Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இன்றைய கிச்சன் ஸ்பெஷல் - சுவையான சிற்றுண்டிகள்
Page 1 of 1 • Share
இன்றைய கிச்சன் ஸ்பெஷல் - சுவையான சிற்றுண்டிகள்
இன்றைய கிச்சன் ஸ்பெஷல் -
கொத்து பரோட்டா
தேவையான பொருட்கள்
பரோட்டா - 6
முட்டை - 4
வெங்காயம் - 1
தக்காளி - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
பரோட்டா குருமா - 3 மேஜைக் கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. வெங்காயம் தக்காளியை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
3. பின்னர் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
4. அடுத்து பரோட்டாவை சிறுசிறு துண்டுகளாக பிய்த்துப் போட்டு லேசாக வதக்கவும்.
5. பின்னர் முட்டைகளை உடைத்து ஊற்றி, சிறிதளவு உப்பு (ஏற்கனவே பரோட்டாவில் உப்பு உள்ளது) சேர்த்து கட்டிபிடிக்காமல் நன்கு கிளறவும்.
6. முட்டை வெந்ததும் அதில் பரோட்டா குருமா மூன்று கரண்டி சேர்த்து கிளறவும். (பரோட்டா குருமா இல்லையென்றால் சிறிது தண்ணீர் தெளித்து கிளறவும்.)
7. பின்னர் மிளகு, நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறவும்.
6. கடைசியாக அடுப்பிலிருந்து இறக்கி வைத்து நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.
கொத்து பரோட்டா
தேவையான பொருட்கள்
பரோட்டா - 6
முட்டை - 4
வெங்காயம் - 1
தக்காளி - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
பரோட்டா குருமா - 3 மேஜைக் கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. வெங்காயம் தக்காளியை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
3. பின்னர் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
4. அடுத்து பரோட்டாவை சிறுசிறு துண்டுகளாக பிய்த்துப் போட்டு லேசாக வதக்கவும்.
5. பின்னர் முட்டைகளை உடைத்து ஊற்றி, சிறிதளவு உப்பு (ஏற்கனவே பரோட்டாவில் உப்பு உள்ளது) சேர்த்து கட்டிபிடிக்காமல் நன்கு கிளறவும்.
6. முட்டை வெந்ததும் அதில் பரோட்டா குருமா மூன்று கரண்டி சேர்த்து கிளறவும். (பரோட்டா குருமா இல்லையென்றால் சிறிது தண்ணீர் தெளித்து கிளறவும்.)
7. பின்னர் மிளகு, நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறவும்.
6. கடைசியாக அடுப்பிலிருந்து இறக்கி வைத்து நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்றைய கிச்சன் ஸ்பெஷல் - சுவையான சிற்றுண்டிகள்
அடை
தேவையான பொருட்கள்
[color][font]
செய்முறை
[/font][/color]
தேவையான பொருட்கள்
- பச்சரிசி - 1 கப்
- துவரம்பருப்பு - 1/2 கப்
- கொண்டைக்கடலை - 1/2 கப்
- வற்றல் மிளகாய் - 7
- பெருங்காயம் - 1 ஸ்பூன்
- துருவிய தேங்காய் - 1/4 கப்
- பச்சை மிளகாய் - 2
- உப்பு
[color][font]
செய்முறை
[/font][/color]
- கொண்டைக்கடலையை 8 மணிநேரம் ஊற வைக்கவும்.
- அரிசி, துவரம்பருப்பு, கொண்டைக்கடலை, மிளகாயை நறநறவென்று அரைக்கவும்.
- அதனுடன் உப்பு,பெருங்காயம், தேங்காய் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.
- தோசைக்கல் காய்ந்ததும் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தோசைபோல வட்டமாக அடை வார்க்கவும்.
- அதன் நடுவே தோசைக்கரண்டியால் சிறிது துளையிட்டு நடுவிலும் ஓரங்களிலும் சிறிது எண்ணெய் ஊற்றி இரண்டுபுறமும் திருப்பிவிட்டு வெந்ததும் பரிமாறவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்றைய கிச்சன் ஸ்பெஷல் - சுவையான சிற்றுண்டிகள்
மசாலா பூரி
தேவையான பொருட்கள்
[color][font]
செய்முறை
[/font][/color]
தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு-2கப்
- புதினா-அரைகப்
- கொத்தமல்லி-அரைகப்
- பச்சை மிளகாய்-4
- இஞ்சி பூண்டு விழுது-அரை ஸ்பூன்
- உப்பு-தேவையான அளவு
- சீரக பொடி-1ஸ்பூன்
- எண்ணெய்-தேவையான அளவு
[color][font]
செய்முறை
[/font][/color]
- கொத்தமல்லி இலை,புதினா,பச்சைமிளகாய் இவற்றை மிக்சியில் தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துகொள்ளவும்.
- கோதுமை மாவில் இந்த விழுது,இஞ்சி பூண்டு விழுது,சீரகபொடி,உப்பு சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி பூரி செய்ய தேவையான அளவு பிசைந்து வைத்துகொள்ளவும்.
- இந்த மாவை சிறு சிறு பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்றைய கிச்சன் ஸ்பெஷல் - சுவையான சிற்றுண்டிகள்
கல் தோசை
தேவையான பொருட்கள்
[color][font]
செய்முறை
[/font][/color]
தேவையான பொருட்கள்
- 1. புழுங்கல் அரிசி - 3 கப்
- 2. பச்சரிசி - 1/2 கப்
- 3. உளுந்து - 3/4 கப்
- 4. வெந்தயம் - 2 தேக்கரண்டி
- 5. உப்பு - தேவைக்கு
- 6. எண்ணெய் - தேவைக்கு
[color][font]
செய்முறை
[/font][/color]
- அரிசி, பருப்பு, மற்றும் வெந்தயத்தை சுத்தம் செய்து 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
- தேவைக்கு நீர் விட்டு நன்றாக அரைத்து உப்பு கலந்து இரவு முழுக்க புளிக்க விடவும்.
- தோசை கல்லை சூடாக்கி தோசையை விட சற்று கனமாக ஊற்றி, எண்ணெய் விட்டு மூடி போட்டு சிறுந்தீயில் வேக விட்டு எடுக்கவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்றைய கிச்சன் ஸ்பெஷல் - சுவையான சிற்றுண்டிகள்
வெண் பொங்கல்
தேவையான பொருட்கள்
[color][font]
செய்முறை
[/font][/color]
தேவையான பொருட்கள்
- ஒரு கப் பச்சரிசி
- அரை கப் பயத்தம் பருப்பு (பாசி பருப்பு)
- கால் டீ ஸ்பூன் மிளகு
- அரை டீ ஸ்பூன் சீரகம்
- இஞ்சி 3 " துண்டு
- பச்சை மிளகாய் இரண்டு
- கறிவேப்பிலை 5 இலைகள்
- பெருங்காயம் சிறிதளவு
- முந்திரி 10 பருப்புகள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் 3 ஸ்பூன்
- நெய் 4 ஸ்பூன்
- பால் ஒரு டம்பளர்
[color][font]
செய்முறை
[/font][/color]
- முதலில் அரிசியையும் பருப்பையும் களைந்து குக்கரில் நன்கு வேக விடவும். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு சீரகம் மற்றும் முந்திரியைப் போட்டு நன்கு பொரித்துக் கொள்ளவும். இப்போது அடுப்பை அணைத்துவிட்டு பொடிப் படியாக நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாய் கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தைப் போட்டு கரண்டியால் நன்கு கலக்கவும்.
- பிறகு பாலை அதில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பால் நன்கு கொதித்த உடன் வேக வைத்த அரிசி பருப்பை அதில் கொட்டி உப்பு போட்டு அடி பிடிக்காமல் நன்கு கிளறவும். பொங்கல் சரியான பதத்திற்கு வந்த உடன் 4 ஸ்பூன் நெய் சேர்த்து சூடாக பரிமாறவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்றைய கிச்சன் ஸ்பெஷல் - சுவையான சிற்றுண்டிகள்
ரொட்டி
தேவையான பொருட்கள்
[color][font]
செய்முறை
[/font][/color]
தேவையான பொருட்கள்
- கோதுமைமா - 500 கிராம்
- உப்பு - தேவையானளவு
- பால் - ஒரு மேசைக்கரண்டி
- பட்டர் - ஒரு மேசைக்கரண்டி
- முட்டை - ஒன்று
- கொதிநீர் - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- பெரிய வெங்காயம் (சிறிது சிறிதாக வெட்டியது) - ஒன்று
- பச்சைமிளகாய் (சிறிய வட்டமாக வெட்டியது) - 3
[color][font]
செய்முறை
[/font][/color]
- கோதுமைமா, உப்பு, பால், பட்டர், முட்டை, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு கலக்கவும்.
- அதன் பின்பு கொதிநீர் விட்டு நன்றாக குழைக்கவும். குழைத்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டவும். சிறு உருண்டைகளில் ஒன்றை எடுத்து வட்டமாக தட்டவும்.
- அடுப்பில் தோசைக்கல் வைத்து அது சூடானதும் அதில் கொஞ்சமாக எண்ணெய் தடவவும்.
- வட்டமாக தட்டிய மாவினை போட்டு வேகவிடவும். இருபக்கமும் வெந்ததும் சுவையான ரொட்டி தயராகி விடும் .
- இதனைப்போல மற்றைய ரொட்டிகளையும் தயார் செய்து பரிமாறவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்றைய கிச்சன் ஸ்பெஷல் - சுவையான சிற்றுண்டிகள்
வட்டிலப்பம்
தேவையான பொருட்கள்
[color][font]
செய்முறை
[/font][/color]
தேவையான பொருட்கள்
- சர்க்கரை - 250 கிராம்
- தேங்காய் பால் (தடிப்பு கூடிய முதல் பால்) - (1-2) கப்
- முட்டை - 5
- ஏலக்காய்த்தூள் - அரைதேக்கரண்டி
- கஜூ - 30 கிராம்
- பிளம்ஸ் - 30 கிராம்
- ஜாதிக்காய்த்தூள் - அரை தேக்கரண்டி(விரும்பினால்)
- மாஜரின் - ஒரு தேக்கரண்டி
[color][font]
செய்முறை
[/font][/color]
- தேங்காய்ப்பாலில் சர்க்கரையை நன்றாக கரைக்கவும். சர்க்கரை நன்றாக கரைந்ததும் வடிதட்டினால் வடிக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் எல்லா முட்டைகளையும் உடைத்து போட்டவும்.
- எக்பீட்டரினால் முட்டையை நன்றாக நுரைக்கும்படி அடிக்கவும்.
- பின்பு ஒரு பாத்திரத்தில் மாஜரின் பூசிய பின் சர்க்கரை கலந்து வடித்த பாலுடன் கஜூ, பிளம்ஸ், ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.
- பின்பு அக்கலவையுடன் அடித்த முட்டையின் நுரையை கைகளினால் கிள்ளி(அள்ளி) இக்கலவையின் மேலே போடவும் (கரண்டி பாவிக்ககூடாது அத்துடன் கலக்கவும் கூடாது, அசைக்கவும் கூடாது).
- அப்பாத்திரத்தை மைக்ரோ அவனில் அல்லது நீராவியில் அவிக்கவும்.
- அவித்த பின்பு பிரிட்ஜில் வைத்து குளிருட்டிய பின்பு அதை ஐஸ்கிரீம் போடும் கரண்டியால் எடுத்து ஐஸ்கிரீம் கப்பில் போட்டு பரிமாறவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்றைய கிச்சன் ஸ்பெஷல் - சுவையான சிற்றுண்டிகள்
கிச்சடி
தேவையான பொருட்கள்
[color][font]
செய்முறை
[/font][/color]
- ரவை - 2 கப்
- வெங்காயம் - 2
- தக்காளி - 2
- பூண்டு - 6 பல்
- பட்டை - 2
- பிரியாணி இலை - 2
- கருவேப்பில்லை - 5 இலை
- கொத்தமல்லி - சிறிதளவு
- பச்சை மிளகாய் - 2
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- உப்பு - தேவைக்கு
[color][font]
செய்முறை
[/font][/color]
- முதலில் வெங்காயம், தக்காளியை நீளமாக அரிந்து கொள்ளவும்.
- பூண்டினை தோல் உரித்து வைக்கவும்.
- பச்சை மிளகாயினை இரண்டாக பிளந்து கொள்ளவும்.
- முதலில் நாண் ஸ்டிக் கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ரவையை வறுத்து தனியே வைக்கவும்.
- பிறகு அதே கடாயில் மீதி எண்ணெய் ஊற்றி பட்டை மற்றும் பிரியாணி இலை போட்டவும்.
- அதன் பின் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு சேர்க்கவும்.
- பிறகு வெங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும். பின் பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- பின்னர் 4 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- கொதி வந்தவுடன் வறுத்து தனியே வைத்துள்ள ரவையை இதில் கொட்டி கட்டி இல்லாமல் நன்றாக கிளறி தட்டு போட்டு முடி 5 நிமிடம் வேகவைக்கவும்.
- கடைசியில் கொத்தமல்லி தூவி நன்றாக கிளறவும்.
- இப்பொழுது சுவையான கிச்சடி ரெடி.
- இதனை தேங்காய சட்னி, பஜ்ஜியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்றைய கிச்சன் ஸ்பெஷல் - சுவையான சிற்றுண்டிகள்
சப்பாத்தி
தேவையான பொருட்கள்
[color][font]
செய்முறை
[/font][/color]
தேவையான பொருட்கள்
- ஆட்டாமா - 500 கிராம்
- உப்பு - தேவையான அளவு
- பால் - ஒரு மேசைக்கரண்டி
- பட்டர் - ஒரு மேசைக்கரண்டி
- முட்டை - ஒன்று (விரும்பினால்)
- கொதிநீர் - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
[color][font]
செய்முறை
[/font][/color]
- ஆட்டாமா, உப்பு, பால், பட்டர், முட்டை ஆகியவற்றை போட்டு கலக்கவும்.
- அதன் பின்பு கொதிநீர் விட்டு நன்றாக குழைக்கவும்.
- குழைத்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டவும். சிறு உருண்டைகளில் ஒன்றை எடுத்து வட்டமாக தட்டவும் .
- அடுப்பில் தோசைக்கல் வைத்து அது சூடானதும் கொஞ்சமாக எண்ணெய் தடவவும். வட்டமாக தட்டிய மாவினை போட்டு வேகவிடவும்.
- அது வெந்ததும் அதனை மறுபக்கம் திருப்பி போட்டு வேகவிடவும்.
- இருபக்கமும் வெந்ததும் சுவையான, மென்மையான (soft) சப்பாத்தி தயாராகிவிடும் .
- இதனைப்போல மற்றைய சப்பாத்திளையும் தயார் செய்து பரிமாறவும் .
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்றைய கிச்சன் ஸ்பெஷல் - சுவையான சிற்றுண்டிகள்
நாண்
தேவையான பொருட்கள்
[font]
செய்முறை
[/font]
[font]
http://nanbendaa.weebly.com/
[/font]
தேவையான பொருட்கள்
- மைதா மாவு - அரை கிலோ
- ஈஸ்ட் - 2 டீஸ்பூன்
- வெது வெதுப்பான பால் -4 டேபிள் ஸ்பூன்
- சீனி - 2 டீஸ்பூன்
- பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
- உப்பு - அரை அல்லது முக்கால் டீஸ்பூன்
- பால் - 150 மில்லி
- தயிர் - 150 மில்லி
- முட்டை - 1
- எண்ணெய் - 1 டீஸ்பூன்
- பட்டர் அல்லது எண்ணெய் - மேலே தடவுவதற்கு
[font]
செய்முறை
[/font]
- முதலில் வெது வெதுப்பான பாலில் ஈஸ்ட், சீனி சேர்த்து நுரைக்கவைக்கவும். ஒரு பெரிய பவுளில் மைதா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சலித்து வைக்கவும். மாவின் நடுவில் குழித்து ஈஸ்ட், பால், முட்டை, தயிர், எண்ணெய் சேர்த்து மாவை பிரட்டி, பிசைந்து பெரிய உருண்டையாக்கி வைக்கவும்.
- மாவு உள்ள பவுளை டைட்டாக மூடி வெது வெதுப்பான இடத்தில் வைக்கவும். இரு மடங்காக பெருகும்.
- கமலா ஆரஞ்சு அளவு உருண்டை பிடிக்கவும், மாவை பரத்தி ஸ்லிப்பர் போல் இழுத்து விடவும். இரண்டை தயார் படுத்தவும்.
- முற்சூடு செய்த அவனில் 200 டிகிரி- 300 டிகிரியில் லேசாக எண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் 10 - 15 நிமிடம் வைத்து எடுக்கவும்.
- இப்படியே இரண்டிரண்டாக சுட்டு எடுக்கவும். சாஃப்ட் நாண் ரெடி.
- சுடச் சுட பட்டர் அல்லது எண்ணெய் தடவி விரும்பிய சைட் டிஸ் உடன் பரிமாறவும்
[font]
http://nanbendaa.weebly.com/
[/font]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்றைய கிச்சன் ஸ்பெஷல் - சுவையான சிற்றுண்டிகள்
பதிவிற்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: இன்றைய கிச்சன் ஸ்பெஷல் - சுவையான சிற்றுண்டிகள்
அருமை அண்ணா...
பகிர்வுக்கு நன்று.
பகிர்வுக்கு நன்று.
எது?முரளிராஜா wrote:சுவையோ சுவை
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Similar topics
» இன்றைய கிச்சன் ஸ்பெஷல் - சுவையான சிறப்பு துணைக்கறி{SIDE DISH}
» இன்றைய கிச்சன் ஸ்பெஷல் -தொக்கு
» இன்றைய கிச்சன் ஸ்பெஷல் =மல்லிகைப்பூ இட்லி
» இன்றைய கிச்சன் ஸ்பெஷல் -ஜூஸ் மற்றும் சாலட்
» இன்றைய கிச்சன் ஸ்பெஷல் -கேரட் சமையல்
» இன்றைய கிச்சன் ஸ்பெஷல் -தொக்கு
» இன்றைய கிச்சன் ஸ்பெஷல் =மல்லிகைப்பூ இட்லி
» இன்றைய கிச்சன் ஸ்பெஷல் -ஜூஸ் மற்றும் சாலட்
» இன்றைய கிச்சன் ஸ்பெஷல் -கேரட் சமையல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum