Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காதல் உறவின் பிரிவை தாங்கிக் கொள்ள பின்பற்ற வேண்டியவைகள்
Page 1 of 1 • Share
காதல் உறவின் பிரிவை தாங்கிக் கொள்ள பின்பற்ற வேண்டியவைகள்
மனதிற்கு மகிழ்ச்சியை தரும் காதல் என்கிற உணர்வு, காதலில் சில பிரச்சனைகள் ஏற்படும் போது வேதனையையும் தருகிறது. பிரச்சனை தீர்ந்து மீண்டும் மகிழ்ச்சி ஏற்பட்டால் சரி, மாறாக அந்த பிரச்சனை அதிகமாகி உறவினை இழக்கும்போது ஏற்படும் வலி அதிகம். அந்த வலியிலிருந்து வெளிவரும் வழிகள் குறித்து காண்போம். ஒருவரது உறவினை இழந்ததினால் இதயம் நொறுங்கியுள்ளவர், தம்மை நேசிக்காதவரை தானும் நேசிப்பதை நிறுத்தத, தெரிந்து கொள்ள வேண்டிய வழிகள், அவரது வாழ்வை மேற்கொண்டு நகர்த்த அவருக்கு உதவும்.தான் நேசிப்பவர் தன்னை நேசிக்கவில்லை என்று தெரிவித்துவிட்ட பின்னும் கூட அவர் மீது ஆழமான காதலை கொண்டிருப்பது ஒருவரது வாழ்வில் வலி ஏற்படுத்த கூடிய தருணங்களில் ஒன்று.
காதலர் தன் முடிவை தெரிவிக்கும் முன், தான் அதிகமாக அவரை நேசித்த காரணத்தினால் அவரது இந்த பண்பற்ற கொடூரமான முடிவு, மிகுந்த அதிர்ச்சியை தரும்.அவரது முடிவினை மதிப்பதே சிறந்த ஒன்றாகும். மேலும் தன்னை நேசிக்காதவரை தானும் நேசிப்பதை நிறுத்தி, அவரது எதிர்காலம் குறித்து சிந்தித்து செயல்பட இந்த குறிப்புகள் உதவும். இழப்பிற்காக வருந்துங்கள் உறவினை இழந்ததினால் ஏற்படும் துக்கத்தினை அனுமதிக்க வேண்டும். உறவு முறிவிற்கு பின் கோபம், குழப்பம், வருத்தம், நம்பிக்கை துரோகம் போன்ற உணர்வுகள் சாதாரணமானது தான். இந்த உணர்வுகளை அவர் கடந்து வரும் போது தன் மீது மற்றொருவர் அளவு கடந்த காதல் கொள்ள, தான் தகுதியானவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் தன்னுடன் இணைந்திருக்கவில்லையே என்று வருந்துவதை விட அவர் தன் உறவினை முறித்து கொண்டதே மேலானது என்று கருத வேண்டும்.
சமூகத்துடன் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள் வருந்துவதற்கு நேரம் கொடுத்த பின் செய்ய வேண்டியது யாதெனில், தன்னை சுற்றியுள்ள மற்ற உறவுகளுடன் இணைந்து பழக வேண்டும். பொதுவாக உறவு முறிந்த பின் அவர் தன் வீட்டில் தனியாக அமர்ந்து தன் எண்ணத்தினை குறித்து சிந்திக்க மட்டுமே அதிகம் விரும்புவார். தனியாக அதிக நேரம் செலவிட்டு முன்னாள் காதலரை குறித்து அதிகம் சிந்திக்கும் போது அவருக்குள் உன்னை தவற விட்டு விட்டேன் என்ற எண்ணம் மட்டுமே உருவாகும். மன அழுத்தத்தை தோற்றுவிக்கும் இந்த உணர்வுகளிலிருந்து வெளிவர அவரை சுற்றியுள்ள மக்களுடன் கலந்து பழகி வாழ வேண்டும்.
உங்களுக்கான இலக்குகளை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள் காதலை இழந்து மன வேதனையில் உள்ளவர், தன் வாழ்வு ஒளிர்வதற்குப் புதிதாக சில இலக்குகளை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். புதிய மொழி கற்பது, புதிய கார் வாங்குவது, நாட்டின் மற்றொரு பகுதிக்கு சுற்றுலா செல்வது, தொழில் அல்லது வேலையை முற்றிலும் புதிதாக்கி கொள்வது போன்ற புதிய இலக்குகளை அமைத்து கொள்ள வேண்டும். இந்த இலக்குகளை அடைவதற்கு தான் மேற்கொள்ள போகும் முயற்சிகள் குறித்து திட்டமிட வேண்டும். இப்போது அவர் தனியாக உள்ளார் என்பதையும், தான் விரும்பியபடி தன் வாழ்வினை அமைத்து கொள்ள நிறைய காலம் உள்ளது என்பதையும் உணர வேண்டும்.
தொடர்பு கொள்வதை நிறுத்துங்கள் காதலை இழந்தவர் தனது முன்னாள் காதலர் குறித்த எந்த ஒரு தொடர்பையும் தவிர்க்க வேண்டும். சமூக வலை தளங்களிலிருந்து அவரை நீக்க வேண்டும். எனவே காதலரை குறித்தும் அவர் வாழ்வின் சமீபத்திய செய்திகள் எதையும் தெரிந்து கொள்ள முடியாமல் போகும். அவர் தற்போது யாருடன் வெளியில் செல்கிறார் போன்ற விபரங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டவராயினும், அதை தெரிந்து கொள்வது அவரை மேலும் உணர்ச்சிவசபட்டவராக்கி அவரது உடல் நிலையை பாதிக்கும். ஈ-மெயில், செல்போன் ஆகியவற்றிலிருந்து காதலர் குறித்த தகவல்களை நீக்குவது, அவரை தொடர்பு கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினை அகற்றும்.
உணர்வு தூண்டுதல்களை நீக்குங்கள் தான் மிகவும் நேசித்த காதலரையும், அவர் உறவு குறித்த நினைவுகளை தூண்டக்கூடிய விஷயங்களை நீக்க வேண்டும். எனவே அவர் தனது காதலரின் பழைய மின்னஞ்சல், இருவரது படங்கள், குரல் அஞ்சல் மற்றும் உரை செய்திகள் ஆகியவற்றை நீக்க வேண்டும். காதலில் இருந்த போது நிகழ்ந்திருந்த பழைய மகிழ்ச்சியான தருணங்கள் குறித்து ஆழ்ந்து யோசிப்பது எந்த அளவிற்கு மகிழ்ச்சியான ஒன்றோ அதே அளவிற்கு சுயசித்திரவதையானதும் கூட. இது அவர் தன் வேதனையிலிருந்து மீண்டு வரும் முயற்சியில் பின்னடைவாக அமையும்.
மீண்டும் வெளியில் செல்ல முயலுங்கள் தனது பழைய காதலர் குறித்த நினைவுகளிலிருந்து முழுவதும் வெளி வராத நிலையிலும் மீண்டும் வெளியில் செல்ல முயல வேண்டும். சிரமம் மேற்கொண்டு தன் காதலருக்கு பதிலீடாக வேறொருவரை கண்டு பிடிப்பதை நோக்கமாக கொள்ளாமல் மற்றொருவரின் துணையில் மகிழ்ச்சி கொள்வதை இலக்காக கொள்ள வேண்டும். கவலைகளிலிருந்து வெளி வரும் முயற்சியில், தனக்கான சரியான நபரை சந்திக்கும் வரை, சில அற்புதமான மக்களை சந்திக்க இது வாய்ப்பாக அமையும் அல்லது வேறு ஒரு ஒருவருடன் உறவினை உருவாக்கி கொள்வதை விட தனியாக இருப்பதே சிறந்தது என்ற முடிவிற்கும் வரக்கூடும். துன்பதிலிருந்து மீண்டு வருவது கடினம். ஆயினும் நம் வாழ்வு துன்பப்பட வழங்கப்பட்டதல்ல. துன்பதிலிருந்து மீண்டு வர தெரிந்து கொண்ட வழிகளை நம் வாழ்வில் அவசியம் ஏற்படும் போது பின்பற்ற வேண்டும்.
நன்றி செய்தி

Re: காதல் உறவின் பிரிவை தாங்கிக் கொள்ள பின்பற்ற வேண்டியவைகள்
தன்னம்பிக்கை தரும் உங்கள் பதிவுக்கு நன்றி முரளி!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» உறவின் பெருமை - சிறப்பு கட்டுரை.
» குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டியவைகள்....!!
» உறவின் பெருமை
» குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்
» நல்ல உறவின் அடையாளம் எது?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|