தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வைகுண்ட ஏகாதசி விரத மகிமை

View previous topic View next topic Go down

வைகுண்ட ஏகாதசி விரத மகிமை Empty வைகுண்ட ஏகாதசி விரத மகிமை

Post by முழுமுதலோன் Fri Jan 10, 2014 4:53 pm

வைகுண்ட ஏகாதசி விரத மகிமை 77e3f30a-dc35-4a91-91d2-1d544da37c52_S_secvpf

மார்கழி மாதம் வந்த  உடனே   நம் மனதைக் குளிர வைக்க வரும் விரதம் வைகுண்ட ஏகாதசி விரதம் ஆகும்.கங்கையின் தீர்த்த மகிமையை போலும், காயத்ரி மந்திரத்தின் அதிர்வுகளின் ஆழமகிமையைப் போலும், கோயிலின் ஆகமத்தைவிட தாயின் அன்பு அறவணைப்பு விஞ்சியிருப்பதைப்போலும், திருமாலின் உன்னத கருணையைப்போல் விரதங்களில் சிறந்ததாக விளங்குவது  வைகுண்ட ஏகாதசி.
 
நமது வாழ்நாளில் ஒரு வருடம் தேவ வருஷத்தில் ஒரு நாள் ஆகிறது. அதில் தை முதல் ஆனி முடிய உள்ள ஆறு முதம் பகல் என்றும் ஆடி முதல் மார்கழி முடிய உள்ள ஆறு மாதம் ஒரு இரவு என்றும் உள்ளத்தில் இப்பகுதி இரவுக் காலத்தில் அதிக இருட்டும், மழையும், பனியும், குளிரும் பகல் பொழுது குறைந்தும் காணப்படுகின்றது. இத்தணத்தில் மார்கழி மாதத்தின் தேவ இருட்டுப் பொழுதில் அதாவது உஷக் காலம் எனும் அதிகாலை நான்கு மணி முதல் ஆறு மணி (பிரம்ம முகூர்த்தம்) உள்ள கால அளவில் வைகுந்த வாசல் திறக்கப்படுகின்றது. அவ்வேளையில் ஆலயங்களில் திருப்பள்ளி எழுச்சியும், திருப்பாவையும் படித்து பரந்தாமனுக்கு பொங்கல் பிரசாதங்களை நிவேதனம் செய்கின்றோம்.
வைகுண்ட ஏகாதசி அன்று பரந்தாமன் வைகுந்தத்தில் இருந்து சொர்க்கவாசல் வழியாக நமக்காக வந்து கருணை மழை பொழிகின்றார்.

சொர்க்க வாசல்:
 
மார்கழி மாதம் தேவர்களின் உஷக்காலம் எனப்படும் அதிகாலை நேரமாக இருப்பதால் வைகுந்த வாசல்கள் திறந்தே இருப்பினும் பகவான் அதன் வழியாக வெளியே வந்து காட்சி தரும் நாள் வைகுண்ட ஏகாதசி 

ஏகாதசியின் சிறப்பு:

 
ஒரு வருடத்தில் 25 ஏகாதசி விரத நாட்கள் வருகின்றன. வளர்பிறை ஏகாதசி என்றும், தேய் பிறை ஏகாதசி என்றும் ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு ஏகாதசிகள் உண்டு நாழிகை வேறுபாட்டினால் கூடுதலாக ஒரு ஏகாதசி நாள் வரும். ஆக இருபத்தைந்து ஏகாதசியும் விரதம் கடைபிடித்தால் வாழ்வின் உயர்ந்த அந்தஸ்துகள் நம்மைத் தேடிவரும். அனைத்து ஏகாதசியும் விரதம் கடைபிடிக்க முடியாவிட்டாலும் உதய காலத்தில் வைகுந்த வாசல் திறக்கும் மார்கழியில் வரும் வைகுந்த ஏகாதசி அன்று பகல் உண்ணாவிரதம் இருந்து இரவு கண்விழித்து விரதம் கடைபிடித்தால் மற்ற 24 ஏகாதசி விரத சிறப்புப்பலனும் சேர்ந்து கிடைக்கும்.
 
விரதம் பிறந்த விதம்:
 
தால ஜங்காசுரனுடனும் (முரன்) அவன் புதல்வன் மருவாசுரனுடனும் பரந்தாமன் போரிட்டு களைத்து ஒரு குகையில் அயர்ந்து இருக்கையில் (தூங்கிக்கொண்டிக்கையில்) விஷ்ணுவின் ஆற்றல் ஒரு தேவப் பெண்ணாக உறுவெடுத்து அசுரர்களை தனது ஓங்காரத்தால் பஸ்பமாக்கியது. விஷ்ணு விழித்து விபரம் உணர்ந்து அத்தேவதைக்கு ஏகாதசி என பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து பரந்தாமணின் அருளும் வரமும் பெற்ற இந்நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடை பிடித்தால் என்னும் நீங்காப் புகழுடன் பொருள் பெற்று சிறப்பாக வாழ்வோம். பரந்தாமனின் அருள் பரிபூரணமாக  கிடைக்கும். வாழ்வில் ஏற்றம் நிச்சயம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வைகுண்ட ஏகாதசி விரத மகிமை Empty Re: வைகுண்ட ஏகாதசி விரத மகிமை

Post by முழுமுதலோன் Fri Jan 10, 2014 4:54 pm

ஏகாதசி விரதமுறை:
 
ஏகாதசியின் முந்தய நாள் தசமி திதியில் (சனிக்கிழமை) ஒரு பொழுது உணவு சாப்பிட்டு இரவு பால் பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் ஆரம்பிக்க வேண்டும். மருநாள் ஏகாதசி அன்று அதிகாலை எழுந்து நீராடி சொர்க்கவாசல் திறப்பு அதிகாலை எழுந்து நீராடி சொர்க்கவால் திறப்பு நிகழ்ச்சியை ஆலயம் சென்று கண்டு பரந்தாமன் லெட்சுமி தேவியுடன் வருவதை போற்றி வணங்க வேண்டும். முழுவிதைமாக பழம், இளநீர் மட்டும் சாப்பிட்டு இரவு முழுவதும் கண்விழித்து இறை நாமம் சொல்லி மருநாள் துவாதசி திதியில் (பொழுது விடியுமுன்) விரதம் பூர்த்தி செய்ய வேண்டும். விரதம் இருப்பவர்கள் ஏகாதசி அன்று அரிசி, உழுந்து கண்டிப்பாக சேர்க்கக்கூடாது.

துவாதசி விரத உணவில் நெல்லிக்காய், அகத்திக்கீரை, சுண்டைக்காய் மூன்றும் சேர்த்து அல்லது கிடைக்கும் நெல்லிக்காயையாவது உணவில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.


துவாதசி அன்று முதல் நாள் கண் விழித்தவர்கள் அதிகாலையில் குளித்து திருமாலை வணங்கி ஹரி  ஹரி ஹரி என மும்முறை கூறி சுண்டைக்காய், நெல்லிக்காய், இதில் கொஞ்சம் எடுத்து பல்லில்படாமல் உண்ண வேண்டும் இதற்கு "பாரனை'' (விரதம்) முடித்தல் என்று பொருள்.
புதிய வரவு ஏகாதசி அன்று பிறக்கும் குழந்தைகள் அகாய சூரராக விளங்குவர். பொறுமை, இன்சொல், நுண்ணறிவு, சாந்தமே ஜெயம் எனும் கோபம் தணிந்த ஆற்றல் என சகல நற்குணங்களுடன் இருப்பார்கள்.

வைகுந்த பதவி

 
இந்நாளில் மோட்சமடையும் ஆன்மாக்கள் இறைபதம் சென்றடையும். அதே நேரத்தில் ஏகாதசி விரதம் அனைத்தையும் தனது வாழ்நாளில் கடைபிடித்து ஏகாதசி அன்று முக்தியடையும் ஆன்மாக்கள் 14 உலகங்களுக்கு அப்பால் உள்ள நித்திய சூரிகளின் உலகிற்கு அழைத்துச் செல்லப்பட்டு நரகத்திற்கும் சுவர்க்கத்துக்கும் செல்லும் சாம மார்க்கத்தில் பிரம்மா உள்ளிட்ட அக்னி வரை உள்ள 12 தேவதைகள் வழி நடத்திச் செல்வர்.
 
அவ்வாறு இவர்கள் அழைத்துச் செல்லும் ஜீவாத்மாக்கள் விரகாநதிக்கரையை பசுவின் வாலைப்பிடித்துக் கொண்டு கடந்து செல்லும் போது மற்றொரு சூட்சம உருவம் பெற்று "ஜாம்மதியம்'' என்ற குளத்தை கடந்து "சோம ஸ்வனம்'' என்ற அரசமரத்தடியை அடையும் போது ஜநூறு தேவப் பெண்களால் வரவேற்று பின் அலங்கரித்து வைகுண்ட வீதியினில் தேவ மரியாதையுடன் அழைத்துச் சென்று வைகுண்ட வாசல் சூவாரகபாலகரின் அனுமதியுடன் பரமாத்மாவிடம் அழைத்துச் செல்கின்றார்கள்.
 
இந்த ஜீவாத்மா வானது பரந்தாமனை ஆலிங்கனம் செய்து மோட்சம் பெறுகின்றது. புன்னியத்தையே பேராக பெற்ற ஆவ்வாத்மாவுக்கு விரும்பும் வரத்தை தந்து மீண்டும் பிறப்பு வேண்டின் அருளும் பரந்தாமன் தன்னுள் ஐக்யமாக வேண்டும் என விரும்பும் ஆத்மாவை ஜக்யப் படுத்திக் கொள்கிறார்.(இந்நிலையைத்தான் எத்துணை பிறவி எடுத்தாலும் உன் தாள் போற்றும் வரம் தா என பிரார்த்திக்கின்றோம். இந்த பிரார்த்தனை ஏகாதசி விரதத்தால் பூர்த்தி செய்யப்படுகின்றது.பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்து ஏகாதசி நாளில் தான் விடுபட்டு மோட்சம் அடைகின்றார். எனவே வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்த பலன் கிடைக்கும். என பரமபத சோபனம் விவரிக்கின்றது. முரனை அழித்தவர் ஸ்ரீஹரி. சில காலம் துன்பத்தைத்தந்த கெட்டவனால் உலகிற்கு ஒரு உன்னதவிரதம் கிடைத்தது என்பதால் முருனும் மோட்சம் அடைந்ததான் முரனை வதைத்த ஹரி முராரி (முரடிஹரி) என்று சிவபெருமான் பாராட்டுகின்றார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வைகுண்ட ஏகாதசி விரத மகிமை Empty Re: வைகுண்ட ஏகாதசி விரத மகிமை

Post by முழுமுதலோன் Fri Jan 10, 2014 4:56 pm

விரத தானம்'':
 
என்ன செய்தார்கள் என் தாய் தந்தையர் சொத்தும் இல்லை சுகமும் இல்லை என்றெல்லாம் மனம் வெதும்பத் தேவையில்லை மூதாதயர்களின் தவரால் அவர்கள் பெற்ற சாபத்தால் ஏற்பட்ட வாழ்க்கை முட்டுக்கட்டையும் நாம் ஏகாதசி விரதம் கடைபிடித்து மறைந்த பெரியவர்களுக்கு விரதத்தை தானமாகத் தந்தால் (நரகத்தில் அவர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தால் நம்மை வாழ்த்த அவர்களால் முடியாமல் போய்விடும்) அவர்கள் சொர்க்கத்துக்குச் சென்று பரந்தாமனிடம் நம் குலம் எப்பொழுதும் நன்றாக இருக்க விண்ணப்பிப்பார்கள். எனவே இவ்வருடம் ஏகாதசி விரதம் இருந்து மறைந்த ஆத்மாவுக்கு விரத பலனை தானம் செய்யுங்கள். இனி வரும் காலமெல்லாம் இன்ப மயமாகி அமையும். நகரத்தில் இருக்கும் மூதையருக்கும் நற்கதி கிடைக்கும்.

24 ஏகாதசியின் விரதபலன்:

 
மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி வைகுந்த ஏகாதசி என சிறப்புப் பெறுகின்றது. இந்த நாளில் விரதம் ஆரம்பித்து தொடர்ந்து வரும் விரத நாட்களிலும் (ஒவ்வொரு ஏகாதசியிலும்) விரதமாக இருந்தால் நமக்கு கிடைக்கும் பலன்களையும் தெரிந்து கொள்வோம். சரியான முதலீடாக தேர்ந்தெடுத்தால் பயன்பல மடங்கு கிடைக்கும் என்பதை உணர்ந்தவர்கள் தானே நாம்.
* மார்கழி தேய்பிறை ஏகாதசி "உற்பத்தி ஏகாதசி'' எனப்படும். பகையை வெல்ல.


* தை மாத வளர்பிறை ஏகாதசி "புத்ரா'' எனப்படும். இன்று கடைபிடிக்கும் விரதம் புத்திரபாக்யம் தரும். வம்சாவளி பெருக்கம் சந்தான ஏகாதசி ஆகும்.


* தை தேய்பிறை ஏகாதசி "ஸபலா'' எனப்படும். இன்று பழதானம் செய்வதால் ஒளிமயமான வாழ்க்கை அமையும். இல்லறம் இனிக்கும்.


* மாசி மாத வளர்பிறை ஏகாதசி "ஐயா'' எனப்படும். அகால மரணம் அடைந்த மூதாதயர்கள் மோட்சம் பெறுவர். மன உளைச்சல் அகலும். வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி நம்மை விட்டு நீங்கும்.


* மாசி மாத தேய்பிறை ஏகாதசி "ஷட்திலா'' எனப்படும். இன்று கொய்யாப்பழம் அல்லது கொட்டைப்பாக்கை வைத்து பூஜை செய்தால் பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும். ஏழை பிராமணருக்கு இரும்பு வடைச் சட்டியில் எள்ளுடன் தானம் தர வேண்டும். மேலும் பாதுகை, கூடை, கரும்பு, நீருடன் தாமிரக்குடம், பசு முதலியனவையும் சேர்த்து ஆறு பொருள் தானம் தந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆறுவகை தானம் செய்வதால் "ஷட்திலா'' என இந்த ஏகாதசி அழைக்கப்படுகிறது.


* பங்குனி தேய்பிறை ஏகாதசி "விஜயா'' எனப்படும். இந்த நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்று என அடுக்கு முறையில் பரப்பி கலசம் வைத்து மஹாவிஷ்ணுவை ஆவாகணம் செய்து பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறுவீர். வெளிநாட்டில் உள்ள நமது சொந்தங்கள் சிறப்படையும். கணவனை பிரிந்துவாடும் நங்கைகள் கணவனுடன் வெளிநாடு சென்று வாழ்க்கையை ஆரம்பிப்பர்.


* பங்குனி வளர்பிறை ஏகாதசி "ஆமலகீ'' எனப்படும். இன்று நெல்லி மரத்தடியில் பரசுராமன் படம் வைத்து பூஜை செய்து நெல்லி மரத்தை 108 சுற்று சுற்றி பூப்போட்டால், புண்ணிய நதிகளில் நீராடிய பலனும், ஆயிரம் பசுதானம் செய்த அளவு பலனும் கிடைக்கும்.


* சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசி "காமதா'' எனப்படும். நமது விருப்பத்தை பூர்த்தி செய்யும் மேன்மை உண்டாகும். திருமண யோகம் தரும்.


* சித்திரை தேய்பிறை ஏகாதசி "பாபமோசனிகா'' எனப்படும் பாபத்தை போக்கும். நல்ல பேற்றினை ஏற்படுத்தும். துரோகிகள் விலகுவர்.


* வைகாசி வளர்பிறை ஏகாதசி "மோஹினீ'' எனப்படும். உடல் சோர்பு நீக்கும். பெண்களுக்கு உதிரப்போக்கை கட்டுப்படுத்தும். ரத்த சோகை அகலும். வளர்ச்சிக்காக காணும் கனவுகள் (சிந்தனைகள்) வெற்றிபெறும்.


* வைகாசி தேய்பிறை ஏகாதசி "வரூதினீ'' எனப்படும். உடல் ஆரோக்கியம் தரும். சவுபாக்யம் எனும் அனைத்தும் கிடைக்கும்.


* ஆனி மாத வளர்பிறை ஏகாதசிக்கு "நிர்ஜனா'' என்று பெயர். பீம ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. பீமபூஜை என்பதே ஆழ்மனதில் இறைவனை இருத்தி பூஜை செய்வது ஆகும்.எனவே இந்த நாளில் உளப்பூர்வமாக பீமனையும் இணைத்து வழிபாடு செய்தால் வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிட்டும். வருடம் முழுவதும் உள்ள ஏகாதசி விரத பலன் கிடைக்கும். ஏனெனில் பீமன்வாயு அம்சம்.


* ஆனி மாத தேய்பிறை ஏகாதசி "அபரா'' எனப்பெயர்படும். இன்று மகாவிஷ்ணுவின் திரி விக்கிரமப் பிரதிமையை பூஜை செய்தால் ஸ்ரீகேதாரிநாத், பத்ரிநாத் யாத்திரை சென்ற பலனும், கயாவில் தர்பண் செய்த பலனும், பிராயாகையில் புண்ணிய ஸ்நானம் செய்த பலனும் சிவராத்திரி விரத பூஜை பலனும் ஒருங்கே செய்த பலன் கிடைக்கும்.


* ஆடி மாத வளர்பிறை ஏகாதசி "தயினி'' எனப்படும். இஷ்ட நற்சக்திகளை தர வல்லது. முன்னோர்களின் ஆசியையும், அவர்களது எதிர்பார்ப்புகளை நம் மூலம் செயல்படுத்தி நம்மை வெற்றியாளராக்குவது. ஏழைகளுக்கு வஸ்திரதானம் செய்வதால் குடும்ப ஒற்றுமை ஓங்கும்.


* ஆடி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "யோகினி'' என்று பெயர். இன்று வெண்கலம் அல்லது பித்தளை விளக்கு வசதி உள்ளவர்கள் வெற்றி விளக்கு தானம் செய்ய கனவிலும் நினைக்காத கற்பனைக் கெட்டாத வாழ்க்கை அமையும்.


* ஆவணி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு "புத்ரதா'' என்று பெயர். குழந்தைகள் கல்வியில் சிறக்கவும் விரும்பிய மேல்படிப்பும் அமையும். சிறந்த மாணவ- மாணவிகளாக திகழவும் செய்வார்கள்.


* ஆவணி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "காமிகா'' எனப்படும். இன்று விரதம் இருந்து தனி துளசியால் மஹாவிஷ்ணுவை அர்ச்சித்து வழிபாடு செய்ய சவுர்ணம் வீட்டில் தங்கும் (தங்கம் நம் வீட்டில் தங்கும்). வீட்டில் பூஜை முடித்த பின் ஆலயம் சென்று ஐந்து நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் மன பயம் அகலும், மரண பயம் அகலும், கொடிய துன்பம் விலகும். ஆவணி மாத ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பழங்கள் மட்டுமே உண்டு விரதம் கடைபிடிக்க வேண்டும். காய்கறிகள் பயன்படுத்தக்கூடாது.


* புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசிக்குப் "பத்மநாபா'' எனப்படும். இந்த நாளில் விரதம் இருப்பதன் மூலம் இந்திரனும், வருணனும் இணைந்து வரம் தருவார்கள். நமது வீட்டு கிணறு, ஆழ்குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும். ஊருக்கும் தண்ணீர் பஞ்சம் வராது.


* புரட்டாசி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "அஜா'' என்று பெயர். அரிச்சந்திரன் இந்த நாளில் விரதம் இருந்து இழந்த நாட்டையும், மனைவி பக்களையும் பெற்று பல்லாண்டுஅரபு செய்தான். எனவே, நாமும் இவ்விரத நாளில் விரதம் கடைபிடித்தால் குடும்பத்துடன் ஆனந்தமாக இருப்போம். புரட்டாசி மாத ஏகாதசி விரத நாளில் கண்டிப்பாக தயிர் உபயோகிக்கக் கூடாது (சேர்க்கக்கூடாது).


* ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசிக்கு "பாபாப்குசா'' எனப்படும் வருமை ஒழியும், நோய் அகலும், பசிப்பினி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.


* ஐப்பசி மாத தேய் பிறை ஏகாதசிக்கு "இந்திரா'' எனப் பெயர் இன்று விரதம் இருந்து மூதாதயருக்கு சிரார்த்தம் செய்தாலங அவர்கள் இந்திர வாழ்வு வைகுண்டத்தில் பெருவதால் நம்மையும் மனங்குளிர இறைவன் வைக்க வேண்டுமென அருகில் உள்ள பகவானிடம் பரிந்துரை செய்வார்கள். ஐப்பசி மாத ஏகாதசி நாளில் பால் சாப்பிடக் கூடாது.


* கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசிக்கு "ப்ரமோதினீ'' என்று பெயர். கைசிக ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றது. இன்று கிடைக்கும் அனைத்து பழங்களையும் பகவானுக்கு நிவோனம் செய்து வேண்டிக் கொண்டால் மங்கள வாழ்வு மலரும், பூலோக சொர்க்க வாழ்வு கிடைக்கும்.


* கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசிக்கு "ரமா'' என்பர். இன்று இருக்கும் விரதம் இருபத்தியோரு தானம் செய்த புண்ணியம் தரவல்லது.


* வருடத்தில் கூடுதலாக வரும் 25 ஏகாதசி "கமலா'' எனப்படும். கமலம் என்றாள் தாமரை. தாமரை மலரில் இருந்து அருள் தரும் அன்னை மகாலட்சுமியை இந்த நாளில் பூஜித்தால் நிலையான செல்வம் நிரந்தரமாக நம்வீட்டில் இருந்து வரும்.ஆக பெருமாளின் 25 சக்திகளுக்கும் தனித்தனி விரதமாக இருப்பதும், "மோட்ச ஏகாதசியில்'' உண்ணாமலை அன்று முழுவதும் மட்டுமின்றி முன்பின் நாட்கள் பகலில் உறங்காமல் இருந்து செய்யும் வைகுண்ட ஏகாதசி விரதம். அனைத்து ஏகாதசியின் பலனையும் தரும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வைகுண்ட ஏகாதசி விரத மகிமை Empty Re: வைகுண்ட ஏகாதசி விரத மகிமை

Post by முழுமுதலோன் Fri Jan 10, 2014 4:57 pm

காக்கும் கடவுளான மஹா விஷ்ணுவினுள் கூட்டு சக்திகலாக இருந்துள்ளதில் முதல் ஆற்றல் முதன் முதலாக தனித்துப் புறப்பட்டு மூலப்பரம் பொருளின் தனித்தனித் தன்மையை நமக்கு உணர்த்தும் பொருட்டு வெளிப்பட்ட "முதல்'' சக்தியே "ஏகாதசி'' என அழைக்கப்படுகின்றது. நாம் உறங்கும் போது உலகுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற சிந்தனையோடு இருந்தால் பகவானின் 25 சக்திகளும் தனித் தன்மை பெற்று வரம் தருவதைப் போல நாமும் இவ்வுலகிற்கு பல அற்புத நிகழ்வுகளை நிகழ்த்தி உலகில் புகழுடன் தங்க முடியும் என்பதை போதிப்பதே ஏகாதசி விரதங்களின் கூட்டுப் பலன்கள் ஆகும். அதனால் தான் வாஸ்து புருஷனாக மஹாவிஷ்ணு இருந்து அருள் தருகிறார் என மயன் புராணம் கூறுகின்றது.
தானம் செய்வோம்.


ஒவ்வொரு ஏகாதசி அன்றும் தனித் தனியாக தானங்கள் செய்யலாம் என்றாலும் அது எல்லாம் வசதியானவர்கள் தானே செய்ய முடியும் என்ற சோர்வு நிலை வேண்டாம். ஒரு பிடி அகத்திக் கீரையை பசுவுக்கு தானமாகக் கொடுங்கள். வசதி உள்ளவர்கள் ஏகாசி அன்று பசுவும் கன்றுமாக தானம் கொடுங்கள் சகல நன்மையையும் உலகம் உள்ள வரை உங்கள் சந்ததியர் பெறுவர்.


விரத பன்பு:

 
அனைத்து விரத நாட்களிலும் அன்னதானம் செய்யப்படும். ஏகாதசி விரத நாளில் உண்ணாமல் இருப்பதும் கண் விழித்து பாசுரங்கள் பாடுபவதும் செய்ய வேண்டும் என்பதால் அன்ன தானம் மட்டும் இந் நாளில் செய்யக் கூடாது. அதற்குப் பதில் பழவர்க்கங்களை தானமாக தரலாம்.
"பலன்''

ஏழ்மை அகலும், கல்வியில் உயர்வு, தன் ஆற்றல் வெளிப்பட்டு, குடும்ப ஒற்றுமை, சொந்தங்களின் உதவி, எதிரிகள் விலகி நண்பர்கள் அதிகமாகுதல், நல்ல பதவி, அந்தஸ்தான வாழ்க்கை, வெளிவட்டாரச் சிறப்பு, திருமண யோகம், பாவம் அகலுதல், புத்திர பாக்யம் என அனைத்தும் வாஸ்து புருஷனின் கருணையால் நம் அனைவருக்கும் உண்டாகும். கருணாகரனை கண் விழித்துப் போற்றுவோம்.
ஸ்ரீரங்கம்:

தமிழகத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள் சொர்க்கவாசல் திறப்பு விழா மிகவும் விமர்சையாக நடைபெறும். திருப்பதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட 108 திவ்ய தேசங்களிலும் பெருமாளை தரிசித்து பயன் பெறலாம். திவ்ய தேசங்களை மனதில் தியானித்து அருகில் உள்ள பெருமாள் கோயில் சென்று வேண்டுதல்களை விண்ணப்பம் செய்து வாருங்கள் வெற்றி நம்மைத் தேடித் தேடி வரும்.

தொகுப்பு: வாஸ்து பேராசிரியர் எம்.எஸ்.ஆர்.மணிபாரதி    

http://www.maalaimalar.com
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வைகுண்ட ஏகாதசி விரத மகிமை Empty Re: வைகுண்ட ஏகாதசி விரத மகிமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum