தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நான் ரசித்த கவிதைகள்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

நான் ரசித்த கவிதைகள் Empty நான் ரசித்த கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 16, 2013 7:51 pm

எதிரியை வீழ்த்தும் வார்த்தைகள் தேடி
மெனக்கெடும் நேரத்தில்
என்னை நோக்கிப் பாய்கிறது
முன்பைவிட கோரமாய்
அவனின் வசவுகள்
-
தேடலின் தவறுகள்
எனக்கு மட்டுமே நிகழ்ந்தாலும்
ஆச்சரியப்படாமல்
இருக்கத்தான் முடியவில்லை
அவனின்
இயல்பான இந்த
வசவுகளைக் கண்டு!
-
----------------------
>ஜி.மாஜினி
நன்றி: கல்கி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 16, 2013 7:51 pm

பரிசாய் பெற்ற
சோப்புப் பெட்டிகளை
குளியலறைக்குள்
அனுமதிப்பதில்லை
குழந்தைகள்
-
பெரியவர்களாகி
மறந்துவிடும்போது
சோப்புப் பெட்டிகள்
சோப்பு இல்லாத பெட்டிகளாகவே
அம்மாக்களின்
பொக்கிஷமாகின்றன்..!
-
------------------------
>ஜே.மஞ்சுளாதேவி
நன்றி: ஆனந்த விகடன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 20, 2013 2:39 pm

சில நிமிடங்கள்.... - ருத்ரா (இ.பரமசிவன்)
==================================

வானத்தை
நிலத்தில் உழுவது.
"காதல்"

பதிமூன்று வயதுகளை
தலையணையில் அடைக்கமுடியுமா?
"கன்றுக்குட்டி காதல்கள்"

அவள் இதயம் இவன் கையில்.
இவன் இதயம் அவள் கையில்.
"செல்ஃபோன்"

நெடுநல் வாடைக்கும்
மலைபடு கடாமுக்கும் அர்த்தம் கேட்டால்..
"க்ளுக்"என்று அவள் சிரிப்பு.

குறும்படம் போன்று
வாழ்க்கைக்குள் ஒரு
குறும் வாழ்க்கை.
"பள்ளிக்கூடக்காதல்"

பேனாவின் நிப்பு
வளைந்து போகிறது.
எழுத மறுக்கிறது.
"காதலைத் தொடாமல் ஒரு கவிதை"

தொண்ணூறு வயதுகளில்
காதலின் சில நிமிடங்கள் மட்டுமே
வாழ்க்கை.
"சவப்பெட்டிக்குள் ஒரு சதாபிஷேகம்"
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 20, 2013 2:41 pm

"துடித்து துடித்து...."
===============================ருத்ரா


இது என்ன யுகம்.
எது வாகவும் இருந்துவிட்டுப் போகிறது?
யாரோ எவனோ
எவன் குடலை கிழித்தால்
நமக்கு என்ன?
ஒரு மனிதனின் தலையை
மிதித்து
கோடி கோடி மனிதன்களை
முண்டமாக்கினால் தான்
நமக்கு என்ன?
பத்து தலை உள்ள‌
கரப்பான் பூச்சியை
அடித்துப்போட‌
ஒரு வால்மீகி வேடனின்
அம்பைப்பிடுங்கி
அவதாரம் செய்தாலும்
நமக்கு என்ன?
நானூறு கோடி
ஆண்டுக்குப்பிறகு தான்
த‌ண்ணீர்த்துளி
விந்துத்துளி ஆன‌து.
விஞ்ஞான‌க்கொடியேறி
"நுனிக்கொம்ப‌ர்
அஃதிற‌ந்து ஊக்கினோம்"
இலைக‌ள் உராய்ந்து கொண்டாலும்
செல்ஃப்போன்க‌ள்
ஆதாமையும் ஏவாளையும்
அம்ம‌ண‌மாய் காட்டின‌.
காற்றில்
நேனொ நொடிப்பிஞ்சுக்குள்ளும்
குர‌ல் பிசிறுக‌ளில்
காத‌ல் சாட் க‌ள்
க‌ருவின் க‌த‌க‌த‌ப்புக‌ள்.
இவ‌ன் பெருமூச்சில்
எங்கோ ஆன்ட்ரோமேடா
விண்பிண்ட‌த்துக்கும்
ம‌ண் பிள‌க்கும்.
துடிக்கும் சிவ‌ப்ப‌ணுக்குள் எல்லாம்
2050க்கு
இப்போதே
சிப்புக‌ள் பிர‌ச‌விக்கும்
"இன்டெல்"க‌ர்ப்ப‌ப்பைக‌ள்.
பிர‌ப‌ஞ்ச‌த்தின்
இருமுனைக்கும்
இவ‌ன் காத‌லின்
இருமல் பாட்டுக‌ள்.
பிக் பேங்க்
எனும் வெடித்த‌ட‌த்திலும்
அத‌ன் அடித்த‌ட‌ம்.
பிக் க்ர‌ஞ்ச் எனும்
அத‌ன்
க‌ருப்புச் ச‌வ‌க்குழியிலும்
திராட்சை திர‌ளும்
அத‌ன் க‌ருவிழிக‌ள்.
மின் துடிக்கும்
எண்க‌ளின் க‌ட‌லில்
அதோ
அவ‌ன் தூண்டில் போட்டு வீட்டான்.
இவ‌ள்
மீனாகி விட்டாள்
துடித்து துடித்து
பிற‌ந்து பிற‌ந்து
இற‌ப்ப‌த‌ற்கு.

===============================ருத்ரா
"துடித்து துடித்து...."
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 20, 2013 2:42 pm

என் சிறு தெய்வத்துக்கான படையல்
ரொம்பச் சிறியதுதான்
ஜெம்ஸ் மிட்டாய்
ஃப்ரூட் சாக்லேட்
யானை பொம்மை
டிராயிங் புத்தகங்கள்
பிளாஸ்டிக் பம்பரம்
பென்சில் பாக்ஸ்
காபிஃபைட்
குட்டி ஸ்கேல்
கலர் பலூன்
காகிதக்கப்பல்
சின்ன மோதிரங்கள்
டெய்ரி மில்க்
பிளாக்ஃபாரெஸ்ட்
நகரும் குதிரை
ஜவ்வு மிட்டாய்
பொரி உருண்டை
என அவ்வப்போது மாறுபடும்
படையல் லிஸ்டில் எப்போதும் இருக்கும்
செல்ல முத்தங்களும்
பயன்படுத்துகிறோமோ இல்லையோ
வினைத்தொகைக் குறியீடான
ஒரு அழி ரப்பரும்!
-
—————————
>கவின்
நன்றி: ஆனந்த விகடன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by ஸ்ரீராம் Sat Apr 20, 2013 2:42 pm

சூப்பர் அனைத்தும் அருமை சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Apr 21, 2013 7:17 pm

அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்...
=========================ருத்ரா



பெண்ணே!
எங்கே உன் முகம்?
தடாகக்கண்ணாடியில்
நெளிந்து குலுங்கி நசிந்து
நிழலாடுகிறதே!
இந்த நிலவின் நிழல்
கசக்கி கசக்கி
அடித்து அடித்து
துவைத்துப் பிழியப்படுகிறதே!

ஒருதலைக்காதல் கூட‌
சங்கத்தமிழில்
சோக‌த்தேன் பிழிந்து
இனிமை யாழ்க்கிற‌தே!

காத‌ல்
இப்ப‌டியொரு
காட்டுமிராண்டித்த‌ன‌த்தில்
க‌ந்த‌ல் ஆகிப்போன‌து ஏன்?

இந்த ஆசிட் வக்கிரங்கள்
எங்கிருந்து வந்தன?

பெண்ணே!
உன் சுதந்திரப்பூங்காற்றில்
இந்த புல்லுருவிகள்
புகுந்தவிதம் எப்படி?

விஞ்ஞானம்
வியாபாரத்துக்கும் லாபத்துக்கும்
கொழுந்துவிட்டு எரிய
எண்ணெய் வார்த்தன.
கேளிக்கைகளும் வேடிக்கைகளும்
வளர்த்த பணக்காடுகளில்
ஊளையிட்ட ஓநாய்களின்
ஓசை நமைச்சல்களில் இந்த‌
கொலவெரிப்பாட்டுகளும்
ஒளிந்து ஒலித்தனவோ?

ம‌னித‌ம்
உயிர் க‌ழ‌ன்ற‌
இருட்ட‌றையில்
"பிண‌ம்"த‌ழுவிக்கொள்ளும்
மர‌ண‌த்தின்
வெறி விளையாட்ட‌ல்ல‌ காத‌ல்.

அமுத‌ அரும்புக‌ளே!
அமில‌ங்கொண்டு
அறுவ‌டை செய்ய‌நினைக்கும்
அர‌க்க‌ர்க‌ளை
இன‌ம் க‌ண்டு
த‌ட‌ம் தெரிந்து
பூண்டோடு அழிக்கும்
ஆயுத‌ம் ஒன்று ஏந்துங்க‌ள்.
ஆம்.
அறிவாயுத‌ம்!

உண‌ர்ச்சியின்
ம‌த்தாப்பூத்தீயில்
பொசுங்கிப்போகும் முன்
அறிவின்
சூரிய‌னை....
ஓ!பெண்ணே!
உன் குளிர்நில‌வுப்
பூ முக‌த்தில் ப‌திய‌மிடு!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by ரானுஜா Sun Apr 21, 2013 9:11 pm

அனைத்தும் சூப்பர்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 22, 2013 10:04 am

மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 22, 2013 10:34 am

கைவிடப்பட்ட
பயணிகள் நிழற்குடை
நம் அறிமுகக் களமாயிற்று
காரணக் கடவுளாய்
கொட்டித் தீர்த்தது
மழை
-
நேரம் போவது தெரியாமல்
பேசுகையில்
மழை வருகிறது
மழை
வந்து போவது தெரியாமல்
பேசுகிறோம்
-
மழைக்கு அஞ்சி
உன்
பனியனுக்குள் மறைத்திருந்த
வாழ்த்து அட்டையின்
மேலுறையாய்
நாமும் நனைந்திருந்தோம்

———————–
>ஆத்மார்த்தி

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by ஸ்ரீராம் Mon Apr 22, 2013 2:42 pm

அனைத்தும் அசத்தல் கவிதைகள் சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 22, 2013 3:00 pm

ரசனை அப்படி நண்பரே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 22, 2013 6:27 pm

விடியல் தேடுகிறாள் ஓர் விலைமகள் - (பாட்டாளிபுத்திரன் ருத்ரா)

மடியாத மயக்கங்கள்
கண்டேன்
விடியாத இரவுகளில்
நின்றேன்!
வீதியில் உறவுகள்
கொண்டேன்!
பசியில்
பத்தியம் கிடந்தேன்!
சாத்திரம் எரிந்தேன்!!
சத்தியம் மறந்தேன்...!!!

வீதியில் கிடந்தேன்!
வியாபாரம் ஆனேன்!!
விலைக்குப்போனேன்!!!

சாதியை மறந்தேன்....!
தூக்கம் துறந்தேன்......!!
தூக்கில் விழுந்தேன்...!!!

சாமம் பிறந்தேன்....!
வயிற்றில் கரைந்தேன்!!
வஞ்சனை சுமந்தேன்!!!

பகலை புதைத்தேன்...!
இரவை வதைத்தேன்!!
வலியால் சிதைந்தேன்!!!

காலம் கடந்தேன்!
தோல்கள் தளர்ந்தேன்!!
கால்கள் உடைந்தேன்!!!
கைகள் நடந்தேன்!

கண்கள் இழந்தேன்!
பாதைகள் மறந்தேன்!!
பயணங்கள்துறந்தேன்!!!

வயோதிகக் கன்னியாய்
அலைந்தேன்!!
வியாதியாய்
தெருவில் கிடந்தேன்!!!
விரோதியாய்
விடியல் கடந்தேன்!!!

தாயில்
தரையிறங்கினேன்!
தீயில்
கரையேறினேன்!!
பேயாய்
உருமாறினேன்!!!

விடியாத இரவுகளிலே
நொடிந்த கனவுகளோடு
மடிந்து கிடக்கிறேன்
மரணித்த
மயக்கங்களால்........
பயணம் முடித்தேன்
பாவிமகள்!
நான் யார்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 22, 2013 6:33 pm

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்... (A Velanganni)
கையும் காலும் மரப்பது போல
மனசும் மரத்துப் போச்சா?
ஏழையை உலகம் மறப்பது போல
நீயும் மறந்தா ஆச்சா?

உனை நம்பியே வாழ்கிறேன் - நான்
உறங்காமலே வீழ்கிறேன்

நெசமா நெசமா இது நெசமா?
மனசா மாறும் ஒரு விஷமா?
முழுசா மறந்தா தப்பில்லையா?
நானும் உனக்கு ஒப்பில்லையா?


மனசது மனசது பாரமடி
உன் நினைவில் நான் வாழ்க்கையின் ஓரமடி
சுமந்தேன் நெனப்ப மனசுக்குள்ள
கனம் தாங்காமல் அழுதேன் என்ன சொல்ல

நீ கொஞ்சம் சிரித்தால் போதுமடி
அதில் சுமைதான் குறையும் நான் பேதையடி
உன் நினைவு புயலின் தாக்கத்திலே
நான் பலநாள் தொலைத்தேன் தூக்கத்தையே


நான் விலகிச் செல்லும் போதெல்லாம்
துரத்தி வந்தாய் அது யார் குற்றம்?நான் விருப்பம் சொல்லும் நேரத்தில்
என்னை மறக்க சொல்வது பெருங்குற்றம்

மறப்பதும் வெறுப்பதும் உன் விருப்பம்
என்னை மறந்தென்ன சாதித்தாய்..?
விலகிச் செல்வதும் உன் விருப்பம்
எனக்கேன் தனிமையை போதித்தாய்...?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 22, 2013 6:33 pm

திரும்பிப் பார் (vellurraja)

இதுவரை...

என்ன எழுதினேன்?
எதற்காக எழுதினேன்?
எழுதியவை
என்ன ஆயிற்று?

பின்னிரவில் பதுங்கும்
குற்றவாளியின்
அலையும் கண்களைப் போல
எதைத் தேடி
என் பேனா செல்கிறது...?

முன் தோன்றி
மூத்த தமிழின்
இலக்கண முகம்
அலங்கரித்து இருக்குமா?

தெருவோரம் திரியும்
எண்ணைப்பசை அற்ற
எண்ணற்ற குழந்தைகளில்
ஒருத்திக்காவது
தலை வாரிப் பூச்சூடி இருக்குமா?

எக்கணமும்
வறுமை தின்னும்
வயிற்றுக்கு
ஒரு வேளை
சோறு கிடைத்திருக்குமா?

எங்காவது ஒரு
சிட்டுக்குருவிக்கு
சிறகு முளைத்திருக்குமா?

எதிர்த்துப் போராடும்
எம் மாணவர்
ஏந்தும் பதாகையில்
எழுத ஒரு வாசகம்
கிடைத்திருக்குமா?

சொல்ல வாயும்
வார்த்தைகளும் அற்று
தவிக்கும் ஒரு இதயத்திற்கு
சொல்லும் வழியாகி
காதல் மொழியாகி இருக்குமா?

விரிந்து கொண்டிருக்கும்
ஓசான் ஓட்டைப் படலத்தின்
ஒரு துளி அடைக்க சமூகத்தை
முன்னெடுத்து இருக்குமா?

முகிழ்த்து
முன்னே வரத் துடிக்கும்
கைம்பெண் முன்
ஒப்பாரி வைப்பதைத் தவிர்த்து
அவள் கைப் பிடித்து
காலம் களிக்க ஒரு
நல் இதயம்
கிடைக்கச் செய்து இருக்குமா?

குறைந்த பட்சம்...
உழைத்துக் களைத்த
எம் பெரு மக்கட்கு
ஒரு துளி நேரம் பொழுது
போக்கக் கிடைத்திருக்குமா?

இருக்கும் விலைவாசியில்
இரண்டு சொட்டு மை ஒன்றும்
பெரிய செலவில்லை என்பதாலா...?
இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 22, 2013 6:35 pm

அழகாகிறது காதல் ---/- (-- - கவி கண்மணி

நீளும் பொழுதுகளில்
நீச்சலாடும் பார்வைகளில்
பயணமாகிறது காதல்

பார்வைகள் சங்கமிக்கும்
சாயங்கால பொழுதுகளில்
சத்தமில்லாமல் பூக்கிறது காதல்

சற்று என்றே
தீர்ந்துவிடும்
அரவணைப்பில்
அழகாகிறது காதல்

புதிது புதிதாக
பூக்கும் ஆசைகளால்
கலையாமல் கலையாகிறது
கண்ணியக் காதல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 22, 2013 6:37 pm

சில நிமிட சொர்க்கம் ......... (Rajesh 03)

அம்மாவின் மடியிலோர் குட்டித் தூக்கம்
நீடிக்க விடாத வேகத் தடை
நின்று கொண்டே பேருந்தில் பயணம் !
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by முரளிராஜா Mon Apr 22, 2013 7:51 pm

அழகான கவிதைகள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 23, 2013 1:01 pm

சிட்டுக் குருவிகளின்
சப்தத்தைக் காணோம்
பூட்டிக்கிடக்கும் சத்துணவுக்கூடம்
-
————————
-
சூரியனுக்கு
குடை பிடித்தது
குளக்கரையில் மரம்
-
———————–
-
மத ஊர்வலத்தில் கலவரம்
பசியோடு பக்தர்கள்
சுக்கு நூறாய்ப் பிள்ளையார்
-
———————-
-
காலுக்குச் செருப்பை
தர மறுக்கும் சாதி
இன்னுமா தீண்டாமை
-
——————
-
மனிதர்களே…
சபித்து விடாதீர்கள்
கற்சிலைகளாய் கடவுள்கள்
-
==================
>செல்லம்மாள் கண்ணன்
கல்வெட்டு இதழின் துணை ஆசிரியர்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by ஸ்ரீராம் Tue Apr 23, 2013 5:25 pm

நானும் ரசித்தேன்... கவிதைகள் அருமை
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 23, 2013 8:02 pm

ரசித்தமைக்கு நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 23, 2013 8:59 pm

—-
* அவளை கொஞ்சம்
சிரிக்க விடுங்கள்
வாய் வலிக்கும் மட்டும்
சிரிக்கட்டும்!

* அடக்கமற்ற சிரிப்பென
அணை போட்டு விடாதீர்கள்…
ஆயுட்காலம் எத்தனையோ
அவளின் சிரிப்பிற்கு!

* காதல் முகமூடி அணிந்த
கள்ளப் பருந்துகளால்
அவள் வாழ்வு
கருகிப் போய் விடலாம்!

* உறவென்ற பெயருக்குள்
ஒளிந்திருக்கும்
சில ஓநாய் கூட்டத்தால்
உயிரை இழந்து விடலாம்!

* அறிவை வளர்க்கச் சென்று
சில அற்பர்களின்
ஆசைத் தீயில்
சிதைந்து விடலாம்!

* வாழ்க்கை காட்டில்
வழிதவறிய மானாய்
வஞ்சகர் வீசும்
வலைக்குள் வீழ்ந்து
வாழ்வை
தொலைத்து விடலாம்!

* பாவிகள் உலகில்
பிறந்து விட்டாள்
பாவை அவளை
சிரிக்க விடுங்கள்!
——————————————-
— ப.லட்சுமி, கோட்டூர்.
நன்றி: வாரமலர்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by மகா பிரபு Tue Apr 23, 2013 9:09 pm

நல்லா இருக்கு.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by வனவாசி Tue Apr 23, 2013 9:15 pm

தேடி கொணர்ந்த ரசிக்கத் தகுந்த கவிதைகள்..... நக்கல்
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by முரளிராஜா Wed Apr 24, 2013 9:00 am

சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நான் ரசித்த கவிதைகள் Empty Re: நான் ரசித்த கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum