தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஈழராஜா எல்லாளன்

View previous topic View next topic Go down

ஈழராஜா எல்லாளன்  Empty ஈழராஜா எல்லாளன்

Post by M.K.R.NIROJAN KING Fri Nov 08, 2013 9:44 pm

ஈழராஜா எல்லாளன்
இலங்கையின் ஆட்சி அதிகாரம் பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை சிங்கள மன்னர்களிடமும், தமிழ் மன்னர்களிடமும் மாறி மாறி இருந்து வந்துள்ளதென்பதை கி.மு 3ஆம் நூற்றாண்டிற்கும் கி.மு 1ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட220 ஆண்டு கால அனுராதபுர ஆட்சி வரலாற்றில், இக்கால எல்லைக்குள் ஆட்சிபுரிந்த 19 மன்னர்களில் 8 தமிழ் மன்னர்கள் 81 வருடங்களுக்கு மேல் ஆட்சி புரிந்துள்ளனர் என்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த 81 வருடங்களில் 44 வருடங்கள் நீதி தவறாது ஆட்சி புரிந்த எல்லாளனுக்குரியவை. ஈழராஜா எல்லாளன் முன்னிகழ்வு கதையில் வருபவர்கள் ஈழசேனன் (சேனா) - எல்லாளனின் தந்தை நாககுத்தன் - ஈழசேனனின் சினேகிதன் தாரதத்தன் - ஈழசேனனின் மூதாதையர் குவேனி - தாரதத்தனின் மகள் சூரத்தீசன் - அனுராதபுர சிங்கள மன்னன். அசேலன் - அனுராதபுர சிங்கள மன்னன். கி.மு. 178ஆம் ஆண்டின் மார்கழி மாதத்து வைகறைப் பொழுது வெண்புகார் கடல் நீரோ1ப் பரப்பு முழுவதும் கவிந்து மூடியிருந்தது. கீழைவானம் இருளகற்றி ஒளிரத் தொடங்க இன்னமும் மூன்று நாழிகைப் பொழுது இருந்தது. அவ்வேளையில்தான் அந்தக் குதிரை வீரர்கள் கடல் நீரோ1க்கரையில் வந்து தரித்து நின்றனர். உயர் ஜாதி அசுவங்கள், ஓடிவந்த களைப்பு அவற்றில் தொ1யவில்லை. பிடரி மயிர்களைப் பீலிகளாகச் சிலிர்த்துவிட்டுக் கனைத்தன. பன்னிரண்டு வீரர்கள் அடங்கிய அக்குழுவின் முன்னணியில் சாம்பல் நிறக் குதிரையொன்றிலும் வெண்ணிறக் குதிரை ஒன்றிலும் அமர்ந்திருந்த இரு இளைஞர்கள் வெகு கம்பீர புரு~ர்களாகக் காட்சி தந்தனர். தலைமயிர்களை வாரியிழுத்துக் கொண்டை முடிந்திருந்தார்கள். திரண்டு முறுகிய உடல்வாகும் குதிரைகளில் ஆரோகணித்திருந்த அலட்சிய பாவமும் அவர்கள் வலிமையைப் பறைசாற்றின. வெண்குதிரையில் அமர்ந்திருந்த இளைஞன் தன்னரைக்கச்சையைச் சற்று அசைத்துச் சரிசெய்தபடி கேட்டான்: ”னண்பா, நாங்கள் இக்கடலோ1யைத் தாண்டி அக்கரை செல்வோமா? அல்லது பின்னால்வரும் படையணிகள் வரும்வரை காத்திருப்போமா?” ”வேண்டாம்…” என்றான் சாம்பல் நிறப் புரவியில் அமர்ந்திருந்த நாககுத்தன்: ”வேண்டாம் சேனா, நாங்கள் கடலோ1யைக் கடந்து அக்கரை செல்வோம். உனது இல்லத்துக்குச் சென்று சற்று இளைப்பாறுவோம். அவர்கள் அரசவெளி வந்து சோ1வார்கள்..” கடலோ1யின் மங்கலான நீரின்மேல் பனிப்புகார் படர்ந்திருந்தது. அந்த விடிகாலையில் மட்டி விளக்கிப் பொறுக்குவோர் சிலரும் கரப்பை குத்தி மீன்பிடிப்போர் சிலரும் து1ரத்தில் நீரில் நிற்பது மங்கலாகத் தொ1ந்தது. னாகதீபத்தையும் (யாழ்ப்பாணக் குடானாடு) ஈழவூரையும் (பூனகரி) இணைக்கின்ற ஒடுங்கிய சலசந்தியின் கரையில் அவர்கள் வந்திருந்தபாதை முடிந்திருந்தது. பாதையின் இருமருங்கும் அடர்காடு வளர்ந்து கவிந்திருந்தது. இனங்காணமுடியாத பட்சிகளின் ஒலிகள் விடியற்பொழுதை அழைத்தன. முழங்கால் அளவு நீர் நிரம்பிய சலசந்தியைக் கடந்து அக்கரையில் ஏறில் அரசவெளிக்குச் செல்கின்ற பாதை காட்டின் ஊடாகத் தொடரும். ஈழசேனன் தன் குதிரையை முதலில் நீரில் இறக்கினான். பலதடவை இப்பாதையில் வந்து பழக்கப்பட்ட குதிரையாதலால் தயக்கமின்றித் தண்ணீரில் இறங்கி முன்னேறத் தொடங்கியது. அவனைப் பின்பற்றித் தன் குதிரையை நாககுத்தன் இறக்கினான். கரையும் நீரும் சந்திக்குமிடத்தில் சற்றுத் தயங்கி நின்ற புரவி நாககுத்தனின் உடல் அசைவைப் புரிந்துகொண்டு நீரில் இறங்கியது. அவர்களைத் தொடர்ந்து ஏனைய வீரர்கள் தம் குதிரைகளை நீரில் இறக்கினர். புரவிகளின் காலடிக்கிளறலால் சிந்திய துமிகள் அவர்களின் தொடைகள் மீது தெறித்துச் சிந்தின. அதனால் நீரின் பனிக்குளிர்ச்சியை உணரமுடிந்தது. இரு நோ1வரிசையாகப் புரவிகள் நடந்து முன்னேறின. தம் பிரதேசத்தலைவன் ஈழசேனனை இனங்கண்டு கொண்ட மட்டி பொறுக்கியவர்களும் மீன் பிடித்தவர்களும் ஒதுங்கி நின்றதோடு தலைசாய்த்து வணக்கமும் செலுத்தினர். ஈழசேனன் வானத்தை அண்ணார்ந்து பார்த்தான். சூரியனின் ஒளிக்கதிர்கள் விண்ணில் பரவியிருந்தன. கீழைவானின் பகைப்புலத்தில் கடல்பறவைகள் வானில் கரும் பொட்டுகளாகத் தொ1ந்தன. நன்கு விடிந்ததும் பார்த்தால் இந்தக் கடலோ1 முழுவதும் பறவைகளாகத் தொ1யும். இந்த மண்ணிற்கு உறவில்லாத வெளித்தேசத்துப் பறவைகள் இந்த ஏரியில் விழுந்து முழ்கி மீன் பிடிக்கும். உருவத்தில் பொ1ய அப்பறவைகளையும் (கூழைக்கடா) உருண்டு திரண்டு நீரில் சுழியோடும் வாத்துக்களையும் (சைபீரியன் வாத்துக்கள்) அவனுக்குப் பிடிக்கும். அவை வலசை வருவன. ஒரு பருவத்துக்கு வந்துவிட்டுத் தன் சொந்தத் தேசத்திற்குத் திரும்பிச் சென்றுவிடுவன. ஷசேன, என்ன கடும் யோசனை’ என நாககுத்தன் கேட்டான். சேனன் நண்பனைத் திரும்பிப் பார்த்தான். குதிரைகள் மென்னடை பயின்றன. அவன் உள்ளத்து ஒரு மூலையில் அவன் மூதாதை தாரதத்தன் தொ1ந்தான். உத்தரதேசத்தில் நாகர்கள் வாழ்ந்து வந்தபோது தக்கின தேசத்தில் தாரதத்தனும் அவன் சமூகத்தினரும் அமைதியாக வாழ்ந்து வந்தனர். தாமிரபரணிக் கரையில் அவர்களின் ஆள்புலம் இருந்தது. ஷஎனது மூதாதையர் தாரதத்தரை நினைத்துக் கொண்டேன். தாமிரபரணிக் கரையில் அமைதியாக வாழ்ந்து வந்தனர். குவேனி அக்கூட்டத்தின் தலைவியாக இருந்தாள். நாடுகடத்தப்பட்ட விஜயனும் அவனது தோழர்களும் தாமிரபரணிக் கரையில் காற்றினால் மரக்கலத்தோடு ஒதுக்கப் பட்டனர். அவர்களுக்கு இங்கு இருக்க இடமும் கொடுத்து தன்னையும் கொடுத்ததால் சிங்கள விஜயனின் பரம்பரையினர் நமது மண்ணில் தங்கிவிடும் தவறு நிகழ்ந்துவிட்டது. தாரதத்தரும் அவருடன் சோ1ந்த கூட்டத்தினரும் நாகதீபத்திற்கு வந்தனர். இடையில் காடடர்ந்து கிடந்த இப் பிரதேசத்தில் தங்கினர். அவர்கள் முன்னர் வாழ்ந்த பிரதேசம் தாமிரவர்ணத்தில் இருந்தது. இவர்கள் புதிதாகக் குடியேறிய இந்த மண் பொன் நிறத்தில் இருந்தது. பொன் என்றால் ஈழம்… இது ஈழவூராயிற்று. அவற்றினை எண்ணிக் கொண்டேன் குத்த…’ ஈழசேனன் தொடர்ந்து உரைத்தான்: ஷனண்பா, இந்தக் கடலோ1யில் வலசை வருகின்ற வெளித்தேசத்துப் பறவைகளை எனக்குப் பிடிக்கும். அவை இந்த ஏரியை ஆக்கிரமிப்பதில்லை. ஆனால் எங்கள் இலங்காபுரி விஜயன் கூட்டத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கணிப்பில் நாங்கள் நாகர்கள், இயக்கர்கள்… இராச்சதர்கள்.. அமானுஸ்யர்கள். உனக்கு நினைவிருக்கிறதா குத்த, நானும் நீயும் அனுராதபுரத்து அரசசபையில் சிங்கள மன்னன் சூரத்தீசனைச் சந்தித்தமை… அவன் சொன்ன வார்த்தைகள்… பேசிய பேச்சுக்கள்…’ ஷாவை இலகுவில் மறக்கக்கூடியவையா?’ என்றான் நாககுத்தன். 2 கதம்ப நதிக்கரையோரமாக அவர்கள் பயணப்பட்டு மகாவில்லாச்சியை வந்தடைந்தனர். அனுராதபுரத்திற்குள் பிரவேசித்து கோட்டையின் தென்புறவாயிலில் வந்து சோ1ந்தனர். அவர்கள் வந்த காரணத்தை அறிந்ததும் காவலர்கள் அவர்களை























King ellalan
எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்டதாக ஆதாரபூர்வமான வரலாறு கூறுகிறது.
சிங்களர்கள்தான் இலங்கையின் பூர்வக்குடிகள் என்று நிரூபிப்பதற்காக எழுதப்பட்ட நூல் "மகாவம்சம்.''
சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் விஜயன்தான் என்று அந்நூல் கூறுகிறது. ஆனால், அவன் இலங்கையில் காலடி வைக்கும்போதே, அங்கே குவேனி என்ற தமிழ் அரசி இருந்திருக்கிறாள் என்று அதே மகாவம்சம் குறிப்பிடுகிறது. அப்படியானால், விஜயனுக்கு முன்பே தமிழர்கள் அங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை மகாவம்சமே ஒப்புக்கொள்கிறது.

அனுராதபுரம்

இலங்கையின் மற்ற பகுதிகள் காடுகளாக இருந்தபோது, அனுராதபுரத்தை பெரிய நகரமாக தமிழர்கள் உருவாக்கி, அங்கிருந்து ஆட்சி நடத்தியிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

விஜயன் தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்கு முன்பே, அனுராதபுரத்தில் தமிழ் மன்னர்களின் ஆட்சி நடந்திருக்கிறது. விஜயனின் வருகைக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே அனுராதபுரம் பெரிய நகரமாக இருந்திருக்கிறது என்பது, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு. அந்தக் காலத்தில் இந்தியாவில் உஜ்ஜயினி பெரிய நகரமாக இருந்தது. அதற்கு சமமாக அனுராதபுரம் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

புகழ் பெற்ற தமிழ் மன்னன்

இலங்கைக்கு இந்தியப் பேரரசர் அசோகர் அனுப்பிய புத்த மதக் குழுவினர், அனுராதபுரத்தில் திசையன் என்ற தமிழ் மன்னனை சந்தித்தது பற்றி, பாலி மொழி வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திசையன் இறந்த பிறகு, சேனன், குத்தன் என்ற இரு தமிழ் மன்னர்கள் 22 ஆண்டுகள் அனுராதபுரத்தில் நல்லாட்சி நடத்தினர்.
இவர்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர் எல்லாளன்.

சிங்களர்களைப் புகழ்வதற்காகவே எழுதப்பட்ட "மகாவம்சம்'' நூலில், எல்லாளனின் வீரம் பற்றி உயர்வாகவே கூறப்பட்டுள்ளது. அவனுடைய குணநலன்கள், மனுநீதிச் சோழனின் இயல்பை ஒட்டி சித்தரிக்கப்பட்டுள்ளன.

மகாவம்சம் கூறுவதாவது:-

"எல்லாளன், இயேசு கிறிஸ்துவுக்கு 235 ஆண்டுகளுக்கு முன்னதாகப் பிறந் தவன். அவன் அனுராதபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு, 44 ஆண்டுகள் ஆட்சி நடத்தினான். அவன் சோழ வம்சத்தை சேர்ந்தவன். நீதி தவறாதவன்.

அவன் தன் படுக்கை அறையில் ஒரு மணியை தொங்கவிட்டிருந்தான். அது, அரண்மனைக்கு வெளியே தொங்கவிடப்பட்டிருந்த ஒரு கயிற்றுடன் இணைக்கப்பட்டு இருந்தது. தங்களுடைய குறைகளை மன்னருக்குத் தெரிவிக்க, யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மணியை அடிக்கலாம்.

ஒருமுறை, ஒரு பெண் அந்த மணியை அடித்தாள். எல்லாளன் அந்தப் பெண்ணை அழைத்து, "உன் குறை என்ன?'' என்று கேட்டான்.
"உன் மகன் ரதத்தில் செல்லும்போது, என் கன்றுக்குட்டி மீது ரதத்தை ஏற்றிக் கொன்றுவிட்டான்'' என்று கூறினாள்.

அதைக்கேட்ட எல்லாளன், தன் மகனையும் ரதத்தை ஏற்றி கொன்றுவிடுமாறு கட்டளையிட்டான். அக்கட்டளைப்படி இளவரசன் கொல்லப்பட்டான். (மனுநீதி சோழன் வரலாற்றிலும் இதே போன்ற சம்பவம் வருகிறது)

புத்தர் கோவில்

ஒருமுறை எல்லாளன் ரதத்தில் செல்லும்போது, ரதம் மோதி புத்தர் கோவில் சேதம் அடைந்தது. ரதத்தில் இருந்து கீழே இறங்கிய எல்லாளன், கோவில் இடிந்ததற்காக மிகவும் வருந்தினான்.

உடனே மந்திரிகளை அழைத்து, "புத்தர் கோவிலை சேதப்படுத்திய நான் படுபாவி; பெரிய குற்றவாளி. என்னைக் கொன்றுவிடுங்கள்'' என்றான்.

அதற்கு மந்திரிகள் மறுத்துவிட்டனர். "நீங்கள் உங்களுக்கே மரண தண்டனை விதித்துக் கொள்வதை, புத்த பகவானே ஏற்கமாட்டார்'' என்று கூறினர். "நீங்கள் உங்கள் உயிரைப் போக்கிக் கொள்வதற்கு பதிலாக, கோவிலை புதிதாகக் கட்டிக் கொடுத்து விடலாம்'' என்று தெரிவித்தார்கள்.

மந்திரிகளின் இந்த யோசனையை ஏற்றுக்கொண்ட எல்லாளன், புத்தர் கோவிலை முன்பைவிட அழகாகக் கட்டிக் கொடுத்தான்.

துட்ட காமினி


இந்தக் காலக்கட்டத்தில் தென் இலங்கையை கவந்திசா என்ற சிங்கள மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகன் பெயர் துட்டகாமினி. (இவனுடைய இயற்பெயர் கெமுனு என்றும், துஷ்டத்தனம் செய்து வந்ததால், துட்ட காமினி என்று அழைக்கப்பட்டான் என்றும் மகாவம்சம் கூறுகிறது.)

ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த விரும்பிய துட்டகாமினி, பல சிற்றரசர்களை தோற்கடித்து விட்டு, வடக்கு நோக்கி முன்னேறினான். தமிழ் மன்னன் எல்லாளனை முறியடித்து, அனுராதபுரத்தை கைப்பற்ற வேண்டும் என்பது அவன் எண்ணம்.

தன் விருப்பத்தை தன் தந்தைக்குத் தெரிவித்தான். அதை மன்னர் ஏற்கவில்லை. "எல்லாளனிடம் ஒரு லட்சம் போர் வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் அவர் நல்லவர். மக்களின் ஆதரவைப் பெற்றவர். அவர் மீது படையெடுக்க வேண்டாம்'' என்று தகவல் அனுப்பினார்.

தந்தைக்கு அனுப்பிய "பரிசு''

இதனால் சீற்றம் அடைந்த துட்ட கா மினி, பெண்கள் அணியும் வளையல்களையும், சேலைகளையும் தந்தைக்கு அனுப்பி வைத்து, தந்தையை அவமானப்படுத்தினான்.

இதனால் கோபம் அடைந்த மன்னர், துட்ட காமினியை கைது செய்து, தன் முன் கொண்டு வந்து நிறுத்துமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டார்.

இதை அறிந்து கொண்ட துட்ட காமினி, காட்டில் போய் ஒளிந்து கொண்டான்.

சில நாட்களில் மன்னர் மரணம் அடைந்தார். துட்ட காமினி, நாட்டுக்குத் திரும்பி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். பின்னர், அனுராதபுரத்தின் மீது படையெடுத்தான்.

பயங்கர போர்


பெரும் படையுடன் துட்ட காமினி வருவது பற்றி அறிந்த எல்லாளன், மந்திரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார்.
துட்டகாமினியை கோட் டைக்குள் வரவிடக்கூடாது என்றும், கோட்டைக்கு வெளியே அவனை எதிர்கொண்டு போரிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அனுராதபுரம் கோட்டைக்கு வெளியே இருதரப்பு படைகளும் மோதின. போர் பயங்கரமாக நடந்தது. ரத்த ஆறு ஓடியது.

பட்டத்து யானை

இந்நிலையில், எல்லாளனுக்கு துட்டகாமினி சவால் விட்டான்.

"நாம் இருவரும் நேருக்கு நேர் நின்று போர் புரிவோம். யாருக்கு வெற்றி என்பதை நமது நேரடிப் போர் தீர்மானிக்கட்டும்'' என்றான்.
போர் நடந்தபோது எல்லாளனுக்கு வயது 74. துட்ட காமினி இளைஞன். என்றாலும் அவன் விட்ட சவாலை, எல்லாளன் ஏற்றுக்கொண்டார்.

இருவரும் பட்டத்து யானைகள் மீது அமர்ந்து போரிட்டனர். எல்லாளன் வயோதிகராக இருந்தாலும் தீரத்துடன் போரிட்டார். என்றாலும், துட்டகாமினியின் யானை, தன்னுடைய தந்தத்தால் எல்லாளன் அமர்ந்திருந்த யானையின் முகத்தில் குத்தி கிழித்தது. யானை கீழே சாய்ந்தது. அதே நேரத்தில் துட்ட காமினி எறிந்த ஈட்டி, எல்லாளன் உயிரைக் குடித்தது.

கோவில்

எல்லாளன் இறந்த இடத்திலேயே அவர் உடலை தக்க மரியாதையுடன் துட்ட காமினி தகனம் செய்தான். அதே இடத்தில் கோவில் ஒன்றை கட்டவும் ஏற்பாடு செய்தான்.

"இந்த வழியே செல்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அரசர்களே ஆனாலும் கோவிலை கும்பிட்டு விட்டு செல்லவேண்டும்'' என்று உத்தரவிட்டான். எல்லாளனின் வீரத்துக்கு, துட்ட காமினி அளித்த மரியாதை இது.

அனுராதபுரத்தைக் கைப்பற்றிக்கொண்ட துட்டகாமினி, அதை மேலும் விரிவுபடுத்த எண்ணமிட்டான்.

ஆனால், அவன் திட்டங்கள் நிறைவேறுவதற்கு முன், பாம்பு கடித்து இறந்து போனான்.''

இவ்வாறு மகாவம்சம் கூறுகிறது.
Photo: எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்டதாக ஆதாரபூர்வமான வரலாறு கூறுகிறது. சிங்களர்கள்தான் இலங்கையின் பூர்வக்குடிகள் என்று நிரூபிப்பதற்காக எழுதப்பட்ட நூல் "மகாவம்சம்.'' சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் விஜயன்தான் என்று அந்நூல் கூறுகிறது. ஆனால், அவன் இலங்கையில் காலடி வைக்கும்போதே, அங்கே குவேனி என்ற தமிழ் அரசி இருந்திருக்கிறாள் என்று அதே மகாவம்சம் குறிப்பிடுகிறது. அப்படியானால், விஜயனுக்கு முன்பே தமிழர்கள் அங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை மகாவம்சமே ஒப்புக்கொள்கிறது. அனுராதபுரம் இலங்கையின் மற்ற பகுதிகள் காடுகளாக இருந்தபோது, அனுராதபுரத்தை பெரிய நகரமாக தமிழர்கள் உருவாக்கி, அங்கிருந்து ஆட்சி நடத்தியிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். விஜயன் தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்கு முன்பே, அனுராதபுரத்தில் தமிழ் மன்னர்களின் ஆட்சி நடந்திருக்கிறது. விஜயனின் வருகைக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே அனுராதபுரம் பெரிய நகரமாக இருந்திருக்கிறது என்பது, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு. அந்தக் காலத்தில் இந்தியாவில் உஜ்ஜயினி பெரிய நகரமாக இருந்தது. அதற்கு சமமாக அனுராதபுரம் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். புகழ் பெற்ற தமிழ் மன்னன் இலங்கைக்கு இந்தியப் பேரரசர் அசோகர் அனுப்பிய புத்த மதக் குழுவினர், அனுராதபுரத்தில் திசையன் என்ற தமிழ் மன்னனை சந்தித்தது பற்றி, பாலி மொழி வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. திசையன் இறந்த பிறகு, சேனன், குத்தன் என்ற இரு தமிழ் மன்னர்கள் 22 ஆண்டுகள் அனுராதபுரத்தில் நல்லாட்சி நடத்தினர். இவர்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர் எல்லாளன். சிங்களர்களைப் புகழ்வதற்காகவே எழுதப்பட்ட "மகாவம்சம்'' நூலில், எல்லாளனின் வீரம் பற்றி உயர்வாகவே கூறப்பட்டுள்ளது. அவனுடைய குணநலன்கள், மனுநீதிச் சோழனின் இயல்பை ஒட்டி சித்தரிக்கப்பட்டுள்ளன. மகாவம்சம் கூறுவதாவது:- "எல்லாளன், இயேசு கிறிஸ்துவுக்கு 235 ஆண்டுகளுக்கு முன்னதாகப் பிறந் தவன். அவன் அனுராதபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு, 44 ஆண்டுகள் ஆட்சி நடத்தினான். அவன் சோழ வம்சத்தை சேர்ந்தவன். நீதி தவறாதவன். அவன் தன் படுக்கை அறையில் ஒரு மணியை தொங்கவிட்டிருந்தான். அது, அரண்மனைக்கு வெளியே தொங்கவிடப்பட்டிருந்த ஒரு கயிற்றுடன் இணைக்கப்பட்டு இருந்தது. தங்களுடைய குறைகளை மன்னருக்குத் தெரிவிக்க, யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மணியை அடிக்கலாம். ஒருமுறை, ஒரு பெண் அந்த மணியை அடித்தாள். எல்லாளன் அந்தப் பெண்ணை அழைத்து, "உன் குறை என்ன?'' என்று கேட்டான். "உன் மகன் ரதத்தில் செல்லும்போது, என் கன்றுக்குட்டி மீது ரதத்தை ஏற்றிக் கொன்றுவிட்டான்'' என்று கூறினாள். அதைக்கேட்ட எல்லாளன், தன் மகனையும் ரதத்தை ஏற்றி கொன்றுவிடுமாறு கட்டளையிட்டான். அக்கட்டளைப்படி இளவரசன் கொல்லப்பட்டான். (மனுநீதி சோழன் வரலாற்றிலும் இதே போன்ற சம்பவம் வருகிறது) புத்தர் கோவில் ஒருமுறை எல்லாளன் ரதத்தில் செல்லும்போது, ரதம் மோதி புத்தர் கோவில் சேதம் அடைந்தது. ரதத்தில் இருந்து கீழே இறங்கிய எல்லாளன், கோவில் இடிந்ததற்காக மிகவும் வருந்தினான். உடனே மந்திரிகளை அழைத்து, "புத்தர் கோவிலை சேதப்படுத்திய நான் படுபாவி; பெரிய குற்றவாளி. என்னைக் கொன்றுவிடுங்கள்'' என்றான். அதற்கு மந்திரிகள் மறுத்துவிட்டனர். "நீங்கள் உங்களுக்கே மரண தண்டனை விதித்துக் கொள்வதை, புத்த பகவானே ஏற்கமாட்டார்'' என்று கூறினர். "நீங்கள் உங்கள் உயிரைப் போக்கிக் கொள்வதற்கு பதிலாக, கோவிலை புதிதாகக் கட்டிக் கொடுத்து விடலாம்'' என்று தெரிவித்தார்கள்.

மந்திரிகளின் இந்த யோசனையை ஏற்றுக்கொண்ட எல்லாளன், புத்தர் கோவிலை முன்பைவிட அழகாகக் கட்டிக் கொடுத்தான். துட்ட காமினி இந்தக் காலக்கட்டத்தில் தென் இலங்கையை கவந்திசா என்ற சிங்கள மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகன் பெயர் துட்டகாமினி. (இவனுடைய இயற்பெயர் கெமுனு என்றும், துஷ்டத்தனம் செய்து வந்ததால், துட்ட காமினி என்று அழைக்கப்பட்டான் என்றும் மகாவம்சம் கூறுகிறது.) ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த விரும்பிய துட்டகாமினி, பல சிற்றரசர்களை தோற்கடித்து விட்டு, வடக்கு நோக்கி முன்னேறினான். தமிழ் மன்னன் எல்லாளனை முறியடித்து, அனுராதபுரத்தை கைப்பற்ற வேண்டும் என்பது அவன் எண்ணம். தன் விருப்பத்தை தன் தந்தைக்குத் தெரிவித்தான். அதை மன்னர் ஏற்கவில்லை. "எல்லாளனிடம் ஒரு லட்சம் போர் வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் அவர் நல்லவர். மக்களின் ஆதரவைப் பெற்றவர். அவர் மீது படையெடுக்க வேண்டாம்'' என்று தகவல் அனுப்பினார். தந்தைக்கு அனுப்பிய "பரிசு'' இதனால் சீற்றம் அடைந்த துட்ட கா மினி, பெண்கள் அணியும் வளையல்களையும், சேலைகளையும் தந்தைக்கு அனுப்பி வைத்து, தந்தையை அவமானப்படுத்தினான். இதனால் கோபம் அடைந்த மன்னர், துட்ட காமினியை கைது செய்து, தன் முன் கொண்டு வந்து நிறுத்துமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டார். இதை அறிந்து கொண்ட துட்ட காமினி, காட்டில் போய் ஒளிந்து கொண்டான். சில நாட்களில் மன்னர் மரணம் அடைந்தார். துட்ட காமினி, நாட்டுக்குத் திரும்பி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். பின்னர், அனுராதபுரத்தின் மீது படையெடுத்தான். பயங்கர போர் பெரும் படையுடன் துட்ட காமினி வருவது பற்றி அறிந்த எல்லாளன், மந்திரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார். துட்டகாமினியை கோட் டைக்குள் வரவிடக்கூடாது என்றும், கோட்டைக்கு வெளியே அவனை எதிர்கொண்டு போரிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அனுராதபுரம் கோட்டைக்கு வெளியே இருதரப்பு படைகளும் மோதின. போர் பயங்கரமாக நடந்தது. ரத்த ஆறு ஓடியது. பட்டத்து யானை இந்நிலையில், எல்லாளனுக்கு துட்டகாமினி சவால் விட்டான். "நாம் இருவரும் நேருக்கு நேர் நின்று போர் புரிவோம். யாருக்கு வெற்றி என்பதை நமது நேரடிப் போர் தீர்மானிக்கட்டும்'' என்றான். போர் நடந்தபோது எல்லாளனுக்கு வயது 74. துட்ட காமினி இளைஞன். என்றாலும் அவன் விட்ட சவாலை, எல்லாளன் ஏற்றுக்கொண்டார். இருவரும் பட்டத்து யானைகள் மீது அமர்ந்து போரிட்டனர். எல்லாளன் வயோதிகராக இருந்தாலும் தீரத்துடன் போரிட்டார். என்றாலும், துட்டகாமினியின் யானை, தன்னுடைய தந்தத்தால் எல்லாளன் அமர்ந்திருந்த யானையின் முகத்தில் குத்தி கிழித்தது. யானை கீழே சாய்ந்தது. அதே நேரத்தில் துட்ட காமினி எறிந்த ஈட்டி, எல்லாளன் உயிரைக் குடித்தது. கோவில் எல்லாளன் இறந்த இடத்திலேயே அவர் உடலை தக்க மரியாதையுடன் துட்ட காமினி தகனம் செய்தான். அதே இடத்தில் கோவில் ஒன்றை கட்டவும் ஏற்பாடு செய்தான். "இந்த வழியே செல்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அரசர்களே ஆனாலும் கோவிலை கும்பிட்டு விட்டு செல்லவேண்டும்'' என்று உத்தரவிட்டான். எல்லாளனின் வீரத்துக்கு, துட்ட காமினி அளித்த மரியாதை இது. அனுராதபுரத்தைக் கைப்பற்றிக்கொண்ட துட்டகாமினி, அதை மேலும் விரிவுபடுத்த எண்ணமிட்டான். ஆனால், அவன் திட்டங்கள் நிறைவேறுவதற்கு முன், பாம்பு கடித்து இறந்து போனான்.'' இவ்வாறு மகாவம்சம் கூறுகிறது.

















M.K.R.NIROJAN KING
M.K.R.NIROJAN KING
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 18

Back to top Go down

ஈழராஜா எல்லாளன்  Empty Re: ஈழராஜா எல்லாளன்

Post by முரளிராஜா Sat Nov 09, 2013 7:17 am

அறியத்தந்தமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum