தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உடற்பயிற்சியில் சிறந்தது ஓடுவதா அல்லது சைக்கிள் ஓட்டுவதா?

View previous topic View next topic Go down

உடற்பயிற்சியில் சிறந்தது ஓடுவதா அல்லது சைக்கிள் ஓட்டுவதா? Empty உடற்பயிற்சியில் சிறந்தது ஓடுவதா அல்லது சைக்கிள் ஓட்டுவதா?

Post by முழுமுதலோன் Mon Dec 16, 2013 12:13 pm

உடற்பயிற்சியில் சிறந்தது ஓடுவதா அல்லது சைக்கிள் ஓட்டுவதா?

உடற்பயிற்சிக்கு மிகவும் ஏற்ற செயல்களாக சைக்கிளிங் (சைக்கிள் ஓட்டுதல்) மற்றும் ரன்னிங் (காலில் ஓடுதல்) ஆகிய இரண்டும் உள்ளன. இவை இரண்டுமே உடலுக்கு ஆரோக்கியமானவை என்றாலும், இரண்டு உடற்பயிற்சிகளுமே உடலுக்கும், நல்வாழ்விற்கும் தனித்தனியான பலன்களை தருகின்றன. ஓடுவதன் மூலம் சைக்கிள் ஓட்டுவதை விட அதிகப்படியான கலோரிகளை எரித்திட முடியும். ஆனால், ஓடுவதன் மூலமாக உங்கள் உடல் எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு கிடைக்கும் அதிகபட்ச அழுத்தம் காரணமாக ஏகப்பட்ட வலியும், தசைபிடிப்பும் வர வாய்ப்புகளும் உண்டு. நீங்கள் தொடர்ச்சியாக நடக்கும் போது உடலில் நிறைய காயங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.

நடைமுறை அடிப்படையில் திறன்களை மதிப்பிடும் போது, சைக்கிள் ஓட்டுவதற்கே அதன் ஆரோக்கிய விளைவுகள் மற்றும் நடைமுறை பலன்கள் அதிகமாக உள்ளன. நீங்கள் சைக்களில் உங்கள் அலுவலகத்திற்கு செல்லும் போது, உடலிலுள்ள கலோரிகள் அதிகளவில் எரிக்கப்படுவதுடன், உங்களுக்கு குறைந்த அளவே சோர்வை ஏற்படுத்தும் ஒரு போக்குவரத்து சாதனமும் கிடைத்து விடும். ஆனால், வேலைக்கு ஓடிச் செல்லுவதை எண்ணிப் பார்க்கும் போதே நம்மவர்கள் பலரும் நாம் போட்டிருக்கும் ஃபார்மல் சட்டையைப் பாதுகாக்க கூட அது உதவாத காரியம் என்று சொல்ல முடியும்! நீங்கள் ஓட முடிவெடுத்தால் அதற்காக நிறைய நேரம் செலவழிக்க வேண்டும். ஆனால், சைக்கிள் ஓட்ட நினைத்தால் காய்கறி கடைக்கு செல்ல, பில்களை கட்டுவதற்கு என பல வழிகளில் உங்கள் தினசரி செயல்பாடுகளுடன் அதனை இணைத்து விட முடியும்.

செலவினங்களை கணக்கில் கொள்ளும் போது, செலவே இல்லாததாகவும், பராமரிப்பு தேவையற்றதாகவும் இருக்கும் ஓட்டம் முதலிடத்தை எளிதில் பிடிக்கிறது. இதில் சைக்கிள் பின்தங்கி இருந்தாலும், அதனை பராமரிக்கும் செலவு மிகவும் குறைவாக இருப்பதும், ஒருமுறை மட்டுமே மூலதனம் செலவிட்டு இதனை வாங்கி, உங்களுடைய சொந்த போக்குவரத்து சாதனமாகவும், உடற்பயிற்சி சாதனமாகவும் பயன்படுத்தலாம் என்பது அதன் சிறப்பம்சமாக உள்ளது.

இங்கே சைக்கிள் ஓட்டுதல் மற்றும் ஓடுதல் ஆகியவற்றிற்கு இடையிலான சில அடிப்படையான வேறுபாடுகளை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி என்ற அளவீட்டை கையிலெடுக்கும் போது, ஓடுவதை விட சைக்கிள் ஓட்டுவது அதிக மகிழ்ச்சியைத் தரும் உடற்பயிற்சியாக உள்ளது. தொலைவாக செல்லும் வேளைகளில் ஓடுவதை விட, சைக்கிள் ஓட்டுவது குறைந்த வலி தரும் விஷயம் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மை. மனதுக்கு அமைதி தரும் பாதையில் ஓடிக் கொண்டே இரசிப்பதை விட, சைக்கிள் ஓட்டிக் கொண்டே இரசிப்பது நடைமுறையில் சிறந்த அனுபவமாகும்.

திறன்

குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிப்பதில் திறன் மிக்க உடற்பயிற்சியாக இருப்பது ஓடுவது தான். ஒரே கால அளவில் சைக்கிள் ஓட்டுவதை விட, ஓடுவதன் மூலம் 15-20% அதிக கலோரிகளை எரித்திட முடியும். உங்களுக்கு குறைவான நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்க வேண்டிய அவசியம் இருந்தால், ஓடுங்கள், ஓடுங்கள்...

பயணம் செய்தல்

இந்த ஒரு விஷயம் சைக்கிள் ஓட்டுவதை மிகவும் நிலைநிறுத்தும் காரணமாக உள்ளது. இரண்டுமே உடற்பயிற்சி செயல்கள் என்றாலும் கூட, நீங்கள் சைக்கிளை பயன்படுத்துவதால் ஓடும் நேரத்தை விட குறைந்த நேரத்தை எடுத்துக் கொண்டு உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், இரண்டு மடங்கு வேகத்திலும் தொடர்ந்து செல்ல முடியும். ஃபார்மல் உடைகளை அணிந்து கொண்டு அலுவலகத்திற்கு ஓடிச் செல்வது என்பது நடவாத காரியம் தான்.

காயங்கள்

உங்கள் உடல் மற்றும் எலும்புகளில் ஏற்படும் நீண்ட கால விளைவுகளைக் கருத்தில் கொள்ளும் போது ஓடுவது சற்றே உங்களை பின்னோக்கி இழுக்கிறது. குறிப்பாக உங்களுடைய மூட்டுகள் அதிகளவு வலியையும், ஓடுவதால் ஏற்படும் உராய்வையும் எதிர்கொள்கின்றன. சைக்கிள் ஓட்டும் போது அது உங்கள் மூட்டுகள் மற்றும் உடல் பகுதிகளை இதமாகவே வைத்திருக்கும் வகையில் பயன்படுவதால், காயங்கள் ஏற்படுவது மிகவும் குறைகிறது.

உடலை வளர்த்தல்

உடலின் கீழ் பகுதிகள்-குறிப்பாக தொடை மற்றும் கால்களின் வளர்ச்சிக்கு சைக்கிள் ஓட்டுவது மிகவும் சிறந்த பயிற்சியாக உள்ளது. சைக்கிளிங் மூலம் உடலின் கீழ் பகுதிகளை வலுவானதாக உருவாக்க முடியும். ஓட்டம் என்று வரும் போது முதலில் உங்களுடைய உடல் மற்றும் தசைகளை நீட்டவும், அதைக் கொண்டு உடலை உருவாக்கவும் முடியும். இதன் மூலம் உடலை வலுவாக்க முடியும்.

கட்டுமான வசதிகள்

இப்பொழுது இருக்கும் வெளிப்புற கட்டுமான வசதிகளைப் பார்க்கும் போது, சரளை மண் சரிவுகளிலும் அல்லது புல் படர்ந்த மலைகளிலும் ஓடுவது சிறந்த அனுபவமாக இருக்கும். சைக்கிள் ஓட்டுவதற்கோ நிலையான, சமதளமான இடம் இருந்தால் தான் நிலை தடுமாறாமல் வண்டி ஓட்ட முடியும். நகரங்களிலும் கூட குறைந்த வாகனப் போக்குவரத்து உள்ள சாலைகளில் மட்டுமே பாதுகாப்பாகவும் மற்றும் சிறப்பாகவும் உங்களால் சைக்கிள் ஓட்ட முடியும்.

செலவும்... பராமரிப்பும்...

இரண்டு விஷயங்களுமே மிகவும் செலவு குறைந்த நடவடிக்கைகளாக இருந்தாலும், ஓடுவது தான் சைக்கிள் ஓட்டுவதை செலவிலும், பராமரிப்பிலும் சிறந்த விஷயமாக உள்ளது. ஓடுவதற்கு ஒரு ஜோடி காலணிகள் இருந்தால் போதும், 6 மாதங்களுக்கு வேறு செலவு இருக்காது. சைக்கிள் ஓட்டுவதிலோ நிறைய மூலதனமும், தொடர்ந்து பராமரிப்பதில் சற்றே செலவும் தேவை என்பதை மறுக்க முடியாது.

https://www.facebook.com/arogiyam
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உடற்பயிற்சியில் சிறந்தது ஓடுவதா அல்லது சைக்கிள் ஓட்டுவதா? Empty Re: உடற்பயிற்சியில் சிறந்தது ஓடுவதா அல்லது சைக்கிள் ஓட்டுவதா?

Post by kanmani singh Mon Dec 16, 2013 1:47 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் 
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

உடற்பயிற்சியில் சிறந்தது ஓடுவதா அல்லது சைக்கிள் ஓட்டுவதா? Empty Re: உடற்பயிற்சியில் சிறந்தது ஓடுவதா அல்லது சைக்கிள் ஓட்டுவதா?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Dec 16, 2013 6:42 pm

நல்ல தகவல் நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உடற்பயிற்சியில் சிறந்தது ஓடுவதா அல்லது சைக்கிள் ஓட்டுவதா? Empty Re: உடற்பயிற்சியில் சிறந்தது ஓடுவதா அல்லது சைக்கிள் ஓட்டுவதா?

Post by Muthumohamed Mon Dec 16, 2013 10:10 pm

எனக்கு தேவையான பதிவு பகிர்வுக்கு நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

உடற்பயிற்சியில் சிறந்தது ஓடுவதா அல்லது சைக்கிள் ஓட்டுவதா? Empty Re: உடற்பயிற்சியில் சிறந்தது ஓடுவதா அல்லது சைக்கிள் ஓட்டுவதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum