Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
16 வது லோக் சபா தேர்தல் தேதி அறிவிப்பு
Page 1 of 1 • Share
16 வது லோக் சபா தேர்தல் தேதி அறிவிப்பு
புதுடில்லி : லோக்சபா தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. நாடு முழுவதும் 9ம் கட்டங்களாக தேர்தல் நடைபெறும் எனவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 24ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
16வது லோக்சபா:
நடப்பு 15வது லோக்சபாவின் ஆட்சி காலம் ஜூன் முதல் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் மே 31ம் தேதிக்குள் 16வது லோக்சபாவிற்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, புதிய அரசு ஆட்சி அமைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. 16வது லோக்சபாவிற்காக நாடு முழுவதும் உள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் தேதி விபரத்தை இன்று தலைமை தேர்தல் கமிஷ்னர் வி.எஸ்.சம்பத் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது : லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து ஆந்திரா, ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலும் நடத்தப்பட உள்ளது; ஆந்திர சட்டசபையின் பதவி காலம் ஜூன் 2ம் தேதியுடனும், ஒடிசா சட்டசபையில் பதவி காலம் ஜூன் 7ம் தேதியுடனும், சிக்கிம் சட்டசபையின் பதவி காலம் மே 31ம் தேதியும் முடிவடைய உள்ளது; இதனால் மே 31ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட உள்ளது;
நடத்தை விதிகள் உடனே அமல்:
பள்ளி பொதுத் தேர்வு, அறுவடை காலம், வானிலை ஆகியவற்றை கருத்திக் கொண்டு தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது; முதல் முறையாக 18 மற்றும் 19 வயது நிரம்பிய 2.4 கோடி புதிய வாக்காளர்கள் 16வது லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க உள்ளனர். இந்த தேர்தலில் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது; நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன; 2009ம் ஆண்டு தேர்தலை விட இந்த தேர்தலில் 10 கோடி பேர் புதிதாக ஓட்டளிக்க உள்ளனர்; முதல் முறையாக நோட்டோ முறை லோக்சபா தேர்தலில் அமல்படுத்தப்பட உள்ளது; வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் இல்லை என்ற குழப்பங்கள் ஏற்பாடாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன; 9 லட்சத்து 30 ஆயிரம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது; கடந்த தேர்தலை விட 12 சதவீதம் ஓட்டுச் சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட உள்ளது; தலைமை செயலர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி ஓட்டுச்சாவடிகளில் கோடை காலத்தை கருத்தில் கொண்டு குடிநீர், கழிப்பறை மற்றும் மாற்று திறனாளி வாக்காளர்கள் வந்து செல்வதற்கான வசதிகளும் செய்யப்பட உள்ளன; தேர்தல் தேதிக்கு 3 நாட்களுக்கு முன் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட ஓட்டுச்சீட்டுக்கள் வழங்கப்படும்; ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதை தவிர்க்க மீடியாக்கள், பாதுகாப்பு படைகள், வீடியோ பதிவுகள் உள்ளிட்டவைகள் மூலம் கண்காணிக்கப்படும்; வேட்பாளர்களின் செலவு கணக்கும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது;
தேர்தல் தேதிகள் :
ஏப்ரல் 7 முதல் தேர்தல்கள் துவங்கும்; மொத்தம் 9 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது; முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 7ம் தேதி 2 மாநிலங்களிலும், ஏப்ரல் 9ம் தேதி 5 மாநிலங்களிலும் நடைபெறும்; 3ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி 14 மாநிலங்களில் நடைபெற உள்ளது; 4ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 12ம் தேதி 3 மாநிலங்களிலும்; 5ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 17ம் தேதி 13 மாநிலங்களில் நடைபெற உள்ளது; 6ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 24ம் தேதி 12 மாநிலங்களில் நடைபெற உள்ளது; 8ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 30ம் தேதி 9 மாநிலங்களில் நடைபெறும்; கடைசி மற்றும் 9வது கட்ட தேர்தல் மே 7ம் தேதி 7 மாநிலங்களில் நடைபெறும்; தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 24ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறும்; தமிழகத்தில் 6வது கட்டமாக தேர்தல் நடத்தப்படும்.
மே 16-ல் ஓட்டு எண்ணிக்கை : லோக்சபா தேர்தலில் 543 தொகுதிகளிலும் பதிவான ஓட்டுகள் அனைத்தும் மே 16ம் தேதி எண்ணப்படும்.
இவ்வாறு தேர்தல் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
நன்றி: தினமலர்

பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: 16 வது லோக் சபா தேர்தல் தேதி அறிவிப்பு
நோட்டோ பயன்படுத்தும் முறை இந்த தேர்தலில் முதல் முறையாகஅறிமுகமுகப்படுத்தப்பட்டுள்ளதாம்..
-
நோட்டோ என்றால் என்ன?
-
நோட்டோ என்றால் என்ன?
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: 16 வது லோக் சபா தேர்தல் தேதி அறிவிப்பு
யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Similar topics
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» அக்டோபர் 2-ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் அடைப்பு -ஆட்சியர் அறிவிப்பு
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!
» அக்.12-ம் தேதி மொகரம்: தமிழ்நாடு தலைமை காஜி அறிவிப்பு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum