தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தினம் ஒரு திருப்பாவை

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

தினம் ஒரு திருப்பாவை  - Page 2 Empty தினம் ஒரு திருப்பாவை

Post by முழுமுதலோன் Mon Dec 16, 2013 8:00 am

First topic message reminder :

தினம் ஒரு திருப்பாவை 




தினம் ஒரு திருப்பாவை  - Page 2 Krishna

மார்கழி மாதத்தில், முக்கியமாக பெண்கள் ஏற்கும் விரதம், 'மார்கழி நோன்பு'. ஆயர்ப்பாடியிலுள்ள கன்னியர்கள், நாட்டு முன்னேற்றத்திற்காகவும், பால் வளம் பெருகவும், நல்ல கணவர்களை அடையவும், நோன்பு நோற்றனர். மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப்பெண்களால் நோற்கப்படுவதால் 'பாவை நோன்பு' என்றும் கூறப்படுகின்றது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் இயற்றிய பாவைப்பாட்டாகிய (இறைவன் மீது பாடப்பட்ட பாடல்கள்) 'திருப்பாவை' யும், மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது இயற்றிய 'திருவெம்பாவை' யும் பாவைப்பாட்டுக்களில் சிறந்தவை. திருப்பாவை முப்பது பாடல்களைக்கொண்டது. திருவெம்பாவை இருபது பாடல்களைக்கொண்டது. இந்த இருபது பாடல்களுடன் 'திருப்பள்ளியெழுச்சி' யிலுள்ள பத்து பாடல்களுடன் சேர்த்து அதுவும் முப்பது பாடல்களாக மார்கழிமாத முப்பது நாட்களிலும் பாடப்படுகின்றது.

   

தினம் ஒரு திருப்பாவை  - Page 2 Blog1    ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்திருந்த பெரியாழ்வார் வீட்டு துளசி மாடத்தில் கண்டெடுக்கப்பெற்று, அவரால் வளர்க்கப்பட்டவர் ஸ்ரீ ஆண்டாள். பெரியாழ்வார் கண்ணபிரானை பெருந்தெய்வமாக கருதி, அவர்மீது பல பாடல்களைப்பாடியுள்ளார். அவைகளை தினமும் கேட்டு வளர்ந்த ஆண்டாள், தானும் கிருஷ்ண பக்தியில் அளவிலா ஈடுபட்டு, கண்ணனிடம் தெய்வீக காதலும் கொண்டு, அவரை மணக்கவும் ஆசைப்பட்டாள். தான் பிறந்து வளர்ந்தது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆயினும், தன்னை கோகுலத்திலுள்ள கோபியராகவே கருதி, கண்ணனை மணக்க வேண்டி, 'பாவை நோன்பு' நோற்றாள். அப்பொழுது அவர் பாடிய முப்பது பாடல்களை 'திருப்பாவை' என்றும், தான் கண்ணனை மணப்பதாக கனவு கண்டு பாடிய 143 பாடல்களை 'நாச்சியார் திருமொழி' என்றும் கூறுவர். பின்னர் ஸ்ரீரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதனையே சென்றடைந்து, அவருடன் இரண்டறக்கலந்தார்.

தினம் ஒரு திருப்பாவை  - Page 2 Blog2
  


இனி திருப்பாவை பாசுரங்களையும், அவற்றின் பொருளையும் இனி வரும் நாட்களில் பார்ப்போம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down


தினம் ஒரு திருப்பாவை  - Page 2 Empty Re: தினம் ஒரு திருப்பாவை

Post by முழுமுதலோன் Thu Jan 09, 2014 7:55 am

மார்கழி 25- பாடல்+பொருள்

தினம் ஒரு திருப்பாவை  - Page 2 Thiruppavai-25உன்னைப் பிரிந்து யான்படும் துயர் நீக்குவாய்!

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: 
தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு திருப்பாவை  - Page 2 Empty Re: தினம் ஒரு திருப்பாவை

Post by முழுமுதலோன் Fri Jan 10, 2014 8:34 am

மார்கழி 26- பாடல்+பொருள்

தினம் ஒரு திருப்பாவை  - Page 2 Thiruppavai-26மார்கழி நீராட தேவையான பொருள்களை அளிப்பாயாக!

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல் வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலி னிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்.

பொருள்:
"பக்தர்களை உன்மீது மயக்கங்கொள்ளச்செய்தவனே! நீல மணி போன்ற நிறத்தையுடையவனும், யாதவ குலவிளக்கு போன்றவனும், ஆலின் இலையில் துயில்பவனுமான கண்ணனே! நாங்கள் மேற்கொள்ளயிருக்கும் நோன்புக்கு தேவையான பால் போன்ற நிறமுடைய, உன் இடக்கையில் உள்ள பஞ்சசன்னியத்தை ஒத்த சங்குகளையும், அகலமான பறை வாத்தியங்ககளையும், பல்லாண்டு பாடுபவர்களையும், தீபங்களையும், கொடிகளையும் நீ எங்களுக்கு அருள் புரிந்து அளிப்பாயாக!"
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு திருப்பாவை  - Page 2 Empty Re: தினம் ஒரு திருப்பாவை

Post by முழுமுதலோன் Sat Jan 11, 2014 8:30 am

மார்கழி 27- பாடல்+பொருள்

நோன்பு செய்ய அருளிய பொருள்களைப் பெற்றவுடன் உன்னிடமிருந்து பெறவேண்டியது என்ன?

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா! உன் தன்னைப்
பாடிப்பறைகொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே, தோள்வளையே, தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே, பாற்சோறு
மூடநெய் பெய்து, முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

பொருள்:
தினம் ஒரு திருப்பாவை  - Page 2 Thiruppavai-27              "பகைவர்களை வெல்லும் கோவிந்தா! உன் புகழைப் பாடி பறையைப் பெற்று, பின் நாங்கள் இன்னும் உன்னிடத்து பெறவிரும்பும் பரிசுகள் யாவையெனில், அனைவரும் புகழத்தக்க முன் கையில் அணியும் வளைகளும், தோளுக்கு இடும் ஆபரணங்களும், தோடும், காதணிகளும், காலில் அணியும் ஆபரணங்களும், புதிய ஆடைகளும் ஆவன. இவைகளப் பெற்று புத்தாடைகளையணிந்து பால் சோறு மூடும்படி நெய் பரிமாறி, அவற்றை முழங்கையிலிருந்து வழியும்படி உண்டு, உன்னுடன் நாங்கள் கூடி, இன்புற்றிருந்து, குளிர வேண்டும். இவ்வாறாக எமது நோன்பு முடிவடைதல் வேண்டும்."
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு திருப்பாவை  - Page 2 Empty Re: தினம் ஒரு திருப்பாவை

Post by முழுமுதலோன் Sun Jan 12, 2014 9:27 am

மார்கழி 28- பொருள்+பாடல்

தினம் ஒரு திருப்பாவை  - Page 2 28_homecoming
சிறிய பெயரால் உன்னை அழைத்ததால் எங்களை கோபிக்காது, எங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்வாயாக!



கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன் தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறுபே ரழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.

பொருள்:
தினம் ஒரு திருப்பாவை  - Page 2 Thiruppavai-28                "பசுக்களை மேய்த்து, காடு சென்று, அங்கு ஒன்று கூடி உண்பவர்களும், ஞானமிலாத சொற்ப அறிவும் படைத்த நாங்கள், ஆயர்குலத்தினில் பிறந்த உன்னை எங்கள் குலத்தவனாக பெற்றடைய பெரும் புண்ணியத்தை செய்துள்ளோம். யாதொரு குறைவும் இல்லாத 'கோவிந்தன்' என்னும் பெயரினைக்கொண்ட கண்ணனே! உன்னுடன் எங்களுக்கு ஏற்ப்பட்ட உறவை, யாராலும் அழிக்க முடியாதது. அற்ப அறிவைப் பெற்ற சிறுமியரான நாங்கள், உன்னிடம் கொண்டுள்ள மிகுந்த அன்பினால் உன்னை (நாராயணன், மாயன், மதவன் போன்ற) சிறிய பெயர்களினால் அழைத்தமைக்கு கோபித்துக் கொள்ளாமல், நாங்கள் வேண்டி வந்த பொருட்களைத் தந்து அருள வேண்டும்."
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு திருப்பாவை  - Page 2 Empty Re: தினம் ஒரு திருப்பாவை

Post by முழுமுதலோன் Sun Jan 12, 2014 2:46 pm

மார்கழி - 29 பாடல் + விளக்கம்

உன் மீது பற்று கொண்ட எங்களுக்கு மற்ற பொருள்கள் மீது இச்சை ஏற்படாமல் காப்பாயாக!
தினம் ஒரு திருப்பாவை  - Page 2 Sssssssssssssss
சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மெய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்!
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.



விளக்கம்;

தினம் ஒரு திருப்பாவை  - Page 2 Ssssssssssssssss"விடியற்காலையில் உன்னை வழிபட்டு, உன் தாமரை மலரைப் போன்ற மென்மையான திருவடிகளைப் போற்றி நாங்கள் விரும்பியவைகளைக் கொடுத்து அருள் செய்யவேண்டும். பசுக்களை மேய்த்து, ஜீவனம் செய்யும் ஆயர்குலத்தில் எங்களைப் போன்றே அவதரித்த நீ, எங்களிடமிருந்து சிறு கைங்கரியமாவது பெற்றுக் கொள்ளாமல் செல்வது கூடாது. உன்னிடமிருந்து, பறை வாத்தியம் போன்ற பொருள்களைப் பெற்றுக் கொண்டவுடன், உன்னை விட்டு அகல நாங்கள் இங்கு வரவில்லை. காலம் உள்ளவரை, மேலும் மேலும் மீண்டும் பிறவியெடுப்பினும், உன்னுடைய உறவினர்களாகவே இருப்போம். உனக்கே நாங்கள் பணி செய்து கிடப்போம். உன் மீது அளவிலா பற்று கொண்டுள்ள எங்களுக்கு, மற்ற பொருள்களின் மீது ஏற்படும் ஆசையை தவிர்தருள வேண்டும்."
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு திருப்பாவை  - Page 2 Empty Re: தினம் ஒரு திருப்பாவை

Post by முழுமுதலோன் Sun Jan 12, 2014 2:50 pm

மார்கழி 30 பாடல் + விளக்கம்


இந்த முப்பது பாடல்களையும் பாடுவோர் அடையும் பேரின்பம்

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப்பறை கொண்ட வாற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
தினம் ஒரு திருப்பாவை  - Page 2 Sssssssssssssssssssssssssssசங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று என்புறுவரெம்பாவாய்


விளக்கம்:
தினம் ஒரு திருப்பாவை  - Page 2 Sssssssssssssssssssssssssssss" திருப்பாற்கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமிர்தம் தந்தருளிய கண்ணபிரானை, கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனை, பூர்ண சந்திரன் போன்ற முகத்தையுடைவனை, ஆபரணங்களை அணிந்த ஆயர்பாடி மகளிரை பறை என்ற பெயரில் அடிமையாக்கிக் கொண்ட கண்ணனின் வரலாற்றை, ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த புதிய தாமரை மலர்களாலான மாலையை உடுத்திய அந்தணருமான பெரியாழ்வாரின் திருமகளான ஆண்டாளால் அருளிச் செய்த தமிழ் பாமாலை முப்பது பாடல்களையும் தவறாமல் ஆர்வத்துடன் உள்ளத்தூய்மையுடன் பாடுபவர்கள், மாலையணிந்த நான்கு திருத்தோள்களையும், சிவந்த கண்களையும், அழகிய முகத்தையும் எல்லா செல்வங்களையும் உடைய திருமகளை நாதனாய் பெற்ற ஸ்ரீமன் நாராயணின் திருவருள் பெற்று, எப்பொழுதும், எவ்வித குறையுமின்றி பேரின்பத்துடன் வாழ்வார்கள்."



தினம் ஒரு திருப்பாவை  - Page 2 Ssssssssssssssssssssssssssss


இத்துடன் திருப்பாவை முற்றிற்று.

ஆண்டாள் திருவடிகளே சரணம்.


kala-tamilforu.blogspot.in


Last edited by முழுமுதலோன் on Sun Jan 12, 2014 2:55 pm; edited 1 time in total (Reason for editing : திருத்தம்)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு திருப்பாவை  - Page 2 Empty Re: தினம் ஒரு திருப்பாவை

Post by முரளிராஜா Mon Jan 13, 2014 8:23 am

திருப்பாவையை தொடர்ந்து வழங்கியமைக்கு நன்றி அண்ணா.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தினம் ஒரு திருப்பாவை  - Page 2 Empty Re: தினம் ஒரு திருப்பாவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum