Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பொறுமை என்றும் பெருமை!
Page 1 of 1 • Share
பொறுமை என்றும் பெருமை!
இன்று அரிதாகி வரும் நற்பண்புகளில், யாவரும் எளிதாகப் பெற முடியாத நற்பண்பு ஒன்று உண்டென்றால் அதுதான் பொறுமை என்னும் நற்பண்பு. பொறுத்தார் பூமியாள்வார், பொறுமை பூமியைக் காட்டிலும் பெரியது போன்ற சொலவடைகள் பொறுமையின் பெருமைகளை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளன. இந்த உலகத்தில் எத்தனையோ நல்லது, கெட்டது நடந்து கொண்டேயிருக்கின்றன. அதையெல்லாம் இந்தப் பூமி பொறுமையாகப் பார்த்துக் கொண்டும், தாங்கிக் கொண்டும் நம்மை தாயாகக் காத்து வருகிறது. பொறுமை நமக்குப் பலமான மன வலிமையையும், பல நன்மைகளையும் பெற்றுத் தருகிறது.
தனது அனுபவ அறிவினால் மனிதன் பல நல்லியல்புகளைப் பெறுகிறான். அந்த நல்லியல்புகள் அனைத்தையும் திரட்டிப் பார்த்தால் அவையனைத்தும் பொறுமை என்னும் ஒன்றில் அடங்கும். ஒருவன் மெய்யறிவால் பெறுகின்ற பொறுமை மலைபோல் உறுதியாய், பூமியைப்போல் எதையும் தாங்கும் சக்தியுடன், கடல்போல் பரந்த உள்ளத்துடன் எத்தகைய துன்பம் வந்தாலும், கொடுமை செய்தாலும் கலங்காது ஏற்றுக்கொண்டு பிறருக்கு கனவிலும் துன்பம் தராது மெல்லிய பூங்காற்றாய் இன்பமே தரும். அத்தகைய பொறுமையைப் பெறுவதற்கு தவ வலிமை வேண்டும். அதனாலேயே இறைவனை சாந்த வடிவினனாய் காண்கிறோம்.
பொறுமை என்னும் பண்பினைப் போற்றி நடப்பதால் பல நன்மைகளைப் பெறலாம். பொறுமையுடையவரிடத்தில் அனைத்து நற்குணங்களும் தானே வந்தடையும். அந்த நற்குணங்களில் தலையாயது நான்காகும். அவை, அடக்கம், போதும் என்ற மனம், உண்மை, அன்பு என்பனவாகும். இக்குணங்கள் இல்லாதவன் பொறுமை எனும் குணத்தைப் பெற மாட்டான்.
இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழ்வதே போதும் என்ற மனம். பொறுமைக்கு,
உள்ள நிறை அவசியம். அதற்கு அடிப்படையாக விளங்குவது உண்மை, உண்மை இல்லாதவனிடத்து ஆசை கனன்று எரியும். உண்மை பொறுமைக்கு உயிர் போன்றது. அன்பு பகையை முறிக்கும், நட்பை வளர்க்கும், நல்லுறவு ஏற்பட வழிவகுக்கும். எனவே, பொறுமை என்னும் குணத்தைப் பெற்றவர் நான்கு நற்குணத்தை ஒருங்கே பெற்றவராகிறார். பொறுமை குணம் பல வழிகளிலும் நல்வழிப்படுத்தி சிறப்புடையவர்களாக்கும் என்பது வெள்ளியெடைமலை. மனிதன் எதை இழந்தாலும் பெற்று விடலாம், ஆனால் பொறுமையை இழந்தவன் வாழ்க்கையையே இழந்தவனாகிறான்.
வண்ணத்தில் நீலமாய், நம் எண்ணத்தில் உயர்ந்ததாய், மண்ணில் வாழும் மனிதனுக்கு பெரும் பயன்களை அளித்திடும் கடல் சான்றோர்களின் உள்ளம் போல் விரிந்து, நல்லோர் மனம் பரந்து பெரும்பரப்பாக பொறுமையின் சின்னமாய், தன்னை நாடி வரும் அனைத்து நதிகளையும் அணைத்துக் கொண்டு வானத்தைப் பார்த்து சிரித்த வண்ணம் உள்ளது. மலை மழையையும், வெயிலையும், காற்றையும் தாங்கிக் கொண்டு, தன்னைச் சுற்றி மூலிகைச் செடிகளை வளர்த்து பொறுமையுடன் நாடுகளுக்கு அரணாய் விளங்குகிறது. மானுடம் வெல்லும் என்பதை நிலைநாட்ட, மனித உருவாய் வடிவெடுத்த இறைவன் ஸ்ரீராமன், இப்பூவுலகில் பொறுமை கொண்டு பட்டத் துயரங்கள், மனிதர்களுக்கு பொறுமையில் மகிமையை இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டுகின்றன.
காந்திஜி ஆங்கிலேயரிடம் பட்ட அவமானங்கள் எண்ணிலடங்கா. காந்திஜி பொறுமை எனும் புகைவண்டியில் ஏறி சக்கரம், அஹிம்சை என்ற இரு தண்டவாளங்களின் மீது கடவுள் நம்பிக்கை என்ற எஞ்ஜினை ஓட்டினார். டாக்டர் அம்பேத்கர் பொறுமை என்ற அணிகலன்களை அணிந்திருந்ததினாலேயே சட்டமேதையாகி, நம் ஜனநாயக நாட்டிற்கேற்ற சட்டத்திட்டங்களை உருவாக்கித் தந்தார்.
மனிதன் சலனம், சபலம், கோபம், அகங்காரம், ஆணவம் இவைகளைத் தன்னிடமிருந் து எப்போது விடுபடச் செய்கிறானோ அவனிடம் பொறுமை குடிகொள்கிறது. அவன் போக்கில் பணிவு இருக்கும், கண்களில் கனிவு இருக்கும், செய்யும் தொழிலில் நேர்மையும் உண்மையும் அன்பும் கலந்திருக்கும். அவனே மனிதருள் மாணிக்கம்.
நன்றி -தினமணி

செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பொறுமை என்றும் பெருமை!
கவிஞர் கே இனியவன் wrote:ஆம் இதேபோல் பொறுமையை காத்து சாதித்தவர்கள் தான் சாதனையாளராக்கினார் ..
Re: பொறுமை என்றும் பெருமை!
பொறுமையைப் பற்றி நல்ல தகவல்கள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: பொறுமை என்றும் பெருமை!
நன்றி ஜிஸ்ரீராம் wrote:மிக அருமையான கட்டுரை. நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» பொறுமை… நம்பிக்கை!
» பொறுமை கடலினும் பெரிது! - திருக்குறள் கதைகள் 15
» பெருமை!
» பெண்ணின் பெருமை...!!
» திருக்குறளின் பெருமை

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum