தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

View previous topic View next topic Go down

தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 03, 2013 7:42 pm

தமிழனின் தற்பெருமைக்கான தகவல்கள் அல்ல இவை. தன் இனத்தை பற்றிய தகவல்களை சிறிதேனும் அறிந்திருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே.. இங்கு சில தகவல்கள்.

தமிழ் பேசும் மக்கள் உலகில் சுமார் 100 மில்லியன்.

சுமேரியன், அராபிக், மாயன், மீசோ, பெர்சியன், துருக்கி இம்மொழிகள் உருவாக்கத்தில் தமிழும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.

சுமேரியன் மொழி குறியீடுகள் (Script) தமிழ் சுமேரியன் இரண்டிற்குமுள்ள உறவை வெளிப்படுத்துகிறது.

தமிழ் உலகின் 7 புராண மொழிகளுள் ஒன்று (செம்மொழி).

தமிழ் திராவிட மொழிகளுக்கெல்லாம் மூலம்.

வெளிநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட திராவிட மொழி தமிழ் (இலங்கை, சிங்கப்பூர் )

பண்டைய தமிழ் இனத்தில் சாதிகள் இல்லை.

தொல்காப்பியம் 3000 வருட பழமையான நூல்.

உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டது திருக்குறள்.

நன்றி [You must be registered and logged in to see this link.]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 03, 2013 7:45 pm

ஜென், புத்த மதங்களை பல்லவ பேரரசு உருவாக்கியது.

ஆசிய சண்டை கலையின் தந்தை எனப்படுவது "கலரி"

தமிழ் - பிராமி எழுத்து வரிவடிவங்கள் எகிப்தில் கண்டறியப்பட்டுள்ளன.

வேட்டி, சேலை பாரம்பரிய உடைபற்றி சிலப்பதிகாரம் பேசுகிறது.

தமிழரின் பழமையான நாட்டியகலை பரத நாட்டியம்.

இன்றும் நல்ல நிலையில் இயங்கி வரும் கரிகாற்சோழன் கட்டிய கல்லணை தமிழனின் தொழிற்நுட்பத்திற்கு சான்று.

ஜல்லிக்கட்டு 2000 வருடத்திற்கு முன்பு இருந்து வரும் தமிழரின் வீர விளையாட்டு.

தமிழ் அளவைகளுள் ஒன்றுமையான கணக்கீடு உண்டு.
தஞ்சாவூர் கோயில் துல்லியமான அளவீடுகளுக்கு கட்டடக்கலைக்கும் ஒரு சான்று.
சித்த மருத்துவம் தமிழரின் பழமையான மருத்துவம்.

நான்றி ;இனியவை கூறல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 03, 2013 7:54 pm

ஆய கலைகள் அறுபத்துநான்கும் ஏய உணர்விக்கும் என்றெல்லாம் சொல்லப்படுகிறதே.. அந்த 64 கலைகளும் எவை என உங்களுக்குத்தெரியுமா? இதோ உங்களுக்காக :
1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிபிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)
✍ ✍ ✍ ✍ ✍ ✍ ✍ ✍
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 03, 2013 8:05 pm

[You must be registered and logged in to see this image.]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by சரண் Tue Sep 03, 2013 8:45 pm

தகவலுக்கு நன்றி.
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by Muthumohamed Wed Sep 04, 2013 12:34 am

சிறந்த தமிழர் பற்றிய விவரங்களின் தொகுப்பு சூப்பர் 
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 6:18 pm

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 6:19 pm

தமிழ் இலக்கணம் வினா விடைகள்
தமிழ் மொழி, இயற்றமிழ், இசைத்தமிழ் மற்றும் நாடகத் தமிழ் எனமூன்று பிரிவுகளை உடையது. இவையே முத்தமிழ் எனஅழைக்கப்படக் காரணமாக விளங்குகிறது. நம் முன்னோர்முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியேஇலக்கணம் அமைத்தனர். அகத்தியம் முத்தமிழுக்கும் உரியஇலக்கண நூல் என்பர். இருப்பினும்,
பொதுவாக தமிழ்இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக்குறிப்பதாயிற்று. செய்யுள் மற்றும் உரைநடை ஆகியவற்றின்தொகுதி இயற்றமிழாகும். தொல்காப்பியம் இயற்றமிழில்கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும். பைந்தமிழ்இலக்கணம் ஐந்து வகை. அவை,
1. எழுத்து
2. சொல்
3. பொருள்
4. யாப்பு
5. அணி
அறிஞர்கள் தமிழ் இலக்கணத்தை மூன்று இலக்கணம் என்றும்ஆறு இலக்கணம் என்றும் ஏழு இலக்கணம் என்றும்வகைப்படுத்துவர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 6:22 pm

பொருளடக்கம்

1 எழுத்து - முதலெழுத்து, சார்பெழுத்துகள்
2 எழுத்து குறித்த இலக்கணச் செய்தி
3 சொல்
4 பொருள்
5 யாப்பு

5.1 யாப்பின் உறுப்புகள்
5.2 யாப்பின் அடிப்படையில் பா வகைகள்
6 அணி
எழுத்து

முதலெழுத்து

"எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப" -தொல்காப்பியம்
உயிரும் உடம்புமாம் முப்பது முதலே - நன்னூல்

அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்' முதல் 'ன்'வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும்முதலெழுத்துகள் எனப்படும்
உயிரெழுத்துகள்: உயிரெழுத்துகள் 12 அவை அ, ஆ, இ, ஈ, உ,ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
மெய்யெழுத்துகள்: மெய்யெழுத்துகள் 18 அவை க், ங், ச், ஞ்,ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்
ஆய்த எழுத்து : ஆய்த எழுத்து ஒன்று
உயிரெழுத்துக்கள் குறில், நெடில் என இருண்டு வகைப்படும்.மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்றுமூன்று வகைப்படும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 6:22 pm

சார்பெழுத்துகள்

உயிர்மெய் ஆய்தம் உயிரள பொற்றள
ப ஃகிய இஉ ஐஔ மஃகான்
தனிநிலை பத்தும் சார்பெழுத் தாகும்
-நன்னூல்
1. உயிர்மெய் எழுத்து
2. ஆய்த எழுத்து
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5. குற்றியலுகரம்
6. குற்றியலிகரம்
7. ஐகாரக் குறுக்கம்
8. ஔகாரக் குறுக்கம்
9. மகரக்குறுக்கம்
10. ஆய்தக்குறுக்கம்
எனச் சார்பெழுத்து பத்து வகைப்படும். முதலெழுத்துகளைச்சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால்பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்ற்ன
இவ்வாறு, உயிர் எழுத்துகள் 12 , மெய் எழுத்துகள் 18 , உயிர்மெய்எழுத்துகள் (இவைகள் உயிர் மெய் இரண்டும் சார்ந்து வரல்ஆதலின் சார்பெழுத்து எனப்படும் 216) மற்றும் ஆய்தம் ஆகிய 247எழுத்துகளே, தமிழ் எழுத்துகள் எனப்படும்.
உயிர் எழுத்துக்கள்
12
மெய் எழுத்துக்கள்
18
உயிர்மெய் எழுத்துக்கள்
216
ஆய்த எழுத்து
1
தமிழ் எழுத்துக்கள் மொத்தம்
247
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 6:23 pm

எழுத்து குறித்த இலக்கணச் செய்தி

எழுத்தெண்ணிச் சீரும் அடியும் வரையறுக்கும் நிலையைத்தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
வஞ்சியுரிச்சீர், குறளடி, சிந்தடி, நேரடி, நெடிலடி, கழி நெடிலடிபோன்றவை எழுத்தடிப்படையில் எழுத்தெண்ணி சீர்களும்அடிகளுமாகும்.

வஞ்சியுரிச்சீர்

நேர் இறுதி ஐந்து எழுத்து நிரை இறுதி ஆறு எழுத்து சிறுமை மூன்றுஎழுத்து பெருமை ஆறு எழுத்து
4 முதல் 6 எழுத்து வரை - குறளடி
7 முதல் 9 எழுத்து வரை - சிந்தடி
10 முதல் 14 எழுத்து வரை - நேரடி
15 முதல் 17 எழுத்து வரை - நெடிலடி
18 முதல் 20 எழுத்து வரை - கழி நெடிலடி
மெய்யெழுத்து உயிரில் எழுத்து என்று குறிக்கப் பெறுகிறது.
ஓரடிக்கு 4 முதல் 20 எழுத்து வரை ஆசிரியப்பா வருமென்றும், 7முதல் 16 எழுத்து வரை வெண்பா வருமென்றும், 13 முதல் 20எழுத்து வரை கலிப்பா வருமென்றும் தொல்காப்பியர் குறிக்கிறார்.

சொல்
ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோபொருள் தருவது சொல் எனப்படும்.
எ.கா: வீடு, கண், போ,
சொல்லின் வகைகள்
1. பெயர்ச்சொல்
2. வினைச்சொல்
3. இடைச்சொல்
4. உரிச்சொல்

பொருள்
பொருள் இரண்டு வகைப்படும். அவை,
1. அகப்பொருள்
2. புறப்பொருள்
நம் இலக்கியஙளுக்குப் பாடுபொருள்களாக அமைவனஅகப்பொருள்களும் புறப்பொருள்களும்.ஒத்த அன்புடையதலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் காதலித்து நடத்தும்வாழ்க்கை நிகழ்ச்சிகளை விளக்கிக் கூறுவது அகப்பொருள்.அறம்,பொருள், வீடு ஆகிய (இன்பம் ஒழிந்த) மூன்று பேறுகளைபற்றியும், கல்வி, வீரம், கொடை, புகழ் முதலியன பற்றியும்கூறுவது புறப்பொருள்.

யாப்பு
யாப்பு என்பதற்குப் புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பதுபொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம்யாப்பிலக்கணமாகும்.

யாப்பின் உறுப்புகள்
1. எழுத்து
2. அசை
3. சீர்
4. தளை
5. அடி
6. தொடை
உயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துக்களும் தத்தம் ஒலிஅளவுகளைப் பொருத்து குறில் அல்லது நெடில் எனவழங்கப்படுகின்றன. குற்றெழுத்து மற்றும் நெட்டெழுத்துக்களின்அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். நேரசை மற்றும்நிரையசை ஈரசைகளாவன. குறிலோ நெடிலோ தனித்தோஒற்றடுத்தோ வருதல் நேரசையாகும். இருகுறிலிணைந்துவருதலும், குறில் நெடிலிணைந்து வருதலும், இவை இரண்டும்ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும். ஒலிப்பியல்அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக்கூறுகளாவன. அசைகளின் கூட்டு சீர் எனப்படும். சீர்கள்ஒன்றன்பின் ஒன்றாக வருதலால் தளைகள் உண்டாகும்.

யாப்பின் அடிப்படையில் பா வகைகள்
1. வெண்பா
2. ஆசிரியப்பா
3. கலிப்பா
4. வஞ்சிப்பா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 6:24 pm

அணி
அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்துகிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றைவரையறுத்துக் கூறுவது அணி இலக்கணமாகும். அணிபலவகைப்படும். அவற்றுள் சில,

1. தன்மையணி
2. உவமையணி
3. உருவக அணி
4. பின்வருநிலையணி
5. தற்குறிப்பேற்ற அணி
6. வஞ்சப் புகழ்ச்சியணி
7. வேற்றுமை அணி
8. இல்பொருள் உவமையணி
9. எடுத்துக்காட்டு உவமையணி
10. இரட்டுறமொழிதலணி
1. ஒன்பது மணிகள் - முத்து, பவளம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், ரத்தினம், வைரம், வைடூரியம், கோமேதகம்.

2. மூவேந்தர் - சேரர், சோழர், பாண்டியர்; சேரர்களின் மாலை - பனம்பூ மாலை, சோழர்களின் மாலை - அத்திப்பூ மாலை, பாண்டியர்களின் மாலை - வேப்பம்பூ மாலை.
3. நால்வகைப்படைகள் - காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை.
பதினெண்கீழ்க்கணக்கு:
4. நாலடியார் நூல்களுள் ஒன்று
5. மொத்தம் 400 பாடல்களைக் கொண்டது.
6. நாலடி நானூறு என்பது இதன் சிறப்புப் பெயர்.
தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் (புகலிடங்கள்)
7. வேடந்தாங்கல்
8. கரிக்கிளி (காஞ்சிபுரம் மாவட்டம்)
9. கஞ்சிரங்குளம்
10. சித்திரங்குடி
11. மேல்செல்வனூர் (இராமநாதபுரம் மாவட்டம்)
12. பழவேற்காடு (திருவள்ளூர் மாவட்டம்)
13. உதயமார்த்தாண்டம் (திருவாரூர் மாவட்டம்)
14. வடுவூர் (தஞ்சாவூர் மாவட்டம்)
15. கரைவெட்டி (பெரம்பலூர் மாவட்டம்)
16. வேட்டங்குடி (சிவகங்கை மாவட்டம்)
17. வெள்ளோடு (ஈரோடு மாவட்டம்)
18. கூந்தன்குளம்(திருநெல்வேலி மாவட்டம்)
19. கோடியக்கரை (நாகப்பட்டினம் மாவட்டம்)

நன்றி Posted by SATHISH
[You must be registered and logged in to see this link.]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by ஸ்ரீராம் Mon Sep 09, 2013 6:40 pm

அருமையான பகிர்வு அண்ணா. நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 6:41 pm

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by ஸ்ரீராம் Mon Sep 09, 2013 6:44 pm

இலங்கயில் விநாயகர் சதூர்த்தி எப்படி அண்ணா உள்ளது ?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by சரண் Mon Sep 09, 2013 8:45 pm

தமிழ் இலக்கண வகுப்புக்கு சென்ற மாதிரியே இருந்தது.

நன்றி.
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by முரளிராஜா Mon Sep 09, 2013 8:48 pm

சரண் wrote:தமிழ் இலக்கண வகுப்புக்கு சென்ற மாதிரியே இருந்தது.

நன்றி.
 உங்களுக்கு ஒன்னும் புரியலைன்னு சொல்ல வரிங்க புன்முறுவல் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 8:49 pm

நன்றி அந்த உணர்வு வந்தமைக்கு
தமிழ் அப்படிப்பட்டதுதான் நாம் உயிர் அல்லவா ..?
நன்றி சந்தோஷம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by சரண் Mon Sep 09, 2013 8:51 pm

முரளிராஜா wrote:
சரண் wrote:தமிழ் இலக்கண வகுப்புக்கு சென்ற மாதிரியே இருந்தது.

நன்றி.
 உங்களுக்கு ஒன்னும் புரியலைன்னு சொல்ல வரிங்க புன்முறுவல் புன்முறுவல்
புரியுது ஆனா புரியல....
நக்கல் நக்கல் 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum