தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அறுபத்து மூவர் திருவிழா

View previous topic View next topic Go down

அறுபத்து மூவர் திருவிழா Empty அறுபத்து மூவர் திருவிழா

Post by முழுமுதலோன் Fri Mar 14, 2014 5:46 pm

மயிலையே கயிலை!.. கயிலையே மயிலை!..


கபாலி!..

எனும்போது - கம்பீரம், கண்டிப்பு. பொறுப்பு மிக்க தந்தையின் முழுவடிவம். தன் பிள்ளை உருப்பட்டு முன்னுக்கு வரவேண்டுமே - என்று எண்ணும் தந்தையின் நேர் வடிவம் - விளங்குவதை உணரலாம்.. 
இன்னொன்றும் சொல்வதென்றால் - நான்முகன் ஐந்து தலைகளுடன் செருக்குற்று நின்ற போது -  ஆணவம் அடங்கட்டும் என்று ஐந்தாவது தலையைக் கிள்ளி எடுத்த பின்னரே - கபாலி எனும் திருப்பெயர் விளங்கிற்று.
அறுபத்து மூவர் திருவிழா Mayilai+temple+2கற்பகாம்பாள்!..
அப்படியே - திருவாளர் கபாலி அவர்களுக்கு இணையான கம்பீரம். கண்டிப்பு. இவனுங்களை எப்படி ஈடேற்றுவது!.. என்று இருவித இயல்பினில் இருக்கும் மாணவர்களை - - ஊடுருவிப் பார்க்கும் பார்வையை உடைய - உயர் நிலைக் கல்வியாளர் எனும் பாவனை!..

இன்னொன்றும் சொல்வதென்றால் - நான்முகனின் ஐந்தாவது தலையை ஐயன் கிள்ளி எடுத்தபோது , கலைச்செல்வி அருகிருந்தும் கலங்கி நின்ற நான் முகன் இப்படியாவது ஈடேறட்டும் என்று எண்ணியவாறு, திருமதி கபாலி அருகிருந்ததாக ஐதீகம்.

கற்பகாம்பிகை!..
''..ஏண்டா.. இப்படிப் பண்றே!..'' - என்று கேட்டுக் கொண்டே, ஏதாவது ஒரு வழியில் , எப்படியும் உதவுபவள்!.. புரிந்திருக்குமே! - அன்பான அன்னை!..
கற்பகம்!.. 
எங்கெங்கிருந்தெல்லாமோ பாசப்பிணைப்புகளுடன் வந்து அமையும் அரிய உறவுகள் -  பெரியம்மா, அத்தை, அண்ணி - எனும் பாவனை!..
கற்பகா!..
''..எனக்காக செய்யமாட்டாயா!..'' - என்று கேட்டால், அப்படியே இளகும் மனம் உடைய இனிய தங்கை எனும் பாவனை!..
அறுபத்து மூவர் திருவிழா Mayilapur

கற்பகவல்லி!..

''..இந்த நேரத்தில் எங்கேடா ஊர் சுற்றி  விட்டு வருகிறாய்!..'' - என்று கேட்டபடி தலையில் குட்டுவதற்கு என கை வரும் . ஆனால் மனம் வராது. 
ஆதுரத்துடன் தலையைக் கோதி விடும். 
துயரங்களைத் தூசாக ஊதி விடும். 
சோகங்களைக் கெடுக்க தோள் கொடுக்கும். 
அல்லல்களை அழிக்க வாள் கொடுக்கும்!..
கற்பகவல்லி எனும்போது - ஆதரவில் அரவணைப்பில் இன்னொரு தாய் என  அன்பு நிறைந்த அக்கா - அவள் அருகில் இருப்பதைப் போன்றதோர் உணர்வு!..
அதனால் தானே  -
கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்!.. - என்றொரு பாடல் பிறந்தது.
வல்லி என்ற பதம் -  வாத்ஸல்யம், வாஞ்சை மிக்கது!..

தஞ்சையில் - ஆனந்தவல்லி!..

திருவாடானையில் - சிநேகவல்லி!..
திருக்கடவூரில் - அபிராமவல்லி!..
மதுரையில் - மரகதவல்லி!..

மயிலையில் - கற்பகவல்லி!..
இத்தகைய வாஞ்சைமிக்க கற்பகவல்லி - கபாலீச்சரத்தானுடன் கூடிக் குளிர்ந்து -  அடியவர்க்கு அருள் பொழிவதைக் கேட்கவா வேண்டும்!..


அறுபத்து மூவர் திருவிழா Nal+t+Tamil
நேற்று நடந்த தேரோட்டம்

  
இன்று வெள்ளிக்கிழமை. காலையில் திருஞானசம்பந்தர் எழுந்தருள்கின்றார்.

பூம்பாவையின் அஸ்தி கலசத்துடன் சிவநேசர் செட்டியார் எழுந்தருள ஓதுவாமூர்த்திகள் -மட்டிட்ட புன்னையங் கானல் - திருப்பதிகத்தினை மனமுருகப் பாடுகின்றனர். ஒவ்வொரு பாடலுக்கும் தீபாராதனை நிகழும்.

பத்தாம் திருப்பாடலின் போது அஸ்தி கலசமாகப் பாவிக்கப்பட்ட மலர் குவியலில் இருந்து பூம்பாவை உயிர் பெற்று எழுகின்றாள்.  எங்கும் ஆனந்த கோஷம்.


Last edited by முழுமுதலோன் on Fri Mar 14, 2014 6:03 pm; edited 2 times in total (Reason for editing : பிழை)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறுபத்து மூவர் திருவிழா Empty Re: அறுபத்து மூவர் திருவிழா

Post by முழுமுதலோன் Fri Mar 14, 2014 5:50 pm

மாலையில் அறுபத்து மூவர்க்கு தரிசனம் தரும் ஆனந்தப் பெருவிழா. 

விநாயகர் முன் செல்ல, தொடர்ந்து பவளக்கால் சப்பரத்தில் நாயன்மார்கள்.

அருள்மிகு கபாலீஸ்வரனும் கற்பகவல்லியும். அடுத்து ஷண்முகர், சண்டிகேசர் - மாடவீதிகளில் வலம் வருகின்றனர்.

அவர்களுடன் - திருவள்ளுவர் வாசுகி, முண்டகக்கண்ணி அம்மன், அங்காள பரமேஸ்வரி, திரௌபதி அம்மன், சிந்தாதிரிப்பேட்டை முத்துக்குமரன், கோலவிழி அம்மன் - என இணைந்து வர -


ஆனந்த கோலாகலமாக திருவிழா நிகழ இருக்கின்றது. 

சைவம் எனினும் வைணவம் எனினும் - ஒரு முக்கிய விஷயம்!..

எம்பெருமான் எப்போதும் அடியார் மத்தியில் திகழ்கின்றான் என்பதே!..அறுபத்து மூவர் திருவிழா Krishna_has_lunch_with_gopas_2.256124623_stdஅறுபத்து மூவர் திருவிழா Krishna+36


தன்னைக் காணவில்லை என - பரிதவித்து அங்கும் இங்கும் அலைந்த கோபிகைகளின் மத்தியில் அல்லவா கோகுலக் கிருஷ்ணன்  குதுகலத்துடன் இருந்தான்!..

நன்னெறியில் நிற்பவர்களை, தானிருக்கும் அடியார் குழாத்தோடு இணைத்துக் கொள்கின்றான் என்பது உள்ளங்கை நெல்லி என விளங்குவது!..

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்  கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி -  என்பது விநாயகர் அகவலில் ஔவையார் குறிப்பது.

தொங்கலும் கமழ்சாந்து அகிற்புகையுந் தொண்டர் கொண்டு
அங்கையால் தொழுதேத்த
 அருச்சனைக்கு அன்றருள் செய்தான் (1/61)
- என்பது ஞான சம்பந்தர்  அருள்வாக்கு.தொண்டர்கள் தம் தகவி னுள்ளார் போலும்
தூநெறிக்குந் தூநெறியாய் நின்றார் போலும் - (6/89) என்பது திருநாவுக்கரசர் திருவாக்கு.

சேரும் புகழ்த் தொண்டர் செய்கை யறாத் திரு நின்றியூரிற்
சீருஞ் சிவகதியாய் இருந்தானை - (7/19) என்பது சுந்தரர் தம் திருக்குறிப்பு.

பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே!.. 
- அடியவர் இல்லங்களில் பரமன் பராபரையுடன் எழுந்தருள்கின்றான் என்பது மாணிக்க வாசகர்திருவாசகம். 

அவுணர் குலம் அடங்கப் பொடியாக்கிய பெருமாள் திருநாமம் புகல்பவர் (33) 

ஓங்காரத்து உள்ளொளிக்குள்ளே முருகனின் உருவங்கண்டு (பந்த பாசத்தில் சிக்கி ) தூங்கார். பிறர்க்குத் தீங்கு செய்யார் (55)

- என்று கந்தர் அலங்காரத்தில் - கந்தனின் அடியார்களை அடையாளங்காட்டி, வாழ்க சீர் அடியார்எல்லாம்!.. - என்று வாழ்த்துகின்றார் அருணகிரி நாதர். 

அந்தாதி பாடிய அபிராமி பட்டர் -

கண்ணியது உன்புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்: பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து: நான் முன்செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே. (12)

என்று வியப்பதும்,

புண்ணியம் செய்தனமே மனமே! புதுப் பூங்குவளைக்
கண்ணியும், செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணிநம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே.(41)

- என்று பூரிப்பதும், அடியார் திருக்கூட்டத்தைக் குறித்தே!..அறுபத்து மூவர் திருவிழா Nalvar


ஔவையார் - அஞ்சக்கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக்கரத்தில் நிலையறிவிக்கும் எம்பெருமானின் பெருமையைக் கூறும் போது,

உமையோ இறைவர் தம் பாகத்து ஒடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம் 
தொண்டர் தம் பெருமையைச் 
சொல்லவும் பெரிதே!.. 

- என்று கூறி நமக்கெல்லாம் விளங்க வைக்கின்றார். 

சுந்தரமூர்த்தி சுவாமிகள் - தமக்கு முன்னேயும்  தம்காலத்திலும் செயற்கரிய செய்த சிறந்த அடியார்களின்  திருப்பெயர்களைக் கூறி,  

''..இவர்களுக்கு, நான் அடியனாக மாட்டேனா!..'' - என்று ஏங்குகின்றார். 

திரு ஆரூர் தியாகராஜ ஸ்வாமி திருக்கோயிலின் தேவாசிரிய மண்டபத்தில்  இத் திருப்பதிகத்தைசுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளினார்.


சுந்தரமூர்த்தி சுவாமிகள் - தமது திருப்பதிகத்தில் அறுபது அடியார்களை நேரடியாகப் பெயர் குறித்துப் பாடுகின்றார். அத்துடன் -

எட்டு வகையான சீரிய  குணங்களைக் கொண்டு இலங்கும் அன்பர்களையும், திருஆரூரில் பிறந்தார்களையும் - பொதுவாகக் குறிக்கின்றார். 
பின்னாளில் மூவர் தேவாரம்  -  மாமன்னன் ராஜராஜ சோழன் காலத்தில் தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் நிலவறையிலிருந்து மீட்கப்பட்டது.  ,
அதனைத் தொகுத்தளித்த நம்பியாண்டார் நம்பி -  சுந்தர மூர்த்தி சுவாமிகளையும் அவருடைய தாய் தந்தையரான சடையனார், இசைஞானியார் ஆகியோரையும் அடியார் வரிசையில் இருத்தினார்.

மயிலை பங்குனிப் பெருவிழா - சிறப்பு மிக்க அடியார்களைச் சிறப்பிக்கும் அறுபத்து மூவர் திருவிழா - எனப் போற்றி மகிழும் பெருமையுடையது.

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறுபத்து மூவர் திருவிழா Empty Re: அறுபத்து மூவர் திருவிழா

Post by முழுமுதலோன் Fri Mar 14, 2014 5:54 pm

இன்று (14/3/2014) மயிலையில் அறுபத்து மூவர் திருவிழா!..
இந்த மகத்தான நாளில்     
சுந்தரமூர்த்தி சுவாமிகள்  அருளிய திருப்பதிகம்.
ஏழாம் திருமுறை . திருப்பதிக எண்  - 39. 
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்

இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்

விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்

அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 1இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்

ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்

கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்

கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்

மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்

எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்

அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 2
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கு மடியேன்

முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்

செம்மையே திருநாளைப் போவாற்கும் அடியேன்

திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்

மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க

வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த

அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 3திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட

திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்

பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கு மடியேன்

பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன்

ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்

ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்

அருநம்பி நமிநந்தி யடியார்க்கு மடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 4வம்பறா வரிவண்டு மணநாற மலரும்

மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்

ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்

நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்

நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்

அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 5


வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே

மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன்

சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்

செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்

கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும் அடியேன்

கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்

ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 6பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்

பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்

மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்

விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்

கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்

கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்

ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 7கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த

கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்

நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற

நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்

துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்

தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்

அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 8கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்

காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்

மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை

மன்னவனாஞ் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்

புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி

பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்

அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 9பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்

பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்

திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்

முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்

முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்

அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 10மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்

வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்

தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்

திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்

என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்

இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்

அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்

ஆரூரில் அம்மானுக் கன்பரா வாரே. 11அறுபத்து மூவர் திருவிழா WP+63

[size=15.555556297302246] [/size]
[size=13.333333969116211]சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்[/size]

[size=13.333333969116211]திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்[/size]


சிவாய திருச்சிற்றம்பலம்!.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறுபத்து மூவர் திருவிழா Empty Re: அறுபத்து மூவர் திருவிழா

Post by ஸ்ரீராம் Fri Mar 14, 2014 9:34 pm

திருவிழாவில் நீங்களும் கலந்துகொள்ள இருந்தீர்களே? நன்றாக தரிசனம் கிடைத்ததா அண்ணா? 

அறுபத்து மூவர் திருவிழா பார்த்த அனுபவத்தை முழுமையாக எங்களுக்கு எழுதுங்கள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அறுபத்து மூவர் திருவிழா Empty Re: அறுபத்து மூவர் திருவிழா

Post by rammalar Sat Mar 15, 2014 7:11 am

நல்ல பதிவு
-
63 பேரில் நான்கு பேர்களுக்கு மட்டுமே சிறப்பு ஏன்..?
-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7958

Back to top Go down

அறுபத்து மூவர் திருவிழா Empty Re: அறுபத்து மூவர் திருவிழா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum