Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆரோக்கியமான மனிதன்
Page 1 of 1 • Share
ஆரோக்கியமான மனிதன்
ஆரோக்கியமான மனிதன் என்றவுடன் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறந்த உடல் நலம் கொண்ட ஒருவர் என்பதுதான் முதலில் எமது தெரிவாக இருக்கும். சில சந்தர்ப்பங்களில் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல உடலுடன் சேர்ந்து மனமும் ஆரோக்கியமாக இருப்பது எனக் கருதுகிறோம். உண்மையான ஆரோக்கியம் என்பது என்ன என்பதை பகிர்ந்து கொள்வதே இக் கட்டுரையின் அடிப்படை நோக்கமாகும்.
முதலில், உடல் ஆரோக்கியம் பற்றிய பார்வையைச் செலுத்துவோம். உணவு, உடல் சார்ந்த ஒழுக்கம், உடற்பயிற்சி என்பனவற்றின் கூட்டு விளைவே உடல் ஆரோக்கியத்தின் அடிப்படையாகும். ஆரோக்கியமான உடலுக்கு உணவின் தன்மை, அதன் ஊட்டச்சத்தின் பங்கு, உணவின் அளவு, உடலின் ஒப்புதல் என்பன மிகவும் முக்கிய விடயங்களாக அமைகின்றன. உணவின் மிக முக்கியமான வெளிப்பாடு என்னவெனில் உண்ணும் வரை தாமாக இருந்தவை உண்டவுடன் அவை நாமாக மாற்றப்பட்டு விடுவதுதான். அதாவது தாமாக இருந்தவற்றை உண்பதன் மூலம் நாமாக மாற்றிவிடுகிறோம். எனவே எந்த வகையான உணவுகள் எம்மில் ஒரு பகுதியாக வேண்டும் என்பது எமது தெரிவுகளால் தீர்மானிக்கப்படுகின்றன. உணவைப்போன்றே உடல் சார்ந்த ஒழுக்கங்களும் உடல் நலத்தின் பிரதான தேவைகளாகும். சூழல் சுத்தம், உடல் சுத்தம், ஓய்வு, உறக்கம், உடல் உழைப்பின் அளவு போன்றனவும் ஒழுங்கான தொடர்ச்சியான உடற்பயிற்சியும் அவசியமாகின்றன.
ஆரோக்கியத்தின் அடுத்த பகுதியாக மன நலம் அவசியமாகின்றது. மன நலம் என்பது மிகவும் ஆழமான பார்வைக்கு உட்படுத்தவேண்டியது. இருப்பினும் ஒருசில விடயங்களைப் பகிர்ந்து கொள்வோம். மனம் என்பது எண்ணங்களின் பண்டகசாலை. எமது எண்ணங்களே எமது தெரிவுகளையும் அதன் மூலம் வாழ்க்கையின் நிலையையும் தீர்மானிக்கின்றன. மனத்தின் பாவம் அல்லது மனத்தின் வெளிப்பாடு அல்லது மனோபாவம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கை நிலையைத் தீர்மானிக்கும் அளவுகோலாக அமைகின்றது. மனோபாவம் என்பது பல்வேறு அடையாளங்களாக இனங்காணப்படுகின்றன. இதை அடிப்படையாக வைத்தே ஒருவர் பற்றிய மற்றவர்களது பார்வை அல்லது மதிப்பீடு வெளிப்படுத்தப்படுகின்றது. இந்த வகையான மதிப்பீடுகளோ எண்ணற்றவை. எண்ணற்றவை மட்டுமல்ல மிகப் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அர்த்தமற்றவையுமாகும்.
ஒருவர் பற்றிய இன்னொருவரது மதிப்பீடானது ஒப்பீட்டின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது. ஒருவரை நாம் அவரது கல்வி, பொருளாதாரம், சமூக நிலை என்பவற்றில் ஒப்பீடு செய்யலாம். இவை ஒப்பீட்டுக்கான அளவுகோல்களே. இந்த அளவீடுகள் பலருக்கிடையில் பொருத்தமானதாக இருக்கும். ஆனால் ஒருவரது மனோபாவம் சார்ந்த அளவீடுகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக, ஒரே அளவானதாக அமைவதில்லை. அமையவும் முடியாது. ஏனெனில், ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவனாக இருப்பதும் தனித்துவம் என்பது ஒப்பீட்டுக்கு இடமளிப்பதில்லை என்பதுமாகும்.
அடுத்து நாம் கவனத்திற்கொள்ள வேண்டிய விடயம் ஒருவரது உண்மையான ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பது எது? என்பதுதான். முன்னர் குறிப்பிட்டதைப் போன்று உடல் நலம் சம்பந்தமாக எம்மால் மேற்கொள்ளக்கூடிய அத்தனை வழிமுறைகளையும் நாம் கடைப்பிடித்தாலும் எமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பல காரணிகள் எமது உடல் நலத்தில் செல்வாக்கைச் செலுத்துகின்றன என்பதை நாம் கருத்தில் கொள்ளல் வேண்டும். சில சந்தர்ப்பங்களில் சில நோய்கள் எம்மை அறியாமலேயே எம்மைக் கைப்பற்றி விடுகின்றன. 'இந்த நோய் எனக்கு எப்படி வந்தது?' என்று நாமே அதிர்ச்சியடைந்து விடுகிறோம். அதுமட்டுமன்றி, உடலானது முதிர்ச்சியை நோக்கிய நகர்வதால் அதன் செயற் திறனும் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவையாக அமைகின்றது.
அடுத்து நாம் கருத்தில் கொள்ள வேண்டிய விடயம் மனம் சார்ந்த்தது. மனம் ஆரோக்கியமாக இருந்தால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்துள்ள விடயம். எவ்வளவு தான் செல்வங்களும், வசதி வாய்ப்புக்களும் இருந்தாலும் மனம் சந்தோசமாக இல்லாவிட்டால் எல்லாமே பயனற்றுப் போய்விடும் என்பதும் நாம் அறிந்ததே. நலமான உடலைக்கூட நலமற்ற மனம் மோசமாகத் தாக்கிவிடுகிறது. எனவே ஆரோக்கியமான மனம் கொண்டவனே ஆரோக்கியமான மனிதன் என்பது உறுதியாகிவிடுகின்றது.
ஆரோக்கியமான மனிதன் என்பவன் ஆரோக்கியமான மனத்தைக் கொண்டவன் என்பதைப் பார்த்தோம். ஆரோக்கியமான மனம் கொண்டவன் யார்? திடமான, உறுதியான மனம் கொண்டவன் தான் ஆரோக்கியமானவன். இந்தத் திடமும் உறுதியும் உள்ள மனத்தைக் கொண்டவன் யார்? தாழ்வு மனப்பான்மை இல்லாத மனிதன் தான் அவன். அதாவது, தனக்குள்ளே தாழ்வு மனப்பான்மையைக் கொண்டிராதவன் தான் ஆரோக்கியமான மனிதன். தாழ்வு மனப்பான்மை என்பது மிகக் கொடிய நோய். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகப் பெரிய தடை, மிக மோசமான எதிரி. தாழ்வு மனப்பான்மை வேண்டவே வேண்டாம். ஆரோக்கியமான மனிதனாக வாழ்வதற்குத் தப்பித் தவறிக்கூட தாழ்வு மனப்பான்மை உங்களைத் தொட்டுவிட அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் தனக்குள்ளே தாழ்வு மனப்பான்மையைக் கொண்டிராத மனிதன் மட்டுமே ஆரோக்கியமான மனிதனாவான்.
நன்றியுடன் - KG Master

Similar topics
» ஆரோக்கியமான பெண்களால்தான் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கமுடியும்
» இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்
» ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சில வழிகள் !!!
» ~ ஆரோக்கியமான பழக்கங்கள் 100 ~
» ஆரோக்கியமான குடும்பம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum