தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆன்மிக கேள்வி -பதில்

View previous topic View next topic Go down

ஆன்மிக கேள்வி -பதில்  Empty ஆன்மிக கேள்வி -பதில்

Post by முழுமுதலோன் Fri Mar 28, 2014 11:19 am

கோயிலில் பிரசாதமாகப் பெறும் பூமாலையை வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கு அணிவிக்கலாமா?

சுவாமிக்குச் சாத்திய பிறகு எடுக்கப்படும் பூமாலை நிர்மால்யம் எனப்படும். இறைவனின் திருவருட் பிரசாதமாக நமக்குக் கிடைத்ததை மீண்டும் சுவாமி படங்களுக்கு சாத்தக்கூடாது. ஆனால், முன்னோர்களின் படங்களுக்குச் சாத்தலாம். இதில் தவறில்லை. வீட்டில் உள்ள எல்லோருக்கும் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். பெண்கள் தலையில் சூடிக்கொள்ளலாம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மிக கேள்வி -பதில்  Empty Re: ஆன்மிக கேள்வி -பதில்

Post by முழுமுதலோன் Fri Mar 28, 2014 11:21 am

சிவாலயங்களில் கால பைரவர் வழிபாடு ஏன்?

சிவபெருமான் மூன்று வடிவங்களில் நமக்கு அருள்பாலிக்கிறார். யோக வடிவம், வேக வடிவம், போக வடிவம். பைரவர் வேகவடிவத்தில் அமைந்தவர். எதிரிகளிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள இவர் வழிபாடு அவசியமாகும். தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு உகந்த நாளாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மிக கேள்வி -பதில்  Empty Re: ஆன்மிக கேள்வி -பதில்

Post by முழுமுதலோன் Fri Mar 28, 2014 11:23 am

கோயில் கொடிமரத்தைத் தாண்டித் தான் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டுமா?

ஆமாம். கோயிலில் ஒவ்வொரு சுவாமிக்கும் தனித்தனியாக நமஸ்காரம் செய்யக் கூடாது. கொடிமரத்திற்கு வெளியில் செய்தால் எல்லா சுவாமிக்கும் சேர்த்து நமஸ்காரம் செய்த புண்ணியம் கிட்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மிக கேள்வி -பதில்  Empty Re: ஆன்மிக கேள்வி -பதில்

Post by முழுமுதலோன் Fri Mar 28, 2014 11:24 am

பிரார்த்தனை, தொண்டு இவற்றில் உயர்ந்தது எது?

பிரார்த்தனை, என்பது தமக்கு நலன் கிடைக்க வேண்டியும் செய்யலாம். எல்லோருக்கும் நலன் கிடைக்க வேண்டியும் செய்யலாம். தொண்டு என்பது பிறருக்கு உதவுவது மாத்திரம் அல்ல. கோயில் வழிபாடும் ஒரு தொண்டு தான். நாயன்மார்களைக் கூட திருத்தொண்டர்கள் என்று தானே சொல்கிறோம். எனவே, மக்களுக்காக இறைத் தொண்டு செய்வதே உயர்ந்தது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மிக கேள்வி -பதில்  Empty Re: ஆன்மிக கேள்வி -பதில்

Post by முழுமுதலோன் Fri Mar 28, 2014 11:25 am

சிவன் கோயிலில் அம்மன் என்றும், பெருமாள் கோயிலில் தாயார் என்றும் அழைக்கக் காரணம் என்ன?

இரண்டுமே 'அம்மா' என்ற பொருளைத் தருகிறது. நம்மைப் பெற்றவள் ஒரு தாய். நம்மைப் பாதுகாக்கும் இவள் லோகமாதா. அதாவது, உலகத்துக்கே தாய். இரண்டும் ஒரு பொருள் தருவது தான். இந்துமதம் ஆறாகப் பிரிந்திருந்த காலத்தில், வித்தியாசப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சொற்கள் தான் இவையே அன்றி, வேறு காரணங்கள் இருக்க சாத்தியமில்லை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மிக கேள்வி -பதில்  Empty Re: ஆன்மிக கேள்வி -பதில்

Post by முழுமுதலோன் Fri Mar 28, 2014 11:27 am

அஷ்டமி, நவமி திதிகளில் மங்கள நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. ஏன்?

ஓவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு தேவதை உண்டு. அந்த தேவதைகள் நற்பலன்களை அளிப்பவர்களாக இருந்தால் அந்தத் திதி, மங்கள நிகழ்ச்சிகளுக்கு உகந்ததாகும். உதாரணமாக வார நாட்களில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் மங்கள நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. காரணம் இவ்விரு கிரகங்களும் பாப கிரகங்கள். இது போல் பதினைந்து திதிகளில் முதலாவதாகிய பிரதமை எட்டாவது அஷ்டமி, ஒன்பதாவது நவமி, பதினைந்தாவது அமாவாசை இந்த நான்கு திதிகளிலும் தீய பலன்களைக் கொடுக்கும் தேவதைகளின் பலம் அதிகம் என்பதால் இந்த நாட்களில் மங்கள நிகழ்ச்சிகள் செய்வதில்லை. அதனால் தான், இந்த திதிகளில் துர்க்கை, பைரவர் போன்ற தெய்வங்களை வழிபடுகிறோம்.

நன்றி தினகரன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மிக கேள்வி -பதில்  Empty Re: ஆன்மிக கேள்வி -பதில்

Post by முழுமுதலோன் Fri Mar 28, 2014 11:28 am

பூஜையின் போது மணி அடிக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?

நாத தத்துவத்தை நினைவுபடுத்தும் பொருட்டு பூஜையின்போது மணி அடிக்கப்படுகிறது. இது முதலாவது காரணம். உலகியல் வேலைகளில் மூழ்கியிருக்கும் மக்கள் மணியோசையைக் கேட்டுத் தெய்வ சிந்தனையில் ஈடுபட வேண்டும். இது இரண்டாவது காரணம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மிக கேள்வி -பதில்  Empty Re: ஆன்மிக கேள்வி -பதில்

Post by முழுமுதலோன் Fri Mar 28, 2014 11:29 am

கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தபிறகு, அங்கேயே சிறிது நேரம் உட்கார்ந்து வரவேண்டும் என்ற நியதி இருக்கிறதா?

கோயிலுக்குச் சென்று தெய்வத்தை வழிபட்ட பிறகும் தெய்வத்தைப் பற்றிய சிந்தனை நம் உள்ளத்தில் தொடர வேண்டும். கோயிலில் தெய்வத்தைத் தரிசித்த பிறகு அங்கு அமைதியாகச் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தால், தெய்வம் நமக்குக் கூறுவது என்ன என்று விளங்கும். நாம் தெய்வத்தை வழிபட்டால் மட்டும் போதாது. தெய்வத்தின் பதிலுக்கும் நாம் அமைதியாகச் செவிசாய்க்க வேண்டும் என்பது இந்த வழக்கத்தின் நோக்கமாகும். ராமகிருஷ்ணர் தீர்த்த யாத்திரையைப் பற்றித் தெரிவித்த ஒரு கருத்து, உங்கள் கேள்விக்கும் ஓரளவு பொருந்துவதாக இருக்கிறது.

ராமகிருஷ்ணரின் அந்த உபதேசம் வருமாறு. 'வயிறு நிறையப் புல்லைத் தின்ற பசு, ஓர் இடத்தில் அமைதியாகப் படுத்துக்கொண்டு அசைபோடுகிறது. அதுபோலவே, தீர்த்த யாத்திரைக்கு நீ சென்று வந்தால் அந்த அந்தத் தெய்வீகத் தலத்தில் உன் மனதில் எழுந்த தூய எண்ணங்களைப் பற்றிச் சிந்தித்து தனி இடத்தில் உட்கார்ந்து அவற்றிலேயே ஆழ்ந்து போகவேண்டும். அவ்விதமின்றி அங்கிருந்து வந்ததும் அந்த எண்ணங்கள் உன் மனதை விட்டு அகன்றுபோகும்படி நீ உலகியல் விவகாரங்களில் தலையிடுவது கூடாது.'
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மிக கேள்வி -பதில்  Empty Re: ஆன்மிக கேள்வி -பதில்

Post by முழுமுதலோன் Fri Mar 28, 2014 11:30 am

துளசி தீர்த்தத்தின் மகிமை என்ன?

பெருமாள் கோவில்களில் துளசி இலையையும், துளசி தீர்த்தத்தையும் பிரசாதமாக தருவார்கள். பெருமாளுக்கு பிடித்தது துளசி. துளசிக் கஷாயம் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றிற்கு நல்ல நிவாரணி. செம்புப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் துளசி இலைகளைப் போட்டு ஒரு இரவு வைத்திருந்து அந்த நீரைக் குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகளுக்கு சளி தொந்தரவு வராது. வீட்டில் துளசிச் செடி இருந்தால் இடி, மின்னல் தாக்காது என்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் துளசி மாடம் வளர்ப்பது நல்லது.

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மிக கேள்வி -பதில்  Empty Re: ஆன்மிக கேள்வி -பதில்

Post by முழுமுதலோன் Fri Mar 28, 2014 11:31 am

அபிஷேகம் செய்வதால் கிடைக்கும் பலன் என்ன?

கோயில்களில் தெய்வ சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதைப் பார்த்திருப்போம் பல்வேறு விதமான பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது எந்த பொருளைக் கொண்டு நாம் அபிஷேகம் செய்கிறோமோ அந்த பொருளுக்குரிய பலன் நமக்கு கிடைக்கும். ஒவ்வொரு பொருளைப் பற்றியும் அந்த பொருளைக் கொண்டு அபிஷேகம் செய்வதால் நமக்கு கிடைக்கும் பலன்களைப் பற்றியும் பார்ப்போம்.

நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்தால் சுகம் கிடைக்கும்.
பசுவின் பாலினால் அபிஷேகம் செய்தால் ஆயுள் விருத்தியாகும்.
பசுவின் தயிரில் அபிஷேகம் செய்தால் புத்ர விருத்தி ஏற்படும்.
சர்க்கரையினால் அபிஷேகம் செய்தால் எதிரிகள் அழிவார்கள்.
விபூதியினால் அபிஷேகம் செய்தால் போக வாழ்வும் மோட்சமும் கிடைக்கும்.
வலம்புரி சங்கினால் நீர் அல்லது பாலினால் அபிஷேகம் செய்தால் தீவினைகள் நீங்கும்.
சந்தனமும் பன்னீரும் கலந்து அபிஷேகம் செய்தால் செல்வ வசதி பெருகும்.
கலச நீரினால் அபிஷேகம் செய்தால் நினைத்த காரியம் வெற்றி பெறும்.
மாம்பழத்தினால் அபிஷேகம் செய்தால் எல்லாவித வெற்றியையும் பெறலாம்.
சொர்ணாபிஷேகம்  செய்தால் எல்லாவித லாபங்களும் ஏற்படும்.
பஞ்சகவ்யம் ( பால் தயிர்  நெய் கோமியம் சாணம் ) இதில் அபிஷேகம் செய்தால் பாபம் போகும்.
பஞ்சாமிர்தம் ( கற்கண்டு சர்க்கரை நெய் பழம் தேன்) இவைகள் கலந்து அபிஷேகம் செய்தால் செல்வம் பெருகும்.
இளநீரினால் அபிஷேகம் செய்தால் குடும்ப வாழ்க்கை நலம் பெறும்.
சந்தனத்தில் அபிஷேகம் செய்தால் எல்லா ஐஸ்வரியமும் கிடைக்கும்.
பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லை நீங்கும்.
மஞ்சள் தூளினால் அபிஷேகம் செய்தால் ராஜவசியம் ஏற்படும்.
கரும்பு சாறினால் அபிஷேகம் செய்தால் உடல் ஆரோக்கியம் ஏற்படும்.
தேனில் அபிஷேகம் செய்தால் வாழ்க்கை இன்பமாக இருக்கும்.
வாழைப் பழத்தினால் அபிஷேகம் செய்தால் பயிர்கள் செழிப்பு ஏற்படும்.
அன்னத்தால் அபிஷேகம் செய்தால் ராஜ போக வாழ்வு ஏற்படும்.
சித்தனாதி தைலத்தால் அபிஷேகம் செய்தால் மனநிம்மதி பெறலாம்.
நறுமணப் பொடியால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லை நீங்கும்.
எலுமிச்சை பழச்சாறினால் அபிஷேகம் செய்தால் பகை நீங்கும்


அபிஷேகத்தை எந்த கிழமைகளில் எந்த கடவுளுக்கு செய்ய வேண்டும் என்பதை பற்றியும் பார்ப்போம்.

விநாயகர் - ஞாயிற்றுக் கிழமை.
சிவபெருமான் - திங்கள் கிழமை.
முருகப் பெருமான் - செவ்வாய் கிழமை.
விஷ்ணு - புதன் கிழமை.
தட்சிணாமூர்த்தி - வியாழன் கிழமை
சக்தி தெய்வம் - வெள்ளி கிழமை.
கண்ணபிரான் - சனிக் கிழமை
நவகிரகங்கள் - ஞாயிற்றுக் கிழமை.
துர்க்கை அம்மன் - செவ்வாய்க் கிழமை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மிக கேள்வி -பதில்  Empty Re: ஆன்மிக கேள்வி -பதில்

Post by முழுமுதலோன் Fri Mar 28, 2014 11:33 am

தீபம் ஏற்றுவதால் பயன்கள் என்ன?

எண்ணையும் அதன் பயன்களும்

விளக்கு எண்ணெய் – துன்பங்கள் விலகும்
பசுநெய் – சகல செல்வமும் பெருகும்.
நல்லெண்ணெய் – பீடை விலகும். எம பயம் அணுகாது
ஆமணக்கு எண்ணெய் – தாம்பத்யம் சிறக்கும்.
இலுப்பை எண்ணெய் – பூஜிப்பவருகும், பூஜிகப்படும் இடத்துக்கும் விருத்தி உண்டு
கடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது


தீபம் ஏற்றும் திசைகள்

கிழக்கு நோக்கி தீபமேற்ற – துன்பங்கள் நீங்கி பீடை விலகும்
மேற்கு நோக்கி தீபமேற்ற – கடன் தொல்லை அகலும், கிரக தோஷம் கழியும்
தெற்கு நோக்கி தீபமேற்ற – பாவம், அபசகுனம், எமனுக்குப் பிரீதி.
வடக்கு நோக்கி தீபமேற்ற – திருமணத்தடை, சுபகாரியத் தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கி செல்வம் பெருகும். சர்வ மங்களம் உண்டாகும்.


விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் அதன் பயன்கள்

ஞாயிறு – கண் சம்பந்தமான நோய் தீரும்.
திங்கள் – அலை பாயும் மனம் அடங்கி அமைதியுறும்.
வியாழன் – குரு பார்க்கக் கோடி நன்மை உண்டாகும். மனக்கவலை தீரும்.
சனி – வாகன விபத்துகள் ஏற்படாமல் நம்மைக் காக்கும்.
குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் துலக்குவது மிகவும் நல்லது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் துலக்குவதை விட இந்நாட்கள் அதிக பலன்களை தரக்கூடியவை. இதற்கு ஒரு காரணமும் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி குடியிருக்கிறாள். எனவே செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள். என்பதால் அந்நாட்களில் கழுவக்கூடாது.

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மிக கேள்வி -பதில்  Empty Re: ஆன்மிக கேள்வி -பதில்

Post by முழுமுதலோன் Fri Mar 28, 2014 11:34 am

திரிகளும், பயன்களும்

குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெயை பொறுத்து பலன்கள் வேறுபடுவதைப் போல, திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.

* பருத்தி பஞ்சினால் ஏற்றப்படும் திரியால் குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.

* வாழைத் தண்டின் நாரில் செய்த திரியால் முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.

* தாமரைத்தண்டு நூலால் செய்யப்பட்ட திரியால் முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.

* வெள்ளை எருக்கம்பட்டை மூலம் செய்யப்படும் திரியால் செல்வம் பெருகும்.

* புதிய மஞ்சள் துணியால் செய்யப்பட்ட திரியால் அம்பாளின் அருளால் நோய்கள் குணமாகும்.

* சிவப்பு வண்ண துணியால் திரிக்கப்பட்ட திரி குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.

* வெள்ளை துணி திரியால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். இந்த துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மிக கேள்வி -பதில்  Empty Re: ஆன்மிக கேள்வி -பதில்

Post by முழுமுதலோன் Fri Mar 28, 2014 11:36 am

கிரகண காலத்தில் கட்டாயம் குளிக்கத்தான் வேண்டுமா?

சூரியன் அல்லது சந்திரன் மீது பூமியின் நிழல் படர்ந்து மறைக்கப்படுவதை கிரகணம் என்கிறோம். சூரிய, சந்திர ஒளி இல்லையேல் பகல், இரவு என்னும் காலங்கள் இல்லை. மழை பெய்யாது. பயிர்கள் விளையாது. பூமி மற்றும் அதில் வாழும் உயிர்கள், அவற்றின் உணவுப் பொருட்கள் எல்லாமே சூரிய சந்திர ஒளிக்கதிர்களினால் அன்றாடம் தமக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக் கொள்கின்றன. இப்படி இறையருளால் இயற்கையாக நமக்குக் கிடைக்கும் சூரிய சந்திரர்களின் இயல்பான ஒளி மறைக்கப்பட்டு குறிப்பிட்ட நாழிகை அவற்றின் கிரகண கால ஒளி, பூமி மற்றும் அதில் உள்ள எல்லாவற்றின் மீதும் படுகிறது. இதனால் 'மஹா ஸ்பரிசம்' என்னும் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இன்றைய விஞ்ஞானிகளும் கிரகணத்தினால் சில மாறுபாடுகள் ஏற்படுவதையும் நேரடியாகக் கண்களால் பார்க்கக் கூடாது என்றும் கூறுகின்றனர். எனவே இந்த தோஷம் நீங்குவதற்காக கிரகணம் விட்ட பிறகு தலைக்கு குளித்து, விபூதி குங்குமம் இட்டுக் கொண்டு இறைவழிபாடு கட்டாயம் செய்ய வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மிக கேள்வி -பதில்  Empty Re: ஆன்மிக கேள்வி -பதில்

Post by முழுமுதலோன் Fri Mar 28, 2014 11:37 am

சுவாமிக்குப் புழுங்கல் அரிசி சாதம் நைவேத்யம் செய்யலாமா?

அரிசியை ஒரு முறை வேக வைத்துவிட்டால் அதை உடனே நிவேதனம் செய்து விட வேண்டும். நெல்லை ஒரு முறை வேக வைத்து காய்ந்த பிறகு அரிசியாக்கிவிட்டால் பழைய சோறுக்குச் சமம் தானே? எனவே புழுங்கல் அரிசி நிவேதனத்திற்கு உகந்ததல்ல. பச்சரிசியே சிறந்தது.



http://www.no1tamilchat.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆன்மிக கேள்வி -பதில்  Empty Re: ஆன்மிக கேள்வி -பதில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum