தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! Empty உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:27 pm

உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறைப்பதை பற்றி தான் பல பேரும் ஆலோசனை பெறுவார்கள். அதனை பற்றிய பல சிகிச்சை முறைகளை தான் அன்றாடம் பத்திரிக்கைகளிலோ அல்லது தொலைக்காட்சியிலோ பார்க்கிறோம். ஆனால் உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கு எடையை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரு பிரச்சனையும் இருக்கும் அல்லவா?

ஆனால் அவர்களின் வீதம் குறைவாக இருப்பதால், பலர் அதை பற்றி அறிந்து கொள்வதில்லை. அதற்காக அவர்கள் பிரச்சனையை நாம் கண்டு கொள்ளாமல் இருக்க முடியுமா? ஜீரோ சைஸ் உடல் கட்டமைப்பை கொள்வதற்கு விரும்பும் இந்த காலத்தில், ஆரோக்கியமான உடல் கட்டமைப்பின் மீது கவனம் செலுத்துவதும் முக்கியமான ஒன்றாகும். இவ்வாறு உடல் எடை குறைவாக இருந்தால், அதனை ஒருசில உணவுகளின் மூலம் சரிசெய்யலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! Empty Re: உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:28 pm

சால்மன் மீன்
உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! 19-1374214274-1-salmon
 
தினமும் ஒன்று அல்லது இரண்டு சால்மன் மீன்களை சாப்பிடுவதால், உடலுக்குத் தேவையான புரதச்சத்தானது உள்ளிறங்கி, உடல் எடை அதிகரிக்கச் செய்யும். மேலும் அதிலுள்ள இன்றியமையா எண்ணெய்கள் சோம்பலில் இருந்து காத்து, தேவையான நல்ல கொழுப்பை உள்ளிறங்கச் செய்யும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! Empty Re: உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:29 pm

சூரை மீன்

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! 19-1374214293-2-tuna
சூரை மீன்களில் உள்ள அதிமுக்கியமான கொழுப்பமிலங்கள், உடல் எடையை மட்டும் அதிகரிக்கச் செய்யாமல், உடலை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும் உதவி புரியும். அதிலும் மதிய உணவில், சீரான முறையில் சூரை மீன் சாலட்டை சேர்த்துக் கொண்டால், கொஞ்சம் வேகமாக உடல் எடையானது அதிகரிக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! Empty Re: உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:30 pm

இறால்
உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! 19-1374214309-3-prawn
கடல் உணவு பிரியர்களா? அப்படியானால் தினமும் இரண்டு முறை இறால்களை சாப்பிடலாம். அதிலுள்ள வளமான ஊட்டச்சத்தும், அத்தியாவசிய அமிலங்களும், உடலில் கலோரிகளை தங்க வைத்து, உடல் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்யும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! Empty Re: உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:31 pm

கோழியின் நெஞ்சுக்கறி
உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! 19-1374214328-4-chicken
கோழியின் நெஞ்சுக்கறியை க்ரில் செய்து, மயோனைஸ் தடவி மதிய உணவோடு சாப்பிடலாம். இது சுவைமிக்க உணவாக மட்டுமல்லாமல், உடல் எடை கூடவும் உதவி புரியும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! Empty Re: உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:32 pm

கொத்திய மாட்டிறைச்சி

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! 19-1374214344-5-beef
சத்துள்ள கொத்திய மாட்டிறைச்சியை சாண்ட்விச் உடன் சேர்த்து உண்டால், உடல் எடை அதிகரிக்கும். ஏனெனில் இதில் உள்ள கொழுப்பு சுலபமாக உள்ளிறங்குவதால், உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! Empty Re: உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:33 pm

முட்டை
உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! 19-1374214367-6-egg

உடல் எடை அதிகரிக்க வேண்டுமானால், வளமான புரதச்சத்து மற்றும் அமினோ அமிலம் கலந்துள்ள முட்டைகளை சாப்பிட வேண்டும். அதிலும் முட்டையில் உள்ள மஞ்சள் கருவில், அதிக அளவில் நல்ல கொழுப்பிணியும், ஆற்றல் மிக்க கலோரிகளும் நிறைந்துள்ளது. ஆகவே தினமும் இரண்டு முட்டைகள் உண்டால், உடல் எடையை வேகமாக அதிகரிக்கலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! Empty Re: உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:34 pm

சீஸ்/பாலாடைக் கட்டி
உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! 19-1374214382-7-cheese
 
நுரைமிக்க பாலில் செய்யப்பட்ட பாலாடைக் கட்டிகளில், சைவ உணவு உண்ணுபவர்களுக்கு கரைகின்ற புரதச்சத்தானது அதிகம் உள்ளது. புரதம் அதிகம் உள்ளதால், உடம்பில் போதுமான கலோரிகளை கொடுக்கும். அதனால் வேகமாக உடல் எடை அதிகரிக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! Empty Re: உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:35 pm

சிவப்பு இறைச்சி
உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! 19-1374214402-8-redmeat

போதுமான அளவில் சிவப்பு இறைச்சியை உண்டால், உடலில் புரதச்சத்து உள்ளிறங்கும். அதனை பல வகையில் சமைத்து சாப்பிடலாம். சாஸ் உடன் சேர்த்து அதனை உணவோடு சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதால் வயிறு நிறைவதோடு மட்டுமல்லாமல், உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! Empty Re: உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:35 pm

ஓட்ஸ்

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! 19-1374214420-9-oats
ஒரு பௌல் ஓட்ஸ் கஞ்சி சாப்பிடுவது, ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவாக அமையும். இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், உடலுக்குத் தேவையான அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களை உடனே இது கொடுத்து விடும். ஆகவே ஓட்ஸ் உடன் சேர்த்து க்ரீம், நட்ஸ் மற்றும் வாழைப்பழங்களை சேர்த்து சுவையை அதிகரித்து கொள்ளுங்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! Empty Re: உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:36 pm

கைக்குத்தல் அரிசி
உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! 19-1374214446-10-brownrice
கைக்குத்தல் அரிசியில் போதுமான அளவு கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே சீரான முறையில் கைக்குத்தல் அரிசியை உண்டால், உடலில் கார்போஹைட்ரேட்டானது சேமித்து வைக்கப்பட்டு, வேகமாக உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! Empty Re: உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:37 pm

பாஸ்தா

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! 19-1374214463-11-pasta
ஒரு கிண்ணத்தில் சுவைமிக்க பாஸ்தாவை போட்டு சாப்பிட்டால், அது திருப்தியான உணவாக அமையும். அதிலும் இது வயிற்றை மட்டும் நிரப்பாமல், அதிலுள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட் உடலில் ஊட்டச்சத்தை ஏற்றி, உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! Empty Re: உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:38 pm

கோதுமை சப்பாத்தி
உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! 19-1374214485-12-chapathy

கோதுமையால் செய்யப்பட்ட ஒரு துண்டு சப்பாத்தியில் 13 கலோரிகள் அடங்கியுள்ளது. ஆகவே கோதுமை சப்பாத்தியில் பிடித்த ஜாம், வெண்ணெய் அல்லது மயோனைஸ் தடவி சாப்பிட்டால், சுவைமிக்க காலை உணவாக அது அமையும். இதனால் வயிறும் வேகமாக நிறையும். இது உடலால் மெதுவாக உட்கொள்ளப்படுவதால், சுலபமாக உடல் எடை அதிகரிக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! Empty Re: உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:38 pm

பீன்ஸ்

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! 19-1374214499-13-beans
விலங்கில் உள்ள புரதச்சத்துக்கு நிகராக விளங்குகிறது பீன்ஸ். அதனால் அதனை சைவ உணவு உண்ணுபவர்கள் தேர்ந்தெடுக்கலாம். நல்ல சாஸ் உடன் அதை சமைத்தல், அதில் 300 கலோரிகள் அடங்கியிருக்கும். வேண்டுமெனில் அதனுடன் சில பீட்டா ரொட்டிகளையும் சேர்த்துக் கொண்டால், சுவைமிக்க உணவாக அது அமையும். இது உடல் எடையையும் அதிகரிக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! Empty Re: உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:39 pm

உருளைக்கிழங்கு
உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! 19-1374214515-14-potato

உருளைக்கிழங்கில், போதுமான அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலப்புச்சீனி உள்ளது. இதனை உணவில் அதிகமாக பயன்படுத்தினால், சத்தான கொழுப்பாக உடலில் படியும். அதிலும் அவித்த அல்லது வேக வைத்த உருளைக்கிழங்கை சாலட், சாண்ட்விச் மற்றும் இதர உணவுகளோடு சேர்த்து உண்ணும் போது, உடல் எடை அதிகரிக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! Empty Re: உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:40 pm

சேனைக்கிழங்கு
உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! 19-1374214531-15-yam

அதிக அளவு ஸ்டார்ச் கொண்டுள்ள மற்றொரு உணவாக சேனைக்கிழங்கு உள்ளது. ஒரு முறை அதனை உண்ணும் போது, உடம்பில் 150 கலோரிகள் அதிகரிக்கும். அதனை அடிக்கடி சத்தான உணவோடு சேர்த்து சமைத்து சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! Empty Re: உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:41 pm

அவகேடோ (வெண்ணைப் பழம்)
உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! 19-1374214551-16-avocado
பட்டர் ப்ரூட் என்றழைக்கப்படும் இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பமிலம் அதிகம் நிறைந்துள்ளது. இதனை சூப், சாலட் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனால் உடலில் ஊட்டச்சத்தை ஏற்றி, தேவையான கொழுப்பையும் சேர்க்கும். இதனால் ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! Empty Re: உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:41 pm

வேர்க்கடலை வெண்ணெய்
உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! 19-1374214565-17-peanutbutter
அதிக அளவில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பமிலம் நிறைந்துள்ள இயற்கையான வேர்க்கடலை வெண்ணெய், உடல் நல ஆரோக்கியத்துக்கு பெரிதும் துணை புரிகிறது. அதிலும் அதனை பிரட் அல்லது பிஸ்கட்களில் தடவி உண்டால், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! Empty Re: உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:42 pm

பாதாம் வெண்ணெய்

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! 19-1374214600-18-almondbutter
ஆரோக்கியமான புரதம் நிறைந்த நட்ஸ் வகையாக விளங்குகிறது பாதாம் வெண்ணெய். மேலும் இதில் அதிமுக்கிய கொழுப்பமிலங்களும் நிறைந்துள்ளது. இதனை சாலட், பிரட் மற்றும் டெசர்ட்டுகளில் சேர்த்த சாப்பிட்டால், சருமம் பளபளப்பாகவும், முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும். அதனுடன் சேர்த்து உடல் எடையும் அதிகரிக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! Empty Re: உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:44 pm

ஆலிவ் எண்ணெய்
உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! 19-1374214621-19-oliveoil
சாலட்களில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி சாப்பிடுவது ஆரோக்கியமான உணவாக விளங்கும். அதில் அதிக அளவு கலோரிகள் மட்டுமல்லாமல், லினோலெயிக் அமிலமும் அதிகமாக உள்ளது. ஆகவே இந்த ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்ப்பதால், உடல் எடையை அதிகரிப்பதோடு, இதய நோய்கள் வராமலும் காக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! Empty Re: உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:44 pm

பாதாம் பருப்பு
உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! 19-1374214643-20-almond
பாதாம் என்பது நரம்பு வளர்ச்சிக்கு பயன்படும் உணவாகும். இதனை உடல் எடை கூடுவதற்கான ஆரோக்கியமான சில விஷயங்களுக்காகவும் பயன்படுத்தலாம். தினமும் ஒரு கை பாதாம் பருப்புகளை உண்ணுவதால், உடலின் செயல்பாடு பாதுகாக்கப்பட்டு, நரம்பு திடமாக செயல்படும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! Empty Re: உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:46 pm

ஆளி விதை
உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! 19-1374214663-21-flaxseed
ஆளி விதையில் அதிக அளவில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பமிலம் அடங்கியுள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை காத்து, உடலை சீரான முறையில் செயல்பட உதவும். எனவே தினமும் போதுமான அளவை ஆளி விதையை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியம் பாதிக்காமல் உடல் எடையை அதிகரிக்க உதவி புரியும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! Empty Re: உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:47 pm

முந்திரி
உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! 19-1374214690-22-cashewnut
நல்ல உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு கை முந்திரி பருப்பை சாப்பிடுங்கள். அதிலுள்ள முக்கிய எண்ணெய்கள், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். மேலும் அணுக்களின் அடுக்குகளில் உய்வூட்டி, சருமம் மென்மையானதாக வைத்துக் கொள்ள உதவும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! Empty Re: உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:48 pm

வாழைப்பழம்
உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! 19-1374214712-23-banana

வேகமாக உடல் எடை அதிகரிக்க வேண்டுமானால், தினமும் இரண்டு அல்லது கூடுதல் வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். வாழைப்பழங்களில் கலப்புச்சீனியும், பழவெல்லமும் சரியான கலவையில் உள்ளது. மேலும் கரையும் கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளது. இது உடனடி சக்தியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், உடல் எடை அதிகரிக்கவும் உதவி புரியும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! Empty Re: உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:49 pm

தேங்காய் பால்
உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! 19-1374214732-24-coconutmilk

தேங்காய் பாலில் அதிக அளவு டயட் எண்ணெய்கள் நிறைந்துள்ளது. மேலும் இது பலவகையான உணவு வகைகளுக்கு சுவையை கூட்டவும் பயன்படுகிறது. தேங்காய் பாலில் செய்த உணவில் அதிக கலோரிகள் இருக்கும். எனவே இதனை சாப்பிட்டால், உடல் எடையை அதிகரிக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!! Empty Re: உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum