Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பக்தியா? அறிவா? வழிபாடுகளா?
Page 1 of 1 • Share
பக்தியா? அறிவா? வழிபாடுகளா?
ஆன்மீகத்தில் ஒவ்வொரு வழிபாட்டிற்கும் உட்பொருள் உள்ளது.
பல பேர் பொருள் அறியாமல் பக்தியால் வழிபாடுகளில் மூழ்குகிறார்கள்
பொருள் அறிந்தால் பக்தி குறையும். ஆனால் பக்தியில் மூழ்கிவிட்டபின் பொருள் அறியும் நேரம் மனம் பக்குவப்பட்டிருக்கும்.
முதல் நிலையில் வழிபாடு தேவை, (பிராக்டிக்கல்) கடைநிலையில் வழிபாடும் ஒரு இடைஞ்சல்.
எல்லா உட்பொருள் அறி்ந்த அறிவு மட்டுமே போதும் என்று கூறிவிடமுடியாது.
அறிவு என்பதற்கு பலவகையான பொருள் கொள்ளப்படுவதால் அது பலவகையாக புரி்ந்து கொள்ளப்பட்டு விடுகிறது.
முழு அறிவு என்பது இருந்தால் கண்டிப்பாக அது போதும். ஏனெனில் அதிலேயே எல்லா விஷயமும் வந்துவிடும். முழு அறிவு கிடைத்த பின் அது கண்டிப்பாக இறைவனையும், உலகத்தையும், உயிர்களையும், மற்ற எல்லாவற்றையும அறிந்த அறிவாக இருக்கும்.
ஒரு விசயம் வராமல் போனாலும் அதை முழு அறிவாக கொள்ள முடியாது.
ஆனால் சாதாரண மனிதருக்கு இந்த முழு அறிவு சாத்தியமற்றது. படித்தது, பட்டது, கண்டது, கேட்டது மற்றும் உள்ளறிவு இவைகளை வைத்து அதிலும் எதைச் சரியாக தெரிவு செய்வது என குழம்பி, நம் தேவையைப் பொறுத்து ஏதோ ஒன்றை பயன்படுத்துகிறோம்.
மனமது செம்மையானால், மந்திரம் செபிக்க வேண்டா
- திருமூலர்
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்
- திருவள்ளுவர்
முதல் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் நாம் சில கட்டுப்பாடுகளை கடைபிடித்தாக வேண்டும்.
இதே போல தான் ஆன்ம வாழ்வும். தொடக்க நிலையில் வெறும் மனம் என்பது இருக்கவே முடியாது. வெறுமையை சிந்திக்க முடியாது இல்லையா. இங்கே மனதை நிலை நிறுத்த உருவம் தேவைப்படுகிறது.
உருவம் வரும் போது பக்தியால் அதன் மீது மரியாதையும் அன்பும் சேர்ந்தே வருகிறது. இது வந்தால் தான் நம் மனம் உருகும். இங்கே தான் மற்ற உயிர்களிடம் கருணை வரும். மனிதருக்குத் தேவையான சகிப்புத்தன்மை வரும். பார்வையின் கோணம் மாற்றம் பெறும். எல்லா செயல்களிலும் நல்லதையும் கெட்டதையும் சமமாக உணர முடியும்.
உருவமில்லா ஒருவர் இருக்கிறார் என்று நம்புகிறோம் எனினும் அவரை சிந்திக்கும் போது அவரை ஒரு மனிதராக, நம்முடன் பேசுபவராக நினைத்துப்பார்க்கத் தோன்றும். இதையே எல்லா இடத்திலும், எல்லா உயிரிலும், எல்லாப் பொருளிலும் அவரைக்காண நமக்கு அனுபவம் தேவை. அறிவு மட்டும் இருந்தால் இது தெரிந்திருக்கும ஆனால் உணர முடியாது. உணருவதற்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனி அனுபவம் தேவை. அதையே மனது ஏற்கும்.
இப்படிப்பட்ட உணர்வுகளை மனது ஏற்க நமக்குள் இரசாயன மாற்றம் தேவை. அதைக்கொடுப்பது வெளி வழிபாடுகள். அது தேவை.
அதே வெளி வழிபாடுகளை உள்ளுக்குள்ளேயே நடக்க வைக்க உள் வழிபாடுகளான தியானம், யோகம் தேவை. இவையும் வழிபாடுகளான வினையூக்கிகளே.
தொடக்க காலத்தில் இதைச்செய்யச்செய்ய நாம் அடுத்த கட்டத்திற்கு செல்லும் பக்குவம் அடைவோம். அதுவரை அடுத்த கட்டம் என்ன என்பதை உணருவது கடினம். அறிவால் தெரி்ந்திருந்தாலும் செயல்படுத்துவது கடினம்.
எல்லாம் அறிந்த மருத்துவராக இருந்தாலும் உடற்பயிற்சி அவராக செய்தால் தான் அதன் முழு பலன் அவருக்குக் கிடைக்கும். அதே போல சில கர்மங்களை செய்தால் தான் அதன் பலன் கிடைக்கும்.
ஒவ்வொன்றாக நிலைகளை தாண்டிவிட்ட பின்பு அவருக்கு முன்பு செய்த செயலை செய்ய வேண்டிய அவசியம், நேரம் இருக்காது. உதாரணமாக சின்னதி்ல் எண்களை கூட்ட கை, கால் விரல்களை வைத்து கூட்டுவோம். அனுபவப்பட்டு அறிந்த பின்பு அதையே செய்துகொண்டிருந்தால் அது நேரவிரயம், சக்தி விரயம், அடுத்த நிலைக்கு செல்ல அது முட்டுக்கட்டை. அதைச் செய்வது அவசியமில்லை என்பதை விட அதைவிட அதிகமாக செய்ய வேண்டியது வேறு இருக்கிறது என்று பொருள்.
முன்பு கோவில் சென்று வழிபட்ட ஒருவர் தன்னுள்ளே கோவிலை கண்ட பின்பு அவர் கோவிலுக்கு செல்ல வேண்டியதில்லை. ஆனால் அவர் மற்றவர்களை கோவிலுக்குச் செல்வதை தடுக்க மாட்டார். கோவிலின் சக்தியை அறிந்திருப்பார்.
பக்தியிலேயே இருப்பவருக்கு உட்பொருளை அறிய நாட்டம் இருக்காது என்பது நிஜம் அல்ல. நமது ஆன்மீக தலைவர்கள் எல்லோருக்குமே பக்திமட்டுமே சொத்து. பக்தியே அவரால் நமது இலக்கியங்களையும் சிறந்த நூல்களையும், தத்துவங்களையும் எழுதும் திறமையை கொடுத்துள்ளது. அவர்கள் எந்த அளவு முன்னேறிய பின்பும் பக்தியை விட்டுவிடவில்லை.
அதே சமயம் வெளிமனதால் மட்டுமே எல்லா நுட்பொருளையும் அறிந்து கொண்டவர் அதை அனுபவத்தில் அறியும் சாத்தியம் மிகக்குறைவு. ஆன்மீகத்தில் இது நடவாத காரியம். ஏனென்றால் ஆணவம் மற்றும் சந்தேகம் அங்கே அவரை தடுத்துக் கொண்டிருக்கும். அது அழியும் வரை உள்மனம் நமக்கு எதிரான காரியத்தை நடத்தும்.
எனவே பக்தி மிக முக்கியம், அதே போல முனைப்பு, வைராக்கியம் அவசியம். இவைகள் ஒரே நாளில் வந்துவிடப் போவதில்லை. மனதிற்கு இவைகள் பழக்கப்பட்டாக வேண்டும். பழக்கப்பட வேண்டும் எனில் வெளி வழிபாடுகள் மற்றும் உள் வழிபாடுகள் தேவை. இவைகளுடன் பொருளும் அறிந்து செய்தால் அதன் பலன் மிக அதிகம்.
வினோத் கன்னியாகுமரி

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum