தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தினம் ஒரு திருவெம்பாவை

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

தினம் ஒரு திருவெம்பாவை  - Page 2 Empty தினம் ஒரு திருவெம்பாவை

Post by முழுமுதலோன் Mon Dec 16, 2013 8:09 am

First topic message reminder :

தினம் ஒரு திருவெம்பாவை  - Page 2 Images+%25282

திருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -1



ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்.


தோழியர்: துவக்கம் இறுதி இல்லாத அரிய பெரிய சோதியை நாங்கள் பாடுகின்றொம். அதைக் கேட்டும் வாள் போன்ற அழகிய கண்களை உடைய நீ தூங்குகின்றாயே ! உன் காதுகள் உணர்ச்சியற்றுப் போய்விட்டனவா ? பெருந்தேவனான சிவபெருமானின் அழகிய கழல்களை வாழ்த்திய வாழ்த்தொலி வீதியின் துவக்கத்தில் கேட்ட அந்தக் கணத்திலேயே விம்மி விம்மி மெய்ம்மறந்து தான் இருக்கும் மலர் நிறைந்த படுக்கையிலேயே தன்னை மறந்து ஒருத்தி கிடக்கிறாள். அவள் திறம் தான் என்னே ! இதுவோ உன்னுடைய தன்மை, எம் தோழி ?!

மாது - பெண்; வளருதி - தூங்குகின்றாய்; போது - மலர்; அமளி - படுக்கை.


http://kala-tamilforu.blogspot.in/


Last edited by முழுமுதலோன் on Mon Dec 16, 2013 8:10 am; edited 1 time in total (Reason for editing : பிழை திருத்தம்)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down


தினம் ஒரு திருவெம்பாவை  - Page 2 Empty Re: தினம் ஒரு திருவெம்பாவை

Post by முழுமுதலோன் Wed Jan 08, 2014 8:15 am

திருப்பள்ளி எழுச்சி#4
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்;
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

பொருள்:
சிலர் வீணை, யாழ் போன்ற இசைக்கருவிகளுடன் இன்னிசை எழுப்புகின்றனர். சிலர் ரிக்வேதம் போன்ற தோத்திரங்களால் துதிக்கின்றனர், தொடுத்த மாலைகளுடன் சிலர் காத்து நிற்கின்றனர், அன்பு மேலீட்டால் சிலர் தொழுதவண்ணமும் சிலர் அழுதவண்ணமும் நிற்கின்றனர்; மகிழ்ச்சி மேலீட்டால் சிலரது தொழுத கைகள் தன் வசமிழந்து துவண்டு விட்டன. திருப்பெருந்துறைத் தலைவனே! இவர்களுக்கு அருளவும் என்னை ஆட்கொள்ளவும் பள்ளி எழுந்தருள்வாய்!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு திருவெம்பாவை  - Page 2 Empty Re: தினம் ஒரு திருவெம்பாவை

Post by முழுமுதலோன் Thu Jan 09, 2014 7:57 am

திருப்பள்ளி எழுச்சி#5
பூதங்கள் தோறுநின் றாயெனின் அல்லாற்
"போக்கிலன் வரவிலன்" எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுத லல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை யாண்டருள் புரியும்
எம்பெருமான்; பள்ளி எழுந்தருளாயே!

பொருள்:
ஐம்பூதங்களிலும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன், போக்கும் வரவும் இல்லாதவன் என்றெல்லாம் உன்னைப் புலவர்கள் புகழ்கின்றனர். பக்தி மேலீட்டால் சிலர் பாடுகின்றனர், சிலர் ஆடுகின்றனர். ஆனால் உன்னை நேரே பார்த்தறிந்தவர்கள் யாரையும் நாங்கள் கேள்விப்படவில்லை. குளிர்ந்த, பசுமையான வயல்கள் சூழ்ந்த, திருப் பெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே! நினைத்தற்கும் அருமையானவனே! நாங்கள் உன்னை நேரே காணும்படி பள்ளி எழுந்தருள்வாய்!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு திருவெம்பாவை  - Page 2 Empty Re: தினம் ஒரு திருவெம்பாவை

Post by முழுமுதலோன் Fri Jan 10, 2014 8:36 am

திருப்பள்ளி எழுச்சி#6
பப்பற வீட்டிருந் துணரும் நின் அடியார்
பந்தணை வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானிடத் தியல்பின்
வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா!
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந்த துறையுறை சிவபெரு மானே!
இப்பிறப் பறுத்தெமை யாண்டருள் புரியும்
எம்ம்பெருமான்; பள்ளி எழுந்தருளாயே!

பொருள்:
மனத்தின் அலைச்சல் அடங்கி, உன்னடி நாடி நிற்கின்ற உன் அன்பர்கள் உன்னை வணங்குகின்றனர். அவர்களுள் பலர் பற்று விட்ட பெண்கள். அவர்களும் சாதாரணமானவர்கள் போலவே உன்னை வணங்கி மகிழ்கிறார்கள். செந்தாமரை மலர்களும் குளிர்ந்த நீர் நிறைந்த பசுமையான வயல்களும் சூழ்ந்த திருப்பெருந்துறையில் கோயில் கொண்டருளும் சிவபெருமானே! பார்வதியின் நாயகனே! எங்கள் பிறவித் துன்பத்தை அறுத்தெறிந்து அருள் புரியப் பள்ளி எழுந்தருள்வாய்!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு திருவெம்பாவை  - Page 2 Empty Re: தினம் ஒரு திருவெம்பாவை

Post by முழுமுதலோன் Sat Jan 11, 2014 8:32 am

திருப்பள்ளி எழுச்சி#7
அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்;
இதுஅவன் திருவுரு, இவன்அவன் எனவே
எங்களை ஆண்டு கொண்டிங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தரகோச
மங்கையுள்ளாய்; திருப்பெருந்துறை மன்னா!
எதுவெமைப் பணிகொளும் ஆறுது கேட்போம்;
எம்பெருமான்; பள்ளி எழுந்தருளாயே!

பொருள்:
தேன் சொரியும் மலர்ச் சோலைகள் சூழ்ந்த திருவுத்தரகோச மங்கை திருத்தலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் சிவபெருமானே! திருப்பெருந்துறை அரசே! பரம்பொருளாகிய பழச்சுவை போன்று தித்திப்பானதா? தேவாமிர்தம் போன்றதா? அறிய முடியாததா? எளிதானதா? என்று தேவர்களாலும் அறிய முடியாதது. ஆனால் " இதுவே அவனுடைய திருவுருவம், இவனே அந்த கருணைக்கடல் சிவ பெருமான்" என்று நாங்கள சுட்டிக் காட்டி சொல்லும்படி எளி வந்த கருணையினால் எங்களை அடிமையாக ஏற்றுக் கொண்டு இந்த மண்ணிலே எழுந்தருள்வாய்! நீ எங்களை ஏவல் கொள்ளும் முறைமை எது? எம்பெருமானே! அந்த முறைமையை நீ எங்களுக்கு அருளினால் அவ்வாறே நாங்களும் ஒழுகுவோம்! எம்பெருமானே எங்களுக்கு அருள பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு திருவெம்பாவை  - Page 2 Empty Re: தினம் ஒரு திருவெம்பாவை

Post by முழுமுதலோன் Sun Jan 12, 2014 9:28 am

திருப்பள்ளி எழுச்சி#8
முந்திய முதல் நடு இறுதியு மானாய்
மூவரு மறிகிலர் யாவர்மற்றறிவார்
பந்தணை விரலியும், நீயும் நின்னடியார்
பழங்குடில் தொறும் எழுந் தருளிய பரனே!
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெறுந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தண னாவதுங் காட்டி வந் தாண்டாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!

பொருள்:
எங்கும் நிறைந்த அமுதமே! அனைத்துக்கும் முற்பட்ட முதலும், நடுவும், முடிவும் ஆனவனே! பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூவரும் உன்னை அறிய முடிந்தவர் அல்லர். வேறு யார் அறிவர்? இத்தகைய அருமையுடைய நீ, பந்து வந்து அணைகின்ற விரல்கள் உடைய உமாதேவியோடும், உன் அடியவர்களின் பழைய குடிசைதோறும் எழுந்தருளியிருக்கிறாய்! பரம்பொருளே! சிவந்த தழல் போன்ற உன் திருமேனிக் காட்சி தந்து, திருப்பெருந்துறையில் நீ அமர்ந்த திருக்கோயிலையும் காட்டி, என் குருமூர்த்தியாக அந்தண வேடத்தையும் காட்டி, வலிய வந்து, என்னை அடிமையாக ஏற்றாய்! பள்ளி நீங்கி எழுந்தருள்வாயாக!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு திருவெம்பாவை  - Page 2 Empty Re: தினம் ஒரு திருவெம்பாவை

Post by முழுமுதலோன் Sun Jan 12, 2014 2:52 pm

திருப்பள்ளி எழுச்சி#9
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே! உனதொழும்படி யோங்கண்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே!
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே!
கடலமுதே! கரும்பே! விரும்படியார்
எண்ணகத்தாய் உலகுக்குயி ரானாய்
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே.

பொருள்:
வானுலகில் உள்ள தேவர்களும் அடைய முடியாத மெய்ப்பொருளே! இந்த மண்ணுலகில் வந்து உன்னுடைய அடிமைகளாகிய எங்களை வாழச் செய்த வள்ளலே! வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் அமர்ந்த அரசே! பரம்பரை அடியவர்களான எங்களுடைய கண்ணினுள்லே நின்று காணும் பொருளில் எல்லாம் நின் வடிவம் காட்டிக் களிப்பை வழங்கும் தித்திக்கும் தேனே! பாற்கடலில் தோன்றிய அமுதமே! நெஞ்சில் இனிக்கும் கரும்பே! அன்பு செய்யும் மெய்த்தொண்டர்களின் எண்ணத்துள் என்றும் நிறைந்தவனே. உலகம் அனைத்திற்கும் உயிரானவனே! பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு திருவெம்பாவை  - Page 2 Empty Re: தினம் ஒரு திருவெம்பாவை

Post by முழுமுதலோன் Sun Jan 12, 2014 2:53 pm

திருப்பள்ளி எழுச்சி #10
புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப்பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று " நோக்கித்
திருப்பெருந் துறையுறைவாய்! திருமாலாம்
அவன்விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் லர்ந்தன மெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெம்மை ஆட்கொள்ள வல்லாய்;
ஆரமுதே; பள்ளி எழுந்தருளாயே.
பொருள்:
எங்கும் நிறைந்த அமுதமே! சிவபெருமான் உயிர்களுக்கெல்லாம் ஈடேற்றம் வழங்கி ஏற்றுக்கொள்வது, இந்த மண்ணுலகத்தின் வழியாகவே என்னும் உண்மையைத் திருமாலும், நான்முகனும் கண்டனர். மண்ணுலகத்தில் நாம் போய்ப் பிறக்காததால் வாழ்நாளையெல்லாம் வீணாகக் கழிக்கின்றோமே என்று, அவர்கள் இருவரும் ஏங்குகின்றனர்; இப்படி, திருமால் விரும்பும்படியாகவும், நான்முகன் ஆசைப்படும்படியாகவும், உன் மலர்ந்த மெய்க் கருணையும் நீயுமாக இம்மண்ணுலகிற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனே! பள்ளியினின்றும் எழுந்த்தருள்வாயாக!
http://www.searchko.in/Music/ezhuchi.html
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு திருவெம்பாவை  - Page 2 Empty Re: தினம் ஒரு திருவெம்பாவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum