தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சங்க இலக்கியங்களில் காதலும் வீரமும்

View previous topic View next topic Go down

சங்க இலக்கியங்களில் காதலும் வீரமும் Empty சங்க இலக்கியங்களில் காதலும் வீரமும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 12, 2013 6:09 pm

சங்க இலக்கியங்களில் காதலும் வீரமும் (கட்டுரை)

முனைவர் பூ.மு.அன்புசிவா

தமிழில் நமக்குக் கிடைத்திருக்கின்ற இலக்கியங்களில் சங்கப் பாடல்கள் என்று கூறப்படும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியனவே காலத்தால் மிகப் பழமையானவையாக அமைந்துள்ளன. தமிழரது சமூக-பொருளிய-பண்பாட்டு வரலாற்றினை அறிந்துகொள்ள இந்த இலக்கியச் செல்வங்களே பெருமளவுக்குப் பயன்படுகின்றன. இத்தகைய இலக்கியங்களிலிருந்து பெறக்கூடிய விவரங்களை உறுதிப்படுத்தும் வகையிலான அகழ்வாய்வுச் சான்றுகளும் காசுகளும் கல்வெட்டுப் பதிவுகளும் பரவலாகக் கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றை அகம், புறம் என இரு வகைகளாகப் பகுத்துப் பார்ப்பது மரபாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. பண்டைய தமிழரது காதல் உணர்வுகள் – உறவுகள் – தொடர்புகள் போன்ற அக வாழ்வைக் குறிப்பன அக இலக்கியங்களாகக் கொள்ளப்படுகின்றன. அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை போன்றன இதில் அடங்கும். வீரம், போர், ஆட்சி போன்ற புறவாழ்வு தொடர்பானவை யாவும் புறப்பாடல்கள் என்று அழைக்கப்படுகின்றன. புறநானூறு, பதிற்றுப்பத்து போன்றன புறம் என்ற பகுப்புக்குள் வருகின்றன. இத்தகையதொரு மரபு, சங்க இலக்கியங்கள் அனைத்தையுமே காதலையும் வீரத்தையும் வெளிப்படுத்தும் பாடல்களாக மட்டுமே பார்க்கின்ற ஒரு பார்வையைக் காலப்போக்கில் தோற்றுவித்துவிட்டது.
குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என்ற ஐந்து வகைப்பட்ட நில அடிப்படையிலான திணை வழியே அறியப்படும் அக இலக்கியங்கள் யாவும் ஏதோவொரு வகையில் ஆண்-பெண் உறவுகளையும் காதல் தொடர்புகளையும் இவற்றையொட்டிய மன உணர்வுகளையும் முன்னிலைப்படுத்துகின்றன என்பது உண்மைதான். ஆயினும்,ஒரு தலைவனும் தலைவியும் இயல்பாக அன்பு செலுத்துகின்ற காதல் உறவுகள் மட்டுமே வெவ்வேறான வடிவங்களில் இப்பாடல்களில் இடம் பெற்றிருக்கின்றன என்று கருதுவது உண்மைக்கு மாறானதாகும்.
மேலும், போர், வீரம், ஆட்சி போன்ற வெவ்வேறு வகைப்பட்ட நுணுக்கமான விவரங்கள் அனைத்தையுமே வீரம் என்ற அளவுகோல் கொண்டு மட்டுமே அளப்பதும் பொருந்துவதாகத் தெரியவில்லை.
சங்கப் பாடல்களில் காணப்படும் வாழ்க்கை முறைமைகளோடு காதலும் வீரமும் எவ்வாறெல்லாம் இயைந்தும் பொருந்தியும் நிற்கின்றன என்ற அடிப்படைகளைக் கொண்டுதான் இவற்றை மதிப்பிடவேண்டும்.
இத்தகைய காதல், வீரம் என்ற குறுகிய பார்வையில் மட்டுமே பெரும்பாலானப் பாடல்கள் பார்க்கப்பட்டதாலும் புரிந்து கொள்ளப்பட்டதாலும், அவற்றுள் உள்ளடங்கிக் கிடக்கின்ற சமூக-பொருளிய-பண்பாட்டு வெளிப்பாடுகள் குறித்த விவரங்கள் கண்களுக்குத் தெரியாமல் மறைந்துவிட்டன என்று துணிந்து கூறமுடியும். ஆகையால்தான், காதல், வீரம் என்பன போன்ற வரையறைகளுக்கு மேலாகச் சங்கப் பாடல்களில் இழையோடிக் கிடக்கும் வாழ்முறை விவரங்களை நுட்பத்துடன் ஆழ்ந்து பார்க்கவேண்டியுள்ளது.
வேட்டையாடியும் இயற்கையில் கிடைத்த காய்கனிகளைத் தேடியும் உணவு திரட்டும் வாழ்முறையில் இனக்குழு-குடிகளாகக் கூட்டு வாழ்க்கை முறைமைகளைக் கொண்டிருந்த மக்களே,அடுத்த கட்டத்தில் உணவு உற்பத்திக்கு முன்னேறி,பண்பாட்டு வளர்ச்சியை அடைந்தார்கள் என்பது மானிடவியலார் மற்றும் சமூகவியலார் கூற்றாகும். அத்தகைய இனக்குழு-குடி வாழ்வின் கூட்டு வாழ்க்கை முறையிலேயே மனிதன் இயற்கையினூடாக இயல்புடன் பல்வேறான அறிதல்களையும் புரிதல்களையும் பெற்றுக்கொண்டான். காற்று, மழை, இடி, மின்னல் போன்றவற்றை எதிர்கொண்டான். விலங்குகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொண்டான். வில், அம்பு போன்ற கருவிகளைக் கொண்டு விலங்குகளை வேட்டையாடவும் பழகிக்கொண்டான். இத்தகைய வாழ்முறையின் ஒரு பகுதியாகவே கூட்டு நடனம், சேர்ந்திசை போன்றவற்றைக் கற்றும் நிகழ்த்தியும் வந்ததையும் அறியலாம். இத்கைய நடனத்திலும் சேர்ந்திசையிலும், அன்றைய மக்களது மன உணர்வுகளும் அன்றாட வாழ்க்கையின் சிக்கல்களும் பலவாறு எதிரொலித்தன. உணவு திரட்டும் நிலையிலிருந்து, உணவு உற்பத்தி நிலைக்குப் படிப்படியாக மாற்றங்கள் நிகழ்ந்தபோது, இத்தகைய மாறுதல்களையும் முன்னேற்றங்களையும் அவர்கள் எந்த வகையில் உள்வாங்கிக்கொண்டார்கள், மாறுதல்களை மறுத்த குரல்கள் எவ்வாறு ஏற்பட்டன, முன்னேற்றங்களை முன்னெடுத்த போக்குகள் எப்படி அமைந்தன என்பனவெல்லாம் சங்கப் பாடல்களில் ஆழமாகவும் இயல்பாகவும் முழுமையாகவும் பதிவாகியுள்ளன. இவற்றில் கற்பனையோ கலப்போ இருந்திருக்க வாய்ப்புகள் இல்லை. குறிப்பாக, உணவு திரட்டியுண்ணும் வாழ்முறையிலிருந்து, உணவு உற்பத்திக்கான முன்னேற்றம் நிகழ்ந்தபோது, இனக்குழு-குடிகளின் செயல்பாடுகளில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டன. மழையை எதிர்பார்த்த இயற்கை வேளாண்மை என்ற நிலையிலிருந்து, வளமான வயல்களை உருவாக்கிய வேளாண்மைக்கான வளர்ச்சி, மேலும் பல மாறுதல்களைக் கொண்டுவந்தது. இனக்குழு-குடிகளின் கட்டமைப்புகளும் கட்டுப்பாடுகளும் தளரத் தொடங்கின. இவை, இனக்குழு-குடிகளின் சமூக-பொருளிய-பண்பாட்டு நிலைகளில் வெவ்வேறு வகையான தாக்கங்களை உருவாக்கின. பண்டைய இனக்குழு-குடிகள், வேட்டையில் கிடைத்த விலங்குகளையும் காடுகளில் இயற்கையாக விளைந்த காய்கனிகளையும் உண்டு வாழ்ந்து வந்தனர்.அடுத்து,தினை போன்ற உணவுப் பொருள்களை விளைவிக்கத் தொடங்கியிருந்தாலும், இவை மழையை நம்பியதாகவே இருந்தன. இத்தகைய வேளாண் உற்பத்தி வேண்டியவாறு இல்லாததாலும் இயற்கையைச் சார்ந்து இருந்ததாலும், அவர்கள் தங்களுடைய முழுமையான உணவுப் பயன்பாட்டுக்காக விலங்குகளை வேட்டையாடுவதையும் தொடர்ந்து கொண்டிருந்தனர். இது ஒரு வகையான வேலைப் பிரிவினையை உருவாக்கியிருந்தது. பொதுவாக, ஆண்கள் விலங்குகளை வேட்டையாடினர்; மகளிர் நிலங்களில் விளைச்சலை மேற்கொண்டனர். ஆயினும், தொடக்கக் கட்டத்தில், ஆண்கள் மேற்கொண்டிருந்த பணிகளில் அவர்களுக்குள்ளேயே வேலைப் பிரிவினை ஏற்பட்டிருந்ததாகத் தெரியவில்லை. இதனைப் போன்றே, பெண்டிர் மேற்கொண்டிருந்த பணிகளில், அவர்களுக்குள்ளேயே எந்த வகையிலும் வேலைப் பிரிவினை உருவாகவில்லை.
தொடக்க நிலையில், ஏற்றுக்கொள்ளப்பட்ட, குருதி உறவுள்ள இனக்குழு-குடிகளுக்கு இடையேதான் ஆண்-பெண் உறவுகள் இருந்தன. பிற வகைப்பட்ட உடல் உறவுகளுக்கு அன்றைய கட்டத்தில் வாய்ப்புகளும் சூழல்களும் இருக்கவில்லை. அப்போது, களவு மணம், கற்பு மணம் என்ற பாகுபாடுகள் எதுவும் தோன்றியிருக்கவில்லை. மண முறைமைகளுக்கான சமூக-பொருளியக் காரணிகள் ஏற்பட்டிராத ஒரு காலகட்டத்தில், எந்த வகையிலும் களவு மணம், கற்பு மணம் என்ற பாகுபாடுகள் இருந்திருக்க முடியாது.
மரங்கள் அடர்ந்திருந்த காடுகளை எரித்து, அத்தகைய நிலத்தில் பயிரிட்டு வந்ததால், அடுத்தடுத்த பருவங்களுக்கு வேறு நிலங்களை நாடிச் செல்லவேண்டியிருந்தது. மழையை மட்டும் நம்பியிருந்ததற்கு மாறாக, கிடைக்கின்ற நீரினைப் பயன்படுத்தும் நுட்பம் தெரிந்த பின்னர், நீர் வாய்ப்புள்ள இடங்களைத் தேடி இடம்பெயர்ந்து செல்லும் நிலை அடுத்து உண்டாயிற்று.
பயிரிடும் நுட்பத்தில் வளர்ச்சி, வேளாண் கருவிகளில் மேம்பாடு, நீரியல் நுட்பத்தின் அறிமுகம், இரும்பின் பயன்பாடு ஆகியவை பயிர் செய்யும் வாய்ப்புகளைப் பெருக்கின. இத்தகைய முன்னேற்றங்கள், தொடக்கத்தில் இனக் குழு-குடிகளுக்குள்ளேயே வேண்டியவாறான வேலைப் பகுப்பினை உருவாக்கின. இதனையடுத்து, தினை போன்ற புன்செய் வேளாண்மையில் இருந்து, நெல், கரும்பு, வாழை போன்ற நன்செய் வேளாண்மைக்கான மாறுதலும் நிகழத் தொடங்கியது. இவை, வேலைப் பிரிவினையை ஓரளவு முழுமைப்படுத்தின.
இவையாவும்,இனக்குழு-குடிகளின் அன்றாடச் செயல்பாடுகளில் மேலும் பெருத்த மாறுதல்களுக்கு வழியேற்படுத்தின. நீர் வளம் நாடிப் புதிய இடங்களுக்கு நகர்ந்ததால், ஆங்காங்கே இருந்த வேறு இனக்குழு-குடிகளுடன் தொடர்பும் உறவும் ஏற்படக்கூடிய இன்றியமையாமை நிகழ்ந்தது.வேலைப் பிரிவினையாலும் வாழ்முறை மாற்றங்களாலும், இனக்குழு-குடிகள் தங்களது வளமைகள் அனைத்தையும் முன்பிருந்தவாறே முழுமையாகத் தொடர முடியவில்லை. இனக்குழு-குடிப் பண்புகள் பல நீடித்திருந்தாலும், அவற்றில் மாற்றங்களும் சிதைவுகளும் ஏற்பட்டுக்கொண்டிருந்தன. புதிய உற்பத்தி வேண்டல்களுக்கு ஏற்றவாறான ஆண்-பெண் உறவு முறைமைகள் இயல்பாகவே நடைமுறைப்பட்டன. குறிஞ்சி நிலத்தில் விலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்த மலைநாடனும் தினைப் பயிரைக் காவல் செய்துகொண்டிருந்த தலைவியும் காணும் வாய்ப்புப் பெற்றுக் காதல் கொண்டனர். அதாவது, உணவு திரட்டும் வாழ்விலிருந்த தலைவனுக்கும் உணவு உற்பத்தி வாழ்வுக்கு மாறியிருந்த தலைவிக்கும் காதல் தொடர்பு ஏற்பட்டது. கடல் சார்ந்த நெய்தல் நிலத்தில், வேறு பணியில் ஈடுபட்டதால் பொருளீட்டிக் குதிரை பூட்டிய தேரில் வளம்வந்த தலைவனும் மீன் பிடித்து வாழ்ந்த பரதவர் மகளும் காதல் வயப்பட்டனர். முல்லை நிலத்தில், ஆடு, மாடு, எருமை போன்ற வெவ்வேறு குடிகளைச் சார்ந்திருந்த ஆணும் பெண்ணும் காதலித்தனர். வேட்டை வாழ்வில் அல்லது இனக்குழு-குடி அமைப்பில் இது போன்ற வேறுபட்ட இனக்குழு-குடிகளுக்கிடையே தொடர்புகள் ஏற்பட வாய்ப்புகளே இல்லை. குருதி உறவும் இயைபும் ஏற்பும் தொடர்பும் இல்லாதோரிடம் காதல் கொள்வதும் உடல் உறவு கொள்வதும் அப்போது நினைத்துக்கூடப் பார்க்க முடியாதவையாகும்.
ஆனால், “யானும் நீயும் எவ்வழி அறிதும்” (குறுந். 40 : 3) என்று தெளிவாகவும் வெளிப்படையாகவும் கூறப்பட்டிருப்பது போன்று, இத்தகைய, தலைவியும்-தலைவனும் முன்பின் அறியோதாராகவும் அறிமுகமில்லா தோராகவுமே சங்கப் பாடல்களில் பெரிதும் காட்டப்படுகின்றனர் என்பதையும் பார்க்க வேண்டும். புதிய வளர்ச்சியில் இது போன்ற காதல் உறவுகள் தோன்றியிருந்தாலும், அவை ஏற்கப்படவில்லை. இதனால், எதிர்ப்புகளும் ஏற்பட்டன. ஆண்-பெண் சார்ந்த இரண்டு இனக்குழு-குடிகளுமே ஏற்றுக்கொள்ளாததால், காதலர், தொடர்பில்லாத புதிய இடங்களுக்கு உடன்போக்குச் செல்லவேண்டியதாயிற்று.
இனக்குழு-குடி முறைமைகளைக் கட்டிக் காக்கும் முயற்சிகள்,புதிய மாற்றங்களை ஏற்பதில் உள்ள தயக்கங்கள், நடைமுறையிலிருந்த கட்டுப்பாடுகளுக்கு மாறான அகப்போராட்டங்கள், முன்னேற்றத்தின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கான முனைப்புகள், எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் நுட்பம், இயல்பான வளர்ச்சிப் போக்குகளுக்கு வழிவிட்டு வேண்டிய மாறுதல்களைக் கைக்கொள்ளுதல் போன்றவை தொடர்பான முரண்பட்ட மன உணர்வுகள், குழப்பங்கள், எண்ணச் சிதறல்கள் ஆகியன மிக நுணுக்கமாகச் சங்கப் பாடல்களில் வெளிப்படுத்தப்படுகின்றன.
நிலங்கள் வளம் பெற்றவுடன் பிறரிடமிருந்து அவற்றைக் காக்கவேண்டியிருந்தது. நீர் வளத்துக்காக – வரத்துக்காகத் தொடர்புடைய பரந்த நிலங்களைக் கட்டுப்படுத்தவேண்டியிருந்தது. வளமான வயல்கள், நீர்
வாய்ப்புகள் ஆகியவற்றைக் கைக்கொள்ளும் போர்கள் ஒருபுறம் தொடர்ந்துகொண்டிருந்தன. நிலங்களைக் கைப்பற்றும் போரில் வெற்றி பெற்ற குடிகள், தங்களிடம் உழைப்பு ஆற்றலும் வேளாண் நுட்ப அறிவும் உற்பத்திக் கருவிகளும் போதுமான அளவு இல்லாதபோது, தோல்வியுற்ற குடிகளிடமே நிலத்தைத் திரும்ப ஒப்படைத்துப் பயிரிடச் செய்தனர். தங்களது வெற்றிக்கு அடையாளமாக, உற்பத்தியில் ஒரு பங்கினைத் “திறை” என்ற பெயரில் பெற்றுக்கொண்டனர்.
இதனால், வேளாண் உற்பத்திக்கான உழைப்பில் ஈடுபடாமலேயே, உற்பத்தியில் ஒரு பங்கினைப் பெறுகின்ற பிரிவினர் தோன்றினர். அடுத்தவர் உழைப்பின் பயனை உறிஞ்சக்கூடிய – சுரண்டக்கூடிய புதிய நிலை மனித வாழ்க்கை வரலாற்றில் உருவாகும் தோற்றுவாயாக இது அமைந்தது எனலாம்.
தொடக்கக் கட்டத்தில், குறிஞ்சி, நெய்தல், முல்லை போன்ற நிலப்பகுதிகளில் பெண்கள் உணவு உற்பத்தியிலும் பொருளியச் செயல்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர். குறிஞ்சியில் தினை விளைச்சலிலும் நெய்தலில் மீன் பக்குவப்படுத்தல் மற்றும் உப்பு விற்றலிலும் முல்லையில் பால், தயிர், மோர் விற்றலிலும் மகளிரே செயல்பட்டனர். அப்போது ஆண்கள் வேட்டையாடுவதில் தொடர்ந்தனர். அதாவது, ஆண்கள் உணவு திரட்டும் பணிகளையே பெரிதும் தொடர்ந்துகொண்டிருந்தனர். ஆனால், பெண்கள் உற்பத்தி மற்றும் பொருளியச் செயல்பாடுகள் என்ற அடுத்த கட்ட வளர்ச்சியை அடைந்திருந்தனர். இதனால், அன்றைய வாழ்முறையில் மகளிரின் மேல் நிலை உறுதிப்பட்டிருந்தது. ஆகவே, அந்த நிலையில் மகளிரே பாடல்களில் போற்றப்பட்டனர். அப்போது, பெண்வழி உரிமை முறையே நடைமுறையில் இருந்தது.
வீரத்துக்கும் மேலாக இவை போன்ற பல விவரங்களைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. சங்க இலக்கியங்களில் காணப்படும் இத்தகைய விவரங்களைக் கொண்டு, அன்றைய வாழ்முறை எவ்வாறு அடுத்தடுத்த கட்டங்களின் வளர்ச்சிநிலைகளை எட்டிப் பிடித்து முன்னேறிவந்தது என்பதை ஓரளவு தெளிவாகவே புரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கிறது. திணை அடிப்படையிலான பகுப்புகளும் இவற்றுக்கு இயைபான வாழ்முறை வேறுபாடுகளும் இருந்தாலும், அன்றைய மனித வாழ்வின் வளர்ச்சிப் போக்குகளை வரையறுப்பதில் பெரும் சிக்கல்கள் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. சங்கப் பாடல்கள், இயல்பான மனித மன வெளிப்பாடுகளாக இருப்பதே இவற்றுக்கெல்லாம் அடிப்படையாகலாம். குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில், அரசு உருவாக்கமும் ஆட்சி முறைமைகளும் முழுமையாக ஏற்படுவதற்கு முற்பட்ட சமூக-பொருளிய-பண்பாட்டு வளர்ச்சிப் போக்குகளைச் சங்கப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன என்பதில் அய்யமில்லை.
மக்கள் திரளின் வாழ்க்கைப் போக்கில் இத்தகைய கண்ணோட்டங்களும் கருத்தோட்டங்களும் ஏற்படுதற்கும் காரணிகள் இல்லாமல் இல்லை. பண்டைய தமிழர், படைப்புக் கொள்கைகளையோ அவை சார்ந்த தத்துவப் போக்குகளையோ அடிப்படையிலேயே ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. உலகம் ஐந்து மூலப் பொருள்களால் உருவானது என்ற நம்பிக்கைதான் நிலவியது. அதனால்தான்,
நீரின்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம் (புறம் 18 : 18-20)
என்று உணவு, உடல், உயிர் போன்றவற்றின் வளர்நிலை உருவாக்கத்தைப் புரிந்துகொண்டிருந்தனர். இதனால்தான், இறைவனுடைய வருத்தத்தால் தனக்கு நோய் ஏற்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள ஒரு பெண் மறுக்கிறாள். இறை நம்பிக்கையைக்கூட இகழ்கிறாள்.
நன்னர் நெஞ்சமொடு மயங்கி வெறியென
அன்னை தந்த முதுவாய் வேலன்
எம்இறை அணங்கலின் வந்தன்று இந்நோய்
தணிமருந்து அறிவல் என்னு மாயின்
வினவல் எவனோ . . . . . . . . . . . . . . . . . . . . . . .
காட்டுமான் அடிவழி ஒற்றி
வேட்டம் செல்லுமோ நும்இறை எனவே (அகம் 388 : 18-26)

முனைவர் பூ.மு.அன்புசிவா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum