தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆன்மீக சிந்தனைகள்

View previous topic View next topic Go down

ஆன்மீக சிந்தனைகள்  Empty ஆன்மீக சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sat Oct 05, 2013 10:25 am

உறக்கத்தை விட முக்கியமானது
* உங்களை ஆறுதலடையச் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. நீங்கள் நிம்மதியாக உறங்குவது முக்கியம் அல்ல. விடியலில் வெளிச்சத்தைப் பார்ப்பது தான் முக்கியம்.


* வழிபடுதல் என்பது ஒரு செயல் அல்ல. அது ஓர் இயல்பான பண்பு. நீங்கள் சுவாசிக்கும் காற்று, அருந்தும் தண்ணீர், நடக்கும் பூமி, காணும் தாவரம், ரசிக்கும் பறவை, உண்ணும் உணவு என்று உங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் ஆத்மார்த்தமாக வழிபடும் உணர்வுடன் அணுகினால், உங்கள் வாழ்வு மிக அழகாக மாறும்.


* இந்த சமூகத்தின் ஆதிக்கம் உங்களிடம் மிக அதிகமாக இருக்கிறது. உங்கள் சுயஇயல்பைப் பயன்படுத்தி நீங்கள் நடை போடுவதில்லை. இந்தச் சமூகத்திலிருந்து ஒதுக்க பட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில் அதன் ஆதிக்கத்தி லிருந்து விடுபடாமல் வாழ்க்கைக்கு எதிரான பல மூடத் தனமான செயல்களை மனிதர்கள் செய்து கொண்டு இருக்கின்றனர். 


* எந்த உணவு உடலுக்குத் தேவைப்படுகிறதோ, அதைத் தான் உண்ணவேண்டும். எதை உண்ண வேண்டும் என உடலைக் கவனித்து உண்ணக் கற்றுக் கொண்டால் தானாகவே நீங்கள் சரியான உணவை உட்கொள்வீர்கள். 


முடிந்ததைச் செய்யுங்கள்

* உங்களைச் சுற்றி உள்ள உன்னதத்தை உணர நீங்கள் தவறிவிட்டால், உங்கள் மூளை ஒரு நரகத்தை உருவாக்கக்கூடும். ஒவ்வொரு நாளும் அது புதிது புதிதாய் நரகங்களை உருவாக்கும்.
* உங்களால் இயலாத ஒன்றைச் செய்யவில்லை எனில் ஒரு பிரச்னையும் இல்லை. உங்களால் முடியக்கூடிய ஒன்றைச் செய்யாமல் விடுவது தான் துயரமான ஒன்று.
* மற்றவரிடம் கொள்ளும் அன்பாக இருக்கட்டும். உங்கள் தோட்டத்தில் மலரும் பூக்களாக இருக்கட்டும். வாழ்வில் நீங்கள் அடையும் வெற்றிகளாக இருக்கட்டும். தகுந்த சூழ்நிலையை உருவாக்கத் தவறி விட்டால் அவை நிகழ்வதில்லை.
* உங்களை கீழ்த்தரமாக நடத்தும் ஒருவரை அதேபோல், நடத்த எந்த விழிப்பு உணர்வும் தேவை இல்லை. ஆனால், அந்தச் சூழ்நிலையிலும் அமைதி காப்பதற்கு ஏராளமான விழிப்பு உணர்வுடன் இருத்தல் அவசியம்.
* உயிர்ப்புடன் வாழ்தல் என்பது அற்பமான விஷயம் அல்ல. அசாதாரணமான ஒரு நிகழ்வு அது. உயிர்ப்புடன் இருத்தல் இந்தப் பூமியில் மட்டுமல்ல. பிரபஞ்சத்திலேயே அபூர்வமான ஒரு செயல்.
* மனம் என்பது அதன் செயல்களில் மட்டுமே உயிர்த்திருக்கிறது. அதற்கென்று தனியாக வேறு இடம் இல்லை. செயல்கள் நின்று போனால் மனம் என்று ஏதும் இல்லாது போய்விடும்.

-சத்குரு ஜக்கிவாசுதேவ்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள்  Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sat Oct 05, 2013 10:26 am

அமைதியே நல்ல பழக்கம்


* செய்யப்போவதையே சொல்லுங்கள், சொன்னபடி செயல்படுங்கள், அன்புடன் செயல்படுங்கள். 
*
புத்தக அறிவு மட்டும் பயன் தராது. ஆழ்ந்த பயன் தரக் கூடிய அறிவைத் தேடுங்கள். அதைக் கொண்டு புத்தியை வளப்படுத்திக் கொள்ளுங்கள்.
*
நமக்குக் கிடைப்பதைப் பிறருக்கும் கொடுக்கப் பழக வேண்டும். பிறருக்குக் கொடுக்கவே பகவான் கொடுத்திருக்கிறார் என்பதை உணர வேண்டும். தியாக உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
*
கடமையைக் கருத்துடன் செய்வது மனிதரின் பொறுப்பு. அதற்குப் பலன் அருள்வது இறைவனின் பொறுப்பு.
*
அனைத்து ஆசைகளையும் இறைவனிடமே அர்ப்பணித்து விடுங்கள், மனதைச் சமநிலையில் வைக்க அமைதியைத் தரும் பழக்கங்களை மேற்கொள்ளுங்கள், யாராவது உங்களைத் திட்டவோ, அடிக்கவோ வரும் போது புன்னகையுடன் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
*
அன்பே கடவுள், அன்புள்ள இடத்தில் கடவுள் இருக்கிறார். மக்களை நேசியுங்கள். அன்பை, சேவை செய்யும் ஆர்வமாக மாற்றிக் கொள்ளுங்கள், சேவையில் இறைவனுக்குச் செய்யும் பூஜையைக் காணுங்கள். 
-
சாய்பாபா 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள்  Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sat Oct 05, 2013 10:27 am

அனுபவமே சிறந்த கல்வி


* ஒற்றுமை என்பது உணர்வு மட்டுமல்ல. அதுவே மனித வாழ்வின் அடிப்படை. அன்பினால் மட்டுமே நம்முள் ஒற்றுமையைப் பலப்படுத்த முடியும்.
*
ஆசைக்கு ஒரு உச்ச வரம்பை வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் மனம் அமைதியுடன் இருக்கும்.
*
இயற்கை அளிக்கும் செல்வங்களை அளவோடு ஏற்று அனுபவியுங்கள். இயற்கையை புறக்கணித்தால் மனித சமுதாயம் அழிவை நோக்கிச் சென்றுவிடும். 
*
உரிமை என்பது கடமையில் அடங்கி இருக்கிறது. கடமை உணர்வோடு கூடிய உழைப்பு தான், உயர்வுக்கு வழிவகுக்கும்.
*
புத்தக அறிவு மட்டும் பயன் தராது. எதையும் அனுபவத்தின் மூலம் சோதித்து உணருங்கள்.
*
மக்கள் சேவையே மகேசன் சேவை. புகழுக்காக சேவை செய்யாதீர்கள். அன்புவழியில் இறைவனுக்காக சேவையாற்றுங்கள்.
- 
சாய்பாபா
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள்  Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sat Oct 05, 2013 10:27 am

செய்ய முடியும் என்று நம்பு!


* கடவுளைக் காண மனிதனுக்குத் தொண்டு செய்யுங்கள். பட்டினியால் வாடும் ஏழைகளை நாராயணர்களாக பாருங்கள்.
*
உங்களை உடல் அளவிலோ, அறிவு அளவிலோ, ஆன்மிக அளவிலோ ஏதாவது ஒரு விஷயம் பலவீனமாக்கினால், அதை விஷமாகக் கருதி உதறித்தள்ளுங்கள்.
*
இறைவன் ஒரு சக்தி மட்டுமல்ல, அவரே உண்மையும் கூட. இதை உணர்ந்து உண்மையுடன் நடந்து கொள்ளுங்கள். 
*
திறக்க முடியாத அனைத்து வாசல்களையும் அன்பு திறக்கிறது. உலகின் அனைத்து ரகசியங்களுக்கும் வாசல் அன்பு தான்.
*
கால்பந்து விளையாடி விட்டு, கீதை படித்தால் மனதில் நன்றாகப் பதியும். ரத்தத்தில் வேகமிருந்தால் தான், பகவான் கிருஷ்ணரின் அறிவையும், ஆற்றலையும் அறிய முடியும்.
*
நம்மிடத்தில் ஒன்றை இழுத்துக் கொள்ளும் சக்தியைப் போல, அதை விலக்கும் சக்தியும் உள்ளது.
*
முடியாது என்ற வார்த்தையை அகராதியை விட்டே உதறித்தள்ளுங்கள். உங்களால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும்.
விவேகானந்தர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள்  Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sat Oct 05, 2013 10:28 am

நல்லதைத் தேர்ந்தெடுங்கள்
* என்னால் எல்லாம் முடியும் என்று அகந்தையோடு இருந்தால் கடவுள் அருள் கிடைப்பதில்லை. "எல்லாம் உன் செயலே' என்று சரணடைந்து விட்டால் கடவுள் நம்மை நோக்கி ஓடோடி வந்து விடுவார்.
*
இயற்கை அளிக்கும் வளத்தை அளவோடு ஏற்று அனுபவியுங்கள். இயற்கையும் இறைவனும் ஒன்றே. இயற்கையை பாழ்படுத்துவது பெரும்பாவம்.
*
தர்மத்தை நீ காப்பாற்றினால் தர்மம் உன்னைக் காக்கும். ஒவ்வொரு மனிதனும் தர்மவழியில் வாழத் தொடங்கினால், உலகமே நற்கதி அடைந்து விடும். 
*
நம்முடைய விழிப்புணர்வே மனசாட்சி. அதைப் பின்பற்றி வாழ்பவன் தெய்வநிலைக்கு உயர்கிறான்.
*
நல்ல எண்ணத்தை மனதில் வளருங்கள். நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். நல்ல செயல்களில் ஈடுபடுங்கள். இதைவிட சிறந்த வழிபாடு ஏதுமில்லை.
சாய்பாபா
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள்  Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sat Oct 05, 2013 10:28 am

தேடி அலையாதீர்கள்


* தர்மநெறியைப் பின்பற்றினால் மனதில் அமைதி நிலைத்திருக்கும். ஆனால், சொல்லாலும், செயலாலும் சத்தியத்தை கடைபிடிப்பவனால் மட்டுமே தர்மநெறியை பின்பற்ற முடியும்.
*
உலகில் எதுவும் நிலையானது அல்ல. கவுரவம், பணம், சொத்து, பதவி எல்லாம் நம்மை விட்டுச் சென்று விடும். அதனால், அவற்றின் மீது அதிக பற்று வைப்பது கூடாது.
*
மனதிலிருந்து அகந்தையை தூக்கி எறியுங்கள். அன்புடன் எல்லா உயிர்களுக்கும் சேவை செய்யுங்கள். நாம் எல்லாரும் சமம் என்பதை உணருங்கள்.
*
மனத்தூய்மை இல்லாமல் செய்யும் பஜனையும், பூஜையும் பலன் தருவதில்லை. கடவுளுக்கு ஆடம்பர பூஜை தேவையில்லை. அவர் முழுமையான அன்பை மட்டுமே நம்மிடம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.
*
கடவுளைத் தேடி எங்கும் அலையத் தேவையில்லை. அவர் நமக்குள்ளே எப்போதும் குடியிருக்கிறார். 
சாய்பாபா
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள்  Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sat Oct 05, 2013 10:31 am

சும்மா இருப்பது சிரமம்!
* கடவுளும், குருவும் உண்மையில் வேறு வேறு அல்ல, புலி வாயில் பிடிபட்டது எப்படி திரும்பாதோ, அதேபோல் குருவின் அருட்பார்வையில் விழுந்தவர்களும் கைவிடப்படமாட்டார்கள்.
*
நீ விரும்புவது அனைத்தையும் பகவான் உனக்குத் தருவார் என்று நம்பினால், உன்னை அவரிடம் முழுமையாக ஒப்படைத்துவிடு.
*
கடவுளை உணர்வதற்கு நாம் செய்ய வேண்டியது சும்மா இருப்பது தான், சும்மா இருப்பதைப் போல சிரமமான செயல் வேறு இல்லை.
*
அமைதியே நமது இயல்பான சுபாவம். எனவே அதைத் தேடவேண்டாம். உபத்திரவப்படுத்தும் எண்ணங்களை ஒழித்தாலே போதும்.
*
நாமே தான் நமது பிரச்னைகளுக்கு மூலகாரணம், எனவே, நாம் யார் என்பதை நன்கு புரிந்து கொண்ட பிறகு, கடவுள் ஆராய்ச்சியில் இறங்குவது நல்ல பயன் தரும்.
*
மனதை மெதுவாக சிறுகச் சிறுக அடக்கி தன் வழிக்குக் கொண்டு வரவேண்டும், இதற்கு கடும் பயிற்சியும் வைராக்கியமும் தேவை.
*
அறிவு, நம்மிடத்திலுள்ள அறியாமையைப் போக்குகிறது, அது புதிதாக எதையும் உருவாக்குவதில்லை.

-
ரமணர் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள்  Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sat Oct 05, 2013 10:32 am

வாழ்வு ஒரு திட்டமிட்ட கணக்கு
* முற்பிறவியில் புண்ணியவினைகளைச் செய்தவன் வாழ்வில் இன்பத்தை நுகர்ந்து மகிழ்கிறான். பாவவினைகளை செய்தவன் துன்பத்தில் உழல்கிறான்.
*
விதிப்படி தான் வாழ்க்கை நடக்கிறது. வாழ்க்கை என்பது திட்டமிட்ட கணக்கு போலத்தான். பாலன்ஸ் ஷீட் என்று சொல்வார்களே அதைப் போன்றது. இதை மாற்றினால் கணக்கு சரிப்பட்டுவராது. ஆண்டவனும் தான் ஏற்படுத்திய நியதியை யாருக்காகவும், எப்போதும் மாற்ற முன் வருவதில்லை.
*
விதிப்படி வகுத்திருக்கும் வாழ்க்கையில், நன்மைகளைப் பெற்றால் ஆர்ப்பரிக்காமல் அமைதியோடு இருப்பதற்காகவும், தீமை வந்தால் ஒரேயடியாகத் துவண்டு போய் வருந்தாமலும், இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் காணும் மனநிலையை ஆன்மிகம் நமக்கு கற்றுத் தருகிறது.
*
பக்தியால் பக்குவம் பெற்றவர்கள் மனதில் சுகமோ, கவலையோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதோடு வரவிருக்கும் அடுத்தடுத்த பிறவிகளுக்கு வினைச்சுமைகளை சேர்த்துக்கொள்ளாமல் காப்பாற்றுவதற்கும் பக்தி துணையாக அமைகிறது. உண்மையான பக்தி தீமைகளில் இருந்து மனிதனைக் காப்பாற்றுகிறது. 
-
ரமணர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள்  Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sat Oct 05, 2013 10:33 am

புலம்புவதால் பயனில்லை
* உள்ளபடி உள்ள இடத்தில் உள்ளவாறு உணர்ந்து அடங்கி இருப்பதே உண்மையான சித்தியாகும். மற்ற சித்திநிலைகள் எல்லாம் வெறும் கனவேயாகும். 
*
ஒருவன் எவ்வளவு பாவியாக இருந்தாலும், ""நான் பாவியாக இருக்கிறேனே! எப்படி கடைத்தேறப் போகிறேன்!'' என்று அழுது கொண்டிருப்பதனால் பயன் சிறிதும் இல்லை.
*
வெறும் வருத்தத்தினாலும், புலம்பலினாலும் நேரத்தை வீணாக்காமல் ஆக்கபூர்வமாகச் சிந்தித்து ஊக்கத்தோடு நம் கடமைகளைச் செய்தால் நிச்சயம் உருப்படலாம்.
*
மனங்களில் நல்லமனம் என்றும், கெட்டமனம் என்றும் இருவேறு மனங்கள் இல்லை . மனம் என்பது ஒன்று தான் இருக்கிறது.
*
நாம் அனுபவிக்கும் இன்பத்தை அறியாமையால் புறவுலகத்தில் இருந்து பெறுவதாக எண்ணுகிறோம். ஆனால், உண்மையில் இன்பம் நமக்குள்ளே தான் இருக்கிறது.
*
கடவுளின் பேரால் எவ்வளவு பாரத்தைக் கொடுத்தாலும் அவ்வளவையும் அவரே ஏற்றுக்கொள்வார். ஆனால், நாம் நம் மனதில் சுமைகளை சுமப்பதால் துன்பத்திற்கு ஆளாகித் தவிக்கிறோம். 
*
உழைப்பும் சமூகசேவையும் உலகத்திற்கு நன்மை செய்வனவாகும். உழைப்பின் மீதும், நம்மால் முடிந்த சேவைகளையும், பிறருக்கு உதவி செய்வதையும் உங்கள் அடிப்படைக் கடமையாகக் கொள்ளுங்கள். 
-
ரமணர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள்  Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sat Oct 05, 2013 10:33 am

மவுனமே பூரண ஞானம்
ராமரும், லட்சுமணரும் சீதையும் தாண்டகாரண்யத்தில் தங்கியிருந்த போது, ஒரு ஆஸ்ரமத்திலிருந்து மற்றொரு ஆஸ்ரமத்திற்கு சென்றனர். அப்படி கிளம்பும்போது, ராமனின் வயதில் ஒத்த சில இளைஞர்களும் அவர்களுடன் கிளம்பிவிட்டார்கள். இப்படி ராமர் தொடர்ந்து சொல்லும் போது கூடவே பல ரிஷிகுமாரர்களும் தோற்றத்தில் மரவுரி தரித்து ராமலட்சுமணர்களைப் போலவே தோற்றம் அளித்தனர். தொடர்ந்து காட்டுவழியில் செல்லும் போது சில பெண்கள் ராமசீதா வருகையை அறிந்தனர். ராமலட்சுமணர் மற்றும் சீதையைப் பார்க்கும் ஆவலில் ஓடிவந்தவர்களுக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. சீதையை மட்டுமே அப்பெண்களால் அடையாளம் காணமுடிந்தது. பெண்கள் சீதையை சூழ்ந்து கொண்டு நின்று ஒவ்வொரு இளைஞராக ""இவர் ராமரா அல்லது இவர் ராமரா''? என்று கேள்வி கேட்டனர். ஒவ்வொரு இளைஞரையும் கண்ட சீதை "இவர் ராமர் இல்லை, இவர் ராமர் இல்லை' என்று பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். கடைசியாக லட்சுமணரை காட்டி, இவர் ராமரா என்று அப்பெண்கள் கேட்டனர். சீதை அதற்கும் இல்லை என்று மறுத்தாள். கடைசியாக ராமரையே சுட்டிக்காட்டி கேட்டபோது மவுனம் சாதித்தாள் சீதை. மவுனம் சம்மதம் அல்லவா?
பக்தனுக்கும் இது தான். கடவுளைக் காணும் வரை அவரைப் பற்றிய கேள்விகள் எழும். பரம்பொருளை தரிசித்தபின் பேசத் தோன்றாமல் மவுனம் வந்துவிடும். மவுனம் என்பது முழுமை. அதுவே பூரண ஞானம் ஆகும். 
ரமணர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள்  Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sat Oct 05, 2013 10:34 am

சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
* உங்களின் வாழ்வின் அனுபவமே, நீங்கள் வாழ்க்கையில் ஆழமாக ஈடுபடுவதில் தான் இருக்கிறது. ஈடுபாட்டுடன் நீங்கள் செய்பவை எல்லாம் எப்போதும் ஆனந்தமாக உள்ளதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? ஆழமான ஈடுபாடு இருந்தாலொழிய வாழ்க்கையின் அழகை உங்களால் அறிந்து கொள்ள முடியாது.
*
யார் வேண்டுமானாலும் கடவுளை நேசிக்கலாம். ஏனெனில் கடவுள் யாரிடமும் எதுவும் கேட்பதில்லை. ஆனால், இந்தக்கணம் உங்கள் அருகில் இருப்பவரை நீங்கள் நேசிப்பதற்கு நீங்கள் உங்கள் வாழ்க்கையையே விலையாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதுதான் சவால். இதைச் செய்வதற்கு மிகவும் தைரியம் தேவைப்படுகிறது.
*
மனிதராகப் பிறந்துவிட்டால் நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் வாழ்கிறீர்களோ, அதிலேயே சிக்கிவிடக்கூடாது. உங்களுக்கான சூழ்நிலைகளை நீங்கள் தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சூழ்நிலைகளின் தாக்கத்தில் வாழ்வது விலங்கின் தன்மை, மனிதரின் தன்மை, சூழ்நிலைகளை உருவாக்குவது!
*
உங்கள் வாழ்க்கையில் அழகான சூழ்நிலைகள் வருகின்றன. கொடுமையான சூழ்நிலைகள் வருகின்றன. உங்களுக்கு ஒரே வாய்ப்பு தான். அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி நீங்கள் மேலும் சிறந்தவராக, வலிமையானவராக மாறலாம் அல்லது உடைந்து நொறுங்கிப் போகலாம்!
சத்குரு ஜக்கிவாசுதேவ்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள்  Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sat Oct 05, 2013 10:35 am

பணத்தை தலையில் சுமக்காதீர்!
* உங்களைச் சுற்றியுள்ள உன்னதத்தை உணர நீங்கள் தவறி விட்டால், உங்கள் மூளை ஒரு நரகத்தை உருவாக்கக் கூடும். ஒவ்வொரு நாளும் அது புதிது புதிதாய் நரகங்களை உருவாக்கும்.
*
சுவாசம் என்பது வெறும் காற்றை உள்வாங்கி வெளிவிடும் அர்த்தமற்ற செயல் அல்ல. ஒவ்வொரு சுவாசத்திலும் இருக்கிற படைப்பின் பரிமாணங்களையும் படைத்தவனையும் புரிந்து கொள்ளத் தவறி விட்டு, மனதில் தேவையற்ற விஷயங்களுக்கு முக்கியமான இடம் கொடுத்து நேரத்தை வீணடிக்கிறீர்கள்.
*
உங்களால் முடியாத ஒன்றைச் செய்யவில்லை என்றால் ஒரு பிரச்னையும் இல்லை. உங்களால் முடியக்கூடிய ஒன்றைச் செய்யாமல் விடுவதுதான் துயரமான ஒன்று.
*
அதிக செல்வம் துன்பத்தை தராது. சட்டைப்பையில் நிறைய பணம் இருப்பது ஒரு விதத்தில் நல்லது. ஆனால், அந்தப்பணம் உங்களுடைய சட்டைப்பையில் தங்காமல் தலைக்கு மேல் ஏறும் போதுதான் துன்பம் வரும். பணம் அப்படி தலைக்கு மேல் ஏறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அதனுடைய இடம் அது அல்ல.
-
சத்குரு ஜக்கிவாசுதேவ்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள்  Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sat Oct 05, 2013 10:37 am

உடலும் மனமும் இணையட்டும்!
 
* ஆனந்தமாக இருப்பது தான் உங்கள் அடிப்படை இயல்பு என்பதை மறவாதீர்கள். நீங்கள் எந்தச் செயலை தேர்ந்தெடுத்தாலும், அதைச் செயல் படுத்தும் போது தீவிரமாயிருங்கள். முழு ஈடுபாடு கொண்டு செயலாற்றுங்கள். 


* உங்களுக்குள் இருக்கும் ஆக்க சக்தியை தட்டி எழுப்புங்கள். முழுஈடுபாடு கொண்டு செயலாற்றும் போது மட்டுமே நமக்குள் இருக்கும் ஆக்கசக்தி வெளிப்படத் தொடங்கும். 


* கரையை விட்டு விலகத் தைரியமில்லாமல் கரையோரமாகவே கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்தால் இலக்கை அடைய முடியாது. அதனால் திருப்பங்கள் வேண்டுமானால் வாழ்க்கையில் புதிய முயற்சிகளை எடுத்துத் தான் ஆக வேண்டும்.


* இளைஞர்களுக்கான தகுதி வலுவான உடல் அமைப்பு மட்டும் என்று தவறாக எண்ணுகிறோம். திடமான மனம் கொண்டவனே உண்மையில் இளமை உடையவன். எதிர்பாராததையும் எதிர்கொள்ளும் துணிச்சல் நமக்கு வேண்டும். 


* பொறாமையும், அச்சமும் நம்முள் உண்டாகும் போது அடுத்தவரை எதிரியாக நினைக்கத் தொடங்குகிறோம். பொறாமை இருக்கும் இடத்திலோ, அச்சம் இருக்கும் இடத்திலோ திறமை மழுங்கிப்போகும். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் (முயற்சியும்) உங்களுக்காகவே என்று எண்ணுங்கள்.


* உங்கள் உடல், மனம் இரண்டின் ஆற்றலையும் முழுமையாகப் பயன் படுத்துவதில் தான் உண்மையான வெற்றி அடங்கி இருக்கிறது. அப்போது நம் திறமை முழுவதுமாக வெளிப்படும். வெற்றி எளிதில் நம் வசமாகும்.

 -சத்குரு ஜக்கிவாசுதேவ்


நன்றி தினமலர் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள்  Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by முரளிராஜா Sat Nov 09, 2013 11:23 am

சிறப்பான சிந்தனைகள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள்  Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by sawmya Sat Nov 09, 2013 12:17 pm

 நல்ல எண்ணத்தை மனதில் வளருங்கள். நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். நல்ல செயல்களில் ஈடுபடுங்கள். இதைவிட சிறந்த வழிபாடு ஏதுமில்லை.
கைதட்டல் சூப்பர் எற்றுக்கொள்கிறேன் ஆணவம், கன்மம், மாயை அழித்து...ஆன்மீக சிந்தனை வளர்ப்போம்,
 அன்பு செய்வோம், வளமாய் வாழ்வோம்.
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள்  Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum