Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கேரள அரசைக் கண்டித்து மறியல்: வைகோ தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கைது
Page 1 of 1 • Share
கேரள அரசைக் கண்டித்து மறியல்: வைகோ தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கைது
கோவை, மே 28: முல்லைப் பெரியாறு, பாம்பாறு உள்ளிட்ட நீர்ப் பகிர்வு பிரச்னைகளில் தமிழகத்துக்கு எதிராகச் செயல்படும் கேரள அரசைக் கண்டித்து மதிமுக சார்பில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 7 இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறியலில் மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல தேனி மாவட்டத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உள்பட 1,707 பேர் கைது செய்யப்பட்டனர்.
முல்லைப் பெரியாறு அணையை உடைத்துவிட்டு புதிய அணை கட்டுவது, உடுமலைப்பேட்டை அருகே உள்ள அமராவதி அணைக்கு முக்கிய நீர் ஆதாரமான பாம்பாற்றில் புதிய அணை கட்டுவது, நெல்லையில் உள்ள செண்பகவள்ளி அணையை பழுதுபார்க்க அனுமதி மறுப்பு, குமரி மாவட்டத்தில் நெய்யாறு அணையிலிருந்து இடதுகரை வாய்க்காலுக்கு தண்ணீர் வழங்காமல் இருப்பது என தமிழக நலனுக்கு எதிராகக் கேரள அரசு செயல்பட்டு வருகிறது என்று வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழகத்தின் நதிநீர் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும், தமிழக நலனுக்கு எதிராகச் செயல்படும் கேரள அரசின் போக்கைத் தடுத்து நிறுத்தவும், இவ்விஷயத்தில் ஓரவஞ்சகமாகச் செயல்படும் மத்திய அரசைக் கண்டித்தும், தமிழகத்தின் உரிமையை கேரள மக்களுக்கு உணர்த்தவும் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக அழைப்புவிடுத்தது.
அதன்படி கோவை அருகே தமிழக-கேரள எல்லையான கந்தேகவுண்டன் சாவடியில் வெள்ளிக்கிழமை நடந்த மறியல் போராட்டத்துக்கு வைகோ தலைமை வகித்தார். கட்சியின் பொருளாளர் ஆர்.மாசிலாமணி, துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா, எம்எல்எப் பொதுச் செயலர் சு.துரைசாமி, கோவை புறநகர் மாவட்ட செயலர் ஆர்.டி.மாரியப்பன், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வழுக்குப்பாறை பாலு, இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலர் டி.சி.செந்தில்குமார் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
காலை 10.30-க்குத் துவங்கிய போராட்டம் மாலை 3 மணி வரை நீடித்தது. இதனால் கோவை - பாலக்காடு சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. கேரளம் சென்ற சரக்கு லாரிகள், வாகனங்கள் ஏறத்தாழ 5 கிமீ தூரத்துக்கு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கேரளம் சென்ற சுற்றுலா பஸ்கள், கார் உள்ளிட்ட வாகனங்களை மதிமுக தொண்டர்கள் சாலையில் படுத்து மறித்தனர்.
உடுமலை வழியாக கேரளம் செல்லும் போக்குவரத்து காலை 8 மணியில் இருந்து நிறுத்தப்பட்டது. கேரளத்தில் இருந்து வந்த வாகனங்கள் சின்னாறு சோதனைச்சாவடி அருகிலும், உடுமலையில் இருந்து கேரளம் சென்ற வாகனங்கள் மானுப்பட்டியிலும் நிறுத்தி வைக்கப்பட்டன. உடுமலை-மூணாறு சாலையில் இரு திசைகளிலும் ஏறத்தாழ 5 கிமீ தூரத்துக்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. மறியல் போராட்டம் பிற்பகல் 2 மணி வரை நீடித்தது.
ஆனைக்கட்டி: ஆனைக்கட்டியை அடுத்த மாங்கரை சோதனைச் சாவடியில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் டி.எஸ். மணி தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. 340 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலந்தாவளம்: வேலந்தாவளம் சோதனைச் சாவடி அருகே இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. கோவை மாநகர் மாவட்ட மதிமுக செயலர் ஆர்.ஆர்.மோகன்குமார், சேலம் மாவட்ட செயலர் தாமரைக்கண்ணன், நீலகிரி மாவட்ட செயலர் அட்டாரி நஞ்சன் உள்பட 485 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோபாலபுரம்: பொள்ளாச்சி அருகே உள்ள கோபாலபுரம் சோதனைச் சாவடி அருகே தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் உ.தனியரசு தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இங்கு மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆர்.வரதராஜன் உள்பட 607 பேர் கைது செய்யப்பட்டனர்.
நடுப்புணி, வளந்தாயமரம்: பொள்ளாச்சியை அடுத்த நடுப்புணி சோதனைச் சாவடியில் தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியின் மணியரசன், மதிமுக மாநில விவசாய அணிச் செயலர் சூலூர் சி.பொன்னுசாமி ஆகியோர் தலைமையில் 410 பேர் கைது செய்யப்பட்டனர். வளந்தாயமரம் சோதனைச் சாவடி அருகே நடந்த போராட்டத்துக்கு தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தியாகு தலைமை வகித்தார். இதில் முன்னாள் எம்பியும், மதிமுகவின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினருமான சி.கிருஷ்ணன் உள்பட 350 பேர் கைது செய்யப்பட்டனர். உடுமலைப்பேட்டையில்ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

Guest- Guest
Similar topics
» தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்து: வைகோ
» சீமானை விடுவிக்க கோரி நெல்லையில் மறியல்
» கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் புதிய அரசு 25–ந்தேதி பதவி ஏற்பு
» வினையாக வந்த சாலை மறியல் போராட்டம் :ஆம்புலன்சில் உயிரிழந்த சிறுவன்
» வைகோ, நெடுமாறன் சிறையில் அடைப்பு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum