தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள் -பகுதி -3

View previous topic View next topic Go down

 புவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள் -பகுதி -3 Empty புவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள் -பகுதி -3

Post by செந்தில் Wed Apr 23, 2014 2:10 pm

[You must be registered and logged in to see this image.]
இரண்டாவதாக அமைந்திருக்கும் அடுக்கின் பெயர் மூடகம் (Mantle), இது 35 கி.மீ முதல் 2890 கி.மீ வரை ஆழம் கொண்டது. மூன்றாவது அடுக்கின் பெயர் கரு (Core) இது 2890 கி.மீ முதல் 6378 கி.மீ வரை ஆழம் கொண்டது. இதில் மூடகமும், கருவும் தலா இரண்டு அடுக்குகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மூடகம் மேல்மூடகம் (Upper Mantle), மூடகம் (Mantle) என்றும் கரு (Core) வெளிக்கரு (Outer Core), உட்கரு (Inner Core ) என்றும் பிரிக்கப்பட்டிருக்கிறது. புவியின் மையப்பகுதியை அடைய புவியின் மேற்பரப்பிலிருந்து சராசரியாக சுமார் 6400 கி.மீ தொலைவு உள்ளே செல்ல வேண்டும். புவியின் வெளிக்கரு இரும்பு (88.8%), நிக்கல் (5.8%), சல்பர் (4.5%), மீதமுள்ள 1.% அறிய வகை தனிமங்களால் ஆனது.

தற்போது வரை புவியை மனிதனால் 8 கி.மீ ஆழத்திற்கு மேல் தோண்ட இயலவில்லை. காரணம் பூமிக்கு அடியில் போகப்போக வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே போவதால்தான். சராசரியாக புவியை அதன் மேற்பரப்பிலிருந்து 100 அடி ஆழம் தோண்டினால் வெப்பநிலை ஒரு டிகிரி சென்டிகிரேட் வரை அதிகரிக்கும். புவியின் மேற்பரப்பிலிருந்து நான்கு கி.மீ ஆழம் உள்ளே போனால் அங்கே வெப்பநிலை சுமார் 100 டிகிரி சென்டிகிரேட் இருக்கிறது. இது தண்ணீர் கொதிக்கும் வெப்பநிலை. இதுவே முப்பது கி.மீ உள்ளே போனால் அங்கே வெப்பநிலை 1200 டிகிரி சென்டிகிரேட் இருக்கிறது. இது பறைகளே உருகும் வெப்பநிலை. புவியின் மேற்பரப்பிலிருந்து சராசரியாக 4 கி.மீ ஆழம் வரை தான் மனிதனால் புவிக்குள் செல்ல இயலும் சராசரியாக 50 கி.மீ ஆழத்திற்க்கு கீழே புவி திடநிலையில் இருக்காது, திரவ நிலையில் (Liquid) தான் இருக்கும். சில இடங்களில் புவிக்குள் அழுத்தம் அதிகரித்து அந்த குழம்புகள் புவியை துளைத்துக்கொண்டு வெளியே வருவதைத்தான் நாம் எரிமலை (Volcano) என்று அழைக்கிறோம்.

[You must be registered and logged in to see this image.]
சரி இப்போது புவியின் மேற்பரப்பிலிருந்து மேல்நோக்கி அதாவது வளிமண்டலத்தை நோக்கி பயணித்து சில முக்கிய தகவல்களை தெரிந்து கொள்வோம் வாருங்கள். புவியின் வளிமண்டலம் ஐந்து பிரிவாக பிரிக்கப்படுகிறது. புவியின் மேற்பரப்பிலிருந்து 18 கி.மீ வரையிலான பகுதி அடிவளிமண்டலம் (troposphere) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 70% வாயுக்களால் சூழப்பட்ட இப்பகுதியின் சராசரி வெப்பநிலை 14°C ஆகும், இங்கு தான் புவியின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் இருக்கின்றன (கார்பன்டை ஆக்ஸைடு, நீராவி, மீத்தேன், ஓசோன்). இந்த வாயுக்கள் மட்டும் இல்லாமல் போனால் புவியின் வெப்பநிலை அதிகமாகவோ (60°C) அல்லது குறைவாகவோ (-18°C) இருந்திருக்கும். அவ்வாறு இருந்திருந்தால் புவியில் எந்த உயிரினமும் வாழ வழியில்லாமல் போயிருக்கும்.

பதினெட்டு முதல் ஐம்பது கிலோமீட்டர் வரையிலான வளிமண்டலபகுதி மேல்வளிமண்டலம் (Stratosphere) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இதன் அடிப்பகுதியில் தான் ஓசோன் மண்டலம் அமைந்துள்ளது. 50 – 80 கி.மீ வரையிலான வளிமண்டலபகுதி இடைமண்டலம் (mesosphere) என்றும் 80 – 690 கி.மீ வரையிலான வளிமண்டலபகுதி வெப்பமண்டலம் (thermosphere) என்றும் 690 – 800 கி.மீ வரையிலான வளிமண்டலபகுதி புறவழிமண்டலம் என்றும் அழைக்கப்படுகிறது. இப்போது உங்கள் மனதில் ஒரு கேள்வி எழுந்திருக்கும் என்னவென்றால் சாதாரணமாக மனிதர்களால் விமானத்தில் எவ்வளவு தூரம் வளிமண்டலத்தில் பயணிக்க இயலும் என்று? ஒரு விமானத்தால் புவியின் மேற்பரப்பிலிருந்து 25 கி.மீ (85,000 Feet) உயரத்திற்கு மேலெழும்பி பறக்க இயலும் என்றாலும் பொதுவாக பயணிகள் விமானம் 12 கி.மீ (40,000 Feet) உரத்திற்கும் மேல் பறப்பதில்லை. புவியின் வளிமண்டலத்தையும் விண்வெளியையும் பிரிக்கும் எல்லைக்கோடு வரையருக்கப்படவில்லை என்றாலும் கூட புவியின் மேற்பரப்பிலிருந்து 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கர்மான் கோடுதான் புவியின் வளிமண்டலத்தையும் விண்வெளியையும் பிரிக்கும் எல்லையாக பொதுவாக கருதப்படுகிறது.

விண்வெளியில் இருந்து பக்கவாட்டில் புவியின் நிலத்தோற்றத்தை பார்க்கையில் மிகவும் தாழ்வான நிலப்பரப்பாக தெரிவது இஸ்ரேல் – ஜோர்டான் எல்லையில் அமைந்துள்ள சாக்கடலின் கடற்கரை (-418 மீ) ஆகும். சுமார் 67 கி.மீ பரப்பளவிற்கு விரிந்து பரவியிருக்கும் இந்த கடல் அதிகபட்சமாக 377மீ ஆழம் கொண்டது. இந்த கடலுக்கு ஒரு சிறப்பு உண்டு அது என்னவென்றால் இந்த கடலில் எந்த இடத்திலும் நம்மால் நீச்சலடிக்காமலே மிதக்க முடியும். சாதாரணமாக எல்லா கடலில் இருக்கும் உவர்ப்புத்தன்மையை காட்டிலும் இந்த கடலில் 8.6% அதிகம். இந்த அதிகப்படியான உவர்ப்புத்தன்மை தான் மனிதர்களை மிதக்கச்செய்கிறது. அதிகப்படியான உவர்ப்புத்தன்மையின் காரணமாக எந்த ஒரு உயிரினமும் (மீன்கள் உட்பட) வாழ இயலாத காரணத்தினால் இந்த கடலுக்கு சாக்கடல் (Dead Sea) என்று பெயர் வந்தது. இந்த கடலில் இருந்து தண்ணீர் ஆவியாதலின் மூலம் மட்டுமே வெளியேறுவதால் தான் இந்த கடல் நீர் அதிக உவர்ப்புத்தன்மையுடன் விளங்குகிறது.

புவியினுடைய நிலத்தோற்றத்தின் அதிகபச்ச உயரமான நிலப்பரப்பு எவரெஸ்ட் மலை உச்சி (8848 மீ) ஆகும். கடலால் சூழப்பட்ட நிலத்தின் மிகத்தாழ்ந்த (ஆழமான) இடம் பசிபிக் பெருங்கடளிலுள்ள மரியான ட்ரென்ஞ்ச். இது கடல் மட்டத்திலிருந்து 10, 911 மீ கீழுள்ளது. இதுவரை ஐந்து முறை பேரழிவுகளை சந்தித்துள்ள நம்முடைய இந்த பூமி கடைசியாக 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய விண்கல் ஒன்று புவியை மோதியதால் பேரழிவுகளை சந்தித்தது. அப்போது சிறிய உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் இவற்றை தவிர்த்து அனைத்து உயிரினங்களும் அழிந்துபோயின. அப்போது எஞ்சிய அந்த சிறிய உயிரினங்கள் பல்வேறு பரிணாம வளர்ச்சியை எட்டி முதல் மனிதனை ஆப்பிரிக்க கண்டத்தில் தோற்றுவித்தது. பின்பு அந்த மனிதன் உலகம் முழுவதும் தனது சந்ததியை கொஞ்சம் கொஞ்சமாக படரச் செய்தான்.

நன்றி: வரலாற்று சுவடுகள்

செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

 புவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள் -பகுதி -3 Empty Re: புவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள் -பகுதி -3

Post by நாஞ்சில் குமார் Wed Apr 23, 2014 9:31 pm

என்னே அற்புதம்!
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum