Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கூகுள் டிரைவில் உள்ள வசதிகள்...!
Page 1 of 1 • Share
கூகுள் டிரைவில் உள்ள வசதிகள்...!
[You must be registered and logged in to see this image.]
கூகுள் தரும் பல வசதிகளில், நமக்கு மிகச் சிறப்பாக உதவுவது அதன் தேடுதல், மெயில் ஆகியவற்றை அடுத்து பைல்களைச் சேமிக்க உதவும் கூகுள் ட்ரைவ் ஆகும். இதன் மூலம், கூகுள் தரும் பல வசதிகளை ஒன்றிணைக்கலாம். சரியான டூல்களை செம்மைப் படுத்தி, செட்டிங்குகளை அமைத்தால், கூகுள் ட்ரைவ் வசதியை நமக்கு சில வேலைகளை மேற்கொண்டு செய்து தரும் வசதியாக மாற்றி விடலாம்.மேலும் இதை நமது ஆண்ட்ராய்டு மொபைலிலும் வைத்து இதை இலகுவாக பயன்படுத்தலாம் கூகுள் டிரைவ் பற்றிய சில விஷயங்களை இங்கு பார்ப்போம்...
1. இணைய இணைப்பு இல்லாமல்:
கூகுள் ட்ரைவ் என்பதே க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்குவதாகும். ஆனாலும், ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்து, செட்டிங்ஸ் மேற்கொண்டால், இணைய இணைப்பு இல்லாமலேயே, உங்கள் டாகுமெண்ட்களைப் பார்க்கலாம் மற்றும் திருத்தலாம். இதற்கான ஒரே தேவை, நீங்கள் கூகுள் தரும் குரோம் பிரவுசரைப் பயன்படுத்த வேண்டும்.
குரோம் பிரவுசரில் முதலில் கூகுள் ட்ரைவ் அப்ளிகேஷனை (https://chrome.google.com/web store/detail/googledrive/apdfllckaahabafndbhieahigkjlhalf) இன்ஸ்டால் செய்திடவும். அடுத்து drive.google.com என்ற இணைய தளம் செல்லவும். இதில் இடது பக்கம் கிடைக்கும் மெனுவில், "More" என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். அடுத்து "Offline" என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்த பட்டனில் கிளிக் செய்தால், உங்கள் கம்ப்யூட்டர், இணைய இணைப்பு இல்லாமலேயே, கூகுள் ட்ரைவ் பைல்களை இயக்க செட் செய்யப்பட்டுவிடும். நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும், இதனை செட் செய்தால் தான், கூகுள் ட்ரைவ் இணைய இணைப்பின்றி கிடைக்கும். ஆனால், கூகுள் குரோம் புக் பயன்படுத்தினால், மாறா நிலையில் கூகுள் ட்ரைவ் பயன்படுத்தும் வகையில் அது செட் செய்யப்பட்டே கிடைக்கிறது.
2. உங்கள் ஹார்ட் ட்ரைவுடன் கூகுள் ட்ரைவ்: இணைய இணைப்பு இல்லாமல், கூகுள் ட்ரைவ் பயன்படுத்தும் வசதியுடன், உங்கள் ஹார்ட் ட்ரைவுடன், கூகுள் ட்ரைவ் இணைக்கும் வசதியும் கிடைக்கிறது. கூகுள் ட்ரைவ் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் இணைப்பினை எளிதாக அமைக்கலாம்.
இதன் மூலம், நீங்கள் கூகுள் ட்ரைவில் சேமித்து வைத்துள்ள எந்த பைலையும், உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் பயன்படுத்தலாம். மேலும், கூகுள் ட்ரைவ் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் இடையே, எந்த பைலையும் இழுத்து வந்து இடம் மாற்றலாம்.
இந்த வசதியினைப் பெற, [You must be registered and logged in to see this link.] என்ற தளத்தில் கிடைக்கும் புரோகிராமினை, உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து வைக்க வேண்டும்.
இதனை இன்ஸ்டால் செய்த பின்னர், கம்ப்யூட்டரில் உள்ள போல்டர் ஒன்றை, கம்ப்யூட்டர் + கூகுள் ட்ரைவ் இருவழிப் போக்குவரத்திற்கென தனியே அமைக்க வேண்டியதிருக்கும். இதனை மேக் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டரிலும் அமைக்கலாம்.
3. கூகுள் ட்ரைவ் டாகுமெண்ட் ஒருங்கிணைப்பு:
மேலே சொல்லப்பட்ட ட்ரைவ் + கம்ப்யூட்டர் இணைப்பு, ட்ரைவில் உள்ள பைல்களை உங்கள் ஹார்ட் ட்ரைவில் வைக்கிறது. ஆனால், கூகுள் டாக்ஸ் (Google Docs) பயன்படுத்தி உருவாக்கப்படும் டாகுமெண்ட் மற்றும் ஸ்ப்ரெட் ஷீட்களை அவ்வாறு காண்பது எளிதல்ல.
அந்த பைல்கள் கூகுள் டாக்ஸ் பார்மட்டில் தான் சேவ் செய்யப்படும். அந்நிலையில், அவற்றை நம்முடைய லோக்கல் வேர்ட் ப்ராசசர் அல்லது எடிட்டரில் திறந்து மாற்றங்கள் செய்திட முடியாது.
இதற்கான வழி ஒன்றுhttp://www.syncdocs.com என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் உள்ளது. இங்கு, நம்முடைய கூகுள் ட்ரைவ் அக்கவுண்ட்டிற்கும், பெர்சனல் கம்ப்யூட்டருக்கும் ஓர் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நம் வேர்ட் டாகுமெண்ட் கூகுள் டாக்ஸ் பார்மட்டிலும், அவை நம் வேர்ட் பார்மட்டிலும் மாற்றிக் காணலாம்.
4. பைல்களை இழுத்துப் போட:
கூகுள் ட்ரைவிற்கு பைல் ஒன்றை வேகமாக மாற்ற வேண்டுமா? அப்லோட் கட்டளை என்றெல்லாம் குழப்பிக் கொள்ள வேண்டாம். உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து, கூகுள் ட்ரைவ் இணையதளத்திற்கு இழுத்து வந்து விட்டுவிடவும்.
ட்ரைவ் தானாக, அப்லோட் செயல்பாட்டினை மேற்கொண்டு, உங்கள் ஸ்டோரேஜ் பகுதியில், பைலை பதிந்து நிறுத்திவிடும். வேறு எந்த கூடுதல் வேலையும் மேற்கொள்ள வேண்டாம்.
5. படங்களை எளிதில் செருக:
கூகுள் டாக்ஸ் டாகுமெண்ட்டினை திருத்துகையில், திரையின் மேலாக உள்ள, அதன் கமாண்ட் பாரினைப் பயன்படுத்தி, எந்த ஒரு இமேஜையும் இடைச் செருகலாம். அதனைக் காட்டிலும் எளிதான வழி தேவை எனில், இமேஜை உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து அப்படியே இழுத்து வந்து, கூகுள் டாக்ஸ் பயன்படுத்தி உருவான டாகுமெண்ட்டில் விட்டுவிடலாம்.
உடனே, அங்கு இமேஜ் அளவினை மாற்றி அமைக்க டூல் ஒன்று காட்டப்படும். அதனைப் பயன்படுத்தி, இமேஜை உங்கள் விருப்பப்படி சரி செய்திடலாம்.
நன்றி [You must be registered and logged in to see this link.]
Similar topics
» கூகுள் தரும் புதிய வசதிகள்
» பெண் டிரைவில் ஏற்படும் வைரஸ் பிர்ச்சனைகளும் தீர்வுகளும்
» பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க...
» பென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி ?
» யூ டியூப் வசதிகள் அற்புதம்
» பெண் டிரைவில் ஏற்படும் வைரஸ் பிர்ச்சனைகளும் தீர்வுகளும்
» பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க...
» பென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி ?
» யூ டியூப் வசதிகள் அற்புதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum