தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திரிசங்கு சொர்க்கம்

View previous topic View next topic Go down

திரிசங்கு சொர்க்கம் Empty திரிசங்கு சொர்க்கம்

Post by நாஞ்சில் குமார் Fri Apr 25, 2014 10:41 pm

திரிசங்கு மகாராஜன், நற்குணங்கள் பொருந்திய நல்லரசனாகவே திகழ்ந்தான். அவன் ஆட்சி மக்களை மகிழ்வித்தது. சத்திய விரதன் என்கிற இயற்பெயருக்கேற்ப அவன் சத்திய வந்தனாகவே வாழ்ந்து கொண்டிருந்தான். அவனுடைய மகன் அரிச்சந்திரன் வளர்ந்ததும் அவனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி மகிழ்ந்த மன்னன் திரிசங்கு, விரைவில் தன் மகனுக்கு முடிசூட்டி அரியணையில் அமர்த்தி விட்டு, ஆன்மிகத்தில் ஈடுபட விரும்பினான். அப்போதுதான் அவனுக்கு அந்த விசித்திர ஆசை மனத்தில் எழுந்தது.

'எல்லோரும் சொர்க்க லோகம் பற்றி வருணிக்கிறார்களே, அந்த சொர்க்க உலகினை, இந்த மானுட உடலோடு சென்று கண்டுமகிழ்ந்தால் எப்படியிருக்கும்?' என்றெண்ணினான். இந்த விருப்பத்தை நிறைவேற்றித் தரும் வல்லமை வசிஷ்ட மகரிஷிக்கே உண்டு என்றும் அவனுக்குத் தோன்றியது. அவரிடம் சென்று, 'சுவாமி! தாங்கள் பெரிய மகரிஷி. தபோபலம் மிக்கவர். எனக்கு இந்த அரச வாழ்வு சலித்துவிட்டது. சொர்க்கம் புக எண்ணுகிறேன். உடனே அதற்கு ஒரு வழி செய்ய வேண்டும். நான் தங்களைத்தான் நம்பியுள்ளேன்...' என்றான்.

'திரிசங்கு, நீ நெடுநாள் வாழ வேண்டும், அறப்பண்புகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து வா. மரணத்திற்குப் பிறகு உனக்கு சொர்க்கம் நிச்சயம்  கிடைக்கும்' என்றார் வசிஷ்டமுனி. 'தவசீலரே! இறந்த பிறகு என்ன நிகழும் என்பது யாருக்கும் தெரியாது. நான் இப்போதே இவ்வுடலுடனேயே சொர்க்கம் புக வேண்டும். இந்திரன் அவையில் வீற்றிருந்து, அப்ஸரஸ்களின் அழகை ரசிக்க வேண்டும். அவர்களின் அற்புத நடனம் கண்டு மகிழ வேண்டும். கந்தர்வ கானம் கேட்க  வேண்டும். சொர்க்க போகம் என்கிறார்களே அவற்றைத் துய்க்க வேண்டும்.

தங்கள் தபோ பலத்தால் என்னை அவ்வுலகுக்கு அனுப்புங்கள். அதற்காக எத்தனை வேள்விகள் வேண்டுமானாலும் இயற்றுங்கள். பொன்னை வாரி வழங்குகிறேன். மந்திர சக்தி மிக்க தங்களால் இதை சாத் தியப்படுத்த இயலும் என நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்...' என்றான், திரிசங்கு. 'மன்னா! நீ வீண் ஆசையுடன் ஏதேதோ பேசுகிறாய். நீ எத்தனை வேள்விகள் இயற்றினாலும் சரி, மனிதன் உடலுடன் சொர்க்கம் புக முடியாது. இந்த எண்ணத்தை விட்டு விடு.' 'வசிஷ்டரே, நீர் ஒரு வஞ்சகர்.

என்னை உமக்கு எப்பொழுதுமே பிடிப்பதில்லை. என்னை வெறுப்பவர் என்பதறிந்தும், நான் உம்மை மதித்தும் போற்றியும் வந்திருக்கிறேன். இதனால்தான் இந்த விருப்பத்தை உம்மிடம் கூறி, யாசித்தேன். என்னை சொர்க்கம் அனுப்ப ஆற்றல் இயலாத உமக்கு என்னைச் சபிக்கும் ஆற்றல் மட்டும் எங்கிருந்து வருகிறது? நீர் மகா தபஸ்வி என்பதை நான் இப்போதும் நம்புகிறேன். உமக்கு அரிய மந்திர சக்திகள் நிறைய உண்டு. ஆனால், அவற்றை எனக்கு உபயோகிக்க உமக்கு மனமில்லை. இதுவே உண்மை. நான் வேறு குருவைத் தேடிச்சென்று வேள்வி செய்யும்படி வேண்டுகிறேன்' என்றான் திரிசங்கு.

அவனுடைய இந்த வசைப்பேச்சு, வசிஷ்டருக்குச் சினத்தை மூட்டியது. அவர் உடனே, 'துஷ்டனே! நீ திருந்தி விட்டாய் என்று நம்பியது தவறாயிற்று. தகாத ஆசையால் வீண் விவாதம் செய்கிறாய். என்னால் இயலாத ஒன்றை வேறு குருமூலம் நிறைவேற்றுவேன் என அறைகூவல் விடுகிறாய். நீ குருத்துரோகி. இந்தக் கணமே உன் அங்கம் கறுத்து, விகாரமாகி, நீ சண்டாள வடிவை எடுப்பாயாக. அரச லட்சணங்கள் உன்னை விட்டு அகலட்டும். கெடுமதி பிடித்த நீ நரகம் புகவே வாய்ப்பு உண்டு. உன்னால் இப்பிறவியிலல்ல, இனி எப்பிறவியிலும் அமர உலகைக் காணவியலாது...' எனச் சபித்தார்.

வசிஷ்டர் வாக்கு உடனே பலித்தது. திரிசங்குவின் மேனி கறுத்தது. அழகிழந்து கோர உருவை அடைந்தான். அவன் அணிந்திருந்த பொன்னா பரணங்கள்கூடப் பொலிவிழந்து, கறுத்தன. அவனிடமிருந்து புலை நாற்றம் எழுந்தது. அழகிய பட்டாடைகள் கிழிந்த பழங்கந்தல் உடைகளாயின. திரிசங்கு மன்னன் வசிஷ்டரின் ஆசிரமத்துக்கு வந்தபோதே இந்த உரையாடல்கள் நிகழ்ந்திருந்தன. சாபத்தால் கொடிய நிலையை அடைந்தபின் அவன், அரண்மனைக்குத் திரும்ப விரும்பவில்லை. அசிங்கமான அப்போதைய உருவ நிலை அவனுக்கே பிடிக்கவில்லை.

எப்படி அரண்மனை செல்வது, மனைவி, மகன் முகங்களில் விழிப்பது; மக்கள் எப்படியெல்லாம் அருவறுப்பார்கள் என்றெல்லாம் எண்ணியபடி அவன் காடுகளில் அலையத் துவங்கினான்.அமைச்சர்கள் விவரமறிந்து, காட்டுக்குள் வந்து திரிசங்குவைத் தேடிக் கண்டுபிடித்து, அரண்மனைக்குத் திரும்புமாறு வேண்டினர். அவன் பிடிவாதமாக மறுத்துவிட்டான். 'இனி என் மகன் அரிச்சந்திரன் நாடாளட்டும். என்னைத்தேடி யாரும் வரவேண்டாம். எவர் முகத்திலும் விழிக்க எனக்கு விருப்பமில்லை. என்னை இப்படியே விட்டு விடுங்கள். தொந்தரவு செய்யாதீர்கள்...' என்று கூறி, அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டான்.  

அவர்களும் அரசன் மனம் மாற வழியில்லை என்பதைப் புரிந்துகொண்டு, நகர் திரும்பினர். இந்த நிலையில் விஸ்வாமித்திர மகரிஷி, தவம் முடிந்து மிகுந்த தபோ பலத்துடன், காட்டிலிருந்து நாட்டினுள் வந்து, தன் மனைவி மக்களைக் கண்டு மகிழ்ந்து உரையாடினார். அப்போது அவருடைய மனைவி, கடும் பஞ்சம் நிலவிய காலத்தில் திரிசங்கு தங்களுக்கு உதவியதையும், அவன்  வசிஷ்டரின் விரோதத்தைச் சம்பாதித்து, அதன் காரணமாகக் கொடிய சாபங்களைப் பெற நேர்ந்த விவரங்களையும் கூறினாள்.

அதைக்கேட்டதும்  விஸ்வாமித்திரருக்கு திரிசங்குவின் மீது மிகுந்த இரக்கம் சுரந்தது. சத்திய விரதனாக இருந்தவன் சண்டாள நிலையை அடைந்தமைக்கு அவன் தன்  குடும்பத்தின் மீது காட்டிய பரிவும் இரக்கமும்கூட ஒரு காரணம் என்பதை உணர்ந்து அவர் மிகவும் வேதனைப்பட்டார். 'நான் தவ வல்லமை  பெற்றிருப்பது உண்மையெனில், திரிசங்கு பெற்றிருக்கும் சாப நிலையை அவசியம் நிவர்த்தித்து அவனை வாழ வைப்பேன்...' என உறுதி பூண்டார். உடனே நதிக்கரைக் காடுகளில் தேடியலைந்து, திரிசங்குவைக் கண்டார்.

அவன் விஸ்வாமித்திரரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி, அழுதான். தன் இழிநிலையைக் கூறிக் கதறினான். முனிவர் அவனைத் தேற்றி, 'வேதனையை விடு. உன் விருப்பத்தை என்னிடம் கூறு. என் பெண்டு, பிள்ளைகள் பசியால் வாடி நலியாமல் காத்த வள்ளல் நீ. உன்னைப் பீடித்திருக்கும் இச்சாப நிலையினை நான் மாற்றுகிறேன். உன் விருப்பத்தையும் நான் நிறைவேற்றுகிறேன்' என்றார். திரிசங்கு, உடலோடு சொர்க்கம் காணும் ஆவலைத் தெரிவித்தான். விஸ்வாமித்திரர் தனது இடக்கரத்திலிருந்த கண்டிச்சொம்பிலிருந்து கொஞ்சம் நீரை வலக்கரத்தில் ஊற்றி ஏந்திக் கண்களை மூடி, 'தேவாதி தேவர்களே!

மும்மூர்த்திகளே! நான் இயற்றிய காயத்திரி மந்திரத்தை உச்சரித்தே முனிசிரேஷ்டர்களெல்லாம் தபோ பலம் பெற்றிருப்பது உண்மையானால், இதோ அம்மந்தி ரத்தை நான் உச்சரித்து எனக்குக் கிடைத்த ஜப மகிமை அனைத்தையும் இத்திரிசங்குவிற்குத் தாரை வார்க்கிறேன். இவன் சாபமனைத்தும் அகலட்டும். இந்த விஸ்வாமித்திரன் செய்த வேள்விகள், தவம், புண்ணிய பலம் அனைத்தையும் திரிசங்குவிற்கே அளிக்கிறேன். இவன் இக்கணமே சுவர்க்க போகம் காணட்டும்' என்றவாறே அம்மந்திர நீரை அவன் மீது தெளித்தார். மேலும், 'திரிசங்கு! நீ எதற்கும் அஞ் சாதே! வானில் எழு; சுவர்க்க உலகம் செல்' என்றார்.

அக்கணமே திரிசங்கு ஆகாயத்தில் எழுந்து, பறவைபோல் பறந்தான். முனிவரை வணங்கிக் கூப்பிய கரங்களை அவன் அகற்றவுமில்லை; அசைக்கவுமில்லை. அப்படியே நின்ற நிலையில் எழுந்து, மேலே மேலே உயர்ந்து சென்று கொண்டிருந்தான். அவன் மனம் எல்லையற்ற மகிழ்வினை அடைந்தது. 'முனிசிரேஷ்டரே! நீரே மகாதபஸ்வி! உமக்கு என் அனந்த கோடி நமஸ்காரம்! நன்றி! என் ஜென்ம சாபல்யம் இதோ நிறைவேறுகிறது!' என மனத்தினுள் எண்ணினான். ஆனால், அதே கணப்பொழுதில் அவன் வாயுவேகம், மனோ வேகமாய் விண்ணில் உயர்ந்து வருவதைக்கண்ட வானவர்கள், இந்திரனிடம் ஓடிச்சென்று, 'பிரபு! ஒரு மானிடன் தன் சுய உருவுடன் பூவுலகிலிருந்து சுவர்க்கம் நோக்கிப் பறந்து வருகிறான்...' என்று தெரிவித்தனர்.

இந்த விந்தையை -விதி மீறலை அனுமதிக்கக் கூடாதென்று எண்ணிய இந்திரன் பாய்ந்தோடி வந்து, திரிசங்குவைப் பார்த்து, 'அடே... மானிடப்பதரே! நீ  இவ்வாறு சுவர்க்கம் வருவது தகாத செயல்! போய்விடு பூலோகத்திற்கே!' என்று புறங்கையை அசைத்து விரட்டினான். மறுகணம் திரிசங்கு தலை குப்புறக் கவிழ்ந்து பூமியை நோக்கி விரைய நேர்ந்தது. அவன், 'விஸ்வாமித்திரரே! அபயம்! என்னைக் காத்து ரட்சியுங்கள்!' என ஓலமிட்டான். விஸ்வாமித்திரர், தலை நிமிர்ந்து இதையெல்லாம் நோக்கியவாறே இருந்தார்.

அவர் உடனே, 'திரிசங்கு! நீ அங்கேயே நில்! இந்திரன் என் தவ வல்லமை அறியாமல் தவறு செய்துவிட்டான். நான் உனக்காக ஒரு புதிய சுவர்க்கமே சிருஷ்டிக்கிறேன்! என்னால் ஒரு புதிய இந்திர உலகை மட்டுமல்ல, புது இந்திரனையே சிருஷ்டிக்க முடியும் என்பதை அவன் உணரவில்லை. இதோ பார் என் மகிமையை...' என்றார். விண்ணில் வீசியெறிந்த கல் ஒன்று மறுகணமே மண்ணில் வீழ்வது போன்று தானும் வீழ்ந்து, தலை சிதறி மடியப்போகிறோம் என்றெண்ணிக் கலங்கிய திரிசங்கு, அதிசயிக்கத்தக்க விதமாக விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே வான்வெளியில் அப்படியே நிற்கும் நிலை ஏற்பட்டது.

அது ம ட்டுமல்ல, தலைகீழே குப்புற விழுந்து கொண்டிருந்த அவன் இப்போது நிமிர்ந்து, காற்று மெத்தை மீது அமர்ந்திருப்பது போன்ற நிலையினை அடைந்தான். அது ஒரு புதுவித சுகமாகவும் இதமாகவும் இருந்தது. (விண்வெளியில் புவியீர்ப்பு விசைக்கு அப்பாற்பட்டு இப்படி எப்பொருளும் மிதக்கக்கூடியதொரு இடைநிலை இருப்பதை விஞ்ஞானமும் ஒப்புக் கொள்கிறது.) விஸ்வாமித்திரர் அத்துடன் விட்டு விடாமல், ஒரு வேள்வியை இயற்றத் தொடங்கினார். அக்கினிக்குண்டம் அமைத்து, அவர் எரி நெருப்பின் முன் அமர்ந்து, மந்திரங்களை ஜபிக்கத் தொடங்கியதும், இந்திரன் ஓடோடி வந்து அவர் முன்நின்று, 'மாமுனிவரே! இது தகாது.

புதிய சுவர்க்கம் சிருஷ்டிக்கும் உமது இந்த முயற்சி தேவையற்றது. இதைக் கைவிடுங்கள்...' என்று வேண்டுகோள் விடுத்தான். 'தேவேந்திரா! முனிவர்களின் தவ வல்லமை நீ அறியாததல்ல. என் போன்ற மகரிஷிகள் தவம் இயற்றினால், அதைக் கெடுக்கவென்றே ஓடோடி வருபவன் நீ. உன் சோதனைகள் பலவும் வென்றவன் நான். என்னிடமே நீ மீண்டும் உன் வேலையைக் காட்டாதே. திரிசங்கு, சுவர்க்கம் காண விரும்புகிறான். அவனுக்கு உதவ நான் தீர்மானித்து விட்டேன்.

என் ஆணைப்படி விண்ணுலகம் வந்த அவனை நீ வரவேற்று உபசரிக்காமல்,  புறக்கணித்துவிட்டால், இனி உன் தயவு எனக்குத் தேவையில்லை. நான் புதிய சுவர்க்கம் படைப்பேன். புது இந்திரன் அரசாள்வான். அவனுடைய அவையில் திரிசங்கு கம்பீரமாக வீற்றிருப்பான். இது நடக்கிறதா இல்லையா என்பதை நீ பொறுத்திருந்து பார்...' என்று கோபமொழி புகன்றார். விஸ்வாமித்திரரின் தவ வல்லமையை நன்கு அறிந்தவன் இந்திரன். எனவே அவரிடம் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தான்.

பிறகு, 'மகா முனிவரே! உங்கள் ஆணைப்படி நான் திரிசங்குவை இந்திர உலகுக்கு அழைத்துச் செல்கிறேன். அவன் சொர்க்க சுகம் காண்பான். இது உறுதி.  நீங்கள் உங்கள் வேள்வியை நிறுத்துங்கள். புது சுவர்க்கம் படைக்கும் முயற்சியைக் கைவிடுங்கள்' என்று கூறினான். விஸ்வாமித்திரர் தமது முயற்சிகளைக் கைவிட்டார். இந்திரன் உடனே மன்னன் திரிசங்குவைத் தனது இந்திர உலகின் கௌரவப் பிரஜையாக அழைத்துச் சென்று உபசரித்தான். படைக்கப்படா விட்டாலும், 'திரிசங்கு சொர்க்கம்' என்னும் வார்த்தைகள் உலக வழக்கில் நிலைபெற்றுவிட்டது உண்மைதானே?

-கௌதம நீலாம்பரன்

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum