Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்!
Page 1 of 1 • Share
சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்!
2009ஆம் ஆண்டின் முற்பகுதியில் சிறிலங்காவின் எயர்
மொபைல் பிரிகேட்டைச் சேர்ந்த ஒரு சிப்பாயினால் எடுக்கப்பட்ட ஏறத்தாழ
200க்கு மேற்பட்ட புகைப்படங்களை மனித உரிமைக்கண்காணிப்பகம் பரிசீலித்தது.
இப்படங்களில் சிறிலங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்ட ஒருவருடைய இந்த
ஐந்து படங்களும் மிக முக்கியமானவை. சுயாதீனமான வட்டாரங்களின்
தகவல்களின்படி இந்த இளைஞன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும் விடுதலைப்
புலிகளின் அரசியல் பிரிவின் நீண்டகால உறுப்பினர் என்றும் தெரிய வருகிறது.
முதலிரண்டு
படங்களும் அவ்விளைஞன் முகத்தில் இரத்தத்துடன் அரைகுறை உயிருடன் இருப்பதைக்
காட்டுகிறது. தென்னை மரத்துடன் சேர்த்து அவ்விளைஞன்
கட்டப்பட்டிருக்கிறான். இராணுவ உடையணிந்த பலர் அவ்வளைஞனைச் சூழ
நிற்கின்றனர். ஒருவர் இளைஞனின் கழுத்துக்கு அருகாக கத்தியை வைத்துக்
கொண்டு நிற்கிறார்.
அடுத்த மூன்று படங்களிலும் அந்த இளைஞன் ஏறத்தாழ
மரணமடைந்து விட்டான். அவனுடைய தலை நிமிர்த்தப்பட்டு படம்
பிடிக்கப்படடிருக்கிறது. தமிழீழக் கொடியினால் அவனுடைய உடல் அரைகுறையாகப்
போர்த்தப்பட்டிருக்கிறது. அவனுடைய முகத்திலும் உடலின் மேற்பாகங்களிலும்
பெருமளவு இரத்தம் வடிந்திருக்கிறது.
பின்னைய மூன்று படங்களிலும் அவ்விளைஞனின்
கழுத்துப்பகுதியில் வேறொரு நிறத்தில் படிந்திருப்பது அவனுடைய மூளைப்பகுதி
தான் என இப்படங்களை ஆய்வு செய்த மருத்துவ நிபுணர் தெரிவித்திருக்கிறார்.
இது அவ்விளைஞன் தலையின் பின்புறத்தில் தாக்கப்பட்டிருப்பதனைப்
புலப்படுத்துகிறது எனவும் தெரிவித்திருக்கிறார். இது தலையின்
பின்புறத்தில் துப்பாக்கியால் சுட்டதாலோ அல்லது வெட்டுக்கத்தி, கோடரி
போன்ற ஆயுதத்தால் தாக்கப்பட்டதாலோ ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர்
தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை இவ்விளைஞன் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது
கொல்லப்பட்டதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் முடிவுக்கு வரவில்லை.
கிடைத்துள்ள ஆதாரங்கள் ஒரு முழுமையான விசாரணையை வேண்டி நிற்கின்றன எனவும்
அது தெரிவித்திருக்கிறது.
பல
படங்கள் விடுதலைப் புலிகளின் சீருடையில் இருந்த பெண் உறு;பினர்களுக்கு
என்ன நடந்தது என்பதை அம்பலமாக்கியுள்ளன. அவர்களுடைய சேர்ட் மேலே
தள்ளப்பட்டிருக்கிறது. அவர்களுடைய காற்சட்டை கீழே இறக்கி விடப்பட்டுள்ளது.
அவர்கள் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு இருக்கலாம். அல்லது
அவர்களுடைய சடலம் சிதைக்கப்பட்டிருக்கலாம். மீண்டும்இவை குறித்து
திட்டவட்டமான முடிவுக்கு வர முதல் முழுமையான விசாரணை ஒன்றின் அவசியம்
இங்கும் வலியுறுத்தப்படுகிறது.
நடந்தவற்றிலிருந்து கற்றுக் கொள்வதற்கும்
இணக்கத்தை ஏற்படுத்துவதற்குமாக அரசாங்கத்தினால் மே 17, 2010இல்
நிமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வரும்
விமர்சனங்களைச் சமாளிக்கவே நியமிக்கப்பட்டுள்ளதாக உணர முடிகிறது. அது
நியமிக்கப்பட்டதற்கான காரணம் 2002ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட போர்
நிறுத்த உடன்படிக்கை ஏன் சீர்குலைந்தது என ஆராய்வதாக இருக்கும் என
சொல்லப்படுவதிலிருந்தே அதன் நோக்கம் புலனாகிறது. போரின் இறுதிக்கட்டத்தில்
அரச படைகளாலும் விடுதலைப்புலிகளாலும் மேற்கொள்ளப்பட்ட
துஷ்பிரயோகங்களுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத விடயம் இது. அது
மட்டுமல்லாமல் இவ்வாணைக்குழு தற்போது வெளிவந்திருக்கும் புதிய தகவல்கள்
குறித்து விசாரணை மேற்கொள்ளப் போவதில்லை.
அத்தோடு சாட்சியமளிப்பவர் அல்லது பாதிக்கப்பட்டவரைப்
பாதுகாக்கும் வகையிலும் அது உருவாக்கப்பட்டிருக்கவில்லை. இந்த
ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் சித்ரா ரஞ்சன் டி சில்வா
முன்னாள் சட்டமா அதிபராவார். 2006ஆம் ஆண்டின் ஜனாதிபதி ஆணைக்குழுவின்
நடவடிக்கைகளில் தலையிட்டதற்காகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் இவர்.
இவருடைய நடடிக்கைகள் காரணமாகத் தான் 10 சர்வதேச நிபுணர்கள் கொண்ட
விசாரணைக்குழு விசாரணைகளிலிருந்து விலகியது. இந்த விசாரணைகள் வெளிப்படைத்
;தன்மை மிகுந்ததாகவோ சர்வதேச தரத்திற்கமையவோ நடாத்தப்படாததால் தாம்
அதிலிருந்து விலகுவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.
சிறிலங்காவுக்கு இவ்வாணைக்குழுக்கள் தொடர்பாக ஒரு
நீண்ட வரலாறு இருக்கிறது. குறிப்பாக 1948இல் சுதந்திரம் அடைந்த பிற்பாடு
இவ்வாறான ஒன்பது ஆணைக்குழுக்களை அது நிறுவி இருக்கிறது. அதில் ஒன்று கூட
உருப்படியான முடிவு எதனையும் அறிவிக்கவில்லை.
மார்ச் ஐந்தாம் திகதி ஐநா செயலாளர் நாயகம் இலங்கை
விவகாரங்களில் தனக்கு ஆலோசனை வழங்க ஒரு நிபுணர் குழுவை அமைக்கப் போவதாகச்
சொல்லி இருந்தார். உடனடியாக இலங்கையின் உள்விவகாரங்களில் அவர்
தலையிடுவதாக பான் கீ மூன் மீது தாக்குதல் தொடுத்தது இலங்கையரசு. இன்று வரை
அவர் அக்குழுவை நியமிக்கவில்லை.
பான் கீ மூனுடைய செயலற்ற தன்மை துஸ்பிரயோகம் செய்தோர்
மிகச் சாதாரணமாக எவ்வித அர்த்தமுமின்றி ஆணைக்குழுக்களை நியமிக்கவும்,
மிகப் பெரிதாகச் சத்தமிட்டு எல்லா வகையிலும் நீதியை மறைக்கவும், வாய்ப்பாக
இருக்கிறது. ஒரேயொரு நியாயமான வழிதான் இருக்கிறது. அது சர்வதேச விசாரணை
ஒன்றை ஆரம்பிப்பது தான்.
Re: சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்!
இரண்டு தரப்பிலும் இது போன்ற கொடூர சம்பவங்கள் நடந்துள்ளது!
Re: சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்!
--பார்க்கவே பயம்மா இருக்கு ச்ச ச்ச ஏன் இப்படி இனவெறியில் ச்ச
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
Similar topics
» உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யும் டாக்டர்கள்
» உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யும் டாக்டர்கள்
» இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை!
» வெட்டி வேர்
» அழகு பலன்களை அள்ளித் தரும் வெட்டி வேர்
» உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யும் டாக்டர்கள்
» இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை!
» வெட்டி வேர்
» அழகு பலன்களை அள்ளித் தரும் வெட்டி வேர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum