தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கொஞ்சம் சிரிச்சி தான் பாருங்களேன் !!

View previous topic View next topic Go down

கொஞ்சம் சிரிச்சி தான் பாருங்களேன் !! Empty கொஞ்சம் சிரிச்சி தான் பாருங்களேன் !!

Post by முழுமுதலோன் Fri Sep 20, 2013 3:04 pm

அறிவை வைக்க மறந்துட்டானே...


ஒரு சமயம் கடையத்தில் உள்ள வேடுவர்கள் சாமிக்குப் பூஜை போட்டனர். அவர்களுள் ஒருவனுக்கு ஆவேசம் வந்து, சாமி ஆட ஆரம்பித்தபடி பின் வரும் பாட்டைப் பாடினான்.
பாக்கும் வச்சான்; பழமும் வச்சான்;
வெத்திலையும் வச்சான்; பொயிலையும் சேத்து வச்சான்;
ஆனால் ஒன்னு வைக்க மறந்துட்டானே...
சுண்ணாம்பில்லே; சுண்ணாம்பில்லையே!
அப்போது அங்கு வந்த பாரதியார், அந்தப் பாட்டைக் கேட்டு பலமாகச் சிரித்து விட்டார்.
அருகிலிருந்தோர், " ஏன் சிரிக்கிறீர்கள்? " என்று கேட்டனர்.
"இப்பாட்டு நம் மக்களுக்குக் கூட ஒரு வகையில் பொருந்தும்" என்றார் பாரதியார்.
" எப்படி? "
"தமிழ்நாட்டு மக்களுக்குக் கடவுள் நிலமும் வச்சான், பலமும் வச்சான், நிகரில்லா செல்வம் வச்சான். ஆனா, ஒன்னு வைக்க மறந்துட்டானே? "
"என்ன அது ? " என்று மீண்டும் கேட்டார்கள்.
"அறிவை வைக்க மறந்துட்டானே, மண்டையில் அறிவை வைக்க மறந்துட்டானே..."
இதைக் கேட்ட நண்பர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
JJJJJ
 
வேறொரு  நல்ல மருத்துவரை...
மருத்துவர் ஒருவர் தன் நோயாளியிடம் உண்மை சொல்ல வேண்டிய காலம் வந்து விட்டதை உணர்ந்தார்.

"நீங்கள் மிகவும் நோயுற்றிருப்பதால் மிஞ்சிப் போனால் இரண்டு நாள்களுக்கு மேல் உயிருடன் இருக்க மாட்டீர்கள். ஏதேனும் ஏற்பாடுகள் செய்ய வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு, "யாரையேனும் பார்க்க விரும்புகிறீர்களா? " என்று கேட்டார்.

நோயாளி மெல்லிய குரலில் "ஆம்" என்றார்.

"யாரை?"

"வேறொரு  நல்ல மருத்துவரை..."
JJJJJ


நீங்கள் யாருக்கு...?
ஆபிரகாம் லிங்கன் அவருடைய ஷீவிற்கு பாலீஷ் போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கே வந்த ஒருவர், "சார், உங்கள் ஷீவிற்கு நீங்களேதான் பாலீஷ் போடுவீர்களா?" என்று கேட்டார்.

லிங்கன், " ஆமாம். நீங்கள் யார் ஷீவிற்குப் பாலீஷ் போடுவது வழக்கம்? " என்று திருப்பிக் கேட்டார்.
                                                                                                         JJJJJ


குணப்படுத்தி விடுவார்கள்.
ஒரு சமயம் இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு மனநோய் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த மனநோயாளி "நீங்கள் யார்? " என்று கேட்டார்.

சர்ச்சில் "நான்தான் பிரதம மந்திரி சர்ச்சில்" என்று மிடுக்குடன் சொன்னார்.

"கவலைப்படாதீர்கள். நான் இங்கே வந்த போது ஹிட்லராக இருந்தேன். என்னைக் குணப்படுத்தி விட்டார்கள். அதுபோலவே உங்களையும் விரைவில் குணப்படுத்தி விடுவார்கள். " என்றார் அந்த மனநோயாளி.
JJJJJ


பெயர்தான் கெட்டுப் போகிறது.
டாக்டர் மத்தேயு பெய்லி என்பவர் ஜார்ஜ் மன்னருக்கு மருத்துவ ஆலோசகர். இலக்கியவாதியும் கூட.

ஒரு நாள் எழுத்தாளர் ரினால்ட்ஸ் என்பவர் தன் உடல் நிலையைப் பரிசோதித்துக் கொள்ள மத்தேயுவிடம் வந்தார். 

" டாக்டர், நான் அதிகம் எழுதுவதால் என் உடல் நிலை மோசமாகிவிட்டதா? " என்று கேட்டார்.

அதற்கு மத்தேயு , "நீங்கள் அதிகமாக எழுதுவதால் உங்கள் உடல் நிலை கெட்டுப் போகவில்லை. உங்கள் பெயர்தான் கெட்டுப் போகிறது. " என்றார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கொஞ்சம் சிரிச்சி தான் பாருங்களேன் !! Empty Re: கொஞ்சம் சிரிச்சி தான் பாருங்களேன் !!

Post by முழுமுதலோன் Fri Sep 20, 2013 3:04 pm

நேரம் வீணாவதில்லை...
ஒரு முறை பெர்னாட்ஷாவிடம் அவர் நண்பர் பெர்னாட்ஷாவிற்கு காது கேட்காது என்பதைத் தெரிந்து கொண்டு , "நீங்கள் காதில் இயர்போன் வைத்துக் கொள்ள வேண்டியதுதானே?" என்றார். 

உடனே பெர்னாட்ஷா , "உங்களைப் போன்றவர்கள் என்னிடம் அதிகம் சத்தம் போட்டு பேச முடியாது. மேலும் நீங்கள் பேசினாலும் அதிக நேரம் பேச முடியாது. உங்களைப் போன்றவர்கள் அரட்டை அடிக்கவும் முடியாது. இதனால் எனது நேரமும் வீணாவதில்லை..." என்றார்.
 
JJJJJ
 பகலில் காண முடியாததை...
பிரெஞ்ச் நாவலாசிரியர் பால்ஸாக் வசித்த அறைக்குள் ஓரிரவு திருடன் நுழைந்து மேஜையைத் துழாவிக் கொண்டிருந்தான். 

தூக்கம் வராமல் புரண்டு படுத்த அவர் இதைக் கண்டு பலமாகச் சிரித்தார்.

"எதற்கு சிரிக்கிறாய்?" என்றான் திருடன்.

" நான் பகலில் காண முடியாத பணத்தை நீ இரவில் கண்டு விடாலாமென்று நினைத்து இவ்வளவு சிரமப்படுகிறாயே... அதை நினைத்துத்தான் சிரித்தேன்." என்றார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கொஞ்சம் சிரிச்சி தான் பாருங்களேன் !! Empty Re: கொஞ்சம் சிரிச்சி தான் பாருங்களேன் !!

Post by முழுமுதலோன் Fri Sep 20, 2013 3:06 pm

ஒருவர்: கிலோ ரெண்டு ரூபாய்க்கு மேல எடுக்க மாட்டேங்கறான்னா அந்த பழைய பேப்பர்காரனை அடிச்சீங்க...
மற்றவர்: பின்னே என்னங்க, இதைக் காரணமா வச்சு பக்கத்து வீட்டுக்காரர் பேப்பர் வாங்கிறதை நிறுத்திட்டாருன்னா... ஓசி பேப்பர் படிக்கிறதுக்கு நான் எங்கே போகிறதாம்?
JJJJJ
ஒருவர்: கோடை வந்தாச்சு... கத்தரி வெயில் சீசன் எப்போ ஆரம்பிக்குதாம்? 
மற்றவர்: எதுக்குங்க அந்தக்கவலை இப்போ... அது எனக்கு என் கல்யாணம் அன்னிக்கே ஆரம்பிச்சிடுச்சு...
JJJJJ
ஒருவர்: அவங்க பொண்ணைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டதால, அன்னிக்கு நாம் சாப்பிட்ட டிபனுக்கெல்லாம் பில் அனுப்பிருக்காங்கப்பா! 
மற்றவர்: அதுசரி... அதென்ன கீழே T&B சார்ஜ்னு அஞ்சு ரூபாய் சேர்த்திருக்காங்க...?
ஒருவர்: அவங்க வீட்டு டாய்லெட், பாத்ரூமை யூஸ் பண்ணினதற்காம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கொஞ்சம் சிரிச்சி தான் பாருங்களேன் !! Empty Re: கொஞ்சம் சிரிச்சி தான் பாருங்களேன் !!

Post by முழுமுதலோன் Fri Sep 20, 2013 3:07 pm

ஆசிரியர்உங்க பையனோட கையெழுத்தைப் பார்த்தால் இன்னிக்கு பூரா பார்த்துக்கிட்டே இருக்கலாம் சார்!
மாணவனின் தந்தை: அட! அப்படி மணி மணியா எழுதறானா?
ஆசிரியர்: பார்த்துக்கிட்டே இருக்கலாம்னுதான் நான் சொன்னேன்...! எழுத்து புரிஞ்சாத்தானே மேலே படிக்கமுடியும்...!
JJJJJ
ஒருவர்: நேத்துதான் யாருக்கோ பாராட்டுக் கூட்டம் நடத்துனீங்களே... இன்னிக்கு திடீர்னு யாருக்கு அஞ்சலிக் கூட்டம் சார்?
மற்றவர்: அவருக்கேதான் சார்...! நேத்து எல்லாரும் ஓவரா பாராட்டுனதுல, அட்டாக் வந்து செத்துட்டாருங்க அவரு...!
JJJJJ
ஒருவர்: போலி டாக்டர்னுதான் கேள்விப்பட்டிருக்கேன்...அதென்ன போலி பேஷண்ட்...?
மற்றவர்: இந்த டாக்டர், தன் க்ளினிக்ல கூட்டம் காட்டுறதுக்காக, காசு குடுத்து ஆளுங்களைப் பிடிச்சு, பேஷண்ட் மாதிரி உக்கார வச்சிடுறாருங்க!
JJJJJ
ஒருவர்: திருட்டுத் தொழில் பண்ணிக்கிட்டிருந்த உன் அப்பன் இப்ப என்னடா பண்றான்? 
மற்றவர்: வயசாயிடுச்சுல்ல ஐயா...இப்ப பக்தி மார்க்கத்துல போய்க்கிட்டுருக்காருங்க!
ஒருவர்: பரவாயில்லையே...தன்னோட தவறை உணர்ந்து கோயில், குளம்னு சுத்த ஆரம்பிச் சுட்டானே? 
மற்றவர்: அட நீங்க வேற, அது மாதிரியான இடங்களில மட்டும்தான் இப்போ திருடுறாரு...!




முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கொஞ்சம் சிரிச்சி தான் பாருங்களேன் !! Empty Re: கொஞ்சம் சிரிச்சி தான் பாருங்களேன் !!

Post by ரானுஜா Fri Sep 20, 2013 4:30 pm

ஹா ஹா
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கொஞ்சம் சிரிச்சி தான் பாருங்களேன் !! Empty Re: கொஞ்சம் சிரிச்சி தான் பாருங்களேன் !!

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 20, 2013 10:11 pm

நல்ல ஜோக்ஸ் நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கொஞ்சம் சிரிச்சி தான் பாருங்களேன் !! Empty Re: கொஞ்சம் சிரிச்சி தான் பாருங்களேன் !!

Post by முரளிராஜா Sat Sep 21, 2013 10:35 am

laugh laugh laugh laugh laugh laugh laugh 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கொஞ்சம் சிரிச்சி தான் பாருங்களேன் !! Empty Re: கொஞ்சம் சிரிச்சி தான் பாருங்களேன் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum