தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இதய ரத்த நாளங்களில் அடைப்பா? - குறைந்த செலவில் கண்டறிய புதிய மருத்துவ சாதனம்

View previous topic View next topic Go down

இதய ரத்த நாளங்களில் அடைப்பா? - குறைந்த செலவில் கண்டறிய புதிய மருத்துவ சாதனம் Empty இதய ரத்த நாளங்களில் அடைப்பா? - குறைந்த செலவில் கண்டறிய புதிய மருத்துவ சாதனம்

Post by முழுமுதலோன் Sun Nov 03, 2013 10:56 am

இதய ரத்த நாளங்களில் அடைப்பா? - குறைந்த செலவில் கண்டறிய புதிய மருத்துவ சாதனம்


சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தின் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாக சுகாதார தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையம் திகழ்கிறது. குறைந்த செலவில் அதிநவீன மருத்துவ சாதனங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்த மையம், “ஆர்ட்சென்ஸ்” என்ற பெயரில் இருதய ரத்த நாளங்களின் அடைப்புத்தன்மையை குறைந்த செலவில் கண்டறியக் கூடிய சாதனத்தை உருவாக்கியுள்ளது. தற்போதைய நடைமுறையில் இத்தகைய பரிசோதனைக்கு ரூ.10 ஆயிரம் வரை கட்டணம் ஆகும். ஆனால், இந்த புதிய சாதனத்தின் மூலம் ஆயிரம் ரூபாய்க்குள் பரிசோதனையை முடித்துவிடலாம்.

சில நிமிடங்கள் போதும்

ஐ.ஐ.டி. வடிவமைத்துள்ள இந்த புதிய கருவியில் சில நிமிடங்களில் சோதனை முடிந்துவிடும். இதுகுறித்து ஐ.ஐ.டி. சுகாதார தொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஆய்வு மையத்தின் தலைவர் மோகனசங்கர், சிஸ்டம்ஸ் ஆர்க்கிடெக்ட் ஜெயராஜ் ஜோசப் ஆகியோர் கூறியதாவது:

‘‘குறைந்த செலவில் குறுகிய நேரத்தில் இருதய ரத்த நாளங்களின் அடைப்புத்தன்மையை கண்டறிய உதவும் இந்த சாதனத்தை பயன்படுத்துவது மிகவும் எளிது. புதிய சாதனத்தின் விலை ரூ.1 லட்சத்துக்குள்தான் வரும். இருதயத்தின் சீரான செயல்பாட்டுக்கு ரத்த நாளங்களின் தன்மை மிகவும் முக்கியமானது. புதிய கருவியை பயன்படுத்தி நடத்தப்பட்ட சோதனை வெற்றிகரமாக வந்துள்ளது. அடுத்த கட்டமாக இந்த கருவியை கையடக்கக் கருவியாக வடிவமைக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.

டாக்டர் தணிகாசலம் கூறும்போது, “இருதய ரத்த நாளங்களில் லட்சக்கணக்கான எண்டோதீலியம் செல்கள் உள்ளன. வயது ஆக ஆக இந்த செல்களின் எண்ணிக்கை குறைந்து ரத்த நாளங்கள் பாதிக்கப்படும். அதேபோல் மன அழுத்தம் ஏற்பட்டாலும் இந்த நாளங்கள் பாதிப்புக்கு உள்ளாகும். ஐ.ஐ.டி. உருவாக்கியுள்ள புதிய சாதனத்தை பயன்படுத்தி மிக எளிதாக அடைப்புத்தன்மை அளவை கண்டறியலாம்” என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறை ஆலோசகர் டி.எஸ்.ராவ் கூறும்போது, “தொழில்நுட்ப நிபுணர்களும் மருத்துவர்களும் இணைந்து ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள வசதியாக தன்னாட்சி அந்தஸ்து பெற்ற நிறுவனங்களை உருவாக்க திட்டமிட்டு வருகிறோம்” என்றார். டாக்டர் எஸ்.சுரேஷ், டாக்டர் ஆர்.ரவிக்குமார் ஆகியோர் புதிய சாதனத்தின் வசதிகளை எடுத்துரைத்தனர்.

ஐ.ஐ.டி. இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறுகையில், “இன்றைய சூழலில் மருத்துவம்- தொழில்நுட்பம் ஒருங்கிணைந்த படிப்புகளை வழங்கக் கூடிய கல்வி நிறுவனங்கள் அவசியம். ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இதுபோன்ற ஒருங்கிணைந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவும் இதில் கவனம் செலுத்த வேண்டும். சென்னை ஐ.ஐ.டி.யில் மருத்துவம், கட்டுமானம், நீர், மரபுசாரா எரிசக்தி ஆகியவற்றுக்கும் தொழில்நுட்பத்துக்கும் இடையேயான ஆராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன” என்றார்

என்னங்கஇது -சாதாரண நெஞ்சு பக்கத்தில வலிக்கெல்லாம் முன்பு இ சி ஜி எடுத்துபார்பாங்க .இப்ப சும்மா கேஸ் பிரச்சனைக்கெல்லாம் டிஎம் டி -ட்ரெட்மில்டெஸ்ட் , ஆஞ்சியோ கிராம் , 64 slice அஞ்சியோ கிராம் ,அஞ்சியோ பிளாஸ்டி,பை பாஸ் சர்ஜரின்னு தொடருது கதை.
உங்களுக்கு உபயோகமா தொண்ணூறு % அடைப்பே இருந்தாலும் கரைக்கிற விஷயம் சொல்லவா ?

1 . வெண்தாமரை பூவை வாங்கி -நிழலில் காய வைத்து -காலை வெறும் வயிற்றில் ஐந்துகிராம் தொடர்ந்து இரண்டு மாதம் சாப்பிட்டாலே உறுதியாக எவ்வளவு மோசமானஅடைப்பு இருந்தாலும் கரைந்து விடும்.நான் ஒன்னும் சும்மா இத சொல்லல,குறைந்தது நூற்றைம்பது பேருக்காவது கொடுத்து சாப்பிட்டு பலன்அடைந்தவர்களின் சிபாரிசோட உறுதியா சொல்றேன்.

2 .இருபதுசின்ன வெங்காயத்தை சாறு எடுத்து ( 3 மிலி ),சம அளவு தேன் கலந்து -காலைவெறும் வயிற்றில் மூன்று மாதம் சாப்பிட உறுதியா அடைப்பு நீங்கிடும்

3 . இஞ்சியை காலையில் சிறிது உணவில் சேர்க்க வேண்டும்.

4 .செம்பருத்தி பூ,மருதம்பட்டை ,சுக்கு கசாயம் சாப்பிட நல்லது .

ஆயுர்வேத மருந்தில் -அர்ஜுனாரிச்டம்,பிரபாகர வடி,ஹ்ருடயார்ணவ ரச போன்றவையும் மிக நல்லது. 

மேலும் 

1. தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

2. எண்ணெய், வெண்ணெய், நெய், கிரீம், மிருகக் கொழுப்பு அதிகம் உள்ள ஆட்டைறைச்சி, மாட்டிறைச்சி, ஈரல் முதலான உறுப்பு இறைச்சிகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

3. உங்கள் உணவில் பூண்டிற்கு முதல் இடம் கொடுங்கள்.

4. பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்கிசிடன்ட் அதிகமுள்ள காரட், நெல்லி ,ப்ரோக்கோலி, மக்காச் சோளம் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

5. பொதுவாகவே குறைப்பது நல்லது 

6. நேரத்திற்குச் சாப்பிடுங்கள்.

7. ஒரு நாளைக்கு 21/2 முதல் 3 லிட்டர் நீர் அருந்துங்கள். 

8. தேவையில்லாமல் டீ,காபி குடிக்காதீர்கள் 

9. தினமும் உடற்பயிற்சி (குறைந்தது 30 நிமிட நடைப்பயிற்சி) அவசியம்.

10. வீட்டு வேலைகளை நாமே செய்தல், நடந்தல் நல்லது -நடப்பதெல்லாம் நன்மைக்கே 

11. எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

12. புகைப் பிடிப்பதை (நீங்களும் உங்கள் அருகில் இருப்பவரும்) தடை செய்யுங்கள்.

13. மதுபானங்களா! வேண்டவே வேண்டாம்.

14. நேரத்திற்கு தூங்குங்கள்.

15. இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

16. இரத்தத்தில் கெட்ட கொழுப்புக்களை (பேட்-கொலஸ்டிரால் – Bad Cholesterol) கட்டுப்பாடட்டில் வைக்க தேவையான உணவுப் பழக்கங்கள், மருந்துகள், உடற்பயிற்சிகளை தவறாமல் பின்பற்றுங்கள்.

17. வேலை நேரத்தில் சரியாக் கணக்கிட்டுச் செய்து சரியான நேரத்தில் தூங்கி டென்ஸன் ஆகாமல் இருங்கள்.

18. மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகா, தியானம் ஆகியவற்றைச் செய்வது நல்லது.

19. சிரித்துப் பழகி இசை கேட்டு மகிழ்ந்து சந்தோஷமாக இருப்பதை விட இதயத்திற்கு நல்ல மருந்து கிடையாது.

20.சுறுசுறுப்போடு இருங்கள் 

21. சர்க்கரை நோய் பல நோய்களுக்கு அடிப்படை. உங்களுக்கு சர்க்கரை இருந்தால் நன்கு கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

22. இரத்தத்தில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் சோள எண்ணெய், ஆலிš எண்ணெய் ஆகியவற்றையும் இதயத்திற்கு இதமான ஓமேகா கொழுப்பு அடங்கிய ஆழ்கடல் மீன்கள், பாதம் பருப்பு, பிஸ்தா பருப்பு ஆகியவற்றையும் தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்.

23. நாள்பட்ட வியாதிகளான சிறுநீரக நோய், சர்க்கரை நோய், உயர்இரத்த அழுத்தம் ஆகியவை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை தவறாமல்பின்பற்றுவது அவசியம். தொடர் மருத்துவக் கண்காணிப்பு மூலம் நோயைக்கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம்.

24. பிசியானவாழ்க்கையிலும் குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் நேரம்ஒதுக்குங்கள். இடையிடையே சுற்றுலா என்று உங்களை அவ்வப்போது ரீ-சார்ஜ்செய்து கொள்ளுங்கள்.

25. நல்ல டாக்டரின் ஆலோசனையை நாடுங்கள். போலி மருத்துவர்களை அணுகாதீர்கள் ..

https://www.facebook.com/arogiyamஇதய ரத்த நாளங்களில் அடைப்பா? - குறைந்த செலவில் கண்டறிய புதிய மருத்துவ சாதனம் 1384150_214444175400117_2084017152_n
இதய ரத்த நாளங்களில் அடைப்பா? - குறைந்த செலவில் கண்டறிய புதிய மருத்துவ சாதனம் 1386014_214446078733260_1456941579_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இதய ரத்த நாளங்களில் அடைப்பா? - குறைந்த செலவில் கண்டறிய புதிய மருத்துவ சாதனம் Empty Re: இதய ரத்த நாளங்களில் அடைப்பா? - குறைந்த செலவில் கண்டறிய புதிய மருத்துவ சாதனம்

Post by msv6000 Wed Nov 06, 2013 1:39 pm

உண்மைதான். வெண் தாமரை பொடி 2 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒரு வருடத்திற்கு இதய சம்பந்தமான எந்த பிரச்சினையும் வராது.  இது அனுபவத்தில் கண்டது.  நிறைய பேர் சாப்பிட்டு நலமுடன் உள்ளனர்.
msv6000
msv6000
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 1

Back to top Go down

இதய ரத்த நாளங்களில் அடைப்பா? - குறைந்த செலவில் கண்டறிய புதிய மருத்துவ சாதனம் Empty Re: இதய ரத்த நாளங்களில் அடைப்பா? - குறைந்த செலவில் கண்டறிய புதிய மருத்துவ சாதனம்

Post by kanmani singh Wed Nov 06, 2013 2:01 pm

மிகவும் பயனுள்ள பதிவு! நன்றி..

கண்மணி சிங்

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

இதய ரத்த நாளங்களில் அடைப்பா? - குறைந்த செலவில் கண்டறிய புதிய மருத்துவ சாதனம் Empty Re: இதய ரத்த நாளங்களில் அடைப்பா? - குறைந்த செலவில் கண்டறிய புதிய மருத்துவ சாதனம்

Post by sawmya Wed Nov 06, 2013 2:23 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி! அண்ணா...புன்முறுவல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

இதய ரத்த நாளங்களில் அடைப்பா? - குறைந்த செலவில் கண்டறிய புதிய மருத்துவ சாதனம் Empty Re: இதய ரத்த நாளங்களில் அடைப்பா? - குறைந்த செலவில் கண்டறிய புதிய மருத்துவ சாதனம்

Post by mohaideen Wed Nov 06, 2013 6:23 pm

மிகவும் பயனுள்ள தகவல்கள்

நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இதய ரத்த நாளங்களில் அடைப்பா? - குறைந்த செலவில் கண்டறிய புதிய மருத்துவ சாதனம் Empty Re: இதய ரத்த நாளங்களில் அடைப்பா? - குறைந்த செலவில் கண்டறிய புதிய மருத்துவ சாதனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» குறைந்த செலவில் காதலியுடன் ஊர் சுற்றுவது எப்படி?
» குறைந்த செலவில் பூமியைப் படம் பிடித்த இளைஞர்
» கண்களினால் கணினியை இயக்கலாம்: புதிய சாதனம் அறிமுகம்
» எய்ட்ஸ் நோயை ஒழிப்பது சம்பந்தமான மருத்துவ ஆராய்ச்சியில் நம்பிக்கையூட்டும் ஒரு புதிய முன்னேற்றம்
» கணினியில் பணிபுரிந்துகொண்டே உங்கள் உடல் நலத்தை பராமரிக்க நவீன சாதனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum