Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
விண்டோஸ் 8.1 தரும் பலன்கள்
Page 1 of 1 • Share
விண்டோஸ் 8.1 தரும் பலன்கள்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நவீன ஆப்பரேட்டிங் சிஸ்டம் மெதுவாக பயனாளர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்திலிருந்து பலர், விண்டோஸ் 8.1க்கு மாறலாமா? வேண்டாமா? என்ற கேள்வி யுடன் இன்னும் முடிவெடுக்க முடியாமல் இருக்கின்றனர். இதனால், கூடுதல் பயன் இருக்குமா? அல்லது திக்கு தெரியாமல் மீண்டும் கஷ்டப்பட வேண்டுமா எனத் தங்களுக்குள்ளாகவே கேட்டு வருகின்றனர்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் புதியதாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றைப் பழைய சிஸ்டத்தின் இடத்தில் அறிமுகப்படுத்துகையில் நிச்சயமாக, புதிய பல வசதிகளை இணைத்தே தரும். விண்டோஸ் 8 சிஸ்டத்தைப் பொறுத்தவரை, அது முற்றிலும் புதிய வகையில், தொடுதிரை உணர்வு இயக்கத்துடன் வெளிவந்தது.
அதன் செயல்பாடுகள் குறித்த பின்னூட்டங்களுடன், பின்னர், விண்டோஸ் 8.1 வெளிவந்துள்ளது. விண் 8 கொடுத்த வசதிகளுடன் ஐக்கியமாக பயனாளர்கள் மேற்கொண்ட தயக்கம், விண் 8.1 க்கு மாறிக் கொள்வதிலும் தொடர்கிறது. இருப்பினும், பல முக்கிய மாற்றங்களும் வசதிகளும் விண் 8.1 ல் கிடைக்கின்றன என்பதே உண்மை.
இந்தக் கட்டுரையில், விண்டோஸ் 8.1 சிஸ்டம் தரும் பயன்கள் சார்ந்து சில கூடுதல் குறிப்புகள் தரப்படுகின்றன.
1. டெஸ்க்டாப்பில் அதிக பயன்பாடு: இது என்ன ரகசிய மெனுவா? என்று கேட்கும் அளவிற்குப் புதிய பயன்பாடுகள், இந்த விண் 8.1 அப்டேட்டில் கிடைக்கிறது. விண்டோஸ் டெஸ்க்டாப் பயன்பாடு இதில் முதல் இடத்தில் உள்ளது. விண்டோஸ் டெஸ்க்டாப் திரையில், வலது மூலையில் ரைட் கிளிக் செய்தால், விண்டோஸ் இயக்கத்தின் பல பயனுள்ள ஆப்ஷன்களுக்கான ஷார்ட்கட் வழிகளை மெனுவாகப் பெறலாம். விண்டோஸ் 8 எப்படி ஷட் டவுண் செய்வது என குழப்பமாக உணர்ந்த பயனாளர்கள், இந்த மெனுவினைப் பார்த்து, அப்பாடா தலைவலி விட்டது என்று எண்ணுவார்கள். பவர் ஆப் செய்வதற்கும், ரீ ஸ்டார்ட் செய்வதற்கும், சிஸ்டம் முடித்து வைக்கவும் பல வழிகளை இது காட்டுகிறது.
2. டெஸ்க்டாப்பிற்கு கம்ப்யூட்டரை பூட் செய்திட: நீங்கள் விண் 8/ 8.1 சிஸ்டங்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட ஸ்டார்ட் ஸ்கிரீன் தேவை இல்லை என எண்ணி, எளிமையான பழைய ஸ்கிரீன் தோற்றமும் செயல்பாடும் போதும் என எண்ணுகிறீர்களா? உங்க ளுடைய விருப்பத்தினை மைக்ரோசாப்ட் வல்லுநர்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள். டெஸ்க்டாப்பில், உங்கள் டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் 'Properties' தேர்ந்தெடுக்கவும். நேவிகேஷன் டேப்பினைத் தேர்ந்தெடுத்து 'Go to the desktop' என்ற ஆப்ஷனில் டிக் செய்திடவும். பின்னர், விண்டோஸ் உங்கள் டெஸ்க்டாப்பில் பூட் செய்திடும்.
3. ஸ்டார்ட் ஸ்கிரீன் ஒழுங்குபடுத்து: உங்களிடம் நன்றாக ஒழுங்குபடுத்தப்பட்ட திரைக் காட்சிகளுடன் ஒரு ஸ்மார்ட் போன் உங்கள் பயன்பாட்டில் இருந்தால், அதே போன்ற ஒழுங்குமுறையினை, உங்கள் கம்ப்யூட்டரின் ஸ்டார்ட் ஸ்கிரீனிலும் எதிர்பார்ப்பீர்கள் தானே? இது கம்ப்யூட்டரிலும் விண் 8.1 சிஸ்டத்தில் எளிதாக அமைக்கப்பட்டுள்ளது. உங்களுடைய அப்ளிகேஷன் குரூப்பினை வேறு பெயருக்கு மாற்றுவதன் மூலம் இதனை மேற்கொள்ளலாம். ஸ்டார்ட் ஸ்கிரீனில் ரைட் கிளிக் செய்து, 'Customise' என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், உங்கள் திரையில் தோன்றும் புரோகிராம் டைல்ஸ்களை ஒருங்கிணைக்கவும், பெயர் சூட்டவும் முடியும்.
4. எக்ஸ்பாக்ஸ் மியூசிக் பிளே லிஸ்ட்: சர்ச் எனப்படும் தேடல் செயல்பாடுகள், விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில், மீண்டும் எளிமைப் படுத்தப்பட்டுள்ளன. பல பின்னூட்டங்களின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், இன்னும் சில விஷயங்கள் சீரமைக்க வேண்டியுள்ளது. எனவே, மிக விரைவான தேடலை மேற்கொள்ள, சிஸ்டத்துடன் கிடைக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரினைத் திறந்து (உங்கள் ஸ்டார்ட் ஸ்கிரீனிலிருந்து), Bing பயன்படுத்தவும். இங்கு இசைக் கலைஞர்களைக் குறிப்பிட்டுத் தேடலாம். பின்னர் Share Charm என்பதில் மவுஸைக் கொண்டு சென்று அதில் கிடைக்கும் ஆப்ஷன்களில் 'Music' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு நீங்கள் விரும்பும் இசைக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து பட்டியல் அமைத்திடலாம். இந்த வகையில் தேடல் தெளிவும் விரைவும் கொண்டுள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது.
5. நிரந்தர வால் பேப்பர்: ஸ்டார்ட் ஸ்கிரீன் மற்றும் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆகிய இரண்டும் வெவ்வேறு என நீங்கள் உணர்ந்தால், எப்படி ஒரே வால் பேப்பரை இரண்டுக்குமாக அமைக்க முடியும்? ஸ்டார்ட் ஸ்கிரீனிலிருந்து Settings Charm திறக்கவும். இங்கு கிடைக்கும் ஆப்ஷன்களில் 'Personalise' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு உங்களுக்குப் பிடித்தமான வால் பேப்பரைத் தேர்ந்தெடுத்து, இரண்டுக்குமாக அமைக்கலாம்.
6. ஸ்கை ட்ரைவில் சேவ் செய்திட: கம்ப்யூட்டரில் இருக்கும் ஸ்டோரேஜ் உங்களுக்குப் போதாது; கூடுதலாக இன்னும் ஹார்ட் டிஸ்க் இடம் தேவை, அதுவும் இலவசமாகக் கிடைக்குமா என்று பார்க்கிறீர்களா? கவலையே வேண்டாம். விண்டோஸ் 8.1 சிஸ்டத்துடன், மிக அருமையான ஆன்லைன் ஸ்டோரேஜ் வசதி தரப்படுகிறது. மைக்ரோசாப்ட் தன் ஸ்கை ட்ரைவினை, விண் 8 .1 பயன்படுத்தும் பயனாளர்களை இணைத்துள்ளது.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், Settings Charm செல்லவும்; 'Change PC settings' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், இதிலிருந்து 'SkyDrive' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த இடத்தில், நீங்கள் உங்கள் டாகுமெண்ட் மற்றும் பைல்கள் அனைத்தையும், க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், ஸ்கை ட்ரைவில் சேவ் செய்திட விருப்பமா என்ற ஆப்ஷன் தரப்படும். மாறா நிலையில், அனைத்து பைல்களையும் ஸ்கை ட்ரைவில் சேவ் செய்திட அமைத்துவிட்டால், இணைய இணைப்பில் இருக்கும்போது, அனைத்து பைல்களும் ஸ்கை ட்ரைவிற்குக் கொண்டு செல்லப்படும். இதனால், நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும், எந்த கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினாலும், உங்கள் பைல்களை அணுக இயலும்.
7. அனைத்து அப்ளிகேஷன்களும் எளிதான தோற்றத்தில்: ஸ்டார்ட் ஸ்கிரீனில், நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள அனைத்து அப்ளிகேஷன்களும் அவற்றிற்கான டைல்ஸ்களுடன், வானவில் வண்ணக் கலவையில் தோற்றமளிக்கும். ஆனால், இவற்றத் தேடிக் கண்டறிய, நாம் ஒவ்வொரு திரையாகச் செல்ல வேண்டியதிருக்கும். அனைத்தையும் மொத்தமாகப் பார்க்க வேண்டுமானால், அதற்கு விண் 8.1 வழி செய்கிறது. டைல்ஸ் கீழாக அம்புக்குறி ஐகானைக் கிளிக் செய்தால், இந்த வியூ கிடைக்கும். இங்கிருந்து, அனைத்து அப்ளிகேஷன்களையும் நீங்கள் விரும்பியபடி அமைக்கலாம். அவற்றை இன்ஸ்டால் செய்த நாட்களின் அடிப்படையில், அவற்றின் அளவின் அடிப்படையில், அகரவரிசைப்படி என நாம் விரும்பும் வகையில் அமைத்துக் கொண்டு தேடிப் பெறலாம்.
8. எழுப்பும் அலாரம்: ஆம், விண்டோஸ் 8.1 சிஸ்டத்தைப் பயன்படுத்தி, நாள், வாரம், மாதம் அடிப்படையில் நேரத்தை செட் செய்து அலாரம் அமைக்கலாம். இது விண்டோஸ் போன் சிஸ்டத்தில் உள்ள அப்ளிகேஷன் போலத் தெரிகிறதா? ஆம். அப்படித்தான் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நினைவூட்டல்களும், அதற்கான தனி ஒலிகளும் அமைத்து இயக்கலாம். அப்ளிகேஷன் பட்டியலில் இந்த அலாரம் செட் செய்திடும் அப்ளிகேஷனும் கிடைக்கிறது.
9. அப்ளிகேஷன்களை அருகருகே இயக்க: விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இயங்கும் போது, ஒரு நேரத்தில் ஒரு அப்ளிகேஷனை மட்டுமே இயக்க முடியும். ஆனால், விண் 8.1ல் இரண்டு அப்ளிகேஷனை ஒரே நேரத்தில் இயக்கலாம். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு எளிதாக மாற்றிக் கொள்ளலாம். இந்த அப்ளி கேஷன்கள் இயங்கும் இடத்தினைச் சரியாகச் சரி பாதி இடத்தில் இயக்க வேண்டியதில்லை. ஒன்றைச் சிறிய இடத்திலும், இன்னொன்றைச் சற்றுப் பெரிய இடத்திலும் நம் தேவைப்படி அமைத்து இயக்கலாம்.
10. பைல்களின் நகல்களைத் தக்க வைக்க: உங்களுடைய முக்கியமான பைல்களின் பேக் அப் நகல்களை எப்படி எங்கு வைப்பீர்கள்? நம் பைல்கள் மிகப் பாதுகாப்பாக இருப்பதாக நாம் எண்ணினாலும், அவை கெட்டுப் போக வாய்ப்பிருக்கிறது. எனவே இவற்றின் நகல்களைப் பாதுகாப்பாக வைத்திட விண்டோஸ் 8.1 வசதி தருகிறது. இதற்கு கண்ட்ரோல் பேனல் சென்று அங்கு 'System and Security' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதே நேரத்தில் 'file history' என்று அமைத்துத் தேடலில் ஈடுபடவும். அப்போது யு.எஸ்.பி. ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் ஒன்றை பேக் அப் பைல்களுக்காக இணைக்க வேண்டியதிருக்கும். இதில் பேக் அப் பைல்கள் பதியப்படும்.
நன்றி கம்ப்யூட்டர் மலர்

Re: விண்டோஸ் 8.1 தரும் பலன்கள்
அனைத்தும் நல்ல விஷயம்தான்
ஆனால் விண்டோஸ் 8.1 எப்ப தருவீங்க
ஆனால் விண்டோஸ் 8.1 எப்ப தருவீங்க
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» விண்டோஸ் 7 நை விண்டோஸ் 8 ஆகா மாற்றுவது பற்றி பார்போம்..
» விண்டோஸ் 7 Start மெனு விண்டோஸ் 8 ல் வேண்டுமா????
» விண்டோஸ் 8 இருந்தால் விண்டோஸ் 8.1 இலவசம்
» விண்டோஸ் 1 முதல் விண்டோஸ் 8 வரை(முகதிரை)
» விண்டோஸ் 7 தரும் தெரியாத வசதிகள்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum