Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது
Page 1 of 1 • Share
ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது
ஜப்பான் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கடைசி அணுமின் உலை, பராமரிப்பு ஆய்விற்காக இன்றுடன் மூடப்பட உள்ளது. அணுசக்திக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பினால் இது மீண்டும் திறக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படவில்லை.
ஜப்பான் நாட்டில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமியால் பியூகுஷிமா அணுமின் உற்பத்தி நிலையத்தில் கடல் நீர் உள்ளே புகுந்து அணுகதிர் வீச்சு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜப்பான் நாட்டு மக்கள் அணுஉலையை மூட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர். மக்கள் போராட்டம் காரணமாக அணு உலைகளை மூட தேவையான நடவடிக்கைகளை ஜப்பான் தொடங்கியது. அங்கு 50க்கும் மேற்பட்ட அணுமின் நிலையங்கள் இயங்கி வந்தன. கடந்த ஆண்டு மே மாதம் முதல் அணுமின் நிலையங்கள் படிப்படியாக மூடப்பட்டன. சுனாமியால் பாதிக்கப்பட்ட பியூகுஷிமா அணுமின் நிலையத்தை மூடிவிட்டது.
கடந்த 2012-ம் ஆண்டு மே மாதமும் ஜப்பானில் உள்ள 50 வர்த்தக அணுமின்சக்தி நிலையங்களும் பராமரிப்பு ஆய்வுப் பணிக்காக நிறுத்தப்பட்டபோது பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக அவை உடனே செயல்படவில்லை. 40 வருடங்கள் கழித்து முதன்முறையாக ஜப்பானில் அப்போதுதான் அணுசக்தி பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. ஆயினும், ஆகஸ்ட் மாதம் அரசு உத்தரவின்பேரில் மூன்றாவது மற்றும் நான்காவது அணுஉலைகள் செயல்படத் துவங்கின. தற்போதும், ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே அணுசக்திக்கு ஆதரவாகக் குறிப்பிடும்போதும், பொதுமக்களின் எதிர்ப்பில் தீவிரம் இருக்கவே செய்கிறது.
புகுஷிமா சம்பவத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டபோது படிம திரவ எரிபொருளை மின் உற்பத்திக்குப் பயன்படுத்த தொடங்கியதால் மின்சாரக் கட்டணம் உயர்ந்தது.
புகுஷிமா கொதிகலங்களிலிருந்து வெளியான கதிரியக்கம் வெளியிலும், நிலங்களிலும் பரவியதாகக் குறிப்பிட்ட போதிலும் இதன் தாக்கத்தினால் எவரும் இறந்ததாக இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆயினும், அச்சத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற நேர்ந்தது என்றார்.
ஜப்பானில் இயங்கி வந்த கடைசி அணுமின் உலையும் நேற்று மாலையுடன் மூடப்பட்டதை அடுத்து கடந்த 40 ஆண்டுகால வரலாற்றில் அணுமின் உற்பத்தி முற்றிலுமாக நின்றுபோனது இதுவே முதல் முறையாகும். கடந்த 1986-ல் ரஷ்யாவின் செர்னோபில் நகரில் அணுசக்தியினால் ஏற்பட்ட பேரழிவுபோல் ஜப்பானிலும் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் இதனை முற்றிலும் தவிர்க்க விரும்புகின்றார்கள்.
- ஒன்இந்தியா

Similar topics
» மூடப்பட்டது மோட்டாரோலா
» கூடங்குளம் அணுமின் நிலையம் தமிழகத்துக்கு எப்படி?
» கூடங்குளம் அணுமின் நிலையம் நோக்கி கடற்கரை வழியே ஆயிரக்கணக்கானோர் பேரணி
» ஜப்பானில் கோவை டாக்டருக்கு விருது
» ஜப்பானில் கண்கவரும் வின்டர் விளக்கு திருவிழா

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum