Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சமூக வலை தளங்கள் வரமா சாபமா?
Page 1 of 1 • Share
சமூக வலை தளங்கள் வரமா சாபமா?
சமூக வலை தளங்களின் அபாயம்
பிரச்சினைகளுக்கு காரணமாகும் சமூக வலைதளங்கள்- அண்மைக்கால சோக நிகழ்வுகள் ஆதாரம்
மனித உறவுகளின் தொடர்பை மேம்படுத்துவதற்காக வந்த சமூக வலைதளங்கள், இன்று பல் வேறு பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது. அந்தரங்க விஷயங்களை நிமிடத்துக்கு நிமிடம் சமூக வலை தளங்களில் பகிர்வதால் ஏற்படக் கூடிய விபரீத பின்விளைவுகளைப் பற்றி நம்மில் பலரும் சிந்தித்ததாக தெரியவில்லை. இதற்கு சமீபத்திய உதாரணம், மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் பரிதாபமான முடிவு.
சுனந்தா புஷ்கர் மரணமடைந்ததற்குகூட அவரது ட்விட்டர் பக்கத்தில் நடந்த சண்டைச் சச்சரவு களைத்தான் காரணமாக சொல்கிறார்கள். இது ஒருபுறமிருக்க பேஸ் புக்கில் சிலர் தங்களது அன்றாட நடவடிக்கைகளைகூட ஸ்டேட்டஸாக போட்டு வருகிறார்கள். சில வசதியான இளைஞர்கள், அப்பா விலையுயர்ந்த கார் பரிசளித் தார், ஐ-போன் வாங்கித்தந்தார்.. என்பது போன்ற ஸ்டேட்டஸ்களை போடுவதை வழக்கமாக வைத்துள் ளார்கள். இதை கவனிக்கும் சிலர் சம்பந்தப்பட்ட நபரை கடத்தி பணம் பறிக்கும் வேலைகளில் ஈடுபடவும் வாய்ப்புகள் அதிகமுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் சென்னை பள்ளிகரணையைச் சேர்ந்த சித்ரா (பெயர் மாற்றப்பட் டுள்ளது) என்ற பெண், வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந் தார். போலீஸ் விசாரணையில், ‘நான் வீட்டில் தனியாக இருக்கிறேன்’ என்ற அவரது ஸ்டேட்டஸை பார்த்த அவரது பேஸ் புக் நண்பர்கள் இருவர் வீட்டுக்கே வந்து அவரை பலாத்காரம் செய்து கொலை செய்தது வெளிச்சமானது.
மேலும் வேலூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் அறிமுகமான பெண்ணை பல மாதங்களாக காதலித்தார். காதலி கேட்டபோதெல்லாம் ஆயிரக்கணக்கில் பணத்தையும் வாரி இறைத்தார். நேரில் சந்திக்க வேண்டுமென்று அந்த இளைஞர் கேட்க, ஒரு சில நாட்களில் அந்த பெண்ணின் ஐ.டி.யே மாயமானது. இதில் மன உளைச்சல் அடைந்த அந்த இளைஞர் தற்கொலை வரை சென்று மீண்டுள்ளார்.
இந்தப் பிரச்சினைகள் குறித்து சைபர் கிரைம் குற்றப்பிரிவின் முன்னாள் கூடுதல் கண்காணிப்பாளர் எஸ். பாலு கூறுகையில், “பேஸ்புக், ட்விட்டரை பயன்படுத்துபவர்கள் முன் பின் தெரியாதவர்களை நண்பராக்கி கொள்ளக்கூடாது. தெரிந்தவரிடமிருந்து நட்பு வேண்டுகோள் வந்தாலும், அந்த பக்கம் உண்மையிலேயே அவருடையதுதானா என்பதையும் சோதிக்க வேண்டும். முக்கியமாக ஸ்டேட்டஸ் போடும்போது கவனமாக இருக்கவேண்டும்” என்றார்.
2012-ம் ஆண்டின் கணக்கெடுப் பின்படி சமூக வலைதளங்களில் 147 கோடி பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த எண்ணிக்கை 2013-ம் ஆண்டின் இறுதியில் 173 கோடியாக உயர்ந்திருக்கிறது. உலகில் நான்கில் ஒருவர் சமூக வலைதளங்களை பயன்படுத்துவ தாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
முழுக்க முழுக்க மனித உறவையும், தொடர்பையும் மேம்படுத்து வதற்காக வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் கடந்த கால சம்பவங்கள் சிலவற்றை வைத்து பார்க்கும் போது சமூக வலைதளங்களால் பிரச்சினைகளே அதிகம் என்பது உறுதியாகிறது.
(நன்றி : தி ஹிந்து, தமிழ் நாளேடு - 27-01-2014)
தி இந்து தமிழ் நாளேடில் வந்த ஒரு செய்திக்கு எனது கருத்து :
இதற்கு தீர்வு தான் என்ன? நம் குழந்தைகளுக்கு நாம் நல்ல பழக்க வழக்கங்கள் சொல்லித் தருகிறோம். பெரியவர்களிடம் எப்படி பழகுவது, வெளி மனிதர்கள் முன் எப்படி நடப்பது என்பது தொடங்கி thanks, excuse me போன்ற basic manners சொல்லி கொடுக்கிறோம். ஆனால் இணையத்தின் சாதக பாதகங்களை பற்றி நமக்கும் தெரிய வில்லை நாம் நமது அடுத்த தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுக்கவும் முயல்வதில்லை.
Google, Wikipedia போன்றவை ஒரு வரப் பிரசாதம். பெரியவர்கள் நாமே முதலில் தகவல் பாதுகாப்பின் அவசியத்தை உணர வேண்டும். நிறைய செய்திகள் தகவல் பாதுகாப்பு பற்றி இணையத்தில் உள்ளது. நமக்கு தேவையான விஷயத்தை நாம் தேடி தெரிந்து கொள்ள முனைய வேண்டும். இணைய தளத்தை சரிவர கையாள தெரியாமல் இன்று பிறருக்கு ஏற்படும் சங்கடம் நாளை நமக்கோ நம் குடும்பத்தினருக்கோ ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இன்றைய இளைய தலைமுறை 2-3 வயது முதற்கொண்டே smart phones, ipad, laptop முதலியன கையாள்வதில் தேர்ச்சி பெற்றுள்ளனர். எனது பேத்தி இஷான்வி ipad கையாளும் அழகை காண கண் கோடி வேண்டும். அப்போது அவளுக்கு வயது 2 தான்.
யுவ/ யுவதிகள் சதா சர்வ காலமும் facebook, twitter போன்ற சமூக வலை தளங்களில் பழியாக கிடக்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பாக இணைய தளத்தை எப்படி உபயோகிப்பது என்பதை கற்றுத் தரவேண்டிய பொறுப்பு நம்முடையதுதான். ஏனெனில் தகவல் பாதுகாப்பு என்பது பள்ளி கல்லூரிகளில் பாடமாக சொல்லித் தரப்படுவது இல்லை. மனிதன் தோன்றி பல மில்லியன் ஆண்டுகள் ஆகின்றன. பல புரட்சிகள் (revolutions) மனித இனம் சந்தித்துள்ளது. இவற்றில் மிக உன்னதமானதும் மிக ஆபத்தானதும் தகவல் தொழில் நுட்பப் புரட்சி (information technology revolution) தான்.
மனித குலம் சந்தித்த புரட்சிகளில் மிக உன்னதமானதும், வலிவானதும், ஆபத்தானதும் தகவல் தொழில் நுட்ப புரட்சி தான். அது நம் தினசரி வாழ்வில் ஊடுருவிய விதம் நமக்கு யோசிக்க கூட அவகாசம் இல்லாமல் போனது. கை பேசியும் இணையதள இணைப்பும் இல்லை என்றால் நமது இளைய தலைமுறை பைத்தியம் பிடித்து செய்வது அறியாமல் திகைத்து நிற்கும். இத்தகைய இன்றியமையாத ஒன்றை கையாளும் பொழுது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். முக நூலில் நாம் பதிவேற்றம் செய்யும் ஒவ்வொரு செய்தியும் நாம் உதிர்க்கும் வார்த்தைகள் போல. ஒரு முறை எழுதிவிட்டால் பிறகு அது நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்காது. மேலும் அந்த செய்தி எங்கெல்லாம் செல்கிறது, யாரெல்லாம் படிக்கிறார்கள், எப்படியெல்லாம் மற்றவர்களுக்கு பகிரப் படுகிறது என்பது நமக்கே தெரியாது. எனவே இளைய தலைமுறையினருக்கு தகவல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை அளிப்பது நமது கடமையாகும்
Lets join our hands and educate web users about the importance of safe computing!!

Re: சமூக வலை தளங்கள் வரமா சாபமா?
கட்டுரைகளை வேறு தளத்தில் இருந்து எடுத்து இருந்தால் அந்த தளத்துக்கு நன்றி தெரிவித்து பதியுங்கள் நண்பரே
Similar topics
» குழந்தைச்செல்வம் என்பது வரமா ? ஏன்?
» சமூக பயம்
» சமூக வலை தளம் உதவி
» சமூக சிந்தனை கவிதைகள்
» அமர்க்களம் கருத்துக்கள சமூக வலைத்தளங்கள் இவை

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|