Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நெல்லிக்காய் சாதம்
Page 1 of 1 • Share
நெல்லிக்காய் சாதம்
நெல்லிக்காய் சாதம்
தேவையான பொருட்கள்:
1.சாதம் – 1 கோப்பை
2.பெரிய நெல்லிக்காய் – 6
3.வர மிளகாய் – 5
4.கறிவேப்பிலை – 2 கொத்து
5.கடுகு – 1/4 தேக்கரண்டி
6.உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
7.கடலைப்பருப்பு – 1/2 தேக்கரண்டி
8.பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
9.பொட்டுக்கடலை – 2 தேக்கரண்டி
10.மஞ்சள் பொடி- 2 சிட்டிகை
11.நெய் – 1 தேக்கரண்டி
12.நல்லெண்ணெய்- 1 மேஜைக்கரண்டி
13.உப்பு- தேவையான அளவு
செய்முறை:
சாதத்தை எடுத்து ஒரு தட்டில் ஆறவைத்துக் கொள்ளவேண்டும். பெரிய நெல்லிக்காயை கழுவி பொடியாகத் துருவிக் கொள்ள வேண்டும். கொட்டையை எடுத்து விடவேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் கடுகைப் போட்டு வெடித்ததும், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் போட்டு வறுத்து சிவந்ததும், கறிவேப்பிலை, வர மிளகாய், பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு தாளிக்க வேண்டும். அதனுடன் துருவிய நெல்லிக்காயைப் போட்டு நன்கு கிளற வேண்டும். சிறிது நேரம் வதங்கியவுடன் (இரண்டு அல்லது மூன்று நிமிடம்) அடுப்பிலிருந்து இறக்கவேண்டும். அடுப்பிலிருந்து இறக்கிய நெல்லிக்காய் கலைவையை ஆற வைத்த சாதத்துடன் சோ்த்து கிளற வேண்டும் (சாதம் குலையாமல் கிளறவேண்டும்). தனியாக சிறிது நெய் விட்டு அதில் பொட்டுக் கடலையை போட்டு பொன்னிறமாக வறுத்து கிளறிய சாதத்துடன் சேர்க்கவேண்டும். தேவைப்பட்டால் பொட்டுக் கடலையுடன், முந்திரி, நிலக்கடலை ஆகியவற்றை நெய்யில் வறுத்து கிளறிய சாதத்துடன் சோ்த்து பரிமாறலாம்.
நெல்லிக்காய் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள புதினா சட்னி செய்துச் சாப்பிட்டால் மிகுந்த சுவையாக இருக்கும்.
(நெல்லிக்காயைத் துருவும் போது மிகவும் பொடியாக துருவ வேண்டும். அப்படி பொடியாகத் துருவினால் சாதத்துடன் நன்றாக கலந்துவிடும்.)
இப்பொழுது சுவையான நெல்லிக்காய் சாதம் ரெடி.
நெல்லிக்காயின் மருத்துவக் குணங்கள்:
1.தினம் நெல்லிக்காயை சாப்பிட்டால் உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் இளமையாக இருக்க உதவும் டானிக்காக பயன்படும். தொற்று நோய்கள் வரவிடாமல் தடுக்கும். இருதயம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளை பலப்படுத்தும்.
2.நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து உள்ளது ( ஒரு நெல்லிக் காயில் முப்பது ஆரஞ்சுப் பழங்களிலுள்ள வைட்டமின் சி சத்து உள்ளது).
3.புத்தியை வளர்க்கும் பாஸ்பரஸ் சத்து அதிகமாக நெல்லிக்காயிலுள்ளது.
4.நெல்லிக்காயில் மாவுச் சத்து-14 கி, புரத சத்து-0.4 கி, கொழுப்புச்சத்து- 0.5 கி, பாஸ்பரஸ்- 21 மி.கி, கால்ஷியம்-15 மி.கி, இரும்புச்சத்து – 1 மி.கி, வைட்டமின் பி1 28 மி.கி, வைட்டமின் சி 720, மி.கி, நியாசின் – 0,4 மி.கி, கலோரிகள் – 60 ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது.
இத்தகைய மருத்துவக் குணங்கள் நிறைந்த நெல்லிக்காயை அடிஅடிக்கடிச் சாப்பிட்டு வந்தால் நோயின்றி சிறப்பாக வாழலாம்.

Re: நெல்லிக்காய் சாதம்
வீட்ல சமையல் கட்டு, அடுப்பங்கரை பக்கமே போறதில்லை போலிருக்கே....
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: நெல்லிக்காய் சாதம்
ஜேக் wrote:வீட்ல சமையல் கட்டு, அடுப்பங்கரை பக்கமே போறதில்லை போலிருக்கே....
என்னைச் சொல்லலைல
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum