Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
குண்டு வைத்து ரயில் பாதை தகர்ப்பு : பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் பாய்ந்தது : 76 பேர் பலி!
Page 1 of 1 • Share
குண்டு வைத்து ரயில் பாதை தகர்ப்பு : பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் பாய்ந்தது : 76 பேர் பலி!
கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் ரயில் பாதையை மாவோயிஸ்டுகள் குண்டு வைத்து தகர்த்ததால், ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. தடம் புரண்ட பெட்டிகளின் மீது, அந்த வழியாக வந்த சரக்கு ரயில் பாய்ந்ததால் 76 பயணிகள் பலியாயினர்; 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மாவோயிஸ்டுகள் அட்டகாசம் நீடிப்பதால், மத்திய அரசு கவலை அடைந்துள்ளது.
மேற்கு வங்கம், மேற்கு மிட்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்களில் மாவோயிஸ்டுஆதிக்கம் அதிகம் உள்ளது. இங்கு தங்களுக்கு எதிரான வேட்டையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினரை வாபஸ் பெறக் கோரி, சில நாட்களாக மாவோயிஸ்டுகள் "கறுப்பு வாரம்' கடைபிடித்து வருகின்றனர். இந்த கறுப்பு வாரத்தின்போது, தாக்குதல் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மூன்று மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலை 1.30 மணிக்கு ஹவுராவில் இருந்து மும்பை செல்லும் லோக்மான்யா திலக் ஞானேஸ்வரி சூப்பர் டீலக்ஸ் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள கெமசோலி - சர்தியா ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையில் வந்து கொண்டிருந்தபோது, அந்த பாதையில் சில மீட்டர் தூரத்துக்கு தண்டவாளம் அகற்றப்பட்டு இருந்ததால், ரயில் பலத்த சத்தத்துடன் தடம் புரண்டது. 13 பெட்டிகள் தடம் புரண்டன.
பயணிகள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால், தடம் புரண்ட பெட்டிகளில் இருந்து, உடனடியாக வெளியேற முடியவில்லை. தடம் புரண்டதில் ஐந்து பெட்டிகள், அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்தின் மீது விழுந்தன. இந்த நேரத்தில், அந்த தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில் ஒன்று, விழுந்து கிடந்த ரயில் பெட்டிகள் மீது பலமாக மோதியது. இதில், அந்த ஐந்து பெட்டிகளும் உருக்குலைந்தன. அதில் இருந்த பயணிகள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் 76 பயணிகள் உயிர் இழந்தனர்; 200க்கும் மேற் பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்து நடந்த நேரம் அதிகாலை என்பதால், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், படுகாயமடைந்த பயணிகள் சிகிச்சை பெற முடியாமல் வலியால் துடித்தனர். பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கிடந்தனர். பின், கோல்கட்டா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மீட்புக் குழுவினர் வந்து, மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டனர்.
"காஸ் கட்டர்' உதவியுடன் ரயில் பெட்டிகளை உடைத்து, அதில் சிக்கியிருந்தவர்களையும், உயிரிழந்த உடல்களையும் மீட்டனர். கடும் சேதமடைந்த எஸ்-5 பெட்டியில் சிக்கியிருந்த பெரும்பாலானோர் உயிரிழந்தனர். இந்த பெட்டியில் இன்னும் சிலர் மீட்கப்படாமல் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப் பட்டு, காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு ஏற்றிச் செல்லப்பட்டனர்.
குண்டு வெடித்ததா?: சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, மீட்புப் பணிகளை பார்வையிட்டர். அவர் கூறுகையில்,"தண்டவாளத்தில் வைக்கப் பட்டிருந்த குண்டு வெடித்ததன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குண்டு வெடித்த சத்தத்தை, ரயிலில் இருந்த பலர் கேட்டுள்ளனர். தண்டவாளத்தை தகர்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பயணிகள் ரயில் வரும் நேரத்தையும், சரக்கு ரயில் வரும் நேரத்தையும் சரியாக கணக்கிட்டு, மாவோயிஸ்டுகள் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர்' என்றார்.
விபத்து நடந்தது எப்படி? சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, மீட்புப் பணிகளை பார்வையிட்டர். அவர் கூறுகையில்,"தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குண்டு வெடித்த சத்தத்தை, ரயிலில் இருந்த பலர் கேட்டுள்ளனர். தண்டவாளத்தை தகர்ப்பதற்காக வைக்கப் பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. பயணிகள் ரயில் வரும் நேரத்தையும், சரக்கு ரயில் வரும் நேரத்தையும் சரியாக கணக்கிட்டு, மாவோயிஸ்டுகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்' என்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகையில்,"நாசவேலை காரணமாகவே விபத்து நடந்துள்ளது. தண்டவாளத்தை தகர்ப்பதற்காக வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக வெளியான தகவல் இன்னும் உறுதி செய் யப்படவில்லை' என்றார். இந்த முரண் பட்ட தகவல் காரணமாக, விபத்து நடந்ததற்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியாமல் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர். இந்த நாசவேலைக்கு, மாவோயிஸ்ட் ஆதரவுடன் செயல்படும் போலீசாருக்கு எதிரான மக்கள் குழு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், மக்கள் குழுவின் செய்தித் தொடர்பாளர் அஷித் மகதோ இதை மறுத்துள்ளார்.
"பிஷ் பிளேட்'டை அகற்றி சதி: மேற்கு வங்க டி.ஜி.பி., புபீந்தர் சிங் கூறியதாவது:தண்டவாளத்தையும், அதன் கீழ் உள்ள மரக் கட்டையையும் இணைக்கும் "பிஷ் பிளேட்' என கூறப்படும் இரும்புக் கட்டை, சில மீட்டர் தூரத்துக்கு அகற் றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்ட "பிஷ் பிளேட்கள்' சில கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே விபத்து நடந்துள்ளது. தண்டவாளத்தை தகர்க்க குண்டு வைக்கப்பட்டிருந்ததா என்பது குறித்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதுகுறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு புபீந்தர் சிங் கூறினார்.
இது 65வது தாக்குதல்: கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரயில்வேயை குறிவைத்து 65 தாக்குதல்களை நக்சலைட்கள் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது: சமீபகாலமாக, நக்சலைட்கள் ரயில்வே துறையை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், ரயில்வேக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரயில்வே துறையை குறிவைத்து 65 முறை, நக்சலைட்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 76 பயணிகள் உயிரிழந்தனர். கடந்த 19ம் தேதி, மேற்கு வங்கம் மிட்னாபூர் மாவட்டத்தில் தண்டவாளத்தை நக்சலைட்கள் கண்ணிவெடி வைத்து தகர்த்தனர். இதில், சரக்கு ரயிலின் டிரைவர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர். அதற்கு அடுத்த நாள், பீகாரில் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில், சரக்கு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட எண்ணெய் டேங்கர்கள் தடம் புரண்டு, தீப்பற்றி எரிந்தன. இவ்வாறு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த மாதம், ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி பார்லிமென்டில் கூறுகையில்,"கடந்த 2007ல் ரயில்வேயை குறிவைத்து நக்சலைட்கள் 56 தாக்குதல்களை நடத்தியுள்ளனர். 2008ல் 30 தாக்குதல்களும், 2009ல் 58 தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற தாக்குதல்களால் ரயில்வேக்கு 500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது' என்றார்.
இறந்தவர்களுக்கு நஷ்டஈடு: மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு, ரயில்வே சார்பிலும், பிரதமர் சார்பிலும் இழப்பீட்டு தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. "மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்' என, பிரதமர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"பலியானோரின் குடும்பத்துக்கு தலா ரூ. ஐந்து லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ. ஒரு லட்சமும் வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 மாநிலங்களில் இரவில் ரயில் நிறுத்தப்படும்? "நக்சலைட் ஆதிக்கம் உள்ள ஐந்து மாநிலங்களில், இரவு நேர ரயில் போக்குவரத்தை நிறுத்தி வைப்பது குறித்து திட்டமிட்டு வருகிறோம்' என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில்வே வாரிய உறுப்பினர் (போக்குவரத்து) விவேக் சகாய் கூறியதாவது: நக்சலைட்கள் ரயில்வே போக்குவரத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, இரவு நேரங்களில் தான் இது போன்ற தாக்குதல் அதிக அளவில் நடத்தப்படுகிறது. எனவே, நக்சலைட் ஆதிக்கம் அதிகம் உள்ள மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், ஒரிசா, சத்திஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் இரவு நேர ரயில் போக்குவரத்தை நிறுத்துவது குறித்து, விவாதித்து வருகிறோம். தற்போது நக்சலைட்கள், "கறுப்பு வாரம்' கடைபிடித்து வருவதால், இந்த நடவடிக்கை அவசியம் என தோன்றுகிறது. இருந்தாலும், இதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. இவ்வாறு விவேக் சகாய் கூறினார்.

Guest- Guest
Similar topics
» ரஷ்யா மெட்ரோ ரயில் நிலையங்களில் பயங்கர குண்டு வெடிப்பு : 10 பேர் பலி
» பனியாக மாறிய நதி வெடி வைத்து தகர்ப்பு
» 12 வயதில் தந்தையான கேரள சிறுவன் மீது பலாத்கார வழக்கு பாய்ந்தது
» சீனா, லண்டன் இடையிலான நேரடி சரக்கு ரயில் சேவை
» 'கரண்ட் கட்' செய்த மின்வாரிய அலுவலகம் சூறை -தீ வைத்து எரிப்பு- 37 பேர் கைது

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum