தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்"

View previous topic View next topic Go down

முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்" Empty முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்"

Post by முழுமுதலோன் Mon Jan 27, 2014 1:36 pm

முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்" 2_clr_e0முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்" 5_clr_e0முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்" 0_clr_e0முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்" 0_clr_e0முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்" 0_clr_e0
{மாவது சிறப்பு பதிவு} 


இவ்வுலகில் உள்ள அனைத்து நெஞ்சங்களும் ஒரு சிறிய பாராட்டுக்காக தான் ஏங்கிக்கிடக்கின்றன!


உணர்ச்சி வெளிப்பாடு என்பது ஒரு தனி மனிதன், தான் ரசித்த, அனுபவித்த அல்லது தன்னை சுற்றி இருக்கும் சூல்நிலைக்கு ஒப்ப தன் மனநிலையை வெளிக்காட்டுவது.


இதை தான் ஆங்கிலத்தில் body language என்பர். இவ்வாறான உணர்ச்சி வெளிப்பாடு தான் மகிழ்ச்சி.
”உன் துன்பத்தை பகிர்ந்து கொள்
அது பாதியாக குறையும்;

உன் இன்பதை பகிர்ந்து கொள்


அது இரு மடங்காகும்”
இந்த கூற்று மகிழ்தலும், பிறருடன் மகிழ்ச்சியைய் பகிர்தலும், பிறரை மகிழ்வித்து அதனால் மகிழ்ச்சி அடைதலும், அந்த மகிழ்ச்சி என்ற உணர்வை இரு மடங்காக அனுபவித்தமைக்கு சமம் என்று கூறுகிறது.

ஒருவனுக்கு எதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்று பார்த்தால், வறையறுத்துக் கூறுவதற்கு அது எளிமையானது அல்ல.

இவ்வுலகில் உள்ள மனிதர்களுள் ஒருவர் மற்றொருவரைப் போல் இருத்தல் அரிது. அவருடைய தோற்றம் வெவ்வேறு; பழக்கம் வெவ்வேறு; குணம் வெவ்வேறு; நடை உடை பாவனை வெவ்வேறு; குரல், எண்ணம், சிந்தனை, ஆசை அனைத்தும் வேறு வேறு.

அதேபோல் ஒவ்வொரு மனிதனின் மகிழ்ச்சிக்கான காரணகுறியும் வெவ்வேறு.

சிலருக்கு வேலை கிடைத்தால் மகிழ்ச்சி; சிலருக்கு வேலை செய்யாமல் நேரத்தை வீணாக்குவதில் மகிழ்ச்சி.

சிலருக்கு பரிட்சையில் நிறைய மதிப்பெண் பெற்றால் மகிழ்ச்சி; பலருக்கு இந்திய கிரிக்கெட் அணி கோப்பை வென்றால் மகிழ்ச்சி.

நாடக மேடையான இவ்வுலகில் பல வகையான கதாப்பாத்திரங்கள் இருப்பது போல் ஒருவர் மகிழ்ச்சி அடைவதற்காண சூல்நிலையும் செயலும் பல வகைப்படும்.

வேலை கிடைப்பது, நிறைய சம்பாதிப்பது, அதிக மதிப்பெண் பெறுவது, இந்திய அணி கோப்பை வெல்வது – இவை அனைத்தும் ஒருவர் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதற்குரிய சூல்நிலை தான்.

அதில் தவறு ஒன்றும் இல்லை.
ஆனால் ஆத்ம பூர்வமாண மகிழ்ச்சி என்பது, தான் மகிழ்வது மட்டும் அல்லாமல், பிறரையும் மகிழ்வித்து, அவர்கள் மகிழ்ச்சியில் மனநிறைவு அடைவதுதான்.

அந்த மனநிறைவு தான் உண்மையான மகிழ்ச்சி.


நம் தமிழ் மாந்தர் தோன்றிய காலதில் இருந்தே பிறரை மகிழ்வித்து மகிழ்வதில் மனநிறைவு அடைந்திருந்தனர்.

தமிழ் சங்ககாலத்தில் புலவர் பெருமக்கள் பலர் இருந்தனர். அப்புலவர்களுக்கும், நம் தமிழ் மண் வேந்தர்களுக்கும் இடையே இருந்த ‘மகிழ்வித்து மகிழ்’ என்ற பண்பாடு மிகவும் இனிமையானது.

தமிழ் புலவர்க்ள் மன்னர்களைச் செந்தமிழில் பாடி, போற்றி மகிழ்ந்தனர். புலமைச் சொற்களால் தன்னை மகிழ்வித்த புலவருக்கு பொன்னையும் பொருளையும் பரிசாகக் கொடுத்து மகிழ்ந்தான் மன்னன்.

முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் வள்ளல் குணத்தை நாம் அனைவரும் அறிவோம். தான் ஒரு வள்ள்ல் என்று உலகம் தன்னை போற்ற வேண்டும் என்பதற்காகவா பாரி தன் பொற்தேரை மொளவல் கொடிக்கு கொடுத்தான்?
இல்லவே இல்லை!!
படர இடம் இல்லாமல் முல்லை கொடி தவிப்பதைக் கண்ட பாரியின் மனம் வெம்பியது. முல்லை கொடி செழித்து வளர்வதே தனக்கு மகிழ்ச்சி என்றான்! தன் தேரைக் கொடுத்தான்! மகிழ்ச்சியோடு தன் மனைக்கு திரும்பினான்.

தான் தானமாக வாங்கிய அரிசியை சிட்டுக் குருவிகளின் பசிக்கு இரையாக கொடுத்து மகிழ்ந்தான் புரட்சிக்கவிஞன் பாரதி.

தனக்கு கிடைத்த அரிய நெல்லிக்கனியை ஒளவைக்கு கொடுத்து அந்த பிராட்டி அதிக நாள் மகிழ்ச்சியாக உயிர் வாழ்வதில் மனநிறைவு அடைந்தான் மன்னன் அதியமான்.


’வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று வள்ளலார் கூரியது போல், பிறர் துன்பத்தை கண்டு துவண்ட தமிழர்கள் பிறர் இன்பத்தில் தான் தனது உண்மையான இன்பம் இருக்கிறது என்பதை உணர்ந்திருந்தனர்.

கொடுப்பது மட்டும் மகிழ்ச்சி அல்ல. பிறருக்கு விட்டுக்கொடுப்பதிலும் மகிழ்ச்சி அமைந்துள்ளது.


வளர்ந்து வரும் நாகரிக உலகில் தன்னைப் பற்றி சிந்திக்கவே மனிதனுக்கு நேரம் இல்லாமல் போயிற்று!

தனது மகிழ்ச்சியையே முழுமையாகக் கொண்டாட முடியாத நிலை. இதில் அடுத்தவரை மகிழ்வித்து தான் அதில் மகிழ்ச்சி அடைவது என்பது காணல் நீர் கண்ட கதைதான்.

போட்டிப் போட்டுக்கொண்டு நகரும் இந்த எந்திர உலகில் மக்கள் ஒருவரை ஒருவர் பாரட்டிக் கொள்ளவும், வாழ்த்தவும் நேரம் செலவழிப்பதில்லை. தன் வேலை தன் வாழ்க்கை என்று ஓடிக்கொண்டிருக்கிறது.

மனிதன் மறந்துவிட்டான்,

”we are human-beings not human-doings”

நல்ல மனங்களைத் தேடி தத்தளிக்கும் இவ்வுலகில் உள்ள அனைத்து நெஞ்ஞங்களும் ஒரு சிரிய பாரடுக்காக தான் ஏங்கிக்கிடக்கின்றன.

மற்றவரைப் பாரட்ட வேண்டும் என்ற எண்ணம் எல்லாரிடமும் காணப்படாது. தன்னலம் இல்லாத உள்ளம் படைத்தவரால் தான் பிறரை வஞ்ஞகம் இல்லாமல் பாராட்ட முடியும்.

அவ்வுள்ளம் படைத்தவரால் மட்டுமே பிறரை மகிழ்வித்து மகிழ்ச்சி அடைய முடியும்.

நம்மால் முடிந்ததை பிறருக்கு கொடுப்போம்; கொடுப்பதில் மகிழ்வோம்!

பிறர் எண்ணங்களையும் செயலையும் பாராட்டுவோம், பாராட்டுவதில் மகிழ்வோம்!


நாமும் மகிழ்வோம்; பிறரையும் மகிழ்விப்போம்!


முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்" Empty Re: முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்"

Post by ரானுஜா Mon Jan 27, 2014 2:11 pm

அருமையான பகிர்வு நன்றி அண்ணா


25000 பதிவுக்கு வாழ்த்துகள் அண்ணாஆ
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்" Empty Re: முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்"

Post by மகா பிரபு Mon Jan 27, 2014 2:37 pm

பயனுள்ள அதி வேக பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்" Empty முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்"

Post by sawmya Mon Jan 27, 2014 3:15 pm

நன்றி!நன்றி! நன்றி! நன்றி! மேலும் நல்ல பதிவுகள் தாருங்கள்....பாரட்டுக்களும், வாழ்த்துக்களும்!! கைதட்டல்  வாழ்த்துக்கள்  கொண்டாட்டம்


Last edited by sawmya on Mon Jan 27, 2014 3:17 pm; edited 1 time in total (Reason for editing : பிழை திருத்தம் காரணமாக...)
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்" Empty Re: முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்"

Post by செந்தில் Mon Jan 27, 2014 7:57 pm

அமர்க்களத்தின் முன்னேற்றத்தில் உங்கள் பங்களிப்பு மகத்தானது.உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து  எங்களுக்காக பல பயனுள்ள  பதிவுகளை வழங்கிய உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
உங்களால் பதிவுகளால் பல பயன்களை அடைந்தவன் எனும் வகைவாயில் மனதாரக் கூறுகிறேன்

கைதட்டல் மிக்க நன்றி அண்ணா. கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்" Empty Re: முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்"

Post by Muthumohamed Tue Jan 28, 2014 12:02 am

அசுர வேகத்தில் 25000 பதிவுகள் கடந்த அய்யாவுக்கு எண்ணிலடங்காத வாழ்த்துக்கள்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்" Empty Re: முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்"

Post by ஜேக் Tue Jan 28, 2014 6:42 am

இன்னும் பல இலட்சம் பதிவுகள் பதிந்திட மனதார பாராட்டுகிறேன்.

வாழ்த்துக்கள்.  வாழ்த்துக்கள் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் வாழ்த்துக்கள் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்" Empty Re: முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்"

Post by முரளிராஜா Tue Jan 28, 2014 12:04 pm

அமர்க்களத்தின் முன்னேற்றத்தில் உங்கள் பங்களிப்பு மகத்தானது.உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து  எங்களுக்காக பல பயனுள்ள  பதிவுகளை வழங்கிய உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
உங்களால் பதிவுகளால் பல பயன்களை அடைந்தவன் எனும் வகைவாயில் மனதாரக் கூறுகிறேன்

 மிக்க நன்றி அண்ணா. 
செந்திலின் கருத்தே என் கருத்தும் அண்ணா 
மனமார்ந்த வாழத்துக்கள் அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்" Empty Re: முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்"

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 28, 2014 7:52 pm

செந்தில் wrote:அமர்க்களத்தின் முன்னேற்றத்தில் உங்கள் பங்களிப்பு மகத்தானது.உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து  எங்களுக்காக பல பயனுள்ள  பதிவுகளை வழங்கிய உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
உங்களால் பதிவுகளால் பல பயன்களை அடைந்தவன் எனும் வகைவாயில் மனதாரக் கூறுகிறேன்

கைதட்டல் மிக்க நன்றி அண்ணா. கைதட்டல்

உண்மையே... உண்மையே... பாராட்டுகள்... பாராட்டுகள்
முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்" 2Q==
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்" Empty Re: முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்"

Post by rammalar Wed Jan 29, 2014 5:14 am

உளம் கனிந்த பாராட்டுகள்...
-
முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்" YOmUT6yITiK3WuyXIOkW+547275_437533956363562_1358560002_n
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்" Empty Re: முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum