Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
என் சமையல் அறையில் இன்று - குளுகுளு உணவுகள்
Page 1 of 1 • Share
என் சமையல் அறையில் இன்று - குளுகுளு உணவுகள்
வெயில் கதகளி ஆடும் கால கட்டம் இது. கூடவே, இந்த சீஸனுக்கே உரித்தான அசௌகரியங்களான நாவறட்சி, நீர்க்கடுப்பு, உடல் சூடு போன்றவை வாட்டியெடுக்கும். இவற்றிலிருந்து நிவாரணம் பெற உதவும் வகையில், 30 வகை 'குளுகுளு’ உணவுகளை, சுவையாக தயாரித்து இங்கே வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் தீபா பாலசந்தர்.
''உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரி, பூசணி, கேழ்வரகு, எலுமிச்சை, மோர் போன்ற பொருட்களைக் கொண்டு, பல்வேறு உணவு வகைகளை பார்த்துப் பார்த்து செய்து கொடுத்திருக்கிறேன். இவற்றைப் பயன்படுத்தினால், கோடையின் உக்கிரத்தை நீங்கள் அதிக சிரமமின்றி கடந்து செல்ல உதவிகரமாக இருக்கும்'' என்று ஆருயிர் தோழியாக, அக்கறை ததும்ப கூறுகிறார் தீபா.
பூசணி கூலர்
தேவையானவை: வெள்ளை பூசணி - ஒரு துண்டு, பனங்கற்கண்டு - தேவைக்கேற்ப,
செய்முறை: வெள்ளை பூசணியின் தோலை நீக்கிவிட்டு, சிறுசிறு துண்டுகளாக்கவும். பிறகு, அதை வேக வைத்து, ஆறவிட்டு, மிக்ஸியில் நைஸாக அரைத்து, வடிகட்டவும். பனங்கற்கண்டு கலந்து பருகவும்.
நீர்கடுப்பை நீக்கும் பானம் இது! ஃப்ரிட்ஜில் வைத்து 'ஜில்’ என்றும் பருகலாம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: என் சமையல் அறையில் இன்று - குளுகுளு உணவுகள்
சின்ன வெங்காயம் துவட்டல்
தேவையானவை: சின்ன வெங்காயம் - ஒரு கப், மிளகு - சீரகத்தூள் - 2 டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி, பொடியாக நறுக்கவும். கடாயில் நெய்யை காயவிட்டு... நறுக்கிய வெங்காயம், மிளகு - சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, கீழே இறக்கவும்.
இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
தேங்காய் வெல்ல பால்
தேவையானவை: தேங்காய் துருவல் - ஒரு கப், பொடித்த வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பால் - கால் கப்
செய்முறை: பாலைக் காய்ச்சி கொள்ளவும். தேங்காய் துருவலை அரைத்து பால் எடுக்கவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டி, அதனுடன் பால், தேங்காய்ப் பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து, அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்த பின்பு இறக்கி பரிமாறவும்.
இதை தோசை, இட்லி, ஆபத்துடன் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். அல்லது, அப்படியே பருகலாம். தேங்காய்ப் பால் வயிறு, வாய் புண்களை ஆற்ற வல்லது!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: என் சமையல் அறையில் இன்று - குளுகுளு உணவுகள்
ஜவ்வரிசி பகாளாபாத்
தேவையானவை: ஜவ்வரிசி - அரை கப், தயிர் - ஒரு கப், காய்ச்சி ஆற வைத்த பால் - அரை கப், இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 3, கடுகு, பெருங்காயத்தூள் - தாளிக்க தேவையான அளவு, கேரட் துருவல் - 4 டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஜவ்வரிசியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அதை வேக வைத்து, தயிருடன் கலக்கவும். அதனுடன் காய்ச்சி ஆற வைத்த பால், உப்பு, கேரட் துருவல், கொத்தமல்லித் தழை ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். பின்னர் கடாயில் எண்ணெயை காயவிட்டு... கடுகு, பெருங்காயத்தூள், இஞ்சித் துருவல், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, அதை ஜவ்வரிசி கலவை மீது கொட்டி அலங்கரித்து, கலர்ஃபுல்லாக பரிமாறவும்.
மேங்கோ கப்
தேவையானவை: மாம்பழம் - ஒன்று, தயிர், பால், சர்க்கரை - தேவைக்கேற்ப.
செய்முறை: பாலைக் காய்ச்சி ஆற வைத்து சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். மாம்பழத்தை தோல் சீவி, சிறுசிறு துண்டுகளாக்கவும். ஒரு சிறிய கப்பில் சிறிதளவு தயிர், காய்ச்சி வைத்திருக்கும் பால் சேர்த்து, மேலே சிறிதளவு மாம்பழ துண்டுகளை சேர்த்துக் கலக்கவும். இதே போல் சில கப்புகளில் செய்து, ஃப்ரிட்ஜில் குளிர வைத்து பரிமாறவும்.
இது... இனிப்பும், புளிப்பும் கலந்து அசத்தலான சுவையில் இருக்கும்.
பச்சைப் பயறு கீர்
தேவையானவை: பச்சைப் பயறு - ஒரு கப், பொடித்த வெல்லம் - ஒரு கப், பால் - ஒன்றரை கப், முந்திரி, பாதாம் - தலா 10.
செய்முறை: பச்சைப் பயறை வெறும் வாணலியில் வறுத்து வேகவிடவும். ஆறிய பின்னர், வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி அதனுடன் கலக்கவும். முந்திரி, பாதாம் பருப்புகளை பாலில் ஊற வைத்து அரைத்து, வேக வைத்த பயறுடன் கலக்கவும். இதனை அடுப்பில் வைத்து, கொதிக்கவிட்டு இறக்கினால்... பச்சைப் பயறு கீர் ரெடி!
பச்சைப் பயறு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: என் சமையல் அறையில் இன்று - குளுகுளு உணவுகள்
சம்மர் ரைஸ்
தேவையானவை: சாதம் - ஒரு கப், கறிவேப்பிலை - ஒரு கப், மிளகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - இரண்டு டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன், நெய், எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கறிவேப்பிலையை வெறும் வாணலியில் வறுக்கவும். மிளகு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கவும். ஆறிய பின்பு பருப்புகளுடன் கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும். சூடான சாதத்துடன் நெய், உப்பு, சிறிதளவு அரைத்த பொடி சேர்த்து பிசைந்து சாப்பிட... உடல் குளிர்ச்சி பெறும்.
லெமன் பானகம்
தேவையானவை: எலுமிச்சம் பழம் - ஒன்று, புதினா - சிறிதளவு, சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பொடித்த வெல்லம் - தேவைக்கேற்ப.
செய்முறை: வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டி, ஆறவைக்கவும். எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து கொள்ளவும். இதனுடன் சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள், வெல்லக் கரைசல் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்தால்... லெமன் பானகம் ரெடி! இதனை பரிமாறும்போது சுத்தம் செய்த புதினா இலைகளை மேலே தூவிக் கொடுத்தால்... சுவை கூடும்.
கோடையில் ஏற்படும் அதீத தாகத்தை தணிக்கும் இந்த பானகம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: என் சமையல் அறையில் இன்று - குளுகுளு உணவுகள்
பாசிப்பருப்பு துவையல்
தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, தேங்காய் துருவல் - அரை கப், பெருங்காயத்தூள், கடுகு - தாளிக்க தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெயை விட்டு... பாசிப்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுக்கவும். இதனுடன் உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். மீதமுள்ள ஒரு டீஸ்பூன் எண்ணெயை காயவிட்டு, கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, அரைத்து வைத்துள்ள பருப்புடன் சேர்த்தால்... பாசிப்பருப்பு துவையல் தயார்.
இந்த துவையலை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.
கீரைச் சாறு
தேவையானவை:மணத்தக்காளி கீரை - ஒரு கப், மோர் - ஒரு கப், மிளகுத்தூள். சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மணத்தக்காளி கீரையை கழுவி சுத்தம் செய்து, தண்ணீர் சேர்த்து வேகவிடவும். ஆறிய பின்பு மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் மோர், உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துப் பருகலாம்.
வாய்ப்புண் உள்ளவர்களுக்கு கோடையில் இது அருமருந்து!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: என் சமையல் அறையில் இன்று - குளுகுளு உணவுகள்
முளைப்பயறு ட்ரீட்
தேவையானவை:முளைகட்டிய பயறு - ஒரு கப், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முளைப்பயறை ஆவியில் வேகவைக்கவும் (குக்கரிலும் வேகவிடலாம்). இதனுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்தால்... முளைப்பயறு ட்ரீட் ரெடி!
இதை மாலை நேர சிற்றுண்டியாக அனைத்து வயதினரும் சம்மரில் சாப்பிடலாம்.
நீராகாரம்
தேவையானவை: சாதம் - ஒரு கப், மோர் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முதல் நாள் இரவே சாதத்தில் தண்ணீரை ஊற்றி வைக்கவும். மறுநாள் காலையில் அந்த தண்ணீருடன் மோர், உப்பு சேர்த்துப் பருகவும்,
நீராகாரம் உடல் சூட்டை தணிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை தர வல்லது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: என் சமையல் அறையில் இன்று - குளுகுளு உணவுகள்
தேங்காய்ப் பால் ரசம்
தேவையானவை: தேங்காய்ப் பால் - ஒரு கப், புளி - நெல்லிகாய் அளவு, தக்காளி - ஒன்று, பூண்டு - 4 பல், மிளகு - சீரகப் பொடி - ஒரு டீஸ்பூன், கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, காய்ந்த மிளகாய் - 4, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புளியைக் கரைத்து உப்பு, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் தேங்காய்ப் பாலை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கினால்... ரசம் தயார். கடாயில் எண்ணெயை காயவிட்டு கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், தட்டிய பூண்டு பல் சேர்த்து தாளித்து... கொதிக்கவிட்டு இறக்கி வைத்த ரசத்துடன் சேர்க்கவும். மேலே மிளகு - சீரகப்பொடி, கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
அரிசி மோர் கஞ்சி
தேவையானவை: புழுங்கலரிசி - ஒரு கப், மோர் - இரண்டு கப், சின்ன வெங்காயம் - 5, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசியை வெறும் வாணலியில் வறுத்து, ரவை போல உடைக்கவும். இதை தண்ணீருடன் சேர்த்து நன்கு குழைய வேக வைத்து ஆறவிடவும். பின்பு இதனுடன் உப்பு, மோர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் கலந்து சாப்பிடவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: என் சமையல் அறையில் இன்று - குளுகுளு உணவுகள்
ராகி மோர்க்களி
தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், புளித்த மோர் - ஒன்றரை கப், கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, மோர் மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கேழ்வரகு மாவுடன் மோர், உப்பு சேர்த்துக் கரைக்கவும். கடாயில் எண்ணெயை காய வைத்து... கடுகு, உளுத்தம்பருப்பு, மோர் மிளகாய் தாளிக்கவும். இதில் கரைத்த கேழ்வரகு மாவை ஊற்றி, அடுப்பை 'சிம்’மில் வைத்து கிளறவும். நன்கு வெந்து பளபளவென வந்த பின்பு இறக்கி... சிறிய கிண்ணங்களில் பரிமாறவும்.
ஃப்ரூட் லஸ்ஸி
தேவையானவை: தயிர் - ஒரு கப், மாதுளை முத்துக்கள் - ஒரு கப், சர்க்கரை - 4 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 4
செய்முறை: மாதுளை முத்துக்களை அரைத்து தயிருடன் கலக்கவும். பிறகு அதனுடன் சர்க்கரை சேர்க்கவும். பருகும்போது இதனுடன் ஐஸ் கட்டிகள் சேர்த்து நுரை வர அடித்து, குளிர வைத்து பருகவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: என் சமையல் அறையில் இன்று - குளுகுளு உணவுகள்
பூசணி இட்லி
தேவையானவை: இட்லி மாவு, பூசணி துண்டுகள் - தலா ஒரு கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பூசணியை சிறிய துண்டுகளாக்கி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். இதை இட்லி மாவுடன் கலக்கவும். இந்த மாவை இட்லிகளாக வார்த்து எடுக்கவும்.
வெயிலுக்கு ஏற்ற காலைச் சிற்றுண்டி இந்த பூசணி இட்லி! இதற்கு கிரீன் சட்னி தொட்டுக் கொள்ளலாம்.
முளைகட்டிய வெந்தய களி
தேவையானவை: புழுங்கல் அரிசி - 50 கிராம், முளைகட்டிய வெந்தயம் - 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 4 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: புழுங்கல் அரிசியை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். முளைகட்டிய வெந்தயத்தை ஆவியில் வேகவிடவும். பின்பு பொடித்த அரிசியுடன் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அடி கனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, அரிசி - வெந்தய விழுதைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து களி போல கிளறி சாப்பிடவும்.
உடல் சூட்டை தணிக்கும் களி இது! உடல் நலம் காக்க, இதை தினமும் சிறிதளவு சாப்பிடலாமே!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: என் சமையல் அறையில் இன்று - குளுகுளு உணவுகள்
பூசணி பொரியல்
தேவையானவை: வெள்ளை பூசணிக் கீற்று - ஒன்று, மிளகு - 4, காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் - சிறிதளவு, புளி - கொட்டைப்பாக்கு அளவு, சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெள்ளை பூசணியை சிறு சிறு துண்டுகளாக்கி மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தனியா, மிளகு, மிளகாய் வற்றல், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். ஆறிய பின் பொடிக்கவும். வெந்த பூசணிக்காயுடன் புளிக் கரைசல், உப்பு, வறுத்த அரைத்த பொடி சேர்த்து வேகவிட்டு எடுக்கவும். மீதமுள்ள ஒரு டீஸ்பூன் எண்ணெயை காய விட்டு, சீரகம் தாளித்து, வேக வைத்த கலவையுடன் சேர்த்துப் பரிமாறவும்.
முளைப்பயறு தோசை
தேவையானவை: முளைகட்டிய பயறு - அரை கப், தோசை மாவு - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முளைக்கட்டிய பயறுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனை தோசை மாவுடன் கலக்கவும். தோசைக்கல்லை காய வைத்து, மாவை சற்று கனமான சிறிய தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
இந்த தோசை மிகவும் சத்துமிக்கது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: என் சமையல் அறையில் இன்று - குளுகுளு உணவுகள்
ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஷேக்
தேவையானவை: ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம், தேங்காய்ப் பால் - தலா ஒரு கப்.
செய்முறை: ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீமுடன் தேங்காய்ப் பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்து நுரையுடன் பரிமாறவும். விரும்பினால் ஸ்ட்ரா பெர்ரி பழத் துண்டுகளை மேலே சேர்த்து பருகலாம்.
தேங்காய்ப் பால் உடலுக்கு குளிர்ச்சி தரும்.
வெள்ளரி மோர் கூட்டு
தேவையானவை: வெள்ளரிப் பிஞ்சு துண்டுகள் - ஒரு கப், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள், கடுகு - தாளிக்க தேவையான அளவு, பச்சை மிளகாய் - 4, கெட்டி மோர் - ஒரு கப், தேங்காய் துருவல் - 5 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: என் சமையல் அறையில் இன்று - குளுகுளு உணவுகள்
அவல் ஃப்ரூட் சாலட்
தேவையானவை: அவல் - ஒரு கப், பச்சை திராட்சை - 10, வாழைப்பழம் - ஒன்று, பேரீச்சம் பழம் - 10, பப்பாளி - ஒரு துண்டு, மாதுளை முத்துக்கள் - கால் கப்.
செய்முறை: உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் வறுக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். வெள்ளரி துண்டுகளை தண்ணீர் விட்டு வேக வைத்து உப்பு, அரைத்த விழுது சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி, மோருடன் கலக்கவும். கடாயில் எண்ணெயை காய வைத்து... கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்து�an style="font-size: small;">செய்முறை: வாழைப்பழம், பப்பாளி, பேரீச்சம்பழம் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். அதனுடன் மாதுளை முத்துக்கள், பச்சை திராட்சை சேர்த்துக் கலக்கவும். அவலை 5 நிமிடம் ஊற வைத்து அலசி, பழக் கலவையுடன் கலந்து பரிமாறவும்.
புளி பானகம்
தேவையானவை: புளி - நெல்லிக்காய் அளவு, பொடித்த வெல்லம் - தேவைக்கேற்ப, சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் - தலா அரை டீஸ்பூன்.
செய்முறை: வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டவும். புளியை ஊற வைத்து, கரைத்து, வடிகட்டி கொதிக்கவிட்டு, வெல்லக் கரைசல், சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
நீர் கடுப்பு ஏற்படும்போது கிராமப்புறங்களில் இந்த பானகத்தை பருகுவார்கள். இது சோர்வை நீக்க வல்லது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: என் சமையல் அறையில் இன்று - குளுகுளு உணவுகள்
முள்ளங்கி ராய்தா
தேவையானவை: முள்ளங்கி - ஒன்று, இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - ஒன்று, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, கடுகு, பெருங்காயத்தூள், எண்ணெய், கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, தயிர் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முள்ளங்கியை தோல் சீவி துருவவும். கொத்தமல்லி தழையுடன், பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி சேர்த்து நைஸாக அரைக்கவும். தயிரை கெட்டியாக கடைந்து உப்பு, அரைத்து வைத்த விழுது, துருவிய முள்ளங்கி சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு... கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, முள்ளங்கி - தயிர் கலவையுடன் சேர்த்துப் பரிமாறவும்.
மிக்ஸ்டு வெஜ் ஜூஸ்
தேவையானவை: கேரட், வெள்ளரிப் பிஞ்சு - தலா ஒன்று, மோர் - தேவையான அளவு, மிளகு - 4, புதினா - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கேரட், வெள்ளரியை சுத்தம் செய்து... புதினா, மிளகு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதனை மோருடன் கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துப் பருகவும்.
இந்த ஜூஸ் வெயில் நேரத்தில் தொண்டைக்கு இதமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: என் சமையல் அறையில் இன்று - குளுகுளு உணவுகள்
பசுமை சட்னி
தேவையானவை: கொத்தமல்லித் தழை - ஒரு கப், புதினா இலைகள் - அரை கப், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - சிறிய துண்டு, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொத்தமல்லித் தழை, புதினா இலைகளை சுத்தம் செய்து பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து அரைக்கவும். இதில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்தால்... பசுமை சட்னி தயார்.
வதக்காமல் அப்படியே அரைப்பதால் சத்துகள் வீணாகாது! இது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும்.
தர்பூஸ் டிரிங்
தேவையானவை: தர்பூசணி துண்டுகள், தேங்காய்ப் பால் - தலா ஒரு கப், சர்க்கரை - தேவையான அளவு.
செய்முறை: தர்பூசணி துண்டுகளை அரைத்து ஜூஸ் தயாரிக்கவும். தேங்காய்ப் பாலுடன் தர்பூசணி ஜூஸ், தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும்.
இதை அப்படியே பருகலாம். அல்லது, குளிர வைத்தும் பருகலாம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: என் சமையல் அறையில் இன்று - குளுகுளு உணவுகள்
கேரட் ஜூஸ்
தேவையானவை: கேரட், எலுமிச்சம் பழம் - தலா ஒன்று, சர்க்கரை - தேவையான அளவு.
செய்முறை: கேரட்டை கழுவி சுத்தம் செய்து தோல் சீவாமல் பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்து கலந்து பருகவும்.
இது விட்டமின் 'ஏ’ மற்றும் வைட்டமின் 'சி’ நிறைந்த பானம்!
லெமன் ஜிஞ்சர் டிரிங்க்
தேவையானவை: எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், தண்ணீர் - 2 கப், துருவிய இஞ்சி - அரை டீஸ்பூன், பொடித்த வெல்லம், தேன் - தேவையான அளவு.
செய்முறை: தண்ணீரைக் கொதிக்க வைத்து இஞ்சி, வெல்லம் சேர்த்து, அரை கப்பாக குறுகிய பின்பு இறக்கி வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்து பருக... கோடையில் வரும் பித்தத்தை தவிர்க்கலாம்.
தொகுப்பு: பத்மினி
படங்கள்: எம்.உசேன்
ஃபுட் டெகரேஷன்: 'செஃப்’ ரஜினி
படங்கள்: எம்.உசேன்
ஃபுட் டெகரேஷன்: 'செஃப்’ ரஜினி
thanx - aval vikatan
http://www.samayalkilaadi.com/2013/07/30_2237.html#ixzz2bq7jaUJD
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» என் சமையல் அறையில் இன்று ... வகை வகையான ஸ்டார் சமையல்!
» இன்று என் சமையல் அறையில் ..பட்ஜெட் சமையல்!
» என் சமையல் அறையில் இன்று ... ராகி சமையல்!
» இன்று என் சமையல் அறையில் - கதம்ப சமையல்
» என் சமையல் அறையில் இன்று -வெரைட்டி ரைஸ்!
» இன்று என் சமையல் அறையில் ..பட்ஜெட் சமையல்!
» என் சமையல் அறையில் இன்று ... ராகி சமையல்!
» இன்று என் சமையல் அறையில் - கதம்ப சமையல்
» என் சமையல் அறையில் இன்று -வெரைட்டி ரைஸ்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum