தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இடி மின்னல் பயமாக இருக்கு

View previous topic View next topic Go down

இடி மின்னல் பயமாக இருக்கு Empty இடி மின்னல் பயமாக இருக்கு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 12, 2014 10:02 am

நான் எதற்கும் பொதுவாகப் பயப்படுவதில்லை!

ஆனால் இடி மின்னல் என்றால் பயமாக இருப்பதாக உணர்கிறேன்... (எதாவது நோயாக இருக்குமா?)

இடி மின்னல் பற்றிய தகவல்கள் தேவைப்படுகிறது...

இடி எங்கே விழும்? அதிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?

மிகவும் விரிவான தகவலைத் தரவும்...

முழுமுதலோன் மற்றும் நம்ம செந்தில் மற்றும் முரளிராஜா ராம் அவர்களும் பயம் போக்க உதவவும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இடி மின்னல் பயமாக இருக்கு Empty Re: இடி மின்னல் பயமாக இருக்கு

Post by செந்தில் Sat Apr 12, 2014 11:01 am

பயமா எங்களுக்கா?
(முழுமுதலோன் மற்றும் நம்ம செந்தில் மற்றும் முரளிராஜா ராம் )

ஹா! ஹா! ஹா!

நாங்க மனசாட்சிக்கு மட்டுமே பயப்படுவோம்!

 முழித்தல் முழித்தல் முழித்தல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இடி மின்னல் பயமாக இருக்கு Empty Re: இடி மின்னல் பயமாக இருக்கு

Post by முரளிராஜா Sat Apr 12, 2014 11:58 am

ஒ அவங்களுக்கு இப்படி ஒரு பெயரா செந்தில்  புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இடி மின்னல் பயமாக இருக்கு Empty Re: இடி மின்னல் பயமாக இருக்கு

Post by செந்தில் Sat Apr 12, 2014 12:33 pm

உங்களையும் சேர்த்துதான் சொன்னேன்!

 முடியலை முடியலை முடியலை 

இதுக்கு பேருதான் வாய கொடுத்து தானே மாட்டிக்குறதோ?
 நகைப்பு நகைப்பு நகைப்பு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இடி மின்னல் பயமாக இருக்கு Empty Re: இடி மின்னல் பயமாக இருக்கு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 12, 2014 12:40 pm

உங்க மேல இடி விழ... (ஆமா மழையே இல்ல... இவரு... சொன்ன உடனே விழுந்திடப்போவுது)

கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இடி மின்னல் பயமாக இருக்கு Empty Re: இடி மின்னல் பயமாக இருக்கு

Post by ரானுஜா Sat Apr 12, 2014 1:21 pm

நம் கிரகத்தில், நாள் தோறும் பளீரிடும் நான்கு கோடி மின்னல்கள் இடி மேகங்களிலிருந்து உருவாகின்றன. நம் தலைக்கு மேல் சில மைல் தொலைவில் இவை ஏற்பட்டாலும், பற்பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்தாலும், மேகத்துள் இவை உருவாகும் காரணத்தை நம்மால் புரிந்துக் கொள்ள இயலவில்லை. பொதுவாக ஸ்பார்க் பிளக்கில் (தீப்பொறி தோற்றியில்) ஏற்படுவது போன்ற ஒரு நெருப்பு பொறி ஏற்பட, மின்சக்தி, வரையறுக்கப்பட்ட மின்னழுத்த எல்லையை மீற வேண்டும். அதாவது காற்று தன் மின்தடை தன்மையை இழந்து மின்சக்தியை கடத்த ஏற்றதாக மாறும் தருணம்.

கடல் மட்டத்தில், காற்றிற்கு, இது ஒரு அங்குலத்திற்கு 70,000 வால்டுகள் ஆகும். ஒரு கார் இதை, அதன் தீப்பொறி தோற்றியில் (ஸ்பார்க் பிளக்கில்) உள்ள குறுகிய இடைவெளியிடையே 20,000 வால்டுகள் செலுத்தி சாதிக்கிறது. இடிபுயலாலும் மிகப்பெரிய அளவில் மின்சக்தியை வெளியிட முடியும். இது மேல் நோக்கி வீசும் காற்றால் கடத்தப்படும் போது பனிக்கட்டியும், நீர் துளிகளும், புவியீர்ப்பால் கீழ்நோக்கி விழும் மென்பனியுடன் மோதும் போது ஏற்படுகிறது.

No one is sure how lightning gets started, but one theory is that incoming cosmic rays from outer space serve as the trigger. Here, stars shine above a thunderstorm in the Alps.

எப்படி மின்னல் துவங்குகிறது என யாராலும் உறுதியாக கூற முடியவில்லை. ஒரு கருத்து என்னவென்றால் விண்வெளியிலிருந்து வரும் காஸ்மிக் கதிர்கள் இதை தூண்டிவிடுகிறது என்பதாகும். இங்கே ஆல்ப்ஸ் மலைமீது ஏற்பட்டுள்ள ஒரு இடி புயல் மேல் நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன. புகைப்படம் © டி. கிரெட்னர் & எஸ். கோலே, ஆல்தீஸ்கை.காம் விரிவாக்க (Photo credit: © T. Credner & S. Kohle, AlltheSky.com)

சக்தி பகுப்பால் ஏற்படும் மின் விளைவு அதிகம், சிலநேரங்களில் 100,000,000 வால்டுகளையும் தாண்டும். ஆனால் ஸ்பார்க் பிளக்கை போல் அல்லாது, இடிபுயலின் போது ஒரு மைலுக்கும் அதிகமாக விரிந்து பரவி, ஒரு தீப் பொறியை உருவாக்க கூட ஆற்றலற்ற மின்புலமாகிறது. உண்மையில், பற்பல வருடங்களாக, பலூன், வானூர்திகள் மற்றும் ஏவுகணைகள் ஆகியவற்றால் பெறப்பட்ட அளவைகள், ஸ்பார்க் பிளக்கில் தீப்பொறி ஏற்பட தேவையான குறைந்தபட்ச 1/10 பங்கு அளவிலான மின்புலத்தைக்கூட கண்டதில்லை.

உறுதியாக இடி மேகங்களுக்குள் தான் மின்னல் ஏற்படுகிறது என்றாலும், நாம் அது எப்படி தொடங்குகிறது என்பதை தெளிவாக கவனிக்கத் தவறுகிறோம். உராயும் மழைத் துளிகளால், மிக குறுகிய ஒரு இடத்தில் மின்னூட்டம் குவிதல, விண்வெளியிலிருந்து காஸ்மிக் கதிர்களால் உருவாகும் அதிக மின்சக்தி கொண்ட மின்னணுக்கள் (எலக்ட்ரான்கள்,) செறிவூட்டப்பட்ட பனிப்புயல்கள், என பல கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. இருப்பினும், இன்று வரை, யாருக்கும் அதற்கான சரியான விடை தெரியவில்லை.

முன்னோடியைத் தொடர்ந்து
மின்னல் உருவானவுடன், முன்னோடி எனப்படும் ஒரு வெப்பமான தடம் உருவாகும் என்பதை நாம் அறிவோம். நான் ஏற்கனவே கூறியது போல் பொதுவாக காற்று ஒரு சிறந்த மின்கடத்தி அல்ல (அரிதில் கட்த்தி), ஆக மின்னல் ஓரிடத்திலிலிருந்து மற்றொரு இடத்திற்கு, உதாரணமாக பூமிக்கு பரவ தன் பாதையில் உள்ள காற்று மண்டலத்தை, ஒரு ஸ்பார்க் பிளக்கை போல், மின்னாற்றலை கடத்தும் திறத்திற்கு மாற்ற அதன் அரண் எல்லையை உடைக்க வேண்டும். இது முன்னோடியின் முன் மின்னிறக்கம் செய்து, அதனை முன்னேற உந்துகிறது. அது முன்னேற, அதற்கு தொடர்ந்து மின்னூட்டம் அளிக்கப்பட வேண்டும். இந்த முன்னோடி தடத்தில் தடையின்றி மின்சக்தி செல்ல, மின்னாற்றலே வழி செய்கிறது. முன்னோடி தடத்தின் மிகை வெப்பம், காற்று பல மைல் தொலைவுக்கு மின்கடத்த வகை செய்கிறது. மிக பிரம்மாண்டமான மின்னோட்டம் 50,000°F அளவிற்கு காற்றை வேகமாக சூடாக்குகிறது – இது சூரியனின் மேற்பரப்பைவிட நான்கு மடங்கு அதிகம்.

முதலில் பயணிக்கும் முன்னோடியின் பயணம் எளிதாக அல்லாது, படிகள் எனப்படும் சிறு தொடர் துள்ளல்களாக இருக்கும். அதனால்தான் முதலில் பயணிப்பதை ’படிமுன்னோடி’ என அழைக்கிறோம். பொதுவாக முதல் தாவலில் முன்னோடி ஒரு புதிய திசையில் 150 அடி வரை குதிக்கலாம். இப்படியாக இவை நின்று மீண்டும் பயணிக்க 7/1000 விநாடிகள் ஆகும். மேலும் ஒரு சில நேரங்களில் இவை இரு கிளைகளாக பிரிந்து செல்வதும் உண்டு. ஆக முன்னோடியின் இந்த பயணமே மின்னலின், ஒழுங்கற்ற கூறுடைய, முள் கரண்டி போன்ற வடிவங்களுக்கு காரணமாகிறது. பலமுறை இதைக் கண்டிருந்தாலும் மின்னல் முன்னோடிகளின் செயல்பாடு ஏன் இப்படி இருக்கிறது என யாராலும் புரிந்துக் கொள்ள முடியவில்லை.
[You must be registered and logged in to see this image.]

பூமியைத் தொடும் மின்னல்களைவிட மேகங்களின் ஊடே ஏற்படும் மின்னல்களே அதிகம். இந்த புகைப்படித்தில் உள்ள மின்புயல் ஆஸ்திரியாவில் உள்ள எம்பர்கர் ஆல்மில் (Emberger Alm, Austria,) என்னும் இடத்தின் அருகே ஆகஸ்ட் 2003ம் ஆண்டு எடுக்கப்பட்டது. விரிவாக்க புகைப்படம் © டி. கிரெட்னர் & எஸ். கோலே, ஆல்தீஸ்கை.காம் (Photo credit: © T. Credner & S. Kohle, AlltheSky.com)

நிலத் தாக்கம்

முன்னோடியின் ஊடே பாயும் மின்னூட்டம் பரவும் போது அதனை மிகப் பிரகாசமாக்கச் செய்யுமளவிற்கு திறம் பெற்றவை. நாம் காணும் பெரும்பாலான மின்னல்கள் பூமியை தொடுவதில்லை. மாறாக அவை அதே மேகத்தினூடே பல புள்ளிகளையோ, சுற்றுபுற காற்றையோ, அரிதாக பிற மேகங்களையோ, இணைத்து, தடத்தின் வழி செல்லும் மின்னூட்டமாகும். படி முன்னோடி பூமியுடன் தொடர்பு கொண்டால், மேகத்திற்கும் பூமிக்கும் இடையே, பூமியில் ஆரம்பித்து, மேகத்தை நோக்கி அதிக அளவு மின்சக்தி பிரவேசிக்கும். இது ஓரளவுக்கு இடிபுயல் ஏற்படுத்திய மின்சக்தியை நியூட்ரலைஸ் செய்யும். இதற்கு மீள் தாக்கம் என்றுப் பெயர். இதனால் அதிகமாக ஏற்படும் மின்னூட்டம், பல ஆயிரம் ஆம்பியர்களாய் இருக்கும்.

மிக பிரம்மாண்டமான மின்னோட்டம் 50,000°F அளவிற்கு காற்றை வேகமாக சூடாக்குகிறது – இது சூரியனின் மேற்பரப்பைவிட நான்கு மடங்கு அதிகம். மேகத்துக்கும் பூமிக்கும் இடையே ஆன இத்தகைய மீள் தாக்கத்தால் ஏற்படும் வெப்ப தடத்தையே நாம் காண்கிறோம், அவை வேகமாக விரிந்து சுருங்குவதையே இடியாக கேட்கிறோம். முதல் மீள் தாக்கத்திற்குப் பின், வழக்கமாக இடிபுயல் மற்றொரு முன்னோடியை அனுப்பும், இதை எறி முன்னோடி என்பர், இது வெப்பத் தடத்தை வேகமாக மின்னூட்டி மற்றொரு மீள் தாக்கம் ஏற்பட வகை செய்கிறது. முன்னோடிகள் வேகமாக உடனுக்குடன் பிரயாணிப்பதும், பிரகாசமான மீள் தாக்கமும் மின்னல் மின்னுவதற்கு காரணமாகிறது.

ஜோ ட்வையர் (By Joe Dwyer)
பதிவு தேதி 10.01.05
நோவா சயன்ஸ் நவ் (NOVA Science NOW)
ஜோ ட்வையர், பிளோரிடா இன்ஸ்டிட்டுயூட் ஆப் டெக்னாலஜியில், இயற்பியல் மற்றும் விண்வெளி அறிவியலின் இணை விரிவுரையாளராக பணிபுரிகிறார்.

கூகுள் தேடலில் கிடைத்தது
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இடி மின்னல் பயமாக இருக்கு Empty Re: இடி மின்னல் பயமாக இருக்கு

Post by ரானுஜா Sat Apr 12, 2014 1:22 pm

இடி எப்படி உருவாகிறது?


வட கிழக்கு பருவமழை தொடங்கயுள்ள நிலையில்,கண்ணைப் பறிக்கும் மின்னல் கீற்றுகளும்,காதைப்பிளக்கும் இடி சத்தமும் எதனால் உருவாகிறது? இதோ உங்களுக்காக...

வானில் உள்ள மேகங்களில்,மின்னூட்டம் பெற்ற அணுத்துகள்கள் அதிகம் இருக்கும்.இவை நேர்மின் சுமை கொண்டவைகளாகவும்,எதிர் மின் சுமை கொண்டவைகளாக தனித்தனியே இருக்கும்.குளிர்ந்த காற்று வீசி,மேகங்கள் மோதி மழை பெய்யும் பொழுது, நேர் மற்றும் எதிர் மின்சுமை கொண்ட அணுக்கள் ஒன்றோடு ஒன்று மோதுகின்றன.இந்த மோதலால் தான் இடி சத்தம் கேட்கிறது.இதனால் உருவாகும் ஒளிகீற்று காற்றில் ஒளியின் திசை வேகத்தில் பயணிகின்றன.காற்றில் ஒளியின் திசைவேகம் விநாடிக்கு சுமாராக 3 லட்சம் கிலோ மீட்டர் என்பதால் மின்னலின் வெளிச்சத்தை நாம் உடனடியாக பார்க்க முடிகிறது.

ஒலியின் திசைவேகம் விநாடிக்கு அரைகிலோ மீட்டருக்கும் குறைவு என்பதால் இடி சத்தம் நமக்கு காலதாமதமாகவே கேட்கிறது.மின்னலால் அதிக அளவிலான மின்சக்தி வெளிபடுவதால்,சில நேரங்களில் அதிக சேதாரத்தை ஏற்படுத்தும்.எனவே இடிதாங்கி போன்ற சாதனங்களால் மின்சக்தியை பூமிக்குள் செலுத்துவதன் மூலம் மின்னலால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்கலாம்.

இடி,மின்னலால் உயிரிழப்பு ஏற்படும் ஆபாயம் இருப்பதால்,மின்னலில் இருந்து எவ்வாறு நாம் பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்...

மழை பெய்யும் போது எந்த நேரத்திலும் மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளது.மின்னலின் போது,கணக்கில் அடங்கா மின்சக்தி வெளியேறி வேகமாக நிலத்தை அடைய முயற்சி செய்யும் எனவே. வெட்ட வெளியில் மனிதர்கள்,கால்நடைகள் நிற்பதை தவிர்க்க வேண்டும் ஏன் எனில்,அதிகளவிலான மின்சக்தி உடல் வழியே வேகமாக நிலத்தை அடைய வாய்ப்பு ஏற்படும்மழை பெய்யும் போது மரத்தின் கீழ் நிற்பதையும்,குடைப்பிடித்து வெளியில் நடப்பதையும் தவிர்கலாம்.

மின்னல் ஏற்படும் போது தொலைபேசி,கைபேசி பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.தொலைக்காட்சி உள்ளிட்ட தொலை தொடர்பு சாதனங்களை துண்டிப்பு செய்வது நல்லது.

மழை ஏற்படும் போது கட்டிடங்களின் உள்ளே இருப்பது பாதுகாப்பான செயலாகும்.ஆங்காங்கே இடிதாங்கி சாதனத்தை பயன்படுத்துவதன் மூலம்,கட்டுக்கடங்காத மின் சக்தி நிலத்தை அடையச் செய்யலாம்.
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இடி மின்னல் பயமாக இருக்கு Empty Re: இடி மின்னல் பயமாக இருக்கு

Post by முழுமுதலோன் Sat Apr 12, 2014 3:02 pm

இரண்டு மூலப்பொருள்கள் ஒன்றோடு ஒன்று உராய்வதாலும் மின்சாரம் உற்பத்தி ஆகும்நமது உடலில் 18 வகையான மூலப்பொருள்கள் உள்ளனஆகவே நமது கைகளை ஒன்றோடு ஒன்று தேய்க்கும் போது எலக்ட்ரான்கள் நகர்ந்து மின்சாரம் உண்டாகிறது.ஆகவே நமது கையானது சூடேறுகிறது.
 
[You must be registered and logged in to see this link.]
 
 
காற்றில் உள்ள மூலக்கூறுகளுடன் மேகங்கள் உராய்வதால் ஆகாயத்தில் மின்சாரம் உண்டாகிறதுஇந்த மின்சாரம் பூமியில் பாயும்போது இடிமின்னல் உண்டாகிறதுஇடி,மின்னல் இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்பட்டாலும் மின்னல் முதலில் நம் கண்ணுக்கு தெரியும்சிறிது நேரம் கழித்து இடி சத்தம் கேட்கும்காரணம் ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு லட்சம் கிலோ மீட்டர் ஆகும்ஒலியின் வேகம் ஒரு நொடிக்கு 330 மீட்டர் மட்டும் ஆகும்.
 
இந்த மின்சாரம் உயரமான மரங்கள் கட்டிடங்கள் மூலமாக பூமிக்கு பாய்ந்து செல்வதால் மரங்கள் எரிந்து விடுகின்றது கட்டிடங்கள் இடிந்து விடுகின்றனஉயரமான பொருள் எதுவும் கிடைக்காத போது நமது தலையில் விழுந்துவிடும்ஆகவே பரந்த வெட்ட வெளியில் தனியாக செல்லக் கூடாதுதனியாக உள்ள மரத்தின் அடியில் நிற்க கூடாது.
 
[You must be registered and logged in to see this link.]
 
 
உயரமான கட்டிடங்களின் மீது தடித்த கம்பிகளை பொருத்தி அதை பூமியுடன் இனைப்பு ஏற்படுத்தி எர்த் செய்து விடுவார்கள்கட்டிடத்தை இடி மின்சாரம் தாக்கும் போது மின்சாரம் வேகமாக பூமிக்கு சென்றுவிடும்அப்போது கட்டிடம் பதுகாப்பாக இருக்கும்கட்டிடத்தின் மீது அமைக்கப்படும் அந்த தடித்த கம்பிக்குப் பெயர் இடிதாங்கி எனப்படும்.
 

இடி மின்னலில் உண்டாகும் மின்சாரம் பல லட்சக்கணக்கான வோல்டு அழுத்தமுள்ளதாக இருக்கும்ஆகவே இதன் தாக்குதல் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இடி மின்னல் பயமாக இருக்கு Empty Re: இடி மின்னல் பயமாக இருக்கு

Post by முழுமுதலோன் Sat Apr 12, 2014 3:03 pm

மின்னல் தாக்காமல் காத்துக் கொள்ள என்ன செய்யவேண்டும் ?


  1. வானிலையைக் கவனியுங்கள். இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருந்தால் வெளியில் செல்லும் பயணத்தை ஒத்திவையுங்கள், அல்லது வகைப்படுத்துங்கள். வீடுகளில் பாதுகாப்பாய் இருங்கள்.
  2. பெரும்பாலான மின்னல் பாதிப்புகள் மழைவிட்ட பின்போ, மழை துவங்குவதற்கு முன்போ தான் நிகழ்கின்றன எனவே, மழை விட்டபின் ஒரு அரைமணி நேரமாவது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அதுபோலவே மழை வரும் வாய்ப்பு தெரியும் போதே கவனமாய் இருக்க வேண்டும்.
  3.  மின்னலை நாம் பார்ப்பதற்கும், தொடரும் இடிச் சத்தத்தைக் கேட்பதற்கும்  இடையேயான நேரமே நமக்கும் மின்னல் தாக்கிய இடத்தும் இடையேயான தூரத்தைச் சொல்கிறது. இந்த இடைவெளி ஐந்து வினாடிகளை விடக் குறைவெனில் சுமார் ஒரு மைல் இடைவெளியில் எங்கோ மின்னல் தாக்கியிருக்க வாய்ப்பு உண்டு என கணித்துக் கொள்ளுங்கள்.
  4. இடி மின்னல் வேளைகளில், உயரமான மரங்கள், கொடிக் கம்பங்கள், கைபேசிக் கோபுரங்கள், பேருந்து நிறுத்தங்கள், உலோகப் பொருட்கள் இருக்கும் இடங்கள் இவற்றின் அருகே நிற்காதீர்கள்.
  5. அதே போலவே வெட்டவெளியிலோ, நீர் நிலைகளிலோ, கடற்கரைகளிலோ, விளையாட்டு மைதானங்களிலோ நிற்காதீர்கள். அந்த இடங்களில் உயரமாய் இருப்பது நீங்கள் தான் என்பதால் நேர் மின்சாரத்தை மேகம் உங்கள் உடலிலிருந்து ஈர்க்கக் கூடும்.
  6. ஒருவேளை வெட்ட வெளியில் இருக்க நேர்ந்தால் தரையில் படுக்கவே படுக்காதீர்கள். குனிந்து வயல் வரப்பில் குந்தவைத்து அமர்வது போல அமருங்கள். தலையைக் குனித்து கால் முட்டியில் வையுங்கள். தரைக்கும் உடலுக்குமான தொடர்பு எவ்வளவு குறைவாய் இருக்கிறதோ அவ்வளவு நல்லது.
  7. சட்டென மயிர்க்கூச்செரிந்தாலோ, அதிர்வு உணரப்பட்டாலோ மின்னல் வெகு அருகில் தாக்கும் வாய்ப்பு உண்டு என உணர்ந்துகொள்ளுங்கள். குழுவாக இருக்காதீர்கள் பிரிந்து தனித்தனியே செல்லுங்கள்.
  8. வீட்டுக்குள்ளே இருந்தால், அந்த நேரத்தில் தொலைபேசியைப் பயன்படுத்தாதீர்கள். தொலைபேசியில் அருகே இருப்பதைத் தவிருங்கள். தொலைக்காட்சி, கணினி உட்பட அனைத்து எலக்ட்ரானிக் கருவிகளையும் சற்று ஓய்வில் இருக்க விடுங்கள். மின் இணைப்பிலிருந்து அவற்றை துண்டித்து விடுங்கள். கேபிள் டிவியின் கேபிளையும் கழற்றிவிடுங்கள்.
  9. காரில் சென்று கொண்டிருந்தால் காரின் கண்ணாடிகளை முழுவதுமாக மூடிவிட்டு ஓரமாக நிறுத்திவிட்டு அமைதியாய் இருங்கள். மரங்கள், கம்பங்கள் போன்றவற்றின் அருகே வண்டியை நிறுத்தாமல் கவனமாய் இருங்கள்.
  10. வீடுகளில் அந்த நேரங்களில் சமையல் செய்வது, குளிப்பது போன்ற வேலைகளைச் செய்யாதீர்கள். குறிப்பாக திறந்த சன்னல் அருகே நின்று வானத்தை வெறிக்காதீர்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இடி மின்னல் பயமாக இருக்கு Empty Re: இடி மின்னல் பயமாக இருக்கு

Post by முழுமுதலோன் Sat Apr 12, 2014 3:15 pm

நம் ஊரில் மழை பெய்யும் போது இடி இடித்தால் போதும். அர்ஜுனா...அர்ஜுனா என்பார்கள் பெரியவர்கள். உடனே, நம் வீட்டு இளசுகள், நீ அர்ஜுனான்னு சொன்னவுடனே, அவன் வில்லையும் அம்பையும் எடுத்துகிட்டு வந்து, இடி சத்தமே இல்லாம பண்ணிட போறானாக்கும் என்று கேலி செய்வார்கள். இடிதாங்கி கண்டுபுடிச்சு எத்தனையோ வருஷமாகியும், அதை பில்டிங் மேலே வைக்காம இன்னமும் அர்ஜுனான்னு புலம்பிகிட்டு இருக்கியே! என்று இடியிலிருந்து தப்பும் அறிவியல் உபகரணம் பற்றியும் எடுத்துச் சொல்வார்கள்.உண்மையில், உண்மையான அறிவியல் காரணம் என்ன தெரியுமா?இடி பலமாக இடிக்கும் போது, சிலரது காது அடைத்து ஙொய்ங் என்று சத்தம் வரும். இதிலிருந்து தப்ப அர்ஜுனா என்றால் போதும். காது அடைக்காது. அர் என்று சொல்லும் போது, நாக்கு மடிந்து மேல் தாடையைத் தொடும். ஜு என்னும் போது வாய் குவிந்து காற்று வெளியேறும். னா என்னும் போது, வாய் முழுமையாகத் திறந்து காற்று வெளியே போகும். இப்படி காற்று வெளியேறுவதால் காது அடைக்காது. அதற்குத்தான் அர்ஜுனா வை நம்மவர்கள் துணைக்கு அழைத்தார்கள். அர்ஜுனன் கிருஷ்ண பக்தன் என்பதால், அவன் பெயரை உச்சரிப்பது மனதுக்கு பலம் என்ற ஆன்மிக காரணத்துடன், காது அடைத்து விடக்கூடாது என்ற அறிவியல் காரணமும் இதில் புதைந்து கிடக்கிறது. இனிமேல், இடி இடித்தால் அர்ஜுனா கோஷம், இடியையும் தாண்டி ஒலிக்கட்டும்! சரியா! 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இடி மின்னல் பயமாக இருக்கு Empty Re: இடி மின்னல் பயமாக இருக்கு

Post by முழுமுதலோன் Sat Apr 12, 2014 3:20 pm

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இடி மின்னல் பயமாக இருக்கு Empty Re: இடி மின்னல் பயமாக இருக்கு

Post by ஸ்ரீராம் Sat Apr 12, 2014 5:53 pm

நல்லதொரு பகிர்வு அண்ணா சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இடி மின்னல் பயமாக இருக்கு Empty Re: இடி மின்னல் பயமாக இருக்கு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 12, 2014 6:01 pm

அதே போலவே வெட்டவெளியிலோ, நீர் நிலைகளிலோ, கடற்கரைகளிலோ, விளையாட்டு மைதானங்களிலோ நிற்காதீர்கள். அந்த இடங்களில் உயரமாய் இருப்பது நீங்கள் தான் என்பதால் நேர் மின்சாரத்தை மேகம் உங்கள் உடலிலிருந்து ஈர்க்கக் கூடும்.

- விரிவான செய்திகள் தந்த அனைவருக்கும் என் நன்றிகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இடி மின்னல் பயமாக இருக்கு Empty Re: இடி மின்னல் பயமாக இருக்கு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 12, 2014 6:03 pm

ஆமா... அந்த இடிதாங்கி எவ்வளோ இருக்கும்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இடி மின்னல் பயமாக இருக்கு Empty Re: இடி மின்னல் பயமாக இருக்கு

Post by நாஞ்சில் குமார் Sat Apr 12, 2014 9:10 pm

நல்லதொரு கருத்துப் பரிமாற்றம்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

இடி மின்னல் பயமாக இருக்கு Empty Re: இடி மின்னல் பயமாக இருக்கு

Post by முரளிராஜா Sat Apr 12, 2014 10:05 pm

விரிவாக விளக்கம் அளித்த அக்கா மற்றும் அண்ணன் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இடி மின்னல் பயமாக இருக்கு Empty Re: இடி மின்னல் பயமாக இருக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum