmail.com

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் .

ஒப்பற்ற திருக்குறளுக்கு விளக்கம் தரும் விதமாக குழந்தைகள் இலக்கியம் படைத்துள்ளார் நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் . .இந்த நூலை ஆறிலிருந்து அறுபது வரை யாவரும் படிக்கலாம் .'ஓடி விளையாடு பாப்பா ' என்று பாடிய மகாகவி பாரதியார்தான் முதன் முதலில் குக்கூ கவிதைகளை தமிழில் அறிமுகம் செய்தவர் .அவர் வழி நின்று இவரும் குக்கூ கவிதை எழுதி உள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .அவர்கள் அரசுப்பணியில் , பரபரப்பான வட்டாட்சியர் பணி புரிந்துக் கொண்டே இலக்கியப்பணியும் செய்து வருவது பாராட்டுக்குரியது . சுட்டிப் பூங்கா என்ற ஹைக்கூ கவிதை நூலின் மூலம் பரவலானப் பாராட்டைப் பெற்ற கவிஞரின் அடுத்த படிப்பு இந்நூல்

குயிலின் கூவலாக கவிதை வடித்துள்ளார் . எவ்வளவு கவலை , சோகம் நம்மிடையே இருந்தாலும் குழந்தைகளின் சிரிப்பைக் கண்டால் கவலை , சோகம் காணமல் போகும் .இந்த நூல் வாசிக்கும் வாசகர்களுக்கும் கவலை , சோகம் காணமல் போகும் .என்று உறுதி கூறலாம்
.
அட்டை முதல் அட்டை வரை அனைத்தும் மிக நன்று .அச்சு ,வடிவமைப்பு யாவும் மிக நன்று .குழந்தைக் கவிஞர் அழ .வள்ளியப்பாவின் திருமகள் நா .தேவி நாச்சியப்பன் அவர்களின் வாழ்த்துரை மிக நன்று .இந்த நூலை வடிவமைத்து , வாழ்த்துரை வழங்கி வெளியிட்டு உள்ள மின்மினி இதழ் ஆசிரியரும் , ஹைக்கூ தளத்தில் தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி கவிஞர் கன்னிகோயில் இராஜாவின் கை வண்ணம் நூல் ஆசிரியரின் கவிதைகளுக்குச் சிறப்புச் சேர்ப்பதாக உள்ளன .குழந்தைகளின் புகைப்படங்கள் கவிதைகளுக்கு மேலும் சுவை கூட்டும் விதமாக உள்ளன .

நூலில் உள்ள அனைத்து குக்கூ கவிதைகளும் சிறப்பாக இருந்தாலும் பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .

படபடக்கும்
குழந்தைகளின்
இமைகள்
தெரித்து
விழும்
ஹைக்கூப் பூக்கள் !

நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் அவர்களின் ஹைக்கூப் பார்வை மிக நன்று .

குழந்தைகள் விளையாடுவதை ரசித்து மகிழலாம் .குழந்தைகளோடு விளையாடினால் குழந்தைகளாகவே மாறி விடலாம் .என்பதை உணர்த்தும் கவிதை நன்று .

குழந்தை
விளையாடும்போது
ஆனந்தம்
குழந்தைகளோடு
விளையாடும்போது
பேரானந்தம் !

நிலாவை எல்லாக் கவிஞர்களும் பாடி உள்ளனர் .நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் அவர்கள் வித்தியாசமாக பாடி உள்ளார் .பாருங்கள் .

தெருக்கள் தோறும்
நிலாக்கள்
விளையாடும் அதிசயம்
குழந்தைகள் !

பணம் கூடக் கூட நடிகையின் ஆடை குறையும் அவலத்தை சுட்டும் விதமாக உள்ள கவிதை நன்று .

அரை குறை ஆடையில்
முகம் சுளிக்க வைத்தபடி
நடிகை !
முழுமையான நிருவாணத்தில்
அழகாக குழந்தை !

பெற்றோர்கள் பலர் குழந்தைகளை விளையாடுவதற்கு அனுமதிப்பதே இல்லை .குறிப்பாக அடுககங்களில் வாழும் குழந்தைகளுக்கு விளையாட வாய்ப்பும் இல்லை .

விரட்டாதீர்கள்
விளையாடவரும்
விளையாட்டுக்களை
அனுமதியுங்கள்
குழந்தைளோடு விளையாட !

பலூன் கண்டதும் பரவசம் அடையும் குழந்தைகளின் மனதைப் படம் பிடித்துக் காட்டும் கவிதை நன்று .

விரிந்து கொள்கிறது
பலூன்களை ஊதும்போது
குழந்தைகளின் மனங்களும் !

அரும்புகளின் குறும்புகள் பார்த்திட அழகோ அழகு !அதனை உணர்த்தும் கவிதை ஒன்று .மிக நன்று .

குதூகலமாய்க்
கும்மாளம் போட்டுக் கொள்கின்றன
குறும்புகள்
குழந்தைகளிடத்தில் !

படிக்கும் வாசகர்கள் மனதில் குழந்தைகளைக் காட்சிப் படுத்தி வெற்றிப் பெற்றுள்ளார் .

தவழும் தண்ணீர்
குளிக்கும் குழந்தை
சுத்தமாகிக் கொள்ளும்
நதி !

நிலாவே குழந்தைகளைத் தேடுமாம் நூல் ஆசிரியர் கற்பனை மிக நன்று .

வீடுதோறும்
முற்றங்க்ளைத் தேடுகிறது
நிலா !
குழந்தைகளுக்குப்
பால்சோறு படைக்க !

பல குடும்பங்கள் கிராமம் விட்டு நகரத்திற்கு நகர்ந்து விட்ட காரணத்தால் , நகரத்து வீட்டில் தாத்தா பாட்டி இருப்பது இல்லை .குழந்தைகளுக்குக் கதை சொல்ல யாரும் இல்லை .அதனை உணர்த்தும் கவிதை .

கிராமத்து
வீட்டுத் திண்ணையில்
நசுங்கிக் கிடக்கும்
ஏராளமான கதைகள்
குழந்தைகளுக்காக !

கடலையும் குழந்தையையும் வாசகர்களுக்கு காட்சிப் படுத்தும் கவிதை நன்று .

கால்களை
நனைத்துக் கொள்ள
குழந்தைகள் வருகையில்
களிப்படைந்து விடுகிறது கடல் !

குழந்தைகள் காலையில் கண் விழித்தவுடனேயே சுறுசுறுப்பாகி விடுவார்கள் .அவர்களை ரசித்தால் நமக்கும் சுறுசுறுப்பு வந்து விடும் .

படுக்கையிலிருந்து
குழந்தை எழுகையில்
விழித்துக் கொள்கின்றன
விளையாட்டுகள் !

இப்படி நூல் முழுவதும் குழந்தைகள் !குழந்தைகள் !குழந்தைகள் ! தவிர வேறு இல்லை என்று சொல்லும் அளவிற்கு குழந்தை இலக்கியம் படைத்துள்ள நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன்அவர்களுக்கு வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள்
eraeravi
eraeravi
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 553

Back to top Go down

குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty Re: குழந்தைகள் குக்கூ ... நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by மகா பிரபு Mon Jul 15, 2013 9:23 pm

விமர்சனம் அருமை.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty Re: குழந்தைகள் குக்கூ ... நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Mon Jul 15, 2013 9:26 pm


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 553

Back to top Go down

குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty Re: குழந்தைகள் குக்கூ ... நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை ! நூல் ஆசிரியர் கவிஞர் நீலம் மதுமயன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» நேரத்தைப் போற்றிடுவோம் ! காலத்தை வென்றிடுவோம் ! நூல் ஆசிரியர் கவிஞர் டி .வி .எஸ் .மணியன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மழைப் பேச்சு ! இது இன்பத் தமிழ் ! நூல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum