Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மொட்டைவெளி -ருத்ரா
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
மொட்டைவெளி -ருத்ரா
மொட்டைவெளி
===================================ருத்ரா
வளையல்கள் கிளுகிளுக்கும்
சன்னலோரம் அல்ல இது.
சுண்ணாம்பு காரை பெயர்ந்து
தேமல் விழுந்தவன் மேனி போல்
பரவிக்கிடந்த
வானம் பார்த்த மேல்மாடியில்
கைகளை தலையணயாக்கி
மல்லாந்து பார்த்திருந்தேன்.
அங்கே இருந்து
அந்த மொட்டைவெளி கூட
"முண்டகோபனிஷதம்" சொல்கிறது.
மூளியாய் பொழுது போகவில்லை
என்று
ஆயிரக்கணக்காய்
நட்சத்திரங்கள் உதிர்ந்து கிடக்கும்
விண்வெளியின்
உலா முற்றம் அல்லவா இது.
குடத்துள்
விண்வெளியை
சுருட்டி மடக்கி
முடிந்தால்
சுருட்டும் பிடித்து
(இது புகையிலை சுருட்டு அல்ல
அவன் கிடந்த ஆலிலையைக்கூட
சுருட்டி
ஆத்மப் புகை பிடிக்கும்)
மகிழும் முற்றம் அல்லவா இது!
இப்படித்தான்
தண்ணி கருத்திருச்சு
தவளை சத்தம் கேட்டிடுச்சு
என்று
வாய்க்கால் கரையோரம்
அந்த
வரக் வரக் வர்ர்ரக்...என்ற
தவளை முனிவனின்
மொழியை
உரித்துப் பிதுக்கி பிசைந்து
கேட்டிடலாம்
என்று செவி தீட்டினேன்.
ஆகமப்ரகரணம் என்றது.
அப்புறம் என்றேன்
வைதத்யப்ரகரணம் என்றது.
அப்பால என்றேன்
அத்வைதப்ரகரணம் என்றது.
இன்னும்..என்றேன்
அலாத சாந்திப் ப்ரகரணம் என்றது.
விஸ்வம் தைஜஸம் ப்ரக்ஞை
ஜாக்ரதம் ஸ்வப்னம் ஷுஷுப்தி
நுண்ணுடல் பருவுடல் மனவுடல்
அகரம் உகரம் மகரம்...என்று
மூன்று மூன்றாய்
சொல்லிக்கொண்டே போனது.
ஓம் என்பதில்
முட்டி நின்றது.
ஓர்மம் தமிழின் ஆகமம்.
உடல் பிணமாய் இருந்து
உள்ளே ஓர்மை
இழையாடுவதே ஆகமம்.
அவிந்து அடங்கி
ஆகி அமைவதே
ஆகமம்.
கதவு நிலை சன்னல்கள் எனும்
உருப்படிகளை
உருப்படிககளாய்
ஆகவைக்கவேண்டும் என
தச்சர் சொல்லுவார்
அப்படி
பிரம்மத்தை
தச்சு செய்து
ஆக வைப்பதே ஆகமம்.
அறிவது வேதம் என்றால்
அறிவதை அறிவது வைதத்யம்.
ஒலி தானே இருந்தது
சுருதி என்று.
பூவிலும்
புல்லிலும்
புள்ளிலும்
கல்லிலும் கூட
காற்று ஒலிக்கும்.
அதன் உள்ளே
படுத்து
உற்றுக்கேட்டனர்
ரிஷிகள் என்றார்.
என்ன கேட்டனர்.
அவரவர் கேட்டது
அவரவர் ரகசியம்.
தானே உணர்வது வேதம்
அதுவே
இங்கு ஆத்மம் ஆகும்.
அத்வைதம்
இரண்டு இல்லை என்றது.
ஜீவாத்மா பரமாத்மா
என்று
கிளிப்பிள்ளைகள்
சொல்லிக்கொண்டிருந்தாலும்
எல்லாவற்றிலும்
நீ விண்டு விடாதே
இரண்டு படாதே.
நன்மை தீமை
இன்பம் துன்பம்
இருள் ஒளி
ஜனனம் மரணம்
தேவன் அசுரன்
ஆத்திகம் நாத்திகம்..
.............
..............
அத்வைதம்
இப்படித்தான்
உட்பொருள் தந்தது.
கௌடபாதரின்
கவுபீனம் மட்டுமே
கசக்கித் துவைத்தவர்கள்
கருத்துக்குள்
கால் வைக்கவில்லை
காதும் வைக்கவில்லை.
அதனால்
ஜீவாத்மா பரமாத்மாவோடு
மட்டுமே
சுருதி சேர்த்தது.
குடவெளியும்
குடம் உடைந்த வெளியும்
குட்டு உடைத்த போதும்
குருத்து மட்டும்
முளைவிடவில்லை
அந்த "ஆரண்யகக்காட்டில்".
"பூதம் ந ஜாயதே
கிஞ்சிதபூதம் நைவ ஜாயதே.
விவதந்தோ த்வயா ஹ்யோவம்
அஜாதிம் க்யாபயந்திதே"
தோற்றம் என்று
ஒன்றுமில்லை.
தோற்றமின்மை என்றும்
ஒன்று மில்லை.
அப்படியென்றால்
ஒலி எனும் சுருதி
ஒலித்ததும்
ஒலிக்காததும்
என்னவென்று
உனக்கு தெரியுமா?
வேதம் என்பதும்
வேதம் அல்ல என்பதும்
ஒன்று தானே.
அத்வைதம்
முதலில் இதை
உனக்குச் சொல்லட்டும்.
அது வரை
வேதத்தால்
வேதத்தையும்
ஸ்பர்ஸிக்காதே
உயர் வேதமே
உயர் மெய்ப்பொருள்.
அஸ்பர்ஸ யோகம் இது.
வாத விவாதக்
கூச்சல்கள்
இங்கு வெறும்
இரைச்சல் கூளங்கள்.
"அலாத சாந்தி ப்ரகரணத்தின்
நான்காவது ஸ்லோகம் இது.
நான்கு வேதத்தின்
வெளிச்சமும் இதுவே
தோன்றவும் இல்லை
முடியவும் இல்லை
வாலறிவு என்றால்
வேதம் ஒட்டிய
விரிவுரை யோடு
வேதாந்தம் எனும்
"முடிந்து போன
வேதம் எனும்
முடிவுக்கு வருவது
முரண்பாடு தானே."
உன் முரண்பாடுகளால்
முரண்பாடுகளைப்
பெருக்காதே.
அதனால் தான்
சொல்கிறேன்
உன் வேதத்தால் கூட
இந்த வேதத்தைத்
தொடாதே.
அஸ்பர்ஸ யோகம்
அது தான் என்று
அடித்துச் சொல்கிறான்
இந்த கௌடபாதன்.
====================================ருத்ரா
===================================ருத்ரா
வளையல்கள் கிளுகிளுக்கும்
சன்னலோரம் அல்ல இது.
சுண்ணாம்பு காரை பெயர்ந்து
தேமல் விழுந்தவன் மேனி போல்
பரவிக்கிடந்த
வானம் பார்த்த மேல்மாடியில்
கைகளை தலையணயாக்கி
மல்லாந்து பார்த்திருந்தேன்.
அங்கே இருந்து
அந்த மொட்டைவெளி கூட
"முண்டகோபனிஷதம்" சொல்கிறது.
மூளியாய் பொழுது போகவில்லை
என்று
ஆயிரக்கணக்காய்
நட்சத்திரங்கள் உதிர்ந்து கிடக்கும்
விண்வெளியின்
உலா முற்றம் அல்லவா இது.
குடத்துள்
விண்வெளியை
சுருட்டி மடக்கி
முடிந்தால்
சுருட்டும் பிடித்து
(இது புகையிலை சுருட்டு அல்ல
அவன் கிடந்த ஆலிலையைக்கூட
சுருட்டி
ஆத்மப் புகை பிடிக்கும்)
மகிழும் முற்றம் அல்லவா இது!
இப்படித்தான்
தண்ணி கருத்திருச்சு
தவளை சத்தம் கேட்டிடுச்சு
என்று
வாய்க்கால் கரையோரம்
அந்த
வரக் வரக் வர்ர்ரக்...என்ற
தவளை முனிவனின்
மொழியை
உரித்துப் பிதுக்கி பிசைந்து
கேட்டிடலாம்
என்று செவி தீட்டினேன்.
ஆகமப்ரகரணம் என்றது.
அப்புறம் என்றேன்
வைதத்யப்ரகரணம் என்றது.
அப்பால என்றேன்
அத்வைதப்ரகரணம் என்றது.
இன்னும்..என்றேன்
அலாத சாந்திப் ப்ரகரணம் என்றது.
விஸ்வம் தைஜஸம் ப்ரக்ஞை
ஜாக்ரதம் ஸ்வப்னம் ஷுஷுப்தி
நுண்ணுடல் பருவுடல் மனவுடல்
அகரம் உகரம் மகரம்...என்று
மூன்று மூன்றாய்
சொல்லிக்கொண்டே போனது.
ஓம் என்பதில்
முட்டி நின்றது.
ஓர்மம் தமிழின் ஆகமம்.
உடல் பிணமாய் இருந்து
உள்ளே ஓர்மை
இழையாடுவதே ஆகமம்.
அவிந்து அடங்கி
ஆகி அமைவதே
ஆகமம்.
கதவு நிலை சன்னல்கள் எனும்
உருப்படிகளை
உருப்படிககளாய்
ஆகவைக்கவேண்டும் என
தச்சர் சொல்லுவார்
அப்படி
பிரம்மத்தை
தச்சு செய்து
ஆக வைப்பதே ஆகமம்.
அறிவது வேதம் என்றால்
அறிவதை அறிவது வைதத்யம்.
ஒலி தானே இருந்தது
சுருதி என்று.
பூவிலும்
புல்லிலும்
புள்ளிலும்
கல்லிலும் கூட
காற்று ஒலிக்கும்.
அதன் உள்ளே
படுத்து
உற்றுக்கேட்டனர்
ரிஷிகள் என்றார்.
என்ன கேட்டனர்.
அவரவர் கேட்டது
அவரவர் ரகசியம்.
தானே உணர்வது வேதம்
அதுவே
இங்கு ஆத்மம் ஆகும்.
அத்வைதம்
இரண்டு இல்லை என்றது.
ஜீவாத்மா பரமாத்மா
என்று
கிளிப்பிள்ளைகள்
சொல்லிக்கொண்டிருந்தாலும்
எல்லாவற்றிலும்
நீ விண்டு விடாதே
இரண்டு படாதே.
நன்மை தீமை
இன்பம் துன்பம்
இருள் ஒளி
ஜனனம் மரணம்
தேவன் அசுரன்
ஆத்திகம் நாத்திகம்..
.............
..............
அத்வைதம்
இப்படித்தான்
உட்பொருள் தந்தது.
கௌடபாதரின்
கவுபீனம் மட்டுமே
கசக்கித் துவைத்தவர்கள்
கருத்துக்குள்
கால் வைக்கவில்லை
காதும் வைக்கவில்லை.
அதனால்
ஜீவாத்மா பரமாத்மாவோடு
மட்டுமே
சுருதி சேர்த்தது.
குடவெளியும்
குடம் உடைந்த வெளியும்
குட்டு உடைத்த போதும்
குருத்து மட்டும்
முளைவிடவில்லை
அந்த "ஆரண்யகக்காட்டில்".
"பூதம் ந ஜாயதே
கிஞ்சிதபூதம் நைவ ஜாயதே.
விவதந்தோ த்வயா ஹ்யோவம்
அஜாதிம் க்யாபயந்திதே"
தோற்றம் என்று
ஒன்றுமில்லை.
தோற்றமின்மை என்றும்
ஒன்று மில்லை.
அப்படியென்றால்
ஒலி எனும் சுருதி
ஒலித்ததும்
ஒலிக்காததும்
என்னவென்று
உனக்கு தெரியுமா?
வேதம் என்பதும்
வேதம் அல்ல என்பதும்
ஒன்று தானே.
அத்வைதம்
முதலில் இதை
உனக்குச் சொல்லட்டும்.
அது வரை
வேதத்தால்
வேதத்தையும்
ஸ்பர்ஸிக்காதே
உயர் வேதமே
உயர் மெய்ப்பொருள்.
அஸ்பர்ஸ யோகம் இது.
வாத விவாதக்
கூச்சல்கள்
இங்கு வெறும்
இரைச்சல் கூளங்கள்.
"அலாத சாந்தி ப்ரகரணத்தின்
நான்காவது ஸ்லோகம் இது.
நான்கு வேதத்தின்
வெளிச்சமும் இதுவே
தோன்றவும் இல்லை
முடியவும் இல்லை
வாலறிவு என்றால்
வேதம் ஒட்டிய
விரிவுரை யோடு
வேதாந்தம் எனும்
"முடிந்து போன
வேதம் எனும்
முடிவுக்கு வருவது
முரண்பாடு தானே."
உன் முரண்பாடுகளால்
முரண்பாடுகளைப்
பெருக்காதே.
அதனால் தான்
சொல்கிறேன்
உன் வேதத்தால் கூட
இந்த வேதத்தைத்
தொடாதே.
அஸ்பர்ஸ யோகம்
அது தான் என்று
அடித்துச் சொல்கிறான்
இந்த கௌடபாதன்.
====================================ருத்ரா
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|