Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
'ஃபெரீக்' ஷொர்பா (شربة فريك) - அல்ஜீரியன் கஞ்சி
Page 1 of 1 • Share
'ஃபெரீக்' ஷொர்பா (شربة فريك) - அல்ஜீரியன் கஞ்சி
ரமலான் சமையல்
ரமலானில் நோன்பு திறக்கும் (இஃப்தார்) நேரங்களில் சாப்பிடக்கூடிய உணவுகளில் முக்கியமான இடத்தில் உள்ளது [b style="color: rgb(255,0,255)"]"கஞ்சி"[/b]தான்! பெரும்பாலான நாடுகளில் அவரவர் உணவு வழக்கத்திற்கு ஏற்றார்போல் ஏதாவது ஒரு கஞ்சி வகையை இஃப்தாருக்கென தயார் செய்துக் கொள்கிறார்கள். ஏனெனில் அதிகாலைப் பொழுதிலிருந்து பகல் முழுவதும் ஒரு மிடரு தண்ணீர்கூட அருந்தாமல் சூரியன் மறையும்வரை இறைவனுக்காக உண்ணா நோன்பு இருந்துவிட்டு, இறைவன் அனுமதித்த நேரமான சூரியன் மறைந்தவுடனே நோன்பை முடித்துக் கொண்டு சாப்பிட ஆரம்பிக்கிறோம். அப்போது சுவையறியும் நாவில் ஆரம்பித்து, உணவுக் குழாய், வயிறு என அத்தனையும் நீண்ட நேர ஓய்வில் இருப்பதால் எளிதாக செரிமானம் ஆகக்கூடியதும், சுலபமாக தயாரிக்கக்கூடியதும், முடிந்தவரை சத்துக்கள் அதிகம் நிறைந்ததும், கூடவே சுவையானதுமான உணவை நாம் எடுத்துக் கொள்வது அன்றைய பொழுதின் முதல் வேலை உணவான இஃப்தாரில் இதமானதாக இருக்கும்; ஆரோக்கியத்திற்கும் நல்லது!
[b style="color: rgb(153,0,0)"]தேவையான பொருட்கள்:[/b]
[color][font][font][font][font]
லிஸ்ட் 1:-
கொண்டைக் கடலை (ஊறியது) - 3 பிடி (சுமார் 100~125 கிராம்)
மக்ரோனி (கோதுமை சைஸ்) - 3 பிடி (சுமார் 75~100 கிராம்)
தக்காளி கூழ் - 2 டேபிள் ஸ்பூன்
ஹரிஸா (மிளகாய் + பூண்டு மிக்ஸ்) பேஸ்ட் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சிக்கன் ஸ்டோக் - 1 க்யூப்
ஃபுல் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன்
லிஸ்ட் 2:-
செலரி - 1 சிறிய தண்டு (சுமார் 250 கிராம்)
தக்காளி - 2 (சுமார் 150 கிராம்)
வெங்காயம் - 2
சிகப்பு குடமிளகாய் - 1 (நடுத்தரமானது)
கேரட் - 1 (நடுத்தரமானது)
பூண்டு - 2 பல்
மல்லிக் கீரை - 1 கொத்து
புதினா - 1 தழை
[/font][/font][/font][/font][/color][color][font][font][font][font]
லிஸ்ட் 3:-
(எலும்புடன் கூடிய) மட்டன் - 200 கிராம்
(கொத்திய) மட்டன் கறி - (100 + 150) 250 கிராம்
வெள்ளை மிளகுத் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
கறுப்பு மிளகுத் தூள் - ½ டேபிள்ஸ்பூன்
சிக்கன் ஸ்டோக் தூள் - ½ டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ½ டீஸ்பூன்
உப்பு - ¼ டீஸ்பூன்
பப்ரிகா (Paprika) தூள் - 2 டீஸ்பூன்
[b style="color: rgb(153,0,0)"]செய்முறை:[/b]
[/font][/font][/font][/font][/color][color][font][font][font][font]
1. முதலில் வெங்காயத்தை கேரட் துருவலில் (உள்ள பெரிய சைஸ் ப்ளேடில்) துருவிக் கொள்ளவும்.
2. கேரட், தக்காளி, குடமிளகாய், பூண்டு, மல்லி, புதினா அனைத்தையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். செலரியை சுத்தம் செய்து இலைகளை நீக்கி வைக்கவும். (செலரி இலை கொழுந்தாக இருந்தால் அதையும் பொடிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.)
3. துருவிய வெங்காயம் மற்றும் நறுக்கிய தக்காளியில் உள்ள (எக்ஸ்ட்ரா) சாறைப் பிழிந்து தனியாக வைக்கவும்.
[/font][/font][/font][/font][/color][color][font][font][font][font]
1. குக்கரில் எண்ணெய் விட்டு (1 இன்ச் அளவில் வெட்டிய, எலும்புடன் கூடிய) மட்டன் துண்டுகளைப் போட்டு 1 நிமிடம் வதக்கி,
2. 100 கிராம் கொத்திய கறியையும் அதனுடன் சேர்த்து வதக்கவும்.
[/font][/font][/font][/font][/color][color][font][font][font][font]
1. நறுக்கிய பூண்டு மற்றும் புதினாவை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
2. செலரியைப் பொடிதாக நறுக்கி அத்துடன் துருவிய வெங்காயத்தையும் சேர்த்து 2~3 நிமிடம் வதக்கவும்.
3. நறுக்கிய தக்காளி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
4. பப்ரிகா தூள், சிக்கன் க்யூப், வெள்ளை & கறுப்பு மிளகுத் தூள் வகைகள், ஹரிஸா, உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
[/font][/font][/font][/font][/color][color][font][font][font][font]
1. நறுக்கி வைத்துள்ள கேரட், குடமிளகாய், மல்லிக் கீரை சேர்த்து 2~3 நிமிடம் வதக்கவும்.
2. தனியாக எடுத்து வைத்த தக்காளி & வெங்காய சாற்றினை இப்போது சேர்க்கவும்.
3. சுமார் 1¼ ~ 1½ லிட்டர் தண்ணீர் சேர்த்து குக்கர் வெய்ட் போட்டு 4, 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
[/font][/font][/font][/font][/color][color][font][font][font][font]
1. கொத்திய மட்டன் கறியில் மீதியுள்ள 150 கிராமில் இஞ்சி பூண்டு பேஸ்ட், சிக்கன் ஸ்டோக் தூள், உப்பு சேர்த்து சிறிய உருண்டைகளாக (கோலி அளவில்) உருட்டி வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதி வந்ததும் மக்ரோனியைப் போட்டு முக்கால் வேக்காட்டில் எடுத்து வடித்து வைக்கவும்.
[/font][/font][/font][/font][/color][color][font][font][font][font]
1. நான்கைந்து விசில் முடிந்த பிறகு ஊறிய கொண்டைக் கடலையை சேர்க்கவும்.
2 & 3. ஃபுல் க்ரீம் & தக்காளி கூழ் சேர்த்து நன்கு கலக்கவும்.
4. [முக்கால் வேக்காட்டில்] வேகவைத்த மக்ரோனியைப் போட்டு ஒன்றோடொன்று ஒட்டாமல் கலக்கி விடவும்.
[/font][/font][/font][/font][/color][color][font][font][font][font]
1. இப்போது உருட்டி வைத்துள்ள கறி உருண்டைகளை மெதுவாக போடவும்.
2. ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு, கறி உருண்டை வெந்தவுடன் இறக்கவும்.
வித்தியாசமான வாசனைக் கொண்ட, சுவையான ஃபெரீக் ரெடி!
[/font][/font][/font][/font][/color][color][font][font][font][font]
[b style="color: rgb(255,0,255)"]"ஃபெரீக்"[/b] என்று சொல்லப்படும் இந்த வகை கஞ்சி 'அல்ஜீரியன்' மக்களின் பாரம்பரை உணவுகளில் ஒன்று. நாம் ஒரே வகையான கஞ்சியை தொடர்ந்து சாப்பிடுவதைவிட சற்று மாற்றமான வகைகளிலும் கஞ்சி தயார் செய்துக் கொண்டால் ரமலானில் பலவகை உணவுகளைக் குறைத்துக் கொள்ளும் நமக்கு, எல்லாவிதமான சத்துக்களும் கஞ்சி மூலமே பெரும்பாலும் கிடைத்துவிடும். இந்த முறையிலும் தயார் செய்து பாருங்கள்.
[b style="color: rgb(153,0,0)"]மிக சுலபமான முறையில் செய்ய: [/b]
1. முதலில் வெங்காயத்தை கேரட் துருவலில் (உள்ள பெரிய சைஸ் ப்ளேடில்) துருவிக் கொள்ளவும். கேரட், தக்காளி, குடமிளகாய், செலரி, பூண்டு, மல்லி, புதினா அனைத்தையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
2. குக்கரில் எண்ணெய் விட்டு மட்டன் துண்டுகளையும், (100 கிராம்) கொத்திய கறியையும் போட்டு அத்துடன் நறுக்கிய வைத்துள்ள காய்கறிகள், ஊறிய கொண்டைக் கடலை, துருவிய வெங்காயம் மற்றும் சிக்கன் க்யூப், தூள் வகைகள், ஹரிஸா, ஃபுல் க்ரீம், தக்காளி கூழ், உப்பு அனைத்தையும் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, சுமார் 1¼ ~ 1½ லிட்டர் தண்ணீரையும் சேர்த்து குக்கர் வெய்ட் போட்டு 4, 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
3. (நான்கைந்து விசில் வருவதற்குள்) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதி வந்ததும் மக்ரோனியைப் போட்டு முக்கால் வேக்காட்டில் எடுத்து வடித்து வைக்கவும். (தண்ணீர் கொதி வந்து மக்ரோனி வேகும் நேரத்தில்) மீதியுள்ள 150 கிராம் கொத்திய மட்டன் கறியில் இஞ்சி பூண்டு பேஸ்ட், சிக்கன் ஸ்டோக் தூள், உப்பு சேர்த்து சிறிய உருண்டைகளாக (கோலி அளவில்) உருட்டி வைக்கவும்.
4. விசில் வந்து முடிந்த பிறகு [முக்கால் வேக்காட்டில்] வேகவைத்த மக்ரோனியையும் உருட்டி வைத்துள்ள கறி உருண்டைகளையும் போட்டு, ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும்.
இதற்கு அதிகபட்சம் ½ மணி நேரம் மட்டுமே ஆகும்.
சமையல் குறிப்பு-சகோ.அஸ்மா சர்புதீன்
http://payanikkumpaathai.blogspot.com/2010/07/blog-post_26.html
[/font]
[/font][/font][/font][/color]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: 'ஃபெரீக்' ஷொர்பா (شربة فريك) - அல்ஜீரியன் கஞ்சி
படிக்கும் போதே
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum