Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
காரணமில்லாமல் காரியமில்லை!
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
காரணமில்லாமல் காரியமில்லை!
காரணமில்லாமல் காரியமில்லை. காரணமும், காரியமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை மட்டுமல்ல; ஒன்றுக்குள் ஒன்று இணைந்திருப்பவை. இதுகுறித்து, பகவான் கண்ணன் பகவத் கீதையில் கூறும் போது, 'நானே காரணமாகவும், காரியமுமாய் இருக்கிறேன்...' என்கிறார். மனித வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும், ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டே இறைவனால் நடத்தப்படுகின்றன. பஞ்ச பாண்டவர்கள் வனவாச காலத்தில் இருந்த போது, நடந்த ஒரு சம்பவம்...
பதினாயிரம் யானை பலம் கொண்டவன் பீமன். அவன் ஒரு நாள் காட்டிற்கு வேட்டையாட சென்றான். அவன் கண்களில் பட்ட மிருகங்கள் எல்லாம் காலனை அடைந்தன. பார்வையில் படாத மிருகங்களோ பயந்து ஓடின. அப்போது வழியில் எதிர்பட்ட ஒரு பெரிய மலைப் பாம்பு, பீமனை பிடித்து கொண்டது. அதனிடமிருந்து விடுபட, பீமன் எவ்வளவோ முயற்சி செய்தும் விடுபட முடியவில்லை.
அயர்ந்து போன பீமன். 'பாம்பே... உன்னிடம் தோற்றுப்போன எனக்கு, மனிதர்களின் உடல் பலம் நிலையற்றது என்பது புரிந்து விட்டது. இதை எனக்கு உணர்த்திய நீ யார்...' எனக் கேட்டான். 'பீமா, உன் முன்னோர்களில் ஒருவனான நகுஷன் என்பவனே நான். அகஸ்திய முனிவரை அவமானப்படுத்தினேன். அவர், 'பாம்பாக போ...' என, சாபம் கொடுத்து விட்டார்.
'அவரிடம் சாப விமோசனம் கேட்ட போது, 'எவன் ஒருவன், ஆத்மா எது, ஆத்மா இல்லாதது எது என்பதன் வேறுபாடு குறித்த, உன் கேள்விகளுக்கு பதில் கூறுவானோ, அப்போது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்...' என்று, கூறினார்...' என்றது.
அந்த நேரத்தில், பீமனைக் காணாததால், தேடி வந்த தர்மர், பாம்பு, பீமனை பற்றியிருப்பதை கண்டு, விடுவிக்க முயன்றார். ஆனால், பாம்பு, தன் பிடியை விலக்கிக் கொள்ளாமல், தன்னைப் பற்றிய தகவல்களைக் கூறி, 'என் கேள்விகளுக்கு நீ பதில் கூறினால், உன் தம்பியை விட்டு விடுவேன்...' என்றது.
தர்மர் அதற்கு ஒப்புக் கொண்டார். பாம்பு கேள்வி மேல் கேள்வியாகத் தொடுக்க, தர்மர் அனைத்திற்கும் பதில் கூறினார். பாம்பு சாப விமோசனம் பெற்று, நகுஷனாக மாறி, சொர்க்கத்தை அடைந்தது. பீமனுடன் திரும்பினார் தர்மர். பலசாலியான பீமன், பாம்பால் பிடிக்கப் பட்டதும், தர்மர் அங்கு வந்ததும், அதன் விளைவாய், நகுஷன் சாப விமோசனம் பெற்றதும், இவையெல்லாம் காரணமில்லாமல் நடக்கவில்லை. முன்னோர்களுக்கும் நற்கதி அளிக்கக்கூடிய அளவிற்கு, தர்மருக்கு ஆற்றல் இருந்தது.
ஒரு செயல் ஏன் நடந்தது என்பது தெரியாவிட்டாலும், நல்வழியில் நடப்பது, நமக்கு மட்டுமல்ல, நம் முன்னோர்களுக்கும் நற்கதி அளிக்கும் என்பதே, இச்சம்பவம் விளக்கும் நீதி!
நன்றி: தினமலர்.

நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum