தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்

View previous topic View next topic Go down

அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்  Empty அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 2:23 pm

.எழுவகைப் பிறப்புகளில் தேவர்களின் பிறப்பு எது?
 முதல் பிறப்பு.

 2.உயிர் வர்க்கத்தில் அண்டஜம் என்பது என்ன?
 முட்டையில் தோன்றுவன.

3.உலகத் தோற்றத்தின் தொடக்கம் என்பது என்ன?
  பஞ்ச பூதங்களால் மாய்ந்து கிடக்கும் உலகை  இறைவன் திரும்பப் படைப்பது.

4.சகலரிடம் இருக்கும் மலங்கள் எவை?
 ஆணவம், கன்மம், மாயை.

5.பட்டினத்தார் பாடியவை எவை?
 கோயில் நான்மணிமாலை, திருவிடைமருதூர்  மும்மணிக்கோவை.

 6.சூரியக் கடவுளை குறிக்கும் வேறு சொற்கள் என்ன?
 இரவி, வெய்யோன், பகலவன்.

 7.ஐந்தாம் வேதம் என்று சிறப்பித்துக் கூறப்படுவது எது?
 மகாபாரதம்

8."தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' } அருளியது யார்?
 மாணிக்கவாசகர்.

9.ஞானத்தைக் கையால் காட்டும் அடையாளம் எப்படி அழைக்கப்படுகிறது?
 சின் முத்திரை.

 10."உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பாலயம்' என்று பாடியவர் யார்?
 திருமூலர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்  Empty Re: அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 2:24 pm

1. பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு என்ன பெயர்?
     திரவிய சுத்தி.

2. வாசனை தீர்த்தத்தை ஈசுவர பிரீதிக்காக சமர்ப்பித்தலுக்கு என்ன பெயர்?
      பாநீயம்

3. ஆன்மாவுக்குரிய  ஞானமுடைமையை ராமானுஜர் அழைப்பது எவ்வாறு?
     பக்தி ஞானம்

4. பகவான் கிருஷ்ணனின் உபதேசமாக இருப்பது எது?
     கடமையை செய்; அதன் பலனில் பற்று வைக்காதே

5. "நல்லவர்க்கில்லை நாளும் கோளும்' என்று உரைத்தவர் யார்?
     திருஞானசம்பந்தர்.

6. திருஞான சம்பந்தரை குறிக்கும் பாராட்டு மொழிகள் எவை?
     ஞானத்திருவுரு, நான்மறையின் தனித்துணை.

7. தேவாரத்தின் பொருள் என்ன?
     தேவனுக்குரிய மாலைகள்.

8."காரி உண்டிக் கடவுள்' என்று புறநானூற்றுத் தொடரில் வருகின்ற "கடவுள்'
    சிவபெருமான்.

9. கோயில் வடிவமைப்பில் வேசர என்பது என்ன?
     அரை வட்ட வடிவ விமானம்.

10. மந்திரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
       சப்தப் பிரம்மம் அல்லது அட்சரப் பிரம்மம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்  Empty Re: அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 2:24 pm

வங்க மொழியில் இராமாயணம் இயற்றி யவர் யார்?
 கிருத்திவாஸ்

2.திருவிக்கிரம பெருமாள் (உலகளந்த  பெருமாள்) எங்கு உள்ளார்?
 திருக்கோவிலூர்.

3.மயிலையில் அவதரித்த ஆழ்வார் யார்?
 பேயாழ்வார்

4.பாயசம், சர்க்கரை பொங்கல் இவற்றை வைணவத்தில் எப்படிக் கூறுவர்?
 திருக்கண்ணமுது, அக்கார அடிசில்.

5.திருக்கோயில்களை சுத்தப்படுத்தும் துடைப்பத்தின் பெயர் என்ன?
 திருவலகு.

6.இரு வகை ஞானங்கள் எவை?
 பரஞானம், அபரஞானம்.

7.கந்தர் அலங்காரத்தில் பலமுறை 
 குறிப்பிடப்படும் தலம் எது?
 திருச்செங்கோடு.

8.சிக்கல் முருகனின் சிறப்புப் பெயர் என்ன?
 வியர்வை சிந்தும் வேலவன்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்  Empty Re: அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 2:25 pm

1. எந்தெந்த தளைகளின் நீக்கம் மேலான முடிந்த நிலை எனக் கருதப்படுகிறது?
ஆணவம், கன்மம், மாயை.

2. உயிர்கள் வீடு பெறுவதற்காக பின்பற்றப்படும் நெறிகளில் தொண்டு நெறி என்பது என்ன?
பக்தி மார்க்கம்.

3. பெரிய புராணம் முன் வைக்கும் மக்களின் குறிக்கோள் எவை?
தொண்டு நெறி, பக்தி நெறி.

4. வைணவ வேதங்கள் எனப்படுபவை எவை?
பிரபந்தங்கள்.

5. "காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி' என்று தொடங்கும் தோத்திர மாலையை எழுதியவர் யார்?
சம்பந்தர்

6. "சிவஞான சித்தியார்' என்ற நூலை இயற்றியவர் யார்?
சிவாச்சாரியார்.

7. தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, நரசிம்மர் போன்ற திருமேனிகள் உள்ள புடைப்புருவம் இருக்கும் பகுதிக்கு என்ன பெயர்?
தேவ கோஷ்டம்

8. மகாபாரதத்தில் முருகனுடைய இன்னொரு பிறப்பின் பெயர் என்ன?
ஸ்கந்தன்

9. ஒளவையார் பாடிய கணபதி தோத்திரத்தின் பெயர் என்ன?
விநாயகர் அகவல்.

10,. இறைவன் 5 வகை தொழில்களை நடத்த எவ்வகை சக்தி துணை புரிகின்றது?
இச்சை, கிரியை, ஞானம் என மூன்றும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்  Empty Re: அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 2:26 pm

1."இருமொழிக்கும் கண்ணுதலார் முதற் குரவர்' என  சிவபிரானைக் குறிப்பிடுபவர் யார்?
 சிவஞான முனிவர் (காஞ்சிப் புராணம்).

 2.சந்தியா வந்தனம், திருவைந்தெழுத்து எண்ணுதல், தொண்டு புரிதல் முதலியவை எதில் அடங்கும்?
 கிரியை

 3.சிவபிரானை "ஒருவன் என்னும் ஒருவன் காண்க' 
 என்றருளிச் செய்தவர் யார்?
 மாணிக்கவாசகர் (திருவாசகம் - திருக்கண்டப்பகுதி).

 4.சிவப்பிரகாசம் எனும் சாத்திரத்தை இயற்றியவர் யார்?
 உமாபதி சிவம்.

 5.துவஜஸ்தம்பம் என்பது என்ன?
 கொடிக்கம்பம்

 6.தாயுமானவர் இயற்றிய பாடல் தொகுப்புகளை 
 எவ்வாறு அழைப்பர்?
 கண்ணி

 7.கிருத்திகை யாருக்கு உகந்த தினம்?
 முருகனுக்கு.

 8.இறைவனது ஐந்து முகங்களிலிருந்தும் தோன்றிய ஆகமங்கள் எத்தனை?
 இருபத்து எட்டு

 9.நவராத்திரி விழாவில் இரண்டாவது மூன்று நாட்கள் வணங்கப்படும் தேவி யார்?
 லட்சுமி தேவி.

 10.அர்ச்சுனனின் துக்கத்தைப் போக்கி கலக்கத்தை தெளிய வைப்பது எது?
 கீதா உபதேசம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்  Empty Re: அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 2:26 pm

1.ஞானத்தைக் காட்டும் அடையாளச் சின்னம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? -சின்முத்திரை

2. எல்லா உலகங்களையும் படைத்ததற்குக் காரணமான மூலப்பிரகிருதியின் இடம் எது? - கர்ப்பக்கிரகம்

3.பீடத்தில் உள்ள விக்கிரகத்தில் இறைவனை அமர்த்துவதற்கு என்ன பெயர்? - ஸ்தாபனம் (ஸ்தாபித்தல்...).

4.சோடசோபசாரங்கள் என்பது என்ன? - இறைவனுக்குரிய பூஜையில் செய்யப்படும் 16 உபசாரங்கள்

5. மகாசங்காரத்தில் எஞ்சி நிற்பது எது? - இறைவனும், அவனுடைய அருளும்.

6.12ஆம் திருமுறை எனப் போற்றப்படுவது எது? - பெரிய புராணம்

7. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்' என்பன போன்ற அரிய தொடர்களை எந்த நூலில் காணலாம்? - திருமந்திரம்

8. சுவாமி விவேகானந்தர் ராமகிருஷ்ணரை சந்திக்க காரணமாக இருந்தவர் யார்? - வில்லியம் ஹேஸ்டி

9. சுவாமி விவேகானந்தரின் தாயார் பெயர் என்ன? - புவனேசுவரி

10. இராமகிருஷ்ணரின் மனைவி பெயர் என்ன? - சாரதாம்பாள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்  Empty Re: அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 2:27 pm

1. பட்டினத்தார் சமாதிக்கோயில் எங்கு உள்ளது?
திருவொற்றியூர்
 
2. பட்டினத்தாரின் தாயின் பெயர் என்ன?
ஞானக்கலை அம்மையார்

3. சுவாமி விவேகானந்தர் எந்த வருடம் சிகாகோவில் சொற்பொழிவாற்றினார்?
1893

4.திருநாவுக்கரசரின் தமக்கை பெயர் என்ன?
திலகவதி அம்மையார்


5."நமசிவாய' எனும் திருநாமத்தில் "ய' எதனைக் குறிக்கும்?
ஆன்மா

6.மரணத்திற்கு முன்பே உயிர்கள் வீடு பேறு அடையும் நிலையை எப்படிக் குறிப்பிடுவர்?
ஜீவ முக்தி
 
7.பும்ஸவனம் எனும் சடங்கின் பொருள் என்ன?
கருவுற்ற பெண்ணுக்கு மூன்றாவது மாதத்தில் செய்யப்படும் சடங்கு.

8.தாவரம் முதலான அனைத்து உயிரினங்களிலும் ஆன்மா உள்ளது என அறிந்தவர் யார்?
கபிலர்

9. கடவுளுக்கு உயிர்பலியிடுதல் கூடாது என்று வலியுறுத்தியவர் யார்?
வள்ளலார்

10. சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவிய ஆண்டு எது?
1865.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்  Empty Re: அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 2:28 pm

1.குண்ட மண்டலங்கின்றி ஹோமத்தை மனதால் செய்வதற்கு என்ன பெயர்?
 யோக தீக்கை.

 2.ஒரு புதல்வனைப் போல இறைவன் அருகில் அமர்ந்து இன்புறும் பதவியை அடைவதற்கு பெயர் என்ன?
 சாமீபம்

 3.இறைவனின் திருவுருவம் போன்ற ஓர் உருவம் தாங்கி இறை இன்பம் பெறும் பதவியை அடைவதற்கு என்ன பெயர்?
 சாரூபம்.

 4முக்தி நிலை அடைவதற்கு வழியாகிய ஞானம் பெறுவதற்கு என்ன பெயர்?
 பரா

 5.ஈசுவரன் திருமேனி கொண்டிருக்கும் உலகத்தை அடைந்து இன்புறுவதற்கு என்ன பெயர்?
 சாலோகம்.

 6.நாதமுனி, ராமானுஜர், யமுனாச்சாரியார் மூவரும் எந்த சமய தத்துவ குருமார்கள்?
 வைணவ சமயத் தத்துவ குருமார்கள்.

 7திருவிருத்தம், திருவாய்மொழி,திருவாசிரியம் மூன்றும் எந்தத் தொகுப்பில் உள்ளன?
 நாலாயிர திவ்யப் பிரபந்தத் தொகுப்பு.

 8.பாஞ்சராத்திர வகைகளில் முனிவர்களால் உரைக்கப்பட்டதை எவ்வாறு அழைப்பர்?
 முனிபாஷிதம்

 9.பாஞ்சராத்திர வகைகளில் மனிதர்களால் கூறப்பட்டதை எவ்வாறு அழைப்பர்?
 மானுஷீயம்

 10.நான்முக உருத்திராட்சத்தின் அதிதேவதை யார்?
 பிரம்மா.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்  Empty Re: அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 2:29 pm

1. சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யும் தொழில்கள் யாவை?
 படைத்தல், காத்தல், அழித்தல், அருளல்,  மறைத்தல்.

2. சிவபெருமான் ஐந்து தொழில்களையும் எதைக்கொண்டு செய்வார்?
 தமது சத்தியைக் கொண்டு செய்வார்.

3. சத்தி என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன?
 வல்லமை

4. திருநீறு அணிதல் எத்தனை வகைப்படும்?
 இரண்டு வகைப்படும். 1. நீர் கலவாது பொடியாக (உத்தூளனம்) அணிதல், 2. நீர் கலந்து முக்குறியாக ( திரிபுண்டரம் ) அணிதல்.

5. திரிபுண்டரமாகத் தரிப்பதன் அறிகுறி என்ன?
ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களையும் நீக்குமென்கிற குறிப்புத் தோன்றத் தரிப்பது.

6. குளிக்கும் காலத்தில் உருத்திராட்சத்தை அணியலாமா?
அணியலாம். குளிக்கும் பொழுது உருத்திராட்ச மணியில் பட்டு வடியும் நீர் கங்கை நீருக்குச் சமம்.

7. உருத்திராட்சத்தில் எத்தனை முகமணி வரை உண்டு?
 ஒருமுக மணி முதல் பதினாறு முக மணி வரை உண்டு.

8. உருத்திராட்சம் தரிக்கத் தக்க இடங்கள் எவை?
 குடுமி, தலை, காதுகள், கழுத்து, மார்பு, புயங்கள், கைகள் ஆகியவை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்  Empty Re: அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 2:29 pm

1. "திருவுந்தியார்' அருளிச் செய்தவர் யார்?
 உய்யவந்த தேவ நாயனார்.

2. "திருக்களிற்றுப்படியார்' அருளிச் செய்தவர் யார்?
 திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார். 

3. "சிவஞானபோதம்' அருளிச் செய்தவர் யார்?
 திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர்.

4. திருக்கயிலாய பரம்பரை சந்தானக் குரவர் எனப் பெயர் பெறும் நால்வர் யார்?
 மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்த சிவாச்சாரியார், உமாபதி சிவாச்சாரியார் 

5. மானசபூசை என்பது என்ன?
  பெருமானுக்கு மனதினாலே அபிஷேகம்  முதலிய பூசையை பாவனையாகச் செய்தல்.

6. பாண லிங்கங்கள் என்பன யாவை?
 பாணன் என்னும் பக்தரால் பூஜை செய்யப்பட்டவை 7. பாண லிங்கங்கள் எங்கே இருக்கின்றன?
 நர்மதை நதியில் இருக்கின்றன.

8. பதினாறு வகை தானங்கள் எவை?
 அன்ன தானம், வஸ்திர தானம், கன்னிகா தானம், பூ தானம், இரணிய தானம், கோ தானம், உபயமுகி தானம், மகிஷ தானம், அஸ்வ தானம், சுவேதாஸ்வ தானம், கால தானம், காளமுகி தானம், மகாமேரு தானம், கற்பகவிருட்ச தானம், வித்யா தானம், மகா தானம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்  Empty Re: அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 2:30 pm

1. சூரிய வழிபாட்டைக் கூறும் சமயத் தத்துவம் எது? 
செüரம்

2. சூரியனுக்கு என்று அமைந்த கோயில் எங்கு உள்ளது?
ஒரிசா மாநிலம் கொனார்க் சூரியன் கோவில்

3. தமிழகத்தில் சூரியனுக்கு அமைந்த கோயில் எது?
தஞ்சை மாவட்டத்தில் உள்ள சூரியனார் கோவில்

4. சூரியனை வழிபட சிறப்பாக அமைந்த துதி எது?
ஆதித்ய ஹ்ருதயம்

5. ஆதித்ய ஹிருதய துதியை உபதேசம் செய்தவர் யார்?
அகத்தியர். ராமபிரானுக்கு உபதேசித்தார். 

6. கதிரவனின் உருவத்தை எந்த உலோகத்தில் செய்தல் சிறப்பாகக் கூறப்படுகிறது? 
தாமிரத்தில் செய்வது

7. சூரியனை வழிபட உகந்த நாள் எது?
மகர சங்கராந்தி எனப்படும் நாள். 
தமிழகத்தில் தைப் பொங்கல் திருநாள். 

8. சூரியனின் அதிதேவதை பிரத்யதி தேவதை யாவர்?
அதிதேவதை- அக்னி. பிரத்யதி தேவதை- ருத்ரன்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்  Empty Re: அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 2:31 pm

1. ""தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும், மறுபடி தருமம் வெல்லும்'' என்று உரைத்த கவிஞர் யார்?
 சுப்பிரமணிய பாரதியார்

 2. அர்த்தநாரீசுவரத் தலம் எது?
 திருச்செங்கோடு.

 3. ""கௌட தேசம்'' தற்போது எந்த மாநிலமாகியுள்ளது?
 மேற்கு வங்கம்

 4. சிவன் - சக்தி - திருமால் இவர்களின் சாம்யம் (சமநிலை) பற்றிக் கூறும் நூல் எது?
 இரத்தினத்ரய பரிட்சை.

 5. இரத்தினத்ரய பரிட்சையை இயற்றியவர் யார்?
 அப்பய தீட்சிதர்.

 6. பூதநாத உபாக்யானம் எந்த தெய்வத்தைப் பற்றி உரைக்கிறது?
 சாஸ்தா(அய்யனார்).

 7. மிருகண்டு முனிவரின் குமாரர் யார்?
 மார்கண்டேயர்

 8. பதஞ்சலி இயற்றிய மருத்துவ நூலின் பெயர் என்ன?
 சரகம்

 9.அறிவியலும் சமயமும் இணைந்தே செல்ல வேண்டும் எனக்கூறிய விஞ்ஞானி யார்?
 ஐன்ஸ்டீன்

 10. இராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர் என்ன?
 கதாகரன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்  Empty Re: அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 2:31 pm

1. விநாயகர் போற்றும் குருமந்திரப் பாடல் எது?

ஐந்து கரத்தனை (திருமூலர் பாடியது)
 

2. உடலில் இருக்கும் ஆறு ஆதாரங்களில் விநாயகருக்கு உரியது எது?

மூலாதாரம்
 

3. தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் அருளும் தலம் எது?

திருவையாறு அருகில் உள்ள தில்லைத்தானம்
 

4. தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக்கும் மரத்தை எவ்வாறு கூறுவர்?

கல்லால மரம்
 

5. தட்சிணாமூர்த்தியின் திருவடியின் கீழ் இருப்பதன் பெயர் என்ன?

முயலகன்
 

6. விஷ்ணுவின் அவதாரங்களைக் கூறும் புராணத்தின் பெயர் என்ன?

ஸ்ரீமத் பாகவத மகாபுராணம்
 

7. விஷ்ணு என்ற சொல்லின் பொருள் என்ன?

எங்கும் நிறைந்தவர், ரட்சகர், யாவையும் படைத்துக் காப்பவர் என்பதாகும்.
 

8. பகவத் கீதையில் உள்ள அத்தியாயங்கள் எத்தனை?

பதினெட்டு (18)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்  Empty Re: அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 2:32 pm

1. உத்திஷ்ட்டத, ஜாக்ரத- எனும் எழுந்திரு, விழித்துக் கொள் என்பது எந்த உபநிடத
வாக்கியம்?

     கட உபநிடதம்

2. வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி என இறைவனைப் பாடும் பாடல் எதில் வருகிறது?

    திருவாசகத்தில்

3. வைனதேயன் எனப்படுபவர் யார்?

    வினதையின் புதல்வனான கருடன்

4. துளசி தாசர் ஹிந்தி மொழியில் எழுதிய

ராமாயணத்தின் பெயர் என்ன?

     ஸ்ரீராமசரித மானஸ்

5. "நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்' என பாடியவர் யார்?

     திருமங்கையாழ்வார்

6. ஜீவாத்மாக்களின் மூன்று வகைகள் என்னென்ன?

    பக்தர், முக்தர், நித்யர்

7. வேதம் தமிழ் செய்த மாறன், வகுளாபரண சடகோபர் என்று போற்றப்படும் ஆழ்வார் யார்?

     நம்மாழ்வார்

8. சூரசம்ஹாரம் நடைபெறாத முருகனின் அறுபடைவீடு எது?

     திருத்தணி
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்  Empty Re: அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 2:33 pm

1. கீதையில் எத்தனை அத்தியாயங்கள் உள்ளன?

    18

2. கீதையில் எத்தனை ஸ்லோகங்கள் உள்ளன?

    700

3. கீதை சரம ஸ்லோகம் "சர்வ தர்மான் பரித்யஜ்ய' எந்த அத்யாயத்தில் உள்ளது?

   அத். 18 - மோட்சஸந்யாஸ யோகம்

4. அர்ஜுனன் மனம் குழம்பி கேள்வி கேட்கும் அத்யாயம் எது?

     அர்ஜுன விஷாத யோகம்

5.  தர்மத்தை நிலைநாட்ட யுகந்தோறும் அவதரிப்பேன் என்று கிருஷ்ணர் எந்த அத்யாயத்தில் கூறினார்?

    ஞான கர்ம சந்யாச யோகம்

6. கர்ம யோகத்தின் உட்பொருள் என்ன?

    பலன் மீது பற்று வைக்காமல் கர்மத்தைச் செய் என்பது.

7. கிருஷ்ணரின் விஸ்வரூபம் எந்த அத்தியாயத்தில் கூறப்படுகிறது?

     அத். 11 - விஸ்வரூப தர்சன யோகம்

8. கீதையில் கர்மம், பக்தி, ஞானம் பற்றிக் கூறும் அத்யாயங்கள் எவை?

    முதல் 6 அத்யாயங்களில் பயனில் பற்றின்றி கர்மம் செய்வது, நடு 6ல் பக்தி மார்க்கம்,  கடைசி 6ல் ஞான மார்க்கம் கூறப்படுகிறது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்  Empty Re: அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 2:34 pm

1.பொன்னூசல் பாடல்கள் எந்தத் தலத்து இறைவன் மீது இயற்றப்பட்டவை?
 திரு உத்தரகோசமங்கை

 2.தாருகாவனத்தில் ஈசன் எடுத்த கோலம் எது?
 பிட்சாடனர்

 3.சைவத்தில் பஞ்ச புராணங்கள் என போற்றப்படுபவை எவை?
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்

 4.சரப மூர்த்தியின் சந்நிதி உள்ள தலம் எது?
 திருபுவனம்

 5.எந்தத் தலத்தில் தவமியற்றி அம்பிகை ஈசன் உடலில் பாதியைப் பெற்றார்? 
 திருக்கேதாரம்

 6.ஒன்பது கோள்களில் முதல்வனாய் இருப்பதால் சூரியனுக்கு ஏற்பட்ட பெயர் எது?
 ஆதித்யன்

 7.சங்கிலி நாச்சியார் பிறந்த ஊர் எது?
 ஞாயிறு

 8.கார்த்திகை ஞாயிறு புனித நீராடல் நடைபெறும் தலம் எது?
 திருவாஞ்சியம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்  Empty Re: அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 2:35 pm

1. "பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா' எனப் பாடியவர் யார்?
 சுந்தரமூர்த்தி சுவாமிகள்

2. திருநீற்றுப் பதிகம் பாடியவர் யார்? 
 திருஞானசம்பந்தர்

3. "மந்திரமாவது நீறு' எனும் திருநீற்றுப் பதிகம் எதற்காகப் பாடப்பட்டது?
 பாண்டியனின் வெப்பு நோயைவிலக்கப் பாடியருளியது

4. வள்ளுவருக்கும் வாசுகிக்கும் தனிக் கோயில் இருக்கும் இடம் எது?
 சென்னையில் உள்ள மயிலாப்பூர்

5. "வாடினேன் வாடி வருந்தினேன்' என்று நாராயணன் நாமம் கண்டுகொண்ட  ஆழ்வார் யார்?
 திருமங்கையாழ்வார்

6. தொண்டரடிப்பொடியாழ்வாரின் இயற்பெயர் என்ன?
 விப்ரநாராயணர்

7. நம்மாழ்வார் பாடிய பிரபந்தங்கள் எவை?
 திருவாய்மொழி, திருவிருத்தம்,  திருவாசிரியம், பெரியதிருவந்தாதி

8. இறைவனைப் பாடாத ஆழ்வார் யார்?
 மதுரகவியாழ்வார்



http://www.no1tamilchat.com
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்  Empty Re: அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்

Post by செந்தில் Fri Jan 03, 2014 5:52 pm

கைதட்டல் அறிய தகவலுக்கு நன்றி அண்ணா  கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்  Empty Re: அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்

Post by முரளிராஜா Fri Jan 03, 2014 6:02 pm

நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்  Empty Re: அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 03, 2014 6:15 pm

8. இறைவனைப் பாடாத ஆழ்வார் யார்?
 மதுரகவியாழ்வார்

அப்ப எப்படி அவர் ஆழ்வார் ஆனார்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்  Empty Re: அறிந்தும் அறியாததும் - ஆன்மிக கேள்விகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum