தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிஞர் ரத்தினமூர்த்தி கவிதைகள்

View previous topic View next topic Go down

 கவிஞர் ரத்தினமூர்த்தி கவிதைகள்  Empty கவிஞர் ரத்தினமூர்த்தி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 26, 2013 5:24 pm

அன்பு நண்பர் ரத்தின மூர்த்தி கவிதைகள் மிக அருமையானவை
அவற்றில் சில
அவள் வானத்தையே
சொந்தமாக்க ஆசைப்பட்டவள்
ஆனால், அவள் சொந்த வீடு
சூன்யமாக இருந்தது

அவள் ஒரு கவிதைப் புத்தகமாக
எங்கள்முன் படபடத்தவள்
ஆனால்,அவள் வீட்டில்
யாருக்கும் வாசிக்கத் தெரியவில்லை

அவள் ஒரு ஆதவனாக
கிளர்ந்து எழுந்துவர முயற்சித்தவள்
ஆனால், அவளைப் புகைக் கோலமாக்கி
சிதறடித்து விட்டார்கள்

யதார்த்தக் கரம் நீட்டியவளுக்கு
இந்த உலகம்
நட்புச் செண்டு வழங்காமல்
மோதிரம் மாட்டத் துணிந்ததால்
அவள் மனதை வெட்டிக்கொண்டு
வேதனையை எழுதி வைப்பாள்

உலகமெங்கும் ஒரு சுதந்திரத் தென்றலாக
வலம்வர நினைத்தவளை
வலம்வர நினைத்தவர்களால்
தடுமாறி நின்றவள்
தன்னத்தானே சிறப்படுத்திக் கொண்டு
கண்ணீரை பதிவு செய்வாள்

கவிதைப்பூக்களை
கொத்துக் கொத்தாய் மலர வைத்தவளை
பறித்துப் பார்க்க ஆசைப்பட்டவர்களால்
அவள் நிறையத் தடவை
செத்துப் பிழைத்தாள்

ஒரு விடிவெள்ளியாய்
இலக்கிய வானில் நிலைக்க விரும்பியவள்
பொடிப்பொடிச் சில்லுகளாய் தெறிக்க
எங்களைக் காயப்படுத்திப் போய்விட்டாள்

அந்த வானம் உடைந்து விழுந்தது
அந்த நிலவு தேய்ந்து ஒழிந்தது
அந்த ராகம் சோகத்தில் ஒளிந்தது
அந்த சோகம் நெஞ்சினை பிளிந்தது

குத்துவிளக்கு
குடும்பத்தில் மட்டும்
ஒளிர்ந்தால் போதுமாம்
வீட்டார்க்கு !

பெண் என்பவள்
சமுதாயத்திற்கு வந்தால்
குடும்பப் பெண் இல்லையாம்
நாட்டார்க்கு !

என் செய்வாள்
எங்கள் சக படைப்பாளினி

அனுதாபத்தைத் தவிர
ஆறுதலைத் தவிர
எங்களால் என்ன வழங்க முடியும்
சக படைப்பாளினிக்கு

எங்கள் கூட்டத்தில்
ஒரு இடம் காலியாகவே
இருக்கிறது
அவளின் நினைவாகவே !!

நன்றி எழுத்து  தளம்


Last edited by கே இனியவன் on Fri Sep 27, 2013 8:29 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிஞர் ரத்தினமூர்த்தி கவிதைகள்  Empty Re: கவிஞர் ரத்தினமூர்த்தி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 26, 2013 5:27 pm

பதில் சொல் !

தாழ்த்தப்பட்டவர்கள் என்று
அவர்களையும்
அவர்கள் கைப்பட்ட பொருட்களையும்
ஒதுக்கித் தள்ளும் சாதிப்பிரியனே

அவர்கள்
சுவாசித்துக் கலந்த காற்றை
ஒரு நிமிடமாவது
ஒதுக்கி வைத்துப் பாரேன் !!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிஞர் ரத்தினமூர்த்தி கவிதைகள்  Empty Re: கவிஞர் ரத்தினமூர்த்தி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 28, 2013 11:07 am

பேரிழப்பும் அதற்கொப்பான கனவுகளும்!! [உண்மைக் கதை]
குறிப்பு; மனப்பயம் உள்ளவர்களும் குழந்தைகளும் படிக்க வேண்டாம்.

கனவுகளைப் பற்றிய ஆய்வில் நான் இறங்கவில்லை. உங்களிடமும் அதை விவாதிக்க வரவில்லை. கனவுகளால் விளையும் பின் விளைவுகளை ஒப்பிட்டுப் பாருங்கள் என்று சொல்லவும் எனக்கு விருப்பம் இல்லை. கனவுகளின் உணர்த்துதல்கள் நம் வாழ்வில் எத்தகைய தாக்கங்களை எல்லாம் ஏற்படுத்தி இருக்கக் கூடும் என்பதப் பற்றியும் கிளறிவிடவில்லை. கனவுகளைப் பற்றிய முற்றுப் பெறாத விவாதங்களைக் கேட்ட., இந்தக் கனவுகளால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை முடிவு செய்ய முடியாதவர்களின் கூட்டத்தில் நானும் ஒருவன்.

ஆனால், காலம் செய்த மாபெரும் கொடுமை என்னை சில நாட்களாக நடுநடுங்கச் செய்தது. என் பகற்பொழுதுகளையும்., என் இயல்பையும் அடியோடு சாய்த்தது, என்னை ஒடுங்க வைத்த கொடூரத் தன்மையை மறக்க முடியவில்லை. நம் நினைவுகளின் நிழலாகவும் மனச் சுமையின் பிரதிபலிப்பாகவும் பயத்தின் சுவடாகவும் நித்தம் நித்தம் வந்து போகிற கனவைப் பற்றிய சிந்தனை என்னிடமும் இருந்தது இல்லை. பிறர் சொன்ன கனவுகளை செவிமடுக்காமலும், அவர்கள் கண்ட கனவின் தாக்கங்களை உணர்ச்சி வசப்பட்டுச் சொல்லும்போது அதை லட்சியப்படுத்தாமலும் நானும் சென்று கொண்டிருந்தேன்.

இந்த வேளையில் கனவுகள் என்னிடமும் விளையாட ஆரம்பித்தது. எப்போதேனும் வரும் கனவுகள் சில நாட்களாகத் தீவிரமானது. எந்த நிகழ்விற்கான அறிகுறியினையும் உருப்படியாய் வெளிப்படுத்தாத கனவுகள் ஒரு கலக்கத்தை உருவாக்க ஆரம்பித்தது. கனவைப்பற்றி ஒரு கணமும் கவலைப்படாத என்னையும் கனவுகள் ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. ஒரு கனவையும் நினைவில் வைக்காதவனை வெளியில் சொல்லி மனச்சாந்தி தேடும் அளவிற்கு என்னை இந்தக் கனவுகள் ஆட்டிப்படைக்கத் தொடங்கியது. நான் நிலை குலைந்தேன். நிம்மதி இழந்தேன். எந்த இடத்திற்கும் எந்த இருட்டிலும் தனி ஆளாகவும் தைரியமாகவும் செல்லும் நான் பகலில் கூட பயப்பட்டேன். சில நாட்களாக மாலை ஆறு மணிக்கே வீடு செல்ல ஆரம்பித்தேன்.

மெல்ல மெல்ல தலை காட்ட ஆரம்பித்த கனவுகள் என்னையே துக்கத்திற்குள் தொலைக்க ஆரம்பித்தது. என் வீம்பும் என் வீரமும் சுக்கு நூறாய் உடைந்தது. சென்ற இரண்டு வாரங்களாக வந்த கனவுகளில் எனக்கு மரண பயத்தை ஏற்படுத்திய கனவுகளை என்னென்று சொல்ல...

6.9.2013 வியாழன் இரவு.
*************************************
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவர் என் வீட்டிற்கு வருகிறார். இறக்கும்போது அவருக்கு வயது நாற்பது இருக்கும். எனது பால்ய கால நண்பனின் தகப்பனார் அவர். பக்கத்து ஊர்க்காரர். அவருடைய குடும்பத்தாரோ அல்லது என் நண்பரோகூட இறந்துபோன அவரைப்பற்றி நினைத்திருக்க மாட்டார்கள். இதில் இன்னொரு கொடுமை என்னவெனில், அப்போதிருந்த உருவத்தைவிட இன்னும் இளமையாகத் தெரிகிறார். வாட்டசாட்டமாக இருக்கிறார். வாலிப வயதில் அப்படி இருந்திருப்பாரோ என்னமோ. வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை அணிந்திருக்கிறார். இவர் எல்லாம் எதற்காக கனவில் வந்தார் என்று என் தாயாரிடமும் மனைவியிடமும் சொல்லி வருத்தப்பட்டேன்.

7.9.2013 வெள்ளி இரவு
**********************************
வீட்டில் இரண்டு அகல் விளக்குகளை[[***]] ஏற்றி வைத்தேன். காற்றடிக்கவே ஒன்று அணைந்து விடுகிறது. அதைப் பற்ற வைக்க முயற்சி செய்கிறேன். மூன்று முறை முயற்சி செய்கிறேன். முடியாமல் போகவே சரி இருக்கட்டும் ஒன்றே எரியட்டும் என்று விட்டுவிடுகிறேன். ஒரு தீபம் மட்டும் எரிந்துகொண்டிருப்பதை பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு திடீரென்று விழிப்பு ஏற்பட்டுவிட்டது. வெள்ளிமலை முருகன் கோயிலில் வெடிச்சத்தம் கேட்கும் உணர்வு ஏற்பட்டது. மழைக்காலம் ஆதலால் அதை இடி முழக்கம் என்று சமாதானம் செய்து கொண்டேன். மீண்டும் படுத்துக் கொண்டேன். ஆனாலும் உள்மனதிற்கு சம்மதமில்லை. உள்மனதானது அது வெடிச்சத்தம்தான் என்று சொல்லியது. மறுபடியும் பயம் கவ்வ படுத்துத் தூங்கி விட்டேன். அதே சமயம் என் தாய்க்கும் அந்த ஒலி கேட்டிருக்கிறது. [[ முருகன் கோயிலில் உலக அதிசயமான அந்தவெடிச்சத்தமானது அந்த மலையைச் சுற்றி எதோ ஒரு திசையில் ஒலிக்கும். இதைப்பற்றி ஒரு நாள் தனியாக விளக்கலாம். இங்கு இடம் போதாது.]]

8.9.2013 சனி இரவு
*****************************
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மீமிசல் என்ற ஊரில் இருந்து [[மீமிசல்- இந்த ஊர்ப்பெயரை சரியாக எழுதி இருக்கிறேனா?]] அப்துல் வஹாப் என்பவர் எங்கள் கிரமத்திற்கு பிழைப்புத் தேடி வருகிறார். தள்ளுவண்டியில் தையல் இயந்திரம் வைத்து துணி தைத்துக் கொடுப்பது அவருடைய தொழில். அவருக்கு நான் தான் முதலில் பழக்கமாகிறேன். பின்பு இந்த ஊர் பிடித்துப் போகவே குடும்பத்துடன் இங்கேயே தங்கி வாழ்ந்தார். பின்பு இடத் தரகர் தொழிலும் சேர்த்துப் பார்த்தார். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு குடும்பப் பிரச்சனை காரணமாக சொந்த ஊருக்கே சென்றுவிட்டார். பிறகு அவருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

அன்று இரவு கனவில் வருகிறார். வந்தவர் என் வீட்டின் நிலவின் மேல் [[ நிலைப்படி. இதன் மேல் யாரும் கால் வைத்து நடப்பதில்லை {?} ]] நின்று கொண்டு என்னை பதற்றத்துடன் கூவி அழைக்கிறார்.
" ஏம்பா மூர்த்தி சென்னிமலைல ஒரு எழவாயிட்டுது உடனே போலாம் வாப்பா " என்று சொல்லி விட்டு மறைகிறார் அல்லது நிற்கிறார். இங்கேயும் ஒரு வினோதம். அவரும் வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை. கூடவே ஒரு கைக்குட்டை. அப்துல் வஹாப்பும் கைக்குட்டையை எப்பொழுதும் கையில் அல்லது சட்டைக் காலரில் வைத்து இருப்பார்.

இந்தக் கனவுகள்தான் என்னை ஆட்டிவைத்த கனவுகளில் உருப்படியாய் தெளிவாய் நின்றவை. இந்தக் கனவுகளில் இருக்கும் சிறப்பு என்னவென்றால் மற்றவர்கள் சொல்வதுபோன்று தெளிவற்றோ இன்னதென்று விவரிக்க முடியாததாகவோ காட்சியளிக்கவில்லை. நாம் பகலில் எப்படி காட்சிகளை கண்ணுறுகிறோமோ அப்படியே எனக்கும் தென்பட்டன. அதைவிட இந்தக்கனவுகள் காணும் முன்னும் பின்னும் ஒரு பயமுறுத்தலும்., குழப்பமான அதிர்வலைகளும்., மூளைப்பகுதியில் ஒரு அழுத்தமும்., இதயத்தில் ஒரு பிசைவும் கொடுத்து வதைத்ததைத்தான் தாங்க முடிவதில்லை.

அதாவது, படுத்தால் தூக்கம் வந்து விடும். தூக்கம் வந்ததும் கனவும் உடனே புறப்பட்டு விடும். காலையில் கண் விழிக்கும் வரை அந்த மாய வதைப்புகள் தொடர்ந்து உருட்டும். குறிப்பிட்ட கனவு ஏதேனும் ஒன்று மட்டுமே தெளிவாய் மனதில் நிற்கும். அப்படி மனதில் நின்றவைதான் மேற்சொன்ன கனவுகளின் பதிவுகள்.

இந்த மாய அழுத்தத்தால் காலையில் புத்துணர்வுடன் எழ முடிவதில்லை. இரவு எவ்வளவு நேரம் கண் விழித்திருந்தாலும் காலை ஐந்தரை மணிக்கு எழுந்து பழக்கப்பட்டவன் ஏழு மணியானாலும் எழுந்திருக்க முடிவதில்லை. தலைப்பாரமும் அடித்துப்போட்டாற் போன்ற வலியும் தோன்றியது. வாகனத்தில் செல்லும்போது அச்ச உணர்வு தோன்றியது. நான் போகும்போது யாரோ நம் மீது மோதுவது போலவும்., குறுக்கே வந்து விழுவது போலவும்., நம் வண்டி முன்னால் செல்லும் வாகனத்தின் மீது மோதி விடுவது போலவும் ஒரு பயம் என் தைரியத்தையும் மீறித் தொற்றிக் கொண்டது பெரும் பிரச்சனையாக இருந்தது.

9.9.2013 திங்கட்கிழமை. விநாயகர் சதுர்த்தி தினம்.

காலை ஐந்து மணி
******************************
காலை ஐந்து மணிக்கே எழுந்துவிட்டேன். வெள்ளிமலை முருகன் கோயிலில் உறவினர் மகனின் திருமணத்திற்கு நானும் என் மனைவியும் செல்கிறோம். அங்கு என் சித்தப்பா மகளும் அவரது கணவரும் அங்கு வந்திருந்தனர். அவர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு., முகூர்த்தம் முடிந்தவுடன் திரும்பிவிட்டோம். என் தங்கைக்கும் மாப்பிள்ளைக்கும் சில காலமாக கொஞ்சம் மன வருத்தம். வீட்டில் கொஞ்சம் பிரச்சனை. அதிகமாக வெளி இடங்களுக்கு ஒன்றாகப் போகாதவர்கள் இங்குதான் அன்று ஒன்றாக வந்திருக்கின்றனர். இந்தக் கோயிலில் தான் அவர்களுக்குத் திருமணம் உறுதி செய்யப்பட்டு முடித்துவைக்கபட்டது.

காலை எட்டு மணி
********************************
அந்தத் திருமணத்தின் வரவேற்பு திருப்பூரில் உள்ள ஒரு மண்டபத்தில் நடக்க இருப்பதில் கலந்து கொள்ள என் வீட்டில் இருந்து நானும் என் மனைவியும் இருசக்கர மோட்டார் வண்டியில் செல்கிறோம். பாதி வழியில்., ஒரு வேலையாக சென்று விட்டு என் மாப்பிள்ளை எங்களைக் கண்டு பேசிவிட்டு எங்களை முன்னால் அனுப்பி வைக்கிறார். அவர் பின்னால் வந்து கொண்டிருக்கிறார்.

காலை ஒன்பது மணி
*********************************
வரவேற்பு விழாவில் கலந்துவிட்டு நான் என் மனவியை மண்டபத்தில் இருக்கச் சொல்லிவிட்டு நான் எனது அலுவலகத்திற்கு வந்துவிடுகிறேன்.

காலை ஒன்பது பதினைந்து
*******************************************
விநாயகருக்காக எழுதிவைத்திருந்த ஒரு பாடலை தளத்தில் பதியலாம் என்று பார்க்கும்போது தளம் இணைப்புக் கிடைக்கவில்லை. அதை முக நூலில் பதிந்துவிட்டு நண்பர்களுக்கு வணக்கமும் வாழ்த்தும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

காலை பத்து ஐந்து
******************************
இப்பொழுது தளம் கிடைக்கிறது. பாடலை பதியலாம் என்று நினைக்கும்போது கைப்பேசி அழைப்பு ஒன்று வருகிறது.
"உன் மாப்பிள்ளை பேருந்தில் அடிபட்டுவிட்டார். உடனே புறப்படவும்" என்று.
நான் சுதாரிப்பதற்குள் மற்றுமொரு அழைப்பு...
"அவரின் இரு சக்கர வாகனத்தின்மீது மோதிய பேருந்தின் அடியில் மாட்டிக் கொண்டார்" என்று. புறப்படுவதற்குள் மீண்டும் அழைப்பு "ஆள் நசுங்கிக் கிடக்கிறார். முடிந்துவிட்டார்" என்று.

மண்டபத்தில் இருந்து சென்றவர் ஒரு தேநீர்க் கடையில் தேநீர் அருந்திவிட்டு வண்டியை எடுக்கும்போது விபத்தில் சிக்கி உயிர் இழந்திருக்கிறார். இனித்துவண்டு கிடக்க நேரமில்லை என்று ஒரு வழியாய் மனதைத் திடப்படுத்திக் கொண்டு உடலை அடக்கம் செய்ய வேண்டிய வேலைகளைக் கவனித்தோம்.

[[***]] அந்த இரண்டு அகல் விளக்கின் கதை இது. நான் தான் இவர்களின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து நடத்திக் கொடுத்தவன். என் தங்கைக்கு பலவிதத்திலும் உறுதுணையாய் இருந்தவன். நான் ஏற்றி வைத்த விளக்கு அல்லவோ அவர்களின் வாழ்க்கை.

இந்த நிகழ்வைப் பதிவு செய்யவேண்டிய அவசியம் அவருடைய மரணத்தை அறியவைக்கும் நோக்கத்தில் ஒருபோதும் இல்லை. அதற்கு முன்பு நடந்த அப சகுனங்களையும் தீய கனவுகளின் விபரீத கோலத்தையும் விளக்குவதற்குத்தான்.

இப்போது அத்தகைய கனவுகளும் இல்லை., என் மாப்பிள்ளையும் இல்லை. அந்தக் கனவுகளும் அதனால் வந்த விளைவுகளும்., என்னைச் சூழ்ந்த அதிர்ச்சியும் மட்டுமே எனக்குள் அகலாமல் தேங்கி நிற்கிறது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிஞர் ரத்தினமூர்த்தி கவிதைகள்  Empty Re: கவிஞர் ரத்தினமூர்த்தி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 28, 2013 11:08 am

சும்மா வருமோ சொர்க்கலோகம் ? [சிறு கதை ]

நாளும் பொழுதும் ஓட வேண்டும்., அதற்கு என்ன செய்யலாம். நாள் முழுவதும் ஆனந்தமாய் பொழுதை கழிக்க வேண்டும் ., அதற்கு என்ன செய்யலாம்? தொலைக்காட்சி பார்த்து போரடித்து விட்டதா? சீரியல் பார்த்துப் பார்த்து நிஜமாய் அழுவதற்கும் கண்ணீர் இல்லமல் போய் விட்டதா? அதற்கு என்ன செய்யலாம்?

இப்படி ஒரு கேள்வியை என்னைக் கேட்டுவிட்டீர்கள். இதற்கு நான் பதிலைத் தேடிக் கொண்டிருப்பதை விட நேராக லட்சுமிப் பாட்டியிடம் உங்களை அழைத்துச் செல்கிறேன். அந்தப் பாட்டிதான் இதற்கு பதில் சொல்லமுடியும். வாருங்கள் போகலாம்.

லட்சுமிப் பாட்டிக்கு வயது எண்பது இருக்கும். ஆனால் யார் கேட்டாலும் அறுபது என்றுதான் சொல்லும். அதை தேடிக் கொண்டு போகும்போது ரொம்ப பிசியாக இருந்தது. ஒரு மீட்டிங் போகும் அவசரம். முகத்தில் அவ்வளவு ஆனந்தம். பழைய தூக்குப் போசியில் சாப்பாட்டை நிரப்பிக் கொண்டிருந்தது.

எங்களைப் பார்த்ததும் "என்னப்பா சங்கிதி. நான் உங்களுக்கு என்ன செய்யோணும்?" என்று நடந்து கொண்டே பேசியது.
பாட்டியிடம் உங்களின் கேள்வியை எடுத்துச் சொன்னேன். பாட்டிக்கு கோபம் வந்து விட்டது. நேரங்கெட்ட நேரத்தில வந்து கேள்வி கேட்டா எப்பிடி? பொழுதோட வாங்கடா சொல்றேன் என்று வீட்டைப் பூட்டிக் கொண்டே சொல்லியது. எனக்கு நேரம் ஆச்சு என்று கிளம்பிய பாட்டி ஒரு நிமிடம் நின்று எதையோ யோசித்துவிட்டு... "பசங்களா பத்து மணிக்கு மேல வாய்க்கா மேட்டு ரோட்டுக்கு வாங்க. அங்கே நான் ரெஸ்ட்லதான் இருப்பேன். அப்போ சாவுகாசமா பேசிக்கலாம். என்னடா சொல்றீங்க? என்னோட பொழப்பைக் கெடுக்காதீங்க காலைல வந்து" என்று பாட்டி சொன்ன யோசனை எங்களுக்கு சரியெனவே பட்டது.

பாட்டி சொன்ன நேரத்துக்கு முன்னதாகவே அந்த இடத்திற்கு சென்றுவிட்டோம். பாட்டி ரொம்ப பிசியாகத்தான் இருந்தாள். நீண்ட நொச்சிக் குச்சி ஒன்றை வெட்டி எடுத்து கையில் வைத்துக் கொண்டு அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தது. கிட்டத்தட்ட முப்பது பேர் சுற்றிலும் இருந்தார்கள். எல்லோர் முகத்திலும் அப்படி ஒரு களை. வீட்டில் இல்லாத ஒரு சுகம் அவர்களுக்கு இங்கு இருந்தது. வீட்டிற்குப் போனால் என்ன வேலை செய்வது. அந்தந்த வேலை அப்படியே கிடக்கும். செய்யச் செய்ய முடியாதப்பா என்று அலுத்துக் கொண்டார்கள். சிலருக்கு வீட்டை நினைத்தாலே வெறுப்பாக இருந்தது.

எங்களைக் கண்டதும் பாட்டிக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. எங்களை வரவேற்ற பாட்டி அங்கு இருந்த எல்லோரிடத்திலும் எங்களை அறிமுகப்படுத்தியது. அவர்களுக்கும் மகிழ்ச்சி. "என்ன பேட்டி எடுக்க வந்திருக்காங்கடி" என்று எல்லோரிடமும் பெருமையுடன் சொல்லிக் கொண்டது.


" என்னமோ கேட்கணும்னு வந்தீங்களே கேளுங்க" பாட்டி கால்களை நீட்டி வசதியாக அமர்ந்து கொண்டது. வெற்றிலையை கல்லின்மேல் வைத்துக் கொட்டி வழித்து எடுத்து வாயில் போட்டுக் கொண்டது. சிலர் வந்து எங்களைச் சுற்றிலும் அமர்ந்து கொண்டார்கள். நல்ல மர நிழல். நல்ல காற்று. வெயில் தெரியவில்லை.

நாங்கள் அந்தக் கேள்விகளை முன் வைத்தொம். அடடா என்ன கேள்வி போ. கேள்வினா இப்படியல்லோ இருக்கோணும் என்று சொல்லிவிட்டு ஒரு முறை குரலை செருமிக் கொண்டு பாட்டி தொடர்ந்தது.

"ஒவ்வொரு மனுசனுக்கும் ஜோலி ரொம்ப முக்கியம். அதைவிட ஜாலி முக்கியம். ஜாலி இல்லாத ஜோலி ஒடம்புக்கு ஆகாது. என்ன புரியுதா?"

நாம் தலையை ஆட்டினோம்.

எனக்கு வயது அறுபது [?]. இன்னும் இந்த வேலையை நான் செய்யறேன்னா அதுக்கு என்ன காரணம்? சும்மா இருக்கக் கூடாதுங்கறதுதான். வீட்டுக்குப் போகவே பிடிக்கலைனா பார்த்துக்கவே. ஊர் சனமே இங்கதானே கும்மி அடிக்குது. அதோ அந்த சென்னியப்பன பாரு. எப்பிடி சொகுசா கால் மேல காலப் போட்டு ஆட்டிட்டுப் படுத்து இருக்கிறான்னு. அவ வீட்டுல போய் இப்பிடி ஆட்ட முடியுமா. அவம்பொண்டாட்டி சும்மா இருப்பாளா. வேற எங்காவது வேலைக்குப் போயி இப்படி படுத்துக் கெடக்க முடியுமா. அந்த ஓனரு அடிச்சு முடிக்க மாட்டாரா என்ன. அதோ அந்த பேச்சியாத்தாள பாரு. எப்பிடி ஒய்யாரமா கொண்டைய முடிஞ்சிட்டு இருக்கிறான்னு. இதெல்லாம் எங்கே வேலைக்குப் போனா முடியும். இங்கதாண்டா கண்ணுகளா முடியிது. சரிதானே"

பாட்டி சொல்லுக்குத் தலையை வேகமாய் ஆட்டினோம்.

"நம்ம வீட்டுத் திண்ணைல உக்காந்துட்டு எவளாச்சும் நாயத்துக்கு வருவாளான்னு பார்த்தம்னா ஒருத்தியும் வரமாட்டாளுக. இந்த கெழவிகிட்ட என்னத்தப் பேசறதுன்னுட்டு போய்டுவாளுக. ஆனா... இங்க..." வெற்றிலை எச்சிலை துப்பிவிட்டுத் தொடர்ந்தது.

"...அவ அவளுக ஆளாப் பறக்கறாளுக எதையாச்சும் வாயப் புடுங்க. என்னாலயே பேச்சுக் கொடுக்க முடியல. என் தலைல ஒரு பேன் இருக்காது. எனக்கு மட்டும் இல்ல எங்க அத்தன பேருக்குந்தா. பேன் பொறுக்கறதும் அடுத்தவங்கலப்பத்தி பொறுக்கறதும்னு பொழப்பு நல்லாத்தான் போகுது. எந்த ஊர்ல எவன் எப்படிப் போனான் அப்படிங்கறதெல்லாம் அந்த மாடசாமி 'அப்டேட்ல" வெச்சிருப்பான். எவளப்பத்தியாவது உனக்கு ரிப்போர்ட் வேணும்னா சொல்லு கண்ணு பிச்சுப் போட்டறேன். என்ன சொல்றே நீ" பாட்டி என்னப் பார்த்து கேள்வி கேட்டதும் எனக்கு திக்குனு போச்சு. அது அந்த வம்பெல்லாம். இந்தக் கெழவி சும்மாவே சிண்டு முடிஞ்சு விட்டுறும்.

"எங்களுக்கு ஜாலியா இருக்கணும் அதப் பத்தியே சொல்லுங்க. அதக் கேக்கத்தான் இவங்கெல்லாம் வந்திருக்காங்க"

"அந்த வேலி ஓரத்தில படுத்திருக்கிற பொம்பளைங்களப் பாரு. எதாவது வெசனம் தெரியுதா. வீட்டுக்குப் போனா இல்லாட்டி இன்னொரு பக்கம் கூலி வேலைக்குப் போனா இப்பிடி சும்மா இருக்க முடிமா. பம்பரமாட்டவல்லோ சுத்தோணும். என்னோட சீல வெளுப்பு மங்கிருக்குதானு பாரு. எவ்வளவு பர்பெக்டா சுத்தமா இருக்கேன். இங்கே வந்துட்டா ஒரே ஜாலிதாங்கண்ணுகளா. ஆமா இதெல்லாம் எதுக்கு கேக்குறீங்க. இவ்வளவு டீட்டெய்லா வடிவேலு மாதிரி " பாட்டி கடைசியாக இந்தக் கேள்வி கேட்டது.

அதான் பாட்டி இவங்களுக்கும் வேலை செய்யற தில்லு இல்லையாம். சும்மா இருந்து பொழுதப் போக்கோணும். செலவுக்கு காசும் வேணும். வீட்டில அப்பன் ஆத்தா இப்படி இருந்தா வீட்ட விட்டு துரத்தமாட்டங்க?. இவங்களுக்கும் இங்கே வேலை கெடைக்குமா பாட்டி. அதுக்கு இவங்க என்ன செய்யோணும் சொல்லு பாட்டி" என்றேன் உங்களைக் கை காட்டியபடியே.

உங்களுக்கு இந்த வேலை பிடிக்கும் என்பதை உங்கள் முகத்தில் உள்ள பிரகாசத்தைப் பார்த்தாலே தெரிகிறது. பாட்டி சொல்றபடி கேளுங்க. நீங்களும் கவலையில்லாம பொழுத ஓட்டலாம். நாட்டு நடப்புகள நல்லாத் தெரிஞ்சிக்கலாம். கரும்பு தின்னக் கூலி வேணுமா. என்ன நான் சொல்றது சரிதானே" என்கிறேன். நீங்கள் தலையாட்டுவதிலிருந்து தெரிகிறது உருப்படியா ஒரு வேலைக்கும் போகமாட்டீங்க. வெட்டியா சுத்தறதுக்கு இந்த வேலை எவ்வளவோ பரவால்லைனு மனசில நேனைச்சுக்கிட்டே.

" கலெக்டரு வேல கெடைக்கிறது ஈசிடா. இப்போ இந்த வேலைக்குத்தே டிமாண்டு. அடவான்சா எங்கிட்டே பேர் குடுத்திட்டீனா. உன்ன நாளைக்கு ஆபீசர்கிட்டே சொல்லி வேலைக்கு ஆப்பாயில்மெண்ட் ஆர்டற வாங்கி குடுத்திடறேன். அப்புறம் உன்னோட லெவெலே வேற ஆய்டும். படுத்துக்கிட்டே கெனாக் காங்கலா... ஒரு நாளைக்கு அஞ்சு மீட்டர செறச்சாப் போதும். ஒரு பில்லப் புடுங்க ஒரு மணி நேரம் எடுத்துக்கலாம். ரோட்டு ஓரத்தில இருக்கிற செடிகள பார்த்துக்கிட்டே நின்னாப் போதும் நாளைக்கு வந்து செதுக்கிறலாம். அட போங்கடா... மணி மூனாச்சு. வீட்டுக்குப் போகலாம்...." என்று சொல்லி விட்டு குச்சியை ஊன்றி எழுந்த பாட்டி வீடு கிளம்பத் தயாரானது கண்டு திடுக்கிட்டு நின்றோம்.

"அப்போ இவங்களுக்கு வேலைக்கு என்ன பதில் சொறீங்க பாட்டி"

"வேலைதானே எங்கிட்டே சொல்லிட்டே இல்லே கன்ஃபார்ம்தாண்டா பசங்க. நூறு நாள் வேலைத்திட்டத்தை எவன் கண்டுபிடிச்சானே அந்த மஹராச நல்லா இருக்கோணும். சும்மா எவங்குடுப்பே தினத்திக்கும் நூறு ரூவாய. எலேய் வாங்கடி போவோம் வீட்டுக்கு" என்று லட்சுமிப்பாட்டி வீட்டுக்குப் போக மனசு இல்லாமல் கிளம்பியது.

"சார் உங்களுக்கு வேலை உறுதி சார். நாளை முதல் வாழ்க்கையை அனுபவிங்க. நான் கெளம்பறேன் எழுத்துத் தளத்தில கவிதை போடணும்"
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கவிஞர் ரத்தினமூர்த்தி கவிதைகள்  Empty Re: கவிஞர் ரத்தினமூர்த்தி கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum